முழிக்கும் ஸஹாரா – யுவகிருஷ்ணா செய்யப்பட்ட ஒரு புர்ராமகிருஷ்ண நெகிழ்வுக் கதை!

September 23, 2015

(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)

ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில்.  உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.

தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்துக்கு சென்று திரையை விலக்கிய போது கூடவே வெயிலும் நுழைந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் வெப்பம் தெரிந்தது. அனைத்து உடைகளையும் கழற்றிவிட்டு போர்த்திக் கொள்ளாமல் விரிந்து கொண்டேன். உறக்கம் கொள்ளவில்லை. தாகமாக இருந்தது. எழுந்து தண்ணீர்பாட்டிலை எடுத்து குடித்தேன். அதுவும் சூடாக இருந்தது. சூரியனின் வெளிச்சத்தில் உலகில் உள்ள எல்லா கூடாரரங்களும் ஒன்று போலாகிவிடுகின்றன.

மரங்கொத்தி மரத்தினை இடைவிடாமல் கொத்திக் கொண்டிருப்பது போல அனல்காற்று என் கூடாரத்தின் திரையை லேசாக தட்டிக் கொண்டேயிருந்தது.

திரையை மீறி இருட்டு உள்ளே எட்டிப்பார்த்தபோது  மாலை கவிந்திருந்தது. மணியை பார்த்தேன் ஆறரை தான் ஆகியிருந்தது. திரையை லேசாக தள்ளி திறந்தேன். அதற்காகவே காத்திருந்தது போல வெப்பம் உள்ளே வேகவேமாக நுழைந்தது.  பாலைவனத்தை சுற்றி நடந்து வரலாம் என்று கூடாரத்திலிருந்து கிளம்பினேன். ஒன்றிரண்டு அரபுகாரர்களும் ஒட்டகங்களும் முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

பாலைவனம் சலனமில்லாமல் இருந்தது. ஒட்டகசவாரி துவங்க படவில்லை. பாலைவனம் இன்னமும் உறக்கத்தில் இருப்பது போலவே இருந்தது. அதிமாலை காற்றின் தூய்மை நுரையீரலை சுத்தப்படுத்தியது. பாலைவனத்தைச் சுற்றி நடந்து கொண்டேயிருந்தேன். உயர்ந்த காக்டசுகள். வெயில் மங்கிய ஆகாசம். வெறுமை, சிதறியது போன்ற கூடாரங்கள். வெறித்த ஒட்டகப் பாதைகள்.

பாலைவனத்தை பார்த்தபடியே நடக்கும் போது வழியில் ஆப்பிரிக்க எழுத்தாளர் வில்பர் ஸ்மித்தின் பாலைவனக் கடவுள் நினைவிற்கு வந்தது. வில்பர்  பாலைவனத்தில் நடக்கும் ஒட்டகங்களை ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டேயிருந்தார் என்ற குறிப்பு மனதில் தோன்றி மறைந்தது. என்ன ஒரு அனுபவம் அது. ஒரு மனிதனால் ஒரு நாள் முழுவதும் ஒட்டகங்களை பார்த்துக் கொண்டேயிருந்திருக்க முடிகிறது என்பது எளிய விஷயமில்லை.  ஒட்டகங்கள் மாலையில் பாலைவனத்திலிருந்து திரும்பும் போது அதன் நடை மாறியிருக்கிறது என்பது வில்பரின் நுட்பமான கண்டுபிடிப்பு.

எல்லா பக்கமும் வாசல்கள் கொண்டது பாலைவனம் என்பது வில்பரின் இன்னொரு பதிவு. இயற்கையின் முன்பு நமது செயல்கள் அர்த்தமற்று போய்விடுகின்றன. மிக நெருக்கமாக இயற்கையை அரவணைக்கும் போது நமது இருப்பு, எண்ணங்கள் மறைந்து நம் அகம் விழித்து கொள்கிறது. அது மண் மழையில் கரைவது போல உடனே தன்னை இயற்கையில் கரைத்து கொண்டுவிடுகிறது.

இயற்கையின் வனப்பு பலநேரம் என்னை நடுக்கம் கொள்ள செய்திருக்கிறது. இவ்வளவு அழகை எப்படி மனது நிரப்பிக் கொள்ள போகிறது என்று ஏக்கம் கொண்டிருக்கிறேன். அப்போது உடலுக்கு இரண்டு கண்கள் மட்டுமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன். பாலைவனங்களில் உள்ள மேகங்கள் அற்புதமானவை. அவை மாபெரும் ஒவியக்கலைஞனின் தன் இஷ்டம் போல வரைந்து கலைத்து போடும் சித்திரங்களை போல உருவாவதும் மறைவதுமாக இருக்கின்றன.

பாலைவனத்தை எந்த பக்கமிருந்து பார்த்தாலும் ஒன்று போலதானிருக்கிறது. கண்களால் பாலைவனத்தை புரிந்து கொள்ள முடியாது என்று தான் தோன்றியது. என் முன்னே ஒரு ஒட்டகம் முட்புதரை மேய்ந்துகொண்டிருந்தது. பாலைவனத்தின் மீது இருள் பரவ ஆரம்பித்திருப்பது கண்ணில் பட்டது. அதை பார்த்தபடியே நின்றிருந்தேன். பறவை ஒன்று கிளையில் அமர்வது போல அத்தனை இயல்பாகவும் அழகாகவும் வெயில் பாலைவனத்தின் மீது இறங்கி அமர்ந்திருந்தது.

பாலைவனத்தின் நிசப்தம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு ஆழ்ந்த நிசப்தமது. அத்தனை ஒட்டகங்கள் மனித எத்தனிப்புகள் எதுவும் பாலைவனத்தின் நிசப்தத்தை கலைக்க முடியவில்லை. சப்தமில்லாமல் ஒரு மேகம் மணலுக்குள் நுழைந்து கொண்டிருந்தது தெரிந்தது.  பாலைவனத்தின் ஆழத்தில் நம் கண்ணுக்கு தெரியாத ஒட்டகங்கள் ஒட்டிக் கொண்டிருக்க கூடும் என்று நினைத்தேன்.

மணல் எப்போதும் வியப்பளிக்க கூடியது. பாலைவனமாக இருந்தாலும் நதிப்படுகையாக இருந்தாலும் வண்டல், களிமண், செம்மண்  என்று எந்த வடிவம் கொண்ட போதும் மணலின் வியப்பு சொல்லால் விளக்க முடியாதது. மணல் எதையும் அனுமதிக்கிறது. பாறாங்கல் எதையும் தனக்குள்ளாக அனுமதிப்பதில்லை. அது நம் குரலை தனக்குள் வாங்கிக் கொள்வதில்லை. திரும்ப எதிரொலித்துவிடுகிறது. பாறாங்கல்லின் அகம் எதையும் உள்வாங்கிக் கொள்ளாதது போலும். சுற்றிலும் திரும்பி பார்த்தபோது பாறாங்கல் மௌனமாக என்னை போலவே பாலைவனத்தை பார்த்துக் கொண்டிருந்தது.

நான் நின்றிருந்த இடத்தின் அருகே சரிவிலிருந்து இறங்கி வந்த ஒட்டகக்குட்டி ஒன்று சோம்பல் முறித்தது. பின்பு தன் வாலை ஆட்டியபடியே மணல்வெளியில் இருந்த காக்டசுககளின் மீது புரண்டது. பின்பு முகத்தை சுழித்தபடியே பாலை நோக்கி நடந்து போக துவங்கியது.  மணல் நகரங்களில் வளரும் ஒட்டகங்கள் விசித்திரமானவை. அவை மிக தனிமையானவை.  எப்போதும் அதன் குரலில் ஒரு ஏக்கம் பீடித்திருப்பதை அறிந்திருக்கிறேன். அன்று பார்த்த ஒட்டகக்குட்டி கூட சப்தமிடவேயில்லை.

பாலை நகரங்கள் குறித்து தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. அதன் வாழ்க்கை இயல்பானதில்லை. மாறாக சின்னஞ்சிறு சந்தோஷங்களும் வியப்புகளும் நிரம்பியது. பயணிகளை தவிர்த்து உள்ளுர்வாசிகள் இந்த அற்புதங்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. பாலை நகரின் மசூதியும் அதன் அழைப்போசையும் எனக்கு பிடிக்கும். அது போலவே அதிகம் உரத்த குரலில் பேசாத மனிதர்களே பாலை நகரில் இருக்கிறார்கள்.  அல்லது மனித குரல்களை இயற்கை தன்  வறட்சியால் ஒடுக்கி வைத்திருக்கிறது.

பாலை நகரங்களில் எல்லா பெண்களும் அழகாகவே இருக்கிறார்கள். வெயில்படிந்த முகங்கள். வேகமான நடை. வழியெங்கும் சப்பாத்திக்கள்ளிகள் நிரம்பியிருந்த போதும் அதை  கூந்தல் நிறைய சூடிக் கொள்ள விரும்பாத அவர்களின் இயல்பு. அடர் கறுப்பு அல்லது அடர் வெள்ளையில் மட்டுமே அதிக பேர் ஏன் புர்க்கா போட்டு இருக்கிறார்கள் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை.

நடந்து பாலைவனத்தின் மேற்கு பக்கம் வந்த போது விடிந்த போதும் அணைக்கபடாத ஒரு வீட்டின் வெளி விளக்குகளின் வெளிச்சத்தை பார்த்தபடியே இருந்தான். பகல்வெளிச்சத்தில் அந்த மின்சார விளக்கு ஒடுங்கி போயிருந்தது. இரவில் இந்த விளக்கு எத்தனை கர்வமாக இருந்திருக்கும் என்று நினைத்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.  மின்விளக்குகள் வராத நாட்களில் இந்த பாலையும் மணலும் வேறு தோற்றத்தில் வேறு அழகில் இருந்திருக்க கூடும்.

ஒரு பள்ளிமாணவி காலணி ஒலிக்காமல் மணலில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளது நடையில் பதற்றமில்லை. தனித்த ஒசையாக அது நீண்டு போனது. அதுவரை ஒரு பறவையை கூட காணவில்லை என்பது அந்த ஒசையின் போது தான் உணர்ந்து கொண்டேன்.  யாரும் இல்லாத அந்த சாலையை பார்த்துக் கொண்டிருந்தேன். மணல்குன்றுகளிலிருந்து உதிர்ந்த மணற்துகள்களை காற்று புரட்டிக் கொண்டிருந்தது.

பாலையின் அடிக்கும் காற்று மூர்க்கமானது. அதில் பித்தேறியது போல சில நேரம் வேகமாவதும் மறுநிமிசமே அடங்குவதுமாக  இருக்க கூடியது.

சுற்றி நடந்து பாலைவனத்தின் முக்கால்வாசியை கடந்த போது வெளிச்சம் உயர்ந்திருந்தது. பாலையோர கடைகள் துவக்கபட்டிருந்தது.  ஒரு கடையில் ஓட்டகப்பால் அருந்தியபடியே திரும்பும் பாலையை பார்த்தேன்.தொட்டிலில் உறங்கும் குழந்தை விழிப்பது போல அழகும் மெல்லிய கால் உதைப்புமாக பாலை விழிக்க துவங்கியிருந்தது. ஒட்டகப்பாலை பாலையை நோக்கி உயர்த்திக்காட்டியபடியே காலை வணக்கம் சொன்னேன்.

சுற்றுலா ஒட்டகங்கள் வந்து சேர்ந்திருந்தன. ஆட்கள் பாலைவனத்தில் நின்றபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் இந்த பாலை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறது. அதன் அழகு ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவு கொள்கிறது.

புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்த போது பாலையில் வெயிலோடிக் கொண்டிருந்தது. ஒட்டகங்களின் ஒலி கேட்க ஆரம்பித்தது. பள்ளிவாசல் நோக்கி மாணவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு வட இந்திய குடும்பம் பாலையில் உட்கார்ந்தபடியே கேரட் ஜ÷ஸ் குடித்துக் கொண்டிருந்தார்கள். கூடாரத்துக்கு திரும்பி படுக்கையில் விழுந்தேன்

இந்த பாலைவனத்தில் எனக்கு ஒரு வேலையுமில்லை. எந்த காரணமும் இல்லாமல் வந்திருக்கிறேன். அடுத்து என்ன செய்யப்போகிறேன் ஒரு திட்டமும் இல்லை. கூடாரத்தின் வெளியில் இருந்த வெயில் வடிந்து மேகம் மங்கியிருந்தது. அடுத்த சில நிமிசங்களில் மெல்லிய மணற்காற்று.

ஜன்னல் திரையை பிடித்தபடியே மணலை பார்த்துக் கொண்டிருந்தேன். மணலோடு பாலையை சுற்றி வரலாமா என்று தோன்றிக் கொண்டிருந்தது. போவதற்குள் மணற்காற்று நின்றுவிடும் என்றும் மனது சொன்னது.

பாலை நகரங்கள் நம்மை எளிதாக பற்றிக் கொண்டு அதன் விருப்பத்தில் நம்மை இழுத்தடிக்கின்றன. நாம் செய்யவேண்டியதெல்லாம் காற்றிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட காகிதத்தை போல அதன் போக்கில் நம்மை விட்டுவிடுவது மட்டுமே.

-0-0-0-0-0-0-

குறிப்புகள்:

மேற்கண்ட யுவகிருஷ்ணாவியத்துக்கு ஆதாரம்: விழிக்கும் ஏரி  – சந்தேகமேயில்லாமல் இதுவொரு எஸ்.ராமகிருஷ்ணன் க்ளாஸ்ஸிக்!  (மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள், பொருத்திப் பார்த்து விளங்கிக்கொள்ளவும்)

முடிந்தவரை, மூலத்தில் இருப்பது போலவே, இந்த எழவெடுத்த நிர்மூலத்தில், ஒற்றெழுத்துகளை உபயோகிக்கவில்லை. தவறான வாக்கிய அமைப்புகளைத் தவறாமல் உபயோகித்திருக்கிறேன். முடிந்தவரை நெகிழ்வுத் தன்மையை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன்.; அதேபோல அரைகுறைத்தனத்தையும், அபத்தங்களையும் – எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிடித்தமாக, வெகுவாகத் தேய்ந்துபோன சொற்றொடர்களையும்….

நன்றி.

 அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )

6 Responses to “முழிக்கும் ஸஹாரா – யுவகிருஷ்ணா செய்யப்பட்ட ஒரு புர்ராமகிருஷ்ண நெகிழ்வுக் கதை!”

  1. Anonymous Says:

    சார்..! அவர் பாவம்… விட்டுடுங்க… தெரியாம எளுத்தாளர் ஆயிட்டார்… :-)

  2. ஆனந்தம் Says:

    விமலாதித்த மாமல்லனே தேவலாம் என்று எஸ்ராவுக்குத் தோன்றிவிடும். ஜீவ ஹிம்சை மஹாபாபம் ஐயா!
    பரமண்டலத்திலிருக்கும் பிதாவே! எஸ்ராவை மன்னித்து வெ.ராவையும் மன்னித்துவிடும்.

  3. க்ருஷ்ணகுமார் Says:

    நிர்மூலத்தில் :-

    தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்று கதவை திறந்த போது கூடவே குளிரும் நுழைந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் குளிர் தெரிந்தது. கம்பளியை இழுத்து போர்த்திக் கொண்டு சுருண்டு கொண்டேன்.

    ஒத்திசைவில் :-

    முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் வெப்பம் தெரிந்தது. அனைத்து உடைகளையும் கழற்றிவிட்டு போர்த்திக் கொள்ளாமல் விரிந்து கொண்டேன். திரையை லேசாக தள்ளி திறந்தேன். அதற்காகவே காத்திருந்தது போல வெப்பம் உள்ளே வேகவேமாக நுழைந்தது. பாலைவனத்தை சுற்றி நடந்து வரலாம் என்று கூடாரத்திலிருந்து கிளம்பினேன்.

    ச………. ச……… இந்த பாறைக்கோ……….. மணலுக்கோ…………ஒட்டகத்துக்கோ…………ஒட்டகப்பாலுக்கோ……….மஸ்ஜிதுக்கோ………….பாலையோரகடைக்காரர்களுக்கோ………..ஒட்டகப்பால் விற்ற கடைக்காரருக்கோ…………….ஏதாவது வித்யாசம் இருக்கிறதோ?

    ம்ஹும் இல்லவே இல்லை………….

    இப்படி ஒரு மனுஷன் அம்மணமாகப் போகிறானே…………. எத்தையாவது கொடுத்து அவனை மூடித்தொலைப்போம்…………. என்று எதுக்கும் எதுவுமே தோன்றவில்லை………….வேறுபாடே இல்லாத உலகம்………..

  4. பொன்.முத்துக்குமார் Says:

    ஐயா சாமி, பொரட்டி பொரட்டி இந்த தாக்கு தாக்குறீங்களே ! சிரிச்சி மாளல போங்க.

  5. vanthia thevan Says:

    “இந்த நகரில் எனக்கு ஒரு வேலையுமில்லை. எந்த காரணமும் இல்லாமல் வந்திருக்கிறேன். அடுத்து என்ன செய்யப்போகிறேன் ஒரு திட்டமும் இல்லை.”
    வேலையற்ற ஒருவரின் அசம்பாவிதத்தால் குறிஞ்சியும் பாலையும் ஒரு வழியாக்கப்பட்டன. முல்லை, மருதம், நெய்தலின் கதி என்னவோ? எப்பொழுதோ?


  6. […] முழிக்கும் ஸஹாரா – யுவகிருஷ்ணா செய்ய… […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s