புறம்_பாலிடிக்ஸ் டேட்டா_ஸையின்டிஸ்ட் பையரின் தொடர்ந்த, முடிவேயில்லாத உளறல்கள்…
April 23, 2016
முன்னமேயே ஒருதடவை இந்த டேட்டா ஸையின்டிஸ்ட் ப்ரக்ருதியின் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ உளறல்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் சே என்று விட்டுவிட்டேன்.
-0-0-0-0-0-0-
-0-0-0-0-0-0-
*ப்ச்* இந்தப் பையர் ஏன் தொடர்ந்து உளறிக்கொண்டே இருக்கிறார்? இப்படி ஒரு இளைஞன் கண்டமேனிக்கும் உளறுவதை ஓடிப்போய் அரைகுறைகள் ஏன் அதனை மேலதிகமாக ரீட்வீட் செய்கிறார்கள்? பின்னவர்கள் ஒருவேளை, புறம்_பாலிடிக்ஸ்காரரைக் கமுக்கமாகக் கிண்டல் செய்கிறார்களோ?
ஆமாங்க. அவ்ங்க ஹிண்டு இல்லீங்க; ரெண்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா! இல்லாகாட்டீ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்! அவ்ளோதான், சர்யா?
-0-0-0-0-0-0-
சரி. பாரதத்தின் நெடிய வரலாற்றில், புகழப்படவேண்டிய பல பெரிய, பெரும்பாலும் போற்றத்தக்க அரசர்கள் இருந்திருக்கிறார்கள்தான் – ஸுக்ருங்க்ஃபா, ரஞ்சித்ஸிங், ஷிவாஜி, மணிகர்ணிகா, ப்ரதாப்ஸிங், ஷேர்ஷா ஸூரி, சமுத்திரகுப்தர், ஸுரேன்ஃபா, க்ருஷ்ணதேவராயர், சாலிவாஹனர்கள், நம்மூர் ராஜராஜ, ராஜேந்திர சோழர்கள், மகேந்திரவர்ம ராஜசிம்ம பல்லவர்கள், வீரவல்லாளன், புலிகேசி எனப் பலப்பலர் – கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால் இன்னமும் நிறைய பெயர்கள் நினைவுக்கு வரும். இவர்களில் சிலர் ஹிந்துக்களாக இருந்திருப்பதால், அவர்களை மன்னித்துவிடலாமா, புறம்பாலிடிக்ஸாரே?
ஆனால் புறமாருக்குத் தெரிந்ததெல்லாம் அசோகரும் அக்பரும்தான்!
அசோகன் தம் மக்களாலேயே எவ்வளவு வெறுக்கப்பட்டான் (கலிங்கப்போர் காரணமாக மட்டும் அல்ல) என்பதாவது தெரியுமா? அவன், தன் தந்தைக்குப் பின் அரசனாகவிருந்த தன் அண்ணனைக் (=ஸுஷிமன்) கொன்றுவிட்டுத்தான் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது என்ற பின்புலமாவது தெரியுமா? மஹாவம்சம் எனும் வரலாற்று நூலை, புறம்பாலிடிக்ஸார் அய்யா படித்தால் அசோகன் தன்னுடைய சகோதரர்களில் ஐவரைக் கொன்ற விஷயங்களெல்லாம் தெரியவரலாமோ? ஆனால் 140 கேரக்டர் எழவுக்குள் தெளிவான வரலாறுகளைப் புகட்டமுடியாததால் உளறல் மட்டுமே சாஸ்வதமாகியிருக்கிறதோ?
…படிப்பறிவே சுத்தமாக இல்லை, அப்படியே இருந்தாலும் முன்னர் எழுதியதுபோலவே ஒரு பிபிஸி டாக்குமென்டரி படஎழவைப் பார்த்துவிட்டு, அல்லது ஷாருக் கான் திரைப்பட நாராசத்தைப் பார்த்துவிட்டு – புல்லரிக்கப்பெற்று, உடனடியாக விக்கிபீடியா பார்த்து திடீரெக்ஸ் உண்மைகளை உணர்ந்து, முக்கால ஞானம் பெற்று – உடனடியாக ஏகாம்பரத்தனமாகவும், மேட்டிமைத்தனத்துடனும் எழுத முடிகிறது…
ஆகவே, கருத்துச் சுதந்திரம் மட்டும் இருக்கிறது, உளறிக்கொட்டுவதற்கு…
There should NOT be any freakin’ free-speech, it should be HEAVILY taxed henceforth. Especially on this stupid Twitter!
–0-0-0-0-0-0–
இவற்றுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கமுடியும் என்றாலும் – என் நினைவில் இருப்பவற்றில் ஒன்றை மட்டும் இங்கு கொடுக்கிறேன்: 1958 1568 ஃபெப்ருவரியில் ராஜபுத்திரர்களுடன் நடந்த போரில் சித்தோர்கட் கோட்டை நகரை வென்றவுடன் அதில் இருந்த 25000க்கும் மேலான அப்பாவி (ஆயுதம் தரிக்காத) மக்களைக் தலையைச் சீவிக் கொன்றதும், இதே அக்பர் தலைமையேற்று நடத்தியதுதானே?
ஒவ்வொரு போருக்குப் பின்னும் முன்னும் படுகேவலமாக, அக்பருடைய தலைமையில் – அவருடைய படையினர் நம்மூர் புற நானூற்று ‘வீரர்கள்’ போல உழபுல-மழபுல வஞ்சிக் கணக்கில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததும் சூறையாடியதும் + மொகலாயப் படையினரின் பாலியல்பலாத்காரத்துக்குப் பயந்து தோற்ற நாட்டின் பெண்கள் தங்களை எரியூட்டிக்கொண்டதும் (=’ஜௌஹர்’) நடக்கவில்லையா என்ன?
-0-0-0-0-0-
வரலாறுக்கும் உளறாறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இப்படியா பினாத்தவேண்டும்?
-0-0-0-0-0-0-
தேவையா? (ஒருவேளை என்னைப்போலவே, இந்தப் பையரும் தமிழ் வழிக்கல்வியை ஏதாவது டப்பா பள்ளியில் படித்ததால், அவருக்கும் இந்த ஆங்கிலப் பிரச்சினையோ என்ன எழவோ, பாவம்!)
இவற்றைவிட எனக்கு அதிர்ச்சி தந்த விஷயம்: இந்த உளறலுக்கும் ஆங்கிலப் பிழைகளுக்கும் — ஓடிவந்து மூன்று ரீட்வீட்களும் நான்கு லைக்குகளும்! இணையக் குளுவான்கள் விசித்திரமானவர்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை!
முட்டாக்கூவான்களின் உலகமடா இது! சலிப்பாக இருக்கிறது.
நன்றி! நன்றி!! நன்றீ!!!
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
April 23, 2016 at 12:46
> 1958 ஃபெப்ருவரியில் ராஜபுத்திரர்களுடன் நடந்த போரில்
1568
April 23, 2016 at 13:11
பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திக்கொண்டேன்.