‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர்

September 25, 2015

பாவிகளே! நீங்கள் நாசமாப் போக!!

என்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டீர்களா… :-((

-0-0-0-0-0-0-

…மேதகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தொடரும் லீலாவினோதங்களுக்குப் பஞ்சமேயில்லை.  :-))

‘கபிஷ்ராஜ்’ என்பவர் தேவைமெனக்கெட்டு, ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். இம்மாதிரி தப்பு கண்டுபிடித்தே தருமியின் வாலை சூத்து கவ்வும் என்றலைந்து, துப்புரவாக வேலைவெட்டியற்று இப்படி எஸ்ரா வேட்டையாடினால், அய்யாமார்களே, எப்படித்தான் நான் உயிர் தரிப்பது, சொல்லுங்கள்?

உங்களுக்காவே எஸ்ரா ஸ்பெஷல்: “…ஸ்காட்டியாவில் பயிலும்போது அமெரிக்க கருப்பின மக்களின் வரலாறு சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார் மேரி. குறிப்பாக, ‘டாம் மாமா’ எழுதிய ‘குடிசை’ ”

– டாம் மாமா எப்ப குடிசை புத்தகம் எழுதினார்? அது Harriet Beecher Stowe எழுதிய Uncle Tom’s Cabin இல்லையோ?!

ராமகிருஷ்ணாவே சரணம். :)

வீடில்லாப் புத்தகங்கள் 51: கனவில் துரத்தும் புத்தகம்!

ஆ! மாரடைப்பு! 106… 106… (என் மனைவி:செத்து ஒழி! காலங்கார்த்தால ஒரு அக்கப்போர்! இது தேவையா??)

மறுபடியும் இதனைச் சரிபார்த்தேன்.

எஸ்ரா அவர்கள் தம் வழக்கம்போல் மிகச் சரியாகவே தவறாக எழுதியிருக்கிறார்! :-(

Screenshot from 2015-09-25 09:45:26பாவி மனிதர், அட்ச்சு வுடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? யுவுகிருஷ்ணா மணிகண்டர்களே ஏகத்துக்கும் பொறாமைப் படும்படியாகவா நடந்துகொள்வது? :-(

-0-0-0-0-0-0-

அய்யா கபிஷ்ராஜ்:

மகாமகோ புர்ராமகிருஷ்ணன் அவர்கள், அவரது வழக்கம்போலவே, ஒரு எழவையும் படிக்காமல் உளறிக் கொட்டியிருக்கிறார் – எனச் சொல்லவருகிறீர்கள் என நினைக்கிறேன், சரிதானே?

ஆனால் நான் அப்படி நினைக்காமல் இப்படி நினைக்கிறேன் – அந்தப் புத்தகத்தைப் பற்றி – Uncle Tom’s Cabin என அவர் காற்றோடு வந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு இப்படி யோசித்திருப்பார்:

மாமா டாமின் கேபின். ஆக மாமா டாம் எழுதிய புத்தகம் தான் கேபின். கேபின் என்பது குடிசை.

கேபின் என்பது சிறுகுடிலோ சிற்றறையோ அல்லவேயல்ல. அது ஒரு குடிசை மட்டுமே!

ஊக்கபோனஸாக – குடிசை என்பதே தனியாக என்னைப் பார்த்துத் தன்னைத்தானே ஆயிரம் வருஷமாகப் பேசிக்கொண்டு பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருக்கும் புத்தகம்தான்.

டாம் என்பது டாம்டாம் Tom Tom என்பதன் பாதி.  Tom Tom என்றால் டமாரம். ஆக டாம் என்றால்  டமா.

புத்தகம் என்பதே – புத்த-கம் – புத்தருடைய கோந்துதான். (குறிப்பு: ஏனெனில், எஸ்ரா ஜப்பான் போனபோது ஜென் துறவிகளிடம் அப்படித்தான் சொன்னார். அவர்கள் பதிலுக்கு –  ஃபுக்குஷிமா அணுக்கருவுலை பற்றிய தொழில் நுட்பங்களையும்,  சாலையோர வேசைகளுடன் சல்லாபிப்பதையும், அவருடன் பகிர்ந்து கொண்டனர்)

ஆக ஆனானப்பட்ட எஸ்ராவிய முழிபெயர்ப்பில்:

Uncle Tom’s Cabin = மாமா டமா-வின் புத்தருடைய கோந்து
QED.  போங்கடா.

எங்கள் சொக்கத் தங்கம் மேதகு எஸ்ரா-வின் முழு ஆகிருதியை உணராமல், ங்கொம்மாள, கும்மியடித்துச் சிரிக்கத்தான் நீங்களெல்லாம் லாயக்கு.
-0-0-0-0-0-0-

அய்யா, கபிஷ்ராஜ்… அவருடைய தருக்க ரீதியான சிந்தனையில் என்ன குறையைக்  கண்டீர்கள்? உங்களுடைய கிண்டல் எனக்கு விசனத்தை அளிக்கிறது;  விருதாக்கள் பல வாங்கிய ஒரு பெரிய படைப்பிலக்கியவாதியை இப்படியா விட்டேற்றியாக கலாட்டா செய்வது?

வீண டமிள் எலக்கியத்தின்  முழுமுதல் மூர்த்திகளில் ஒருவர் அவர் என்பதை மறந்து இளக்காரமாகப் பேசவேண்டாம்.

Harriet Beecher Stowe என்றெல்லாம் மேதாவித்தனமாக எழுதிவிடுகிறீர்கள். இதனைப் பிடித்துக்கொண்டு புர்ராமகிருஷ்ணன் அவர்கள்,  இதனை hurrier at beach stove என்றெல்லாம் பதம் பிரித்து – அதனை இப்படி மொழி பெயர்த்தால் கதி கலங்கிவிடாதா?

‘கடற்கரையில் வாழும் அடுப்பின் பக்கம் அவசரமாக ஒதுங்குபவர்’

ஆனால் கபிஷ்ராஜ், நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விடுகிறீர்கள். ஆம். You depth  not knowing leg leaving. Sad.

ஜாக்கிரதை.

ஆனால், இந்த ஒரு விஷயம் மட்டும்தானா கபிஷ்ராஜ், அக்கட்டுரையில் உங்களுக்கு அபத்தமாகப் பட்டது? அக்காட்டுரையில்,  குறைந்த பட்சம் 12 மேலதிகத் தவறுகள் இருக்கின்றன. நீங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகமோ? You gowanting length too much? VERY sad. :-(
பின்குறிப்பு #1: ‘தமிழ் ஹிந்து’ தினசரிக் காரர்களுக்கு எடிட்டிங் என்பதன் பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டுமோ? இந்த அழகில், இது 51ஆவது கட்டுரையா! ஆ!
பின்குறிப்பு #2: வா. மணிகண்டன் அவர்களின் மணியான கட்டுரைகளின் ஸ்கேன்களையோ, சுட்டிகளையோ எனக்கு அனுப்பாதீர்கள். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. மேலும், என் அளவுக்கு எஸ்ரா போதும். சிரித்துச் சிரித்து வயிறு வெடிக்காமல் இருந்தால், திருந்த விரும்பாத மேஸொகிஸ்டாகிய நானே அவர் கட்டுரைகளைத் தேடிப் படித்துக்கொள்கிறேன். நன்றி.
-0-0-0-0-0-0-
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )

9 Responses to “‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர்”

  1. k.muthuramakrishnan Says:

    “உமது பாட்டில் குற்றம் இருக்கிறது…”

    “இருந்தால் என்ன? எவ்வளவு குற்றம் இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு பரிசலைக் கொடுக்கலாமே…”

  2. Raj Chandra Says:

    >>ஆனால், இந்த ஒரு விஷயம் மட்டும்தானா கபிஷ்ராஜ், அக்கட்டுரையில் உங்களுக்கு அபத்தமாகப் பட்டது? அக்காட்டுரையில், குறைந்த பட்சம் 12 மேலதிகத் தவறுகள் இருக்கின்றன. நீங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகமோ?

    – அந்த வரிகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. தரையில் புரண்டு சிரித்து, உங்களுக்கு சொல்லிவிட்டு அப்புறம் மீதியைப் படித்தேன்.

    மணிகண்டன் கட்டுரைகளைப் படித்தால் ‘நடக்கறதே வேற’ என்ற எச்சரிக்கைக் கொடி என் வீட்டில் பறக்கிறது (படிச்சுட்டு கத்தினா தாங்க முடியலையாம், எனக்கேன் வம்பு :)).

  3. Anonymous Says:

    athanAl enna aiyya. Evvalavu kutram irkiratho atharku etrarpola parisai kurathu kollungal.
    ippadiku
    –enatu india – by ramakrishnan endra puthagathai kasu koduthu vangiya oru loosu

  4. Anonymous Says:

    MR.k.muthuramakrishnan stole my punch line.

  5. பொன்.முத்துக்குமார் Says:

    ”You depth not knowing leg leaving. Sad”

    ”You gowanting length too much? VERY sad”

    தாங்கல ….

  6. Venkatesan Says:

    http://thamizhbooks.com/tom-maamavin-kudisai.html

    மூல மூல நூலின் தமிழாக்கம் “டாம் மாமாவின் குடிசை” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதைத்தான் எஸ்ரா பயன்படுத்தி உள்ளார் என நினைக்கிறேன். ஆனால், அது “டாம் மாமா எழுதிய குடிசை” என் மாறிப்போனதற்கு காரணம் எஸ்ரா வின் அறியாமையா, அல்லது யாராவது இந்து பத்திரிகை எடிட்டிங் பணியாளரின் கைங்கர்யமா என எனக்கு நிச்சயமில்லை.

    நீங்கள் கொடுத்துள்ள ஸ்க்ரீன் ஷாட் இந்து தளத்தில் இருந்தா அல்லது எஸ்ரா தளத்தில் இருந்தா? எஸ்ரா தளத்தில் இந்த கட்டுரையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

  7. Sivakumar Viswanathan Says:

    ராம்

    நீங்கள் எஸ்ராவை ‘ஷேக்ஸ்பியர் போட்ட ஆம்லெட்டு’ ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டீர்கள். உங்கள் புத்தர் கோந்து விளக்கம் படித்து ஒரு பொது இடத்தில் சிரித்ததில் நானே டாம் மாமாவாகிவிட்டது போல் உணர்ந்தேன். பக்கத்து சீட்டில் ஒரு ஜெர்ரி மச்சான் வேறு என்னை முறைத்தார்

  8. venkatehkumar. Says:

    அந்த” தமிழ் ஹிந்து’எடிட்டனுங்க மகா மொன்னப்பசங்க ஒரு நாள் புத்தக அறிமுகமுன்னு வைக்கம் முஹம்மது பாஷீரோட ‘பாத்துமாவும் இளம் பருவத்து கோழியும் ‘ அப்படின்னு போட்டானுங்க ,

  9. Hema Says:

    ​மைண்ட் ரிலாக்ஸ் … ப்ளீஸ் விசிட் திஸ் சைட் …… மாளவில்லை , சிரித்து சிரித்து ….
    வாழ்த்துக்கள் ​


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s