இந்த ட்விட்டர் அரைகுறைகளுடைய (அதுவும் அறிவிலித் தமிழ்க் குளுவான்களின்) வதந்திகளுடன் காத்திரமாகப் பொருதவேண்டுமானால் – அது சுமார் பத்தாயிரம் ஆட்களுக்கு முழு நேர வேலையைத் தரும் என நினைக்கிறேன். இதற்காக ஒரு அகில இந்திய அளவில் (எதிர்காலத் திட்டம்) அல்லது குறைந்த பட்சம் தமிழக அளவிலாவது, ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன் – “தமிழ்க் கூமுட்டைகளைப் பின்னேற்றும் கழகம்” – தகூபிக!

நம் கீபோர்டுகளைக் கொண்டு நம்மை இணைத்துக் கொள்ளலாம் வாரீர்!! #தகூபிகடா, #ங்கொம்மாள

Read the rest of this entry »

(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.

‘விடுதலைச் சிறுத்தை’க்கார நண்பர் அனுப்பிய நீளோதிநீளமான ஆங்கில மின்னஞ்சலின் ஒருமாதிரியான தமிழ்ப்படுத்திஎடுத்தல் கீழே. தனிப்பட்ட  ஷேக்ஸ்பியர்மேற்கோள் / அரட்டை / குடும்பவிவரங்களைக் கத்தரித்துவிட்டேன். முடிந்தவரை ‘கெட்ட’வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்; நண்பருக்குக் கோபம்வரும்போது வாயைத் திறந்தால் அது fuckin’ sonuvabitch எனத்தான் ஆரம்பிக்கும்.

தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக  நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »

ஆயிற்று, அந்தோணீ மார்க்ஸ் அவர்களின் உளறிக்கொட்டலில் ஆரம்பித்து,  அவரைப் பின் தொடரும் அரைவேக்காட்டுத் தாந்தோணி அரைவாளிகள் ஊடாக,  ‘விடுதலை’யின் தறுதலைவர் வீரமணி அவர்கள் வரை, அமோகமாகக் கருத்துச் சொல்கிறார்கள். சதி என்கிறார்கள். அடுத்து என்னவெல்லாம் நடக்கும் எந்தக் கட்சி எப்படிப்போகும் என்று ஆரூடம் சொல்கிறார்கள்! Read the rest of this entry »

இந்த தட்டச்சரிப்பாளனுங்கோ இப்டீ ரவுண்டு கட்டிக்கினு அறிவொரைங்கள சான்றோக்கூமுட்டெத்தனமா கொட்த்துக்கினே கீராங்களேடா! நான் இன்னாடா செய்வேன்! றொம்ப படுபயங்கரபீதியாக் கீதேடா! பேதீ வர்தேடா! Read the rest of this entry »

பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.

Read the rest of this entry »

பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(

ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »

எனக்கு இது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இதனை நான்  சபையில் வெட்கம்கெட்டுச் சொல்லியே தீரவேண்டும்: மேதகு எஸ்ரா அவர்களின் எழுத்துகளில், இக்காலங்களில், அவ்வளவு அதிகமாக ஒற்றெழுத்துப் பிரச்சினைகள் இல்லை.

Read the rest of this entry »

…நண்பர் மொஹெம்மத் அவர்கள், கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்:

ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.

Read the rest of this entry »

அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும்  என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன?  :-)

இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.

கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி,  தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Read the rest of this entry »

கடந்த சில பதிவுகளில் அநியாயத்துக்குப் பாடுபடும்பொருட்கள் – திராவிடர்களின் அடிப்படைக் குணாம்சங்களான அகொதீகழக நினைவுகள்; வெளிவந்துள்ள சில அமெரிக்க தூதரகச் செய்திப் பரிமாற்றங்களின் வாசத்தால் கிண்டப்பட்டவை.  (திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை? 09/04/2011)
இம்மாதிரி விக்கிலீக்ஸ் சங்கதிகள் மீதான என்னுடைய வேலைவெட்டியற்ற *பதிவுகளுக்கு நான்கு விதம்விதமான எதிர்வினைகள் – பல, வேலைவெட்டியற்ற மின்னஞ்சல்களாகவும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களாகவும், ஒன்றேயொன்று தொலைபேசலாகவும் வந்திருக்கின்றன; அவற்றின் சாராம்சம்:

Read the rest of this entry »

… இதெல்லாம் தேவையா  என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)

உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் –  உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …

சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு  ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.

இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.

Read the rest of this entry »

நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய  வார்த்தைகளில்:

ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே…  நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…

-0-0-0-0-0-0-0-0-0-

அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்: Read the rest of this entry »

இப்பதிவுகளுக்கான ஒரு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்: பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்?  (02/11/2013) இது  0/n – அதாவது முதல் பதிவு.

எச்சரிக்கை:  1) இந்தப் பதிவு வரிசை – பல மாதங்கள் முன் பத்ரிக்கு ஒரு கடிதம் போல எழுதப் பட்டது; ஆகவே, நான் கொஞ்சம் எடிட் செய்தாலும், வெட்டி-ஒட்டுவேலை செய்தாலும்  – சில காலாவதியான விஷயங்களும் இருக்கின்றன.  2) இப்பதிவுகள் சுமார் 15 போல வரலாம். ஆக, உங்கள் உயிருக்காக   ஓடவேண்டுமானால் தாராளமாக ஓடலாம். 3) ஆனால், மேலே படிக்கப் போகிறீர்களானால், அவசியம், இந்த வலைப்பூவின் முகப்பில் வலது பக்கத்தில் இருக்கும் பக்கங்களில் இதனைப் படிக்கவும்: ராமசாமி – யாரில்லை?

பத்ரியின் கேள்விகள்:

* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”

சரி. பத்ரி கேட்டிருப்பதன் சாராம்சம் – 1) ஸ்ரீலங்கா பிரச்னைகளும் 2) ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளும் – பற்றியவை.

ஆனால், சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, தமிழகக் கொதிப்பெல்லாம் வழக்கம்போல அடையாள உணர்ச்சிப்பிழம்புகள், ஃப்லெக்ஸ் தட்டி அடையாள உண்ணாவிரதங்கள், அடையாளக் கல்லெறிதல்கள் நடந்தபின்னர் பின்புறத்தில் (=குண்டிப்பட்டையில்) ஒட்டிக்கொண்ட மண் தட்டிவிட்டுக்கொள்ளப்பட்டு, அடங்கிப்போயிருந்தாலும், டெஸோக்கள் தஸ்புஸ்ஸோக்களாக உருமாறியிருந்தாலும், அவருடைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவேண்டியவையே. Read the rest of this entry »

உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.

உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.

நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –

  • அய்யய்யோ_அணுசக்தி,
  • அடேங்கப்பா_மரபணு,
  • வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
  • கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
  • உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
  • உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
  • பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
  • ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
  • ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
  • வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
  • கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
  • கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
  • நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!

…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல்  தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து  பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.

Read the rest of this entry »

முன்குறிப்பு: எனக்கு ஒருவர், என் பதிவுகளை விட நீளமான ஒரு (ஆங்கில) மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். பல ஆலோசனைகளை (நல்ல எண்ணத்தில்தான் என நினைக்கிறேன்) வாரி வழங்கியிருக்கிறார். சில உலகத்தைக் குலுக்கும், என் உலகப் பார்வையை தலைகீழாக  மாற்றும், கேள்விகளையும் கேட்டிருக்கிறார்.  நன்றி, அய்யா.

அவற்றில் — மிக முக்கியமான கேள்விகளில் நான்கு: 1) நீ எழுதும் தமிழ் கரடுமுரடாக இருக்கிறது. எளிமையாக எழுதினால் ‘ரீச்’ அதிகமாகும். எனக்கு உன் பதிவுகளைப் படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. நீ ஏன் உன் ‘ஸ்டைலை’ மாற்றிக் கொள்ளக் கூடாது? 2)  நீ தமிழ்ச் சினிமாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 3) ஏன் தமிழ் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை? இப்படி எழுதினால் நிறைய பேர் படிப்பார்களே! 4) டீவியில் நிறைய நல்ல விஷயங்கள் வருகின்றனவே! பொத்தாம் பொதுவாக டீவியே வேண்டாம் என்று சொல்வது, குழந்தைத் தனமாக உள்ளது. உனக்கு ஏன் இந்த வீம்பு?

என் பதில், முறையே:

1) என்னுடைய தமிழ் அற்புதமானது, எழுத்து அழகானது என்றெல்லாம் சொல்கிற அளவுக்கு நான் அற்பனல்லன். மேலும், தமிழில் ‘பயணிக்க’வென்று எழுதுபவர்கள், தொடுவதை ‘ஸ்பரிசிப்பது,’ சும்மானாச்சிக்கும் மேலோட்டமாக விட்டேற்றியாகப் படிப்பதை ‘வாசிப்பது’ என்றெல்லாம் எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். எளிமையான, உள்ளீடற்ற தமிழ் வேண்டுமென்றால், ‘ரீச்’சோடு ரீச்சாகப் போய் ஐக்கியமாக வேண்டுமென்றால்,  நீங்கள் தாராளமாக அவர்களிடம் செல்லலாம்.  நீங்கள், நான் எழுதுவதையெல்லாம் படித்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை.  என் ஸ்டைல்(!)  இழவை உங்களுக்காகவெல்லாம் மாற்றிக் கொள்ளமுடியாது. ஒரு விஷயம்: நீங்கள் என்னுடைய தமிழைக் குறை சொல்வதற்குமுன் உங்கள் மின்னஞ்சல் இழவையாவது தமிழில் எழுதியிருக்கலாமே!

2) ஒரு இழவையும்  நினைக்கவில்லை.

3) பார்ப்பதில்லை, ஆகவே எழுதுவதில்லை. கடைசியாகப் பார்க்க முயன்றது: எழவாவது அறிவு.  எனக்குத் தாளவில்லை. மன்னிக்கவும். நான் எழுதுவதை(!) நிறைய பேர் படிக்கவேண்டும், ஜனரஞ்சகம் என்றெல்லாம் எழுதுவதில்லை. எனக்குத் தரமான பத்து சகவாசகர்கள் இருந்தால் போதும். இதுதான் முக்கியம் –  நிச்சயமாக, அற்பத் திரைப்படங்களல்ல – சர்வ நிச்சயமாக, அவற்றை மட்டும் ஆராதிக்கும் தமிழச் சோம்பேறிகளல்ல. மேலும், எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றியதைத்தான் எழுதுவேன்.

4) ஒப்புக் கொள்கிறேன்: எனக்கு வீம்புதான். என்னை விட்டுவிடுங்கள். தயவுசெய்து. எனக்கு. முடியவில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »

பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.

… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து —  ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!

அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!

 கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

Read the rest of this entry »

முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (1/3)

19. சோட்டாபீம்  போன்ற அற்ப கேலிச்சித்திர அசிங்க அதிகுண்டக் கோமணர்கள் இல்லாமல், வாழ்க்கையில் வீரத்தையும், விடாமுயற்சியையும் – எப்படித்தான் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது? கேளிக்கை முறை ஊடக நிகழ்ச்சிகளினால் மட்டும்தானே குழந்தைகளுக்கு இவ்விழுமியங்களைக் காண்பிக்க முடியும்? சேர்ப்பிக்க முடியும்?

ஆம். இது மிக வருந்தத்தக்க, ஆனால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.

வேறு வழியில்லை. பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும், இதிஹாசங்களும், புராணங்களும், ஐங்காப்பியங்களும் சொல்லாத, சுட்டாத விஷயங்களை, மிகுந்த நயத்துடன், மிகத் தெளிவாக சோட்டாபீம் அவர்கள் காண்பிக்கிறார்கள். எனக்குப் புல்லரிக்கிறது.

அடிப்படை அறங்களின் ஒரு அங்கமான நேர்மை, தைரியம் போன்ற அடிப்படை விழுமியங்களை, பெற்றோர்களாகிய நம்மால் பல்வேறு அழுத்தங்களால் நம்முடைய குழந்தைகளுக்குப்  புகட்டமுடியாமல் போகும்போது, யாராவது தொலைக்காட்சியில் இவற்றைக் காண்பித்தால் என்னைப் போன்ற உலுத்தர்கள், புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்தச் சனியன்களுக்கு வேறு வேலையில்லை. மேலும் உங்களுடைய குழந்தைகள், சோட்டாபீம் படம் வரைந்த மேல்சட்டைகளை அணிந்து கொண்டு உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, உங்கள் இதயம் உருகிவிடாதா? Read the rest of this entry »

முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு  வாழ்வதெப்படி (1/3)

10. ஆனால், தொலைக்காட்சியில் நாம் இப்போது பார்க்கும் விஷயங்கள், கண்+செவி கொண்டு நம்மை அடையும் செய்திகள், பிற்காலத்தில் நமக்கு உபயோக கரமாக இருக்கலாமில்லையா? எதிர்காலத்தின் நாம் உபயோகிக்கக்கூடும் நினைவுகள், தற்காலத்திய இந்த்ரியத் துய்த்தல்கள் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன அல்லவா?

நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம் நினைவில் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ எவ்வளவு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டவைகளிலிருந்து நாம் எவ்வளவு சதவிகிதத்தை உபயோகித்து நம்மை உய்வித்துக் கொண்டிருக்கிறோம், மகிழ்வித்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்தால் நலம்.

பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு – ஒரு நீண்டகால தாக்கத்து என்பது இல்லை. அவை சாதாரணமான துய்த்தல்கள் தான். அதிக பட்சம் One night stand போன்றவைதான். Read the rest of this entry »

எச்சரிக்கை: இந்தப் பதிவில் 1) ஏன் தொலைக் காட்சி என்பது வெறுக்கப் படவேண்டியதொன்று 2) அதனால் ஒரு சில நன்மைகள் தப்பித் தவறி இருந்தாலும் – உண்மையில் அது எவ்வளவு தீமை செய்கிறது 3) தொலைக்காட்சி முதல்வாத அடிப்படைவாதிகளுக்கு (Television Fundamentalists!), சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு எதிராக  என்றெல்லாம்…

… பிரகடனங்கள் இல்லை. மன்னிக்கவும்.

calvinhobbes-tv

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் பின்னொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன். 8-)

மாறாக – என் பார்வையில் – குழந்தைகளுடனான ஒரு குடும்பச் சூழலில்,  சராசரித் தர (அறிவு, பொருளாதாரம், பார்வை, அனுபவங்கள் இன்னபிற) பெற்றோர்களால் – தங்கள் வீட்டில், தொலைக்காட்சியில்லாமல் என்னதான் செய்யக் கூடும் என்பதை மட்டுமேதான் இப்பதிவில் விவரிக்கப் போகிறேன்; இங்கு ஒரு முக்கியமான விஷயம்: எனக்குத் தெரியும் – நானும் ஒரு சராசரித்தனமான ஆள்தான் – அகஸ்மாத்தாக ஒரு கணவன், தந்தை போன்ற பல பாத்திரங்களில், குணசித்திர வேடங்களில் நடிப்பவன்தான். இன்னும் முக்கியமாக, நான் ஒரு அறிவுஜீவி கிறிவுஜீவியென்றெல்லாம் இல்லை.

ஆகவே, கடந்த சுமார் 30 வருடங்களாகத் தொலைக்காட்சியின் கிட்டவே போகாமல் காலம் தள்ளியிருக்கும் ஒரு சாதாரணன்  என்கிற முறையில் மட்டுமே இந்தக் கேள்வி-பதில் நடைப் பதிவு நீளும்.  யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகளை எல்லாம், என்னிடம் பலபேர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்கள்; விதம் விதமான பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் மகனை, மேதகு சோட்டாபீம் அவர்களிடமிருந்து மீட்க வேண்டுமாம்.  ஆக, இந்தப் பதிவு; வழக்கம்போல, யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் !
Read the rest of this entry »