மகாமகோ ஃபேஸ்புக்டிவிட்டர்வாட்ஸப் விஞ்ஞானிகள் (அல்லது) யேஸ்ஸுவே! பாவப்பட்ட என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்! :-(
February 9, 2017
இந்த தட்டச்சரிப்பாளனுங்கோ இப்டீ ரவுண்டு கட்டிக்கினு அறிவொரைங்கள சான்றோக்கூமுட்டெத்தனமா கொட்த்துக்கினே கீராங்களேடா! நான் இன்னாடா செய்வேன்! றொம்ப படுபயங்கரபீதியாக் கீதேடா! பேதீ வர்தேடா!
வொலகத்ல கீற அல்லா பெரச்னைக்கும் வெரைட்டியா வெடெ ரெடியா வெச்சிர்கானுங்க்ளேடா இந்த பேமானீங்கோ!!! அள்ள அள்ளக் கொற்யாமே வாரி வாரீ வள்ங்கறாங்களேடா! நாம்பொ இவ்ளோ வெடெங்கள வெச்சிக்கினு இன்னா செய்றதுண்ணே தெரீல்லயேடா… ரூம்பு கூம்பு போட்டு றொம்ப ஸீரியஸ்ஸா ரோசன பண்ணுவாங்க்ளோ? பிர்யல்லியேடா! இவ்ளோ வெஞ்ஞானிகல் இருந்தாளும், நம்பொ தெராவெடம் ஏண்டா முன்னேற்வே மாட்டேன்ற்து! ஆர்ய சதிதாண்டா இதுக்கெல்லாத்கும் கார்ணம்…
ஆனா வொண்ணு சொல்றேன் – 2017லேர்ந்து அத்தினி நொபெல் பரிசு, ஃபீல்ட் மெடல் வகையறாவும் தமிழ்ல, அத்துவும் சமூவவளைத்தலத்லே எள்தற பெர்ச்சாளி வெஞ்ஞானிகளுக்கு மட்டுமேதான் ரெஸர்வ்ட்! ஆனாக்க பாவண்டா, அப்பால வெள்ளக்காரனுங்கோ வெற்த்துப்பூட மாட்டானுங்களாடா? #வோத்தாடேய்
முன்குறிப்பு: அடைப்பான், கார்க் (அல்லது இதன் பெண்பாலான மேக்ஸி கார்க்கி; ரஷ்யாவிலிருந்து தரவிரக்கம் செய்துகொள்ளலாம்; உதவிக்கு, அணுசக்தி விஞ்ஞானி #எஸ்ரா அவர்களை அணுகவும்! அவரிடம் ஸ்டாக் இருக்கும் வரைதான் இந்தச் சிறப்புச் சலுகை, ஆகவே விஞ்ஞானப் பந்திக்கு முந்தவும்!) என ஏதாவது கைவசம் இருந்தால், தயைசெய்து அதனைப் பின்பக்க ஓட்டையில் அடைத்துக்கொண்டு மேலே படிக்கவும். ஏனெனில், ஏதாவது ஏடாகூடமாகப் பிடுங்கிக்கொண்டுவிட்டால் நான் ஜவாப்தாரியல்லன். ஆனால், வருத்தத்துக்குரிய வகையில், எனக்கு இந்த விஞ்ஞானக் கொழுந்துக்கருத்தினை அனுப்பிய அன்பர், என்னிடம் இதுபற்றி முன்னெச்செரிக்கை செய்யாததால்… :-( இப்போது என் கால்சராயையும் கோமணத்தையும் உடனடியாகத் தோய்த்துப்போடவேண்டும். நன்றி.
-0-0-0-0-0-
கடலில் கச்சா எண்ணெய் – சில யோசனைகள்
சென்னை அருகே கடலில் கப்பல்கள் மோதி, கச்சா எண்ணெய் வெகுவாகக் கலந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதைத் திறம்பட நிகழ்த்த, எனக்குத் தோன்றிய சில யோசனைகள்.
எண்ணெய் அடர்த்தியானது என்பதால், கடல் மேல்பரப்பில் மட்டுமே பரவியிருக்கும். ஆனால், நீருக்கடியில் உள்ள உயிரினங்கள் மேற்பரப்பிற்கு வரும்போது, அவை பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, அவை இன்னும் உயிருடன் இருக்கும் பட்சத்தில், நீரடி வீரர்களை உரிய கவசங்களுடன் அனுப்பி, அவற்றை உடனடியாகப் பிடித்து, வேறு இடங்களில் பாதுகாக்க வேண்டும். இயல்பு நிலை திரும்பியதும் அவற்றை அங்கே மீண்டும் விடலாம். இதற்கென அவசரமாகக் கடல்வாழ் உயிரினச் சரணாலயம் ஒன்றை அமைக்க வேண்டும். இது, நகரும் வாகனங்களாகவும் இருக்கலாம்.
கடற்பரப்பில் எண்ணெய் வேகமாகப் பரவி வருகிறது. உத்தேசமாகப் பத்துக் கடல் மைல் தொலைவு வரை இது பரவியிருப்பதாகக் கொண்டால், இந்தப் பணியைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடல் மைலுக்கும் ஒரு குழு. ஒவ்வொரு குழுவிலும் 30 எந்திரப் படகுகள். ஒவ்வொரு கடல் மைல் சுற்றளவிலும் 30 படகுகள் பணியாற்ற வேண்டும். மொத்தம் 300 படகுகள்.
இவற்றில் பெரிய அளவிலான உறிஞ்சிகளைக் (ஸ்பாஞ்சு) கொண்டு எண்ணெய்ப் படலங்களை உறிஞ்சி, மோட்டார் படகில் உள்ள கலங்களில் எந்திரங்கள் வாயிலாக உடனே பிழிய வேண்டும். நீரும் எண்ணெயும் சேர்ந்து பிழியப்பட்டால், இங்கும் எண்ணெய் மிதக்கும். இதனை வடிகட்டி, நீரை மீண்டும் கடலில் விட வேண்டும். எண்ணெயைச் சேமித்துக் கரைக்குக் கொணரலாம். அல்லது, இன்னொரு பெரிய / சிறிய கப்பலுக்கு ஏற்றலாம்.
இந்தப் பணியை மென்பொருள் மூலம், தானியக்கமாய் ஆக்க முடிந்தால் வேலை இன்னும் சீக்கிரமாய் முடியும்.
இன்னொரு வகையில், டன் கணக்கில் உறிஞ்சிகளை விமானம் / ஹெலிகாப்டர் வழியாக இப்பகுதியில் கொட்ட வேண்டும். இவை அனைத்தையும் படகில் சென்று, திரட்டி வந்து எண்ணெயைப் பிரித்து அகற்றலாம்.
கரையில் படிந்த எண்ணெய் சற்று நிலத்தின் உள்ளும் சென்றிருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒட்டுமொத்தமாக இந்தக் கடற்கரைகளை சீல் செய்து, சதுர அடி சதுர அடியாக மண்ணை 5 அடி ஆழத்திற்கு எடுத்து, அதனை நீரில் பல முறைகள் அலசி, மீண்டும் அதே இடத்தில் பதிக்க வேண்டும். இதிலும் எண்ணெயைத் தனியே பிரித்துச் சேமிக்க வேண்டும்.
இதற்கெனத் தனி அமைப்பும் நீர்ச் சுழற்சித் திறனும் கொண்ட வாகனங்களைக் கடற்கரையில் ஆயிரம் எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். இவற்றுக்குத் தடையில்லா மின்சாரமும் நீர்ப் பங்கீடும் வழங்க வேண்டும்.
பாறைகளைக் கையாள, தனிக் குழுக்களை அமைக்க வேண்டும்.
சுற்றுச் சூழலுக்கு நெடுநாள் பெரும் கேடு விளையும் என்பதால், இதனை அவசர நிலைப் பணியாக எடுக்க வேண்டும். இதில் பணியாற்றுபவர்களுக்கு இரு மடங்கு ஊதியம் அளிக்க வேண்டும். அத்துடன் மருத்துவ உதவிகளையும் அளிக்க வேண்டும்.
:-)))) ஆதாரம்: http://www.twitlonger.com/show/n_1spj77m
-0-0-0-0-0-0-
2017லிருந்து ஆரம்பித்து அடுத்த பத்து வருடங்களுக்கு பாரதரத்னா முதல் நொபெல் பரிசுவரை, விஷ்ணுபுரம் பரிசிலிருந்து மேன்புக்கர் விருது வரை, பரம்வீர்சக்ரா முதல் திருமாவளவன் கொடுக்கப்போகும் ‘தமிழ் இடிதாங்கி’ விருதுவரை, ஃபீல்ட்ஸ் விருது முதல் ஜல்லிக்கட்டு எருது வரை… … தொடர்ந்து இவருக்குத்தான் வழங்கப் படவேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, இவையனைத்தும் புரட்சிச் சின்னம்மா அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்படவேண்டும். அதற்குமுன்னால் – அவை, திருமாவளவன் வீரமணி அமார்க்ஸ் கைகளால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும்…
இவையெல்லாம் நடக்கவில்லையேல் அது ஆரிய சதியைத் தவிர வேறொன்றுமில்லை.
-0-0-0-0-0-0-
பின்குறிப்பு: இப்படி அதிமேதாவித்தனமாகவும் விலாவாரியாகவும் அறிவுரை வழங்குபவர்களை நன்றாகப் பிசைந்து முறுக்கி, விளக்குத் திரி போலச் செய்துகொள்ளவேண்டும். பின்னர் அவர்களை எண்ணையில், அது கச்சாவாக இருந்தாலும், அல்லது அதிதீவிர அமிலமாகவே இருந்தாலுமேகூட அதில் முக்கவேண்டும்.
பின்னர் அவர்கள் இன்னொரு ட்விட்டர் ஸ்டேட்டஸ் குசுவிடும் வரை காத்திருக்க வேண்டும். அது விடப்பட்டவுடன், உடனடியாக ஒரு தீக்குச்சியைக் கிழித்து அவர்கள் பின்புற ட்விட்டர் விஞ்ஞான வாய்க்கருகில் கொண்டு செல்லவேண்டும். பெருவெடிப்புக்குப் பின்னெழும்பும் ஜோதியில் நாமும் கலந்துவிடலாம். நன்றி.
…And, we can all happily tweet our assome scientific tweets & twitlongers && twitlongests ever after.
Anus horribilis. Truly and verily.
Amen. :-(
நண்பர் சொல்கிறார்: சமூக வளைத்தல விஞ்ஞானக் குளுவான்களை விட, அங்குள்ள பொருளாதார மேதைகள், சட்ட வல்லுநர்கள், மனிதவுரிமைக் குசுவாளர்கள், சமூகவியலாளர்கள் போன்ற திடீரெக்ஸ் அறிஞர்களின் நகைச்சுவையுணர்ச்சி என்பது மிகமிக அதிகம், படிக்கப்படிக்கக் குறையாத சிரிப்புச் சுரங்கம் என்று; ஆனால் எனக்கு அவர்களைப் படித்துச் சிரிக்கக்கூட அவகாசமோ, ஆவலோ இல்லை. சமூகவளைத்தலப் பெருச்சாளியாக இல்லாத நான், பல வெடிச்சிரிப்பு விஷயங்களைப் பெறும் மகத்தான பேறு பெறாமல், பெருஞ்சோகத்தில் அல்லாடுகிறேன் எனத்தான் படுகிறது. ;-)
February 10, 2017 at 15:41
https://www.youtube.com/watch?v=z5eL0IQiHxI – here குறல் @ 1.05 m
February 10, 2017 at 18:33
Ram ..I always wonder how people always forwarding these kind of information’s exactly to you ..I didn’t read your disclaimer.. Washed my underwear and typing this..Naaraasam..
February 10, 2017 at 19:59
Um, there are exactly three people who send these kinda stuff to me. I think I respond as a matter of routine to them. I know this is a waste of time, but I also get rattled and feel like responding.
I agree that the efforts spent on these moronicities are better spent on something else, more constructive and may be useful, but I also deserve a hearty laughter or two, don’t you think?
And, I should share these funny kinds of funny stuff with others too, don’t you think?
So goes the ‘justification’ and all that. ;-(
February 11, 2017 at 05:46
Of course Ram..100% hearty laughter..no doubt in that..