என்னுடைய மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும் ஓத்திசைவின் தொழில்முறை பின்னூட்டக்காரருமான சரவணன் அவர்கள் அண்மையில் நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:

ஒன்றைக் கவனித்தீர்களா? பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைவிட திராவிட இயக்கத்திடம் நிச்சயம் சிந்தனை, அறிவியக்க செயல்பாடுகள் அதிகம். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜெயமோகன் சொல்வதைப் பார்ப்போமா?

**** இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது *********

இந்தக் கேவலத்துக்கு திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள் ஆயிரம் பங்கு மேல்!! பிராமண மேட்டிமைவாதத்தை முன்வைப்பதை விட பிறப்பால் அனைவரும் சமம் என்பதைக் கருத்தளவிலாவது ஒப்புக்கொண்டு, அதை நோக்கி சிறிய முயற்சிகளையாவது செய்தவர்கள் மேலானவர்கள் அல்லவா?

… ஹ்ம்ம்… முக்கால்வாசி, நீங்கள் எந்தக் குறிக்கோளுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுத முற்பட்டீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லைதான் என நினைக்கிறேன்; ஆனால், நான் புரிந்துகொண்டவகையில் இதற்கு பதில் அளிக்கிறேன். Read the rest of this entry »

(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.

ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.

ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக,  வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக,  முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!

அய்யய்யோ!  நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: Read the rest of this entry »

‘ராஜ்’ என்பவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுதியிருப்பதன் தமிழ்வடிவ சாராம்சம்:

மோதி ஒரு நல்ல நிர்வாகி என்பதையோ, குஜராத்தின் வளர்ச்சி பற்றியோ நான் சந்தேகப் படவில்லை. எனக்கு, பாஜக ஆட்சிக்கு வருவதில் ஒப்புதலிருந்தாலும் ஒரு பிரச்சினை.

நமக்கு ராம் மந்திர் தேவையா? இதன் காரணத்தால் எவ்வளவோ இறப்புகள் நிகழ்ந்துவிட்டனவே! பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ராம் மந்திர் பற்றி சொல்வது கொஞ்சம் கவலைதருவதுதானே? மோதி இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பாரா?

அன்புள்ள ‘ராஜ்,’

நான் பாஜக அங்கத்தினன் அல்லன்.  மேலும், மோதி-யின் மனம் எப்படி வேலைசெய்யலாம் என்பதை என்னால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆனாலும் பலபத்தாண்டுகளாக இக்கட்சியை(யும்) ஊன்றிக் கவனித்து வருபவன், சில நேர்மை+செயலூக்கம் கொண்ட பாஜக-வினரை நேரடியாக அறிந்துள்ளவன் என்கிற முறையில் என் கருத்துகள்:

  • பாஜக கட்சி என்பது ஒரு ஒருமைவாத, ஒற்றைக்குறிக்கோளினால் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியாக இல்லை. அதில் பல போக்குகள், பார்வைகள், பிரிவுகள் இருக்கின்றன. அக்கட்சியில் ஒரு பிரிவுக்கு, ராம் மந்திர் தேவை. ஆனால், பல பிரிவுகளுக்கு அது ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமாக இருந்தாலும், இப்போது அது ஒரு தேவையற்ற விஷயம்.

Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா தீஸ்தா செதல்வாத்! :-(

“என்னுடைய வாழ்க்கையின் ஒரே கோஷம் – நான் இந்தியனாகப் பிறந்தவன், ஒரு உண்மையான இந்தியனாக இருப்பதில் பெருமைப் படுபவன்”

— ரயிஸ்கான் பதான்

ரயிஸ்கான் அவர்களை – போராளிப் பெண்மணி, நிரந்தர மனிதவுரிமை மாதர் திலகம், குஜராத்தின் புரட்டுத்தலைவி அம்மணி மகாமகோ தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad) அவர்களின் செல்லக் கைத்தடியாகத் தான் அறிந்திருந்தேன் – அதுவும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என நினைவு.

இப்போதிருப்பதை விட மிக மும்முரமாக, அமெரிக்க அரசிடமிருந்தும், தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிச்சை போடும் கனவானிய ஸ்தாபனங்களிலிருந்தும் பணம் வாங்கிக் கொண்டு – ஒரு மோதி எதிர்ப்பு நிலையையும், ஆகவே ‘ஸெக்யூலரிஸ’  காதலுணர்ச்சியை ஏற்றிக் கொண்டு, தீஸ்தா அம்மணி பவனி வந்து கொண்டிருந்த கால கட்டங்கள் அவை… இந்த அம்மணியைப் பற்றி ஒரு பதிவை முன்னமே எழுதியிருக்கிறேன். (பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…)

ரயிஸ்கான் அவர்களும் தீஸ்தா சொல் கேட்டு, மோதிக்கு எதிராக, குஜராத் அரசுக்கு, காவல்துறைக்கு எதிராகச் சாட்சிகளை ஜோடிப்பதையும், பொய்வதந்திகளைப் பரப்புவதையும், பொய் ஆவணங்களைத் தயாரிப்பதையும் — கொஞ்சம் வெள்ளந்தியாகவே செய்திருக்கிறார்; ஏனெனில் ரயிஸ்கான் உண்மையாகவே, தான் தன்னுடைய சக முஸ்லீம்களுக்கு உதவுவதாகவும், தீஸ்தா ஒரு ‘மாறாது போல வந்த மாமணி’ போலவுமெல்லாம் ஒரு மனப் பிரமையில் இருந்திருக்கிறார்.    Read the rest of this entry »

எச்சரிக்கை: அய்ஜஸ் இல்மி அவர்கள் பொஜக-வின் (= ஆம்ஆத்மி டீ பார்ட்டி) தலைவர்களின் ஒருவரான அம்மணி ஷஸியா இல்மி அவர்களின் சகோதரர். இந்த ஷஸியா அம்மணியானவர், ஊழலுக்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கும்போதும், காங்க்ரெஸ்ஸுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும்போதும், தொலைகாட்சிக்காரர்களால் அடிக்கடி ஆம்ஆத்மி கட்சி சார்பாக பப்பரப்பா நேர்காணல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோதும்…

… முடிந்தபோதெல்லாம் மன்மோஹன் ஸிங் அவர்களுடன் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் துள்ளிக்குதித்துக் கொண்டு இந்திய அரசுச் செலவில் (= நம்முடைய வரிப்பணம்), இலவச வெளி நாட்டுப் பயணங்கள் சென்றவர்! இதுதான் பெரும்பாலான தொழில்முறை ‘பொதுவாழ்வில் தூய்மை விரும்பி’களின் அழகு; ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம், விட்டெறியப்பட்ட எலும்புகளைப் பொறுக்கித் தின்றுகொண்டு, அற்ப மாறாட்ட போங்காட்டம்!

ஆனால், ஷஸியா அம்மணியின் சகோதரர் அய்ஜஸ் அப்படியல்லர். இரட்டை வேடமணிபவர் அல்லர்.

அய்ஜஸ் அவர்களின் குடும்பம்  ஸியாஸத் ஜதித் (Siyasat Jadid)   எனும் உருது தினசரியை நடத்திக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியிலும் இல்லாமல் ஒரு இந்தியவிரும்பியாக மட்டுமே இருந்த இந்த அய்ஜஸ், எம்ஜெ அக்பர் (நாம் மிகவும் மதிக்கும் படிப்பாளிகளில், சிந்தனையாளர்களில், பத்திரிகையாளர்களில்  ஒருவர் இவர்) அவர்களுடன் பாஜக-வில் அண்மையில் இணைந்தார்.

Read the rest of this entry »

சிஷ்டி அவர்கள் ஒரு சூரத் நகர இளைஞர் –  மத நல்லிணக்கத்துக்கும், இந்தியகுஜராத்தி முஸ்லீம்களின் மேன்மைக்கும் பாடுபடும் மதத் தலைவர். ஆனால் இவர், ஒரு சாதாரண, படிப்பறிவற்ற, மற்ற நம்பிக்கைகளின் மீது வெறுப்பைக் கக்கும் தொழில்முறை மதத்தலைவர் அல்லர்.  வெறுப்பை மூலதனமாக வைத்துப்  பணத்தையும் புகழையும் அடைய நினைப்பவர் அல்லர்.

உலகளாவிய அளவில், இஸ்லாமை நம்புபவர்களை, அவர் கண்டுகொண்ட ஸூஃபி முறை ஞானமார்க்கத்தில் வழி நடத்துபவர். ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு படைத்தவர். சூரத்தின் அதோதராவில் உள்ள தர்காஹ் ஷாரிஃப்-ன் கடினஷின் (=தலைமை உபாசகர்); உம்மா அகிலம் எனும் தொலைக்காட்சி அலை வரிசையை நடத்துபவர். (இந்த அலை வரிசையைப் பற்றிச் சில செய்திகள் அந்தக் கேடுகெட்ட விக்கிபிடியாவில் இருக்கின்றன; வேறு வழியேயில்லாமல், சோம்பேறித்தனமாக இந்தச் சுட்டியைக் கொடுக்கிறேன்; தொலைக்காட்சிக்கும் எனக்கும் வெகுதூரம்)

எச்சரிக்கை: இவர் மோதியின் நண்பர். அவருடைய அரசியல் ஆதரவாளரும்கூட.

இவரும் மாய்ந்து மாய்ந்து மோதிக்கு எதிராக, இந்தியாவின் பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப் படும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், பாவம். Read the rest of this entry »

சில நாட்கள் முன்பு, குஜராத் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருடன் (தனித்தனியாக), குஜராத்தின் குணோத்ஸவ் திட்ட விவரங்கள் விஷயமாக அளவளாவிக் கொண்டிருந்தேன். இவர்களைப் பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இவர்கள் நேரடியாக மோதி அவர்களின் கீழ் (முதல் அடுக்கு அல்ல – ஒரு தட்டு கீழே) பணிபுரிந்துகொண்டிருக்கும் மூத்த, நேர்மையாள அதிகாரிகள்; கூழைக் கும்பிடு போடுபவர்களோ, சமயம் வாய்த்தபோதெல்லாம் அடித்துப்பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று அசடும் கயமையும் வழிய ‘பூச்செண்டு’ கொடுப்பவர்களும் அல்லர். நல்ல பரவலான படிப்பும், செறிவான அனுபவங்களும், செயலூக்கமும் உடையவர்கள். நான் மதிப்பவர்கள்.

பேச்சு மெதுவாக நிர்வாகம் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது; நாங்கள், பொதுவாக, அதிகார வர்க்கம் எப்படி நிர்வாகத்தை அணுகும், அதன் பயிற்சி முறை அதனை எப்படிச் செயல்பட ஊக்குவிக்கும், அதற்கும் அரசியல்/அரசு தலைமைக்கும் இருக்கும் உறவுகள், நடைமுறை எதார்த்தங்கள் எப்படிப்பட்டவை, வளர்ச்சிப் பாதைகளின் ஊக்குவிப்பான்கள் & அடைப்பான்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதின் அங்கங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தோம் – இந்தப் பின்புலத்தில் மோதி அவர்களின் நிர்வாகம் குறித்த பார்வைகளையும் கொஞ்சம் விவாதித்தோம்.

இந்த அளவளாவல்களிலிருந்தும், என் அனுபவங்களிலிருந்தும் சில குறிப்புகள்: Read the rest of this entry »

… இதெல்லாம் தேவையா  என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)

உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் –  உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …

சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு  ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.

இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.

Read the rest of this entry »

… ஏனெனில், இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், இயங்க  வேண்டும். அதுவும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டின் மேன்மைக்கான தொலைநோக்குத் திட்டங்களை வடித்தெடுத்து, சமரசங்களின் மூலமாக, தேவையற்ற தயவுதாட்சணியம் இல்லாமல் – நம்மை முன்னோக்கி, தற்சார்புக்கும் தன்னிறைவுக்கும் இட்டுச் செல்லவேண்டும். இவற்றை விட முக்கியமாக நம்முடைய சுய நம்பிக்கையை, தைரியத்தை, குடிமைப்பண்பை வளர்க்க வேண்டும். அவநம்பிக்கை வாதிகளை, ‘என்னத்த செஞ்சி, என்னத்த பண்ணி…‘வாதிகளை வாயடைக்கச் செய்யவேண்டும்.

மேலதிகமாக – இவை கசக்கும் உண்மைகளாக இருந்தாலும் – ஏற்கனவே பல பத்துவருடங்களை, நாம் பிச்சைமுதல்வாத  கப்பரையாண்டி அரசியல் போக்குகளால், தொழில்முனைவுகளுக்கு-தொழில்வளர்ச்சிக்கு எதிரான மகாமகோ ஊழல் நடைமுறைகளால், கொடுக்கவேண்டிய மரியாதையை தரத்துக்கும் கொடுக்காமையால்,  நம்பகத்தன்மை மறுபடியும் மறுபடியும் சுழன்றுச் சுழன்றுக் கீழ் நோக்கிச் சென்றபடியே இருத்தலால், முட்டியடி மட்டுமேயான அரசதிகார எதிர்வினைகளால், பெருகுடும்பக் கோமாளிக் கோமான்களால் –  தொலைத்து விட்டோம். ஆக, இவற்றுக்கும் எதிராகப் போராடி – நம் பாரம்பரிய குணாதிசியங்களை மீட்க வேண்டும்…

என் பார்வையில் தற்கால அரசியல் சூழலில் – இக்குறைகளையெல்லாம் சரிசெய்யக் கூடியவராக, குறைந்த பட்சம் அதற்கு முனையக் கூடியவராக – அவர் கட்சியிலேயே அவருக்கிருந்த (=இருக்கும்) போட்டிகளையும், சவால்களையும் நேரடியாக ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டவராக, மோதி மட்டும் தான் இருக்கிறார். Read the rest of this entry »

… இப்படியாகத்தானே, கருணாநிதி அவர்கள் உபயத்தில் கத்தரிக்காய் விளைந்தது… :-)

-0-0-0-0-0-0-

2009 மே மாதம். அச்சமயம்  நான், என் குடும்பத்தினருடன் எங்களுடைய நெடுநாள் குடும்ப நண்பன் ஒருவனுடைய வீட்டில் தங்கியிருந்தேன்  – இந்த வீடு சேலம் மாவட்டத்தின் மலைப் பிராந்தியங்கள் ஒன்றில் ஒரு குக்கோதிகுக் கிராமத்தில் இருக்கிறது. நண்பனின் அடுத்தவீட்டுக்காரர் சுமார் ஒரு கிமீ தள்ளி. ஆக – அழகும் அமைதியும் உள்ள பிரதேசம். இரவுகளில் மகாமகோ கும்மிருட்டு.  நமக்கே கேட்கும் நம் இதயத்தின் துடிப்பு. கொசுவே இல்லை. இனிது இனிது ஏகாந்தமினிதுதான்… (1999 வாக்கில் இவன் அப்பகுதியில் குடியேறினாலும், 2007ல் தான் இவன் வீட்டிற்கு மின்சார இணைப்பே கிடைத்தது என நினைவு)

… விடிகாலையில் ஆரம்பிக்கும் பேச்சு. காலைக்குளிரில் (மேமாதத்திலும் கூட!) அண்மையில் உள்ள சிறு குன்றின்மீது உட்கார்ந்துகொண்டு சூர்யோதயத்துக்காக காத்திருந்து கொண்டு, கட்டங்காப்பி பருகுதல்; பேச்சு; கொஞ்சம் தோட்டவேலை; பேச்சு; பின்புலத்தில் தேர்ந்தேடுத்த ஜாஸ் இசை அல்லது கலாபினி கொம்கலி தரப் பாடகர்கள். விறகு அடுப்பில் எளிமையான ஆனால் மிகச் சுவையான கூட்டுச் சமையல்; துணிதுவைத்தல்; பேச்சு. பாத்திரம் கழுவுதல்; பேச்சு—; பேச்சு. —; பேச்சு… —; பேச்சு… —; பேச்சு… மதியம் சுமார் 3 மணி நேரம் பிடித்த புத்தக வாசிப்பு. மாலையில் நீண்ட நடைபயணம். பின் மறுபடியும் குன்றின் உச்சியிலிருந்து சூர்யாஸ்தமனம் பார்த்தல் (கையில் தேனீர்க் குடுவையுடன்); குளித்துவிட்டு இரவுணவு, சுத்தம் செய்தல். பின்னர் இருகுடும்பத்துக் குழந்தைகளும் போட்டுக்காட்டும் நாடகங்கள், படிக்கும் கவிதைகள், கதைகள் இன்னபிற போன்றவை. ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு நல்ல படம். ஆக ஒரு அந்த்ரெய் தார்கோவ்ஸ்கி / டெப்ரா க்ரானிக் / குரஸாவா அகிரா / ரிச்சர்ட் லின்க்லேடர் / ரித்விக் கடக் / பால் தாமஸ் ஆன்டர்ஸன் / ஆந்த்ரே வய்தா / இங்க்மர் பெர்ன்மன் படம்…  பத்துமணிக்கு மேல் நட்சத்திரங்கள், ஆகாஷகங்கை (பால்வழிப் பாதை) தரிசனம். அன்றைய கேல் கதம். Read the rest of this entry »

… … தமிழகத்தில் ஒன்றுமே  சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி  சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.

எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (24/n)

நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல  விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.

பதில் கிடைத்ததா? சரி.

கிடைக்கவில்லையா, அதுவும்  சரியே.

இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .

ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே  சொல்கிறேன்:

சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத  தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத  நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »

பத்ரியின் விட்டுப்போன கேள்வி: [தமிழ்நாட்டு மாணவர்கள்] கோபமடையவே கூடாதா?   (“… Should they not get angry at all?”)

(அல்லது) … தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (23/n)

அய்யா பத்ரி, இளைஞர்கள் / மாணவர்கள் கோபப்படலாம். படவேண்டும்தான். இந்த வயதில் ஒரு தார்மீகக் கோபம் இல்லாதவர்களுக்கு, எப்போதுமே அது வராதுதான். அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான். ஒப்புக் கொள்கிறேன்.

ஆக, அப்படிக் கோபப்படுபவர்களை, உடனடியாக ஏதாவது உருப்படியாக, உபயோககரமாக, ’ஸ்டூடென் ட் ப்ரொடெஸ்ட்’ அல்லாத,  பணி செய்ய வேண்டும் என விரும்புபவர்களை – கீழ்க்கண்ட உடலுழைப்பு சார்ந்த பணிகள் செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஒரு பணியைச் செய்யவேண்டும் – நடுவில் விட்டு விட்டு ஓடி வரக்கூடாது. இது ஒரு கேளிக்கை உண்ணாவிரதமல்ல – சும்மனாச்சிக்கும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது போல – என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (இதற்கு தமிழ் நாடு, இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசிடம் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெறவேண்டும்; மேலும் இந்நடவடிக்கைகளால், சிங்களப் பொதுஜனங்களுக்கும் உதவி விளைவது போலத்தான் இருக்கவேண்டும்.)

Read the rest of this entry »

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (21/n)

முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)

நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.

ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.

அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென  ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)

ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான்  தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே  இல்லை என்றுதான் தோன்றுகிறது.) Read the rest of this entry »

சுமார் ஒரு வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)

அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:

இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)

  1. முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
  2. முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
  3. எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?

பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக,  ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)

-0-0-0-0-0-0-

இதற்கு முந்தைய பதிவான சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014)  படித்தீர்களா? ஏனெனில் இந்தப் பெரியவர் தொடர்புடைய கதைதான் இது. ஆம், என் மங்கலான நினைவுகளிலிருந்துதான்  இதனை எழுதுகிறேன்.

சரி. !980களின்  நடுவில் இந்தப் பெரியவர் தன் மகள் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார் – அது மடிப்பாக்கம் பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்தது.

ஆக, நங்கநல்லூர் – சிதம்பரம் ஸ்டோர்ஸ் (இப்போது இது இருக்கிறதா எனத் தெரியவில்லை) சமீபம் இருந்த அவருடைய சொந்தவீடு காலியாக  – அது, இரண்டாம் சுற்றில் வாடகைக்கு விட இருந்தது. குருவி போலப் பணம் சேர்த்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கடன்வாங்கி, அவரால் கட்டப்பட்ட வீடு அது. அந்த வீட்டைச் சுற்றி இருந்த தெருக்களில் பெரும்பாலும் முதலியார்களும் (சுமார் 70%), சில அய்யங்கார்களும்; ஒரிரு நாயுடுவும் நாடாரும், ஐயரும் கூட இருந்தார்கள்.

அப்போது யார் மூலமாகவோ ஒரு பள்ளி ஆசிரியர், பாவம், தன் குடும்பத்திற்காக வீடு தேடிக் கொண்டிருக்கிறார் என நான் கேள்விப்பட்டு (ஒரு திமுகழகத் தோழன் பரிந்துரைத்தது) அந்தப் பெரியவரிடம் சொன்னேன் என நினைக்கிறேன். அவரும் ’சரி, அவங்கள வந்து பார்க்க சொல்லு, பிடிச்சிருந்தா வரட்டும், நீயே பொறுப்பெடுத்துக்கோ’ என்றார். எனக்கு அப்போது சுமார் 21/22 வயது என நினைக்கிறேன். Read the rest of this entry »

You see, every once in a while, some guys (peace be upon them, poor  things) become unfortunate enough to take part in my random training sessions – wherein I pretend  to bestow my infinite  wisdom on an otherwise  normal and happy bunch of people; there was one such workshop that I conducted a couple of weeks back, in which a few of us discussed the various angles / prisms (or axes, if you will)  through which one can see the myriad facets of that phantasmagorical beastess (yes, education is a female!)  called education; this note was circulated to seed  some discussions and here it is, as some food for your thoughts, that is, if you are the type which likes to think

But then, this is a rather looooong document, that has taken very many years of practical experience, observation and a sort of  reasonable scholarship to get assembled –  and so some patience is advised. If you do not have the patience, you please stop  right here. And, go away. Seriously.

-0-0-0-0-0-0-0-0-0-

In this document, we would look at the common ways of stereotyping education in terms of what sociologists call their sociological categories, Ideal Types.

An ideal type is formed from characteristics and elements of the given phenomena, but it is not meant to correspond to all of the characteristics of any one particular case. It is not meant to refer to perfect things, moral ideals nor to statistical averages but rather to stress certain elements common to most cases of the given phenomena.” (The methodology of the social sciences’ – Max Weber – a very fine text; some details below)

The methodology of social sciences / Max Weber / 1949 / The Free Press, Glencoe, Illinois; this is one of the books that I keep getting back to, when I have some fundamental doubts about categorizations and much else! Strongly recommended for anyone who wants to seriously study societal dynamics...

The methodology of social sciences / Max Weber / 1949 / The Free Press, Glencoe, Illinois; this is one of the books that I keep getting back to, when I have some fundamental doubts about categorizations – sociological and much else! Strongly recommended for anyone who wants to seriously study societal dynamics and dialectics…

Simply put, the world of ideal types merely allows one to stereotype, simplify and attempt to slot  – and then to grapple with  things – such as white and black, so that we can easily pretend to understand things.

But you see, the world is NEVER defined in terms of black and white. It has myriad hues – it is a true celebration of gray areas.

Salutations to thee, the Goddess of the Great Gray!

Read the rest of this entry »

நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும்  எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.

தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.

ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பலற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)

சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும் — யின் தொடர்ச்சி…

புல்லறிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்?  (படத்துக்கு நன்றி: ’சவுக்கு’)

புல்லரிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு  யார் இப்படி கோனார் உரை கொடுக்கிறார்கள்? இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால் – வேறு வழியேயில்லாமல், இவர்களுடைய கவிதைகளே(!) பரவாயில்லை என்கிற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  போலிப் பெண்ணியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு —  இம்மாதிரி வசீகரக் கோமாளிகளுக்கெல்லாம், விசாரணை, புலனாய்வு, வழக்குப்பதிப்பு, வழக்காடல், தீர்ப்பு, மேல்முறையீடு சுற்றல்கள், முடிவான தீர்ப்பு என்றெல்லாம் விரியும் நீதிமன்ற நடப்புகளைப் பற்றி ஒரு எழவும் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும்  உளறிக் கொட்டி, கருத்துதிர்த்துப் பேசித் திரிகிறார்கள்; இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் அசட்டுக் கண்ணாடிகளைக் கழற்றினாலே இவர்களுக்கு பச்சை நிறம், சிவப்பு நிறம் என்றெல்லாம் நிறங்கள் தெரியமாட்டா. தங்களுக்குக் கொஞ்சமாவது அடிப்படை நேர்மை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளாமலேயே, வெட்கம் கெட்டவர்கள்– ஊருக்கு உபதேசமும், சகட்டுமேனிக்கு அறிவுரைகளும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள், அதாவது என்னைப்  போல…  (படத்துக்கு நன்றி:  ‘சவுக்கு;’ இந்த நகைச்சுவைக் கோனார் உரை, ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.)

சரி, வசீகரக் கோமாளிகள் நமக்காகக் கோனார் உரையாற்றும் பணி புரிகிறது. ஆனால், அவர்களும்  சுயசிந்தனை அற்றவர்கள்தாமே!  ஆக, அவர்களுக்கு  யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்? எப்படி ஆணித்தரமாகப் பல விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் – கருத்துச்சிதைவுகளை விரிக்கிறார்கள்? அவ்வளவு  மூளையிருக்கிறதா என்ன அவர்களுக்கு?

Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (12/n)

இந்தச் சாளரம் எனக்கு ஒவ்வொரு தடவை யோசிக்கும்போதும் மிகமிக மிக ஆச்சரியம் தரும் விஷயம்; உலகில் வேறெந்தப் பண்பாட்டுக்கும் இந்த மாதிரிக் கேவலமான நிலையில்லை என்றுதான் என் எண்ணம்…

சாளரம் #6:  தமிழர்களாகிய நாம், நேரடியாக, நேரடியான அல்லது அவதானித்த அனுபவங்கள் / சிந்தனைகள் / கோட்பாடுகள் பெறுவதை விட, அவற்றின் தர்க்கரீதியான வளர்த்தெடுத்தல்களை விட — கடன் வாங்கிய, இன்னொருவரால் ‘கோனார் உரை’க்கப்பட்ட, தரகு வேலை செய்யப்பட்ட விஷயங்களையே விரும்புகிறோம். நமக்கு இம்மாதிரி சாணிக்காகிதப் பதவுரைகளும் விரிப்புரைகளும் இல்லையென்றால், நம்மால் வாழ்க்கையையே நடத்த முடியாது.

இந்தக் கடன்கோட்பாடுகளுக்கு எதிராக ஆயிரம்  நிதர்சன, பிரத்யட்ச உண்மைகள், மறுக்கமுடியாத தரவுகள் இருந்தாலும், பின்னவை நம் தமிழுலகில் ஒரு பொருட்டே இல்லை. மேலும், இந்தக் கோனார் உரைகள், வசீகரம் உடையவர்களால் (எகா: திரைப்படக்கார வசீகரக் குளுவான்கள் இன்னபிறர்; பெரியார், அண்ணா போன்ற, இயக்கத் தலைவர்களல்லாத, அரசியல்  தலைவர்கள்) விளம்பப்பட்டால் அவை இன்னமும் சக்தி வாய்ந்தவையாக மாறி மக்களின் செயல்பாட்டை, சிந்தனைப் போக்கை மாற்றி, மழுங்க அடிக்கக் கூடியவை.

மேலதிகமாக, இம்மாதிரி வசீகரத் தலைவர்களால் செய்யப்பட்ட உரைகளுக்கு, ஊடகங்களின் அசமனமான குயுக்திக் குவிமையமும் கிடைத்தால் (எகா: “அடிக்கறாங்க, அடிக்கறாங்க...”), நாம் பொதுவாக மூளையைச் சுத்தமாக உபயோகிக்காமல் சுத்தமாகக் துடைத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு – கடன் வாங்கிய கருத்துகளில், அவற்றின் திணிப்புகளில் கேள்வியே கேட்காமல், திளைத்துக்கொண்டிருப்போம். (We, the people, specifically us  Tamils – prefer inter-mediated experiences to direct experiences – and our interpretations understanding of our life and reactions thereof are, all about how some significant, charismatic OTHERS tell us of THEIR inter-mediated experiences. So, often times we go rather GROSSLY  wrong)

Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4

சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.

ஆனால், நம்மை  யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே  முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரி புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.

Read the rest of this entry »

தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:

… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »