குஜராத்தின் ரயிஸ்கான் அஸீஸ்கான் பதான்: சில குறிப்புகள்

April 18, 2014

(அல்லது) இதுதாண்டா தீஸ்தா செதல்வாத்! :-(

“என்னுடைய வாழ்க்கையின் ஒரே கோஷம் – நான் இந்தியனாகப் பிறந்தவன், ஒரு உண்மையான இந்தியனாக இருப்பதில் பெருமைப் படுபவன்”

— ரயிஸ்கான் பதான்

ரயிஸ்கான் அவர்களை – போராளிப் பெண்மணி, நிரந்தர மனிதவுரிமை மாதர் திலகம், குஜராத்தின் புரட்டுத்தலைவி அம்மணி மகாமகோ தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad) அவர்களின் செல்லக் கைத்தடியாகத் தான் அறிந்திருந்தேன் – அதுவும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என நினைவு.

இப்போதிருப்பதை விட மிக மும்முரமாக, அமெரிக்க அரசிடமிருந்தும், தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிச்சை போடும் கனவானிய ஸ்தாபனங்களிலிருந்தும் பணம் வாங்கிக் கொண்டு – ஒரு மோதி எதிர்ப்பு நிலையையும், ஆகவே ‘ஸெக்யூலரிஸ’  காதலுணர்ச்சியை ஏற்றிக் கொண்டு, தீஸ்தா அம்மணி பவனி வந்து கொண்டிருந்த கால கட்டங்கள் அவை… இந்த அம்மணியைப் பற்றி ஒரு பதிவை முன்னமே எழுதியிருக்கிறேன். (பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…)

ரயிஸ்கான் அவர்களும் தீஸ்தா சொல் கேட்டு, மோதிக்கு எதிராக, குஜராத் அரசுக்கு, காவல்துறைக்கு எதிராகச் சாட்சிகளை ஜோடிப்பதையும், பொய்வதந்திகளைப் பரப்புவதையும், பொய் ஆவணங்களைத் தயாரிப்பதையும் — கொஞ்சம் வெள்ளந்தியாகவே செய்திருக்கிறார்; ஏனெனில் ரயிஸ்கான் உண்மையாகவே, தான் தன்னுடைய சக முஸ்லீம்களுக்கு உதவுவதாகவும், தீஸ்தா ஒரு ‘மாறாது போல வந்த மாமணி’ போலவுமெல்லாம் ஒரு மனப் பிரமையில் இருந்திருக்கிறார்.   

நரேந்த்ர மோதியும் பாஜக-வும் தான் முஸ்லீம்களின் எதிரி #1 என தீஸ்தா போன்ற, அயோக்கியத்துக்கு விலைபோன  அற்பர்கள் பரப்பிய வதந்திகளை நம்பி – எப்படியாவது மோதியை அகற்றவேண்டும், சிறையில் தள்ள வேண்டும் என விரும்பித்தான் இம்மாதிரி சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அதாவது 2008 வரை – அவர் அம்மணியார் கூடவேதான் இருந்தார்…  ஏனெனில் தீஸ்தா அம்மணியானவர் இச்சமயங்களில் கொஞ்சம் வேலைப்பளு அதிகத்தால் தள்ளாடிக்கொண்டிருந்தார் –  அவர் பொய்க் கணக்கு எழுதுவதிலும்,  நன்கொடைகளைக் கையாடுவதிலும் கொஞ்சம் மும்முரமாக இருந்த காலம் அது.

ரெயீஸ்கான் பதான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...

ரயிஸ்கான் பதான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்…

… இச்சமயம், இந்த தீஸ்தா அம்மணி குறித்த ஒரு ஆஹா-ஓஹோ குறிப்பு, அவருடைய புகைப்படத்துடன் – என்னுடைய  செல்ல-அலக்கிய-அரைகுறை-அயோக்கிய இன்னபிற போராளிப் பத்திரிகையான உயிர்மையில் பல வருடங்களுக்கு முன் வந்திருந்தது, நினைவுக்கு வருகிறது; தேடிப் படித்து இறும்பூதடையவும்; இம்மாதிரியே பல இட்டுக்கட்டப்பட்ட, காப்பியடித்த செய்திகளையுடைய கட்டுரைகள், இன்னமும் இந்த உயிர்பொய் பத்திரிகையில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

… ஆக…  கடந்த ஆறு வருடங்களாக, ரெயீஸ்கானின் சக்தியில் பெரும்பங்கு தீஸ்தாவின் அற்பத்தனங்களையும் கயமையையும் எதிர்கொள்வதிலேயே செலவழிந்திருக்கிறது.

சரி, நம் ரயிஸ்கான் அவர்கள் பக்கம் வருவோம்…

-0-0-0-0-0-0-0-0-

… ஆக, மிகப்பின்னர், சில வருடங்கள் முன்பு, என் இந்தியகுஜராத்தி நண்பர் ஆரிஃப் ஸையத் ஹுஸ்ஸெய்ன் அவர்கள் மூலமாகத் தான், இந்த ரயிஸ்கான் அவர்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டேன். அதற்குள் உலகத்தை, தன் கருத்துருவாக்கங்களை ஒரு சுற்றுச் சுற்றி, தன்னை மறுபரிசீலனை செய்துகொண்டு  – ரயிஸ்கான் அவர்களால் உண்மைகளை உணர முடிந்திருக்கிறது.  காலத்துக்கு நன்றி.

இச்சமயம், ஒரு எச்சரிக்கை: ஒற்றியெழுத்தனார்™ போன்றவர்களைப் போல லீனஸ் பாலிங் அவர்களை அறிந்துகொள்ள அந்தக் கேடுகெட்ட அமெரிக்காவுக்கு நேரே போய் எல்லாம் பல வருடங்களாக அவதானித்து, கிட்டேயிருந்து பார்த்தது போலெல்லாம் எழுதப் போவதில்லை.

நான் ஐந்தாறு முறை குஜராத் சென்றிருக்கிறேன். எல்லாம் மோடியின் ஆட்சிக்கு முன்னர்தான். ராஜ்கோட், அஹ்மெதாபாத், ஆலங், ஆனந்த் என்றுதான் என் பயணங்கள் – அதுவும் தொழில் நிமித்தம் அல்லது பாழாய்ப் போன நேர்காணல்கள் / அளவளாவல்கள், NIDயில், IIMல், IRMAவில் – அவ்வளவே. ஸபர்மதி கூடச் சென்றதில்லை. மோசம் தான். ஆனால், எனக்கு அங்கே, சில ‘தொடர்புகள் மிகுந்த’ நண்பர்கள் இருக்கிறார்கள். – இவர்களில் சிலரிடம் தொடர்ந்த உரையாடலில் இருக்கிறேன். இதைத் தவிர, எனக்கு இந்தத் தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஒரு ஆபாசமான ஈடுபாடும் குயுக்தி ஆர்வமும் வேறு. அவ்வளவே.

… பொதுவாக, இந்தியாவில் தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகளின் கூத்தும், அலட்டலும், பிலுக்கலும் அதிகம். ஆனால், அதன் சிற்சில மாநிலங்களில் இவர்களில் கிடுக்கிப் பிடியானது பீதிகொள்ள வைக்குமளவு அதிகம். இந்த மாநிலங்களில், நம் புகழ்பெற்ற தமிழமும், குஜராத்தும் அடக்கம். இந்த குஜராத் தொடர்பான அடக்கத்தில் தீஸ்தா போன்றவர்களின், எஜமானர்களின் எலும்புத்  துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டு, அவர்கள் ஏவுவதற்கேற்பக் குரைக்கும் தன்மையும் அதிகம்… இம்மாதிரி, பர்காதத் போன்ற பணம்வாங்கிச் செய்தியாளர்களால் இந்தியாவுக்கு ஏற்படும் கேவலங்கள், வெட்கக் கேடுகள் ஏராளம். இவர்களால் கட்டமைக்கப் பட்ட பிம்பம்தான் இடதுசாரிய_அறிவுஜீவிய_படிப்பாளி அரைகுறைகளால் ஊதி ஊதிப் பெரிதாக்கப் படுகிறது. இதுதான் மோதியை ஒரு படுகோர மதவெறியனாக உருவகம் செய்கிறது… தொடர்ந்து பொய்மைகளை நிறுவுகிறது.

-0-0-0-0-0-0-0-

இப்போது சில சுட்டிகள்.

கீழ்கண்ட யூட்யூப் சுட்டிகளில் – இந்த ரயிஸ்கான் அவர்கள், தீஸ்தா, 2002 கலவரங்கள், பர்காதத், செய்தித் திரித்தல்கள் முதலானவைகள் பற்றி விலாவாரியாகப் பேசுவதைக் காணலாம். உங்களுக்கு, ஓரளவுக்கு ஹிந்தி தெரிந்தாலே போதுமானது

 • ரயிஸ்கான் பதான் – குஜராத் 2002 கலவங்கள்: உண்மை… பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4.
 • ரயிஸ்கான் பதான் – தீஸ்தா செதல்வாtதின் உண்மைமுகம்: வீடியோ (நானாவதி கமிஷன் முன் தான் அளித்த அஃப்ஃபிடவிட் – தன்னிலை வாக்குமூலம் பற்றி ரயிஸ்கான் இதில் பேசுகிறார்.)

சில ஆவணங்கள், கீழே:

 • தீஸ்தா அம்மணி, ரயிஸ்கான் மூலம் சாட்சிகளுக்குப் பணம் அளித்து மோதியின் அரசுக்கு எதிராக சாட்சியம் ஜோடித்ததன் சில விவரங்கள் – வங்கிக் கணக்குக் குறிப்புகளுடன்.
 •  நீதிபதி ஸாவந்த் அவர்களுக்கு ரயிஸ்கான் எழுதிய கடிதம்; இதில் தீஸ்தாவின் பல சட்டத்திற்கும் நேர்மைக்கும் புறம்பான பல செயல்பாடுகள் / விஷயங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 • பெஸ்ட் பேக்கரி வழக்கின் பிரதம சாட்சியான யாஸ்மீன் பானு ஷேக் அவர்கள் – தீஸ்தா தன்னைப் பொய் சாட்சியம் அளிக்க வற்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டை வைக்கும் – தன்னிலை விளக்க வாக்குமூலம்.
 • பெஸ்ட் பேக்கரி வழக்கில் – எப்படிப் பலவிதமான ஜோடிப்புகள் நடந்தன என்பதை விலாவாரியாக விளக்கும் ரயிஸ்கான் அவர்களின் வாக்குமூலம்; இதுவும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. விஷயம் என்னவென்றால் -இந்த ஜோடிப்பை வைத்துத்தான் பரவலாக, மேன்மேலும் பொய்களை பவனி வரச் செய்துகொண்டிருக்கிறார்கள், இந்த தொழில்முறை மோதி எதிர்ப்பாளர்கள்!
 • குல்பர்க் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் – ஃபெப்ருவரி 2013ல் தீஸ்தாவுக்கு அனுப்பிய நோட்டீஸ் – இதில் சங்கத்திற்காகவென்று தீஸ்தாவும் அவர் கணவரும் பெற்ற ரூபாய் 151.00 லட்சத்தில் – ஒரு பைசாவைக் கூட சங்கத்திற்குக் கொடுக்காமை பற்றியது; இது தொடர்பாகத்தான் தற்போது அம்மணி மாட்டிக் கொண்டிருக்கிறார்.
 • தீஸ்தா பரப்பிய பொய்ச் செய்தியான பண்டர்வாடா பிணப் புதைப்புகள் (mass graves at Pandawada) பற்றி – ராஹுல் சிங் எனும் ஹெட்லைன்ஸ் டுடே நிருபர் பொலீஸுக்கு அளித்துள்ள வாக்குமூலம்/பிரமாணம்; இதில் தீஸ்தாவின் அண்டப் புளுகுகளை அம்பலப் படுத்தியிருக்கிறார்.

இம்மாதிரியான இன்னமும் சில சுட்டிகள்; இப்பக்கத்திலிருந்துதான் மேற்கண்டவற்றில் பல சுட்டிகளை எடுத்தேன்.

-0-0-0-0-0-0-

பல முஸ்லீம்கள் மற்ற சமுதாயத்தினரைப் போலவேதான். அவர்களும் மற்றவர்களைப் போன்ற சாதாரண, விருப்பு/வெறுப்புகள் கொண்ட மனிதர்கள் தாம் – நம்மெல்லாரையும் போல, ஆனாலும் வளர்ச்சியையும், மேன்மையையும் விழைபவர்கள் தான்.

மனிதவுரிமை முதலாளிகள், தொழில்முறையாளர்கள், மதத் தலைவர்கள் போன்றவர்களெல்லாம் கண்டமேனிக்கும் கயமைப் பரப்புரைகள் செய்வதற்கு மாறாக — அவர்கள் பிச்சைகளுக்கும், சலுகைகளுக்கும், இலவசங்களுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கவில்லை.

அவர்களும் மற்றவர்களுக்கு இருக்கும் உரிமைகளை, சுயமரியாதையை, சுபிட்சத்தைத் தான் நாடுகிறார்கள். பயபீதி கலந்த தனிமைப் படுத்தலை அல்ல.

ஆகவே, மோதி!

ஆமென்.

குறிப்பு: சில மாதங்கள் முன்பு இந்த தீஸ்தா அம்மையார், சென்னை வந்து பேச்செல்லாம் பேசினாராமே? ஒத்திசைவை தலையில் அடித்துக்கொண்டு படிக்கும் சென்னைவாசிகளான 1½ பேர்களில் யாராவது அதற்குப் போனீர்களா?? ;-)

நரேந்த்ர மோதி!

5 Responses to “குஜராத்தின் ரயிஸ்கான் அஸீஸ்கான் பதான்: சில குறிப்புகள்”

 1. க்ருஷ்ணகுமார் Says:

  \\ சில மாதங்கள் முன்பு இந்த தீஸ்தா அம்மையார், சென்னை வந்து பேச்செல்லாம் பேசினாராமே? ஒத்திசைவை தலையில் அடித்துக்கொண்டு படிக்கும் சென்னைவாசிகளான 1½ பேர்களில் யாராவது அதற்குப் போனீர்களா?? ;-) \\

  அன்பின் ஸ்ரீ ராம்.

  நான் சென்னை வாசியல்ல. இந்த அரட்டை கச்சேரிக்குப் போகவும் இல்லை.

  விஜயவாணி தளத்தில் இந்த அரட்டை கச்சேரி பற்றி வந்த வ்யாசத்தையும் அதையெடுத்து நிகழ்ந்த வாத விதண்டாவாதங்களை வாசித்தது நினைவுக்கு வந்தது.

  கீழ்க்கண்ட உரலில் மேற்கொண்டு

  http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=3113

  Will IIT-Madras end up as a JNU clone?


  • அய்யய்யோ க்ருஷ்ணகுமார் – குஜராத் ஆட்டைக் கடித்து நன்கொடைகளில் ஆட்டையப் போட்டு, மோதியைக் கடித்து, இப்போது ஐஐடி-க்குள்ளே புகுந்து விட்டதா இந்த டெங்குகொசு? (ஆனால் ஒரு விஷயம்: இந்தியாவுக்கு உதவுவார்களோ மாட்டார்களோ, இந்தக் கல்லூரி இளைஞர்களுக்கு, பொதுவாக மாட்டுச்சாணி (=புல்ஷிட்) என்பதை வெகு சீக்கிரமாக அறிந்து கொள்ள முடியும் என்பது ஆசுவாசமளிக்கிறது)

   இதனுடைய ஐஐடி ரீங்காரம் எங்காவது வேறு உரலில் இடிக்கக் கிடைக்குமோ? நகைச்சுவைக்கு தொட்டுக்கொள்ள உதவும்.

   அற்பர்கள். வாய் கூசாமல் பொய் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்…

   __ரா.

 2. N.Paramasivam Says:

  சிறந்த பதிவு. சுட்டிகளை இனி தான் பார்க்க போகிறேன். தொலை காட்சிகள் இவற்றை ஏன் இருட்டடிப்பு செய்தன?


  • நன்றி பரமசிவம் அவர்களே! தொலைக்காட்சிச் சேன்னல்கள் உண்மைகளைச் சொல்வதற்காக நடத்தப் படுவதில்லை. இன்னொன்று அவற்றில் பெரும்பாலும் அயோக்கியர்கள்தாம் இருக்கிறார்கள். அதனால்தான் நான் இந்த அற்பங்களைப் பார்ப்பதேயில்லை. :-(

   முடிந்தால், நீங்கள் ’வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி’ என்கிற தலைப்பில் இங்கு பதித்த மூன்று கட்டுரைகளைப் படியுங்கள்.

   அன்புடன்:

   __ரா.

 3. Venkatachalam Says:

  தீஸ்தா அம்மையாரைப்பற்றி மேல் விவரங்கள் எங்கு கிடைக்கும்? அம்மையார் வாயில் நுரை தள்ளிக்கொண்டு தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தார். இப்போது உள்ளே இருக்கிறாரா இல்லை வெளியேயா? தற்போதைய தேர்தல் காலங்களில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

  —–>>>>> Dear Sir,

  Ammaiyaar is doing absolutely fine. Will perform inside a gaol for several long years too!

  “Total fund of Rs7.16 crore was received by Sabrang Trust and CJP Trust. Out of this, a total amount of Rs2.67 crore was transferred to the personal accounts of Teesta and Javed and used towards payment of their credit card dues,” the affidavit alleged.

  It further claimed that the trust funds were used towards purchase of jewellery, wine and liquor, spa treatments, movie tickets, branded shoes and clothes and electronic goods by Setalvad and Anand.”
  http://www.dnaindia.com/mumbai/report-no-bombay-high-court-relief-for-teesta-setalvad-husband-in-fund-embezzlement-case-1975341

  Sir, her laments are available off her pages: http://teestasetalvad.blogspot.in/

  Honestly, I cannot think of a more brazenly dishonest person in my entire life!

  __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s