இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பில் மோதி போன்றவொருவர் இயங்கவேண்டியது, ஏன் மிக மிக  முக்கியம்?

March 24, 2014

… ஏனெனில், இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், இயங்க  வேண்டும். அதுவும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டின் மேன்மைக்கான தொலைநோக்குத் திட்டங்களை வடித்தெடுத்து, சமரசங்களின் மூலமாக, தேவையற்ற தயவுதாட்சணியம் இல்லாமல் – நம்மை முன்னோக்கி, தற்சார்புக்கும் தன்னிறைவுக்கும் இட்டுச் செல்லவேண்டும். இவற்றை விட முக்கியமாக நம்முடைய சுய நம்பிக்கையை, தைரியத்தை, குடிமைப்பண்பை வளர்க்க வேண்டும். அவநம்பிக்கை வாதிகளை, ‘என்னத்த செஞ்சி, என்னத்த பண்ணி…‘வாதிகளை வாயடைக்கச் செய்யவேண்டும்.

மேலதிகமாக – இவை கசக்கும் உண்மைகளாக இருந்தாலும் – ஏற்கனவே பல பத்துவருடங்களை, நாம் பிச்சைமுதல்வாத  கப்பரையாண்டி அரசியல் போக்குகளால், தொழில்முனைவுகளுக்கு-தொழில்வளர்ச்சிக்கு எதிரான மகாமகோ ஊழல் நடைமுறைகளால், கொடுக்கவேண்டிய மரியாதையை தரத்துக்கும் கொடுக்காமையால்,  நம்பகத்தன்மை மறுபடியும் மறுபடியும் சுழன்றுச் சுழன்றுக் கீழ் நோக்கிச் சென்றபடியே இருத்தலால், முட்டியடி மட்டுமேயான அரசதிகார எதிர்வினைகளால், பெருகுடும்பக் கோமாளிக் கோமான்களால் –  தொலைத்து விட்டோம். ஆக, இவற்றுக்கும் எதிராகப் போராடி – நம் பாரம்பரிய குணாதிசியங்களை மீட்க வேண்டும்…

என் பார்வையில் தற்கால அரசியல் சூழலில் – இக்குறைகளையெல்லாம் சரிசெய்யக் கூடியவராக, குறைந்த பட்சம் அதற்கு முனையக் கூடியவராக – அவர் கட்சியிலேயே அவருக்கிருந்த (=இருக்கும்) போட்டிகளையும், சவால்களையும் நேரடியாக ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டவராக, மோதி மட்டும் தான் இருக்கிறார்.

லால்கிஷன் அத்வானி அவர்களும் ஒரு திடமான மனிதர்தான்; ஆனால், இளமையும் துடிப்பும் மோதி பக்கம்தான் இருக்கிறது – இருந்தாலும் பழுத்த, பெரும்பாலும் சமன நிலையுள்ள அரசியல்வாதியான அத்வானியின் அறிவுரைளையும் முடிந்தவரை ஏற்றுக்கொண்டு எதிர்கால ஆட்சி நடந்தால் நலம்; மாற்று ஆட்சி எப்படி அமையும் என்பதைக் கணிக்க முடியாத நிலையிருந்தாலும் – என் விருப்பம் என்பது மோதி தலைமையிலான, சிடுக்குக் கூட்டணிகள் இல்லாத ஆட்சி அமையும் சாத்தியக்கூறைத்தான்!

-0-0-0-0-0-0-0-

… வெட்கமேயில்லாமல் – சிறிதளவு கூட அவர்கள் மூளையை உபயோகிக்க மறுத்து – மறுபடியும்  மறுபடியும் அரைகுறைக் கயமைத்தனத்துடன் கேட்கிறார்கள் – குஜராத்தில் அப்படியென்ன பாலும்தேனுமா ஓடிக்கொண்டிருக்கிறது என்று – மாய்ந்து மாய்ந்து மோதியைப் பற்றி எழுதுகிறாயே என்று…. மோதி நல்லவரா கெட்டவரா என்று… ஏன், தமிழ்நாடு  மிகவுயர்ந்த நிலையில்தானே இருக்கிறது என்று!

ஐயன்மீர்களே! பிரச்சினைகளே இல்லாத இடம் என்று  ஒரு இடம், உலகில் எங்குதான் இருக்கிறது என்பதை தயவுசெய்து காட்ட முடியுமா?  பிரச்சினைகளே இல்லாமல் இருந்தால், ஒரு சுக்கையும் மேலாண்மை செய்யத் தேவையே இல்லையே!

… குஜராத்தில் பாலும் தேனும் ஓடவில்லை. ஆம். போதுமா? அங்கு ஊழல் அறவே ஒழிக்கப் படவில்லை. சாலையோரத்தில் ஒண்ணுக்கு அடிப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அங்கு கள்ளச் சாராயமும் இருக்கிறது.  திருடர்களும் இருக்கிறார்கள். வருந்தத் தக்க விதமாக, காவல் துறையினர் இன்னமும் குஜராத்தில் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்  – இதுதான் மோதியின் ஆட்சியின் நிலைமை! ஒப்புக் கொள்கிறேன்!

சர்வ நிச்சயமாக –  எல்லா (=100%)  கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்து விடவில்லை. (கடந்த எட்டு வருடங்களாக கச்ச் பகுதி ஆளில்லாக்காட்டு ‘டொக்கு’ ஒன்றில் பரந்துபட்ட மக்களுடன் பணி (=பள்ளி) செய்து கொண்டிருக்கும் என் நண்பனின் குக்கிராமத்திலும் மின்சாரம் இல்லைதான்; ஆனால், இவன் மோதியின் ஆட்சியில் பல துறைகளிலும் நெடுங்கால நோக்கில் புதுவெள்ளம் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மை என்றுதான் சொல்கிறான்! மோதியும், கோவா-வின் மனோஹர் பர்ரிகர் போல ஒரு புத்திசாலியான ஆள் என்கிறான்; இத்தனைக்கும் இவன்,  ‘இடதுசாரி’ எண்ணங்கள் கொண்டவன் – ஆனால் எந்த சாரிக்காரனும் அல்லன், ஒரு பிஹாரிக் குர்மி, படு புத்திசாலி,  ஐஐடி கடக்பூர், அவ்வளவுதான்!)

ஆம். குஜராத்தில் எல்லா கிராமங்களுக்கும் சாலைவசதிகள் கொடுக்கப் படவில்லை. இன்னும் பல மக்கள் தெருக்களில் நடந்துதான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.  கஷ்ட ஜீவனத்தில் இருக்கும் விவசாயிகளும் இருக்கிறார்கள்.

போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நான் மிகவும் மதிக்கும், பத்திரிக்கையாசிரியரும், ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் பொதுச் செயலாளருமான ஷஹித் ஸித்திக்வி அவர்களின் நயீ துனியா (=’புதிய உலகம்’) பத்திரிகையிலிருந்து கத்தறித்து எடுக்கப்பட்ட படம். இந்த ஷஹித் ஸித்திக்வி அவர்களைப் பற்றிய மேலதிக விவரங்கள்)http://www.urdunaiduniya.com/editor_shahid_sidiqui.php

நான் மிகவும் மதிக்கும், டெல்லிவாழ் பத்திரிக்கையாசிரியரும், ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் பொதுச் செயலாளருமான ஷஹித் ஸித்திக்வி அவர்களின் நயீ துனியா (=’புதிய உலகம்’) பத்திரிகையிலிருந்து கத்தறித்து எடுக்கப்பட்ட படம். இந்த ஷஹித் ஸித்திக்வி அவர்களைப் பற்றிய மேலதிக விவரங்கள்)

அதேசமயம், குஜராத் நிச்சயம் ஒரு நரகமோ, அங்கு முஸ்லீம்களும் க்றிஸ்தவர்களும்  நடுங்கிக்கொண்டு மட்டுமே உயிர்தரித்துக்கொண்டிருக்கும் நிலவரமோ இல்லை.

பல விஷயங்கள், அங்கு நன்றாகவே இருக்கின்றனதான்.

-0-0-0-0-0-0-0-0-

ஆம், தமிழ் நாடும் அப்படித்தான் –  நம் மாநிலத்தின் நிலைமையும் இவ்விஷயங்களில் இக்காலங்களில் (கருணாநிதி ஆட்சிக்குப் பின்)  இருந்தாலும், பல மிக முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன… இதற்குப் பின்னர் வருவோம்.

… உலகத்திலேயே ஆரோக்கியமான, அமைதியான, சுபிட்சம் நிலவும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்கேன்டினேவிய நாடுகளில் இல்லாத கள்ளத்தனங்களா? மனிதன் எங்கிருந்தாலும் குறுக்குவழிகளைக் கண்டடைவதில் விற்பன்னன் தான்! ஆக, எது முக்கியமென்றால் – ஒரு அரசில், ஆட்சிமுறையில், தேசநோக்கில் கள்ளத்தனங்கள் விதிவிலக்குகளா அல்லது அவைதாம் பொதுவிதிகளா என்பது தான்.

 • தமிழக ஊழல்கள், அவற்றின் நடைமுறை நியதிகள் பொதுவிதி சார்ந்தவை. குஜராத்தில் அவை, பெரும்பாலும் விதிவிலக்குகள்.
 • குஜராத்தில் – இலவசங்களைக் கொடுத்து, நம்பவேமுடியாத சலுகைகள் கொடுத்து – மக்கள்மீது மரியாதையே இல்லாமல், அவர்களை அற்பப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதில்லை. குஜராத்தியர்கள், இலவசங்களுக்கு நாய்களைப் போல நக்கிக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு அலைவதில்லை என்பதும் தெரிகிறது – ஆக சுயமரியாதை என்பது குஜராத்தில்தான் இருக்கிறது – தமிழகத்தில் அல்ல. இது  படுகேவலக் கஞ்சித்தொட்டி ஆட்சிக்காரர்கள், அங்கு இல்லை என்பதையும் சுட்டுகிறது.
 • குஜராத்தில் அரசே கள்ளுக்கடைகளை மானாவாரியாக நடத்தி மக்களைக் கேடுகெட்ட குடிகாரர்களாக ஆக்கவில்லை.
 • குஜராத்தில் போடப்பட்டு வரும் , பேணப்பட்டு வரும் பல திட்டங்கள் உடனடி பலன் கொடுப்பவையாக இருந்தாலும், சில குறிப்பிட்ட திட்டங்கள்  நாளையே பலன் கொடுப்பவையல்ல; அவற்றில் பெரும்பாலானவை தொலை நோக்குத் திட்டங்கள் – காமராஜ் ராஜாஜி போன்றவர்களுடைய நெடுநோக்குத் திட்டங்கள் போன்றவை. (இதற்கு ஒரேயொரு எடுத்துக் காட்டாக, மோதியின் ஆட்சியினுடைய – எனக்கு ஓரளவு நன்றாக அறிமுகமுள்ள  ‘குணோத்ஸவ்’ கல்விசார் திட்டத்தைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன்; இந்தத் திட்டத்தின் – அதன் விளைவுகளில் 5 விழுக்காடு தமிழகத்தில் இருந்தால் அதுவே பெரிய விஷயம்!)
 • பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலமாக  – தேவையற்ற முறையில் (=அயோக்கியத்தனமாக) சமுதாயத்தைப் பிரித்து அதில் குளிர்காய எத்தனிக்கும் நிலவரங்கள் அங்கு இல்லை.
இந்தியர்கள், ஒரு கொண்டாட்டத்தில் இந்தியக் கொடிகளை மகிழ்ச்சியுடன் ஆட்டிக் கொண்டிருக்கும் காட்சி - இந்தப் படமும் நயீ துனியா பத்திரிகையிலிருந்துதான்!

இந்தியர்கள், ஒரு கொண்டாட்டத்தில் இந்தியக் கொடிகளை மகிழ்ச்சியுடன் ஆட்டிக் கொண்டிருக்கும் காட்சி – இந்தப் படமும் நயீ துனியா பத்திரிகையிலிருந்துதான்!

 • தரமான மின்சாரம் பல கிராமங்களுக்குக் கிடைப்பது – அதுவும் அதிக விலை கொடுத்து மக்கள் அதனை வாங்கிக் கொண்டிருப்பது – மக்கள் அங்கு பிச்சைக்காரர்களாக்கப் படவில்லை என்பது தெரிகிறது. குஜராத்தில் தரமான முறையில் மின்வாரியங்கள் லாபத்தில் இயங்குகின்றன. (சொல்லப் போனால், அங்குள்ள பல  மாநிலஅரசு நிறுவனங்கள் லாபத்தில் இயங்க ஆரம்பித்துள்ளன)
 • புரையோடிப் போயிருக்கும் புற்றுநோயை, சந்திரிகா சோப்பு போன்ற சவுக்காரங்களால் நிவர்த்தி செய்ய முடியாது – அதனை ஷவரக் கத்தி கொண்டுதான் கத்தறிக்கவேண்டும் என்ற கொள்கை அங்கு நடைமுறையில் இருப்பது இன்னமும் விசேஷம். அதாவது அங்கேயுள்ள குஜராத்தி ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே புரிந்திருப்பது – Deep seated cancer can never be treated or cured by the cosmetic skills of dermatology – எனும் கோட்பாடு.
 • வழவழா கொழகொழாவென்று ஆட்சி நடைபெறுவதில்லை அங்கு – வெட்டினால் ஒண்ணு துண்டு ரெண்டு – என, நன்கு யோசித்து, சாதகபாதகங்களை ஆய்ந்து, திட்டம்வகுத்து பின்னர் நிர்தாட்சிண்யமாக நடத்தப்பெறும் காரியங்கள் – ராஜரீதியான நியதிப்படியான செயல்கள், அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 • மோதி நல்லவரும் அல்லர் – கெட்டவரும் அல்லர்.  நாம் குழந்தைகளுக்கு நீதிபோதனைக் கதைகள் சொல்வது போல இதனை அணுகக் கூடாது. பார்க்கப் போனால், இம்மாதிரிப் பாமரத்தனமான கேள்விகளைக் கேட்கும் நிலைமைகளிலிருந்து நாம் மாறவேண்டும். ஏனெனில் நம்மில் ஒருவர் கூட முழுக்கமுழுக்க நல்லவரோ அல்லது கடைந்தெடுத்த கொடியவரோ இல்லை – என்னுடைய மகாமகோ செல்லத் தலைவரான மேதகு கருணாநிதி அவர்களே கூட பல நன்மைகளைச் செய்திருக்கிறார் – அவையெல்லாம் சுய நலம் சார்ந்தவையாக இருக்கலாம், ஆனால் அவை அவருடைய பல குடும்பங்களுக்கு மிகப்பல நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவர் குடும்பங்களில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியிருக்கின்றன. அவர் குடும்பங்களும் நம் சமூகத்தின் அங்கங்களே. மானுடவியல் ரீதியாகப் பார்த்தால் எனக்கும் அவருக்கும் சுமார் 1500 தலைமுறைகளுக்கு முன்பு ஒரே மூதாதையர் இருந்திருக்கலாம்தான், ஆக, என்ன சொல்லவருகிறேன் என்றால், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை நாம் எல்லாரும் ஏதோவொரு சமயத்தில் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும், பல சமயங்களில் ( நம்மை அறியாமலேயே) சமூகத்துக்கு உதவியாக சில காரியங்களைச் செய்து விடுகிறோம் என்பதையும் – நாம் அவசியம் உணரவேண்டும்.
 • மோதி ஒரு திறமை வாய்ந்த, ராஜதர்மம் சார்ந்து இயங்கும் ஒரு தொழில்முறை அரசியல்வாதி. நான் அரசியல்வாதிகளின் அத்தியாவசியத்தினை – நம்முடைய ஓவ்வொரு சொல்லிலும் செயலிலும் ப்ரம்மமென உறைந்து கிடக்கும் அரசியலை – ஒரு இன்றியமையாத விஷயமாகத்தான் கருதுகிறேன். தொழில்முறை அரசியல் வாதிகள் மூலமாக மட்டுமே – இந்தியா போன்ற ஒரு மகத்தான ஜனநாயக நாட்டில், அதிகாரப் பங்கீட்டினையும், முன்னேற்றத்துக்கான திட்டங்களை தெளிந்த முன்னோக்குடன் செயல்படுத்துதல்,  தொழில்வளர்ச்சியை (விவசாயம் உட்பட) சிரத்தையுடன் பேணுதல், அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்று நீண்டகால அடிப்படையில் சுபிட்சத்தை நோக்கிய பாதையில் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யமுடியும் என நம்புகிறேன், உணர்கிறேன்.
 • மோதி நவீன தொழில் நுட்பங்களுக்கோ, பாரம்பரியத்தைப் பேணும் முறைகளுக்கோ எதிரானவர் அல்லர். எனக்குத் தெரிந்தவரை, மத்தியப் பிரதேசத்தையும் குஜராத்தையும் போல இணையத்தை அழகாக உபயோகித்துக் கொள்வது என்பது வேறெங்கும் நடப்பதில்லை. அதே சமயம், விவசாயத்திற்கான நீண்டகால அளவிலான கட்டமைப்புகள் எழுப்பப் பட்டுக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 • மோதிக்கு – குறுகிய வட்டத்தில் குதிரை ஓட்டாத – ஒரு உலகளாவிய, இந்திய-அளாவிய பார்வை இருக்கிறது. அதனைப் பற்றித் தெளிவாகப் பேச, தொடர்ந்து செயல்பட சக்தியும், உழைப்பும் இருக்கிறது.
 • மோதி ஊடகங்களைப் பார்த்தவுடன், மைக்குகள் நீட்டப் பட்டவுடன் உளறிக் கொட்டும் மனிதரல்லர். எதையெடுத்தாலும் ஒரு கருத்து சொல்பவர் அல்லர். ஊடகங்களின் உரிமைகளையும் சக்தியையும் உணர்ந்து இருக்கும் அவர், அவைகளை வைக்கும் இடத்தில் வைக்கவும் தெரிந்தவர்.  ஏனெனில் அற்பத்தனங்களுக்கும், ஆபாச மஞ்சள் பத்திரிகைகளுக்கும், ஏன், போராளிகளுக்கும் கூட – இவர்களையே  விடுங்கள், நம்முடைய செல்ல மனித உரிமைக்காரர்களுக்குமே கூட  – நம் ஜன நாயகக் கட்டமைப்பில் இடம் உண்டு என்பதை அறிந்தவர்.
 • அவருக்கு, கொசுக்கடிகளை – கொசுக்கடிகளாக மட்டுமே கருதும் பொறுப்புணர்ச்சியும் தாங்குதிறனும் இருக்கிறது. (இங்கு கொசு என்பதை  ராஹுல் காந்தி அல்லது அரவிந்த் கெஜ்ரீவால் என விரித்துப் படிக்கவும்)
 • மோதி, சினிமா ஜிலுஜிலுப்புக் காரரோ, கேளிக்கை முதல்வாதியோ,  ஊடகங்களுக்கு ஏற்றாற்போல குத்தாட்டம் போடுபவரோ அல்லர். செயல்பாடுகளில் மட்டுமே தீவிரம் காட்டுபவர். ( நமக்கு  இச்செயல்பாடுகள் பிடிக்காமல் இருக்கலாம்தான், உரக்கக் குறை சொல்லுவோம்தான் –  நம் நாடு ஜன நாயக நாடு தானே!)
 • மோதியால் தன் தவறுகள், குறைபாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து பரிசீலிக்க முடிகிறது. மாற்றிச் செயல்படக்கூடிய மனோதைரியமும் இருக்கிறது.

…மேற்கண்ட ரீதியில் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் பதிவு மிகவும் நீண்டுவிடும். ஆகவே.

ஆக, இம்மாதிரியான மனிதர் தலைமைப் பொறுப்பில் இருக்கவேண்டியது, நமக்கு மிக மிக அவசியம் என்பது என் கருத்து…

-0-0-0-0-0-0-0-0-

சரி. அண்மையில் மறுஅறிமுகமான நண்பர் ஒருவர் – சில மாதங்கள் முன் மின்னஞ்சலில் சொல்லியிருப்பது (கொஞ்சம் கத்திரி போட்டிருக்கிறேன்):

“…Except for a certain aspect, I enjoy reading your blog, particularly your relentless criticism of the now nonsensical Dravidian movement and its worthless “ideology”. However, having lived in Gujarat for  many years, I have little faith in Hindutva or the prospects of a rightwing paradise, a promise currently embodied in the person of one Narendra Modi. But we shall not talk about this :) ”

என்னுடைய பதில்: அய்யா, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஆனால், திராவிடக் கோமாளிகளைக் கோமாளிகள் என்று எழுதுவதற்கு ஒரு பெரிய முயற்சி செய்யாமலேயே முடிகிறது. ஆனால் வடிகட்டிய பொய்களால் எழுப்பப் பட்ட மோதிஎதிர்வாதம் என்பது, கிரேக்கத் தொன்ம ஸில்லா ராக்ஷசி போன்றவொன்று.

இன்னொன்று – எனக்கு ‘இடதுசாரி’ ‘வலதுசாரி’ போன்ற லேபல்களை வைத்து ராஜ்ய பரிபாலனம் செய்பவர்களைப் புரிந்து கொள்வது என்பது ஒப்பில்லாத விஷயம். அரசு என்று வந்து விட்டால் அதற்குரிய நீதிகள், நியமங்கள் வேறு என்பதெண்ணம்; அதேபோல இந்துத்துவா பொந்துத்துவா என்று விஷயங்களைப் புரிந்து கொள்வது மிகவும் நீர்த்துப் போன விஷயம் என்பது என் கருத்து.

நான் மோதியைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன் – ஆனால் அவர் ஒருவர்  தான் ரட்சிக்கக் கூடியவர் என்று சொல்லவில்லை – வேறு யாராவது கூட இப்படி இருக்கலாம் – எனக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஜெயலலிதா? அர்விந்த்? மம்தா? முலாயம்? வடிவேலு? குஷ்பூ? இசுடாலிர்? ராஹுல்?? :-(  :-(

… மேலும், நாம் இருவரும் (எப்போது சந்திக்க முடியுமோ தெரியவில்லை) அவசியம் மோதி அவர்கள் பற்றியும் பேசலாம் – எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை! என்னால் அவருக்கும், அவரால் எனக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சுக்கு அனுகூலமுமில்லைதான்! அவரென்ன எனக்கு மாமனா, மச்சானா, யாரைக் கேட்கிறாய் வரி-யா… :-)

மோதி அவர்கள் – என்னுடைய தற்கால அரசியல் நிலைப்பாட்டில், என் நம்பிக்கைகளில் ஒரு அங்கம். அவர் இந்தியாவை மேன்மையுறச் செய்வார் என்று என்னிடம் ஒரு எதிர்பார்ப்பு. கண்டிப்பும் கறார் செயல்களும், தேவையான அளவு தயவுதாட்சணியமின்மையும் உடைய இவரால், இந்தியாவின் திடமான வளர்ச்சிக்கு மகத்தான பங்கு ஆற்ற முடியும் என ஒரு நம்பிக்கை… பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று…

நண்பர் இன்னமும் எழுதுகிறார்:

“I am totally opposed to political Hinduism or Hindutva as enunciated by VD Savarkar. Hence my aversion for the Sangh Parivar. Debunking the fraudulent postures of the Dravidian movement is a point where we meet. However, I prefer to do that without hanging my hat on the rightwing flagpole.”

:-) உங்கள் கவலைகள், கரிசனங்கள் புரிகின்றன. I do understand them, but don’t necessarily agree with them. நான் சாவர்க்கர் அவர்களை தீண்டத்தகாதவராக எண்ணவில்லை. அவரிடம் பல நிறைகளும், சில குறைகளும் (நம் அனைவரையும் போலவே – ஆனால் விகிதாச்சாரம் மகாமகோ தலைகீழாக) இருக்கின்றன.

இவரை நாம் அணுகுவது நமது பாரம்பரியங்களோடு ஒத்துப்போகாத மேற்கத்திய கட்டுமானங்களின் பார்வையிலிருந்து (borrowed western categories of thoughts,  didactics  & dialectics) – ஆகவே, நம்மைப்போல மெக்காலே படிப்பு படித்தவர்களுக்கு, வெகு சுலபமாக இந்த சாவர்க்கர் போன்றவர்களை, இடக்கைச் சுண்டுவிரலால் அறவே வெறுத்தொதுக்க முடியும்.

ஆனால், நாம் எவரிடமிருந்தும் எடுத்துக்கொள்ளவேண்டியதை எடுத்து, விடவேண்டியதை விடுத்து மேலெழுப்பிக் கொள்ளவேண்டியதுதானே முறை?

அரசியல் ஹிந்துத்துவம் என்பதை நாம், மேற்கத்திய சிந்தனை மரபுகளினூடே மட்டும் அணுகுவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேசியம் (=nationalism) என்கிற மேற்கத்தியப் பகுப்பை, மதம் (= ‘organized’ religion) என்கிற மேற்கத்திய பகுப்புடன் சேர்க்கும் போது, நாமே விரித்துக் கொண்டு மனக்கிலேசமடையும் பகுப்புதான் ‘ஹிந்துத்துவா!’  இந்த ‘ஹிந்துத்துவா’ என்கிற படிமம் – அநாகரீகமானதான ஒன்றாக நம்மில் பலரால் கருதப் படுகிறது. ஆக, தன்னை ‘ஹிந்துத்துவன்’ என்று ஒருவன் தன்னுடைய  காரணங்களால், தருக்கங்களால் கூறிக் கொண்டால் – அவனை நாம் நம் காரணங்களால் வெறுக்கிறோம்.  இப்படி நாமே, நாம் வெறுக்கும் பகுப்புகளைச் செய்து அவற்றைச் சில சமூகக் கூறுகளின் மேல் சுமத்திச் செக்கிழுப்பது சரியில்லை. நேரம் கிடைத்தால், இதனை நாம் விவாதிக்கவேண்டும்தான்.

Of course, of course – something is ALWAYS rotten in the state of Denmark – as ALSO in the mind of a typical, COTS  intellectual, I agree. It takes one to NO one. :-(

வலதுசாரி, இடதுசாரி என்பதெல்லாம் வழியாக – Ideal Type சமாச்சாரங்களினூடே நான் உலகத்தை அணுகுவதில் உள்ள பிரச்சினைகளை அறிவேன்.  கறுப்பு-வெள்ளை சார் பகுப்புகளைத் தாண்டியெழத்தான் முனைகிறேன்.

ஆனால், நாம் மூளைஉபயோகிப்புமுதல்வாதி – இதில் மகாமகோ தீவிரவாதி. ஆக, பார்க்கலாம்…

சரி, இவ்வளவு போதும், இப்போதைக்கு. பலருக்கும் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கொடுத்துக் கொடுத்துச் சலித்து விட்டது. மன்னிக்கவும்.

ஆனால் அய்யா, நான் உங்களை மிகவும் மதிப்பவன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

-0-0-0-0-0-0-0-0-

இருந்தாலும் — — ஆம்! இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பில் மோதி போன்றவொருவர் இயங்கவேண்டியது, மிக  மிக  முக்கியம்தான்!

நரேந்த்ர மோதி!

10 Responses to “இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பில் மோதி போன்றவொருவர் இயங்கவேண்டியது, ஏன் மிக மிக  முக்கியம்?”

 1. Venkatesan Says:

  நீங்கள் மோடி பற்றி கூறியதில் மதுவிலக்கு, இலவசங்கள் இல்லாமை ஆகிய இரண்டு விஷயங்கள் ஈர்ப்பு தருகின்றன. மற்றவை பொத்தாம் பொதுவாக இருக்கின்றன. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கூறினால் தெளிவு கிடைக்கும். ஸ்காண்டிநேவியா பற்றிய உயர்ந்த அபிப்ராயங்கள் இப்படியான அறிவியல் பூர்வ ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் மூலமாகவே நிலைபெறுகின்றன.

  இந்து மதமென்பது தனிநபர் விருப்பம் சார்ந்த ஒன்றாகவும், அதிகம் போனால் “வார வழிபாட்டு மன்றம்”, “சைதாப்பேட்டை தேவார சங்கம்” போன்ற குழு நடவடிக்கைகள் என்பதோடு நிறுத்தப்பட வேண்டும். அதை ஒரு அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கக் கூடாது என எண்ணுகிறேன்.

  எனக்கு சாவர்க்கர் பற்றி ஒன்றும் தெரியாது.

  • SureshKumar Says:

   Venkatesan – Just swap the words “Hindu” by any other religions which have their own parties and analyse yourselves.. You would get the answer yourselves…

 2. சரவணன் Says:

  /// மோதியால் தன் தவறுகள், குறைபாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து பரிசீலிக்க முடிகிறது. மாற்றிச் செயல்படக்கூடிய மனோதைரியமும் இருக்கிறது.///

  அதனால்தான் கரண் தாப்பர் பேட்டியிலிருந்து ஓடிப்போனாரா :-))

  மோதி தன் கட்சிக்குள்ளேயே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஸ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி என்று தொடர்ந்து மற்றவர்களை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அவரால் பலரை அரவணைத்து ஆட்சி நடத்த முடியாது.

  தவிரவும் செயல் திறம் என்று பார்த்தால் பிஜேபி-க்கு உள்ளேயே சிவ்ராஜ் சிங் சௌஹான், ராமன் சிங் (இருவரும் 3 முறை வெற்றி பெற்றவர்கள் என்பதைக் கவனிக்க), மனோஹர் பாரிக்கர் என்று பலர் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் திறமையில் மோதிக்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் மோதி அதிகப்படியாக முன்னிறுத்தப்பட்டு குஜராத்தில் நடந்த ‘சாதனைகள்’ என்று மிகைப்படுத்தப்படுவது ஊடக உருவாக்கம் மட்டுமே.

  2002-ல் மோதி கோவா பிஜேபி மாநாட்டில் விலக்கப்படும் பொன்னான வாய்ப்பு இருந்தது. அத்வானி தன் நுயநலத்துக்காக அப்போது மோதியைக் காப்பாற்றினார். இன்று நச்சுப்பாம்புக்குப் பால் வார்த்ததன பலனை அனுபவிக்கிறார்!

  ஜஸ்வந்த சிங், போலி பிஜேபி, நிஜ பிஜேபி-யை ஓரம்கட்டி விட்டது என்று சொல்லியிருப்பது முக்கியமானது.


  • அய்யா, சரவணன்! தங்கள் சந்தோஷங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

   பாம்புகள் பால் குடிக்கமாட்டா. தாங்கள், தங்களுடைய அறிவியல் வாசிப்பையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டுமோ?

   தமிழில் நமக்கு வாய்த்த பல மூதுரைகள், பழமொழிகள், உவமைகள் இன்னபிற – நம்மை யோசிக்க வைக்கக்கூடிய அளவிலேயே இல்லை. ஆகவேதான் அபத்தமாக மட்டுமே நம்மால் (=முக்கியமாக என்னால்) சிந்திக்க, உரையாட முடிகிறது அல்லவா?

   __ரா.

  • க்ருஷ்ணகுமார் Says:

   அன்பின் ஸ்ரீ சரவணன், உங்களது கருத்துக்களில் பலவற்றில் தர்க்கம் உள்ளதை அவதானித்திருக்கிறேன்.

   இந்த வ்யாசத்தை முழுதும் வாசித்து நீங்கள் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் …………. ம்……விடிய விடிய ராமாயணம் வாசித்து …… என்ற வசனத்தை நினைவுறுத்துகிறது.


 3. நீங்களே, ”மோடியை இப்படி நினைத்துக் கொண்டுள்ளீர்கள், இப்படி நினைத்துக் கொண்டுள்ளீர்கள்” என்று கேள்விகள் எழுப்பி அதற்கு பதில் :) சற்று preaching தூக்கலாக உள்ளது. எல்லாரிடமும், எல்லாவற்றிலும் கெட்டதும் உண்டு, நல்லதும் உண்டு என்பது பலருக்கும் புரிந்த விஷயம் தான் என்பதையும் நீங்கள் சற்று ஏற்க முயற்சிக்கவும்!

  இலவசமே தரக்கூடாது என்ற கருத்துக்கு நல்ல எதிர்வாதம் உண்டு! எவ்விதம், எவ்வளவு என்பதை சரியாக நிர்ணயம் செய்தல் அவசியம். மோடி பிஜேபியை காங்கிரஸ் போல ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் உண்மை இருக்கிறது, அதாவது காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் பிடியில், மோடி one man army!

  இத்தனை பிரம்மாண்டமாகப் பேசப்படுவதற்கு இணையாக மோடி குஜராத்தில் சாதிக்கவில்லை என்று தான் எதிர்தரப்பாளர்கள் கூறுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளல் அவசியம்! எனக்கும் குஜராத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள், போய் பார்த்து விட்டு வந்தவர்களும் இருக்கிறார்கள், தகவலுக்காக…

  மோடி ஜனநாயக ரீதியில் 3 தேர்தல்களை வென்றார், சரி, ஆனால், ஒரு சர்வாதிகார ஆட்சி தான் குஜராத்தில் என்பதும் சரி தானே!?! எல்லா முக்கியத் துறைகளும் அவர் கையில்! No Dissent is ever allowed… தனது ஜால்ராக்கள்/அடிமைகள் தவிர்த்து யார் மேலும் நம்பிக்கையின்மை தெரிகிறது. ஸோ, என்ன ஜனநாயகம் வாழ்கிறது?

  அதனால், இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பில் மோதி போன்றவொருவர் இயங்கவேண்டியது, மிக மிக முக்கியம் என்பதெல்லாம் இல்லை! ஜெயித்து வந்தால் வரட்டும், வாழ்த்துகள் அவருக்கு!

  டிஸ்கி: எனக்கு எந்தக் கட்சி சார்பும் கிடையாது


  • உங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஆனால் – ‘டிஸ்கி’ என்றால் என்ன? disclaimerன் சுர்க்மா?

   அய்யா, உங்களை யாரென்று தெரியாது – ஆனால், ஒன்று – நான் பரப்புரை செய்வதையும் preachyயாக எழுதுவதையும் சரியானது எனத்தான் – அவற்றையும் இடம்தேசகாலவர்த்தமானங்களை வைத்துக்கொண்டு புரிந்து கொள்ளலாம் எனத்தான் நினைக்கிறேன்.

   Each unto his own, what else!

   __ரா.

 4. Yayathi Says:

  //
  சரவணன் Says:

  மோதி தன் கட்சிக்குள்ளேயே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஸ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி என்று தொடர்ந்து மற்றவர்களை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அவரால் பலரை அரவணைத்து ஆட்சி நடத்த முடியாது.

  அன்புடன் பாலா Says:

  மோடி ஜனநாயக ரீதியில் 3 தேர்தல்களை வென்றார், சரி, ஆனால், ஒரு சர்வாதிகார ஆட்சி தான் குஜராத்தில் என்பதும் சரி தானே!?! எல்லா முக்கியத் துறைகளும் அவர் கையில்! No Dissent is ever allowed… தனது ஜால்ராக்கள்/அடிமைகள் தவிர்த்து யார் மேலும் நம்பிக்கையின்மை தெரிகிறது. ஸோ, என்ன ஜனநாயகம் வாழ்கிறது?
  //

  1. People are going to like or dislike any candidate for many different reasons.. But the two remarks above (by Mr.Saravanan and Mr. Anbudan Bala) bring up a question: Is this issue about “dissent” and “dictatorship” something new or unique only to Mr. Modi? If you look at history, there are other leaders and events in the past (including but not limited to):
  a. Rajaji was a close confidant of Gandhi, but drifted away from Nehru – from being a Governor General to a Minister without portfolio, then Home Minister and then moved from Delhi to Madras and eventually left Congress and started the Swatantra party.
  b. Kamaraj was closer to Nehru and later became “King maker” – but in due course fell out with Indira Gandhi (Syndicate, Congress (O))
  c. Moopanar was closer to Indira Gandhi & Rajiv Gandhi, but not with PV Narasimha Rao and finally left Congress. PVN also got Sharad Pawar (who was also a possible PM candidate) deputed from a cabinet position (defense minister) to CM of Maharashtra.
  d. With Sonia, Pawar had to leave Congress due to his opposition to her on the issue of a foreigner becoming a PM. But later he probably got a better deal as leader of NCP in the coalition than as a Congress leader. Though the Tamil Manila Congress came back to Congress, it is yet to be seen what kind of relationship Rahul Gandhi has/is going to have with GK Vasan, PC, et.al. (Media somehow is not probing if these people not wanting to contest elections has anything to do with their relationship with Rahul (as compared with Sonia,) and his handling of Tamils issues.
  e. Even in the formative years of BJP in 1980 (from Jansangh), Vajpayee had conflicts with Nanaji Deshmuk and because of that Nanaji, Swamy, Govindacharya were all sidelined.
  f. Back in TN, Karunanidhi got rid of MGR in the 70s (Nedunchezhian, Rajaram et.al.) and Vaiko in the 90s and since then made DMK his family property. Stalin, in the name of revamping the party, replaced old timers with his people and new entrants into the party – Alagiri, who was once powerful and close to MK, has to go away now. Jayalalithaa did a similar thing in ADMK and got rid of MGR era leaders, even after they joined her party.
  g. So, Modi is not alone in this. Practically speaking, whenever there is a new leadership, a section of the old guards go away. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா :-)

  2. The Dravidian supporters should be happy or at least acknowledge that with the rise of Modi and Rajnath Singh and the sidelining of Brahmins like Sushma, Joshi and Gadkari, BJP is making progress towards “Social Justice” :-) They have done what Kamaraj and Nijalingappa could not do in Congress. :-)

  Regards!

 5. க்ருஷ்ணகுமார் Says:

  அர்விந்த் கேஜ்ரிவால் பெரும் ட்ராமேபாஜ், குடியரசு தினத்தன்று கொடியேற்றி விட்டு கொடிக்கு சலாம் கூட போடாது புறந்தள்ளிப்போனவர், போர் ஆட்டம் என்ற களியாட்டத்தில் மூழ்கி குடியரசு தின பேரேடுக்குக் கூட குந்தகம் செய்ய தம்கி கொடுத்தவர், காஷ்மீரை பாகிஸ்தானைச் சேர்ந்ததாக தன் இணைய தளத்தில் தெனாவெட்டுடன் காண்பித்தவர் என்று பல புகழ்கள் உள்ளவர் தான் ஒப்புக்கொள்கிறேன்.

  AK-49 புகழ் வாலறிவர் தன்னுடைய நாற்பத்தொன்பது நாள் ஆட்சியில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்கள் பலருடையவும் (எல்லாரும் லஞ்சலாவண்ய போலீஸ் என்று சொல்ல வரவில்லை) தூக்கத்தை கெடுக்க முனைந்தது சரிதானே.
  இவர் கட்சியினரின் கட்டப்பஞ்சாயத்துக்குப் பயந்தோ (தன்னுடைய கவர்னமெண்டு திறமை என்று சொல்லிக்கொள்கிறார்) என்னவோ தில்லியில் அரசு மருத்துவமனைகளும் அதில் உள்ள பணியாளர்களும் ஒழுங்கு மரியாதையாக செயல்பட முனைந்தது நல்லது தானே.
  1984 தில்லியில் சீக்கியர்களுக்கெதிரான கலஹத்தை விஜாரிக்க SIT அமைத்தது ( ஒரு ஸ்டண்ட் என்றாலும் இது முப்பது வருஷங்களுக்கு அப்புறம் எத்தையும் சாதிக்கப்போவதில்லை என்றாலும்) பாஜக இதை முன்னாடியே செய்ய முடியாத அவலத்தை செய்ய முனைந்த வரையில் சரிதானே.
  கரண்டு டிஸ்ட்ரிப்யூட் செய்யும் டிஸ்காம் கொள்ளைக்காரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை CAG யின் தணிக்கைக்கு உட்படுத்தாது ஊரை ஏமாற்ற விழைகையில் தடாலடியாக இவர்களது கணக்கை CAG தணிக்கைக்கு உள்ளாக்கியது சரிதானே.

  ஆம் ஆத்மி பார்ட்டி எனும் பொ.ஜ.க மிகப்பெரும்பாலும் தேசவிரோத மாவோவாதிகளின் கட்சி என்றாலும் இந்த வார் டேன்ஸ் காரர்களின் சில நல்ல நிலைப்பாடுகளையும் பொதுஜனம் கவனித்துத் தான் வருகிறது.

  மோதி பற்றி இந்த ட்ராமேபாஜ் அள்ளிவீசும் தூற்றல்களை அப்படியே நான் ஏற்றுக்கொள்வதில்லை தான். ஆனால் இந்த கும்பலின் ஜோல்னாப்பை டிஎன் ஏ மற்றும் தேசவிரோத செயல்பாடுகளை ஒருபுறத்தின் மனதில் ஏற்றிக்கொண்டாலும் இந்தக் கும்பலின் நல்ல செயல்பாடுகளையும் கவனித்துத் தான் வருகிறேன்.

 6. rbkaran Says:

  தற்சமயம் நமக்கு ,திடம் ,தொலைநோக்குப் பார்வை,சரியான திட்டமிட்டு செயல்படும் தலைவர் வேண்டும்,அதற்கு சரியான ஒருவர் ,மோடி ,சரியான வர்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s