மொஹெம்மத் சிஷ்டி – குஜராத் ஹாஜ் கமிட்டியின் தலைவர், என்ன சொல்கிறார்?

April 14, 2014

சிஷ்டி அவர்கள் ஒரு சூரத் நகர இளைஞர் –  மத நல்லிணக்கத்துக்கும், இந்தியகுஜராத்தி முஸ்லீம்களின் மேன்மைக்கும் பாடுபடும் மதத் தலைவர். ஆனால் இவர், ஒரு சாதாரண, படிப்பறிவற்ற, மற்ற நம்பிக்கைகளின் மீது வெறுப்பைக் கக்கும் தொழில்முறை மதத்தலைவர் அல்லர்.  வெறுப்பை மூலதனமாக வைத்துப்  பணத்தையும் புகழையும் அடைய நினைப்பவர் அல்லர்.

உலகளாவிய அளவில், இஸ்லாமை நம்புபவர்களை, அவர் கண்டுகொண்ட ஸூஃபி முறை ஞானமார்க்கத்தில் வழி நடத்துபவர். ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு படைத்தவர். சூரத்தின் அதோதராவில் உள்ள தர்காஹ் ஷாரிஃப்-ன் கடினஷின் (=தலைமை உபாசகர்); உம்மா அகிலம் எனும் தொலைக்காட்சி அலை வரிசையை நடத்துபவர். (இந்த அலை வரிசையைப் பற்றிச் சில செய்திகள் அந்தக் கேடுகெட்ட விக்கிபிடியாவில் இருக்கின்றன; வேறு வழியேயில்லாமல், சோம்பேறித்தனமாக இந்தச் சுட்டியைக் கொடுக்கிறேன்; தொலைக்காட்சிக்கும் எனக்கும் வெகுதூரம்)

எச்சரிக்கை: இவர் மோதியின் நண்பர். அவருடைய அரசியல் ஆதரவாளரும்கூட.

இவரும் மாய்ந்து மாய்ந்து மோதிக்கு எதிராக, இந்தியாவின் பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப் படும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், பாவம்.

இவர் சொல்வதெல்லாம்:

  • மிகப் பெரும்பாலான முஸ்லீம்கள்,  – படிப்பறிவின்மைக்கும், சுகாதாரச் சீர்கேடுகளுக்கும், ஏழ்மைக்கும் எதிரான நிறைவான வாழ்க்கையைத்தான், வளர்ச்சியை,  சுதந்திரத்தைத்தான் விரும்புகிறார்கள்; அதனைக் குஜராத்தில் பெற்றுள்ளார்கள்.
  • முஸ்லீம்களுக்கு பிரத்தியேகச் சலுகைகள் என்று ஒன்றும் தேவையில்லை. அவர்களுக்கு — மற்ற இந்தியக் குடிமக்களுக்கு என்ன வசதிகள், உரிமைகள் கிடைக்கவேண்டுமோ – அவை கிடைத்தால் போதும்.
  • மத அடிப்படைவாதம் என்பது முஸ்லீம்களுக்கும், இந்தியாவுக்கும் நல்லதேயல்ல.
  • 2002ல், கோத்ரா ரயிலெரிப்புக்குப் பின் நடந்த கலவரங்களை மோதி நல்ல முறையில் அடக்கினார் – அவருக்கு, மத்திய அரசின், ராணுவத்தின் உதவி கிடைக்காதபோதும் அவர் முனைந்து, அரசுயந்திரங்களைக் கொண்டு குண்டர்களை அடக்கினார். தொடர்ந்து இரும்புக் கைகளுடன் அராஜகவாதிகளை அடக்குகிறார். (காங்க்ரெஸ் அரசு அது ஆண்டவருடங்களில், ஒன்றுமே செய்யவில்லை; ஏனெனில் அதனுடையது ஓட்டுவங்கி அரசியல்; வளர்ச்சிக்கான அரசியல் அல்ல)
  • 2002-க்குப் பிறகு இத்தனை 12 ஆண்டுகளில் ஒரு தடவை கூட அங்கு ஊரடங்கு உத்தரவு இடப் படவேண்டிய அவசியமேயில்லை.
  • பொய்ப் பிரச்சாரங்களை நம்பவேண்டாம்.  நாற்பத்தேழாயிரத்துச் சொச்சம் குஜராத் பொலீஸ்காரர்களில், ஐயாயிரம் முஸ்லீம்களும் இருக்கிறார்கள். (~11%)
  • பிற அரசுவேலைகளில் சுமார் 9% முஸ்லீம்கள்; குஜராத்தின் நகராட்சிகளில் சுமார் 240 முஸ்லீம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவற்றில் சரிபாதி பேர், பல வாரியங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள்.
  • குஜராத்திலிருந்துதான் ஹாஜ் பயணத்துக்கு அதிகமானவர்கள் செல்கிறார்கள்.
  • ஊடகங்களில் சொல்வதைப் போல், குஜராத்தில் ஒரு சராசரி முஸ்லீமுக்கோ, ஹிந்துவுக்கோ ஒவ்வொரு முட்டுச் சந்திலும், ஒவ்வொரு சாலைப்பிரிவிலும் அபாயங்கள் ஒளிந்துகொண்டிருக்கவில்லை, அபாயங்களில்லை. அவர்களிடம் பரஸ்பர வெறுப்பில்லை; பல தொழில் முனைவுகளில் ஹிந்து-முஸ்லீம் பங்குதாரர்களுடைய சமபங்களிப்புகள் இருக்கின்றன.
  • வெறுப்புகளை அணைக்காமல், ஊதி ஊதிப் பெரிதாக்கி அவற்றில் குளிர்காயும் காங்க்ரெஸ், ஸெக்யூலர்வாத கட்சிகளை இனம் கண்டுகொள்ள வேண்டும்.
  • மோதியையும் அவர் குடும்பத்தினரையும் நான் நன்கு அறிவேன். அவர் தன் குடும்பத்துக்காகவோ, தனக்காகவோ ஒரு சொத்தையும் சேர்க்கவில்லை.
  • ஹிந்துஸ்தான் ஒரு அமைதியை விரும்பும் தேசம்.
  • மோதி-யை இந்தியப் பிரதமராக்க முயல்வது நம் கடமை. சீர்கெட்ட நிலையில் இருக்கும் நாட்டை அவரால் மேலெழுப்ப முனைய முடியும்.

குறிப்பு: சிஷ்டி அவர்கள் சொல்லும் சில விஷயங்கள் – அமெரிக்கா பற்றி, மேற்கத்தியக் கலாச்சாரக் கூறுகள் பற்றியெல்லாம் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.  ஆனால் அவருடைய பார்வையென்பது மதம்சார்ந்தது – அமைதியையும், நல்லிணக்கத்தையும், மகிழ்ச்சியையும், ஆன்மிக / பொருளாதார வளர்ச்சியையும் விழைவது — என்கிற முறையில் அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய பேச்சுகளின் ஒலிப்பேழைகளைக் கேட்டுவிட்டுத்தான் மேற்கண்டவற்றை எழுதியிருக்கிறேன்.

-0-0-0-0-0-0-0-0-

சரி. இப்போது சில படங்களும், பேச்சுகளின் சுட்டிகளும்…

 வாராணசி-யில் சிஷ்டி அவர்கள் மொஹல்லா மொஹல்லாவாகச் சென்று, மோதி-க்காக வாக்குச் சேகரிக்கிறார். ஏப்ரல் 13. 2014 அன்று எடுத்த படம். (https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-  9/p720x720/10255765_738994476145667_6894763876106777569_n.jpg)

வாராணசி-யில் சிஷ்டி அவர்கள் மொஹல்லா மொஹல்லாவாகச் சென்று, மோதி-க்காக வாக்குச் சேகரிக்கிறார். ஏப்ரல் 13. 2014 அன்று எடுத்த படம். சுட்டி.

இந்த சிஷ்டி அவர்கள் ஊர் ஊராகப் போய் பிரச்சாரம் செய்கிறார். கடந்த பல வருடங்களாக இப்படித்தான் செய்கிறார். ஆனால், அதிசயிக்கத்தக்க வகையில் இவர்கள் போன்றோருடைய செய்திகள், நம்பிக்கைகள் – ஊடகங்கள் மூலமாகப் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதேயில்லை.

ஏனெனில் வெறுப்பு, எதிர்மறை செய்திகள் விற்கும். நல்லெண்ணம், நல்ல செய்திகள் விற்கமாட்டா. நம் மனிதர்களுக்கு,  சரியான பயிற்சியின்மையின் காரணத்தால் – பெரும்பாலும் குயுக்திச் செய்திகளிலும், கந்தறகோளங்களிலும்தான் நாட்டம் அதிகம், வேறென்ன சொல்ல…

 நடுவில் இருப்பது சிஷ்டி அவர்கள்; மோதி: நான் தலையில் தொப்பி அணிந்துகொண்டு கண்ணில் மண்ணைத் தூவமாட்டேன்.   காந்தியும் நேருவும் படேலும் இம்மாதிரி தொப்பி போட்டுக் கொண்டார்களா என்ன? நான் எல்லா தர்மங்களையும் மதங்களையும் மதிப்பவன்.

புகைப்படத்தில் நடுவில் இருப்பது சிஷ்டி அவர்கள்; மோதி: நான் தலையில் தொப்பி அணிந்துகொண்டு கண்ணில் மண்ணைத் தூவமாட்டேன். காந்தியும் நேருவும் படேலும் இம்மாதிரி தொப்பி போட்டுக் கொண்டார்களா என்ன? நான் எல்லா தர்மங்களையும் மதங்களையும் மதிப்பவன்.

இஃப்தார் கஞ்சி குடிக்கிறேன்,  ‘நாந்தேன் வொங்க தோளன்’ எனும் பொய்கள் நிரம்பிய பரப்புரை உலகில் – ஒருவர்,  ‘நான் உங்களை ஏமாற்றமாட்டேன்’ என்று சொன்னாலே அது பெரிய தவறாகச் சித்திரிக்கப் படும். இதுதாண்டா பப்பரப்பா ஊடகம்!

சரி.  இந்த சிஷ்டி அவர்கள் – ஹிந்தி (+ஆங்கிலம் கலந்து) பேசிய சென்ற வருடத்தில் நடந்த மங்களூர் பேச்சு ஒன்று யூட்யூப் தளத்தில் கிடைக்கிறது.

பேச்சின் தலைப்பு: மோதியும் முஸ்லீம்களும்; சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சு. பொறுமையாகக் கேட்டால், பல திறப்புகள் கிடைக்கலாம்.  முன்னோடி மதத் தலைவர்கள் எப்படி சமரசங்களை முன்வைத்து தங்கள் சமூகங்களை முன்னெடுத்துச் செல்ல விழைகிறார்கள் என்பதை அறியலாம். ஹிந்தி தெரியாதவர்கள் கூட – பல ஆங்கில வார்த்தைகள் உபயோகப்படுத்தப் பட்டதன் காரணமாக,  இதனைப் பார்க்கலாம்; ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

 

விரிக்கப்பட்ட இக்கடையில், கொள்வார்கள் எடுத்துக் கொள்ளலாம். கொள்வாரில்லையென்றாலும் கட்டி விடுவதாக இல்லை. இருந்தாலும் எனக்குத் திருமந்திரம் பிடிக்கும் :-)

பின்குறிப்பு: தொழில்முறை மோதி வெறுப்பாளர்கள், உடனே – இந்த் சிஷ்டி விலை போய்விட்ட முஸ்லீம், உம்மா-வுக்குத் துரோகம் செய்யும் மோதியின் கைக்கூலி என்றெல்லாம் சொல்வார்கள். சொல்லட்டும். அவரவருக்கு அவரவர் காமாலைப் பார்வை. அவரவர் படிப்பும் மனப்பயிற்சியும் அப்படி. அவ்வளவுதான்.

நரேந்த்ர மோதி!

5 Responses to “மொஹெம்மத் சிஷ்டி – குஜராத் ஹாஜ் கமிட்டியின் தலைவர், என்ன சொல்கிறார்?”


  1. Sir!
    The youtube link (http://www.youtube.com/embed/uyC49trDcgE)seems to be improper. Please correct the alignment.

    Regards
    Venkatramanan


    • அய்யா, இந்த சிஷ்டி அவர்களின் பேச்சு – உங்கள் சுட்டியில்தான் இருக்கிறது. பதிவில் இருப்பதும் சரியாகத்தான் இருக்கிறது – முதலில் ஒரு விளம்பரம் வரும் – சில வினாடிகளுக்குப் பிறகு பேச்சு நிச்சயம் வருகிறது. சரியா??

  2. A.SESHAGIRI Says:

    இந்த சிஷ்டி போன்றவர்கள் என்னதான் கரடியாக கத்தினாலும் இங்குள்ள மரமண்டைகளுக்கு ஒன்றும் ஏறாது. இன்று ஹிந்துவில் வந்த ஒரு செய்தியைப் பாருங்கள்,சமீபத்தில் ஆழி சூழ் உலகு கதைக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற திரு.க்ரூஸ்( D’Cruz ) அவர்கள் சில நாட்களுக்கு முன் மோதியின் திறமையை பாராட்டி,அவரால் குஜராத் மாநிலம் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்று வருகிறது,நாட்டின் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறி இருந்தார்.இது பொறுக்காத இடது சாரியினர் அவரது இந்த நூலின் ஆங்கில மொழி பதிப்பின் வெளியீட்டை தடை செய்துள்ளனர்.இது எந்தவகை ஜனநாயகமோ ! எழுத்து சுதந்திரமோ தெரியவில்லை.இந்த வெட்கம் கெட்டவர்கள் ,இந்த லட்சணத்தில்மோதியை போய் ‘சர்வாதிகாரி’ சிறுபான்மையர்களை அடக்கி ஆள்கிறார் என்று வேறு கதைக்கிறார்கள்.
    ‘ஹிந்துவில் இது சம்பந்தமாக வந்த செய்தியின் சுட்டி:
    http://www.thehindu.com/news/national/tamil-nadu/navayana-defends-dcruz-book-release-decision/article5909147.ece

  3. சரவணன் Says:

    தமிழ் இந்து நாளிதழில் ஆசிரியர் சமஸ் கட்டுரையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    //// ஆனால், எல்லோருமே மோடியைப் பற்றிப் பயத்துடனே பேசுகிறார்கள். “மோடிஜி மர்மமானவர்” என்கிறார்கள். பொதுவாக, குஜராத் எங்கும் இந்து முஸ்லிம் சமூகம் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இந்துக்களிடம் பேசும்போது, “மோடிதான் எங்கள் பாதுகாப்புக்கு உறுதுணை” என்கிறார்கள். முஸ்லிம்களிடம் பேசும்போது, “மோடி நாசக்காரர்; எங்கள் வாழ்வைக் குலைத்தவர்’’ என்கிறார்கள். ////

    Link

    You can take your pick.

    —–>>>> I did sir, I did. I would suppose rotten-cherry picking is the way you want to pick on Modi. ;-)

    Oh well. Each unto his own biases.What else.

    __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s