(அல்லது) கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை  இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (2/2)

முந்தைய பகுதியின் தொடர்ச்சி… (என்னைப் பொறுத்தவரை சில முக்கியமான விஷயங்களை, விவாதிக்கப் படவேண்டியவைகளை – இப்பதிவில் ஆவணப் படுத்தியிருக்கிறேன். பொறுமையாக, பொங்கிவழியாமல் படிக்கவும், சரியா?)

-0-0-0-0-0-

… இன்னொன்று: நடைமுறை/பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு.

“எப்படித்தான் உங்களூர் முஸ்லீம் பெண்கள், இப்படிச் சுட்டெரிக்கும் வெய்யிலில் கறுப்புப் பர்தா போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களோ?”
Read the rest of this entry »

மனதே சரியில்லை.

சுமார் இரண்டு வருடங்கள் முன்(ஜூன் 2013 என நினைவு), எங்களிடமிருந்து (= ஒரு சிறிய அளவிலான இந்திய நண்பர் குழாமிடமிருந்து) விடைபெற்ற கர்ட் தேசம் (இப்போதைக்கு  இரான் – ஸிரியா – துருக்கி – ஆர்மேனியா – இராக்-கின் பாகம்) சார்ந்தவரான இந்த கில்யஸ் அம்மணி, சில நாட்கள் முன்பு (28 மார்ச்) அற்ப, மதப்பொறுக்கிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளுடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்.

இணையத்தில் இது தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். அவர் அறிமுகம் செய்த சில  கர்ட்  பிராந்திய ட்விட்டர்காரர்களிடமும் (ஒரு அழகான – மனதைப் பிழியும், ஆனால் கம்பீரமான எடுத்துக்காட்டாக) தேடினேன்; கொஞ்ச நேரம் #பெஷ்மெர்கெ-விலும் தேடினேன்.

ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவில்லை. (இப்போது தோன்றுகிறது, ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவும் தேவையில்லை!)

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் - இந்தப் பக்கத்தில்  இருந்து எடுக்கப்பட்டது; அங்கு பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன. http://www.globalsecurity.org/military/world/war/kurdistan-maps.htm

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் – இந்தப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது; அங்கு, இது தொடர்பான பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன.

… எனக்கு நேற்று காலை தான் இந்தச் செய்தி கிடைத்தது.

எவ்வளவோ படுகோரச் சாவுகளை நேரடியாகப் பார்த்திருந்தாலும், பொதுவாகவே என் தாங்குதன்மை மிகவும் அதிகம் என்றாலும்கூட, என் கால்கள் தொய்ந்துபோய் விட்டன. ஒரே சோர்வு. சாப்பிடவே பிடிக்கவில்லை.  மலையளவு, பள்ளிசார்  வருடமுடிவு மாளா  வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிற வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன – பெய்ன்ட் வேலை, ஹார்ட்டிஸ்க்கள் ரிப்பேர், வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீட்டுவேலைகள் பலப்பல – இவற்றைத் தவிர அரையும் குறையுமாக இருக்கும் பல ஒத்திசைவு பதிவுகள், மேஜைகளிலும் நாற்காலிகளிலும் அலமாரிகளிலும் பிதுங்கி வழியும், அவசியம் படிக்கவேண்டிய புத்தக அடுக்குகள் என – ஆனால், என் அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழியின் நினைவாக,  இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?

நேரே வீட்டுக்கு வந்து இதனை எழுத ஆரம்பித்தேன்… Read the rest of this entry »

… ‘கலைஞர் டீவி’யில் மெய்மறந்து மானாடமயிலாட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, பாதித்  தூக்க மயக்கத்தில், கோபாலபுரத்தில் மானசீக கோபிகைகளுன் ஏகோபித்து, ஆனந்தமாக கோபிகாகீதம் பாடிக்கொண்டே உடன்இறப்புகளுக்குக் கடிதம் எழுதியே, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த நவீனகிருட்டிணர், திடீரென்று விழித்தெழுந்தார்.

ஏதேதோ சிந்தனைகள்… தூக்கமா கனவா நனவா எனத் தெரியாத குழப்ப கனவிலிநனவிலி நிலை… அதுவும் கனவுக்குள் கனவுகாணும் கந்தறகோளம். கதம்பமாகக் கலந்தடித்த எண்ணவோட்டங்கள்…

என்னையே ஏமாற்ற முயன்ற அந்த கேடி சகோதரர்கள் எப்படி ஒழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மக்கள்? 2ஜி+கலைஞர்டீவி ஆரியச் சதியால், மகளும் மனைவியும் துணைவியும் ஒருசேர சிறைபிடிக்கப்படுவார்களோ? மஞ்சள்துண்டினை விட்டெறியும் காலமும் வருமோ?

அறிவாலயத்தைப் பீரங்கி கொண்டு நானே பிளக்கும் காலமும் வருமோ? எனக்கு மோட்சம் கிடைக்குமோ? என் குலக்கொழுந்து இசுடாலினார் பொறுமையாக இருப்பாரோ – அல்லது ஔரங்க்ஸெப், அவன் தந்தை ஷாஜெஹானைச் சிறையில் அடைத்ததுபோல் நடந்துவிடுமோ?  என் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் தீருமோ? கோஷ்டிப் பூசல்? என் சொந்தப் பிள்ளைகளே இப்படி பதவிக்கு ஆசைப்பட்டு கோஷ்டிகானம் செய்கிறார்களே …ஆ! …கோஷ்டி, திருக்கோஷ்டியூர்!!  திருக்கோஷ்டியூர் கோபுரப் புகழ் ராமானுஜரைப் பற்றி ஒரு புத்தகம்/அல்லது கதைவசனம் எழுதினால், என் பாவங்கள் அகலுமோ?

Read the rest of this entry »

இதுதாண்டா – திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (2/n)

சரி. இவ்வரிசையில் முதல் பாகம். கண்டிப்பாக அதனைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் இங்கு வந்தால், மேலே இப்பதிவையும் தலையை வெகுவேகமாகச் சொறிந்துகொண்டு ரத்தக்களறியுடன் படித்து, மேலதிகமாகப் புரியாமல் புளகாங்கிதம் அடையலாம். நன்றி.

திராவிடம் தொடர்கிறது…

Read the rest of this entry »

எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை  ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.

இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)

பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்

Read the rest of this entry »

| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்:  ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |

சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.

ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.


பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…

Read the rest of this entry »

:-( இந்த சோகக்கதையை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.

‘திராவிட இயக்க அறிவுஜீவி’ (இந்தப் பதம் ஒரு நகைக்கத்தக்க ஆக்ஸிமொரான் – ஏனெனில், திராவிடக் கருத்தாக்கத்துக்கும் அறிவுக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை – சரியாகச் சொல்லவேண்டுமானால், இவை இரண்டும் எதிரெதிர் துருவங்கள்; ஆனால் மேற்படி முயக்கம், பல உதிரிகளை ஜீவிக்க வைப்பது உண்மை! ஆகவே இவரை ஒரு வெறும் தொழில்முறை திராவிடஜீவி என்றழைப்பதே சரி) எனச் சர்வசாதாரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ளும் ஒருவருடன் பொறுமையாக உரையாடவேண்டிய நிர்பந்தம், இரண்டு நாட்கள் முன்னர்,  மாலையில் புதுச்சேரி  கணேஷ்ஸ்ரீ உணவகத்தில் ஏற்பட்டது, அந்த திராவிடஜீவியின் பூர்வஜென்மப் பாவமாகத் தான் இருக்கும்.
Map of the Ancient Philistines Territory

இதுதான் ஒரிஜினல் திராவிட நாடு. இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி மேலே தெரியவேண்டுமானால் என்னுடைய செல்லமான அர்பன் டிக்ஷ்னரிக்குச் செல்லவும். ஸ்க்ரோல் செய்து அந்த முழு கட்டுரையையும், பலவித பொழிப்புரைகளையும் படிக்கவும். அப்போதுதான் உங்களுக்கு இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும்! நன்றி.

பாவம், அவருக்கு என்னைப் பலவருடங்களாகத் தெரியும். முன்னாட்களில் புத்திசாலியாகவே (அதிகமாகவெல்லாம் அல்ல – ஆனால், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் படியாக) இருந்தவர்தான் – பரவலான வாசிப்பும் + செறிவூட்டும் வாழ்க்கை அனுபவங்களும் பெரும்பாலும் இல்லாமல் இருந்தாலும்கூட  –   எனத்தான் நினைவு. திராவிடக் குண்டுச் சட்டியில், கழகக் கழுதைகளை ட்ரீயோட்ரீயோ என ஓட்டுவது என்பது மிகமிக லேசு எனும் உண்மைக்கு அப்பாற்பட்டு  – வயதாகவயதாக நிலைப்பாடுகளில் முதிர்ச்சியின்மை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது – மறுபக்கம், மறுபரிசீலனை செய்யும் ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது, என்ன செய்ய. (அவருக்கு மட்டுமல்ல, எனக்கும்தான்! :-( ஒப்புக் கொள்கிறேன்!)

Read the rest of this entry »

ஐயகோ!  நமக்கு இது தேவையா? எனக்கு மிகமிக வருத்தமாக இருக்கிறது. அழுகைஅழுகையாக வருகிறது.

பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?

Read the rest of this entry »

கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத்  தவறு செய்து விட்டேனோ??

“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”

— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))

ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை  திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)

Read the rest of this entry »

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது குடியரசு தினம், அமைதியாக வீட்டில் கழிந்துகொண்டிருக்கிறது. ஏதேதோ சிந்தனைகள் – ஆக, அவை தொடர்பாக அலைக்கழிக்கும் நினைவுகளும் எண்ணக்கோவைகளும்.

மகாமகோ மாறன் சகோதரர்களின் ஊழல்கூத்து என்பது ஒரு தொடரும் சோகம்!

சென்னையின் அப்போதைய லயோலா கல்லூரியில் படித்து, தங்கள் பராக்கிரமங்களால் – இந்தியாவுக்கும், குறிப்பாகத் தமிழகத்துக்கும் மகத்தான பணியாற்றிவரும் தலைசிறந்த பழையமாணவர்கள் இவர்கள்தாம் என்பது நாம் பெருமைப்படத் தக்கதே! (அதேசமயம், லயோலாவின் இப்போதைய மாணவர்கள் 2013 ஸ்டூடென்ட் ப்ரொட்டெஸ்ட் குஞ்சாமணிகளுக்கே இலக்கணமான அதிஅற்புத மேதாவிகளாகத் திகழ்ந்து, ஒரேசமயத்தில் தமிழகத்தையும் ஸ்ரீலங்காவையும் – ஏன் இவ்வுலகத்தின் வடக்கு துருவப் பிராந்தியங்களையுமேகூட உய்விக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே!)
-0-0-0-0-0-0-

மத்திய  தகவல்துறை/தொலைத்தொடர்புத் துறை ‘அமைச்சராக’ இருந்தபோது, படுகேவலமாகவும் படுமோசமான பிச்சைக்காரத்தனமாகவும் – தன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்தே திருட்டு ‘ஸப்-கான்ட்ரேக்ட்’ ;-) எடுத்து தன் வீட்டிலிருந்தும் ஒரு எக்ஸ்சேஞ்ச்(!) நடத்திய மேதகு தயாநிதி மாறன் அவர்களின் கூத்துகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…

Read the rest of this entry »

மூன்று வாரங்கட்கு முன்னால் பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ஆள், வீச்சறிவாள் கும்பலால் துரத்தித் துரத்திக் கொலைசெய்யப்பட்டார். இது ஏதோ பழைய கணக்கு தீர்த்தலுக்காக என +1.

ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் எங்கள் பள்ளி வாயிலில் இருந்து 120 மீட்டர் தொலைவில் ஒரு பட்டப்பகல் வழி மறிப்புக் கொலை. இப்போது இந்தப் பக்கமும் +1. படு கோரம். ரத்தக் களறி. பதிலுக்குப் பதில் திராவிடப் புறநானூற்று வீரம்! கொலை செய்யப்பட்டவர் ஓடியிருக்கலாம், தப்பிக்கூடப் பிழைத்திருக்கலாம். ஆனால் நான்கைந்து வருடங்கள் முன் அவர் ஒரு சுயதொழில்முனைவோனாக இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவர் காலிலேயே ஒரு குண்டு விழுந்து, பாவம், ஒருகால் போய்விட்டிருந்தது. ஆகவே.

அடுத்து… … …

Read the rest of this entry »

இன்று ஸெப்டெம்பர் 21.  மகத்தான  ராஜனி திராணகம அவர்களின் 25வது நினைவுநாள்.
ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

பிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான்! நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு,  இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின் மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.

இவர்களால், இந்தத் தறுதலைப்புலிகளால், காடுகளில் மனிதர்களுக்குப் பயந்துகொண்டுவாழும் பாவப்பட்ட சாதா புலிகளுக்கே மாளாத அநியாயக் கெட்ட பெயர்… :-(

சரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் –  யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)

அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)

இவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013   ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி  படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது.  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.

Read the rest of this entry »

அய்யய்யோ! மோதி பிரதமராக உள்ள அரசின் பிரமாதமான முதல் சாதனையாக — — ஒரு பக்கம்,  ஓமர் அப்துல்லா + கிரீஷ் கர்னாட் + யுஆர் அனந்தமூர்த்தி + லாலு பிரசாத் யாதவ் + மல்லிகா சாராபாய் + தேவ கௌடா போன்றவர்களெல்லாம்,  அவர்கள் சத்தியம் செய்ததுபோல், இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு — நாளைக்கே அமெரிக்காவிலேயோ அல்லது வேறேதாவது எழவிலேயோ போய் நிரந்தரமாகத் தங்கிவிட முயற்சி செய்யப் போகிறார்களே என்று நான் வருத்தத்துடன் ஆனந்தத்தில், கதனகுதூகலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்…

… இன்னொரு பக்கம்,  பாவம், மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதற்குப் பின் – பலரும் தொழில்முறை அறிவுரைக்காரர்களாக மாறி விட்டார்கள். இத்தனை நாள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் – இப்போது பிரதம மந்திரி ஆகப் போகிறாய் அல்லவா? உடனே விலைவாசியை அடக்கு, தீவிரவாதத்தை அடக்கு, என  அடக்குஅடக்கு என்று துடிக்கிறார்கள்…  ஆக்கபூர்வமான அறிவுரைகளை அளித்தே தீருவேன் என்கிறார்கள். Read the rest of this entry »

(அல்லது) கோத்ரா, தீர்ப்பு, என்னுடைய முயற்சிகள்: சில குறிப்புகள்

மேலே படிப்பதற்குப் பின்புலமாக நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை (அதன் பாவப்பட்ட பின்னூட்டங்களுடன்) படித்தால் நலம். படிக்காவிட்டாலும் ஒரளவு புரியலாம். (

குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு? கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்…

வெங்கடேசன் அவர்கள், தன்னுடைய பின்னூட்டங்களில் கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்: ஒன்று, இரண்டு. இவற்றில் இரண்டாவதற்கு இந்த பதில்.

அன்புள்ள வெங்கடேசன்:

உங்கள் கரிசனத்துக்கும் – உண்மை என்னவாக இருந்திருக்கலாம் எனும் சிந்தனைகளுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல மனிதர்கள் இப்படி இல்லை.

  • நான், அம்மணி தீஸ்தா ஸெதல்வாத் தளத்திலிருந்த பொதுத் தீர்ப்பைப் படிக்கவில்லை. அவர் மேல் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை; ஏனெனில் தரவுகள் சார்ந்து அவரை ஒரு பண/கருத்து மோசடிப் பேர்வழியாகக் கருதுகிறேன். அதே சமயம் பல வடிவங்களை ஒருங்கிணைத்து எது சரி எதில் என்ன பாடபேதம் என்று ஆராயவேண்டிய அளவு, போயும்போயும் தீஸ்தாக்கள் மேல் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ஏன், உங்களுக்குமே இல்லை — என்பதுதான் என் எண்ணம். மேலும் வெறும் கூக்ல் மூலமாக, மௌஸை உருட்டி இணையத்தில் கிடைக்கும் சத்தற்ற செய்திகளை நான் உடனே நம்பி விடுவதில்லை. என் பயிற்சியும் அனுபவங்களும் (healthy skepticism) அப்படி என்னை ஆக்கிவிட்டிருக்கின்றன. ஆம். இன்டெர்நெட்டித்யேவ நஸாது ஸர்வம். :-( காளிதாஸன் எப்போதுமே காப்பாற்றிவிடுவான்! :-)

Read the rest of this entry »

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
—  (திருக்குறள்(அறத்துப்பால்(வாய்மை)))

அதாகப்பட்டது:  மனதாறத் தெரிந்தே, அண்டப்புளுகுணி மாங்கொட்டையாக இருப்பவர்களை அவர்களுடைய மனச்சாட்சியே சுட்டுவிடும் என்று  திருக்குறள் நீதிபோதனையாகச் சொன்னாலும் – என்னைப் பொறுத்தவரை, எனக்குத் தெரியவந்த மாங்கொட்டைகளை, எனக்கு நேரமும் பொறுமையும் (=பொறுமையின்மை) இருந்தால் நானே சுட்டுவிடுவது வழக்கம்; ஏனெனில் பலருக்கு மனச்சாட்சியே இல்லை. இது ஒரு பிரத்தியட்ச உண்மை.

சரி. Read the rest of this entry »

ப்ரியங்கா ஸிங் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரின் கீச்சல்தான் மேற்கண்டது. :-)

இந்தக் கிண்டல்களில், நையாண்டிகளில்  அமிழ்வதற்காகவே ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், டிவிட்டரில் நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடப் போகிறேன்… ;-) Read the rest of this entry »

பொதுவாக, நமது பாரதத்தில் –  நக்ஸல்பாரிகள் என மினுக்கிக்கொண்டு அலைபவர்களை, நக்ஸடார்க்குகள், நக்ஸலைட்டுகள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்:

நக்ஸடார்க்குகள் (naxadarks) – இவர்கள், ஜனநாயகம் என்கிற ஊரிலேயே பிறக்காத, கொடுமைக்காரக் கொலை வெறியர்கள். மாவோயிஸ்ட்கள் எனப் பொத்தாம்பொதுவாக அறியப் படுபவர்கள். பொருளாதார வளர்ச்சிக்கும், கல்விக்கும், முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும், அடிப்படை அறங்களுக்கும், நேர்மைக்கும், அமைதிக்கும் எதிரானவர்கள். ஆகவே விஷக் கிருமிகள் போல அறவே ஒழிக்கப் படவேண்டியவர்கள். இவர்கள் இக்காலங்களில் தமிழ் நாட்டில் இல்லை; முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டார்கள், வால்டர் ஐஸக் தேவாரம் போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியுடன்.

இதுதாண்டா மாவோயிஸ்ட் எனும் நக்ஸடார்க்!

இதுதாண்டா மாவோயிஸ்ட் எனும் நக்ஸடார்க்!

இந்த பயங்கரவாத இயக்கத்தினால் முதலில், மிகத் துப்புறவாக அழித்தொழிக்கப் படுபவர்கள் என்றால் – அவர்கள் கோலோச்சும் பகுதிகளில் வசிக்கும் துர்பாக்கியவான்களான பாவப்பட்ட பொதுமக்கள். இவர்கள் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் பகுதிகள் ஜார்கண்ட், சத்தீஸ்கட், ஆந்திரா, ஒடிஷ்ஷா, பிஹார் பிராந்தியங்களில் இருக்கின்றன. Read the rest of this entry »

QED.

(அல்லது) ஹ்ம்ம்… சில சமயங்களில், என் பதிவுகளின் தலைப்புகளை முழுவதும் படித்துப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே நெஞ்சுவலி வந்துவிடும்தான், உங்களை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது… ஆனால், கணிதம் மூலமாக, எந்த  விஷயத்தைத்தான் புரிந்து கொள்ளமுடியாது, சொல்லுங்கள்!

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

திராவிடத் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மேற்கண்ட பொதுவிதிச் சமன்பாடு மூலம் மட்டுமே தேர்தலைப் புரிந்துகொள்ள முடியும். முன்னேற்றமாவது, வளர்ச்சியாவது, வளமாவது, நீதியாவது கொள்கையாவது மசுராவது… போங்கடா.

இந்தக் கேடுகெட்ட விதிக்கு விதிவிலக்குகளென்றால் – எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்கள், பாஜக-வினர் போன்றவர்கள் மட்டுமே! இவர்களுக்குத்தான் கொள்கை  என்று ஒன்று (மற்றவர்களுக்கு இது பிடிக்குமோ பிடிக்காதோ, அது வேறு விஷயம்) இருக்கிறது.  சுய-அர்ப்பணிப்புள்ள அடித்தளம் என்று ஒன்று இருக்கிறது.  இவைகளில், உண்மையான தலைவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பலர் இருக்கின்றார்கள். ஓரளவு, இந்த விடுதலைச் சிறுத்தைகளையும் இந்தக் கணக்கில் – அதாவது பைசா கொடுக்காத கட்சிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் — சீமார் வகையறா, வினவு வகையறா, தவ்ஹீத்ஜமாத், ஆம்ஆத்மி வகையறா போன்றவை மானாவாரி, மேகம்பார்த்தபூமிச் சாகுபடி பப்பரப்பா உச்சாடன இயக்கங்கள் மட்டுமே, அவை அரசியல் கட்சிகளல்ல. Read the rest of this entry »

பத்ரி சேஷாத்ரி அவர்களின் உபயத்தில்  ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம்ஆத்மிகட்சி  வேட்பாளரும் அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணருமான மேதகு ஞாநி சங்கரனார் அவர்கள் நடத்திச் சிறப்பித்த சவப்பெட்டி உற்சவத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.

அவருடைய ஒருகாலத்திய செல்லங்களான நக்ஸல்பாரிக் குஞ்சாமணிகளின் போராட்டகோஷம்:

தேர்தல் பாதை, திருடர் பாதை!

ஆக,  ஒரு பெரிய சுற்று சுற்றிவந்த நாடகத் தன்மை மிக்க ஞாநி சங்கரனார் அவர்களின் தற்போதைய புதிய கோஷம்:

தேர்தல் பாடை, திருடர் பாடை!

… ஹ்ம்ம்ம்… … என்னவோ போங்க. :-(

மேலதிகமாக  Modern Keechaka Vadham – எனும் நாடகத்தை வேறு நடத்தினாராம் – இது நம்  நவநாகரீக அறிவுஜீவிகளின் ‘மாடர்ன் கீச்சகவாதம்’  – அதாவது கீச்சு கீச்சென்று ட்விட்டரில் கீச்சி மட்டுமே தேர்தலில் வெல்லலாம் என்கிற கோட்பாடான கீச்சகவாதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ??

எது எப்படியோ — வாழ்க, நமது அறிவுஜீவிகளின் நகைச்சுவையுணர்ச்சி, வளர்க அவர்தம் தொண்டான குண்டு. (அதாவது குடமுருட்டி வகையறா) வெல்க அவருடைய கட்சி, டெபாஸிட்டையாவது!

-0-0-0-0-0-0-0-

2014 தேர்தலில் – பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் ரங்கசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும் (=ராதாகிருஷ்ணன்),  நாராயணசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும்தான் (= நாராயணசாமி) சரியான போட்டி.  மற்றபடி  அஇஅதிமுக (ஓமலிங்கம்), திமுக (நாஜிம்), பாமக (அனந்தராமன்), கம்யூனிஸ்ட் (விசுவநாதன்), ஆம் ஆத்மி (ரெங்கராஜன்) கட்சிகள் எல்லாம் சும்மனாச்சிக்கும் கூடவோடிகள் போலத்தான் இருக்கின்றன… Read the rest of this entry »