மோதிக்கு, இந்தியாவை நிர்வகிப்பது தொடர்பாக அறிவுரை வழங்குவது எப்படி?

May 16, 2014

அய்யய்யோ! மோதி பிரதமராக உள்ள அரசின் பிரமாதமான முதல் சாதனையாக — — ஒரு பக்கம்,  ஓமர் அப்துல்லா + கிரீஷ் கர்னாட் + யுஆர் அனந்தமூர்த்தி + லாலு பிரசாத் யாதவ் + மல்லிகா சாராபாய் + தேவ கௌடா போன்றவர்களெல்லாம்,  அவர்கள் சத்தியம் செய்ததுபோல், இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு — நாளைக்கே அமெரிக்காவிலேயோ அல்லது வேறேதாவது எழவிலேயோ போய் நிரந்தரமாகத் தங்கிவிட முயற்சி செய்யப் போகிறார்களே என்று நான் வருத்தத்துடன் ஆனந்தத்தில், கதனகுதூகலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்…

… இன்னொரு பக்கம்,  பாவம், மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதற்குப் பின் – பலரும் தொழில்முறை அறிவுரைக்காரர்களாக மாறி விட்டார்கள். இத்தனை நாள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் – இப்போது பிரதம மந்திரி ஆகப் போகிறாய் அல்லவா? உடனே விலைவாசியை அடக்கு, தீவிரவாதத்தை அடக்கு, என  அடக்குஅடக்கு என்று துடிக்கிறார்கள்…  ஆக்கபூர்வமான அறிவுரைகளை அளித்தே தீருவேன் என்கிறார்கள்.

ஒரு சின்ன வேலையை உருப்படியாகச் செய்யத் தெரியாதவனெல்லாம், தன் வீட்டை, ரோட்டை, ஏன் ஓட்டை(யை)க் கூட பராமரிப்பு செய்யாதவனெல்லாம், பின்புறத்தைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ளத் தெரியாதவனெல்லாம், தன் அண்மையச் சூழலில் ஒரு விதமான வளர்ச்சிக்குமோ சுத்தத்திற்கோ, சுகாதாரத்திற்கோ, கல்விக்கோ, சுற்றுச் சூழலுக்கோ, சக்தி மேலாண்மைக்கோ ஒரு எழவும் வித்திடாமல்,  வாயைப் பிளந்து  கொண்டு பெத்த அறிவுரை கொடுக்கிறார்கள்.

வீட்டில் பெண்டாட்டிக்கு ஒரு சுக்கு உதவியும் செய்யாமல், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல், அடிப்படை வீட்டு நிர்வாகம் கூடச் செய்யத் தெரியாமல் செய்தித்தாளைப் படித்துக் கொண்டு, டீவி பார்த்துக்கொண்டு, திருட்டு டவுன்லோட் படம் பார்த்துக்கொண்டு ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குசு விட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மோதிக்கு அறிவுரை கொடுக்கிறார்கள்.

நமது தேசத்தின் பொழுதுபோக்கே பிறத்தியாருக்கு அறிவுரை கொடுப்பதுதானே!

என் நல்லூழ்தான் என் வீட்டில் தொலைக்காட்சி டப்பா இல்லாதது. அங்கு என்னவெல்லாம் அட்வைஸ் கொடுக்கிறார்களோ, இந்த வேலைவெட்டியற்ற அறிவுஜீவிப் பரதேசிகள். இந்தியாவின் பெரும் வியாதியே – இந்த மீயறிதல் அற்ற நிலைதான். இதற்கு தடுப்பூசி என்பது ( நான் வெறுத்துப் போயிருக்கும் இத்தருணத்தில்) ஈவிரக்கமற்ற கொலைதான்.

பெங்காலி பாபு ஃபோன் செய்து சொல்கிறான் – “நரேந்த்ர மோதி ஸெக்யூலர் காரராக இருந்தால்தான் அவரைத் தன்னால் இந்தியப் பிரதமர் என்று ஒப்புக் கொள்ள முடியும்” என்று. நான் பதில் கொடுத்தேன்: “போடா. அவர் அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டார். நீ தாராளமாக அவரை ஒப்புக் கொள்ளாமல் கிரீஷ் கர்னாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு வெளி நாடு ஏதாவது சென்று ஸெட்டில் ஆகி விடு. ஒழி. ”

ஒரு பழைய கல்லூரித் தோழன் எழுதுகிறான்: “மோதி வந்ததால் இந்தியாவை விட்டு லட்சக் கணக்கில் முஸ்லீம்கள் வெளியேறி பாகிஸ்தான் போய்விடுவர், அவர்கள் போகாவிட்டால் அமித் ஷா-வுடன் சேர்ந்து அவரே விரட்டிவிடுவார்  – அவர் அப்படிச் செய்யாமல் இருப்பதற்கு அவருக்கு ஒரு அறிவுரையாளர் குழு வேண்டும்!”

எப்படித்தான் சூட்சும தரிசனத்தில் இதையெல்லாம் கண்டுகொள்கிறார்களோ!  பாகிஸ்தான் என்ன நிலையில் இருக்கிறது, அது இவ்வளவு முஸ்லீம்களை திடுதிப்பென்று வரவேற்குமா? முதலில் நம் இந்திய முஸ்லீம்கள் அங்கு செல்ல, கனவில் கூட எத்தனிப்பார்களா? கடந்த பத்தாண்டுகளில் எவ்வளவு குஜராத்தி முஸ்லீம்கள் பாகிஸ்தானிடம் நிபந்தனையற்றுச் சரணடைந்தனர்? — இம்மாதிரி ஒரு விதமான சிந்தனைகளோ, முகாந்திரங்களோ, கேள்விகளோ ஒரு எழவும் இல்லை!  (இதில் முக்கியமான விஷயம் – இவன் அமெரிக்காவில் ஸான் ஃப்ரேன்ஸிஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு குண்டியைச் சொறிந்துகொண்டு – இந்தியாவின் மேல் தொடர்ந்து இணையம், மின்னஞ்சல் மூலமாகக் கரிசனப் பட்டுக் கொண்டேயிருக்கிறான், பாவம்!)

வெறுப்பேற்றுகிறார்கள், பாவிகள்; தொல்லை தாங்கவே முடியவில்லை. வேறு வழியேயில்லாமல், எனக்கே வெளி நாடு, ‘ஸ்டேட்ஸ்’ என்று போய் ‘ஸெட்டில்’ ஆகிவிடலாமா என வெறியாகவே இருக்கிறது.

ஐஐடிகாரரான, இருந்தாலும் மிகவும் சூட்டிகையான பத்திரிகையாளரான சந்தீபன் தேப் கூட ஒரு அழகான அறிவுரை கொடுத்திருக்கிறார் – அவர் மாநில/ நாட்டு நிர்வாகம் + தர்ம பரிபாலனம் தொடர்பாக, ரகசியமாக எங்கோ பயிற்சி எடுத்திருக்கிறார் எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அதே சமயம் அரவணைத்துப் போதல் போன்ற அடிப்படை மேலாண்மைத் திறமைகளையும், அரசியலில் எப்படி இவை உபயோகப் படுத்தப் படலாம் என்பதையும் ஆய்ந்து அறிந்து, மோதி அவர்களுக்கு  அறிவுரை கொடுக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். பொதுவாக மூளையுள்ள இவரெல்லாம் இப்படி உளறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது!

எனக்கு இம்மாதிரி வந்திருக்கும் மின்னஞ்சல்களை / கட்டுரைகளைப் படிக்கப் படிக்க புளகாங்கிதமோதி புளகாங்கிதம் அடைந்து மாரடைப்பே வந்து விடும் போலிருக்கிறது.

நானும் அறிவுரை கொடுக்கலாம் என நினைக்கிறேன். ஆசை யாரை விட்டது, சொல்லுங்கள்?

சரி. அறிவுரை இங்கே, அறிவுரைக்க ஆள் எங்கே?

குறிப்பு: இன்று மாலையில் – மாலத் தீவுகளிலிருந்து என் தம்பியும் – இந்தியாவில் நானும் தொலைபேசி, பரஸ்பரம் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டோம்; நல்லவேளை, அவனும் அடுத்தபடியாக, மோதிக்கோ எனக்கோ அறிவுரை கொடுக்கிறேன் பேர்வழியென முயலவில்லை. பதற்றம் குறைந்து ஆசுவாசமாகவே இருந்தது.  குழந்தைப் பிராயத்தில் என்னை மிகவும் துன்புறுத்தியிருக்கிறான் அவன் – எல்லாவற்றையும் மன்னித்தேன், மறந்தேன்… தம்பீ – அறிவுரை சொல்லாத காரணத்திற்காகவே உன்னை விட்டு விடுகிறேன். நன்றி.

-0-0-0-0-0-

வேறு வழியேயில்லாமல், நகைச்சுவைக்காக  விடுதலை தளம் சென்றபோது வீரமணி அவர்களின் கோபமான சாபம் போன்ற அறிவுரையைப் படித்தேன்!  அவருக்கும் ஊழ் – பாவம் – காலம் – விதி போன்றவற்றில் பகுத்தறிவுசார் நம்பிக்கை வந்து விட்டதோ?? பாவம், அவரும்,  நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினை – அழகிரியும் கனிமொழியும் இராசாவும் பாலுவும் தயாநிதியும் சேர்ந்து இப்படித் தோற்கடித்துவிடுவார்கள் என எண்ணியே இருக்கமாட்டார்.

காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்!

யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொறிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த இணையத்து தீராத விளையாட்டு விடலைகளே, காலந் தாழ்ந்தாவது வளர்ச்சி என்ற மயக்க பிஸ்கெட் பற்றிப் புரிந்து வருந்துங்கள்.

ஆக — — வளர்ச்சி என்பதே திராவிடர்களுக்கு ஒவ்வாத விஷயமா? அதுதானா சங்கதி??

இணையவிளையாட்டு விடலைகளெல்லாம் மோதிக்கு / பாஜகவுக்கு என்றுதான் வாக்களித்திருக்கிறார்களா?

விடுதலை_தளம் என்பதே இணையத்தில் உள்ள, சும்மனாச்சிக்கும் விளையாடப்படும் விடலைத்தனம்தானா?

ஆக – திமுக, திக காரர்களாக இருக்கும் அனைத்து இணைய இளைஞ சார்பாளர்களும் வெறும் விடலைகளா?

சபாஷ். இவற்றை ஒப்புக் கொண்டமைக்கு, என் வாழ் நாளில் முதல்முறையாக உங்களுக்கு நன்றி நவில்கிறேன்! ;-)

-0-0-0-0-0-

நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு – இன்று நான் மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்,  மோதி அவர்களுக்கு, அவர் தரம் அறிந்த வாக்காளர்களுக்கு, நன்றியுடன்.

ஆமென். :-)

நரேந்த்ர மோதி!

21 Responses to “மோதிக்கு, இந்தியாவை நிர்வகிப்பது தொடர்பாக அறிவுரை வழங்குவது எப்படி?”

  1. SP Says:

    “டீவி பார்த்துக்கொண்டு, திருட்டு டவுன்லோட் படம் பார்த்துக்கொண்டு ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குசு விட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மோதிக்கு அறிவுரை கொடுக்கிறார்கள்.”

    How true!!! இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தேன்.

  2. Venkatachalam Says:

    எப்படியோ மூன்றாண்டுகளாக இருந்த சஸ்பென்ஸ் ஒரு முடிவுக்கு, சுகமான முடிவுக்கு வந்துள்ளது. இனி ஒரு 20 வருடங்களுக்காவது மோடியின் அரசு நிலைத்து இந்தியாவின் துயரமெல்லாம் நீங்கமென நம்புவோம். இந்தியர்கள் அனைவரும் நன்கு உழைத்து உண்டு உடுத்து வாழ்கிறார்கள் என்ற செய்தி காதில் விழ போய்ச்சேர வேண்டும் என்று விழைகிறது உள்ளம்.

  3. A.Seshagiri Says:

    தலீவர் கலைஞர் அவர்கள் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு பகுத்தறிவு பகலவனாக சொல்லி இருக்கிறாரே இதில் மகேசன் என்பவர் யார்?


    • என் பெரியம்மாவின் மகன்; மெய்யாலுமே. இவர்தான் கருணாநிதி அவர்களின் ஞானகுரு.

      முழுப்பெயர்: பெருந்துரை நாகரத்தின மகேசன். (இந்த ஈரோடு பக்க பெருந்துரை பாடல் பெற்றதலம்; நான் இதன்மேல் ஒரு வெண்பா வடித்திருக்கிறேன்)

      அன்புடன்:

      __ரா.

    • Venkatesan Says:

      // இந்த ஈரோடு பக்க பெருந்துரை பாடல் பெற்றதலம்

      வாதவூர் அடிகளால் பாடப் பெற்ற திருப்பெருந்துறை புதுக்கோட்டை அருகில் உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய திருப் பேணுப்பெருந்துறை என்றொரு தலம் கும்பகோணம் அருகில் உள்ளது. ஈரோடு உள்ளடக்கிய கொங்கு நாட்டில் தேவார பாடல் பெற்ற தலங்கள் ஏழு: திருப்புக்கொளியூர் அவினாசி, திருமுருகன் பூண்டி, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவெஞ்சமாக்கூடல், திருக்கருவூர் ஆனிலை (கரூர்), திருநணா (பவானி), திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி).

      நீங்கள் குறிப்பிடும் பெருந்துறை என்பது தேவார வைப்புத்தலமோ? தேவார வைப்புதல வழிகாட்டி புத்தகம் தற்சமயம் கைவசம் இல்லை :-(

      பிகு: கொஞ்சம் கூட விஷயம் தெரியாததை பற்றி ‘கருத்து’ சொல்லிக்கொண்டு இருந்ததற்கு மாறாக, தம்மாத்தூண்டு அளவு விஷயம் தெரிந்த ஒன்றை பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும் போது விடுவானேன் என்றுதான்! வேறொன்றும் இல்லை :-)

    • Venkatesan Says:

      ஓ, திருப்புகழ் பாடல் பெற்ற தலமோ? ஈரோடு-பெருந்துறை வழியில் உள்ள திண்டல்மலை முருகப் பெருமானை அருணகிரிநாதர் பாடியுள்ளதாக தெரிகிறது. திருப்புகழ் தலங்கள் மீது ஈர்ப்பிருந்தாலும், எனக்கு அதிக பரிச்சயம் இல்லை.

      —>> okay! Since you finally zeroed in on the correct coordinates, you can go ahead and launch an ICBM. :-)

      • Venkatesan Says:

        அந்தக் கோவில் மேல வெண்பா பாடிட்டு, அது மேலயே மிஸைல் உட சொல்றீங்களே. நியமாரே!

  4. kakkoo Says:

    // நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு – இன்று நான் மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், மோதி அவர்களுக்கு, அவர் தரம் அறிந்த வாக்காளர்களுக்கு, நன்றியுடன்.//

    இதுதான் அனைவரின் நிலையும், ஆனால் இந்த சாயம் பூசிய நரிகள் அச்சபடுவது இயல்பே.

  5. ganeshmurthi Says:

    இந்திய அளவில் பெரு மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன்! இன்னும் இருபது வருடங்களில் கேரளத்தில் கம்யூனிஸ்ட்களிடமிருந்தும், தமிழகத்தில் “தீரா இடர்களி டமிருந்தும் நம் நாடும் வரும் தலைமுறையினைரும் தப்பித்துவிடும் வாய்ப்பும் வாக்கு எண்ணிக்கை விகிதசாரப்படி நம்பிக்கை அளிக்கிறது! வந்தே மாதரம்! “நல்ல நாட்கள் வந்துகொண்டிருக்கின்றது”! :)

  6. Sridhar Says:

    யாரும் காங்கிரசுக்கு அறிவுரை தரவில்லை என்பது மிக ஆச்சர்யமான விஷயம். யாரும் இதுவரை தராததால் நான் மனமுவந்து காங்கிரசுக்கு அளிக்கும் இலவச அறிவுரை:

    1. வெற்றி பெற உதவாத தலைவர்களை மாற்றுங்கள். அவர்களாக ராஜினாமா செய்தால் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
    2. ஆட்சியில் இருக்கும் மீதி மாநிலங்களில், ஏதாவது மக்கள் உணரும்படி வேலை செய்யவும். உதாரணங்கள்:
    2.1 சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல்
    2.2 அடிப்படை அரசாங்க நிர்வாகத்தை கவனியுங்கள். ரேஷன் கார்ட், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற விஷயங்களுக்கு மக்களை அலைய விடாதீர்கள்.
    2.3 காலியான அரசு பதவிகளில் லஞ்சம் வாங்காமல் தகுதி உள்ளவர்களை நியமியுங்கள்.

    இவ்வளவு செய்தாலே, மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். நம் சனம் எதிர்பார்ப்பது இதுவே. இது கூட செய்ய முடியாதா? (நன்றி: நரேந்திர மோதி)


    • அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இன்னமும் உளறிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை போய்வந்த மனைவி சொன்னார் – டீவியில் இன்னமும் மோதிஎதிர்வாதம்தான் தொடர்கிறது என்று. கெட்டகனவில் இருந்து முழித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

      ஆகவே, உங்கள் அறிவுரைகளைச் சிறிது நாட்களுக்குப் பின் செறிவு படுத்திக் கொடுக்கவும்…

      பாவம், இந்த ஜந்துக்களுக்கு ஷாக்கிலிருந்து மீள நேரம் வேண்டுமல்லவா?

      __ரா.

  7. Narasimhan Says:

    இன்னமும் காங்கிரஸ் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பார் என்றே பேசி வருகிறார்கள்.இந்த மாதிரி பிரசாரம் செய்தே முஸ்லிம்களை தூண்டி விட்டு கலவரம் செய்ய முற்படுவார்கள் என்பது என் அச்சம். காங்கிரஸ்காரர்கள் எப்போதும் ஒரு பதவியில் உட்காருவது தனது பிறப்புரிமை என்றே நினைப்பார்கள்.அதிலும் மகாராணியும் இளவரசரும் சும்மா இருப்பார்கள் என்று நினைக்கமுடியவில்லை. போதாகுறைக்கு இளவரசி வேறு .இதற்கு மோடி வாய்ப்பளிக்காமல் எல்லோரையும் அணைத்து ஆட்சி புரிய வேண்டுகிறேன்.

  8. Venkatachalam Says:

    வெண்பா வடித்திருக்கிறேன் என்று மட்டும் கூறினால் எப்படி. அதை வெளியிடுங்கள். அன்மையில் பெருந்துறையில் உணவருந்திக்கொண்டிருந்த போது உங்கள் நினைவு வந்தது.

  9. Gowthaman Ramasamy Says:

    வாழ்த்துக்கள் ஐயா! நல்ல காலம் வர தொடங்கிவிட்டது. நிறைய கற்று கொடுத்ததற்கும், ஈகோவை அவ்வப்போது (=எல்லாமுறையும்) கடித்து குதறியதர்கும் நிறைய நன்றிகள்.


    • அய்யயோ! ரொம்பப் புகழாதீர்கள்! கூச்சமாக இருக்கிறது. இன்னும் அதிகமாகவே என்னால் குதற முடியும்! ;-)

      நான் நேரில் பழகுவதற்கு இனிமையானவன் என்றேதான் என்னை நேரில் பார்க்காதவர்கள் சொல்கிறார்கள்.

      நிற்க. மோதியால், அவர் சார்ந்திருக்கும் இயக்கங்களால் (பாஜக, முக்கியமாக ஆர்எஸ்எஸ்-ஆல்) இந்தியாவுக்கு நிறைய ஆக்கபூர்வமாகச் செய்ய முடியும் என்பது என் எதிர்பார்ப்பு.

      ஆனாலும் சாளரம்#1-ஐப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

      எப்படியும் – குறுகிய கால நல்லகாலத்தை உருவாக்குவதை (=தடவிக் கொடுத்தல்) விட, மோதிக்கு, நெடுங்கால நன்மைகளைச் செய்ய ஆன்மவலுவும், வயதும் இருக்கிறது. :-)

      நன்றி.

  10. AAR Says:

    Typical Tamil Brahmin – arrogant and fascist. All through 10 years of UPA Govt, Tam Brahms were commenting about it. Now because its BJP Govt they think others should not comment.

    I doubt if this comment will be published.

    —–>>> Sir AAR, you have been published. :-)

    Fascistically & Fatalistically yours:

    __r.

    • AAR Says:

      I know you will publish my comment. My doubt challenged your ego.

      If you want to make any arrogant person do what you want, challenge his ego. Its psychological.

      —–>>>> Dear Doctor Sigmund Freud,

      Thanks for the anal-ysis.

      Shrinkingly and Psychologically yours:

      __r. Oh what fun.

  11. ரங்கன் Says:

    /Typical Tamil Brahmin – arrogant and fascist.//

    ஆஹா அற்புதமான கண்டுபிடிப்பு – arrogant – சரி இருக்கட்டும் – அது என்ன fascist !! – ஓஹோ புரிஞ்சி போச்சு – ஹிந்துத்வா வெறியர்கள் !!! மற்றவர்கள் எல்லாம் அன்பின் வடிவமானவர்கள்.

    //If you want to make any arrogant person do what you want, challenge his ego. Its psychological.//

    ரொம்ப சரி – இதைத் திரு மா விடம் பரிட்சித்துப் பார்க்க தங்களுக்கு தைரியம் உண்டா ?

    —->>> அய்யா ரங்கன், இந்தமாதிரி சும்மனாச்சிக்கும் கல்லெறியும் ஆசாமிகளை திருமா அவர்களும் பொருட்படுத்தமாட்டார்.

    நான்தான் வேலைவெட்டியற்று இவர்களையெல்லாம் பொருட்படுத்தி கிண்டல் செய்கிறேன்.

    ஆனால், இத்தோடு இதனை நான் விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யலாம்.

    __ரா.

  12. sulochana Says:

    சாதி மற்றும் அது சார்ந்த வன்முறை, பிரித்தாளும் சூழ்ச்சி, தனிநாடு கோரிக்கை, ஈழம் இவற்றோடு வளர்ச்சி என்ற எண்ணமே வராமல் இருப்பது அல்லது வளரவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் தி.மு.க, தி.க, மற்றும் பு.மா..மு.ச,, இ.ஜ.வா.ச. மற்றும் இதர சங்கங்களால் பிழைப்பு நடத்தவே முடியாது!

  13. Venkatesan Says:

    மதம் மற்றும் மதம் சார்ந்த வன்முறை, பிரித்தாளும் சூழ்ச்சி, அகண்ட நாடு கோரிக்கை, காஷ்மீர், இவற்றோடு பெரும் வளர்ச்சி இருப்பதாய் மாயம் செய்வது என்ற உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் சில இயக்கங்களால் பிழைப்பு நடத்தவே முடியாது.

    அது என்ன இயக்கங்கள் என்று கேட்டுவிடாதீர்கள். நான் பதில் சொல்லப் போனால் ந்யாலய ஆவணங்கள் அடிப்படையில் ஆதாரம் கொடுக்க வேண்டும். விக்பீடியாவில் தொடங்கி தேடிக் கொண்டு இருக்க வேண்டும். எனக்கு அந்தளவு படிப்பறிவு கிடையாது. உருப்படியான மற்ற வேலைகள் வேறு உள்ளன. ஆளை விடுங்கள். இந்தியாவில் உள்ள முப்பத்து மூணு லட்சம் இயக்கங்களில் மேலே சொன்ன வகை இயக்கம் ஏதாவது இல்லாமலா போய் விடும். எஸ்கேப்!

  14. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்

    ஒன்றா இரண்டா ………. 38 பதிவுகள். I really salute your untiring and swift writing prowess.

    இத்தனை பதிவுகளையும் மூச்சு விடாமல் வாசித்த பின் ஆப் கீ அதாலத் முஸ்லீம் சஹோதரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை தமிழ்ப்படுத்துவேன் பேர்வழி என்று இங்கு எங்கேயோ ( நினைவில் வரமாட்டேன் என்கிறது) பகிர்ந்திருந்தேன். இன்ஸ்பிரேஷன் ராம் சாஹேப்.

    ஒரு வழியாக எழுதி முடித்து தமிழ் ஹிந்து.காம் தளத்தில் சமர்ப்பித்திருக்கிறேன்.

    மடி உள்ள என்னை முடுக்கி விட்டு எழுத வைத்தபடிக்கு

    எல்லாப்புகழும் ராமுக்கே

    And I have to read a good lot of your write ups.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s