நக்ஸடார்க், நக்ஸலைட்கள் தேய்ந்து திரிந்து… நக்கிலைட், நக்கலைட்களான கதை!
April 29, 2014
பொதுவாக, நமது பாரதத்தில் – நக்ஸல்பாரிகள் என மினுக்கிக்கொண்டு அலைபவர்களை, நக்ஸடார்க்குகள், நக்ஸலைட்டுகள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்:
நக்ஸடார்க்குகள் (naxadarks) – இவர்கள், ஜனநாயகம் என்கிற ஊரிலேயே பிறக்காத, கொடுமைக்காரக் கொலை வெறியர்கள். மாவோயிஸ்ட்கள் எனப் பொத்தாம்பொதுவாக அறியப் படுபவர்கள். பொருளாதார வளர்ச்சிக்கும், கல்விக்கும், முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும், அடிப்படை அறங்களுக்கும், நேர்மைக்கும், அமைதிக்கும் எதிரானவர்கள். ஆகவே விஷக் கிருமிகள் போல அறவே ஒழிக்கப் படவேண்டியவர்கள். இவர்கள் இக்காலங்களில் தமிழ் நாட்டில் இல்லை; முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டார்கள், வால்டர் ஐஸக் தேவாரம் போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியுடன்.
இந்த பயங்கரவாத இயக்கத்தினால் முதலில், மிகத் துப்புறவாக அழித்தொழிக்கப் படுபவர்கள் என்றால் – அவர்கள் கோலோச்சும் பகுதிகளில் வசிக்கும் துர்பாக்கியவான்களான பாவப்பட்ட பொதுமக்கள். இவர்கள் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் பகுதிகள் ஜார்கண்ட், சத்தீஸ்கட், ஆந்திரா, ஒடிஷ்ஷா, பிஹார் பிராந்தியங்களில் இருக்கின்றன.
ஆயுதம் தரித்த அராஜககும்பல்களான இந்த நக்ஸடார்க்குகளை திடமாக எதிர்கொள்ள (=எதிர்கொல்ல), ஒரு முதுகெலும்புள்ள, பணி செய்யும் முனைப்புள்ள அரசால் தாம் முடியும்; ஆனால், நமக்கு லபித்திருப்பதோ (இதுவரை) ஒரு நபும்சக, பிரச்சினைகளைத் தீர்க்காமல் பிச்சை மட்டுமே இடும் அரசு. முடிந்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் அரசு.
சமயங்களில் இந்த மத்திய அரசுக்கு தூக்கம் கலைந்து விடுகிறது, பாவம். அப்போதெல்லாம் அது திடீரென்று எழுந்து ‘டேய், நீ இன்னொரு தபா இப்படி செஞ்சே…’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் சந்தோஷமாகத் தூங்கப் போய் விடுகிறது.
இப்படிப்பட்ட நிர்வாகமற்ற நிர்வாகம் இருக்கும்போது, கூட்டணி தர்மத்தின்(!) காரணமாக ஊழலில் திளைக்கும் ராசாக்களையும் இளவரசி கனிமொழிகளையும் இன்னபிற உதிரிகளையும் கண்டுகொள்ளாமல் விடவேண்டிய அவசியம் வேறு. இதைத் தவிர பூனைக்கு (மன்னிக்கவும் நக்ஸடார்க் பெருச்சாளிக்கு) யார் மணி கட்டுவது என்ற பிரச்சினையில் வேறு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள், நம் காங்க்ரெஸாதிகள்…
ஆக — தொடரும் இச்சோகக் கதைகளைத் தீர்க்க — நன்றாக யோசித்து, தைரியமாக முடிவெடுத்து, திறமையுடன் திட்டமிட்டு, துப்புறவாக அம்முடிவுகளைச் செயல்படுத்தத் தக்கவர்கள் என்று சோனியா அம்மையாரின் தர்பாரில் இன்று யாருமே இல்லை.
ஹ்ம்ம் இல்லையில்லை. ஒருவர் இருக்கிறார். ஆனால், இந்த முடிவுகளானவை ஊழல் சார்ந்த, பணம் பண்ணக் கூடிய விஷயங்களாக, தம் குடும்பத்துக்கு ஆதாயம் கொடுக்கக் கூடியவையாக இருக்கவேண்டும் என எண்ணுபவர் அவர். அப்படியிருந்தால், துள்ளிக் குதித்துக் கொண்டு சுய அர்ப்பணிப்புடன் பணி செய்யும் திறம் இருக்கும் நம் கருணாநிதி அவர்கள் ஓடோடி வந்து காரியங்களைச் செவ்வனே செய்வார். ஆனால், நக்ஸடார்க் பிரச்சினையைத் தீர்ப்பதில் கருணாநிதி அவர்களுக்கு ஒரு நிதி ஆதாயமும் இல்லை என்பது, நம் தேசத்திற்குக் கொடுப்பினையில்லை என்பதைத்தான் குறிக்கிறது…
ஹ்ம்ம்… எது எப்படியோ, மோதி அவர்கள் பிரதமராக ஆக முடிந்தால், இந்தப் பெருச்சாளிப் பிரச்சினையை நீண்டகால நோக்கில் களைவதற்கு முற்படுவார் என நம்பலாம்தான்.
சரி, நம்முடைய ரத்தவெறிச் செல்லங்களான இன்னொரு நக்ஸல்பாரி பிரிவினரிடம் வருவோம்…
-0-0-0-0-0-0-0-
நக்ஸலைட்டுகள் (naxalites) – இவர்கள் லைட் – டாகக் காமெடி செய்யக் கூடியவர்கள், வாய்ப்பேச்சு வீரர்கள். மா-சே-துங், மார்க்ஸ்களின் கைப்பிள்ளைகள் போன்றவர்கள். கோமாளித்தனமாக நிறைய பணி செய்வார்கள்; ஒரு பொழுதுபோக்காக இவர்களுடைய செயல்களைப் பார்த்து, எழுத்துகளைப் படித்துச் சிரித்துக் கொள்ளலாம். பெரும்பாலான மனிதவுரிமை_இடதுசாரிக் காரர்களுக்கு இந்த பிம்பம் பொருந்தும். ஆனால், இவர்களை அவதானிப்பவர்களுக்கு நல்ல நகைச்சுவையுணர்ச்சி இருக்கவேண்டியது அவசியம்.
இந்த நக்ஸலைட் ஜந்துக்கள், நம்முடைய தமிழைக் கூறு போடும் நல்லுலகமான தமிழகத்தில், நம்முடைய செல்லமான திராவிடக் கலாச்சாரத்துக்கென்றே பிரத்தியேகமாக – ஒரு மூன்றாம் தரப் பிரிவாகச் செயல்படுகிறார்கள்:அதுதான் நக்கிலைட்டுகள் (nakkilites) எனும் உபகுறுங்குழுப் பிரிவு.
இந்த நக்கிலைட்டுகள் – இவர்கள் அறவே வெறுப்பதாகச் சொல்லப்படும் முதலாளியத்தின், ஏகாதிபத்தியத்தின், ராணுவ-தொழில்முனைவோர் குழுமங்களின் கொடைகளான, பிச்சைகளான சகல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு, அவைகளிடம் இருந்து கிடைக்கும் – அவைகளால் சாத்தியமாகியிருக்கும் தொழில் நுட்ப, நிதி வசதிகள் அனைவற்றையும் தொடர்ந்து கமுக்கமாக நக்கிக் கொண்டு படு கேவலமாக உயிர் தரித்துக் கொண்டிருப்பவர்கள். அதே சமயம் – பரந்துபட்ட மக்களுக்கு உதவுகிறோம், புரட்சிகர சமுதாயத்தைக் கட்டமைக்கப் போகிறோம், சமூக நீதியை நிலை நாட்டப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஊழல்களில் ஈடுபடுபவர்கள்; தங்களைத் தட்டிக் கேட்பவர்களை, ஆயுதம் தரிக்காத பொதுமக்களைக் கொன்றொழிப்பவர்கள்; மேலதிகமாக, கருத்துத் திரிபுகளிலும், நாசவேலைகளிலும் ஈடுபடுபவர்கள்தான் இந்த ஜந்துக்கள்.
இந்த நக்கிலைட் கும்பல்களில் இன்னொரு பிரிவு என்பது – அதாவது நான்காம் தரப் பிரிவு – என்னுடைய செல்லங்களான நக்கலைட்டுகள் (nakkalites) எனும் உபகுறுங்குழுப் பிரிவு; இவர்களுடைய காரணப் பெயர் எப்படி வந்ததென்றால், இவர்களுக்கு எதையெடுத்தாலும் நக்கல் செய்வது மட்டுமே பிடிக்கும். அது மட்டுமே செய்வதுதான் அவர்களுக்கு முடியும், அவ்வளவுதான்.
இந்த நக்கல்ஸைட்-நக்கிலைட்டுகளுக்கு ஒரு மகத்தான எடுத்துக்காட்டுதான் இந்த வினவு கும்பல்… இந்த நக்கலைட்டுகளை அவதானிப்பதற்கு ஒருவருக்கு, ஒரு மணிநேரத்துக்கு ஒன்று விகிதம், வாந்தியைப் பிடித்துக் கொள்ளும் வாளி (barf bucket) ஒன்றாவது வேண்டும்; அவ்வளவுதான்! இந்தக் கும்பலில் என்னுடைய செல்லமான அரைகுறை ராய் போன்றவர்களும் அடக்கம்.
தினவெடுத்த வினவுகள் = வெறிபிடித்த அசட்டு முட்டாள்கள். ஆமென்.
-0-0-0-0-0-0-0-0-
வினவுக் குளுவான்கள், அவர்களுக்கு வழக்கமான மூர்க்க முட்டாள்தனத்துடன் பொய்களை, அவர்கள் வாய்க்கு வந்ததை எழுதுகிறார்கள்; உதாரணத்துக்கு அவர்களுடைய அண்மைய விட்டைகளில் ஒன்றில், மோதியின் வாராணசி விஜயத்தைப் பற்றி, ‘தினமலர்’ நாளிதழ் எழுதியதைப் பற்றிக் கடித்துத் துப்பியிருக்கிறார்கள்:
… ஆனால் காசிக்கு, சூத்திர மற்றும் பஞ்சம இந்துக்களும், பழங்குடி மக்களும் போவதில்லை, கங்கை புனிதத்தை அறிந்ததில்லை என்பதால் காசி வாழ் புண்ணிய பூமியின் இந்துக்கள் யார் என்றால் பார்ப்பன-ஷத்திரிய-வைசிய வருண பிரிவுகள் மட்டும்தான். அந்த வகையில் மோடியும் அவரது கட்சியும் பார்ப்பன ‘மேல்’சாதிகளைத்தான் தமது கலாச்சாரம் மற்றும் வர்க்க அடிப்படைகளாக கொண்டிருக்கிறார்கள். அதனால் மோடி வெற்றி பெற்றால் அவர் சிறுபான்மை ‘இந்துக்களின்’ பிரதமர்தான். பெரும்பான்மை இந்திய மக்களுக்கு அல்ல.” [அழுத்தம் என்னுடையது]
அப்படியா என்ன, எல்லாம் தெரிந்த அற்ப ஏகாம்பரங்களே!
உலக அனுபவத்தையே விடுங்கள், இந்தியமளாவிய அனுபவத்தையே விடுங்கள். அடிப்படையில், நம்முடைய அக்மார்க் தமிழ கிராமங்களிலும், மலைக்காடுகளிலும் கொஞ்சமாவது உலாவினாலேயே, இந்த அசடுகளுக்கு நம்முடைய பாரம்பரியத்தைப் பற்றியும், சமூகக் கட்டமைப்பைப் பற்றியும் பல அடிப்படை விஷயங்களைப் பற்றித் தெரியவரும் ; ஆனால் உட்கார்ந்த இடத்திலிருந்து இணையத்தில் குசு விடுவது, இணையக் குண்டு சட்டியில் அரைகுறைக் கழுதைகளை கூக்ள் மூலமாக ஓட்டி மைக்ரோஸாஃப்டிலிருந்து, உலகமயமாக்கல் வரை அறிந்து தெளிந்து தொடர்ந்து உளறிக் கொட்டிக் கொண்டேயிருப்பது என்பது இந்தத் தட்டச்சுப் போராளிகளுக்கு மிக உவப்பானது, என்ன செய்ய… அவரவர்களுக்கென்று அவரவர்கள் அடையக் கூடிய மட்டங்களும் படுமட்டங்களும்; கள்ளத்தனையது கருத்து நீட்டம், வேறென்ன சொல்ல.
-0-0-0-0-0-0-0-
இக்காலங்களில், மோதிக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க, அவரைக் கரித்துக் கொட்ட ஒரு பெரிய தகுதியும் தேவையேயில்லை என்பது ஒரு தெளிவான விஷயம். வாழ்க்கையில் ஒரு எழவையும் சாதிக்காத, செய்யாத — மூளை என்று ஒன்றை அறிந்தேயிராத குளுவான்களெல்லாம்கூட கோத்ரா 2002 மதவெறி என உளறிக்கொண்டு ‘ரெண்டு கல் வுடுவது’ என்பதைச் செய்துகொண்டிருக்கும் போது, தமிழகத்தின் ஆஸ்தான தீவிரவாதக் கோமாளிக் கோமகன்களான நக்கலைட்டுகள் இப்படிப் பேசுவது – மோதியை எதிர்க்கிறேன் பேர்வழியென்று தம்தலையில் சரக்கு இல்லை, மேல்மாடி காலி என பகீரங்கமாகப் பறைசாற்றுவது என்பது கொஞ்சம் கருணையுடனும் ஆதூரத்துடனும் புரிந்துகொள்ளக்கூடிய விஷயமே! ஆக எனக்கு, இந்த கும்பலின் மோதிமீதான கரித்துக் கொட்டல்கள் பற்றிக் கவலையில்லை.
என்னுடைய பிரச்சினை என்னவென்றால் – இந்தியச் சமூகக் கட்டமைப்புகளைப் பற்றி ஒரு எழவும் புரிந்துகொள்ளாமல், வானளாவிய உளறல்களை இந்த நக்கலைட்டுகள் அரங்கேற்றுவதுதான்.
-0-0-0-0-0-0-
1980களின் நடுவில், நான் பிலாய் நகரின் மகாமகோ இரும்புருக்காலையில் வேலை செய்துகொண்டிருந்தேன்; ஆகவே, பலமுறை சென்னையிலிருந்து நாக்பூர் வழியாக துர்க் ரயில் நிலையம் (திரும்பி இப்படியேவும்) – மேலும் சத்தீஸ்கட்-ஜார்கண்ட் என இப்போது அறியப் படும் பகுதிகளிலும் பரவலாகப் பயணம் செய்திருக்கிறேன். பலதரப்பட்ட மக்களுடன் – சமவெளிசார் ஆதிவாசிகளுடன், மலைஜாதிகளிடமும் தொடர்ந்து பழகியிருக்கிறேன். அச்சமயம், எனக்கு அந்த மகத்தான மனிதன் ஷங்கர் குஹா நியோகி அவர்களிடமும் அறிமுகமும் பழக்கமும் இருந்தது. இந்த அனுபவங்களிலிருந்தும், தொடரும் நிலைமைகளிலிருந்தும் எனக்குப் பல நெகிழ்வான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன – சில அனுபவங்கள், என்னுடைய இந்தியச் சமூகம் பற்றிய கருத்துகளைத் திருப்பிப் போட்டிருக்கின்றன. சில சமயம் வெட்கிப்போக வைத்திருக்கின்றன. பல சமயங்களில், பாரதீயம் எனும் வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொள்ள வைத்துள்ளன…
இப்போது, என்னுடைய மேற்கண்ட ரயில் பயணங்களின் போது ஏற்பட்ட அனுபவங்களில் இரண்டைப் பற்றி:
நான் என்னுடைய ராஜஸ்தானி நண்பனுடன் ஜாம்ஷெட்பூரிலிருந்து ராய்பூர் போய்க் கொண்டிருந்தேன். பெரும்பாலும் காலியாக இருந்த அந்தப் பெட்டியில் – எனக்கு எதிர் வரிசையில் ஒரு புதுமொட்டைச் சிறுவன்; பத்து வயது இருந்தால் அதிகம். கூட அவன் தாய்மாமனும், தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனாரும் இருந்தார்கள். பையன், பயபக்தியுடன் கையில் ஒரு சட்டியை வைத்துக் கொண்டிருந்தான். எக்காரணம் கொண்டும் அதனைக் கீழே வைக்கவேயில்லை. இங்கிதமற்ற நண்பன் – அச்சிறுவனிடம் கேட்டான் – அந்தச் சட்டியில் என்ன இருக்கிறது. அந்தச் சிறுவன் சொன்னான் – என்னுடைய அப்பா!
என்ன விஷயமென்றால், அந்தச் சிறுவனின் தந்தை ஒரு வாரம் முன் இறந்திருக்கிறார்; அடிப்படை ஈமக் கடன்களை முடித்துவிட்டு – இப்படி ஒரு க்ஷேத்திராடனம் கிளம்பியிருக்கிறார்கள் இந்த மூவரும்; அந்தச் சட்டியில் இருந்த சாம்பலைக் கொஞ்சம் ஜபல்பூர் பக்கத்து நர்மதையின் பெடாகாட்-டில் கரைத்துவிட்டு, வாராணசி போய் அங்கு மிச்சமிருக்கும் சாம்பலை, கங்கா மைய்யா (‘கங்கைத் தாய்’)விடம் கொடுக்கப் போவதாகச் சொன்னான் அந்தச் சிறுவன்.
நான் இப்போது (சுமார் 80 வயது மதிக்கத்தக்க) அந்தக் கொள்ளுப் பாட்டனாருடன் பேச ஆரம்பித்தேன் – எனக்கு போஜ்புரி வராது; ஓரளவுக்கு சுத்த ஹிந்தியில் தான் பேசினேன். அவர் சொன்னது: அவர் ஜாதியில் (இது வினவுதினவுகாரர்கள் சொல்லும் பஞ்சம ஜாதிகளில் ஒன்று) மட்டுமல்ல, அவர் கிராமத்தில் /பகுதியில் அனைத்து ஜாதிகளும் செய்யும் நீத்தார் கடன் தான் இது. பெடாகாட் போகாவிட்டாலும், அவசியம் வாராணசி போகவேண்டும் என்றார். கங்கா மைய்யா நமக்கெல்லாம் அன்னையல்லவா? வாழ் நாளில் ஒரு முறையாவது அம்மாவைக் காணவேண்டுமல்லவா? என் பேரனின் ஆத்மா அம்மாவில் கரையவேண்டுமல்லவா?
அவரும் 1916ல் இதேமாதிரி காசி போனதாகச் சொன்னார் – அந்த சமயம் அவருடன் அவருடைய இருவழிப் பாட்டனார்களும் சென்றிருக்கின்றனர். இரண்டு மாதப் பயணமாகச் சென்றிருக்கிறார். அதாவது பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக இந்த நீத்தார் சடங்குகள் நம் ‘பஞ்சமர்’ மக்களால் வாராணசியில் செய்யப் பட்டுள்ளன. எனக்குத் தெரிந்து இன்னமும் செய்யப்பட்டு வருகின்றன. இவர் குலத்துக்கு என்று தனியான ஒரு படித்துறையும் ஒரு அன்னதான சத்திரமும் அங்கு இருக்கின்றன என்றும் சொன்னார். சம்பாரண்யம் பற்றி காந்தி பற்றி எனப் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்… (இன்னொன்று நினைவுக்கு வருகிறது: லுங்கி கட்டிக்கொண்டு கதர்குர்த்தா போட்டுக்கொண்டு மார்புவரை அடர்ந்த தாடியுடன் இருந்த என்னை அவர் ஒரு முஸ்ஸல்மான் என நினைத்துவிட்டார்! காலையிலிருந்து பார்க்கிறேன், நீ ஏன் நமாஸ் செய்யவில்லை என்று கேட்டார்!)
இன்னொரு அனுபவம். இந்த முறை துர்க் ரயில் நிலையத்திலிருந்து ராமகுண்டம் வரை ஜனதா வகுப்பில் சென்று கொண்டிருந்தேன். கோந்தியா-வில் சுமார் 80 பேர் கொண்ட ஒரு பெரிய கூட்டம் பெரிய பாத்திரங்கள்+அடுப்புகளுடன் ஏறியது. அவர்கள் ராஜ்நந்த்கான்வ் காரர்கள். பெரும்பாலும் சமவெளிப் பழங்குடியினர்; சுமார் 30% ஸவர்ண (பஞ்சமரற்ற) ஜாதிக்காரர்களும்; அனைவரும் சத்தீஸ்கடி மொழிக்காரர்கள். இவர்களுடன் பேசியதில் தெரியவந்தவை: அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்; பெரும்பாலும் நெல் சாகுபடி; ஏழு வருடங்களுக்கு ஒரு முறை (சில நூற்றாண்டுகளாக, ஆம், குறைந்தபட்சம் இருநூறு வருடங்களாக என்றுதான் சொன்னார்கள்; இவர்களில் கால்வாசிப் பேர், குறைந்த பட்சம் இம்மாதிரி உலாக்களில் முன்னமே வந்திருக்கிறார்கள்) கிளம்பி நான்கு மாதம் போல இந்தியா சுற்றல்; இதில் வாராணசி, பூரி, துவாரகை, மதுரா, – பின்னர் நம்மூர் மதுரை, ராமேஸ்வரம், கன்யாகுமரி, ஸ்ரீரங்கம் போன்ற பல தலங்கள்அடக்கம்; கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, க்ருஷ்ணா, மஹாநதி போன்ற பெரும் நதிகளில் சடங்குக் குளிப்புகள், மொத்த கிராமத்துக்கான பொது நீத்தார் கடன்கள் உண்டு; அங்கங்கு சமைத்துச் சாப்பிட்டு, நடந்து நடந்தே ஊர் சுற்றல்கள். இவர்கள் அந்த முறைதான் திருப்பதிக்கு முதல்முறையாகச் செல்லத் திட்டம் வைத்திருந்தார்கள். இவர்கள், பெரிய நகரங்களைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வமிருப்பவர்களாகத் தெரியவில்லை. சென்னையில் ஸென் ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களைத் தெரிந்திருந்தார்கள், அவ்வளவுதான். இம்மாதிரிப் பல கிராமங்களிலிருந்து காரீஃப் அறுவடை செய்த பின் கிளம்பிக் கொண்டேயிருப்பார்கள் (அப்போதுதான் பயணத்தில் கோடைச் சூடு அதிகமில்லாமல் இருக்கும்) எனவும் சொன்னார்கள்.
எனக்கு அந்த குழுவினரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவர்கள் பேச்சைக் கேட்பது மிக சுவாரசியமாக இருந்தது. படு சுட்டிகளாக இருந்த ஏழெட்டு குழந்தைகள் வேறு! பல அழகான திறப்புகள்!
ஆக, நாக்பூரில் இறங்கி (ரெயில் அங்கு 3 மணி நேரம் நிற்கும்) ராமகுண்டம் நண்பனுக்கு அங்கு வரப்போவதில்லை என்று சொல்லி, பயணச்சீட்டை நீட்டித்து — அதே வண்டியில், அந்தக் குழுவுடன் சென்னை வரை சென்றேன். பல முக்கியமான படிப்பினைகள் பெற்றேன். நமது பண்டையச் சமூகங்களின் கட்டமைப்பு, அது ஒரு அழகிய யந்திரம் போல இயங்குவது பற்றியெல்லாம் அற்புதமான படிப்பினைகள் பெற்ற தருணமாக இருந்தது அந்தப் பயணம். மேலும் — பிரித்தாளும், மனு தர்மம் கினு தர்மம் என்று உளறிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வெறி பற்றி – இந்த (மார்க்ஸ்+மெக்காலே)/2 அரைகுறை வாதிகளைப் பற்றி எனக்கு மிகத் திடமான கேள்விகள் எழ ஆரம்பித்ததும் இச்சமயம்தான்.
-0-0-0-0-0-0-
ஆக, வினவுகாரர்கள், பெரும்பாலான மனிதவுரிமைக்காரர்கள் போன்ற தொழில்முறை இந்திய வெறுப்பாளிகள், கடைந்தெடுத்த பொய்யர்களும் அயோக்கியர்களும் மட்டுமே, என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
இவர்கள் இனம் கண்டுகொள்ளப் பட்டு, இடக்கையால் புறம் தள்ளப் படவேண்டியவர்கள்தான். இதிலும் எனக்குச் சந்தேகமேயில்லை.
குறிப்பு: இப்பதிவில் வந்திருக்கும் கேலிச் சித்திரங்கள் – கடந்த ஆறுமாதங்களில், http://defence.pk/ தளத்திலிருந்து எடுக்கப் பட்டன.
-0-0-0-0-0-0-
சரி. இந்த நக்கிலைட் நக்கலைட் குளுவான்களைப் பற்றி மேலதிகமாகத் தலையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டுமென்றால்:
-
வினவு = புரட்சி கர (நகைச்சுவை, அபுரிதல், அபத்தம், மைதுனம்) 23/06/2012
-
தோழர் – தொழில் – தோள்வலி – தொபுக்கடீர்!26/07/2013
-
வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும் 05/12/2013
-
இதுதாண்டா மாவோயிஸம்! :-(02/03/2014
April 29, 2014 at 23:52
Simply Admiring.
April 30, 2014 at 11:42
உள்ளம் குளிர்ந்தது ‘வினவை’ தோலுரித்த்ததற்கு
“ஏ தில் மாங்கே மோர்”
April 30, 2014 at 18:17
அய்யா, மன்னிக்கவும். இங்கு பி ஜில் தேங்கா தயிர் மட்டுமே கிடைக்கும்.
இன்னொன்று – நீங்கள் இந்த வினவு ஜந்துக்களை சுரணையுள்ளவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், பாவம்.
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்.
April 30, 2014 at 20:28
நக்கலைட்டுகள் என செல்லமாக வினவுக் குளுவான் களை போட்டுத்தாளித்துள்ளீர்கள்.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் கூட ஏதாவது சம்பந்தத்தைக் கண்டு பிடித்துவிடலாம் போல. ஆனால் வினவுக்குளுவான்கள் எப்படி கார்ல்மார்க்ஸுக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் சம்பந்தத்தை உண்டு பண்ணுகின்றனர் என்பது புரியாத விஷயமே.
\\ ஆனால் காசிக்கு, சூத்திர மற்றும் பஞ்சம இந்துக்களும், பழங்குடி மக்களும் போவதில்லை, கங்கை புனிதத்தை அறிந்ததில்லை என்பதால் காசி வாழ் புண்ணிய பூமியின் இந்துக்கள் யார் என்றால் பார்ப்பன-ஷத்திரிய-வைசிய வருண பிரிவுகள் மட்டும்தான். \\
இணையத்தில் வெறுப்பு முதல்வாதிகளின் வாந்திகளை கூகுள் சர்ச் மூலம் குடித்து அதைத் திரும்பத் திரும்ப வாந்தி எடுப்பதற்கு ஒரு விசிலடிச்சான் குஞ்சப்ப டுமீலர் படையே தமிழகத்தில் இருக்கிறது போலும்.
இந்தக் கைப்புள்ளகள் ஒரு தபாவாவது காசிக்குப் போய்ப் பார்த்தால் இப்படிப்பட்ட டொண்டணக்கா வெறுப்புக் கந்தறகோளாதிகளை இணையத்தில் வாந்தி எடுக்க மாட்டார்கள்.
May 1, 2014 at 11:46
சில மாதங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் நான் இட்ட பதிவு…… [ 27.12.2013 ]
இந்த தேசத்தை இணைக்கும் சக்தி எது?
அப்பாவுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று ராமேஸ்வரம் சென்றிருந்தேன்……… நல்ல கூட்டம்….. லாட்ஜ்கள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல்……. திருப்பூரிலிருந்தே முன்பதிவு செய்யும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை……சத்திரம் ஒன்றில் தங்க நேர்ந்தது…… திதி …மற்றும் தரிசனம் முடிந்த பின் சத்திரத்தில் ஓய்வு எடுத்தோம்…… ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் வட இந்தியர்கள்……வாழ் நாளில் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பது அவர்களின் லட்சியம்……பெரும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரைஇதுவே நோக்கம்…..
சத்திரத்தில் தங்கியிருந்தபோது , அங்கு வரும் யாத்ரீகர்களை கவனித்தேன்….. கிட்டத்தட்ட இந்தியாவின் [ வட கிழக்கு மாநிலங்களை தவிர்த்து ] அனைத்து மாநில மக்களும் வந்து செல்கின்றனர்…..லாக்கர் பதிவு செய்யும் இடத்தில் , நமது முழு விலாசத்தை பதிவு செய்ய வேண்டும்…..அந்த லெட்ஜரை பார்வையிட்டேன்….. ஒரு மாநிலம் பாக்கியில்லை……
அவர்களில் பீகார் மாநிலத்தில் இருந்து வயதான தாய் தந்தை இருவரையும் அழைத்துக்கொண்டு வந்துள்ள எஞ்சீனியர் ஒருவரை சந்தித்தேன்……. வழியில் எந்தெந்த இடங்களுக்கு சென்றீர்கள் என்று கேட்டேன்….அவர் பட்டியலிட்ட அனைத்து இடங்களும் கோயில்கள்…..[ பழனி , மதுரை உட்பட ] ஒரு சுற்றுலாத்தலம் கூட இல்லை….. மதுரா சென்றவர்கள் தாஜ் மஹாலை பார்க்கவில்லை……ஏனென்று கேட்டேன்……அவரது பெற்றோர்களுக்கு ஆர்வம் இல்லையாம்……அவர்களின் நோக்கம் எல்லாம் கோயில்களுக்கு செல்வது மட்டுமே…… அவர்களின் கிராமம் கங்கை நதியை ஒட்டி உள்ளது… மூன்று வேளையும் கங்கா ஸ்நானம் சாத்தியம்…. இருப்பினும் வாழ் நாளில் ஒருமுறையாவது ராமேஸ்வரம் வந்து செல்லாமல் தங்கள் வாழ்க்கை முழுமை அடையாது என்று எண்ணுகிறார்கள்….
அவரின் அம்மாவை கவனித்தேன்……கிட்டத்தட்ட என் அம்மா வயது தான் இருக்கும்…… என் அம்மாவுக்கு வாழ் நாளில் ஒரு முறையாவது காசி செல்லவேண்டும் என்பது கனவு…… [ ராமேஸ்வரத்திற்கு பல முறை சென்று வந்துள்ளார்] கங்கையில் குளிக்க வேண்டும் என்பது அவர் வாழ் நாள் லட்சியம்……
தரம் பால் அவர்களின் கட்டுரைகளை படித்துள்ளேன்……அவர் கூறிய உண்மைகளை நிதர்சனமாக உணர்ந்துகொள்ள முடிந்தது……இந்த தேசத்தை இணைக்கும் சக்தி எது என்பதை உணர முடிந்தது…… ஃபெடரலிசம் , காங்கிரஸ் கட்சி , இந்திய அரசியல் சட்டம் என்று கூறப்படுவதெல்லாம் வெறும் ஜல்லியடிகள்……இந்த தேசத்தை இணைப்பது ஹிந்து மதமே….. எளிய மனிதர்களின் [ ஹிந்துக்களின்] ஆன்மீக உணர்வும் , ஆன்ம சக்தியுமே இந்த தேசத்தை இணைக்கிறது……
இப்போது சொல்லுங்கள் ….இந்த தேசத்தை இணைக்கும் சக்தி எது?
—>>>>>
அய்யா, சான்றோன், தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. (ஆக ஃபேஸ்புக் ஜந்துவில் தப்பித்தவறி நல்ல சிந்தனைகளும் இடப்பெருகின்றன என்பது என்னைத் திடுக்கிட வைக்கிறது!)
ஆம். இந்த தேசத்தை இணைக்கும் சக்தியென்பது க்ரிக்கெட்டிலோ, திரைப்படவுலகிலோ இல்லையென்பது இன்னமும் ஆசுவாசம் அளிக்கிறது.
ஆனாலும் மூளையற்ற குளுவான்கள் உளறிக்கொண்டேதான் இருப்பார்கள்.
இது நம் தேசத்தின் கர்மம். வேறென்ன சொல்ல.
__ரா.