கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்…
May 13, 2014
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
— (திருக்குறள்(அறத்துப்பால்(வாய்மை)))
அதாகப்பட்டது: மனதாறத் தெரிந்தே, அண்டப்புளுகுணி மாங்கொட்டையாக இருப்பவர்களை அவர்களுடைய மனச்சாட்சியே சுட்டுவிடும் என்று திருக்குறள் நீதிபோதனையாகச் சொன்னாலும் – என்னைப் பொறுத்தவரை, எனக்குத் தெரியவந்த மாங்கொட்டைகளை, எனக்கு நேரமும் பொறுமையும் (=பொறுமையின்மை) இருந்தால் நானே சுட்டுவிடுவது வழக்கம்; ஏனெனில் பலருக்கு மனச்சாட்சியே இல்லை. இது ஒரு பிரத்தியட்ச உண்மை.
சரி.
ஒரு எழவையும் புரிந்துகொள்வதற்கு மூளையுமோ, கடும் உழைப்போ செய்யமுடியாமல், சும்மனாச்சிக்கும் ஓரிரு தளங்களைப் படித்தேன் என்று பேர் பண்ணிவிட்டு, கருத்துகளைக் காப்பியும் டீயும் செய்து உளறிக் கொட்டிக்கொண்டேயிருக்கிறார், மற்றபடி படு ஸ்மார்ட் ஆசாமியான, மேலும் மதிப்பிற்குரிய என் படுசெல்லங்களில் ஒருவருமான பூவண்ணன் அவர்கள்.
இவருக்கென்ன கேடு – தன்னை ஒரு இளைஞக்கருப்பனாராகவோ[1] அல்லது ஆம். நல்லக்கறுப்பனாராகவோ[2] வரித்துக் கொண்டு சுட்டிகளைச் சுட்டு, ஒரு சுய கருத்துமில்லாமல் வதந்திச் தொழிற்சாலையாக மாறுவதற்கு? ஏன் கயமைப் பொய்மைச் சகதிகளில் தேவைமெனக்கெட்டு இறங்கவேண்டும்? தொழில்-சமூக ரீதியில் ஒரு மதிக்கத்தக்க தகுதியுள்ள ஒரு நபர், ஏன் இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கீழிறங்கி எழுதவேண்டும்? எனக்குப் புரியவேமாட்டேனென்கின்றது – இந்தக் கந்தறகோளம். *ப்ச*
இன்று வந்திருந்த பின்னூட்டங்களில் ஒன்றின் மூலமாக, இந்த பூவண்ணன் அவர்கள் எழுதிய(!) கோத்ரா – ஒரு கேள்வி என்கிற பிரமிக்கத் தக்க புனைவினை நான் படிக்க நேர்ந்தது என் துர்பாக்கியம்தான். இதனை மனம் போன போக்கில் விக்கிபீடியா போன்ற அரைகுறைத்தனங்களைப் படித்துவிட்டு, ஸ்ரீகுமார்+ஸஞ்சய்பட் போன்ற அற்ப ஊழல்வாத அரசதிகாரிகளை வழியாகக் கொண்டு, கயமைக் கற்பனையைக் கலந்து மானாவாரியாக கற்களை விட்டெறிந்திருக்கிறார், இந்த மனிதர்.
கூடவே – தமிழ்பேப்பர்.நெட் தளத்தின் தரத்தைக் கீழே போட்டு மிதித்து – அதன் வாசகர்களை முட்டாட்களாக ஆக்குகிறார் – ஒருவிதமான ஆதாரமும் இல்லாமல் புலம்புகிறார்; இவருக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லையா அல்லது பாவம் முடியவில்லையா என்று எனக்குப் புரியவில்லை – அவருக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். இதற்கு ‘தீபக்’ எனும் குளுவான் வேறு ஒரு மாரடைக்கவைக்கும் பின்னூட்டமிட்டிருக்கிறது: “deepak #1 April 23rd, 2014 at 9:17 am: மிக சரியான பதிவு , இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்கலாம்.” அய்யன்மீர் அவர்களே, வாழ்க, வளர்க. விளக்குவைக்கும் நேரத்தில் விளக்கமான விளக்கமாறுகளைப் படித்து மாறுகண் மாறுகொட்டை மாறுமாங்கொட்டை வாங்கப்பட்டுக் கடைந்தேறுக. பொலிக. வேறென்ன சொல்ல. :-(
… இப்படி ஆதாரமற்று உளறுவதையெல்லாம் ஒரு மனிதரோ அல்லது இணையத்தளமோ பிரசூரிக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாகவேயிருக்கிறது. ஒரு மனிதராக இருந்தால் சரி, பாவம் ஏதோ மனச் சிதைவு எனச் சூள் கொட்டிக் கொண்டு விட்டுவிடலாம் (அதாவது, நான் எழுதுவது போன்றவைகளை!); ஆனால், ஒரு ‘ஆசிரியர்’ என்கிற பதவியைக் கொண்ட ஒருவரை உடைய ஒரு தளம் இப்படியெல்லாம் இருக்கலாமா?
விட்டேற்றித்தனங்களை, சராசரித்தனங்களைக் கூட விட்டுவிடலாம். ஆனால் – அற்பக் கயமைகளையும், மகாமகோ புனைசுருட்டுகளையும் (மானுடமேன்மைக்காகவும் புர்ச்சிக்காகவும் மட்டுமே!) பொறுத்துக் கொண்டு கமுக்கமாகச் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட என்ன இது ‘வினவு’ தளமா என்ன? அல்லது மேதகு தமிழ்பேப்பர்.நெட் தள ஆசிரியனாரவர்கள் — ஜனநாயகம், கருத்துரிமை, பன்முக நோக்குகளை அனுமதித்தல், உரையாடல்களைச் செழுமைப்படுத்துதல், கறாரான, வாதப்-பிரதிவாத மேன்மை, அல்லது ஒரு கொசுறுப் பப்பரப்பா என்கிற பெயரில் கழுதைத்தனமான கட்டுரைகளையும் போட்டேயாகவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறாரா? வருத்தமாக இருக்கிறது.
கோரிக்கை #1: முதலில் இந்தப் பூவண்ணக் கட்டுரையைப் படியுங்கள். (+ அந்த படுபீதியளிக்கும் பின்னூட்டத்தையும்தான்! எதற்கும், முதலில் ஆம்புலன்ஸுக்குச் சொல்லிவிடுவது நலம்; நானும் இப்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவசாலையிலிருந்துதான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன், மன்னிக்கவும்)
கோரிக்கை #2: இணையத்தில், அடிப்படை உண்மைகள்தொடர்ந்து நாறடிக்கப் படுவதை உணர்ந்து சோகமுறுங்கள்.
கோரிக்கை #3: முடிந்தால், மேலே படியுங்கள். :-(
-0-0-0-0-0-0-0-0-0-
- கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் மீதான இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதலின் காரணமாகவே குஜராத் கலவரம் மூண்டது என்பது பாஜகவின் வாதம். ஆனால் உண்மை என்னவென்றால் – டிக்கெட் பரிசோதகர் நடந்து செல்லக்கூட வழியில்லாத நிலைமையில் ரயில் பெட்டி இருந்ததினால் – வலியோர் தப்பிக்க எளியோர் மாட்டிக்கொண்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களாக இருக்க முக்கியக் காரணம் இதுதான்.
- குஜராத் கலவரம் திட்டமிட்டு அன்றைய குஜராத் அரசால் (=மோதி) உருவாக்கப்பட்டது. ஏனெனில் பாருங்கள், கொலைகளாக இருந்தால்கூட கலவரம் நிகழும் வாய்ப்புகள் இருந்தால் கொலையா, விபத்தா என்பதைப் பற்றிய செய்திகள் அரசு விசாரணை முடிவுக்கு வரும் வரை வெளியில் வராது. ஆனால் அனைத்து விஷயங்களும் வெளிவந்து விட்டன!
- எந்தப் படுகொலை நிகழ்வுகளிலும் இறந்த அன்றே உடல்களை வைத்து வெறியூட்டும் வாய்ப்பு யாருக்கும் கொடுக்கப் படவில்லை (ஒரு பழைய விக்கிபீடிய கொல்கொத்தா விவகாரத்தைத் தவிர); ஆகவே இதில் ஒரு சதி.
- கொலை என்று பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில், அடையாளம் காணப்படாத உடல்களைக் குற்றம் நடந்த அதே நாளில் விஹெச்பி என்ற மதவாத இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதை ஏற்கமுடியாது; இது ஒரு சதி.
- கோத்ராவில் தீயில் கருகி இறந்த 59 பேரின் உடல்களும் அதே நாளில் விஹெச்பி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதே நாள் உடல்கள் அகமதாபாத் கொண்டுவரப்பட்டு அன்று இரவே விஹெச்பி தலைவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டன. அதே போல்,அடையாளம் தெரியாத உடல்களும்கூட. இது சரியா?
- அடையாளத்தை அறிய புலனாய்வு நிறுவனங்களுக்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவையனைத்தும் முயற்சிக்கப்பட்ட பிறகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உடல்கள் என்று அறிவிக்கப்பட்டு அவை தகனம் செய்யப்படும். கொலை குற்றமாக இருந்தால் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் இன்னும் அதிகம். ஏன் செய்யவில்லை?
- குஜராத்தில் இவை எதுவுமே கடைபிடிக்கப்படவில்லை. எனில், கலவரத்தைத் தூண்டுவதற்காகவே உடல்கள் விஹெச்பியிடம் ஒப்படைக்கப்பட்டன என்பதுதான் உண்மை.
ஆக, சாராம்சத்தின் (என்னுடைய) சாராம்சம்: குஜராத் அரசு வேண்டுமென்றே, சதிகாரத்தனமாக ஒரு ரயில்வண்டியில் நடந்த தீவிபத்தை அரசியலாக்கி, அரசியல் ஆதாயத்தை அடைய, முஸ்லீம்-ஹிந்து கலவரங்களைத் தூண்டிவிட்டு முஸ்லீம்களைக் கொலை செய்ய முயன்றிருக்கிறது. ஆமென்.
சரி – அடுத்த பதிவில் — ஒவ்வொன்றாக, பூவண்ணக் கைவண்ணத்தின் கைவல்யநிலை (இது பாவம், அவருடையது மட்டுமல்ல – பலரும் இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்!) பற்றிக் கண்டறிவோம்.
மேலும், இன்றிரவும் மேலதிகமாகச் சிலருடன் பேசி, என் கருத்துகளைச் செம்மைப் படுத்திக்கொண்டு நாளை அல்லது நாளை மறு நாள் விரிவாக இந்த ஏழு + சாராம்ச விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறேன்.
ஹ்ம்ம்ம்… சில சமயங்களில் இம்மாதிரி மண்வெட்டிதாச வேலை அவசியமா என்று எனக்கும் தோன்றுகிறதுதான். ஏன் சரி நிகர் சமானமானவர்களுடன் (அவர்கள் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களானாலும்) உரையாடாமல், கொசுக்களோடு ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கவேண்டுமென்று. குஜராத் பற்றி எனக்கு முடிந்தவரை எழுதியாகிவிட்டதென்று. பலவேலைகள் காத்துக் கொண்டிருக்கும்போது அக்கப்போர்களில் ஈடுபடுவது சரியா என்று. இதில் செலவழிக்கும் நேரத்தை நான்கு குழந்தைகள் மேல் செலவழிப்பது மேன்மை தரக் கூடியதல்லவா என்று.
… ஹ்ம்ம்… இருந்தாலும் செய்யப் படவேண்டிய, என்னால் செய்யக்கூடிய காரியங்களை மற்றவர்கள் செய்துகொள்ளட்டும் என்று என்னால் விட்டுவிட முடியாது.
உண்மைதான். பெருச்சாளிகளுக்கு மணி கட்டுவதென்பது பலருக்கு ஒவ்வாத விஷயம். பொதுவாக நம்முடைய தமிழர்களின் மனப்பான்மை என்னவென்றால் – ‘சரி, அவன் எதையோ சொல்லிக்கொண்டு போகிறான், உனக்கென்ன’ அல்லது ‘போகட்டும் விடு, அவன் செய்வதை அவன் செய்யட்டும், நாம் செய்வதை நாம் செய்வோம்’ அல்லது ‘பாதையோடு போகிற நரி இடப்பக்கம் போனாலென்ன, வலப்பக்கம் போனாலென்ன, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ அல்லது ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ இன்னபிறதான்.
ஆனால், நான் ஒரு பொதுவான, சராசரியான, முதுகெலும்பற்ற ‘நித்தம் சாகும்’ தமிழனல்லன். மன்னிக்கவும்.
சரி. அடுத்த பதிவில் பார்க்கலாம்…
May 14, 2014 at 09:05
மிகவும் பாரபட்சமான முறையில்,சிறிதும் மனசாட்சி இல்லாமல் இதை போன்று கயமை வதந்திகளை பரப்பி கொண்டு இருக்கும் இவர் ராணுவத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தவர் என்று தெரிந்த போது மிகுந்த வருத்தம்தான் மேலிடுகிறது.
May 14, 2014 at 14:32
உயர்திரு. ராமசாமி அவர்களே தாங்கள் சுட்டியுள்ள கட்டுரை திறக்கமாட்டேன் என்கிறது. தயவு செய்து உதவவும்.
நன்றி. வணக்கம்.
அர.வெங்கடாசலம்
May 15, 2014 at 08:43
திரு.வெங்கடாசலம் அவர்களுக்கு,திரு.ரெங்கன் அவர்கள் கொடுத்த பூவண்ணனாரின் அந்த பேத்தல் கட்டுரையின் நேரடி சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
http://www.tamilpaper.net/?p=8760
May 15, 2014 at 09:49
தங்களின் கட்டுரை எழுதும் முடிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
வழக்கமான ஜல்லியடிப்புகலான சங்க பர்ரிவாரத்தை தவிர மற்ற அனைவர் சொல்வதும் பொய்,டைட்லெர் வேறு மோடி வேறு,குஜராத் ஒளிர்வதை நேரில் சென்று பாருங்கள் போன்று இல்லாமல் தெளிவாக தவறுகளை,பொய்களை,அற்பத்தனங்களை சுட்டி காட்டினால் நன்றி உடையவனாவேன்
தீயில் கருகிய பெட்டியில் இருந்தவர்கள் எவ்வளவு பேர்?
தப்பித்தவர்கள் எவ்வளவு,மாட்டி கொண்டவர்கள் எவ்வளவு
கோத்ரா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் எவ்வளவு பேர் ?
ஒரு போஸ்ட் மோர்டேம் செய்ய எவ்வளவு நேரமாகும்
போஸ்ட் மோர்டேம் செய்ய மருத்துவரிடம் கடிதத்தை தரும் உரிமை @கடமை யாருக்கு உண்டு?
போஸ்ட் மோர்டேம் செய்ய இந்திய அளவில் ,குஜராத்தில் இருந்த சட்டங்கள் பின்பற்றபட்டனவா
போஸ்ட் மோர்டேம் செய்யப்பட்ட உடல்களை பெற்று கொள்ளும் உரிமை யாருக்கு உண்டு?மருத்துவர்கள் யாருடைய அனுமதி கிடைத்த பிறகு உடல்களை ஒப்படைக்கலாம்?
கொலை குற்றம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உடல்கள் நாட்டின் வேறு எந்த பகுதியிலாவது சாதி,மத சங்கங்களிடம் ஒப்படைக்க பட்டிருக்கிறதா ?
அடையாளம் தெரியாத உடல்கள் எத்தனை நாள் கழித்து புதைக்க/அல்லது தகனம் செய்ய முடிவு எடுக்கப்படும்
போஸ்ட் மோர்டேம் எனபது என் படிப்பில்/பணியில் ஒரு அங்கம்.ராணுவ வீரராக இருந்தாலும் ராணுவ மருத்துவமனையில் இறக்காமல் பணி இடத்தில (போர் மற்றும் தீவிராவதம் பாதித்த பகுதிகள் என்று அரசு முடிவு எடுத்த இடங்களில் நேரை துப்பாக்கி சூட்டில் நடைபெறும் இறப்புகளை தவிர்த்து)இறந்தால் அவர்களின் போஸ்ட் மோர்டேம் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தான் நடத்தப்பட வேண்டும் எனபது விதி.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் போஸ்ட் மோர்டேம் செய்ய உடல்களை அனுப்பும் பணி,உடல்களை ஏற்று கொள்ளும் பணி,போஸ்ட் மோர்டேம் நடக்கும் போது அதனை உடனிருந்து பார்க்கும் பணி புரிந்தவன் என்பதை பணிவுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன்.
May 15, 2014 at 11:38
குஜராத் கலவரம் பற்றி நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒத்துக் கொண்டால் – ஜனங்கள் மிகவும் மகிழ்ந்து அரசு மிகவும் நன்றாக இதைக் கை ஆண்டது – போஸ்ட் மார்டம் பற்றிய நீங்கள் சொல்லுகின்ற அதனை விதிகளையும் பின் பற்றி இருந்தால் குஜராத் மக்கள் மிகவும் சந்தோஷமாக நாம் இனிமேல் இதைப் பத்தி ஒன்றும் செய்ய வேண்டாம் – அடுத்த ரயில் எரிப்பு நடந்தாலும் போஸ்ட் மார்டம் விதிகள் மீறாமல் இருந்தால் சரி – என்று அமைதியாகப் போய் விட்டிருப்பார்கள் !! இது நீங்கள் சொல்லாமல் சொல்லு கருத்து.
அய்யா நீங்கள் ராணுவத்தில் இருந்தவர் என்கிறீர்கள். அதனால் LeT போன்றவர்களின் நிஜ முகத்தை கண்டிப்பாகப் பார்த்தவராய் இருந்திருப்பீர்கள். ஆனால் ஹிந்து மதத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் அதீத வெறுப்பு உங்கள் கண்களை மறைக்கிறது. இரு பக்கத்திலும் குறைகள் உண்டு என்று நீங்கள் எப்போது உணர்வீர்களோ அப்போது தான் உங்களுடன் பேச இயலும். தவிர இஸ்லாமிய தீவிரவாதம் இப்போது உலக மயமாக்கப் பட்டு விட்டது. போகோ ஹராம் தற்போது செய்து கொண்டு அராஜகம் ஒன்று போதும் உதரணத்துக்கு.
May 15, 2014 at 13:29
நடந்தது தீ விபத்தா,கர்செவக்குகளுக்கு பாடம் புகட்ட அவர்களை கொலை செய்ய நடத்தப்பட்ட திட்டமிட்ட ரயில் பெட்டி எரிப்பா,அல்லது கையில் கிடைத்ததை எடுத்து வீசி எரிந்து,எளிதில் பற்றி கொள்ளும் பொருட்களை எரிந்ததால் ஏற்பட்ட தீயா என்பதை பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை.
திட்டமிட்ட படுகொலைகளாக இருந்து இருந்தால் யாரையும் தப்பிக்க விடாமல் தடுக்க பெரும் முயற்சி எடுத்திருப்பார்கள்.
கோச்சில் இருந்த பெரும்பான்மையானோர் தப்பித்தது ஞாயமானவர்களை யோசிக்க வைக்கும்.ஆனால் சங்கத்திற்கும் நியாய உணர்விற்கும் தொடர்பே கிடையாதே
7 2 பேர் மட்டும் கோச்சில் இருந்து தீ பிடித்து இருந்தாலும் வயதானவர்களும்,குழந்தைகளும்,பெண்களும் தான் தீக்கு இரையாகி இருப்பார்கள்.வதந்திகளின் காரணமாக,தீ விபத்துக்களின் காரணமாக பலருக்கு மரணம் ஏற்பட்ட எந்த நிகழ்விலும் இது தான் நடந்திருக்கிறது.
இங்கு நடந்த 59 உயிர் இழப்பின் காரணமாக மாநிலத்தில் கலவரம் நேராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை எண்ணி பார்த்தல் குஜராத் அரசின் வன்மம் தெளிவாக விளங்கும் .
நியாயமாக சட்டத்தின்படி நடக்க வேண்டிய வழிகளை /விதிமுறைகளை கூட காற்றில் பறக்க விட்டு விட்டு கலவரத்திற்கு தூபம் போட்டதே அரசு தான்.
ரயிலில் 2000க்கும் மேற்பட்ட கர்செவக்குகள் இருந்ததாக அனைத்து கமிசங்களும்,சாட்சியங்களும் தெரிவிக்கின்றன.அங்கு நேருக்கு நேர் நின்று போராடி இருந்தால் வீரம்.அங்கு கொளுத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி பல நூறு கிலோமீட்டர் தொலைவில் அப்பாவிகளை மிருகத்தனமாக கொலை செய்ய சங்க பரிவாரங்களாலும் போகோ ஹராம்களாலும் தான் முடியும்.
போகோ ஹராம் ,எல் ஈ டி செய்யும் தவறுகளுக்கு இங்கு இஸ்லாமியர்களை துன்புறுத்துவது சரி எனபது என்ன வாதம் .
May 15, 2014 at 17:20
//போகோ ஹராம் ,எல் ஈ டி செய்யும் தவறுகளுக்கு இங்கு இஸ்லாமியர்களை துன்புறுத்துவது சரி எனபது என்ன வாதம் .//
இதை சென்னை குண்டு வெடிப்பில் இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் சொல்லுங்களேன் !
எத்தனை நாட்களுக்குத்தான் இந்தப் பீலாவை விட்டுகொண்டிருக்கப் போகின்றீர்கள் பூவண்ணன் ?இங்கு இருக்கும் சாதாரணமான இஸ்லாமியர்களுடன் யாருக்கும் பிணக்கு இல்லை. ஆனால் அதன் தலைவர்களுடன் உடன் பாடு இல்லை. ஒரு இமாம் இஸ்லாமியர்களை காங்கிரசுக்கு வோட்டு போடுங்கள் என்று சொல்கிறார். அது அவர் உரிமை – இதையே காஞ்சி சங்கரச்சாரியர் இல கணேசனுக்கு போடுங்கள் என்று சொல்லி இருந்தால் என்ன கதி ஆகி இருக்கும் ?
May 15, 2014 at 17:29
இன்று இந்த லிங்கில் உள்ள செய்தி படித்து அதிர்ந்து போனேன். பூவண்ணன் கர்ப்பிணி கொலை பற்றி பேசுகிறார். ஆனால் மற்ற நாடுகளில் இஸ்லாம் பேரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி அவர்க்கு என்ன கவலை.!!
http://www.bbc.co.uk/tamil/global/2014/05/140515_sudanhang.shtml
மதம் மாறிய பெண்ணுக்கு சுடானில் மரணதண்டனை
வியாழன், 15 மே 2014 (17:41 IST)
சுடானில் இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று, ”மதத்தை கைவிடல்” குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது.
நீ திரும்பி இஸ்லாத்துக்கு வருவதற்கு உனக்கு மூன்று நாள் அவகாசம் தந்தோம், ஆனால், நீ மாறவில்லை, ஆகவே உன்னை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருக்கும் ”தான் விரும்பும் மதத்தை தழுவிக்கொள்ளும் உரிமையை” மதிக்குமாறு மனித உரிமை அமைப்புக்களும், மேலை நாட்டுத் தூதரகங்களும் சுடானிய அரசாங்கத்தை கோரியுள்ளன.
அந்தப் பெண், குழந்தையைப் பிரசவித்து இருவருடங்கள் ஆகும் வரை, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் சுடானில், பெரும்பான்மையானோர் இஸ்லாமியராவர்.
திருமணத்துக்கு புறம்பான உறவுக்காக அந்தப் பெண்ணுக்கு அந்த நீதிமன்றம் 100 கசையடிகளையும் தண்டனையாக வழங்கியுள்ளது.
May 15, 2014 at 19:53
திரு. பூவண்ணன் அவர்களுடன் விவாதம் செய்தால் கிடைக்கும் பதில்களும் , இணைப்பில் உள்ள இந்த காமெடியில் நடிகர் வடிவேலு செய்வதும் ஒன்றுதான்…..
திரு. ராமசாமி அவர்கள் என்னை மன்னிப்பாராக……
May 15, 2014 at 20:17
நன்றி – நான் வடிவேலு காமெடி என்பதை இன்றுதான் பார்க்கிறேன். :-)
ஆனால் பூவண்ணன் அவர்களுடன் காமெடியேயில்லை. எனக்கு வாய்த்தது ட்ரேஜடிதான். :-)
May 15, 2014 at 20:18
அன்பின் ஸ்ரீ பூவண்ணன்,
புளுகு மூட்டை வ்யாசம் மற்றும் புனைவு இத்யாதிகள் (விக்ஞான வ்யாசங்கள் தவிர்த்து) படைக்கும் எனது செல்ல ப்ரதித்வந்தி விக்ஞானியான ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களது சைலியில் சொல்ல வேண்டுமானால்……………..
எப்போது பப்பரப்பா டொண்டணக்கா ஊடகாதிகள் சொல்வதை விடுத்து நேரடியாக விசாரணை கமிஷன் ரிபோர்ட் (பல்லாயிரம் பக்கங்கள் உடையவை தான்) போன்றவற்றை (First Hand Detailed Information) ஆதாரமாக வைத்து விஷயங்களை நேர்மையுடனும் நாணயத்துடனும் அணுக முயல்வீர்கள்?
உங்களுடைய கந்தற கோள வ்யாசம் முழுதும் உரலாயுதத்தின் பாற்பட்டு …………… பப்பரப்பா ஊடகாதிகளின் டர் புர் பொய்க்கதைகளை மட்டிலும் பாற்பட்டு எழுதப்பட்ட உங்களது மற்றொரு செல்ல காபி பேஸ்ட் முயற்சி மட்டும்.
உங்களது straight from the heart – உரலாயுதக் கலப்படம் இல்லாத வ்யாசங்களில் – உத்தரங்களில் —- லவலேசமாவது originality இருப்பதால் அதை பலமுறை ச்லாகிக்கவும் செய்திருக்கிறேன். பலதும் தங்களுக்கு நினைவிலும் இருக்கும்.
காபி பேஸ்ட் வாந்திகள் ஒதுக்கப்பட்டு குப்பைக்கூடையில் போடத்தக்கவை. அதில் ஒன்று இந்த கோத்ரா வ்யாசம். காரமான ஆனால் நிர்தாக்ஷண்யமான விமர்சனம்.
\\ ஆனால் சங்கத்திற்கும் நியாய உணர்விற்கும் தொடர்பே கிடையாதே \\
ஸ்ரீமான் பூவண்ணன் அவர்களுக்கும் ந்யாய உணர்விற்கும் தொடர்பே கிடையாது என்பதை விதியாகவும்………. விதிவிலக்காக ந்யாய உணர்வு தென்படும்படி எழுதுவது.
ஹிந்து, முஸல்மான் மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்கள் அனைவருக்கும் சங்க பரிவார இயக்கங்கள் மத வித்யாசம் பாராது ரத்த தானம் செய்வது, கல்விச் சேவை அளிப்பது (தேசிய கல்விக்கழகம் – வித்யா பாரதி) இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போது சேவை செய்வது ………… இதெல்லாம் சங்கத்துக்கும் ந்யாய உணர்விற்கும் அறவே இல்லாத தொடர்பு என்று பூவண்ணன் சார் கருதுவதாகக் கொள்ளலாமா?
சங்கம் மத வித்யாசம் பாராது பொதுப்பணிகளில் ஈடுபடும் போது ………..செய்யப்படும் பணிகளில் நொட்டை சொல்வதைக் கூட சகித்துக் கொள்ள முடியும்…….குறைந்த பக்ஷம் இப்படிப் பொதுப்பணியில் ஈடுபடுவதையாவது சொல்ல முயற்சிக்கிறார்களே என்பதை மனதில் வைத்து………..ஆனால் ந்யாய உணர்வற்ற சங்கம் என்று ஜல்லியடிப்பது………….வெறுப்பு முதல்வாதத்தின் பாற்பட்டு மட்டிலும்.
When will my dear Poovannan sir’s views would become balanced?
May 15, 2014 at 20:59
He won’t, dear Krishanakumar. And, that is not his problem.
“… like all systematic reasoners, he would move both heaven and earth, and twist and torture everything in nature to support his hypothesis.” (from Tristram Shandy)
But I still love him for his tenacity of purpose. I wish I had a fraction of his inexplicable positive attitude towards waging a tireless war against dire odds! Since I don’t have it. I may throw up my hands in exasperation and join his club. Because I can’t really beat him… 8-)
May 15, 2014 at 20:54
அன்பின் ராம்,
உங்கள் ப்ரத்யேக கவனத்திற்கு…………….
இந்த தளத்தில் ஸ்ரீ பூவண்ணன் எழுதியுள்ள உத்தரத்தில்……….
\\\\ poovannan73 Says:
15/05/2014 at 09:49
தங்களின் கட்டுரை எழுதும் முடிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது \\\\
என்று எழுதி பல பீதியளிக்கும் கேழ்விகளை முன் வைத்திருக்கிறார்.
தமிழ்ப் பேப்பர் தளத்தில் இதே 15ம் திகதி பூவண்ணன் சாரின் உத்தரம் :-
\\ பூவண்ணன்
#8
May 15th, 2014 at 11:00 am
அன்பு liar
தீயில் கருகிய பெட்டியில் இருந்தவர்கள் எவ்வளவு பேர்? \\
என்று எழுத ஆரம்பித்து (ஒத்திசைவு தளத்தில் 9 மணிக்கூறுக்கு எழுதப்பட்ட) அதே பீதியளிக்கும் கேழ்விகளை எழுப்பியுள்ளார்.
21-04-2014ம் திகதி பூவண்ணன் சார் எழுதிய் கந்தறகோள வ்யாசத்தை ச்லாகித்தது 23-04-2014 அன்று உத்தரமெழுதிய ஒரே குளுவானாகிய தீபக்கனார்.
அதுக்கப்புறம் ஒரு நாய் நரி கூட சீந்தாத இந்த கந்தறகோள வ்யாசத்துக்கு மேலும் பின் தொடரும் உத்தராதிகள் தீபக்கனார் உத்தரத்தையும் சேர்த்து 8.
அஃதாகப்பட்டது எல்லாம் பூவண்ணன் சார் அவர்கள் தனது செல்ல உரலாயுதங்களால் கேழ்வியும் நானே பதிலும் நானே …..வ்யாசம் எழுதுவதும் நானே அதற்கு விமர்சனமும் நானே என்ற ரீதியில் control+C control+V என விளாசித்தள்ளியது………..
ஆனால் # 8 ல் பூவண்ணன் சார் அன்பு liar என தமிழ் ஹிந்து தளத்தில் address செய்வது யாரை என்று கண்டு பிடிப்பவர்கள் நிச்சயம் விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்?
தமிழ்ப்பேப்பரில் கேழ்வியும் பூவண்ணனே பதிலும் பூவண்ணனே என்ற படிக்கு விளாசித்தள்ளிய படிக்கு……. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறது என்ற ரீதியில் ……….. தன்னையே படு செல்லமாக ஆதுரம் பொங்க ………. அன்பு liar என்று விளித்துள்ளார் என்று கொள்ளலாமா?
அல்லது………………..pin (அதாவது குத்தல் குடைச்சல்) யோஜனையின் பாற்பட்டு
ராம் அவர்களையே பூவண்ணன் சார் செல்லமாக liar என address செய்திருக்கிறார் என்றால் ……………
வியப்பாக இல்லை??????????????????
அடுத்து ராமால் சொல்லப்படும் விஷயம் என்ன என்று கூடத் தெரியாது………. ஆனால்liar என்று advance ஆக சொல்வதற்கும் ந்யாயத்திற்கும் தொடர்பு என்று ஏதும் உண்டு?
எல்லாம் பூவண்ணன் சார் காலை மாலை பூசை போடும் த்ராவிட (ஆ)சாமியான இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கே வெளிச்சம்.
May 16, 2014 at 01:47
ஐயா liar என்பவர் இரண்டாவது பின்னூட்டம் எழுதி இருந்தார்.
நீங்கள் சொல்வதை நிரூபிக்க முடியுமா?உண்மையில் எறிந்த பெட்டியில் 200க்கு மேற்பட்டோர் இருந்தனரா,இறந்தவர்களின் உடல்கள் ஒரு சில மணி நேரத்திற்குள் ,அடையாளம் கூட தெரிந்து கொள்ளபடாமல் வி எச் பி தலைவர்களிடம் கொடுக்கப்பட்டதா .அப்படி ஆதாரம் தரவில்லை என்றால் இது ஒரு நல்ல கட்டு கதை என்று
அதற்க்கு எழுதிய பதில் அது.திடீரென்று அந்த இரண்டாம் பின்னூட்டம் மறைந்து விட்டது.தமிழ் பேப்பர் ஆசிரியர் அதை மறுபடியும் பின்நூட்டமகா வெளியிட்டால் ஏன் மீது விழுந்த பழி தீரும்
ஒப்பாரும் மிக்காரும் இல்லா ராமசாமி ஐயாவை (ஆயிரம் இருந்தாலும் பெரியாரின் பெயரை கொண்டவர் ஆயிற்றே),நோபெல் பரிசு வழங்கப்படும் ஐந்து துறைகளிலும்(பொருளாதாரமும் சேர்த்து சில ஆண்டுகளாக ஆறு ஆகி விட்டது )ஒரே நேரத்தில் நோபெல் வாங்கும் தகுதி கொண்ட அவரை எப்படி என்னால் liar என்று விளிக்க முடியும்.(ஆனால் அவர் புகழும் மோடிக்கு அந்த பெயர் மிக பொருத்தமாக பொருந்தும்)
—–>>>> அய்யா பூவண்ணன், நீங்கள் என்னைத் தைரியமாக பொய்யர் என விளிக்கலாம். ஒரு பிரச்சினையுமில்லை.
இப்படிக்கு, உங்கள் கிண்டல் பெற்ற:
ஈ(து) வே(று) ராமசாமிப் பெரியார் என அழைக்கப் படக் கூடிய சிறியார், ஆனால் சிரிப்பார்.
உங்களுடைய நகைச்சுவையுணர்ச்சியென்பது பரிணாம வளர்ச்சியின் உச்சம்தான். :-)
May 16, 2014 at 21:18
\\ அதற்க்கு எழுதிய பதில் அது.திடீரென்று அந்த இரண்டாம் பின்னூட்டம் மறைந்து விட்டது.தமிழ் பேப்பர் ஆசிரியர் அதை மறுபடியும் பின்நூட்டமகா வெளியிட்டால் ஏன் மீது விழுந்த பழி தீரும் \\
Oh!!!!!!!! comon!!!!!!!!
எனதன்பார்ந்த ஸ்ரீ பூவண்ணன்,
Your explanation is more than sufficient to me sir.
I had to write that comment since I could not find the comment of anybody in the name of liar. Thats not to score browny points, sir. If my comments have offended you, I am really sorry for that.
Eventhough, I differ from many of your views, you would understand that there have been exceptional agreements too between our views, sir.
உரலாயுதம் சம்பந்தமில்லாத உங்கள் ஒரிஜினல் கருத்துக்களை எப்போதும் நான் கூர்ந்து வாசித்தே வருகிறேன்.
மொழி சம்பந்தமான உங்களது திண்ணை தளத்தில் பகிரப்பட்ட வ்யாசம் நான் வெகுவாக ரசித்து ஏற்ற ஒன்று.
உங்களது கேழ்விகளில் உள்ள ந்யாயத்தை நான் கேழ்விக்கு உட்படுத்தவில்லை. உண்மையை லவலேசமும் சரிபார்க்க முயலவும் செய்யாது வெறுப்புமுதல்வாதத்தின் பட்டு காபி பேஸ்ட் செய்வதன் பாற்பட்டு ஒரு வ்யாசத்தை பொது தளத்தில் சமர்ப்பிப்பது எனக்கு உடன்பாடில்லை.
அன்புடன்
க்ருஷ்ணகுமார்