திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles

April 22, 2023

அதாவது அனுதினமும் அவ்வாசாமி உழைத்து ஓடாய்த்தேய்ந்து, விழுந்துவிழுந்து செய்து கொள்ளும் ‘கலெக்சன்’ எவ்வளவு?

(கவனிக்கவும்: நான் அட்ச்சிவுடவில்லை; சுமார் 40 வருடங்களாக, ஓரளவு உன்னிப்பாகவே நான் திராவிட அயோக்கியத்தனங்களை கவனித்து வருகிறேன். 2011 முதல் எனக்கு நேரடியாகத் தெரிந்தவற்றைப் பற்றி, முடிந்தபோதெல்லாம் எழுதியும் வருகிறேன்; கீழே கொடுக்கப்படும் எண்ணிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய கணக்கும், சிலபல ‘உடன் பிறப்பு’களின் வாக்குமூலங்களும் இருக்கின்றன)

-0-0-0-0-

அனுதினமும் (முந்தைய ஆட்சிகளிலும் சரி, இப்போதும் சரி), அதாவது ஒவ்வொரு நாளும், மணற்கொள்ளை மாஃபியாவிகளிடம் இருந்து மட்டும் வரும் குறைந்தபட்ச கமிஷன்: ரூ 10 கோடி.

(இந்த மணற்கொள்ளைக் கப்பமானது தற்போது 20 கோடி ஆகிவிட்டது, நீ இன்னமும் ~2010 கணக்கான 10 கோடி ரேட்கார்ட் அளவையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாயே எனவொரு நண்பர் கோபப் பட்டார் – ஆனாலும் நான் பத்து கோடியைத் தான் கருத்தில் கொண்டிருக்கிறேன)

ஒரு மாதத்துக்கு ரூ 300 கோடி – வருடத்துக்கு ரூ 3650 கோடி திருட்டுப் பணம்.

இதற்கு,  இசுடாலிருக்கு ‘திட்டங்கள்’ குறித்து அறிவுரை தரும் அன்பர் ஜெயரஞ்சன் அவர்களே ஏகோபித்த ஆமோதிப்பை ஏகமனதாகவும் எழுத்துபூர்வமாகவும் தெரிவித்துள்ளார் என்பதைக் கவனிக்கவும்.

விவரங்களுக்கு ‘த வைல்ட் ஈஸ்ட்‘ புத்தகத்தைப் படிக்கவும். (முழு புத்தகத்தையும் சட்டபூர்வமாகவே தாராளமாக, இலவசமாக தரவிரக்கிக் கொள்ளலாம், சரியா?)

அதில் விலாவாரியாக மணற்கொள்ளை பற்றி எழுதியிருக்கிறார், மஹானுபாவர் ஜெயரஞ்சன்.

இதைப் பற்றி நான் எழுதிய பதிவு ‘அழிக்கப் பட்டுவிட்டது’ – ஆனால் அதன் பிரதி ஆர்கைவ்.ஆர்க் தளத்தில் இருந்து தரவிரக்கப் பட்டு, பிடிஎஃப் கோப்பாக.

இந்த விஷயத்திற்காக யாரையாவது பலிகடாவாக்க தமிழ் நாட்டின் காஏவல்துறை கைது செய்ய முற்பட வேண்டுமென்றால் – அவர் ஜனரஞ்சக ஜெயரஞ்சன் தான்.

வாழ்க நீ எம்மான்.

-0-0-0-0-

பின்னர் – நிலக்கரி (40), க்ரானைட் (3), சொத்துப் பதிவர் அலுவலகங்கள் (20), போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் (5), அரசு வேலை மாற்றங்கள், பணியிட நிரப்பல்கள், பல்கலைக்கழகப் பதவி வழங்கல்கள் இன்னபிற (20), கான்ட்ரேக்ட் கமிஷன்கள் (20), டாஸ்மாக் (3) +++ +++

அதாவது: குறைந்த பட்சம், நேரடியாக: ரூ 120+ கோடி – ஒவ்வொரு நாளுக்கும்… அக்மார்க் கொள்ளைப்பணம். துளிக்கூடக் கணக்கில் வராத விஷயம்.

அதுவும் தலைமைப் பதவியாளருக்கு மட்டும்…

(இத்தனைக்கும் பலப்பல ‘சில்லறை’ விஷயங்களை, பிற ‘நன்கொடை’ ஏற்பாடுகளை, குறுநில மன்னர்களும் அளிக்கும் கப்பங்களை, கொத்தடிமைகள் கொடுக்கும் ஜிஸியா வரிகளை நான் ‘கணக்கில்’ சேர்க்கவில்லை.

மேலும், கவனிக்கவும்.

திமுக முதற்குடும்பத்தில் இசுடாலிர் மட்டுமில்லை; கனிமொழி, உதய், துர்கா, சபரீசன் எனப் பலர் இருக்கிறார்கள். பின்னர் சுமார் 15-20 திராவிடப் பெருங்கொள்ளைக் குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றுக்குக் கீழே ஏகப்பட்ட ஆசாமிகள் எம்பி, எம்எல்ஏ, வட்டம், மாவட்டம் என்றெல்லாம்.

மேலும், மேற்படி அற்பமானுடப் பதர்களாக உலாவரும் விஷக் கிருமிகளுக்கும் – பினாமிகள் எனப் பலர் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு – சிறுதெய்வம் குறுந்தெய்வம் பட்டாளங்கள் எனப் பலபல கீர்த்தி பெற்ற மூர்த்திகளும் பரிவாரங்களும் இருக்கின்றன…

ரூ200/- வகையறாக்களும் (மேலே, திராவிடப் புழுக்கை அப்துல்லா அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்), பத்திரிகையாளப் பொறுக்கிகளும், முதுகெலும்பற்ற பப்ளிக் இன்டெல்லெக்சுவல்களும், சுபவீரபாண்டியன் போன்ற உதிரி அரசியல் நோக்கர்களும், அவர்கள் பக்கம் வீசப்படும் சப்பிய எலும்புத் துண்டுகளுக்கு அலைமோதிக்கொண்டு புடைசூழ்கிறார்கள்.

அடிமட்டப் படுமட்டக் கார்ப்பரேஷன் கவுன்ஸிலர்களாலேயே, வட்டார உலுக்கியெடுப்புகளில், வருடாவருடம் சுமார் ரூ 10-15 கோடி பணம் ‘பார்க்க’ முடிகிறது. ஊர்த்தலைவர்கள், தலைவிகளால் குறைந்த பட்சம் 8-10 கோடி பார்க்கமுடிகிறது, மத்திய அரசு திட்டங்கள் வழி வரும் பணத்தையும் உதவிகளையும் பட்டுவாடா/ஃபைஸல் செய்வதில் புறங்கையை துப்புரவாக நக்குவது போன்ற களப்பணிகள் வழியாகவும்…

ஆனால் – இதெல்லாம் வெறும் துக்கடா – சல்லிக்காசு பெறாத விஷயம், புல்லுக்கும் ஆங்கே பொசிவது.

…திமுக திராவிட உதிரிகள் நடத்தும் அல்லது நடத்தக்கூடும் ‘சட்ட ரீதியான’ தொழில்கள் (எடுத்துக்காட்டுகளாக, சென்னை துறைமுகத்தில் பாதி, தொழிற்சாலைகள், கல்விக்கசாப்புக் கடைகள், திரைப்படத் தயாரிப்புகள், இறக்குமதிஏற்றுமதி வியாபாரங்கள், காப்பித் தோட்டங்கள், அந்நிய செலாவணி ஊழல் வெளிநாட்டு முதலீடுகள், மனமகிழ் ரெஸார்ட்கள், டீவி சேன்னல்கள்+++ இன்னபிற குறித்த), லாபங்கள் பற்றியெல்லாம் நான் கணக்கில் கொள்ளவில்லை.

மத்திய மந்திரி சபையில் இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்களால் அடிக்கப்படும் கொள்ளைகளையும் கருத்தில் கொள்ளவில்லை…

திமுக திராவிடப் பதர்கள் இதுவரை, துளிக்கூட வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அடித்திருக்கும் தீவட்டிக் கொள்ளைகளைப் பற்றியும், மக்கள் வயிற்றில் அடித்துச் சேர்த்து வைத்திருக்கும் பெருஞ் சொத்துகளைப் பற்றியும் பேசவில்லை.

ஆனால், இன்றும், ஒவ்வொரு தினமும் அடிக்கும் லோகல் அயோக்கியத் திருட்டுகளைப் பற்றி மட்டுமே ஒருமாதிரி கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன்.)

இவை போன்ற கொள்ளைப்பணம் பற்றியெல்லாம் குண்ஸாகக் கணக்கு எடுத்தாலேயே – மிகக் குறைந்த பட்சம், வருடத்துக்குச் சுமார் 1,70,000 – 1,80,000 கோடிகள், திமுக திராவிடர்களால் சுரண்டி அள்ளப் படுகின்றன என்பது நிச்சயம்…

அதாவது திராவிட ஈகொஸிஸ்டம் அடிக்கும் தினக்கொள்ளையின் மதிப்பு, சுமார் ரூ 465 கோடிகள்! அயோக்கிய, அதாவது திராவிடப் பாவிகள்…

அனைத்தும் நம் பணம்…

அவர்களுடைய அடுத்த சுமார் 10 தலைமுறைகளும், இதுவரை செய்துள்ள ஹிமாலய அளவு  பெருங்கொடுங்குற்றங்களுக்காகவே தொடர்கம்பி எண்ணிக் கொண்டிருக்கவேண்டும்.

பார்க்கலாம்…

#திராவிடமாடல்


4 Responses to “திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles”

  1. D Stock Says:

    சரி டெய்லி 500 கோடி அடிக்கிறோம் இப்ப என்ன அதுக்கு? இது யாருக்கும் தெரியாதா? ப்ரூஃப் இருந்தா ஆக்ஷன் எடுக்க வேண்டியதானே? சென்டர்ல நீங்கதான இருக்கீங்க? உங்களுக்கு தானா கூட்டம் சேரலாம் ஆனா அத தக்கவச்சிக்க முடியுமா உங்களால? மீடியா, சினிமா, யூடியூபர்ஸ், இன்ஃப்ளுயென்சர்ஸ், போராளிஸ், ஆக்டிவிஸ்ட்னு டெய்லி படியளந்தாதான் இமேஜ் மெய்ன்டெய்ன் ஆவும். இதுபோக எலக்ஷன் கூட்டணி அல்லக்கை நொள்ளக்கைனு வாய்க்கரிசி போடனும்.

    உங்களுக்காக இறங்கி வேலை செய்யற தொண்டனை கொன்னாகூட வேடிக்கைதான் பாக்கறீங்க. உங்க தொண்டனையே காப்பாத்த முடியல, நாட்டை எப்பிடி காப்பாத்துவீங்க? பக்கத்து ஸ்டேட்ல நடந்த விஷயம் படமா வந்து அங்கயே நல்லா ஓடிட்டு இருக்கு. இங்க நாலுபேரவிட்டு போஸ்டர கிழிச்சி படத்தை நிறுத்திட்டோம், என்ன பண்ணிட்டீங்க? இப்போலாம் காசு கம்மியா குடுத்தா எவனும் ஓட்டு போடறதில்ல டிமாண்ட் பன்றானுக. இதுக்கெல்லாம் கொள்கை மட்டும் பத்தாது, அள்ளி விடனும், அத செஞ்சுதான் ஜெயிக்கிறோம். முடிஞ்சா மோதிப்பாருங்க.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...