பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்?
November 2, 2013
பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.
… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து — ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!
அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!
உணவை வீணடிப்பது (தகவல் தொழில்நுட்ப ஸ்டைல்)…
October 28, 2013
-0-0-0-0-0-
இந்தப் பதிவு – இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளின்…
- உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே) 03/10/2013
- உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (இரண்டாம் நிகழ்வு)27/10/2013
… தொடர்ச்சி – மூன்றாம் நிகழ்வு:
மற்ற இரண்டு நிகழ்வுகள் பெங்களூரில் நடந்தன. இது அவற்றில் ஒன்று,
1996 என நினைவு – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு நிறுவனம் – சிறிய, ஆனால் அதி தொழில்நுட்ப முனைவு.
மூன்றாவது மாடியில் அனைவருக்கும், ஒவ்வொரு நாளும் தரமான மதிய உணவு. கைக்குத்தலரிசிச் சோறு. தமிழ் நாட்டுச் சாம்பார் – போன்றவைகளுடன் கூடிய சத்தான உணவு. அற்ப மசாலாக்களும், பூரிக்களும், எண்ணெய் மிதக்கும் பிலாவ் சோறும் கிடையவே கிடையாது. சுமார் 30 பேர்கள் மட்டுமே இருந்ததால் அதுவும் அது ஒரு ஒரு மென்பொருள் வஸ்து (software products) தயாரிக்கும் நிறுவனமாக இருந்ததால், மேலதிகமாக எங்கள் வஸ்துவை, அதன் கருத்துப்பொருளை / கட்டமைப்பு சார்ந்து மட்டுமே நாங்கள் ஏற்கெனவே விற்றுவிட்டிருந்ததால் – எங்களால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செவ்வனேசெய்ய முடிந்தது – மதிய உணவு, அலுவலக உள் அலங்கரிப்பு உட்பட. எங்கள் தொடங்கிகள்-குழுவில் இருந்த அனைவரும், மிகுந்த முனைப்புடன் இருந்தோம்… எவ்வளவோ கனவுகள். பல நிறைவேறினவும் கூட.
ஒரு தமிழ் இளைஞன் (ஆர்இஸி பையன்; தூத்துக்குடிக்காரன்) என் குழுவில் இருந்தான். பொதுவாக ஓரளவுக்காவது முன் அனுபவம் இல்லாதவர்களை நான் சேர்த்திக் கொள்ள மாட்டேன். ஆனால், இவனை நண்பர் ஒருவர் பரிந்துரைத்திருந்தார் – ஆக, கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என நான் அவனைச் சேர்த்திக் கொண்டேன்; குழுவில் என்னையும் சேர்த்து ஆறு பேர் மட்டுமே, அவன், ஒரு கற்றுக்குட்டியாக. ஆனால் ஒரளவு சூட்டிகையான பையனாகத்தான் தோன்றினான். கொஞ்சம் அளவுக்கு மேலதிகமான தன்னம்பிக்கை இருந்தது, செய்ய எத்தனிப்பதற்கும் செய்கைக்கும் நடுவில் கொஞ்சம் இடைவெளி அதிகம். அதனால் என்ன, அவனுக்கு அது முதல் வேலை, அனுபவங்களைச் சார்ந்து அவன் கற்றுக் கொள்வான் என விட்டு விட்டேன். Read the rest of this entry »
உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (இரண்டாம் நிகழ்வு)
October 27, 2013
முந்தைய பதிவு: உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே) 03/10/2013
நமது திருமணங்களில், சமூக விருந்துகளில், நமது உணவகங்களில் – இவற்றையெல்லாமே விடுங்கள் — நம் வீடுகளிலேயே, நாம் அநியாயத்துக்கு வீணடிக்கும் உணவைப் பற்றி யோசித்தால் மாளா துக்கமும் கோபமும் தான் வரும். இந்த – சோற்றை வேலை மெனக்கெட்டு வீணடித்தல் எனும் பொதுவிதிக்கு எந்த மதமோ, ஜாதியோ, நாடோ – எனக்குத் தெரிந்தவரை எதிலும் ஒரு விதிவிலக்கு கூட இல்லை. ஒரு பக்கம் மாளாப் பஞ்சம், பற்றாக்குறைகள், பானை வயிறுடன் சூம்பிப் போயிருக்கும் குழந்தைகள். இன்னொரு பக்கம் — ஒரு போதும் சிந்தித்துப் பார்க்கப்படாத, வீணடிப்புகளும் கயமையும் + உணவின் மீதான சுரணையற்ற அவமரியாதையும்.
… தவிர்க்கமுடியாத சில சமயங்களில், நான் சென்றிருக்கும் சொற்ப எண்ணிக்கைத் திருமணங்களில் கூட, நம் மக்கள் செய்யும் இந்த அயோக்கிய வீணடித்தல்களால் என்னை அழைத்தவர்களுக்கு, என்னால், தர்மசங்கடமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன – நிலைமை சில சமயம் ரசாபாசமாகி, மிகுந்த தொந்திரவு கொடுத்திருக்கிறேன்.
இதற்குப் பயந்து கொண்டும், திருமணச் செலவினங்களை பெண் மட்டும் அல்லது பெண்வீட்டார் மட்டுமே தரும் அயோக்கிய வழிமுறைகள் எனக்கு ஒப்பில்லாத காரணத்தாலும் – சுமார் 20 வருடங்கள் எந்தத் திருமணத்துக்குமே போகாமல் இருந்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மூன்று நான்கு திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
அப்படி, வேறுவழியே இல்லாமல் செல்லும்போது, உடலின் அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு ஒரு மூலையில் புத்தகங்களுடன் உட்கார்வதையும் பழக்கமாக வைத்திருக்கிறேன். Read the rest of this entry »
ஆர் மகாதேவன் – சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 7 புதிய நீதிபதிகளில் ஒருவன்!
October 25, 2013
மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
காலையில் என் அப்பா தொலைபேசியில் கூப்பிட்டார்: “டேய், உன் நண்பன் ஹைகோர்ட் ஜட்ஜாயிட்டான்; பேப்பர் படிச்சியா?”
எனக்குத்தான் நாளிதழ் கிட்டே போகும் பழக்கமே இல்லையே – ஆக, பறந்தோடி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரிடம், முந்தா நாள் செய்தித்தாளை யாசித்துப் படித்தேன். Read the rest of this entry »
வயாக்ராபாதர் அருளிச் செய்த ‘வயாக்ரா முன்னால்’
October 20, 2013
அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.
இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள், ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)
ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான் தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?
இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?
-0-0-0-0-0-0-
வயாக்ராபாத புராணம் – அதாவது, எஸ்ரா அவர்களின் ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …
வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)
… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. Read the rest of this entry »
ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார்
October 7, 2013
முதலில், சில பத்திகள் – புத்தகச் சந்தை பற்றி… பின்னர் ‘கவிஞர்’ கதை.
இன்று பகல்நேரத்தில் எனக்குச் சுளையாக நான்கு மணி நேர அவகாசம் கிடைத்ததால், ஆங்க்லோ-ஃப்ரெஞ்ச் நெசவாலைத் திடலில் புதுச்சேரி அரசு நடத்திக் கொண்டிருக்கும் புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தேன்; சிறிய அளவில் சுமார் 80த்திச் சொச்சம் கடைகளே விரிக்கப் பட்டிருந்தாலும் – அதன் மேலாண்மை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. (வழக்கம்போல, குடி நீர், கழிப்பறை வசதிகளெல்லாம், சந்தைக்குச் செல்பவர்களையே விடுங்கள் – சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களுக்குக் கூட பரிதாபமான கட்டுமானங்கள் தான்; இதைத் திருத்த பலபத்தாண்டுகளாகும் எனத்தான் நினைக்கிறேன்.)
வாங்கும் புத்தகங்களுக்கு 25% கழிவு; நுகர்வோர் ரொக்க ரசீதுகள் அனைத்தும் புதுச்சேரி அரசின் கலை-பண்பாட்டுத்துறை கொடுத்திருக்கும் பில்-புத்தகங்களில் போடப்பட்டன. அரசு இந்தக் கழிவில் 15%த்தை கடைக் காரர்களுக்குத் திரும்பிக் கொடுத்துவிடுமாம். ஆக – புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஏகக் கெடுபிடி. வெளிவாசலில் – பில்களையும் புத்தகங்களையும் மாய்ந்து மாய்ந்து சரிபார்த்து ஒவ்வொன்றிலும் ‘15% DISCOUNT – NOT FOR RESALE’ என ரப்பர்ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்தார்கள். ஏனென்று கேட்டால் சில கடைக்காரர்கள் அரசு கொடுக்கும் தள்ளுபடியைக் கயமையாகக் ‘கறக்க’ மறுபடியும் மறுபடியும் புத்தகங்களையும், பில்களையும் மறு சுழற்சி செய்தவண்ணம் இருந்ததால் தான் என்றார்கள்.
என்னவாக இருந்தாலும் நாம் வாங்கும் புத்தகங்களிலெல்லாம் இப்படி அச்சடித்துக் கொடுத்தது ‘இந்த டம்ப்ளர் வசந்தாபவனிலிருந்து திருடியது’ என வசந்தாபவன் காரர்களே அவர்கள் டம்ப்ளர்களில் பொறித்துக் கொள்வது போல, கொஞ்சம் அசிங்கமாகவே இருந்தது, என்ன செய்ய… Read the rest of this entry »
(அல்லது) விதண்டாவாதம் செய்வது எப்படி?
(அல்லது) எதையும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று ஆகாத்தியம் செய்வது, பிலாக்கணம் வைப்பது ரொம்ப லேசு!
முதலில் இந்த அயர்ச்சியளிக்கும் பின்னூட்டத்தைப் படிக்கிறீர்களா? (இதே தொனியில் இரண்டு மின்னஞ்சல்களும் வந்திருக்கின்றன)
அய்யாமார் அவர்களே,
வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து, கற்பனாசக்தியால் பல விஷயங்களை ஆய்ந்தறிந்து பல கருத்துகளையும், காழ்ப்புகளையும் வளர்த்தெடுக்கலாம். ஆனால்…
1. வருந்தத் தக்க வகையில், உங்கள் பின்னூட்டத்தில் – சில உண்மைகளும் (அதாவது மோதி குஜராத்தின் முதலமைச்சர் போன்றவை), உண்மைகள் அல்லாதவையும் (= மிச்சம் இருப்பவை) இருக்கின்றன. நான் பின்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். Read the rest of this entry »
உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே)
October 3, 2013
பல மாதங்களுக்கு முன்னால், குவிந்திருந்த பல வேலைகள் காரணமாக, சென்னையில் இரண்டு நாள் ‘சூறாவளிச் சுற்றுப் பயணம்’ செய்தேன் – அதன் மேம்பாலங்களும், ஒரு வழிச் சாலைகளும், புதிய மகாமகோகடைகளும், அலை மோதிக் கொண்டிருந்த மக்களும், ஹாரன்களும், சாலை நெரிசல்களும், புகையும், ப்ளாஸ்டிக் குப்பைமேடுகளும், அதிகப்பளீர் விளக்குகளும், சதாசர்வ காலமும் செல்போனில் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருக்கும் மக்களும் – எனக்குப் பல இடங்களில் எங்கிருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதெல்லாம்கூட ஒன்றுமே புரியவில்லை!
இந்த நகரத்தில் தானா நான் பலபத்தாண்டுகள் குட்டையில் ஊறிய மட்டையாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்? பதினேழாண்டுகளில் இவ்வளவு மாற்றங்களா?
… ஒரு வழியாக வேலைகள் முடிந்ததும், ‘புதிய’ நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்கு பனகல் பார்க் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை! அங்கு ஒரு மேம்பாலம் வேறு – குழம்பிப்போய் இரண்டு சுற்றுச் சுற்றினேன். ஆரெம்கேவி என்ற ஒரு பளபளப்பு ஜவுளிக்கடை முன்னால் ஐந்து நிமிடத்தில் இரண்டாம் முறை என்னைப் பார்த்த ஒரு பூக்காரம்மா கன்ஃபூஸ் ஆய்டுச்சுங்களா என்றார். ஆமாம்மா வய்சாட்ச்சில்ல என்றேன். Read the rest of this entry »
நரேந்த்ர மோதியும், மாலினி பார்த்தசாரதி எனும் பன்மொழிப் புலவியும்
September 30, 2013
அம்மணி மாலினி அவர்கள், அண்ணன் என் ராம் (’த அன்டிஹிந்து’ பத்திரிக்கைக் குழுமம் சார்ந்தவர்) அவர்களுக்கு உறவுமுறை.
இவர் – மனிதவுரிமை, ஸெக்யூலரிஸ்ம் என்றெல்லாம் கலந்தடித்து நேர்மைக்கீற்று என ஒன்று கூட தெரியாதபடி அவ்வப்போது‘ ஆங்கிலத்தில்’ பரிமாறுபவர். ஆனால் எல்லா மாலினிகளும் இப்படியில்லை. எனக்கு மிகவும் பிடித்த படுபுத்திசாலி பெண்களில் ஒருவர் – மாலினி என்ற பெயருடையவர் – பெங்களூரில் இருக்கிறார். இவரை நான் செல்லமாக மால் எனத்தான் கூப்பிடுவேன்.
அதேபோல, இந்த மாலினி பார்த்தசாரதி அம்மணியை செல்லமாக, இனிமேலிருந்து மால்வேர் எனத்தான் கூப்பிடப் போகிறேன். அவ்வளவு குசும்பும் குயுக்தியும் நிரம்பியவராக இருக்கிறார், இந்த மால்வேர்! Read the rest of this entry »
[மங்களம்] மோதி, ஒழிக ஒழிகவே…
September 18, 2013
I against my brother
I and my brother against our cousin
I, my brother and our cousin against the neighbors
All of us against the foreigner.— A Bedouin proverb, quoted by Bruce Chatwin, in The Songlines
ஒரு சுய பரிசோதனை…
(அல்லது) [+5] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [103 -108; + பின்னுரை]
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
1- 21 காரணங்கள் | 22-50 காரணங்கள் | 51-70 காரணங்கள் | 71-90 காரணங்கள் | 91-102 காரணங்கள் | 103-108 காரணங்கள் |
… … ஏனெனில்:
103. சரி, மோதி ராஜ்ஜியத்தில் 2002-க்குப் பிறகு ஒரு மதக் கலவரமும் இல்லை. இருந்தாலும், அந்த கோத்ராக் கலவரம் நிகழ்ந்தது நிகழ்ந்தது தானே! அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போதுமே! ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு மட்டுமே பதமல்லவா??
யோசியுங்கள் – அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் நடந்திருக்கும். அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் உடனே அடக்கப் பட்டிருக்கும்? அவரே பங்கு பெறாமலா இந்தக் கலவரம் ஏற்பட்டிருக்கும்?? Read the rest of this entry »
[+4] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [91-102]
September 16, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
91. குஜராத்தில் பசியே இல்லையா என்ன? பிச்சைக்காரர்களே இல்லையா என்ன? அங்கிருந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள்? மாயமாகி மறைந்து விட்டார்களா என்ன? அவர்களுடைய பசியும் புறங்கையை நக்குதலும் இல்லவேயில்லையா என்ன? முதலில், இந்த மோதி, தன் மாநிலப் பசிப் பிரச்சினைகளை முதலில் தீர்க்கட்டும். பின்னர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றலாம். Read the rest of this entry »
ஆம். நான் மோதி/பாஜக விடம் ‘பொட்டி’ வாங்கியிருக்கிறேன்
September 14, 2013
சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள் – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய சாராம்சமும், என் பதில்களும் கீழே:
அ: நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.
பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார். Read the rest of this entry »
[+3] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? [71-90]
September 13, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
71, மோதி ஒரு ஆரிய வெறியர். ஏனெனில் அவர் தமிழர் அல்லர். ஊக்க போனஸாக, அவர் திராவிடர் அல்லர் வேறு.
ஆகவே, அவர் பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர். ஏனெனில்:
- செத்த திராவிடத் தலைவர்களின் கல்லறைகளுக்கு பகுத்தறிவு சார் மூடத் தனத்துடன் மாலை போடுவதையோ,
- கஷ்டப் பட்டு படிக்கட்டுகள் பல ஏறி, திருப்பதீ வேங்கடேசா கோயிந்தா கோஓஓஓயிந்தா எனச் சொல்லாமல் சொல்லி, புறாக்களும் காக்கைகளும் சந்தோஷமாகப் பகுத்தறிவில்லாமல் எச்சமிடும் கருஞ் சிலைகளைக் கண்டடைந்து, மூச்சிரைக்க, பகுத்தறிவுப் பயபக்தியுடன், அந்தக் கற்களின் மேல் வெகு பவ்வியமாக மலர் தூவுவதையோ,
- அல்லது சட்டமிடப் பட்ட வெறும் காகிதப் படங்கள் முன் சுயமரியாதை – பகுத்தறிவுப் பகலவம் இன்னபிற நிமித்தம், கைகூப்பி, கண்ணீர் மல்கி நிற்பதையோ, பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் குண்டியைப் படம் பக்கம் திருப்பி, டீவீகாரர்களுக்கு சரியான கோணத்தில் தன் பகுத்தறிவுப் பேராசான்களின் பரிசுத்த ஆவியினால் தாம் ஆசிர்வதிக்கப்படுவதைக் காண்பிப்பதையோ…
— செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவெல்லாம் — பயிற்சி கியிற்சி என்று ஒரு இழவும் இல்லாதவர் இந்த ஆரியக் கொழுப்பு மோதி. Read the rest of this entry »
[+2] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [51 – 70]
September 12, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
51. மோதி, இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி. பாருங்கள், குஜராத் பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து விட்டாரா என்ன? பின்னர், அதைக்கூட முடிக்காமல் இந்திய அளவில் என்ன செய்ய வர வேண்டும்? அப்படி வெளியே வந்து இந்தியாவைக் கொஞ்சம் ஆண்டு விட்டு, இந்தியப் பிரச்சினகள் அனைத்தையும் தீர்க்காமல், ஐநா சபை கை நாசபையென்று என்று போகாவிட்டாலும் – சொல்ல முடியாது, விசா கொடுத்தால், அமெரிக்கா சென்று அங்கிருந்து திரும்பாமல் அங்கேயே தங்கி, ஆகாத்தியம் செய்து ஒரு சில ஆண்டுகளில், அமெரிக்காவின் ஜனாதிபதியாகக் கூட ஆகி விடுவார் இந்த மனிதர்… ஆக, நம் இந்தியாவுக்கு ஒன்றும் செய்ய முடியாத இவர் – இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி – புரிந்ததா ??
சும்மா குஜராத்தில் குறு நில மன்னராக இருக்காமல், என்ன திடீரென்று தினவு – இந்தியாவைக் கட்டியாள வேண்டுமென்று? குண்டு குஜராத் சட்டியில் ஒட்டகம் ஓட்டிக் கொண்டிருக்காமல், ஏதோ பித்துப் பிடித்து — அவர் சும்மனாச்சிக்கும் உத்தராகண்ட்வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது போல பாவ்லா காட்டி, நிவாரணம் கொடுக்கிறேன் பேர்வழியென்று அற்பக் கோடிகள் கொடுத்து – அந்த மாநிலத்தை அவமானம் எல்லாம் வேறு செய்திருக்கிறார். இவர், உத்தராகண்ட் மாநிலத்துக்கு எதிரி நம்பர் 1.
52, மோதி, மலைவாழ் ஜனங்களுக்கு எதிரி – பாருங்கள் – அவர் மாநிலத்தில் பொதுவாக மலைகளே இல்லை – இப்போது குஜராத் வரைபடத்தைப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். இப்படி மலைகளையே ஒழித்து, அதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த இந்த மனிதரை நான் எப்படி உயர்த்திப் பிடிக்கமுடியும்? Read the rest of this entry »
108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ?
September 9, 2013
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
ஒரு சுய பரிசோதனை…
… … ஏனெனில்:
1. எனக்குத் தெரியும் – மோதியை எதிர்ப்பது என்பது ஒரு ஸெக்ஸியான விஷயம்; எதிர்ப்பதால் மட்டுமே நான் ஒரு சமதர்ம சமுதாயத்தை நோக்கிச் செல்ல விழையும் அறிவுஜீவியாகி விடமுடியும் – அப்படியில்லா விட்டாலும்கூட, மிகமிக முக்கியமாக, குறைந்த பட்சம், அப்படிப்பட்ட ஒரு அறிவுஜீவியாகக் கருதப் படவாவது, வெகு வெகு சுலபமாக முடியும்.
2. மோதியை ஆதரித்தால் – எனக்கு உடனடித் தீட்டு – நான் வெறியனாகக் கருதப் படுவேன். அய்யய்யோ!

நரேந்த்ர தாமோதர்தாஸ் மோதி (’ஸமாஜிக் சம்ரஸ்தா’ எனும் ஹிந்தி புத்தகத்திலிருந்து / ப்ரபாத் புக்ஸ் / டெல்லி / 2012)
3. மோதியை ஆதரிக்க வேண்டுமானால் எனக்குத் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப — என் நிலைப்பாட்டின் காரணங்களை, உண்மைகளை, ஒரு கீறல் விழுந்த ரெகார்ட் போல, விளக்கிக் கொண்டேயிருக்கவேண்டும்; ஒரு பெரிய்ய்ய்ய சுற்றுச் சுற்றி வந்தவுடன், திரும்பவும் முதல் கேள்வியைக் கேட்பார்கள். எனக்கு இது அலுப்பு தரும் விஷயம்.
4. மோதியை எதிர்க்கும் நிலையை எடுப்பது மிகவும் சுலபம். காற்று வாக்கில் நான் கேட்ட, ’ஹம் பாஞ்ச் – ஹமாரே பச்சீஸ்’ இருக்கவே இருக்கிறது. அல்லது ’முஸ்லீம்கள் – காரோட்டம் – நாய்க்குட்டி’ விவகாரம் இருக்கவே இருக்கிறது. அல்லது கோத்ரா கீத்ரா என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த உச்சாடனங்கள் வெகு சுளுவானவை.
5. எனக்கு, என்னுடைய நேரடி அனுபவங்களைவிட – மற்றவர்களிடம் கடன் வாங்கிய அனுபவங்களை, கோட்பாடுகளை, கருத்துக்களை வைத்துத் தான் காலம் தள்ள முடியும். யோசிக்கும் திறமையெல்லாம் இல்லை என்பதை எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு, என்னை மேலெழுப்பிக் கொண்டுசெல்ல என்றெல்லாம், என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது.
6. பொதுவாக, எனக்குக் கடன் வாங்குவதை விட, கமுக்கமாகக் காப்பியடிப்பது, அச்சுஅசலாக நகலெடுப்பது – அவை கோட்பாடுகளாகவிருந்தாலும் சரி, கருத்துகளானாலும் சரி – மிக மிகப் பிடிக்கும். ஆக, திக்விஜய்ஸிங் என்ன சொன்னாலும், அதைப் பொதுவாகப் பின்மொழிந்தால் போதுமானது, இவர் போன்றவர்கள் அவ்வளவாக யோசித்து, மூளையை உபயோகித்துத்தான் பேசுகிறார்கள் என்றில்லை. ஆக, இப்படி வெளிவரும் கருத்துக்களை, என் மூளையையும் தேவையில்லாமல் உபயோகிக்க விரும்பாத நான், செரிப்பது சுலபம் தானே?
7. எனக்கு மதச்சார்பின்மை முக்கியம். ஆனால் இது என்ன எழவென்றெல்லாம் ஆய்ந்து புரிந்து கொள்ளவெல்லாம் எனக்கு நேரமோ அறிவோ கிடையாது. என்னுடைய மதச்சார்பின்மை ஹீரோ: கலைஞர் கருணாநிதி; ஹீரோயின்: சொக்கத்தங்கம் சோனியா; இவர்கள் எது சொல்கிறார்களோ அதுவே சரி. அது மட்டும்தான் சரி. அவர்கள் நடைமுறையில் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் அது முக்கியமேயில்லை. இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காணும் பரிதாபகரமான நிலையில் நான் இல்லை. ஆக, இவர்கள் சொல்வதுபோல மோதி ஒரு மதச்சார்புக்காரர்தான். ஆகவே.
8. மோதியே சொல்லியிருக்கிறார் அவர் ஒரு ஹிந்து என்று. அப்படியென்றால் அவர் முஸ்லீம் க்றிஸ்தவர்களுக்கு எதிரானவர் என்றுதானே பொருள்?
9. அவர், தான் ஒரு இந்தியன் என்றுகூட தேவையில்லாமல் சொல்லியிருக்கிறார். இப்படி வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளும் ஒருவரால் எப்படி சீனர்களிடமும், பாகிஸ்தானியர்களிடமும், பங்க்ளாதேஷிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவர்கள் இவரைச் சந்தேகமாகப் பார்க்க மாட்டார்களா? தேசவெறி மிக்க இவரால் எப்படி நம் எல்லைகளில் அமைதியைப் பராமரிக்க முடியும்? ஆகவே.
10. நான் பெண்ணியவாதி, மனிதவுரிமைவாதிகளான, தொலைக்காட்சிப் பப்பரப்பாக்காரர்களான – தீஸ்தா அம்மணி சொன்னால், பர்கா அம்மணி சொன்னால், ஸோனியா ராணி உச்சாடனம் செய்தால் – மேலதிகமாக தொழில்முறை மனிதவுரிமை வாதிகள் (பியூஸிஎல் போன்றவர்கள்) சதா — மோதிக்கு அக்னியால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தால் – கூட நானும் ரெண்டு கல் வுடுவது, நாக்கைத் துருத்திக் கொண்டு போடாங் சொல்வது போன்றவை – எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
11. எனக்கு, கறுப்பு அல்லது வெள்ளை என்று மட்டுமே, அதிபாமரத்தனமாக உலகத்தைப் பார்க்க முடியும். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எனக்குச் சிக்கலில்லாத எளிமைப் படுத்தல்கள் தேவை. ராமன் நல்லவன். ராவணன் கெட்டவன். ராமன் ஆரியன், ஆகவே கெட்டவன். ராவணன் திராவிடன், ஆகவே நல்லவன். என்ன? அய்யய்யோ, ராவணன் பார்ப்பானா? அப்போது அவனும் வெறியன் தான்… இவைகளுக்கு, இந்த அளவுக்கு மேலே யோசித்தால் என் மூளை உருகி விடும். ஆகவே.
12. நான் மோதி, பிரதமராகக்கூடிய சாத்தியக் கூறுகளை நமது நாட்டின் நல்லூழ் என நினைத்தாலும் கூட, மோதியை ஆதரித்தால் – அவர் செய்யும் / சொல்லும் அனைத்தையும் ஆதரிக்கவேண்டிவரும். அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை, பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டி வரும். மேலும் காங்க்ரெஸ் கட்சியை எதிர்க்கவேண்டி வரும். என்னால் ஆதரிப்பென்றால் ஒரேயடியாக ஆதரிப்பு எதிர்த்தால் ஒரேயடியாக எதிர்ப்பு என்று மட்டுமே தான் செய்யமுடியும். எனக்கு எளிமை, சிக்கலில்லாத தன்மை போன்றவை மட்டுமே முக்கியம். ஆதரிக்கவேண்டியவைகளை ஆதரித்து, எதிர்க்கவேண்டியவைகளை எதிர்த்து என்றெல்லாம் என்னாலா யோசிக்க முடியும்??
13. எனக்குச் சமன நிலைமை பிடிபடுவதில்லை. முட்டியடி எதிர்வினைகளின் மூலமாக மட்டுமே என்னைச் சுற்றியிருக்கும் நிகழ்வுகளை அணுக முடியும்.
14. எனக்கு படிப்பறிவும் இல்லை, அதைப் பெறும் முனைப்பும் இல்லை, உளறிக் கொட்டல்களில், அதற்கு கைத்தட்டல் வாங்குவதில் இருக்கும் சுகமே அலாதிதான். நான் என்னதான் பிதற்றினாலும், உளறிக் கொட்டினாலும், அநியாயத்துக்கு அட்டைக் காப்பியடித்தாலும், அதற்கும் வேண்டிய அளவு ‘லைக்’கர்களும், ‘ரீட்வீட்டர்’களும், ‘ஃபால்லோயர்’களும், பின்னூட்டக்கார விசிலடிச்சான் குஞ்சப்பனார்களும் இருக்கிறார்களே! அடேய்! இதோ பிடிச்சிக்கோ ஒர் ஸாம்பிள்: மோதி ஒரு டம்மிபீஸ். ஆகவே.

15. என்னுடைய மூளையானது, தொலைக்காட்சிச் சேனல்களால் வடிவமைக்கப் பட்டது. மஞ்சள் பத்திரிக்கைகளால் நிறம் கொடுக்கப் பட்டது. அரைகுறை மதச்சார்பின்மை திலகங்களால் செப்பனிடப்பட்டது. கீபோர்ட் வீரர்களால் குடையப் பட்டது. தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகளால் கூர் செய்யப் பட்டது. நாற்காலி அறிவுஜீவிகளால் புடம் போடப்பட்டது. இந்த விசித்திர ஜந்துக்கள், எந்தப் பருவத்தில், எந்த ஸீஸனில் எவற்றுக்கெல்லாம் எதிரியோ நானும் அவற்றுக்கெல்லாம் எதிரி. இவைகள், கடந்த பல ஸீஸன்களாக, மோதியை எதிர்த்துத்தான் செய்திகள் வெளியிடுகின்றன. இவைகள் சொல்வதெல்லாம் தவறாகவா இருக்கும்? இவைகள் மோதியை ஆதரித்தால், நானும் ஆதரித்துவிட்டுப் போகிறேன்! ஆனால் இப்போதைக்கு எதிர்ப்புத்தான்.
16. இந்தியாவில் இருக்கும் மெக்காலேமுறை அரைகுறைப் படிப்பு, கல்வி முறை — என்னைக் குமாஸ்தாவாக்கி விட்டிருக்கிறது. எனக்கு ஆங்கில அறிவுமில்லை – ஆகவே தாழ்வுணர்ச்சி இருக்கிறது. தாய்மொழி அறிவும் இல்லை – ஆனால் இதனாலான பெருமிதம் இருக்கிறது! ஆக, உள் நாட்டுப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் மோதியை நான் எப்படி…
17. எனக்கு மார்க்ஸ் வழியாகத்தான், நோம் சோம்ஸ்கி வழியாகத்தான், ’ஸப்ஆல்டெர்ன் ஸ்டடீஸ்’ என்று பேசும் ’மார்க்ஸீய மெய்ஞான’ சமூகவியலாளர்கள் அளிக்கும் பார்வையை வைத்துக் கொண்டு மட்டும் தான் எதனையும் பார்க்க முடியும். இல்லாவிட்டால் சாயம்போன அறிவுஜீவிகள் எனக்கு முழு மார்க்ஸ் கொடுக்கமாட்டார்கள். எனக்கு இது தேவையா? ஆகவே.
18. நம் கலாச்சாரத்தைப் பற்றிய, பாரம்பரியத்தைப் பற்றிய அவமான உணர்ச்சி எனக்கு அதிகம். ஆனால், வரலாற்றிலிருந்து, சூழல்களிலிருந்து நுண்மான் நுழைபுலம் என்றெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு முடியாது. எதை எடுத்துக் கொள்ளவேண்டுமோ எடுத்து, தள்ளவேண்டியதைத் தள்ளி என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ள நேரமேயில்லை எனக்கு. நீங்களே பாருங்கள், நீயா- நானா போன்ற மகாமகோ முக்கியமான பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிச் சேனல்களில் வருகின்றன அல்லவா?? அவற்றையும் பார்க்கவேண்டும். சினிமா கிசுகிசுவும் பேசவேண்டும். … ஆக, எனக்கு இருக்கும் சொற்ப நேரத்தில், ஒரு அவமான, தாழ்வுணர்ச்சி தரும் விஷயத்தைப் பற்றிப் பெத்த பேச்சு பேசும் மோதியை நான் எப்படி ஆதரிப்பது… ஆனால், அவரும் நீயா- நானா நானாவித நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், ஒருவேளை அவரை ஆதரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்…
19. நம்மைப் பற்றிய, நம் கலாச்சாரப் பண்பாட்டுப் பின்புலங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது எதுவுமில்லை – அவை அனைத்தும் வடிகட்டிய குப்பை என்பதை எவ்வளவோ மெத்தப்படித்த வெள்ளக்காரர்களே சொல்லியிருக்கிறார்கள். அவர்களை வழிமொழிந்து நம் உள்ளூர் அறிவிஜீவிகள் பிபின் சந்திரா, ரொமிளா தாபர், ஸோயா ஹஸன், ராஜீவ் பார்கவா, சந்திரசேகர கம்பாரா, அனந்தமூர்த்தி, ஜயதி கோஷ், கிரீஷ் கர்னாட், ஸாகரிகா கோஷ், அசின் வனைக், என் ராம், அருந்ததி ராய் போன்றவர்களும் (+ எஸ் வி ராஜதுரை போன்ற லோக்கல் அறிவுஜீவிகளும், ‘விடு-தலை’ போன்ற தலையை அதனிலிருக்கும் மூளையை அம்போவென்று விட்டுவிட்ட இயக்கத்தினர்களும் ) சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில், மோதி போன்றவர்கள், கவைக்குதவாத இந்தியக் கலாச்சாரம், கிந்திய குலாச்சாரமென்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், எப்படித்தான் நான்…
20. இந்து – இந்தி – இந்தியா போன்ற, நகைக்கத் தக்க முட்டாள் தருக்கங்களும், இதனை நீட்டி – வடவன், ஆக்கிரமிப்பு போன்ற மொண்ணையான கருத்தாக்கங்களும்தான் இங்கே சாஸ்வதம். எனக்கு இதற்குமேலே சிந்திக்க வேண்டுமென்றால், இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையும் உருகியேவிடும். மோதி ஒரு ‘இந்து – இந்தி – இந்தியா’காரர். குறிப்பாக, மோதி ஒரு ‘இந்துத்துவா – இந்தித்துவா – இந்தியாத்துவா’ ஏஜென்ட். இவர் இந்தியர்களின் உலகப் பார்வையைச் சுருக்கி விடுவார். ஆகவே.
21. மோதி ஒரு உலகமயமாக்கலின் ஏஜென்ட். இவர் மேலை நாட்டு வர்த்தகர்களையும் தொழில்முறைகளையும் இங்கு கொண்டுவந்து, அவர்களுடைய மூலதனங்களைக் கொண்டு வருகிறேன் பேர்வழியென்று – நம் நாட்டை சூறையாடுபவர்களின், பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகளின் பக்கமிருக்கிறார். நம் பாரதியத்தை அழிக்கிறார். நம் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை ஒழிக்கிறார். ஆகவே.
அடுத்த பதிவில்… 22லிருந்து 50 காரணங்கள்
தொடர்புள்ள பதிவுகள்:
- மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
- நரேந்த்ர மோதி!
[+3] paperback activists considered really, really harmful
September 6, 2013
This is the last of the series of posts. Relax. You don’t have to read this, got it?

The previous ones are here:
- [+2] paperback activists considered really, really harmful 04/09/2013
- [+1] paperback activists considered really, really harmful 03/09/2013
- paperback activists considered really, really harmful 02/09/2013
-0-0-0-0-0-0-
Scenario #10
Norman L Programmer is moving around in a major frenzy these days… His latest discovery is Neuro Linguistic Programming (unfortunately, he had gone through one of the NLP evangelical Read the rest of this entry »
சிரியா? நல்லா சிரிய்யா!
September 5, 2013
முதல் விதி: சிரியா திரும்.
முதற்கண் — சுஜாதாத்தனமாக, மெலிதாக முறுவலிட்டுக் கொண்டு, சிறியதாகச் சிரித்துக் கொண்டிருப்பவள் சிரியி, அப்படிச் செய்யாதவள் சிரியா — என்பதறிக.
பயப்படாதீர்கள். இவள் செந்தமிழ்ச் செல்வி, செம்மொழிச் செவ்வி நடிகை சிரேயா அவர்களின அத்தை பெண் தான்.
இந்தச் சிரேயா அவர்களே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ்மொழி செம்மொழி மாநாடு கண்ட கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆசி பெற்றவர்தான்.
இந்தப் பெண் சிரியா, பாவம் — நம்மூர் பாண்டி நன்னாட்டில், அதாவது பாண்டிச்சேரியில் – ஏதோ, கண்ணைக் கட்டிக் கொண்டு, சகதோழிகளுடன் ஏரோப்ளேன் பாண்டியாட்டம் ஆடிக்கொண்டே போனபோது – விளையாட்டு சுவாரசியத்தில் துருக்கிக்கும், இராக்கிற்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடையே உள்ள சிறிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டுவிட்டது நமக்கெல்லாம் தெரிந்ததே…
இந்தப் பெண்ணை மீட்கத்தான் நாமெல்லாம் வலைப்பூக்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவெல்லாம் போராளித்தனமாகப் போராடி வருகிறோம், தெரிந்ததா?
ஹ்ம்ம்ம்… எப்படியாவது இந்தப் பெண்ணை மீட்டு, ஏதாவது ஒரு தமிழ்ப் படத்திலாவது நடிக்கவைத்து விடவேண்டும்…
<T_’Vijaya’_Rajendher> சின்னக்கிளி சிரியா, இப்ப நீ பிரியா? அப்போ இங்க வர்ரியா? நாஞ் சொல்றது சரியா?? </T_’Vijaya’_Rajendher> Read the rest of this entry »
மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-)
September 1, 2013
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மது கிஷ்வர் அவர்களைப் பற்றி – சில மாதங்கள் முன்பு என் கருத்துக்களை எழுதியிருக்கிறேன்.
அவர், சென்ற பல மாதங்களாக ( நவம்பர் 2012-லிருந்து என நினைவு) பலமுறை குஜராத் சென்று – மக்களுடன் கலந்து பேசி, அங்கேயே தங்கி ஆராய்ந்து – குஜராத் பற்றி, மோதி ஆட்சி பற்றி, சிறுபான்மையினர் பற்றியெல்லாம் அவர் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். (அதற்கு முன்னும் கூட பலமுறை சென்றிருக்கிறார்; மேலும், மிக முக்கியமாக — அவர் சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் வேறு எவரையும் நம்பிக் கொண்டிருக்கவில்லை; அதாவது மோதி அவர்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ – மது, ஒரு சுக்குப் பலனும் பெறவில்லை – இது பொதுவாக, நம் ‘துட்டு கொடுத்தால் தூக்கி எழுதும்’ அல்லது சிரத்தையேயில்லாமல் வெறும் அட்டைக்காப்பி அடித்து எழுதி மினுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும்!) Read the rest of this entry »
… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும். அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு ஒன்றுதானே!
எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!
… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே! ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.
தோழர் – தொழில் – தோள்வலி – தொபுக்கடீர்!
July 26, 2013
இது வெளியூர் நக்ஸல்பாரிகளைப் பற்றியது அல்ல. நம்மூர் அக்மார்க் நயம்விலை ’நானும்தான்’ நக்ஸலைட்டுகளைப் பற்றியது. ஆனாலும் இக்கால வினவு தினவு பற்றியுமல்ல – அக்கால கேடயம், மனஓசை போன்ற இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்த சமயம்.
நிற்க, இக்கால வினவாளர்கள் அழகான வெள்ளந்தித் திரிபுவாதிகள் . பெருமுதலாளிகளின், ஏகாதிபத்தியத்தின், அமெரிக்க ராணுவவலிமையின் தயவில் உருவாக்கப்பட்டு இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் இன்டெர்நெட்டை உபயோகித்து உபயோககரமாக காலட்சேபம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். Revolution over IP என்கிற (=RoIP என்கிற) இணையத்தின் மீது கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் புரட்சிப் ப்ரொடொகாலை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும். .rev (=revolution) என்கிற உயர் நிலை வலைதளப் பகுப்பிற்காகவும் (top level domain) ஆதரவு சேகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சியை நோக்கிய தந்திரோபாயங்கள் இவை என்பது எனக்குத் தெரியவருவதால், உள்ளபடிக்கு எனக்கும் சந்தோஷம்தான்.
யோசித்துப் பாருங்கள் — நல்ல வேளை, இவர்கள் இப்படியிருக்கா விட்டால், வர்க்க எதிரிகளைக் கொன்றுகொண்டு ரத்தத்தில் (அதாவது, மற்றவர்களுடையது) நீந்திக் கொண்டிருப்பார்கள். கொலைவெறி வன்முறையைத் தவிர்த்து, எப்படியோ, நமது தேச மைய நீரோட்டத்தில் கலந்தது சரியான விஷயம்தான். அதுவரை இவர்களை மெச்சத்தான் வேண்டும். சபாஷ பசங்களா! உங்கள் பணியைத் தொடருங்கள்.



