[+4] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [91-102]

September 16, 2013

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

71-90 காரணங்கள்

… … ஏனெனில்:

91. குஜராத்தில் பசியே இல்லையா என்ன? பிச்சைக்காரர்களே இல்லையா என்ன? அங்கிருந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள்? மாயமாகி மறைந்து விட்டார்களா என்ன? அவர்களுடைய பசியும் புறங்கையை நக்குதலும் இல்லவேயில்லையா என்ன? முதலில், இந்த மோதி, தன் மாநிலப் பசிப் பிரச்சினைகளை முதலில்  தீர்க்கட்டும். பின்னர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றலாம்.

92. குஜராத்தில் மனித உரிமை மீறல்கள் மிக அதிகம். எனக்குத் தெரியும். எப்படியென்றெல்லாம் கேட்காதீர்கள். டீவிகாரர்கள், வினோத் மெஹ்தா, திக்விஜய் ஸிங், சோனியா காந்தி, அபிஷேக் ஸிங்வி, பர்கா தத், அருந்ததி அரைகுறை ராய், ராஜ்தீப் ஸர்தேஸாய், ஷேகர் குப்தா போன்றவர்களெல்லாம் இதைப்பற்றிச் சொல்லிக்கொண்டேதானே இருக்கிறார்கள்?  இவர்கள் எல்லாரும் வெள்ளை  நிறத்தோல் கொண்டவர்கள் – இவர்களா  பொய் சொல்வார்கள்?

93. மனிதவுரிமையையே விடுங்கள் – ஒட்டக உரிமை, கச்சிக் கழுதை உரிமை போன்றவற்றிற்கெல்லாம் இந்த மோதி என்ன செய்திருக்கிறார்? ஏதாவ்து உலகளாவிய, மதிக்கத்தக்க சமூகவியல். அறிவியல் இதழ்களில் இவருடைய விலங்குரிமை எண்ணங்களைப் பற்றி ஒரு கட்டுரை – ஒரேயொரு  கட்டுரையாவது  வந்துள்ளதா? யாராவது மேற்கோள் காட்டியிருக்கிறார்களா? ஆக, புரிந்ததா?? இந்த ஆள் – விலங்குகளுக்கும் விரோதி.

சுலபமாக உருகும் ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ மனப்பான்மை கொண்ட நான், விலங்குரிமை  வாதியாகிய நான், எப்படித்தான் மோதியை சும்மனாச்சிக்கும் கூட ஆதரிக்க முடியும்?

94. நான் ஏன்  போகவேண்டும் குஜராத்துக்கு? உண்மை நிலை அறிவதற்கா?? எனக்கு வேறு வேலையில்லை என்று நினைத்து விட்டீர்களா என்ன? எனக்கு அங்கே அவ்ளோ தூரம் போயெல்லாம் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை.

எனக்கு வேண்டியதெல்லாம் – யாராவது குஜராத் மோசம், மோதி அயோக்கியன்  — என்று சொன்னால் போதும். நான் அதனை பொழுதன்னிக்கும் உச்சாடனம் செய்து கொண்டு – சாக்கடையில்  வெகு ஆனந்தமாகப் புரண்டு கொண்டிருப்பேன்.

95. நரேந்திரமோதி ‘சோ’ ராமசாமிக்கு நண்பர். சோ ஒரு ஹிந்துத்துவ, பார்ப்பன பனியர். மேலும் பருத்தி ஜட்டியர் (ராம்ராஜ் / டேன்டெக்ஸ்  / விஐபி இன்னபிற). சோ ஒரு அரசியல் தரகர் என்பதில் நான் ஒரு தீவிரமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆக மோதியும் ஒரு தரகர். ஆகவே.

96. எவ்வளவு குஜராத்திகள் சென்னையிலும், பிற பிரதேசங்களிலும் வதவதவென்று இருக்கிறார்கள்! ஏன். நேற்றுக் கூட,  நான் பாண்டிச்சேரி சென்றிருந்த போது இரண்டு குஜராத்திகளைப் பார்த்தேன்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் – அப்படியே, நீங்கள் சொல்வது போல, மோதி ஆட்சியில் பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும் கலந்தடித்து குஜராத் சந்துபொந்துகளிலெல்லாம் ஓடிக்கொண்டிருந்தால், ஏன் இந்த மற்றவூர் குஜராத்திகள் ஏன் திரும்பி அவர்கள் சொந்த மாநிலத்துக்குத் போய்ச் சேரவில்லை? குஜராத்தில் ஏதோ பிரச்சினைகள் இருப்பதினால் தானே…

அதனால் தான் சொல்கிறேன், குஜராத் பற்றி நிறைய கயிறு திரிப்புகள் வருகின்றன… (ஓஓ… நான் அவ்வப்போது துக்ளக் கிக்ளக். ஆழம் கீழம் போன்ற பத்திரிகைகளில் வரும் மோதி ஜால்ரா கட்டுரைகளைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறேன் – மற்ற பத்திரிகைகளைச் சொல்லவில்லை! ’த் ஹிந்து’ போன்ற மகத்தான நடு நிலைமைப் பத்திரிகைகளைச் சொல்லவில்லை)

97. கச்சத்தீவு, தமிழ் ஈழம், ’தலைவா’  பட வெளியீடு கசமுசா, சேது சமுத்திரம் திட்டம், கருணாநிதிக்கு 90 வயதான மகத்தான நிகழ்வு, திரைப்பட இயக்குனர் வீட்டுப் பிரச்சினை, சீமார் அவர்களின் ’நாம் தமிழர்’ கட்சியின் பகீர்  ஃப்லெக்ஸ் தட்டிகள், டெஸோ சவப் பரிசோதனை போன்றவை மேல் மோதி கருத்துத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.

இப்படி, வெகுமுக்கியமான நாட்டுப் பிரச்சினைகள் மீதான, அண்டை நாடுகளுடன் உறவுகள் மீதான விஷயங்களில் கருத்துச் சொல்லாத அல்லது சொல்ல முடியாத ஒரு நபரை நான் எப்படி பிரதமர் பதவிக்கான தலைவராகக் கருத முடியும்?

98. ஊடகங்கள் அனைத்தும் மோதியை எதிர்க்கின்றன என்றால், அதற்கு அர்த்தம் – மோதியிடம் என்னவோ ஒரு மகாமகோ தவறு இருக்கிறது என்பதுதானே? சும்மா சால்ஜாப்பு சொல்லாதீர்கள். நெருப்பில்லாமல் புகையாது  அல்லவா?

ஆகவே, எனக்கு நீங்கள் சரியாகப் பதிலளிக்க வேண்டுமென்றால் — உலகளாவிய, மதிக்கத்தக்க, பொருட்படுத்தத் தக்க பல  சமூகவியல். அறிவியல், பொருளாதாரவியல் இதழ்களில் — ஒரு இதழிலாவது — இவருடைய ’நீங்கள் சொல்கிற சரியான பக்கத்தைப்’ பற்றி இவர் குறித்த எதிர்மறையில்லாத கருத்துகளைப் பற்றி ஒரு கட்டுரை – ஒரேயொரு  கட்டுரையாவது  வந்துள்ளதா? அப்படியே வந்திருந்தாலும், யாராவது அதை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா?

மோதி குறித்த என் எதிர்மறை வெறுப்பு எண்ணம் – பொதுப் புல்லரிப்புப் பப்பரப்பா அரைகுறை ஊடகங்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம். பட்டிருக்கிறது தான். இதில் என்ன  தவறு??

ஆனால், அவரைப் பற்றிய இந்த எதிர்மறை எண்ணம் சரியல்ல என நீங்கள் கொடுக்கும் அறிவியல் ரீதியான தரவுகளை, புள்ளியியல் விவரங்களை – உங்களைப் போன்று எழுதுபவர்கள் / சொல்பவர்கள் கொடுத்தால் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அவை வேறெங்கிலிருந்தோ வரவேண்டும். குறைந்த பட்சம் — முக்கியமாக ஈபிடபிள்யு (பொருளாதார, அரசியல் வாராந்தரி), ஃப்ரன்ட்லைன், அவுட்லுக் போன்ற நான் மதிக்கும் பத்திரிகைளிலாவது வந்திருக்க வேண்டும்.

உங்களால் இதனைச் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். ஆகவே, என்னுடைய சொந்த மகாமகோ வெகு அறிவியல் பூர்வமாகத்தான் மோதியை நான் வெறுக்கிறேன், சரியா?

99. காங்க்ரெஸ் ஆட்சியில் இருக்கும் போது – அது அனைத்து கட்சிகளையும், கருத்துப் போக்குகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், பொருளாதாரப் பார்வைகளையும், சமூக நிதர்சனங்களையும் கலந்து எடுத்துக்கொண்டு – வலதுசாரி, இடதுசாரி, நடுசாரி, மேல்சாரி, கீழ்சாரி, பக்கசாரி, ஆகாயசாரி,  அதலபாதாளசாரி, ரங்காச்சாரி – என அனைத்துச் சாரி வகை முடிவுகளையும், சாரியே சொல்லாமல் ஒரே சமயத்தில், ஒரே விஷயத்தில் எடுத்துவர முடிந்திருக்கிறது.

இதனால், நம் நாடு நகைக்கத்தக்க அளவில் நிர்வகிக்கப்பட்டு, வளர்ச்சியும், ஸ்திரத் தன்மையும், அடிப்படைப் பொருளாதாரமும் கந்தறகோளமாகியிருக்கலாம். ஆனால் – காங்க்ரெஸ் கட்சி ஒன்றுதான் கட்டுக்கோப்புடன் அனைத்துப் பார்வைகளையும் தொடர்ந்து – ஒரே சமயத்தில்   பின் தொடர்ந்து வருகிறது, ஆக, மகாமகோ குழப்பங்களும் மகத்தான் நஷ்டங்களும் இந்தச் செயல்பாட்டால் ஏற்பட்டாலும் – இந்த ஒரு கட்சிதான் தேச நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புகிறது என்று சொன்னால், மிகையாகாது.

ஆனால்,  மோதி வந்தால், அவருடைய ஒரே பார்வையைத்தான் – சமனமான வளர்ச்சி, தற்சார்பு, கட்டுமானங்கள், தேசத்தின் மீது அக்கறை, சட்டத்தின் மாண்பு, நேர்மையான அதிகாரிகளுக்குச் சுதந்திரம் போன்ற தேவையற்ற, குப்பைத்தனமான விஷயங்களைத்தான் முன்வைப்பார்.

நமக்கு இதுதானா வேண்டும், மேன்?? இன்னா நென்ச்சிகினு கீற? அவ்ரு வந்தாக்க அல்லா பொம்ப்ளங்க்ளயும் குசராத்திப் பொண் மேறி சாரி கட்ட வெச்ருவார்! அல்லா பொண்களும் பொடவ தலப்பு வல்து பக்கோந்த்தாண் வெக்யணும் கட்டோணொம்பாரு.. அப்போ அவ்ரு ஒரு வல்து சாரி – எட்து சாரியில்ல! அய்யோ! அப்டீன்னாக்க, இந்த ஆள், நம்ப ஆம்ப்ளங்கள ஆஃப்  சாரி கட்டவெச்றுவார் மேன்… அய்யய்யோ!

100. மெலிதான, ஒல்லியான அரசு கில்லியான அரசு என்றெல்லாம் மோதி பேசுகிறார். இப்படி ஒல்லியாக இருந்தால் எப்படி நாம் அரசுப்பணிகளில்  நம்முடைய ஆட்களை மேலும் மேலும்  உள்ளெடுத்துக் கொள்வது? எப்படித்தான், தேர்தல் சமயத்தில் இந்த அரைகுறை அரசுப்பணி தாமசக் காரர்களை உபயோகித்துக் கொள்வது? எப்படித்தான் தேச வரும்படியில் 110% நிதியை, இந்த குமாஸ்தாக்களின் மேல் மட்டுமே செலவழிப்பது?

ஆக, ஒல்லி ஜல்லி என்றெல்லாம் அரசை ஆக வைத்து மோதி ஆட்சி செய்தால், அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற மாட்டார்.  அவருக்கு அரசு குமாஸ்தாக்களின் ஆதரவு இருக்காது. இப்படி ஒரு நிலையற்ற ஆட்சி நமக்குத் தேவையா?

நமக்குத் தேவை, குண்டான அரசு.  தொந்தியுள்ள அரசு. அரசு வேலை வாய்ப்புகளை மானாவாரியாக அதிகரிக்கும் அரசு. மகாமகோ கோப்புகளால் கோர்க்கப் பட்டு, கட்டுக் கோப்புடன், முக்கிய கோப்புகளை மாயமாகத் தொலைத்து விடும் அரசு.

இப்படிப் பட்ட ‘கெவர்மெண்டு வேலை’ அதிகரிப்புகளுக்கு எதிரான மோதியை, நானா ஆதரிப்பேன்?? போங்கடா…

101. ஈன வழிகளில் மதமாற்றம் செய்ய, மதக் கலவரம் செய்யவெல்லாம் குஜராத்தில் கடந்த பல வருடங்களாக முடிவதில்லை, இதையெல்லாம் மீறியும், நீங்கள் நம்பும் கடவுளுக்கல்ல, எங்களுடைய  கடவுளுக்கு நன்றியுடன் மதமாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், ஆனால்…  இந்தச் சுளுவான மதமாற்ற அடிப்படை உரிமைளைக் கூடத் தன் மாநில மக்களுக்குக் கொடுக்காத மனிதரை, மத்திய அரசில் உட்கார வைத்தால், நமக்கெல்லாம் மிகுந்த வருத்தம் தரும்படி, மற்ற மாநிலங்களையும் இப்படிக் காயடித்து விடுவார்.

இந்தப் பரிதாப நிலை தொடர்ந்தால், பின் நம்மால் எப்படித்தான் ‘ஒரு குறிப்பிட்ட  மதத்தைச் சார்ந்தவர்கள், இன்னொரு குறிப்பிட்ட  மதத்தைச் சார்ந்தவர்களை உதைத்தனர்’ வகையறா செய்திகளை அடிக்கடி பார்த்துப் படித்துப் புளகாங்கிதமடைய முடியும்? உச்சூக் கொட்ட முடியும்??

102. மோதி ராஜ்ஜியத்தில் 2002-க்குப் பிறகு ஒரு மதக் கலவரமும் இல்லையாமே! என்ன கேவலம்  அய்யா இது!! இதிலிருந்தே தெரியவில்லையா, இவருடைய பேயாட்டமாடும் அரசு — அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு போலீஸ் அரசாங்கத்தை, ஒரு காட்டுமிராண்டிக் காட்டாட்சியை நடத்துகிறது என்று?

மக்களுக்கு கலவரம் செய்ய முடியாத நிலவரம், கட்டிப் பிணைக்கப்பட்ட சுதந்திரம்,  எனக்கு உண்மையில் கலவரமூட்டுகிறதே!

மதக்கலவரம், ஜாதிக் கலவரம, வகுப்புச் சண்டை, கல்லெறிவது, கொலை செய்வது போன்ற வன்முறைகள் எனது பிறப்புரிமைகள், அவற்றை  ந்டத்தியே தீருவேன் என வீறு கொண்டெழுபவன் நான். இந்த அடிப்படை உரிமைகளை  மதிக்காத  இந்த மோதியை நான் எப்படித்தான்…

அடுத்த பதிவு: 103 – 108 காரணங்கள் + பின்னுரை…

(கண்டிப்பாக)

-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

3 Responses to “[+4] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [91-102]”

  1. tyagarajan Says:

    I also came across your question no 96, I was stunned when the same question was asked by my finance director, who is supposed to be very knowledgeable in his subject. The thought process of these people are very sick. i can only laugh at him. The problem with our people is that they are accepting these kind of facts because the guy who is commenting is educated.

  2. arun Says:

    kaathu valikuthu konjam paathu jaalra thattunga.suya parisothanaingra perula modi pajana paadatheenga.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s