[மங்களம்] மோதி, ஒழிக ஒழிகவே…
September 18, 2013
I against my brother
I and my brother against our cousin
I, my brother and our cousin against the neighbors
All of us against the foreigner.— A Bedouin proverb, quoted by Bruce Chatwin, in The Songlines
ஒரு சுய பரிசோதனை…
(அல்லது) [+5] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [103 -108; + பின்னுரை]
(அல்லது) ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே, இவரை அணுகுகிறேன்?
1- 21 காரணங்கள் | 22-50 காரணங்கள் | 51-70 காரணங்கள் | 71-90 காரணங்கள் | 91-102 காரணங்கள் | 103-108 காரணங்கள் |
… … ஏனெனில்:
103. சரி, மோதி ராஜ்ஜியத்தில் 2002-க்குப் பிறகு ஒரு மதக் கலவரமும் இல்லை. இருந்தாலும், அந்த கோத்ராக் கலவரம் நிகழ்ந்தது நிகழ்ந்தது தானே! அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போதுமே! ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு மட்டுமே பதமல்லவா??
யோசியுங்கள் – அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் நடந்திருக்கும். அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் உடனே அடக்கப் பட்டிருக்கும்? அவரே பங்கு பெறாமலா இந்தக் கலவரம் ஏற்பட்டிருக்கும்??
என்ன? என்ன தைரியம் உங்களுக்கு? காங்க்ரெஸ் ஆட்சியில் நடந்தவைகளைப் பற்றியா, சீக்கியர்கள் ஒழிப்பு நடந்த அந்த 1984 பற்றியா – பேசவேண்டும் என்று சொல்கிறீர்கள்? அவையெல்லாம் மக்கள் எழுச்சி கொண்டு செய்தவை. வழுக்கைத் தலைக்கும் விக்குக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.
2002 கலவரங்களின் போது — மோதியே கோத்ராக் களத்தில் இறங்கி, அவ்டொமெட் கலாஷ்நிகொவா47 கொண்டு, ஆயிரக் கணக்கான முஸ்லீம்களைக் கொலை செய்து, ரத்தவெள்ளத்தில் நீந்தியதை (தீஸ்தா செதல்வாட், அருந்ததி ராய் போன்றவர்களுடன்) நான் என் கண்ணால், நேரில் பார்த்த விஷயங்களைப் பற்றி, நான் விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தால், ‘இனப் படுகொலை வியாபாரி’ என்று மோதியைத் தூற்ற ஆரம்பித்தால் — நீங்கள் தாங்க மாட்டீர்கள்… ஜாக்கிரதை.
உங்களை விட்டு விடுகிறேன். ஆகவே…
104. கோத்ரா ரயில்பெட்டியெறிப்பு, அதிலிருந்த ஹிந்து யாத்ரீகர்கள் வேகவைப்பு நடந்தது. பின்னர் கலவரம் நடந்தது. முஸ்லீம், ஹிந்து கலவரவாதிகள் பலர் ஒருவரையொருவர் கொன்றுகொண்டனர். ஹிந்து, முஸ்லீம் கலவரவாதிகள் / திரியாவரக் குண்டர்கள் பலர் பொலீஸ்காரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர். சரி. சுபம்.
ஏன் க்றிஸ்தவர்கள் கொல்லப் படவில்லை? ஏன் அவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லையா என்ன? இதிலிருந்தே தெரியவில்லையா, சிறுபான்மையினரை மோதியின் அரசு அணுகும் லட்சணத்தை…
ஆக, எதிர்காலத்தில், வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தபடி, முஸ்லீம்களையும் க்றிஸ்தவர்ளையும் ஒருவரோடருவர் பொருதவிட்டு ஓநாய் போல அவர்கள் ரத்தத்துக்கு அலையும் ஹிந்துத்துவா சக்திதானே மோதியின் கட்சி? இவரைப் போய்…
105. சூரத் வெள்ளக்காடும், புஜ்நில நடுக்கப் பேரழிவும் – அவை நடந்த பின், பின்னர் மட்டுமே, மோதி அரசால் எதிர்கொள்ளப் பட்டமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டாம். துரித/குறுகிய கால நடவடிக்கைகளும், நீண்ட கால நோக்கில் நவ நிர்மாணப் பணிகளையும் அந்த அரசு கட்டமைத்து எழுப்பியதைச் சொல்ல வேண்டாம்.
ஆனால், பாருங்கள் இந்த அநியாயத்தை – ஒரு நல்ல அரசாக இருந்தால் ‘வருமுன் காத்தல்’ செய்திருக்க வேண்டுமா இல்லையா? வந்த பின்னர் புனருத்தாரணம் செய்வது பெரியவிஷயமா? உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க செயலா?? (ஆனால் பாருங்கள், நம் ‘நாடகமாடும் கலைஞனடா’ தலைவரால் – ஸ்ரீலங்கா பிரச்சினை எழும்பும் முன்னரே ஒரு அரைமணி நேர உண்ணாவிரதம் மட்டுமே இருந்து, போர் மூள்வதையும், ரத்தக களறிகளையும் – எப்படித்தான் சமயோசிதமாகத் தடுக்க முடிந்தது? என் தானைத் தலைவனை நினைத்திட்டால் எனக்குப் புல்லரிப்பு இழவு, நிற்கவே மாட்டேனென்கிறது!)
106. நர்மதா நதியில் வரும் நீரையெல்லாம் கால்வாய்கள் மூலமாகவும் கிளை நதிகள் வழியாகவும் பாசனம், விவசாயம் என்கிற பெயரில் வீணாக்கி பம்மாத்து வேலை செய்திருக்கிறார் மோதி – இதனால் கடலில் கலக்கும் நீரின் அளவு குறைந்து அரபிக் கடலே வறண்டு போகும் வாய்ப்புள்ளதாக அருந்ததி ராய் போன்ற திடீரெக்ஸ் கடலியல், நதியியல், அனைத்து இயலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்த திடுக்கிட வைக்கும் பிரச்சினை பற்றி உங்களில் யாருக்காவது தெரியுமா, அதி முட்டாள்களே!
இந்த ஆளை எதிர்க்காவிட்டால், கேரள மீனவர்கள் முதலில் அல்லலுறுவார்கள்; பின்னர் வங்காள் விரிகூடாக் கடல் நீரெல்லாம், காய்ந்துபோன அரபிக்கடல் பக்கம் பாய்ந்தால் (கவனிக்கவும்: ’நீர், அதன் மட்டத்தை அடையும்’) நம் தமிழ் நாட்டிலும் மீனவர்கள் அவதியுறுவார்கள்.அவர்களை விடுங்கள்… நம் மீன் சாப்பிடாவிட்டால், மானைச் சாப்பிட்டுவிட்டுப் போகிறோம்!
ஆனால், ஆனால்… சென்னைத் துறைமுகம் இழுத்து மூடப் படும். கவிஞர் கனிமொழி அவர்களின் கன்டெய்னர் தொழில் பாதிக்கப் படும்! இது தேவையா? எனக்கு திராவிட ரத்தம் கொதிக்கிறது.
இம்மாதிரி திராவிடத் தொழிலதிபர்களின் அடிமடியில் கைவைத்து ஜேப்படி செய்யும் ஆரிய மோதியை நான் எப்படி ஆதரிப்பேன், சொல்லுங்கள்?? ஆகவேதான்!
107. ஊழலை வேறு இந்த மோதி குறைத்து விடுவாராம். இப்படியெல்லாம் செய்தால், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களின் மனைவிகள் (அல்லது கணவர்கள், சகோதரர்கள், சகோதரிகள்…), அவர்களுடைய (சொத்துச் சண்டையிடும்) பிள்ளைகள், மருமகன்கள், மருமகள் இத்யாதிகள் எப்படித்தான் உயிர் வாழ்வதாம்?
ஊழல் தான் (க்ரிக்கெட்டுக்கும், சினிமாவுக்கும் அடுத்து) இந்தியாவை ஒருங்கிணைக்கிறது என்பது நமக்குத் தெரியாதா?
இந்த மோதி வந்தால் – ஒரு பேச்சுக்கு ஊழலை, பெரும்பாலும் ஒழித்துவிடுகிறார் என்றே கற்பனை செய்து கொள்வோம் – ஆனால், பாவிகளே… இதனால், இந்திய ஒருமைப்பாடு என்பதே கேள்விக்குறியாகி விடும். அரசியல்வாதிக் குடும்பங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். அவர்கள் வேலையில் இருக்கும்போதே, சினிமா கினிமா எடுத்துக் கொண்டிருக்கும்போதே மகாமகோ திரியாவரங்கள். வேலை கீலை ஒன்றுமில்லையென்றால் நாட்டையே ஒழித்து விட மாட்டார்களா? ஆகவே.
108. கடைசியாக — ‘மோதி குடும்பம்’ என்ற ஒன்றே இல்லை இந்த மனிதருக்கு.
இந்த அழகில், எப்படி இவர் ஒரு தொலைக்காட்சிச் சேனல் கூட சொந்தமாக – அல்லது மனைவி+மகள் மூலமாக, அல்லது வேறு ஏதாவது பினாமி ஆள் மூலமாக அல்லது மருமக்கள் மூலமாக — நடத்திக் கொள்ள முடியும்? ஒரு தொலைக்காட்சிச் சேனல் கூட இல்லாத இவரால் எப்படி நம் மக்களுக்கு புதுப் படங்களை ‘இந்திய வரலாற்றில் முதல்முறையாக’ என்றெல்லாம் தரமுடியும்?? இதன் மூலம் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தமுடியும்? எப்படித்தான் தன் கொள்கைகளைப் பரப்ப முடியும்?
இந்த மாதிரி குண்டு தைரியமாக ஒரு தொலைக் காட்சிச் சேனலும் இல்லாமல் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா – இவர் ஒரு நேர்மையற்ற குண்டர், அரசியல் நடைமுறைகளுக்கு எதிரானவர், மக்களின் மகிழ்வுத் துய்த்தல்களுக்கு எதிரானவர், எதற்கும் துணிந்தவர் என்று? இப்படிப்பட்ட ஒருவரையா நம்பி, நாம் நம் இந்தியாவையே ஓப்படைப்போம்?
ஹ்ம்ம்ம் – இன்னமும் நிறையவே இருக்கின்றன – ஆனால், இத்தோடு இவரை விடுகிறேன்.
இவருக்கு, தில் இருந்தால் என் குற்றச்சாட்டுகளுக்கு, சாடல்களுக்குப் பதில் தரட்டும்.
அதுவரை, என்னுடைய கொள்கை முழக்கம்:
‘வெறுப்புடன் நான் மோதி, மோதியை நான் வெறுக்கிறேன்.’
ஆமென்.
சரி, ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறேன் – நான் மோதியை ஆதரித்து, மேலும் பலரும் இது போலவே ஆதரித்து – பின் அவரும் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆனால், உடனே நம் சாலைகளில் பாலும் தேனும் ஓட ஆரம்பித்து விடுமா என்ன? பிரிவினைவாதமும், தீவிரவாதமும், ஊழலும், லஞ்சமும், விலைவாசி உயர்வும், மின்சாரத் தட்டுப்பாடும், கல்வியின் கேடான நிலைமையும், சட்டஒழுங்குச் சீர்கேடுகளும் உடனே சரியாகி விடுமா என்ன? பொருளாதார வளர்ச்சி, சுபிட்சம், அமைதி, சந்தோஷம் எல்லாம் உடனே வந்து விடுமா என்ன?? அதற்குச் சில வருடங்கள் போல ஆகலாமே! அதுவரை என்னாலெல்லாம் பொறுமை காக்க முடியாது.
ஆகவே, நான் இப்படியே மண்டையில் அடித்துக் கொண்டு (= கன்னடத்தில் ‘ஸ்வல்ப அட்ஜஸ்ட் மாடி’ எனச் சொல்லிக் கொண்டு) காலட்சேபம் செய்வதே சரியானது…
நீங்கள் சொல்லலாம்: இந்த மோதி ஆட்சிக்கு வந்தால் – அவர் நல்லெண்ணமும் செயல்திறனும் கொண்ட ‘சர்வாதிகாரி’யாதலால் இவற்றை, இந்தக் குறைகளை ஒழிக்க உண்மையாகவே முயல்வார் என்று… நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்கள்.
ஆனால், ஒரு காங்க்ரெஸ் ஆட்சியில் கிடைக்கக் கூடிய நகைச்சுவை நிகழ்ச்சிகள், திடுக்கிடவைக்கும் வெட்கம்கெட்ட ஊழல்கள், தீவட்டிக் கொள்ளைகள், திமுக போன்ற கூட்டணிக் கட்சிகளின் – யார் சூத்ரதாரி, யார் பொம்மலாட்டக்காரன் யார் பொம்மை என்று தெரிந்துகொள்ள முடியாத நாடகங்களை, கும்மியடித்தல்களை, காவடியெடுக்கும் காட்சிகளைக் கொடுக்கவெல்லாம் மோதி அவர்களால் முடியுமா என்ன?
எனக்குத் தேவை என்டெர்டெய்ன்மென்ட், அதாவது அற்பக் கேளிக்கை மட்டுமே! என் உலகம் கேளிக்கைகளைச் சுற்றித்தான் உருண்டு கொண்டிருக்கவேண்டும்.
ஆக, யார் ஆண்டால் என்ன, ஆளாவிட்டால் என்ன? எனக்கெதற்கு இந்தக் கவலை கிவலையெல்லாம்… புரிந்ததா முட்டாள்களே?
பிலிம் ரஜினிகாந்த் உவாச : (இது என்ன படத்தில் வந்த ‘தத்துவப்’ பாட்டு என்று நினைவில்லை)
…ராமேன் ஆண்டாலும் ராவணென் ஆண்டாலும்
எனக்கொரு கவலெயில்லே… ஹேய்ய்
…
…நாந்தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா ஹ்ஹ… வெள்ளியில் கூஜா…
…
நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்
கேக்குற வரத்த கேட்டுக்கடா…ஹேய்ய்
பின்குறிப்பு: பொதுவாக ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரி முடிவதற்கு முன்னால், கடைசியாக – மத்யமாவதி ராகத்தில் ஒரு பாட்டுடன் மங்களம் பாடி விடுவார்கள்; இந்த கட்டுரைத்(!) தொடருக்கும்(!!) இதுவே கடைசிப் பதிவு என்பதனால், இந்தத் தலைப்பு.
-0-0-0-0-0-0-0-0-
தொடர்புள்ள பதிவுகள்:
-
[+4] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [91-102] 16/09/2013
-
ஆம். நான் மோதி/பாஜக விடம் ‘பொட்டி’ வாங்கியிருக்கிறேன் 14/09/2013
-
[+3] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? [71-90] 13/09/2013
-
[+2] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [51 – 70] 12/09/2013
-
[+1] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [22 – 50] 10/09/2013
-
108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? 09/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-) 01/09/2013
-
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013
-
ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா? 01/04/2013
-
போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
September 18, 2013 at 16:19
\\\ பின்னர் கலவரம் நடந்தது. முஸ்லீம், ஹிந்து கலவரவாதிகள் பலர் ஒருவரையொருவர் கொன்றுகொண்டனர். \\\
இதிலிருந்தே தெரிகிறது இந்த வ்யாசத்தை எழுதிய ஆசிரியரின் மதவெறி.
அக்மார்க் மதசார்பின்மை வாதிகளான தீஸ்தா சீதளவாத அம்மணி மற்றும் அருந்ததிராய் அம்மணி போன்றோர்….. குஜராத் கலஹம் பற்றிப்பேசும்போதெல்லாம்…. அங்கு கொல்லப்பட்டது முஸ்லீம்கள் கொலை செய்தது ஹிந்து / காவி பயங்கரவாதிகள் எனப் பொறுப்புடன் சொல்வார்கள். இவர்களது பொட்டி வாங்கிய தகவல்களை இணையந்தொறும் டிண்டோரா போடும் மதசார்பின்மை (வெறி) அடிப்பொடிகளும் இவ்வாறே பொறுப்பாகச் சொல்வார் என அறிக.
குஜராத் கலவரத்தில் ஹிந்துக்களும் செத்தார்கள் என்று சொல்வதிலிருந்தே உங்களது ஹிந்து மதவெறி பறைசாற்றப்பட்டுள்ளது.
ஆகவே!!!!!
September 18, 2013 at 17:37
சீக்கிரம் வரட்டும் சார். யூ.ஆர்.அனந்தமூர்த்தி வெளிநாடு போக ஆசைப்படுகிறார். கூடவே அருந்ததி, திக் விஜெய், மணி சங்கர் அய்யர், பிருந்தா கராத் இவர்களையும் சேரத்து சீனாவுக்கு அனுப்பி விடுவோம். சீனாவை அடக்க அதுதான் வழி..
http://ammanji.wordpress.com
September 19, 2013 at 20:01
சார் கொஞ்சம் பெரீய்ய பதிவு.
http://majpoovannan.blogspot.in/2013/09/blog-post_19.html
September 20, 2013 at 11:30
அண்ணே எனக்கு பல டௌட்டு! :
உங்கள் கட்டுரையை படித்தேன் புள்ளி (புல்லரிக்கும்) விவரங்களுடன் எழுதி உள்ளீர்கள் !அப்படியே எனது கீழ்கண்ட சந்தேகங்களையும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்:
1.பின் ஏன் மோதி மீண்டும் மீண்டும் பெருவாரியாக தேர்ந்து எடுக்க படவேண்டும்?
2.பீகார்,உ.பி,அஸ்ஸாம்,போன்ற மாநிலங்களில் சமீபத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில் தூண்டி விடுவதற்கு மோதி இருக்கும் நிலையில் ஏன் கலவரமோ,தீவிரவாத தாக்குதலோ நடக்கவில்லை?
3. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் சிறுபான்மையனரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தும் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?
4. பிரதமர் வேட்பாளராக மோதி செய்த தங்களுக்கு மட்டுமே தெரிந்த டகால்டி வேலைகள் என்ன?
5.முதலில் முதலமைச்சர் ஆவதற்கு கேசுபாய் படேலுக்கு குழிபறித்தார் அடுத்த இரண்டுதடவை முதல்வர் ஆனதற்கு யாருக்கு குழிபறித்தார் பக்கத்தில் நின்று பார்த்த நீங்கள் பதில் சொல்லுங்கள்.
6.கடைசியாக மோதி அரசை கூசாமல் கேள்விகள் கேட்கும் நீங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் ஆட்சி புரிந்து ஊழல்களில் திளைத்து ஒரு குடும்ப ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் ஆட்சியை பற்றி என்ன சொல்லுகிறீர்கள்,இந்த ஆட்சியே தொடரவேண்டுமா ,அப்படி இல்லை என்றால் அதற்கு மாற்று என்ன?
September 20, 2013 at 14:47
” சோனியாவோ,கருணாநிதியோ,ஜெயாவோ,மாயாவதியோ,முலயமோ …” வப் பாருங்கையா! அது கச்சி!
ஆயிரம் குற்றச்சாட்டு வந்தாலும் கலைஞர் ஜட்டியையோ ,முலாயமின் ஜட்டியையோ அவர்கள் உயிர் உள்ளவரை /அவர்களாக விலகும் வரை” தோய்க்கத் தயாரா இருக்காம் பாரு! அவன் தொண்டன்!
ஜட்டி மீது ஜட்டி வந்து என்னைச் சேரும்னு பாடறத வுட்டுப் புட்டு , மவனே சொந்தமாவா சிந்திக்கிற? பொய்க்கால் குதுர! ஏண்டா எட்டி ஒதைச்சு காரி உமியறீங்க?
” 2009 தேர்தலில் ( மன்மோகன் ) பிரதமர் ஆக தொடர்வார் என்ற நிலைக்கு தான் வோட்டுக்கள் விழுந்தது.அவர் ஒன்றும் மக்கள் தலைவர் கிடையாது.நம்ம ஒ பன்னீர்செல்வம் மாதிரி உட்கார வைக்கப்பட்டவர்” – ஆனாலும் பிரதமராகவே தொடரலே? மோடி வாணாம் வாணாம் னுட்டு குஜராத் (அது ஒரு மாநிலமுன்னு, கண்றாவி!) ஜனங்க மூணு தேர்தல்ல ஓட்டுப் போட்ட பின்னாடியும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ண வெக்கமா இல்லே?
பூவண்ணன் ஐயா, காங்கிரஸ் காரவுகளுக்கு உங்களப் பத்தி இன்னுமா தெரியல? பாரத ரத்னா கெடச்சிருக்கணுமே, இந்நேரம்! ஆனா உஷார் பார்ட்டிதான் நீங்க; தொண்டருங்களுக்கு என்ன கிடைக்கும்னுதான் சொல்லிட்டீங்களே!
September 20, 2013 at 14:49
” சோனியாவோ,கருணாநிதியோ,ஜெயாவோ,மாயாவதியோ,முலயமோ …” வப் பாருங்கையா! அது கச்சி!
ஆயிரம் குற்றச்சாட்டு வந்தாலும் கலைஞர் ஜட்டியையோ ,முலாயமின் ஜட்டியையோ அவர்கள் உயிர் உள்ளவரை /அவர்களாக விலகும் வரை” தோய்க்கத் தயாரா இருக்காம் பாரு! அவன் தொண்டன்!
ஜட்டி மீது ஜட்டி வந்து என்னைச் சேரும்னு பாடறத வுட்டுப் புட்டு , மவனே சொந்தமாவா சிந்திக்கிற? பொய்க்கால் குதுர! ஏண்டா எட்டி ஒதைச்சு காரி உமியறீங்க?
” 2009 தேர்தலில் ( மன்மோகன் ) பிரதமர் ஆக தொடர்வார் என்ற நிலைக்கு தான் வோட்டுக்கள் விழுந்தது.அவர் ஒன்றும் மக்கள் தலைவர் கிடையாது.நம்ம ஒ பன்னீர்செல்வம் மாதிரி உட்கார வைக்கப்பட்டவர்” – ஆனாலும் பிரதமராகவே தொடரலே? மோடி வாணாம் வாணாம் னுட்டு குஜராத் (அது ஒரு மாநிலமுன்னு, கண்றாவி!) ஜனங்க மூணு தேர்தல்ல ஓட்டுப் போட்ட பின்னாடியும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ண வெக்கமா இல்லே?
பூவண்ணன் ஐயா, காங்கிரஸ் காரவுகளுக்கு உங்களப் பத்தி இன்னுமா தெரியல? பாரத ரத்னா கெடச்சிருக்கணுமே, இந்நேரம்! ஆனா உஷார் பார்ட்டிதான் நீங்க; தொண்டருங்களுக்கு என்ன கிடைக்கும்னுதான் சொல்லிட்டீங்களே!
September 20, 2013 at 05:12
ராமசாமி
அபாரம். வேறு என்ன சொல்வது. நான் என் ஃபேஸ்புக்கில் மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகளை ஷேர் செய்யப் போகிறேன். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. தலைப்பை மட்டும் படித்து விட்டு “நீ இத்தனை நாள் மோடியை ஆதரித்து விட்டு இப்போ ஏன் திடீரென்று வெறுக்கிறேன்” என்று போஸ்ட் போடுகிறாய் என்று கேட்க்கிறார்கள் :) நான் எங்கு போய் முட்டிக் கொள்வது? மோடி பிரதமர் வேட்ப்பாளராக அறிவிக்கப் பட்டதில் இருந்து இணையம் முழுவதும் வாந்தி, வயிற்றால, முற்போக்கு, பிற்போக்கு, பொறம்போக்கு எல்லாமாகப் போய் ஒரேயடியாக நாறித் தொலைகிறது. மோடி இந்த உலகத்தில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் யாராவது ஒருவர் தான் இருக்க முடியும் என்று தமிழ் பட வில்லன் போல ஒருவர் பேசுகிறார். கேட்டால் அவர் ஞான பீடை விருது வாங்கியிருக்கிறாய் அவரைப் பற்றி நீ பேசக் கூடாது என்கிறார்கள். முதலில் மோடி ஜெயித்தால் தான் இந்தியாவில் இருந்து போய் விடுவேன் என்றார். நான் பதிலுக்குப் போய்த் தொலை என்றேன் உடனே என்னை வன்முறையாளன், மத வெறியன், வெறுப்பாளன் இந்தியாவில் உள்ள அறிஞர்களை எல்லாம் கொல்லத் துடிப்பவன் என்கிறார்கள். இன்னொருவர் மோடிக்கு சகிப்புத் தன்மையே இல்லை அவர் எப்படி ஒரு பில்லியன் மக்களை ஆட்சி செய்ய முடியும் ஆகவே அவரை கழுவில் ஏற்ற வேண்டும் என்கிறார். இப்படித்தானே இந்தியாவில் மோடி வெறுப்பு என்பது கட்டற்ற காட்டாறாக ஓடுகிறது. இது வரை அரசியல் பேசியறியாத ஆட்கள் எல்லாம் தீடீரென்று எழுந்து ஆகா எழுகுது பார் மதவெறி என்று மோடியை எதிர்த்து வீராவேசமாகக் கிளம்பி விடுகிறார்கள். இந்தியர்களைப் போல தங்கள் நலத்தினை தங்கள் முன்னேற்றத்தினை வெறுக்கக் கூடிய ஜீவராசிகளை உலகில் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது. நம்மால் முடிந்ததைச் சொல்லி வைப்போம். இன்னும் பீ ஆராய்ச்சி செய்யும் ஆட்களையெல்லாம் காணோமே இன்னமதான் வருவார்களோ? நேற்று என்னிடம் டெமாக்ரசி பற்றி க்ளாஸ் எடுக்கச் சொன்னார் உங்கள் பீ மாஸ்ட்டர். நான் பீ ஆராய்ச்சியாளர்களுக்கு எல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டேன். உங்களுக்கு எனது நன்றி.
ச.திருமலைராஜன்
September 21, 2013 at 10:21
சேஷகிரி சார்
தமிழகத்தில் பிறக்கும் குழந்தை வாழும் வாய்ப்புகள் குஜராத்தை விட அதிகம்.பெண் குழந்தைகள் வாழும் வாய்ப்பு மிக அதிகம்
அந்த குழந்தை பொறியியல்,மருத்துவம்,கலை,அறிவியியல் மேல்படிப்புகள் படிக்க வாய்ப்புகள் மிக அதிகம்,பெண் குழந்தைகளின் நிலையோ குஜராத்தை விட பல் படிகள் மேலே
குழந்தைக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைக்க வாய்ப்புகள் குஜராத்தை விட அதிகம்
அந்த குழந்தைக்கு மாநில,மத்திய அரசில் வேலை கிடைக்க வாய்ப்புகளும் அதிகம்.பெண் என்றால் குஜரதொடு ஒப்பிடும் போது மிக அதிகம்
காவல்துறை,துணை ராணுவம் எல்லாவற்றிலும் தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தை சேரும் வாய்ப்புகள் குஜராத்தை விட இரு மடங்குக்கும் மேல்
ஆன்-பெண் சதவீதம்,கல்வியில்,வேலைவாய்ப்பில் பெண்களின்,பழங்குடிகளின் ஒதுக்கீட்டு வகுப்பினரின் பங்கு கடந்த 12 ஆண்டு ஆட்சியில் எவ்வளவு அதிகரித்துள்ளது
குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் அடைந்த முன்னேற்றம் என்ன
மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை அடைந்த முன்னேற்றங்கள் என்ன.அதில் நாட்டில் எந்த இடத்தில உள்ளது
மருத்துவர்கள்,செவிலியர்கள்,பொறியாளர்கள்,ஆசிரியர்கள் என பெரும்பான்மையான வேலைகளுக்கு அண்டை மாநிலங்களை நம்பி இருந்த நிலையில் இருந்து எவ்வளவு மாற்றம் கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது
பெண் குழந்தைகளை கொல்லாத,அனைத்து சாதியினர்,மதத்தினருக்கும் அவர்கள் விகிதாசாரங்களுக்கு மிக அருகில் அரசியலில்,கல்வியில்,வேலைவாய்ப்பில் பிரதிநிதுதுவம் இருக்கும் ,படிக்க,வேலை பார்க்க,அடிப்படை மருத்துவ வசதிகளை பெறுவதில் ,அதிக நாள் உயிர் வாழ வாய்ப்புகள் அதிகம் இருக்கும் மாநிலத்தில் வாழ்வதை விட மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கும் மாநிலத்தில் வாழ்வது சிறந்ததா
September 22, 2013 at 20:27
திரும்ப திரும்ப ஒரே விசயத்தைதான் கூறி வருகிறீர்கள்.பின் ஏன் மோதி அவர்கள் இவ்வளவு எதிர்ப்புக்களுக்கு மேல் மூன்றாம் முறையும் பெருவாரியாக அம்மக்களால் தேர்ந்து எடுக்க பட்டிருக்கிறார் ?
மோதி வேண்டாம் என்றால் வேறு மாற்று என்ன?
September 23, 2013 at 20:22
நீங்க பிரதமர் பதவியை ஏதோ கல்கி அவதாரம் போல கருதுவது வியப்பு தான்.நம்முடைய சட்ட அமைப்பில் மக்களுக்கு நேரடியாக பலன் தர கூடியது மாநில அரசுகள் தான்.மத்திய அரசு எந்த அழகில் இருந்தாலும் மாநிலத்தில் நன்கு ஆட்சி செய்யப்பட்ட கேரளா,தமிழகம்.ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் மக்களின் வாழ்வுக்கான அடிப்படை அளவுகோல்களில் நல்ல மாற்றங்களை விடுதலைக்கு பின் அடைந்துள்ளன
மாநில கட்சிகளின் கூட்டாட்சி நம்மை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் மத வெறி பிடித்த கட்சியின் ஆட்சியை விட பல மடங்கு சிறந்தது.கூட்டணி ஆட்சிகள் உருவான பிறகு தான் மாநிலங்களில் ஸ்திரத்தன்மை உருவானது.மக்கள் ஆட்சியின் அனைத்து தூண்களும் தங்கள் சக்தியை புரிந்து கொண்டு செயல்பட துவங்கின.நினைத்தால் பயன்படுத்த கூடிய 356 சட்ட பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் பொம்மை வழக்கில் தீர்ப்பு வழங்க,நீதிபதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் என்ற தீர்ப்புகள் வர கூட்டணி ஆட்சிகள் தான் காரணம்.
September 24, 2013 at 14:48
“மாநிலத்தில் நன்கு ஆட்சி செய்யப்பட்ட கேரளா,தமிழகம்.ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள்”(?!)
தமிழகம் நன்கு ஆட்சி செய்யப்பட்டதா எப்போது ? காமராஜருக்கு முன்னாலா? அல்லது அவருக்கு பின்பா ?
உங்களுக்கு ஐ .கே.குஜ்ரால் அல்லது கும்பகர்ணன் தேவகௌடா போன்றோர் தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சி சிறப்பாக தெரிந்தால் உங்களிடம் வாதம் பண்ணுவதில் அர்த்தமில்லை.
தற்சமயம் மாற்று கட்சி எதுவும் இல்லாத காரணத்தாலும்,இருக்கும் கட்சிகளில் மோதி தலைமையில் குஜராத்தில் நடந்துவரும் ஆட்சி எல்லோராலும் பாராட்ட படுவதாலும் ஊழலில் திளைக்கும் காங்கிரசுக்கு இவர் பரவாயில்லை என்று தோன்றுகிறது .
September 26, 2013 at 07:32
சார், நீங்கள் எழுதியவற்றில் பல காணங்களையும் என் பேஸ்புக் சுவரில் பதிவேன். நன்றி.
September 30, 2013 at 10:13
\\\ அனைத்து சாதியினர்,மதத்தினருக்கும் அவர்கள் விகிதாசாரங்களுக்கு மிக அருகில் அரசியலில்,கல்வியில்,வேலைவாய்ப்பில் பிரதிநிதுதுவம் இருக்கும் \\\
ஜாதிகள் ஒழிக. ஆனால் ஜாதி விகிதாசாரப்படி அரசியல் மற்றும் கல்வியில் வேலைவாய்ப்பில் ப்ரதிநிதித்துவம் இருக்கவேண்டும். இதற்குப்பெயர் முற்போக்கு சிந்தனை. பூவண்ணன் சார் உங்களை அடிச்சிக்க ஆள் கிடையாது.
மதத்தின் விகிதாச்சாரப்படி அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் ப்ரதிநிதித்துவம் என்பது தானே ஓட்டு வங்கி ராஜநீதியின் அடிப்படை அரிச்சுவடி. இப்படி லாலிபாப் காட்டிக் காட்டித்தானே மேல்விஷாரத்தில் இருந்த ஹிந்துக்களைத் துரத்தி அடித்து பின்னர் கீழ் விஷாரத்தையும் கபளீகரம் செய்ய விழைந்து……..ம்….பாவம் முஹம்மத் அலி ஜின்னா இல்லை….உங்களை மெச்சிக்க
April 8, 2014 at 09:30
—->>>>
‘vinoth’ dear,
thanks for your sense of humour! 8-)
__r.
March 21, 2019 at 18:59
[…] [மங்களம்] மோதி, ஒழிக ஒழிகவே… […]