ஆம். நான் மோதி/பாஜக விடம் ‘பொட்டி’ வாங்கியிருக்கிறேன்
September 14, 2013
சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள் – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய சாராம்சமும், என் பதில்களும் கீழே:
அ: நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.
பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார்.
பதில் 2: உண்மையில் என் போன்றவர்களின் எழுத்தினால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது – இதை அவர்கள் பொருட்படுத்துவதற்கு? மோதி/பாஜகவினர் முட்டாட்களா என்ன – இப்படி வலைப்பூக்களை நடத்திவரும் வேலையற்றவர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு? என்னைப் பற்றி அவ்வளவு உயர்வான எண்ணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கும் வேண்டாம். (ஆனால் ஒன்று: உங்கள் திராவிடக் கற்பனை வளமானது லெமூரியாவிலிருந்து தொடர்ந்து வந்து உங்களைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. பாவம் தான் நீங்கள்.)
பதில் 3: அப்படியென்றால் காங்க்ரெஸ்/திமுக கட்சிக்காரர்கள் உங்களுக்கு அசிங்கமாக மின்னஞ்சல் அனுப்ப, வார்த்தைக்கு ஒரு பைசா பணம் கொடுக்கிறார்களா என்ன? (இது உங்கள் தரத்துக்கு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும்)
ஆ: நீ ஆர்எஸ்எஸ் காவிக் காரன். உன்னிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்?
பதில் 1. நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இல்லை. இருந்ததும் இல்லை. ஏனெனில், என்னிடம் அதற்கேற்ற உழைப்பும், கட்டுப்பாடும், சுய அர்ப்பணிப்பும் இல்லை. நான் ஒரு ஆர்எஸ்எஸ் காரன் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொன்று: நான் உண்மையாகவே ஒரு ஆர்எஸ்எஸ் காரனாக இருந்திருந்தால், உங்களைப் போன்ற அற்பஜீவிகளை, இடது கையால் புறம் ஒதுக்கி மேலே சென்று கொண்டிருந்திருப்பேன்.
பதில் 2. நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் நபர்கள், பலர் ஆர்எஸ்எஸ்-ஸில் இருக்கிறார்கள். குண்டு சட்டியில் திராவிடக் கழுதையால் ஓட்டப் பட்டுக் கொண்டிருக்கும் உங்களை திடுக்கிட வைக்கிறேன் – இப்படிப்பட்ட அற்புதமான பலவிதமான (என்னுடைய) மனித நண்பர்களில் – நிறைய முஸ்லீம்களும் இருக்கிறார்கள். பல க்றிஸ்தவர்களும் இருக்கிறார்கள். சில யூதர்களும் கூட. தொட்டுக்கொள்ள சில ஜைனர்களும், பௌத்தர்களும். ஆனால் ஒரேயொரு ஸொராஸ்ட்ரியர்தாம். இவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். (முதலில் தம்பி, உங்கள் மலச் சட்டியிலிருந்து வெளியே வாருங்கள், நிறைய படியுங்கள், நேரடி அனுபவங்களை அடையுங்கள், யோசியுங்கள் – எதையாவது வாழ்க்கையில் சாதியுங்கள்; பின்னர், எனக்கு வெறுப்பு மின்னஞ்சல்களை / பின்னூட்டங்களை அனுப்புங்கள். சரியா?)
பதில் 3. நான் இருந்தது இடதுசாரியியக்கம் ஒன்றில் – அதுவும் பல பத்தாண்டுகள் முன்பு. அதில் உறுப்பினனாக இருந்திருக்கிறேன். (இந்த இயக்கத்திலும் அர்ப்பணிப்பு மிகுந்த நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்)
இ: நீ ஒரு பார்ப்பன வெறியன். கழிசடைக் கலாச்சாரத்தைத் தூக்கிக் பிடிப்பவன். சாதி வெறியன்.
ஆம். ஆம். ஆம். எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா எனக்கு? 8-)
என்னைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள். சுஜாதாத் தனமாக – என்னைப் பற்றித் துல்லியமாகக் கணித்தமைக்கு உங்களுக்கு என் வந்தனம்.
ஆனால், என் கருத்துக்களை, சரியென்று என் மனதுக்குப் பட்டவற்றை என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். உங்களைப் போல அற்ப மின்னஞ்சல் முகவரிகளின் பின் மறைந்து கொண்டு, ஒரு தொடர்புமில்லாமல் அரைகுறைத் தமிழில் கோழைத்தனமாகக் கல்லடித்து விட்டு ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை.
ஈ: மோடியின் அயோக்கியத்தனங்கள் (கோத்ரா, முஸ்லீம் ஒழிப்பு) ஒன்றையும் நீ கண்டுகொள்ள மாட்டாய். ஒரு பக்க நியாயம் மட்டுமே தான் உன் எழுத்தில்.
முதலில் பரவலாகப் படியுங்கள். விவாதியுங்கள். அற்பர்களால் புகட்டப் பட்டவைகளை வாந்தியெடுக்காதீர்கள். குஜராத் ஒரு தடவையானும் போயிருக்கிறீர்களா? அதையே விடுங்கள் – ஒரு குஜராத்தி முஸ்லீம் நண்பரையாவது பெற்றிருக்கிறீர்களா. வெறுமனே உளறாதீர்கள்.
நான் ஒரு நீதிபதியெல்லாம் இல்லை. அரைகுறை ’நடு நிலைமை’ இழவுகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே என் நியாயங்கள் / தர்க்கங்கள் எல்லாம் ஒரு பக்கம் தான் – அதாவது, என் பக்கம் மட்டுமேதான். இவ்வளவு பிலாக்கணம் வைக்கும் நீங்கள், உங்கள் பக்க நியாயங்களை, ஏன் எழுதக் கூடாது?
என் அனுபவங்களையும் படிப்பறிவையும் சுற்றித்தான், என்னால் எழுதமுடியும். என்னால் எழுதமுடிகிறது. அவ்வளவே. உங்களுக்கு இம்மாதிரி எதுவும் இல்லை. எழுதவும் முடிவதில்லை. பாவம் தான். மேலதிகமாக என் மூளையும் உங்களை விட அதிகமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது, என்ன செய்வது, நீங்களே சொல்லுங்கள்.
போய் முதலில் ஒண்ணாங்கிளாஸில் சேர்ந்து ஒழுங்காக நாலு வார்த்தை தமிழில் எழுதக் கற்றுக் கொண்டுவிட்டு பின் வாருங்கள், சிலம்பமாடலாம்.
ஆனால் பாவம், உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகலாம் இதற்குக் கூட! வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய…
மற்றபடி, என்னுடைய செல்லங்களான அனைத்து இணைய வெறுப்பாளர்களுக்கும் பதில்:
போங்கடா போக்கத்த மின்னஞ்சல் பின்னூட்டப் போராளிகளா… உங்க வாழ்க்கையில உருப்படியாக ஏதாவது ஒன்றையாவது செய்யுங்கடா (எடுத்துக் காட்டாக, உங்கள் குண்டிகளை நீங்களே சுத்தமாகக் கழுவிக் கொள்ளுதல்) – அப்பால என்னோட மோதி தொடர்பா மோதலாம். சரியா?
தொடர்பான பதிவுகள்:
- [+3] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? [71-90] 13/09/2013
- [+2] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [51 – 70] 12/09/2013
- [+1] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [22 – 50] 10/09/2013
- 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? 09/09/2013
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
September 14, 2013 at 12:15
தங்களின் விரிவான அர்த்தபூர்வமான பதில்களை படித்தேன்.என்ன சொன்னாலும் இந்த மரமண்டைகளுக்கு உரைக்காது.இவர்களுடன் உரையாடுவதற்குப்பதில் நல்ல கருங்கல் சுவரில் முட்டிக்கொள்ளலாம் . மோதி அவர்களுக்கு ஆதரவு என்றால் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பா?.இது இந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.நிச்சயமாக குஜராத்தில் இல்லை என்று உறுதி படக்கூறலாம்.இவர்களை நீங்கள் பொருட்படுத்த தேவை இல்லை என்று கருதுகிறேன்.
September 14, 2013 at 16:07
நானும் பொட்டி வாங்கி இருக்கிறேன். எல்லாம் வத்திப்பொட்டி தான். ஒரு பைசா பெயர மாட்டேங்குதே .. என்ன கட்சி நடத்தறாங்க ? இந்தாளு தனக்கு ஓர் நாளைக்கு ஏழு சப்பாத்தி போதும்கறார். இவரெல்லாம் பிரதமரானா விளங்கும் .. ஒரு முப்பெரும் விழா இல்லே, ஒரு கவியரங்கம் இல்லே, என்ன கட்சியோ என்ன தலைவரோ .. .
http://AMMANJI.WORDPRESS.COM
September 15, 2013 at 09:08
இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு பதிலளிப்பதே கூட இவர்களின் தரத்துக்கு அதிகப்படிதான்… நீங்களே குறிப்பிட்டதைப்போல , இவர்களையெல்லாம் இடது கையால் புறம்தள்ளுங்கள் ஐயா…..
September 16, 2013 at 00:40
அன்புள்ள ராமசாமி ஐயா,
கட உபநிடதத்தில் நசிகேதன் எமதர்மராஜனைப் பார்த்துக் கேட்கிறான், “இறப்புக்கு பின் வாழ்கிறோம் என்று சிலரும், இல்லை என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். எது உண்மை என நீ எனக்குச் சொல். இதுவே நான் கேட்கும் மூன்றாவது வரம்”.
நரேந்திர மோடி விஷயமும் இப்படித்தான் உள்ளது. குஜராத் கொலைகளின் மூல மனிதர் மோடி என்று சிலரும், அவர் உத்தமர் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். அவரது ஆட்சியில் “குஜராத் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது” என்று சிலரும், “அப்படி சிலாகிக்கும்படி ஒன்றும் இல்லை, அதற்கு இணையாகவோ, மேலாகவோ மற்ற சில மாநிலங்கள் வளர்ந்துள்ளன” என வேறு சிலரும் சொல்கிறார்கள். எது உண்மை?
இந்த இரண்டு முக்கிய கேள்விகளுக்கு இணையத்திலும், பத்திரிகைகளிலும் வெளியாகும் கட்டுரைகளுக்கு மேலே நான் எதுவும் படித்ததில்லை. இவற்றின் அடிப்படையில் தெளிவு கிடைப்பது கடினமாக இருக்கிறது.
இந்த இரண்டு கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்து நீங்கள் கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். அல்லது நீங்கள் சிறந்ததாகக் கருதும் கட்டுரைகள், நூல்களை பரிந்துரைத்தால் நன்று. இவை முன்முடிவுகள் அற்று தகுந்த ஆதாரங்களோடு, தீவிர ஆராய்ச்சி நோக்கில், ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரை போல் அமைந்திருந்தால் நலம். ஏதாவது உலக தரம் வாய்ந்த peer reviewed journal களில் வெளியாகி இருந்தால் இன்னும் உத்தமம்.
நீங்கள் பேராசிரியர் மது பூர்ணிமா கிஷ்வர் அவர்களின் “மோடிநாமா” என்ற கட்டுரை தொகுப்பு பற்றி சொல்லி இருந்தீர்கள். மிக நீண்டு இருந்ததால் இன்னும் நான் படிக்கத் தொடங்கவில்லை (இது அச்சிட்ட புத்தக வடிவில் கிடைக்கிறதா?). அதற்கு முன்பாக அவரது வலைத்தளத்தில் கிடைக்கும் மற்ற விஷயங்கள் பற்றிய ஓரிரண்டு கட்டுரைகளை படித்தேன். மற்ற வலைத்தளங்கள் போன்றே சாதாரண அரட்டை பாணியிலான எழுத்தாகவே எனக்கு தோன்றியது. நான் மோடி பற்றி படிக்க விரும்பும் தீவிர ஆராய்ச்சி பாணியில் இல்லை. அதே சமயம், அவரை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. காஷ்மீர் தொடங்கி பல விஷயங்கள் பற்றி கள ஆய்வு செய்து நூல்கள் எழுதி இருக்கிறார் என்பதையும், பலரும் மேற்கோள் காட்டும் (citations) கட்டுரைகள் பலவற்றையும் ஆராய்ச்சி ஏடுகளில் வெளியிட்டுள்ளார் என்பதையும் கூகுள் துணை கொண்டு அறிந்து கொண்டேன். எனவே, நீங்கள் “மோடிநாமா” புத்தகத்தை பரிந்துரைத்தால் படிக்க தயாராக உள்ளேன்.
இதை பற்றி விவாதிக்க ஒழுங்காக குண்டி கழுவுதல் போன்ற முக்கிய தகுதிகள் தேவை என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நியாயம் தான். நிச்சயமாக தெரியாவிட்டாலும், மோடி பற்றி அறிந்து கொள்ள எனக்கு இரண்டு தகுதிகள் உள்ளதாக நான் நம்புகிறேன். முதல் தகுதி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை எனக்கு உள்ளது. இரண்டாவது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்க போதிய பின்புலம் எனக்கு உள்ளது.
உங்களது பதிவொன்றில் சொன்ன ஒரு விஷயம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. மோடியை எதிர்த்து பின்னூட்டம் இடுவோர் குஜராத் சென்று பார்த்திருக்கிறீர்களா என கேட்டீர்கள். இது சரியான விவாதம் அன்று. மோடியை ஆதரித்து பின்னூட்டம் இடுவோரில் எத்தனை பேர் குஜராத் சென்று பார்த்துள்ளார்கள்? மேலும், நேரில் சென்று பார்ப்பது என்பது எல்லோருக்கும் எளிதில் சாத்தியப்படாது. “சாவுக்கு பின் என்ன” என நசிகேதன் கேட்ட பொது, “நீயே செத்துப் பார்” என எமதர்மராஜன் சொல்லி இருந்தால் அழகாக இருந்திருக்காது!
அன்புடன்,
வெங்கடேசன்.
September 16, 2013 at 09:19
திரு.வெங்கடேசன் அவர்களுக்கு தாங்கள் தெரிவித்து இருந்த திரு.மோதியை பற்றிய சந்தேகங்கள் எல்லாம் சரிதான். அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்க போதிய பின்புலம் எனக்கு உள்ளது என்று கூறி கொள்ளும் நீங்கள் முதலில் மது பூர்ணிமா கிஸ்வர் எழுதிய “ஆராய்ச்சி பூர்வமான” “மோதி நாமா” என்ற கட்டுரையை உடனே படியுங்கள் அதில் உங்களது பெரும்பாலான சந்தேகங்கள் தீர்ந்து விடும் அதே போல் சமீபத்தில் ‘உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாதித்த போது மோதி எடுத்த நடவடிக்கைகளை பற்றி ‘மது பூர்ணிமா கிஸ்வர்’ ஒரு கட்டுரை( “Neither a Rambo Act Nor a Publicity Gimmick”) எழுதியுள்ளார்.அதன் சுட்டியையும் கீழே கொடுத்துள்ளேன் அதையும் படியுங்கள்.இது தவிர நம் மாதிரி நபர்கள் குஜராத் சென்று உண்மை நிலையை பார்க்க முடியாததால் இது பற்றி துக்ளக் பத்திரிகை நேரில் சென்று எழுதியதை படியுங்கள். இதற்கெல்லாம் மேல் திரு. ராமசாமி போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளில் நம்பிக்கை வையுங்கள்.அது நிச்சயம் வீண் போகாது.
http://www.manushi.in/articles.php?articleId=1711
September 16, 2013 at 13:26
உங்களுடைய காரணங்கள் பெரும்பாலும் கருணாநிதியை
ஏன் வெறுக்கிறேன் என்பதற்கான பதில் போலவே தெரிகிறது.
மோடி கூடாது என்று அத்வானி சொல்வதற்கு ஒரு காரணம்
இருக்கும் போது எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கும்
என்பதை நீங்கள் ஏன் புரிந்துகொள்ளக் கூடாது.
September 16, 2013 at 13:49
’வெங்கடேசன்,’ ‘புகழேந்தி,’
1. மது கிஷ்வர் அவர்களின் கட்டுரைகள் அடிப்படை நேர்மையுடனும், தரவுகளுடனும் எழுதப் பட்ட அறிவியல் பூர்வமான கட்டுரைகள் தாம். மன்னிக்கவும் – இவை நிச்சயம் ‘மற்ற வலைத்தளங்களைப் போல, சாதாரண அரட்டை பாணியில்’ எழுதப் பட்டவையல்ல. இரண்டொரு மாதங்களில் அவருடைய புத்தகம் வந்துவிடும். அவசியம் படிக்கவும். நீங்கள் டெல்லியில்தானே இருக்கிறீர்கள் – அப்படியானால், மது அவர்களை ஏன் நேரில் சந்தித்துப் பேசக் கூடாது? அவர் பழகுவதற்கும் இனிமையானவர். (ஆனால் அவருக்கு நேரம் இருக்க வேண்டும்)
2. தமிழனுடைய தலையாய பிரச்சினையே அவன் சோம்பேறி – நீளமாக எது இருந்தாலும் படிக்க மாட்டான். அதனால் தான் நம் வரலாறு பற்றி ஒரு குப்பையும் தெரிந்து கொள்ள மாட்டான். தயவுசெய்து இந்த வகையில் நீங்கள் ஒரு அதமிழனாக இருக்க முடியுமா?
3. ‘குஜராத்’ சென்று பார்த்தீர்களா’ என எழுதப் பட்டது – ஒரு குப்பையும் தெரியாமல் ஆவேசப் பட்டவர்களைக் குறித்துத் தான். மேலும் – என்னைப் பொருத்தவரை, தீவிரமாக ஐயந்திரிபற ஒரு விஷயத்தை அறிய முற்படுபவனுக்கு ஒரு குஜராத் உலா என்பது பெரிய விஷயமல்ல. ஆனால், நாற்காலிப் போராளிகளுக்கு இம்மாதிரிச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். ஆகவே அவர்களைப் பற்றிய கவலையை விடுங்கள்.
4. அத்வானி அவர்களுடைய காரணங்கள் சரியாகவே இருக்கலாம். இவற்றை நான் புரிந்து கொள்ள மறுக்கவில்லை. எப்படி நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? இப்படியெல்லாம் மாற்றுக் கருத்துகள் செரிக்கப் பட்டு – ஒரு இயக்கத்திலிருந்து ஒரு தலைவன் வெளிவருவதே, அந்தத் தலைவன் அதிருப்தியாளர்ளை மறுபடியும் மறுபடியும் எதிர்கொள்வதே – ஒரு முதிர்ச்சியடைந்து வரும் ஜனநாயகத்தின் அறிகுறி. மற்ற கட்சிகளில் இப்படி நடக்குமா சொல்லுங்கள்?
5. இந்த சமயத்தில், மறுபடியும் நம் நண்பர் கருணாநிதி அவர்களை எடுத்துக் கொள்ளூங்கள் – சம்பத், மதியழகன், நெடுஞ்செழியன், எம்ஜியார், வைகோ, தா கிருட்டிணன், வீரபாண்டி ஆறுமுகம், பரிதி என நீளும் அந்தப் பட்டியல். திமுக வில் ஜனநாயகம் இருந்ததில்லை. இருக்கவும் இருக்காது.
6. நான் திமுக எடுத்துக் காட்டுகளைக் கொடுப்பது – இந்த வேறுபாடுகளைச் சுட்டவே. YMMV.
… நன்றி.
September 16, 2013 at 14:58
திமுக உதாரணத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பூவண்ணன் சார் இட்லிவடையில்……..ஐயகோ! காலம் காலமாய் தலைவராய் இருந்த அட்வாணியை கட்சியில் ஓரங்கட்டி மோடி வந்திருக்கிறார். சங்கர்சிங்க் வகேலா மற்றும் கேஷுபாய் படேல் போன்று எத்தனை பேரை இவர் ஜீர்ணம் செய்துள்ளார்.இப்படி வேறெந்தக் கட்சியில் இருந்திருக்கும் என்று குமைந்துள்ளார். தாங்கள் திமுக ஜெலுசில் டோஸ் குடுத்து விட்டீர்கள்.
ந்ருபேன் சக்ரபொர்த்தி, சோம்நாத் சேட்டர்ஜி போன்றோரெல்லாம் கொண்ட கொளுகைக்காக இடது சாரிகளால் சாரி சொல்லப்பட்டு கடாசப்பட்டதும் சரித்ரம் தானே.
மோதி ப்ரதம மந்த்ரியாகவெல்லாம் ஆகவில்லை. ஆட்சிக்கு வந்தால் இவரே ப்ரதமராவார் என்று அறிவித்ததற்கே இப்படி வயிற்றெறிச்சல் படும் பார்ட்டிகள்….. இவர் எங்காவது ப்ரதமராக வந்து விட்டால்……..ஜெலுசில் கொப்பரைகளில் இவர்களை ஊறப்போட வேண்டியது தான்.
தன் கருத்தை வாசித்து உருவாக்கிக் கொள்பவர்…..குஜராத் போகாமலிருக்கலாம்…….குஜராத் பற்றி எழுத முனைபவர்கள்……நேர்மையுடன் ஒரு கருத்தாக்கத்தை படைக்க முனைந்தல் கண்டிப்பாக குஜராத் போய் நடப்புகளை நேரில் கண்டு எழுத வேண்டும்.
கட் பேஸ்டில் காலந்தள்ளி லக்கியாகப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கையில் சொந்த செலவில் குஜராத்துக்குப் போய்க் களமிறங்கி மோடியைப் பற்றிச் சூனியங்களுக்குச் சொந்த செலவில் புரிய வைக்க வேண்டும் என்று சொல்லும் உம்மைப் போன்றோரும் இருந்தால் இந்த நாடு விளங்குமா?
அல்லது Microsoft Tools – copy paste – cut paste இவையெல்லாம் தான் விளங்குமா?
நீங்கள் காங்க்ரஸுக்கு மட்டும் ஆப்பு வைக்கவில்லை. Microsoft – க்கே ஆப்பு வைக்க முயல்கிறீர்கள்.
ஆகவே!!!!
September 16, 2013 at 21:51
அன்புள்ள சேஷகிரி, ராமசாமி ஐயா,
நீங்கள் மோடி விஷயத்தில் தெளிவு அடைந்துவிட்டீர்கள். எதை படித்ததன் மூலம் இந்த தெளிவு கிடைத்தது என்பதை அறிந்து கொள்ளத்தான் எழுதினேன்.
நான் படித்த கிஷ்வரின் ஒன்றிரண்டு கட்டுரைகளில், சேஷகிரி அவர்கள் குறிப்பிட்ட உத்தராகண்ட் கட்டுரையும் அடக்கம். இங்கே முக்கிய பிரச்சனை மலை மீது இருந்த மக்களை கீழே கொண்டு வருவது தான். கீழே வந்தபின் ஹரித்வாரில் இருந்து குஜராத்துக்கு அழைத்து வருவது பெரிய விஷயமா என தெரியவில்லை. தமிழக அரசு கூட நம் மாநில யாத்திரீகர்கள் ஊர் வந்து சேர நடவடிக்கை எடுத்ததாக செய்தி வெளியானது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததா? கிஷ்வரின் கட்டுரையை பொறுத்தவரை, இந்திய ராணுவம் பற்றி குறிப்பு ஏதும் இல்லை. இந்த பிரச்சனையில் முக்கிய பணியாற்றியது இந்திய ராணுவம்தான் என்பதை மறுக்க முடியாது. எனவே, மோடி தலைமயிலான குஜராத் அரசினரின் பணி பற்றி விளக்கும் ஒரு கட்டுரை, அதை இந்திய ராணுவம் செய்த சேவையின் பின்புலத்தில் வைத்துத்தான் பேச வேண்டும். அதுவே சரியானது என்பது என் கருத்து. இப்படி இல்லாமல், மோடி குழுவை பற்றி மட்டும் கட்டுரை பேசுகிறது. மேலும், அவர்கள் அமைத்த முகாமில் இருந்த இணையம் இணைப்பு, தொலைபேசி இணைப்பு போன்றவற்றை பற்றி மட்டுமே சொல்கிறது. இந்த குழு எத்தனை குஜராத்திகளை மீட்டது என்பது பற்றி கூட குறிப்பு இல்லை. எனவே, இந்த கட்டுரை என்னை ஈர்க்கவில்லை.
எனினும், உத்தரகண்ட் விவகாரம் எனக்கு முக்கியமில்லை. இதை விட்டு விடுவோம்.
குஜராத் வளர்ச்சி, குஜராத் கலவரம் ஆகிய இரண்டு பற்றி அறியவே விரும்புகிறேன். நானும் “மோடிநாமா” படித்து விட்டு, ஏதாவது பகிர்ந்து கொள்ள இருந்தால் தொடர்பு கொள்கிறேன். (கணினி திரையில் நீண்ட புத்தகங்கள் படிப்பது எனக்கு சிரமம் என்பதால் தான், கிஷ்வரின் புத்தக நீளம் குறித்து சொன்னேன்). உங்கள் பரிந்துரைக்கு நன்றி.
September 17, 2013 at 12:31
திரு.வெங்கடேசன் அவர்களுக்கு,
தங்கள் பின்னூட்டம் ஒரு அயர்ச்சியையே தந்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் அநியாயமாக கொல்லப்பட்ட தனது மாநிலத்தை சேர்ந்த (பீகார்)ராணுவ வீரர்களின் உயிர் இழப்பிற்கு, உயிரை இழப்பதற்கு தானே ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார்கள் என்று கூசாமல் பேசும் அமைச்சர் உடைய நாட்டில்,பக்கத்து தேசத்தில் தனது சொந்த இனம் என்று பீற்றி கொள்ளும் அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்ட போது,தனது பதவி,தன மக்களின்,சுற்றங்களின் பதவிகளே பிராதானம் என்று செயல் பட்ட முதலமைச்சர் உள்ள நாட்டில்.ஒரு சிறிய கோரிக்கைக்காக ஆண்டுகணக்கில் அரசு அலுவலகங்களிலூம் ,அமைச்சர்களிடமும் ,கையேந்தி நிற்கும் நாட்டில்,தனது மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தவுடன் அதை தீர்க்க உடனடியாக களத்தில் இறங்கும் முதலமைச்சரின் சேவை போற்றுதலுக்குரியது என்பது தங்களுக்கு ஏன் தெரியவில்லை.மேலும் ‘ மோதி நாமா’ 34 பக்கங்கள் கொண்ட கட்டுரைதான் அதிலும் படங்கள் எல்லாம் போக கட்டுரை 30 பக்கங்களுக்குத்தான் வரும்.அதை படியுங்கள் (உங்கள் மெயில் id தந்தால் அனுப்பி வைக்கிறேன்.) ஆனால் அதையும் நீங்கள் சரியான கண்ணோட்டத்தில் படிக்கவேண்டும்.
September 17, 2013 at 23:16
அன்புள்ள சேஷகிரி,
மோடிநாமா, நீங்கள் குறிப்பிடும் முப்பது பக்க pdf வடிவில் இணையத்தில் கிடைத்தது. வார இறுதியில் படிக்க திட்டமிட்டுள்ளேன். நன்றி.