வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள்
August 4, 2015
எனக்கு மூலம், பௌத்திரம், தறுதலைப்புலியாதரவு போன்ற தீராவியாதிகளுடன், அண்மையில் ஜிஹாத் வியாதியும் பிடித்திருக்கிறது!
ஆதாரம்:
குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)
August 1, 2015
அம்மணிகளே, அம்மணர்களே!
எச்சரிக்கை: இது ரொம்பவே ரசக்குறைவான கட்டுரை. ஆகவே மூக்கை மூடிக்கொண்டு இந்தப் பதிவைப் படிக்கவும். ஏனெனில், எனக்கு வந்திருக்கும் கோபத்துக்கு அளவேயில்லை! }:-|
இந்தப் பதிவில் வெறும் ‘கெட்ட’ வார்த்தைகள் மட்டுமே வந்திருக்கும். ஆனால் நல்லவேளை, இன்று காலையில் ஜெயமோகனின் கலாம்- கேள்விகள் எனும் பதிவைப் படித்து, என் மனம் கொஞ்சமேனும் ஆதூரம் அடைந்தது.
ஆகவே, முகத்தைச் சுளித்துக்கொண்டு மேலே, இது உங்களுக்கு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும். You have been sufficiently warned, right?
அப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும்
July 29, 2015
பயப்படாதீர்கள்.
(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்
July 19, 2015
மானமில்லாமல் – படுகேவலமாகத் திருவோடு ஏந்தி உலகெல்லாம் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் பாரத கலாச்சாரத்தை உய்விக்க, அட்டைக்கத்தி (= கத்தி + கத்திக்கத்தி) போராட்டங்களை டீவி கேமராக்கள் முன் ஏகோபித்து மினுக்கிக்கொண்டு நடத்த, சமூக நீதிக்காகவென என்றெல்லாம் இந்தியாவில் பலப்பல என்ஜிஓக்கள் – எழவெடுத்த தன்னார்வ போங்காட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை பெரும்புகழும் பேரும் பெற்று – தொந்தி தள்ளக் கொழுத்து, நடக்கமுடியாமல் ஆனால் வீராவேசம், சமதர்மம், மனித உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக/இயற்கைச் சூழல் பாதுகாப்பு என அலைந்து கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களால் – மன்னிக்கவும், தொழில்முறைக் கொள்ளையர்களால் நடத்தப் படுகின்றன.
Read the rest of this entry »
ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)
July 15, 2015
இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…
(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:
-0-0-0-0-0-0-
(அல்லது) ரமதான் மாத மனஅழுத்தங்கள்
… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து, இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)
![என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...](https://othisaivu.in/wp-content/uploads/2015/07/screenshot-from-2015-07-09-211242.png?w=300&h=232)
என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …
ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(
முதலில், இலவசை இணைப்பு:
தமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக் கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…
ஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள்
May 12, 2015
உலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும் கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்!”) – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்!
… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள் இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும் அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை!
தீவிரவெறிவாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமியத்தைத் தவிர, அபரிமிதமாகப் பெருக்கெடுத்தோடும் பெட்ரோலியத்தின் உபயத்தினால் தேனும்பாலும் ஸவுதிஅரேபிய நாடெங்கும் ஒடுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்! (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கருத்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும்!)
உலகத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எக்கேடு ஏற்பட்டாலும் அமெரிக்காவை மட்டுமே அதற்குக் காரணமாக்கி – ஏகத்துக்கும் வாயில் நுரைதள்ள அதனை ஏசுவது என்பது உலகளாவிய அரைகுறைகளின், படிப்பறிவற்ற சோம்பேறிகளின், அனுபவமுதிரா அறிவிலிகளின் முட்டியடிப் பொழுதுபோக்கு எதிர்வினைகளில் ஒன்று. சில சமயம், இவ்வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு உண்ணும்போது, தொட்டுக்கொள்ள – ‘மேற்கத்திய நாடுகளின் சதி’வலை எனப் பேசுவதும், ‘கார்ப்பரேட்டுகளை’ ஒழித்துக்கட்டவேண்டும் எனப் புலம்புவதும் இதே வகையறாதான்…
இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்)
May 5, 2015
பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!) ‘NRI’ தட்டச்சு குமாஸ்தா இந்திய ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும் கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!
இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற கடைகளில் மெகாடன்னளவு வாங்கும் சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ் இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!) தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
Read the rest of this entry »
இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…
இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள். இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.
வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.
இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்! Read the rest of this entry »
So, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா!
இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது
April 26, 2015
சில நாட்களாக, இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், அவர்களுடைய காலிஃபேட் ஒற்றைப்படை வெறிஇஸ்லாம் ப்ரேன்ட் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளிலெல்லாம், பிறப்புச் சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Read the rest of this entry »
கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள்
April 24, 2015
(முந்தைய பதிவுகள்: முதலாவது. இரண்டாவது. மூன்றாவது: ஜிஹாத் பற்றியது. நான்காவது: கபானியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கர்ட்களின் வீரம் ஜொலிக்கும் போராட்டத்தைப் பற்றியது. இவற்றைப் படித்தால் கொஞ்சமேனும் பின்புலம் கிடைக்கலாம்)
கடும் எச்சரிக்கை: வழக்கத்தையும் (~1000 வார்த்தைகள்) விட இது நீளம் அதிகம். சுமார் 1500 வார்த்தைகள். கில்யஸ் பற்றி எழுதிஎழுதி எனக்கு மாளவில்லை. :-(
கில்யஸ் நினைவுகளில் பலவாரங்களாக உழன்று கொண்டிருக்கிறேன். இதனை எழுதச் சுமார் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பரின் நினைவுக்காக, இதனைக் கூடவா என்னால் செய்திருக்க முடியாது?
அதேபோல – இதனை முழுவதுமாகப் படிக்கப்போவது உங்களில் 30 பேரேயாயினும், உங்களால் இதைக் கூடவா செய்ய முடியாது? ஆகவே, பொறுமையாகப் படிக்கவும்.
… முடியாவிட்டால் இருக்கவேயிருக்கின்றன, நம்முடைய செல்ல ஞானத் தமிழர்களின் சுடச்சுடத் தமிழ்ச் சினிமா விமர்சனங்கள் – அவற்றுக்கு வேறெங்காவது செல்லவும். நன்றி.
கில்யஸ் அம்மணி புராணம் தொடர்கிறது… … :-(
இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள்
April 21, 2015

ஷிங்கல் அல்லது ஸிஞ்சர் நகரம் – யேஸீதிகளின், கர்ட்களின் பூமியும் அவர்கள் புனிதத்தலம் இருக்குமிடமும் ஆகும். இதிலிருந்து இஸ்லாமிக்ஸ்டேட் ஜந்துக்கள் விரட்டப்பட்டதை, இந்த கேலிச்சித்திரம் கோடிட்டுக் காண்பிக்கிறது.
உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பவன் நான். எந்த ஒரு மோசமான விஷயத்திலும் நகைக்கத்தக்க சிலகூறுகள் இருக்கும் – ஆக பொதுவாகச் சிரித்துக்கொண்டு, பகடி செய்துகொண்டு போய்விடுவேன். நிதர்சன, நடைமுறை உண்மைகளை எதிர்கொள்வதற்காக (ஒப்புக்கொள்வதற்காக அல்ல!) எனக்காக நான் வகுத்துக்கொண்ட கவசம்தான் இது, இல்லையேல் சிலசமயங்களில் வாழ்க்கையின்மேல் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. மேலும் நான் உம்மணாமூஞ்சிக்காரனல்லன், எளிதில் புண்படவும் மாட்டேன். வாய்விட்டுச் சிரிப்பது மிகவும் பிடிக்கும்.
ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா
April 10, 2015
அன்புள்ள வெறியர்களே,
அஸ் ஸலாம் அலைக்கும். வணக்கம்.
உங்கள் மின்னஞ்சல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி. அவைகள் கடாசப் பட்டு விட்டன. எப்படியும் எனக்கு இம்மாதிரி விஷயங்கள் பழக்கம்தான். சென்றவாரம் கூட இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது. :-)
அய்யன்மீர்! நீங்கள் பொங்கி வழிந்துள்ளதால் – நான் எழுதியவைகளை, நீங்கள் படிக்கவேயில்லை என்பது தெரிகிறது.
(அல்லது) கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (2/2)
முந்தைய பகுதியின் தொடர்ச்சி… (என்னைப் பொறுத்தவரை சில முக்கியமான விஷயங்களை, விவாதிக்கப் படவேண்டியவைகளை – இப்பதிவில் ஆவணப் படுத்தியிருக்கிறேன். பொறுமையாக, பொங்கிவழியாமல் படிக்கவும், சரியா?)
-0-0-0-0-0-
… இன்னொன்று: நடைமுறை/பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு.
“எப்படித்தான் உங்களூர் முஸ்லீம் பெண்கள், இப்படிச் சுட்டெரிக்கும் வெய்யிலில் கறுப்புப் பர்தா போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களோ?”
Read the rest of this entry »
கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2)
April 8, 2015
மனதே சரியில்லை.
சுமார் இரண்டு வருடங்கள் முன்(ஜூன் 2013 என நினைவு), எங்களிடமிருந்து (= ஒரு சிறிய அளவிலான இந்திய நண்பர் குழாமிடமிருந்து) விடைபெற்ற கர்ட் தேசம் (இப்போதைக்கு இரான் – ஸிரியா – துருக்கி – ஆர்மேனியா – இராக்-கின் பாகம்) சார்ந்தவரான இந்த கில்யஸ் அம்மணி, சில நாட்கள் முன்பு (28 மார்ச்) அற்ப, மதப்பொறுக்கிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளுடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்.
இணையத்தில் இது தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். அவர் அறிமுகம் செய்த சில கர்ட் பிராந்திய ட்விட்டர்காரர்களிடமும் (ஒரு அழகான – மனதைப் பிழியும், ஆனால் கம்பீரமான எடுத்துக்காட்டாக) தேடினேன்; கொஞ்ச நேரம் #பெஷ்மெர்கெ-விலும் தேடினேன்.
ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவில்லை. (இப்போது தோன்றுகிறது, ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவும் தேவையில்லை!)

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் – இந்தப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது; அங்கு, இது தொடர்பான பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன.
… எனக்கு நேற்று காலை தான் இந்தச் செய்தி கிடைத்தது.
எவ்வளவோ படுகோரச் சாவுகளை நேரடியாகப் பார்த்திருந்தாலும், பொதுவாகவே என் தாங்குதன்மை மிகவும் அதிகம் என்றாலும்கூட, என் கால்கள் தொய்ந்துபோய் விட்டன. ஒரே சோர்வு. சாப்பிடவே பிடிக்கவில்லை. மலையளவு, பள்ளிசார் வருடமுடிவு மாளா வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிற வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன – பெய்ன்ட் வேலை, ஹார்ட்டிஸ்க்கள் ரிப்பேர், வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீட்டுவேலைகள் பலப்பல – இவற்றைத் தவிர அரையும் குறையுமாக இருக்கும் பல ஒத்திசைவு பதிவுகள், மேஜைகளிலும் நாற்காலிகளிலும் அலமாரிகளிலும் பிதுங்கி வழியும், அவசியம் படிக்கவேண்டிய புத்தக அடுக்குகள் என – ஆனால், என் அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழியின் நினைவாக, இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?
நேரே வீட்டுக்கு வந்து இதனை எழுத ஆரம்பித்தேன்… Read the rest of this entry »

