தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில்

May 7, 2015

உலகத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எக்கேடு ஏற்பட்டாலும் அமெரிக்காவை மட்டுமே அதற்குக் காரணமாக்கி – ஏகத்துக்கும் வாயில் நுரைதள்ள அதனை ஏசுவது என்பது உலகளாவிய அரைகுறைகளின், படிப்பறிவற்ற சோம்பேறிகளின், அனுபவமுதிரா அறிவிலிகளின் முட்டியடிப் பொழுதுபோக்கு எதிர்வினைகளில் ஒன்று. சில சமயம், இவ்வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு உண்ணும்போது,  தொட்டுக்கொள்ள – ‘மேற்கத்திய நாடுகளின் சதி’வலை எனப் பேசுவதும், ‘கார்ப்பரேட்டுகளை’ ஒழித்துக்கட்டவேண்டும் எனப் புலம்புவதும் இதே வகையறாதான்…

இந்த இஸ்லாமிய ’கழுத்தறுப்பு’ ப்ரேன்ட் ஜிஹாதி அரைகுறைகளும், சாய்வு நாற்காலி அறிவுஜீவிகளும் இதேபோல உளறிக் கொட்டுபவர்கள்தான்.

அமெரிக்க ராணுவமும் (ஆகவே, அமெரிக்க வரிசெலுத்துபவர்களும்), பெருமுதலாளியமும் உலகத்துக்குப் போட்ட மகத்தான பிச்சைகளில் ஒன்றான  மகாமகோ இணையத்தை வைத்துக்கொண்டே, அதனை நக்கிக்கொண்டே இப்படிப் பேசுவதென்பது, அசிங்கமான அற்பத்தனங்களில், இரட்டைவேடங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

whining-quote‘அயோக்கியப் போராளிகளா – முதலில் உங்கள் குதத்தையாவது சுத்தம் செய்துகொண்டு, பின்னர் உங்கள் சுற்றுப்புறப் பிரச்சினைகளை கொஞ்சமேனும் சிடுக்கவிழ்க்க முயன்று – அதற்குப் பின் மற்றவர்களுடையதை நுண்ணோக்கிகளால் பாருங்கடா, சரிசெய்யுங்கடா; அப்பால அமெரிக்காவைப் பாருங்கடா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால்,  ‘அமெரிக்க எதிர்ப்பு’ என்பது – புரட்சிவீரனாகத் தம்மைத் தாமே கருதிக்கொள்ள, ஒருவனுக்கு மிகமிகச் சுளுவான வழிமுறைதான். பதனம் செய்யப்பட்ட புரட்சிக்குசுக்களை கண்டமேனிக்கும் விட்டு பொதுச்சபையை நாறடிப்பது நமக்கு மிகவும் லேசுதான்… கூடவே ஒடிவந்து ஏகோபித்த ஆதரவையும் நல்க, குளுவான்களும் இருக்கிறார்கள். ஏகாதிபத்திய, பெருமுதலாளிய எதிர்ப்புப் புல்லரிப்புக்குக் கேட்பானேன்!

-0-0-0-0-0-0-0-

… இச்சமயத்தில்தான் கர்ட்கள் (ஒரு காலத்தில் ஹென்றி கிஸ்ஸிங்கரியத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும்) – அமெரிக்காவைப் பார்க்கும் நேர்மையான முறையை, முத்திரைகுத்தாத தன்மையை, காரணகாரியங்களைப் பார்த்துக் கருத்துகளை சமைத்துக்கொள்வதையெல்லாம் பார்த்தால் சந்தோஷமாகவே இருக்கிறது.

இன்னொன்று:

இன்னுமொன்று:

 

தொடர்புள்ள பதிவுகள்:

 

 

16 Responses to “தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில்”

  1. poovannan73 Says:

    அயோக்கியப் போராளிகளா – முதலில் உங்கள் குதத்தையாவது சுத்தம் செய்துகொண்டு, பின்னர் உங்கள் சுற்றுப்புறப் பிரச்சினைகளை கொஞ்சமேனும் சிடுக்கவிழ்க்க முயன்று – அதற்குப் பின் மற்றவர்களுடையதை நுண்ணோக்கிகளால் பாருங்கடா, சரிசெய்யுங்கடா; அப்பால அமெரிக்காவைப் பாருங்கடா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

    othisaivu

    ஹி ஹி தொழில்முறை திராவிட இயக்க/இஸ்லாமிய எதிர்ப்பு ?போராளி ஒருவரிடமிருந்து இப்படி ஒரு அறசீற்றம் வெளிப்படுவது வியப்பு தான்

    இதையே நீங்களும் செய்யலாமே. உலகத்திலேயே மோசமான இடம் தமிழ்நாடு தான்,மோசமானவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் தான் என்று அடிப்படையில் தொழில்முறையை தாண்டி அதை விட அதிகமாக கூவுவதை நிறுத்தி விட்டு சற்று ஹிந்துக்களை பற்றியும் சிந்திக்கலாமே

    1991,2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மத நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் கொன்ற பெண் குழந்தைகள் (கருவிலேயே மற்றும் சிசு கொலை )மட்டும் ஒரு கோடியை தாண்டுகிறது.2001 மக்கள் தொகை 0-6 ஆண்-பெண் சதவீதம் ஹிந்துக்களுக்கு 925,இஸ்லாமியர்கள் 950,கிருத்துவர்கள் 964,பழங்குடி மதங்கள் 976.இந்தியா 78 சதவீதம் ஹிந்துக்கள் இருக்கும் நாடாக இல்லாமல் பழங்குடி மதங்களை/மற்ற மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் எவ்வளவு லட்சம் பெண்கள் அதிகமாக இருந்திருப்பார்கள் என்று இந்தியாவிலயே/உலகத்திலேயே அதிக அறிவுள்ள தாங்கள் கணக்கிட்டு விளக்கினால் அதை விட மகிழ்ச்சி வேறு உண்டா

    இந்த 925 கூட மாட்டு கறி/பன்றி கறி உண்ணும் போலி மதசார்பின்மைவாதி ஹிந்துக்கள் புண்ணியத்தில் தான்.கேரளம் 962,தமிழ்நாடு 946 நம் அருமை குஜராத் 883 2001ஈல்.மோடியின் செயற்கரிய ஆட்சிக்கு பின் வந்த 2011 இல் 886.இதை பற்றி முதலில் கவலைப்பட்டு விட்டு அறசீற்றம் கொண்டு பொங்கி விட்டு பின்பு இஸ்லாமியர்களின் வாழ்வை உய்விக்க வந்த மாமணியாக மாறலாமே என்று உங்களை பார்த்து கேட்க முடியுமா

    குஜராத்தின் 886 கூட அங்கு உள்ள இஸ்லாமியர் மற்றும் மாடு/பன்றி உண்ணும் பழங்குடி/பிற்படுத்தப்பட்ட மக்களின் புண்ணியத்தில் தான். சுத்த சைவமான ஹிந்டுத்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்/சமூகங்களில் ஆண் பெண் சதவீதம் 800 அருகில் தான்.

    ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என்று இருந்தது போய் மத நம்பிக்கை உள்ள ஹிந்து என்றால் பெண் கரு/சிசு கொலை செய்பவர் என்ற பெயர் வரும் போல இருக்கும் நிலையில் உங்களை போன்ற போராளி அதை விட்டு விட்டு குர்டிஸ்தான் பற்றி ரத்தம் சிந்தி பாடுபடுவது /மக்களுக்கு இஸ்லாமியர்களின் குறைகளை விளக்கும் வேலையில் இருப்பது ஞாயமா


    • பூவண்ணன், தங்கள் நகைச்சுவை உணர்ச்சிக்கு நன்றி பல.

    • A.Seshagiri. Says:

      மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும் நன்றாகவே முடிச்சு போடும் திராவிட(!?) அடிவருடி பூவண்ண ‘நாரே’ தொடர்ந்து இந்த மாதிரி புல்லரிக்கும் பின்னூட்டம் இட்டு எங்களை உய்விக்க வேண்டுகிறேன்.ஏன் இந்த தடவை உங்கள் ‘உரலாயுதத்தை’ ஒளித்து வைத்து விட்டீர்கள்?

    • ரங்கன் Says:

      //ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என்று இருந்தது//

      அய்யயோ ! யாருய்யா அது – மஞ்சத் துண்டு போட்டு பார்த்து ஒன்னும் நடக்கலைன்னு, பின்னே தாலி என்பது அவரவர் விருப்பம் என்று மழுப்பி, இப்போ ராமானுஜன் அது இது என்று எழுதிப் பார்த்து எப்படியாவது மீண்டு ஒட்டு வாங்கிடணும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றேன். இதுலே நீங்க வேறே வந்து கொழப்பதீங்க சாமி !!
      நான் எப்பவோ எங்கயோ – நான் என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நம்பிக் கொண்டிருந்த ஜனங்கள் இருந்தபோது – சொன்னது. நீங்கள் இன்னுமா அதை நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் ?

      //மத நம்பிக்கை உள்ள ஹிந்து என்றால் பெண் கரு/சிசு கொலை செய்பவர் என்ற பெயர் வரும் போல இருக்கும் நிலையில்//

      ஏதாவது அதிகாரபூர்வமாக இப்படி பெயர் வைக்கப் போகிறார்களா ? அப்படி எதாவது வருமானால் அது 65 ஆண்டு கால ‘ மத சார்பற்ற’ ஆட்சியின் போதே வைத்து இருக்கலாமே.

  2. க்ருஷ்ணகுமார் Says:

    பூவண்ணன் சார், நல்வரவு. காக்கா கத்தாமலே வந்து மாட்டுக்கறி இத்யாதி இத்யாதி கருத்துக்களைப் பகிர்ந்ததுக்கு………… கொஞ்சம் போல **கோத்ர** ஊறுகாயையும் சேர்த்திருந்தால் பூவண்ணன் சார் ட்ரேட் மார்க் வ்யஞ்சனமாக இருந்திருக்கும்

    \\ உலகத்திலேயே மோசமான இடம் தமிழ்நாடு தான்,மோசமானவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் தான் \\

    உங்களுக்கு பாதி மார்க்கு தான். ஒரு ஸ்டேட்மெண்டில் பின்னாடி விஷயத்தை சரியாச் சொல்லி முன்னாடி விஷயத்தை தப்பாச் சொன்ன படிக்கு.

    உலகத்தில் இருக்கும் நல்ல இடங்களில் தமிழகமும் ஒன்று. இதில் ராமசாமி சாருக்கு சந்தேகம் இல்லாததால் தான் விழுப்புரத்தில் தமிழ்க் குடி மக்களூடே கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அடுத்த ஸ்டேட்மெண்டு ரொம்ப ரொம்ப சரிதானுங்களே.

    தலையிலே காலிஃப்ளவர் சைசில் இருக்கும் சமாசாரம் என்ன என்று தெரியாமலே மழுக்கடிக்கப்பட்ட ……….. ஆனால் மூக்குக்கு கீழே உள்ள த்வாரத்தில் கையை விட்டு சவுண்டு விடும் கலையில் பெயர் பெற்ற …………….. த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பனார் படைக்கும்…………… நல்லதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னா சொல்லுங்களேன் ஸ்வாமின்.

    ஹிந்து ……………. அடிப்படை மதவாத ஹிந்து …………… என்ற சொல்லை …………. நீங்கள் ஸ்டீரியோடைப் செய்வதும்……………..எல்லா முஸ்லீம்களும் தீவ்ரவாதிகள் என்று சில ஹிந்து விசிலடிச்சான் குஞ்சப்பனார்கள் ஸ்டீரியோடைப் செய்வதிலும் ………….. வித்யாசம் ஏதாவது இருக்கு என்று நினைக்கிறீர்கள்? சவுண்டு இருக்கும் அளவுக்கு சமாசாரம் இல்லீங்களே.

    உங்களுக்கு இப்போ ஜே அண்ட் கே போஸ்டிங்க் தானா? ஸ்தானாந்தர் ஹோ சுகா ஹை க்யா?


    • மிக்க நன்றி.

      மறைக்காமல் சொல்கிறேன், கேட்காமலேயே குரல்கொடுக்கும் க்ருஷ்ணரே!

      … சிலசமயம் எனக்கு, நம் நண்பர் பூவண்ணன் அவர்களுக்கு – அடிப்படை தர்க்கம், தத்துவம், காரணகாரியம் போன்றவை பற்றி, தாங்கள் ஏதாவது பாலபாடம் எடுத்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

      என்ன சொல்கிறீர்கள்? :-)

  3. Ranga Says:

    I do not know how long poovannan and the likes are going to use distorted statistics for their agenda. The stats on religious basis should be used for religious purposes. Why use stats at state level and distort he picture? Besides how can one conclude that the sex ratio is a factor to decide how many girls are killed?
    Accodrding to the latest stats on religious India :
    Sex ratio of Sikh population is 893 which is the lowest among the different religious communities. Sex ratio among Muslim population at 936 is just above the national average of 933 for all religions while a shade lower is the Hindu population sex ratio of 931.6 (Fig. 11.8).

    clip_image002

    From http://www.yourarticlelibrary.com/religion/social-characteristics-of-religious-communities-in-india/19849/

    Does this mean Sikhs kill more women and girls. stupid argument.

  4. Ranga Says:

    As per the following link Pakistan has a sex ratio of 1.05 with a rank of 117 whereas India is at 1.12 with rank 6 or so.
    By poovannan’s soopper logic muslims kill more women and so is united states than India.

    http://www.photius.com/rankings/population/sex_ratio_at_birth_2014_0.html

    We can now go to prove 1 = 2 using stats.


    • அய்யா ரங்கா! ஆபத்துதவியே! நீவிர் வாழ்க. :-)

      பூவண்ணன் அவர்களுக்கு மரீஹ்வானா புகைத்து அதன் லாகிரியில் கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பது பிடிக்கும் போல!

      ஆனாலும், வரவர, கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை.

      ஓடிவந்து கருத்தைத் தெரிவிப்பதற்கு மிகவும் நன்றி. :-)

  5. Ranga Says:

    ஹி ஹி . நான் கொடுத்த இரண்டாவது சுட்டி மூலம் என் காலில் நானே சுட்டுக் கொண்டு பூவண்ணன் குழுமத்தில் சேர்ந்து விட்டேன் போல. அது ஆண்/பெண் விகிதாச்சாரம். இந்தியாவை விட பாகிஸ்தான் சற்று உயர்வு. ஆனாலும் இதன் மூலம் காக்கை வெள்ளை நிறம்தான் என்பதை எப்படி நிரூபிப்பது என்று பார்ப்போம்.

    • poovannan73 Says:

      காக்கை வெள்ளை நிறம் ஆக்குவது ஒத்திசைவு சார் செய்வது. கல்வி,மனிதவள குறியீடுகள் ,பெண்களின் நிலை,ஆண் பெண் சதவீதத்தில் குஜராத் எப்படி மற்ற மாநிலங்களை விட குறிப்பாக தமிழகத்தை விட பல படிகள் மேலே உள்ளது என்று எவ்வளவு ஆண்டுகளாக அடித்து விட்டு கொண்டிருக்கிறார். இப்போது இஸ்லாமியர்களை பற்றி அடித்து விடுவதை ஆரம்பித்து உள்ளார்.

      சான்றுகள் இல்லாமல் அடித்து விடுவது ஹிந்டுத்வர்களின் அடிப்படை.பெண் கரு/சிசு கொலை,பெண்களின் திருமணத்தை கடும் சிக்கலுக்கு ஆளாக்கி அவர்களின் சொந்த விருப்பு திருமணங்களுக்கு எதிராக அகௌரவ கொலைகள் செய்வது ,கைம்பெண் மணத்தை மிக மிக தவறான,நிறைவேற்ற இயலாத ஒன்றாக ஆக்கி வைத்திருப்பது போன்றவற்றில் மத நம்பிக்கை உள்ள குறிப்பாக பால் சைவர்களை அடித்து கொள்ள யாராலும் முடியாது.

      ஹிந்துக்கள் பெண் கருகொலை விஷயத்தில் மற்றவர்களை விட மேல் என்று சாதிக்க நினைப்பது தான் காக்கையை வெள்ளை ஆக்குவது. அவர்கள் தான் படுமோசம் எனபது கருப்பு காக்கையை காக்கை என்று காட்டுவது தான்

  6. poovannan73 Says:

    Click to access 04-Distribution_by_Religion.pdf

    Sex ratio among
    Sikhs (786) in 0-6 population is the
    lowest among the major religions
    groups. Among Jains also the ratio is
    only 870 which is 57 points below the
    national average of 927. The child sex
    ratio among Hindus is 925. Other
    religious communities with sex ratios
    higher than the national average
    include Muslims, Christians, Buddhists
    and other religions, the highest being
    recorded against Other religions with sex ratio of 976

    எந்தவிஷயத்திலும் சான்றுகளோடு வாதிடுவது ஹிந்டுத்வர்களுக்கு இயலாத காரியம் போல.சான்றுகளுக்கு எதிராக வாதிட ஒன்றும் இல்லாத போது வழக்கம் போல வெறுப்பை கக்குவது தான் வாதமா

    1991,2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.மாநிலவாரியாக,மாவட்டவாரியாக ,மதவாரியாக சதவீத கணக்குகள்,மொத்த ஆண்-பெண் சதவீதம் , மத அடிப்படையில்,மாநில அடிப்படையில் 0-6 ஆண் குழந்தை -பெண் குழந்தை சதவீதம் எல்லாம் இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் 0-6 ஆண் பெண் சதவீதம் 883 டு 886 ,தமிழ்நாடு 943 டு 946 கேரளம் 962 டு 959 எனபது எதை உணர்த்துகிறது என்பதை புரியாதவர்கள் ஊர் ஞாயம் பேசுவது சரியா.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் /இஸ்லாமியர் 0-6 ஆண் பெண் சதவீதம் ஹிந்டுத்வர்கள் அதிகமாக உள்ள இடங்களோடு ஒப்பிட்டு பார்த்து சான்றுகளை விசிறி அடித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

    ஹிந்துக்கள் கொன்ற பெண் கரு/சிசுக்கள் கோடிக்கணக்கில் எனபது மறுக்க முடியாத உண்மை. ஹிந்துத்வம் வலுவாக இருக்கும் பகுதிகளில் கருகொலை மிக அதிகம் (பழங்குடியினர் அதிகம் உள்ள சட்டிச்கர்ஹ் தவிர்த்து)என்பதும் அது குறைவாக இருக்கும் பகுதிகளில் 0-6 ஆண் பெண் சதவீதம் அதிகம்,கருகொலை குறைவு என்பதையும் மறுக்க முயற்சி செய்யுங்களேன்

    http://timesofindia.indiatimes.com/india/Disappearing-daughters-alarm-Gujarats-villages/articleshow/29740682.cms

    The 2011 census revealed that 20% of 18,618 villages in Gujarat have a child sex ratio of less than 800. With a child sex ratio of just 886 per 1,000 boys, the problem has gone from being an urban malaise to a rural one as well. But some village elders are trying to fight back.

  7. poovannan73 Says:

    மற்ற மதத்தவர்கள்,போலி மதச்சார்பின்மைவாதிகள் புண்ணியத்தில் இந்தியா 0-6 ஆண் பெண் சதவீதம் மோசமாக உள்ள நாடுகள் வரிசையில் ஏழாவது இடம் ரங்கா சார். வெறும் ஹிந்டுத்வர்கள் சதவீதம் எடுத்தால் முதலிடம் அடைவது வெகு எளிது.

    ஒரே மாநிலத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு 0-6 ஆண் பெண் சதவீதம் அதிகமாகவும் குறைவாகவும் இருப்பது காட்டுவது எதை. ஒரே மதத்திற்கு உள்ளேயே ?பால் சைவர்கள் அதிகம் உள்ள ஹர்யான,ராஜஸ்தான் ,குஜராத் போன்ற இடங்களை சார்ந்தவர்கள் இடையே ஆண் பெண் சதவீதம் மாடு/பன்றி சாப்பிடும் அதே மதத்தை சார்ந்தவர்கள்@வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்களோடு ஒப்பிடும் போது படுமோசமாக இருப்பது எதை காட்டுகிறது

    இஸ்லாமியர்கள் சதவீதம் அதிகரித்து வருகிறது என்று கோஷம் இடுவதை பல ஆண்டுகளாக ஹிந்டுத்வர்கள் செய்து வருகிறார்கள்.சில நூறு பெண்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்து கொண்டு இஸ்லாமியர்களாக மதம் மாறுவதை பெரும் குற்றமாக,ஹிந்து மதத்தையே அழிக்கும் முயற்சி போல ஊதி பெரிதாக்கி வெறுப்பை கக்கும் கூட்டம் கருவிலேயே கொல்லப்படும் கோடிக்கணக்கான ஹிந்து பெண் குழந்தைகளை பற்றி துரும்பை கூட கிள்ளி போடாமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்.உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதத்தால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட குஜராத்தில் ஒரு மாவட்டத்தில் கொல்லப்படும் பெண் கருக்களின் எண்ணிக்கை அதிகம்

    ஹிந்துக்கள் சதவீதம் குறைய அவர்கள் செய்யும் பெண் கரு/சிசு கொலைகள்,ஹிந்து மத @மூட நம்பிக்கைகள் காரணமாக திருமணம் தடைபட்டுள்ள கோடிகணக்கான பெண்களின் நிலை,கைம்பெண் மணத்தை பெரும் பாவமாக கருதும் மூடர்களின் பிடியில் பெரும்பான்மை ஹிந்துக்கள் இருப்பது தான் காரணம் என்ற முழு பூசணிக்கையை மறைத்து வாதிடும் கூட்டத்தை விட ஹிந்துக்களுக்கு அதிக தீங்கு வேறு யாரவாது விளைவிக்க முடியுமா

    ஹிந்துக்களின் ,ஹிந்து பெண்களின் நிலை படுமோசமாக இருக்கும் சூழலில் இங்கு பாலும் தேனும் ஓடுவது போல குர்டிஸ்தான் புராணம் பாடுவது ?சமூக சிந்தனையாளருக்கு அழகா

  8. ravi Says:

    பூவண்ணன் ,, ராமசாமி தன் வேலையை சரியாக தான் செய்து கொண்டு இருக்கிறார். முகநூலில் வெட்டி முறிக்காமல், ராமசாமி தன் கிராமத்தில் உண்மையாகவே நல்ல வேலை செய்து கொண்டு வருகிறார். சம்பந்தமே இல்லாமல் வந்து எதற்கு எல்லா இடத்திலும் பின்னூட்டம்.

    தங்களுடைய கருத்து தானே இது.. வாஞ்சிநாதன் சாதி வெறியர். வழக்கமான கழக பிரசாரம் தானே இது.

    அடுத்து என்ன. குற்றால அருவி , அக்ரகார பெண் கதை…அதையும் சொல்லி விடலாமே.

    வெள்ளையனுக்கு வால் பிடித்த இயக்கம் எல்லாம் தியாகி பட்டம் வாங்கிய போது ,வாஞ்சி போன்றோர் சாதி வெறியர் ஆவது இயல்பு தான்.


  9. Dear Sri. Poovannan, I have stopped taking you seriously, for quite a while now.

    Please note that you have NOT answered my set of questions, that were raised more than two years back.
    போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்
    29/03/2013
    https://othisaivu.wordpress.com/2013/03/29/post-186/

    Though I shudder at the thought of even fantasizing about having a meaningful discussion with you – I very much agree that you have a very good sense of humour. You seem to have a lot of energy to indulge in meaningless off-tangent drivel.

    So.

    All power to you. Bye.

    __r.

  10. க்ருஷ்ணகுமார் Says:

    \\ அடிப்படை தர்க்கம், தத்துவம், காரணகாரியம் போன்றவை பற்றி, \\

    ராம் ஒரு சின்ன ப்ரயாசை பார்ப்போம்.

    \\ சான்றுகள் இல்லாமல் அடித்து விடுவது ஹிந்டுத்வர்களின் அடிப்படை. \\

    பூவண்ணன் சார், உரலாயுதங்களே சான்று என்று நீங்கள் கருத்துப்பகிர்வது ………….

    ராம் வேலயத்த வேலயா…………. நூத்துக்கணக்கான பக்கங்களுள்ள தீர்ப்புகளிலிருந்து அலசி ஆராய்ந்து கருத்துப் பகிர்வது ………

    இதிலே அட்ச்சு வுடுவது எது ஸ்வாமின்.

    இந்த வெங்கடேசன் எங்க காணமா போய்ட்டார்……….. சளைக்கவே சளைக்காமல் அவரும் ஜட்ஜ்மெண்டை அலசி அலசியே தானே கருத்துப் பகிர்வாரே………..த்வீபாந்தரத்துல இருந்தாலும் நாலெழுத்து எழுதறதுல ச்ரமம் ஒண்ணும் இருக்காதே.

    வ்யாசத் தொடரில் இந்த வ்யாசத்தின் தலைப்பு…………****தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில்***

    இதுக்கும் நீங்கள் பகிரும் விஷயங்களுக்கும் (அது விவாதிக்கப்பட வேண்டியதே என்றாலும்) ஏதாவது ஸ்நானப்ராப்தி உண்டோ?…….நான் சொல்றது தப்பா இல்லையா நீங்களே சொல்லுங்கள் பூவண்ணன் சார்.

    நிற்க………..

    ஸ்டூடெண்ட் வார் டேன்ஸ் பற்றி நீங்கள் எழுதிப் பகிர வேண்டிய வ்யாசத்தை ராம் ரெண்டு மூணு தபா சொல்லிட்டார். கொஞ்சம் அதப்பத்தியும் கடாக்ஷம் பண்றது.

    வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம்……….. என ஹிந்து மதத்தின் எந்த சமயங்களும் கருத்தியல் ரீதியாக சிசு ஹத்யையை ஏற்பதல்ல. மாறாக அதைப் பாவம் என்று தான் கருதுகின்றன. சமயங்கள் பாவம் என்று கருதும் ஒரு செயலை……….. சமயக்கட்டளைகளை மீறியே ஹிந்துக்கள்……………. சிசு ஹத்தி என்ற பாவத்தைச் செய்து வருகிறார்கள்.

    சகட்டு மேனிக்கு சால் ஓட்டாமல் சிசு ஹத்தி பற்றி நீங்கள் தனியாக ஒரு பதிவு முழுமையாக எழுதினால் சரியாக இருக்கும். இந்த விஷயம் பற்றிய உங்கள் ஆத்தங்கம் புரிகிறது. இத்தோடு மாட்டுக்கறி, மண்ணாங்கட்டி, கோத்ரம்,கைம்பெண் மறுமணம் என்று கலந்து கட்டி அட்ச்சு வுட்டா …………. எதுவுமே எடுபடாமல் போகும் என்று நீங்கள் அறியாததா? ஒரு விஷயத்தை முழுமையாக ஆழமாக விசாரியுங்களேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s