இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது

April 26, 2015

சில நாட்களாக,  இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், அவர்களுடைய காலிஃபேட் ஒற்றைப்படை வெறிஇஸ்லாம் ப்ரேன்ட் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளிலெல்லாம்,  பிறப்புச் சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கீழே இருக்கும் படம், ஸிரியாவில் உள்ள அலெப்பொ நகரத்தில் (இது ஐஎஸ் வசத்தில் தற்போதைக்கு இருக்கிறது) எடுக்கப்பட்டு அந்த வெறியர்களால் இணையத்தில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. நல்லவேளை, இது ஒரு ஸுன்னிக் குழந்தை.

Screenshot from 2015-04-26 11:19:20… குழந்தைகளில் ஸுன்னி என்ன, ஷியா என்ன, க்றிஸ்தவம் என்ன, ஹிந்து என்ன – என நீங்கள் மிகச் சரியாகவே கேட்கலாம் – ஆனால் இக்குழந்தை ஸுன்னியாக இல்லாமல் வேறேதாவதாக இருந்தால், உடனே கொல்லப் பட்டிருக்கும்; மேலும், அவர்களுடைய ஸுன்னிமுதல்வாத இயக்கத்துக்கு ஒவ்வாத/எதிரான, பாவப்பட்ட ஸுன்னிகளின் குழந்தைகளையும்கூட இந்த இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகள் கொன்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

கவனிக்கவும்: குழந்தையில் தலைமேலுள்ள க்ரனேட் குண்டில் இருக்கும் பின் அகற்றப்படாமல் பாதுகாப்பாக இருந்தாலும், அந்த கைத்துப்பாக்கியின் குதிரை ‘காக்’ செய்யப் பட்டுள்ளது. குழந்தையின் கையோ, தலைக்குல்லாவோ அல்லது இந்த கோரப் படத்தை எடுத்தவர்கள் கையோ தவறுதலாகத் துப்பாக்கியின் மீது பட்டால், அது சுடும் அபாயம் உள்ளது.

இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் – ஒரு கொர்ரான் பிரதியையும் அந்தக் குழந்தையின் மார் மீதோ, தலைமீதோ வைக்கவில்லை – மாளா கர்வத்துடன் புகைப்படம் எடுத்து மினுக்கிக் கொள்ளவில்லை.  ஆக எந்தவொரு அற்ப விஷயத்திலும், ஆசுவாசமடையக்கூடிய செய்திகள் இருக்கின்றனதான்! அவர்கள் நம்பும் அல்லாவுக்கு நன்றி பல. :-(

என்ன அற்பர்கள் இந்தக் கும்பலினர். இஸ்லாமையும் அடிப்படை மானுடத்தையும் கருவறுக்கும் இவர்களுக்குப்போய் இந்திய உதிரிமுஸ்லீம்கள் சிலரின் ஏகோபித்த ஆதரவு – படுகேவலமாக இருக்கிறது…  நேற்றுமாலை கூட, புதுச்சேரி பக்க கோட்டக்குப்பத்தில், ஒரு இளைஞன் இந்த இஸ்லாமிக் ஸ்டேட் கறுப்பு டீஷர்ட் போட்டுக்கொண்டு நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்! இம்மாதிரி பரப்புரை டீஷர்ட்களும் இங்கே கிடைக்கின்றனவா என்ன? எனக்கு வருத்தமாகவும் சோகமாகவும் இருக்கிறது, ஏனிப்படியாகிறது? இந்த டீஷர்ட்களையாவது நாம் பொசுக்கியெறிய வேண்டாமா??

… ஆனாலும். இக்குழந்தையின் கதியை நினைத்தால் சோகமாகவே இருக்கிறது. இதுவும் வெறுப்புமுதல்வாத வளர்ப்பு பெற்றால், அது ஒரு கொலையாளிகத்தானே பரிமாணம் கொள்ளும்?

-0-0-0-0-0-0-0-0-

கீழ் கண்டது ஒரு கர்ட் குழந்தையின் படம் – இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளின் பாவப்பட்ட குழந்தையல்ல. கொஞ்சம் வளர்ந்த குழந்தை – அதிகபட்சம் ஒன்றரை வயதிருந்திருக்கலாம், அவ்வளவுதான்.

Screenshot from 2015-04-26 15:00:04

இந்தப் படத்தை எடுத்தது, நான்காவது இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கி. மற்ற மூன்றுபேரின் துப்பாக்கிமுனைகள் தெரிகின்றன அல்லவா? இந்த புகைப்படத்தை எடுத்தவனும், அதனை எடுத்த பின்னர்  இக்குழந்தையைச் சுட்டு, பின்னர் இன்னொரு பெருமிதப் புகைப்படம். நான்கு பேரும் சேர்ந்து ஒரே சமயத்தில் சுட்டு, குழந்தையின் மூளை சிதறி, பருப்புபருப்பாக சிறுமூளைத் துணுக்குகள், ஒரு அயோக்கியன் அக்குழந்தையின் கண்ணில் சுட்டிருக்கிறான். ஒரே ரத்தக் களறி.

அடுத்த படத்தை நான் கொடுக்கவில்லை. நான் பெற்ற சோகம் பெறவேண்டாம் இந்த வையகம். :-(

இந்தக் குழந்தைகள் செய்த தவறுதான் என்ன, சொல்லுங்கள்?

இதைத்தவிர 8 வயது 9 வயது யேஸிதிப் பெண் குழந்தைகளைக் கும்பல் வன்புணர்ச்சி செய்து அதையும்  ‘ஸெல்ஃபி’யாக வெளியிடும் அராஜகம் வேறு. இதுதாண்டா வஹ்ஹாபிய, ஸலாஃபிய மதவெறி நடைமுறை இஸ்லாம்!

கல் நெஞ்சினனான எனக்கே கண்ணில் நீர் தளும்புகிறது.

-0-0-0-0-0-0-0-

நம்மூர் இஸ்லாமியர்களுக்கு, அறம் சார்ந்து நடப்பவர்களுக்கு, இதைப் பற்றியெல்லாம் தெரியவில்லையா? ஸுன்னி முஸ்லீம்களுக்கு இப்படியொரு மாளா அவப்பெயரை ஏற்படுத்தும் போக்கை,  ஸுன்னத் ஜமாஅத்கள் எப்படி எதிர்கொள்கின்றன?  அல்லது இவையெல்லாம் வெறும் சலசலப்பு என்று கருதுகிறார்களா அல்லது அவர்கள் பயத்தால் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்களா? அல்லது ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று விட்டேற்றியாக இருக்கிறார்களா? அல்லது எங்கோ நடக்கும் விஷயத்திற்கு நாமெதற்குக் கவலைப் படவேண்டும், படுகொலைகளெல்லாம் என் முற்றத்திலா நடக்கின்றனர் என (வெகு நியாயமாகவே) நினைக்கிறார்களா?

…அல்லது தினசரிகளைப் படிக்காத, தொலைக்காட்சியைப் பார்க்காத,  உலக அறிவற்ற முட்டாளான எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லையா?

என்னதான் நடக்கிறது? எனக்கு ஆறவேயில்லை.

இந்த இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகள் துப்புரவாக ஒழிக்கப் படப் போவது எப்போது?

அதற்கு முன் நம் நாட்டுத் தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள், சிறுபான்மையினரின் தன்னிகரற்ற தகத்தகாய தலைவர்கள், தம் கடைக்கண் பார்வைகளை இதன் மேல் வீசப்போவது எப்போது?

தொழில்முறை தன்னார்வ நிறுவனங்களின் இரட்டை வேடங்களை நான் அறியாதவனல்ல…
Screenshot from 2015-04-15 14:29:00
இருந்தாலும்…
trocaire

இந்த எதிர்ப்புக்காக சுயஆதாயம், NGO பணம், நல்கை என ஒன்றும் இல்லை என்பதால்தானோ இந்த மௌனம்? வெறும் தார்மரீதியில் இயங்கினால், ஒன்றுக்கும் உபயோகமில்லை அல்லவா?

எல்லாம் சரி. இந்தப் போராளி அயோக்கியர்களையே விடுங்கள். இந்த நிலையில், வெறுமனே கையைப் பிசைந்துகொண்டிருக்காமல், போராளித்தனமாக வீரப்பேச்சு பேசாமல் – நம்மால் உபயோகமாக என்னதான் செய்யக்கூடும்? (அடுத்த பதிவில்)

-0-0-0-0-0-0-0-0-

 

4 Responses to “இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது”

  1. சான்றோன் Says:

    கோத்ரா கலவரங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை தன் கைகளால் கொன்று குவித்த மோடியை பத‌வியிலிருந்த நீக்கவேண்டும் என்று ஐ.நா. சபையிடம் கோரிக்கை வைக்கலாம்….

    அன்வர் அல் பாக்தாதிக்கு [ போட்டுத்தள்ளிட்ட்டாங்களாமே? ] அமைதிக்கான நோபெல் பரிசு வழங்குமாறு கோரிக்கை வைக்கலாம்….

    எவ்வளவோ இருக்கு சார்……

  2. Vardan Says:

    அய்யா ,இவர்கள் (isis) கைப்பற்ற நினைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என படித்துள்ளேன்.அந்த செய்தி உண்மையா ? நன்றி.


    • உண்மைதான். அவர்களுக்கு திட்டமிடல் பிரச்சினையல்ல. பணபலமும் மதவெறியும் கூட அவர்களுக்குப் பிரச்சினைகள் அல்ல. வேண்டுமளவு மதவெறி இளைஞர் பட்டாளங்களும் சேரத் தயார். இந்திய திங்க்டேங்க் ஒன்றின் அனுமானத்தின் படி இந்திய அரைகுறைகள் ஏறத்தாழ 500 பேர் இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களுடன் ஐக்கியமாகியிருக்கலாம்.

      ஆனால் அவர்களை ஒழிக்க கர்ட்களால், இஸ்ரேலிகளால்தான் முடியும்; அவர்களுக்குத் தான் அதற்கான ஆன்மபலம் இருக்கிறது. அமெரிக்கா களத்தின் நுழைந்தால் இந்த ஒழிப்பு இன்னமும் சீக்கிரமாக முடியும்.

      இந்தியாவில் இது வேறுன்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன – வெறுப்பு மட்டும் புகட்டப்பட்ட விசிலடிச்சான்குஞ்சாமணி முஸ்லீம் இளைஞர்களும் இருக்கிறார்கள்; ஏற்கனவே கஷ்மீரில் இவர்களுடைய அடிவருடிகளின் நடமாட்டம் ஆரம்பித்திருக்கிறது.

      இவர்களை தயவுதாட்சணியம் பார்க்காமல் ஒழித்தால்தான், முஸ்லீம் சமுதாயத்துக்கும் நல்லது.

  3. Vardan Says:

    http://www.barenakedislam.com/2014/09/10/isis-in-action-photos-of-islamic-state-savagery-the-media-will-not-show-you-warning-very-graphic/ 18 +. விரிவாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி அய்யா . மேலே கொடுக்கப்பட்ட சுட்டி , அவர்களின் கொடூரங்களை இதுவரை அறியாதவர்கள் ,அறிந்து கொள்ள உதவும் என்று நினைக்கின்றேன். நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s