இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள்

April 21, 2015

முதற்கண், வினவு தளம் போன்ற போராளிப் புல்லரிப்புத் தலைப்பை – இப்பதிவுக்கு வைத்தமைக்கு, நீங்கள் என்னை மன்னிக்கவேண்டாம்.
ஷிங்கல் அல்லது ஸிஞ்சர் நகரம் - யேஸீதிகளின், கர்ட்களின் பூமியும் அவர்கள் புனிதத்தலம் இருக்குமிடமும் ஆகும். இதிலிருந்து இஸ்லாமிக்ஸ்டேட் ஜந்துக்கள் விரட்டப்பட்டதை, இந்த கேலிச்சித்திரம் கோடிட்டுக் காண்பிக்கிறது.

ஷிங்கல் அல்லது ஸிஞ்சர் நகரம் – யேஸீதிகளின், கர்ட்களின் பூமியும் அவர்கள் புனிதத்தலம் இருக்குமிடமும் ஆகும். இதிலிருந்து இஸ்லாமிக்ஸ்டேட் ஜந்துக்கள் விரட்டப்பட்டதை, இந்த கேலிச்சித்திரம் கோடிட்டுக் காண்பிக்கிறது.

உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பவன் நான். எந்த ஒரு மோசமான விஷயத்திலும் நகைக்கத்தக்க சிலகூறுகள் இருக்கும் – ஆக பொதுவாகச் சிரித்துக்கொண்டு, பகடி செய்துகொண்டு போய்விடுவேன். நிதர்சன, நடைமுறை உண்மைகளை எதிர்கொள்வதற்காக (ஒப்புக்கொள்வதற்காக அல்ல!)  எனக்காக நான் வகுத்துக்கொண்ட கவசம்தான் இது, இல்லையேல் சிலசமயங்களில் வாழ்க்கையின்மேல் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. மேலும் நான் உம்மணாமூஞ்சிக்காரனல்லன், எளிதில் புண்படவும் மாட்டேன். வாய்விட்டுச் சிரிப்பது மிகவும் பிடிக்கும்.

(அதேசமயம் வன்முறையை கண்ணைமூடிக்கொண்டு வெறுக்கும் சாத்வீகியல்லன். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, பொதுவாழ்க்கையின் ஒரு சிறுஅங்கத்துக்கும் கூட பொறுப்பை எடுத்துக்கொள்ளாமல், சாவகாசமாக மனிதவுரிமை பேசிக்கொண்டு நொள்ளை சொல்லிக்கொண்டிருப்பவன் அல்லன். மானாவாரி அறிவுரைகளைக் கொடுத்துக்கொண்டு, புரட்சிகரமாக எழுதிக்கொண்டு மட்டுமே இருப்பவன் அல்லன். உதை கொடுத்திருக்கிறேன். அமோகமாக உதை வாங்கியுமிருக்கிறேன். பெரிதாகச் சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. நடைமுறை வாழ்க்கையில் வன்முறையின் பங்கை அறிந்தவன் நான் – அதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாவிட்டாலும் கூட! பாபுஜி நினைவுக்கு வந்தாலும்கூட! இப்போதைக்கு இதுதான் நான்.)

ஆகவே – பொதுவாக, எனக்கு –  வக்காளி, போராளி, தாயோளி என்றெல்லாம் தாழ்வுநவிற்சி வகையறாக்களை (கிண்டல் செய்வதற்கு அப்பாற்பட்டு) சிரிக்காமல் உபயோகிப்பது சங்கடமாகத்தான் இருக்கும். வன்முறை ரத்தப்பெருக்கு டமில்ட்டாய் இனமானம் வீரமரணம் தியாகம் புனிதபலி புல்லரிப்பு ஆவேசம் சவால்​​​விடுதல் சூளுரைத்தல் ஊற்றிக்கொடுத்தல் உணர்ச்சிவசப்படுதல் ஆகவேஉளறுதல் எகிறுதல் திரைப்படமுதல்வாதம் — அல்லது, சுருக்கமாக இவையெல்லாம் கலந்து நாறடிக்கும் திராவிடம்  – என்றால் விழுந்துவிழுந்து சிரிப்பவன் நான்.

காலவரையற்ற ஒருவேளை உண்ணாவிரதம், சிறை ரொப்புதல், சிரைத்துக் கொள்ளுதல், ஆர்பாட்டம், கறுப்புக்கொடி, தண்டவாளத்தில் படுத்தல், டீவி கேமராக்கள் முன்னர் புரட்சிகரமாக வாய் நுரையை அள்ளித் தெறித்தல், சுவரொட்டி-சுவர்குருமா வெட்டிவீரப்பேச்சு போன்ற திராவிட வீரதீரப் பொழுதுபோக்குகளை நினைத்தாலே கூட, ஜட்டியில் ஒண்ணுக்குப் போகும் அளவுக்குச் சிரிப்பவன்.

-0-0-0-0-0-0-
ஆனால்…
Screenshot from 2015-04-21 09:40:33
…கபானி நகரம்… இது ஒரு உருவாகிவரும் சமூகப் படிமம்.
Screenshot from 2015-04-21 09:43:48
கபானி – கயமைக்கெதிராக நம் சமகால மானுடம் போராடும் களம்.
கபானி நகரத்தில் பாதி ஸிரியாவிலும் பாதி துருக்கியிலும். ஆனால், ஸிரியாவோ துருக்கியோ கர்ட்கள் ஒழிந்தால் சரி என இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளைக் கண்டுகொள்ளவேயில்லை. ஆக, கபானி இஸ்லாமிக்ஸ்டேட்காரர்களால் சூழப்பட்டு நாசமாக்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு எதிராக - இழப்பதற்கு ஒன்றுமேயில்லாத, போராடும் கர்ட்கள்.

கபானி நகரத்தில் பாதி ஸிரியாவிலும் பாதி துருக்கியிலும். ஆனால், ஸிரியாவோ துருக்கியோ கர்ட்கள் ஒழிந்தால் சரி என இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளைக் கண்டுகொள்ளவேயில்லை. ஆக, கபானி இஸ்லாமிக்ஸ்டேட்காரர்களால் சூழப்பட்டு நாசமாக்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு எதிராக – இழப்பதற்கு ஒன்றுமேயில்லாத, போராடும் கர்ட்கள்.

கபானி – குரூரவாத மதவெறியர்களை, படு தைரியசாலிகளான கர்ட்கள் எதிர்கொள்ளும் தளம்.
கர்ட் தந்தைகளும் தாய்களும் அவர்களின்  பெண்பிள்ளைகளும்  சேர்ந்து - ஒருங்கிணைந்து கபானியை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்

கர்ட் தந்தைகளும் தாய்களும் அவர்களின் பெண்பிள்ளைகளும் சேர்ந்து – ஒருங்கிணைந்து கபானியை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்

கர்ட் வீரர்களான இந்த தந்தை-மகள் இருவரும் 6 நாட்கள் முன்னர் (தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பன்று) போய்ச் சேர்ந்துவிட்டார்கள்

கர்ட் வீரர்களான இந்த தந்தை-மகள் இருவரும் 6 நாட்கள் முன்னர் (தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பன்று) போய்ச் சேர்ந்துவிட்டார்கள்

போர்முனைக்குச் சென்றுகொண்டிருக்கும் கர்ட் தாய்கள்

போர்முனைக்குச் சென்றுகொண்டிருக்கும் கர்ட் தாய்கள்

கபானியைக் காக்க, இன்னொரு கர்ட் தந்தையும், மகனும்

கபானியைக் காக்க, இன்னொரு கர்ட் தந்தையும், மகனும்

… அம்மணி கில்யஸ் போன்ற அழகானவர்கள் – இஸ்லாமிக்ஸ்டேட் ஜிஹாதி (= இஸ்லாமின் பெயரால், அல்லாஹூஅக்பர் என உச்சாடனம் செய்து கொண்டு நடத்தும்/செய்யும் பொறுக்கிமுதல்வாதம் + குழந்தைக் கொலைகள்/பாலியல்வன்முறைகள் + பிற மதத்தவர் கொலைகள் + பாலியல் வன்முறைகள் + அட்டூழியங்கள் – அவ்வளவுதான்!)  அரைகுறைகளுடன் பொருதி இறந்த நகர்.

இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளை, நேரடியாக அவர்கள் விரும்பும் நரகச் சொர்க்கத்துக்கு அனுப்பும் கர்ட் பெண்கள் பற்றிய சித்திரம்

இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளை, நேரடியாக அவர்கள் விரும்பும் நரகச் சொர்க்கத்துக்கு அனுப்பும் கர்ட் பெண்கள் பற்றிய சித்திரம்

உலகத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருமித்து, ஏகோபித்து ஒழிக்கவேண்டிய-ஒழிக்கப்படவேண்டிய இஸ்லாமியதேச அரைகுறைகளை – தனி மனிதர்களாக, நவீன யுத்த தளவாடங்கள் ஒன்றுமில்லாமல், தங்கள் செயலூக்கத்தையும் மன உறுதியையும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு  போராடுபவர்கள் கர்ட்கள். (தற்சமயம் அமெரிக்கா உட்பட சில நாடுகள் கொஞ்சம் உதவ ஆரம்பித்திருக்கின்றன)
Screenshot from 2015-04-21 09:50:04

மத வித்தியாசங்களுக்கு, தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு, அரசியல் சார்புகளுக்கு, புறத்தோற்றங்களுக்கு அப்பால் – பொறுக்கித்தனத்துக்கு எதிராக கைகளைக் கோர்த்துக்கொண்டு போராடும் கர்ட் மக்களின் வீரம் – போற்றிப் புகழ்வதற்குரியது.

அவர்களுடைய தலைவர்களுடைய ஞானம் செறிந்த நீண்டகால நோக்கு, ஒட்டுமொத்த கர்ட் சமூகத்தையும் (பிறரையும்) தொடர்ந்து நல்லிணக்கத்துடன் மேலெழுப்பிக்கொள்ளும் தன்மை – சுபிட்சத்தை, அமைதியை, வளர்ச்சியை நோக்கிய சமதர்மப் பாதையை வடித்தெடுத்தல் என்பவையெல்லாம் எனக்குத் தொடர்ந்து ஆச்சரியம் அளிப்பவை. எதிர்காலத்திலும் இவை இப்படியே இருக்கும் எனவும் நம்புகிறேன்.
'தமிழ்' ஈழம் என்ற அபத்தப் பகற்கனவை, கயமையுடன் தேடிய சுயகாரிய  தறுதலை விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கும், கர்ட் விடுதலை இயக்கங்களுக்கும் இதுதான் வித்தியாசம்...

‘தமிழ்’ ஈழம் என்ற அபத்தப் பகற்கனவை, கயமையுடன் தேடிய சுயகாரிய தறுதலைவிடுதலைப் புலிகள் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கும், கர்ட் விடுதலை இயக்கங்களுக்கும் இதுதான் வித்தியாசம்…

அவர்கள் தங்களை மட்டுமல்லாமல், பிறரையும் பாதுகாக்க நினைப்பது, அவர்களின் பரிணாமவளர்ச்சியுற்ற குடிமைப் பண்பு ஆச்சரியப் படவைக்கிறது.

பலப்பல மத்தியதரைக்கடல் நாடுகளின் நகரங்கள், அவர்களின் யுத்ததளவாடங்கள் ததும்பி வழியும் ராணுவங்கள் - ஐஎஸ் அரைகுறைகளுக்கு வீழ்ந்ததற்கும் - ஆனால், கர்ட்கள் அப்படியாகாததற்கும் - கர்ட்களின் ஞானம் செறிந்த, தளராத தலைமைதான் காரணம்...

பலப்பல மத்தியதரைக்கடல் நாடுகளின் நகரங்கள், அவர்களின் யுத்ததளவாடங்கள் ததும்பி வழியும் ராணுவங்கள் – ஐஎஸ் அரைகுறைகளுக்கு வீழ்ந்ததற்கும் – ஆனால், கர்ட்கள் அப்படியாகாததற்கும் – கர்ட்களின் ஞானம் செறிந்த, தளராத தலைமைதான் காரணம்…

சமகால வரலாற்றின் – இந்த மிகுந்த நம்பிக்கை கொடுக்கும் நிகழ்வு பற்றி, நாம் கொஞ்சமாகவேனும் தெரிந்து கொள்ளவேண்டாமா?ஆகவே….

-0-0-0-0-0-0-
இப்போது ஒரு விண்ணப்பம்: நீங்கள், கீழ்கண்ட வீடியோக்களை, கொஞ்சம் நேரம் செலவழித்துப் பார்த்து/ ஆவணங்களைப் படித்து – சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
படிக்க:

டெரக் வால் சொல்கிறார் – இஸ்லாமிக்ஸ்டேட்டின் மீதான கர்ட்களின் வெற்றி என்பது – பயங்கரவாத மதவெறியர்களுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரான ஒரு எதிர்காலத்தை நிர்மாணம் செய்ய விழையும் அனைவருக்குமானதாகும்…. (ஆங்கிலம்) – A victory for the Kurds and their allies in Syria would be a victory for all who seek a future dictated by neither fundamentalists nor imperialists, writes Derek Wall. http://www.theecologist.org/News/news_analysis/2580931/western_blind_spot_the_kurds_war_against_islamic_state_in_syria.html

மார்க்ஸிஸ்ட் பேராசிரியர் விஜய் ப்ரஷாத் அவர்கள் எழுதி நம்மூர் ஃப்ரன்ட் லைனில் வெளிவந்த – அக்டோபர் 17, 2014 கட்டுரை: கபானியின் முற்றுகை(ஆங்கிலம்): Siege of Kobane –  http://www.frontline.in/world-affairs/siege-of-kobane/article6461128.ece

யூஸுஃப் பட் அவர்கள், ஆய்வு நோக்கில் எழுதியுள்ள  இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் – ஸவுதி அரேபிய வஹ்ஹாபியம் (ஆங்கிலம்) – How Saudi Wahhabism Is the Fountainhead of Islamist Terrorism
http://www.huffingtonpost.com/dr-yousaf-butt-/saudi-wahhabism-islam-terrorism_b_6501916.html?utm_hp_ref=tw&ir=India

க்றிஸ்டொஃபர் ராய்டர் எழுதிய – இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பைக் குறித்த முக்கியமான ஆவணம் (ஆங்கிலம்) – The Terror Strategist: Secret Files Reveal the Structure of Islamic State
http://www.spiegel.de/international/world/islamic-state-files-show-structure-of-islamist-terror-group-a-1029274.html

பார்க்க:

இவை அனைத்தையும், தேவையான நேரம் ஒதுக்கிக் கொண்டு பார்க்கவும்.

கர்ட் பெண் வீரர்களும், ஐஎஸ்ஸும் – Kurdish Female Fighters vs ISIS 2015 –https://www.youtube.com/watch?v=P_0c5fESKOw

கபானி – ஐஎஸ்-ஐத் தோற்கடித்த நகரம் – பாகம் 1 – 1/2 Kobani: The City that beat ISIS (English Documentary) HD – https://www.youtube.com/watch?v=Nn2QQ5vFg3c

கபானி – ஐஎஸ்-ஐத் தோற்கடித்த நகரம் – பாகம் 2 – 2/2 Kobani: The City that beat ISIS (English Documentary) HD –  https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rQsU0JS7Co4

கபானி – பிகெகெவின் கெர்ரிலா அமைப்பான ஒய்பிஜி பற்றிய முழு நீள ஆவணப்படம் – KOBANI YPG Documentary Full Documentary Length https://www.youtube.com/watch?v=zWll_Iop3es

கபானி – ஐ எஸ்-ஐ நேராக எதிர்கொண்ட நகரம் – Kobani: The City That Stood Up To ISIS | msnbc https://www.youtube.com/watch?v=UlQIs1f0gRIகபானி – தரமான ஸ்னைபர்களும் ஐஎஸ்-ஸும் – KOBANE BLOODY BATTLE- ELITE SNIPERS vs. ISIS –https://www.youtube.com/watch?v=5jWVTjUVecI 


குறிபார்த்துச் சுடுதலில் தேர்ச்சி பெற்ற கர்ட் பெண் ஸ்னைபர்கள் – ஐ எஸ் பயங்கரவாதிகளை தெருத்தெருவாக எதிர்கொள்கிறார்கள் – Battle for Sinjar: Kurdish Female Snipers take on ISIS terrorists in Street battle
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=da4W_vSbwnc

ஐஎஸ்-க்கு எதிராக போர்முனையில் போராடும் கர்ட் பெண்கள் – Kurdish Women on front line in battle against ISIS https://www.youtube.com/watch?v=wuAgNE2619k

ஐ எஸ்-காரர்கள் கர்ட் பெண் வீரரால் கணக்கு தீர்க்கப் படுகிறார்கள் – ISIS massacred By Kurdish Female fighter – https://www.youtube.com/watch?v=YhIIepGgLE4

கர்டிஸ்தானிய பிகெகெ-ஒய்பிஜி சுதந்திரப் போர்வீரர்கள் –PKK freedom fighter of Kurdistan – YPG – Kobani –https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4JrqfJ67GUM

கபானியில் – இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு எதிரான வெற்றியை, பாரம்பரிய முறையில் கொண்டாடும் கர்ட் வீரர்கள்… (இந்தப் பக்கத்தில் கொஞ்சம் ஸ்க்ரோல் செய்தால் – இந்த வீடியோ காணக் கிடைக்கும்) – http://www.dailymail.co.uk/news/article-2935184/Watch-Victorious-Kurds-celebrate-victory-ISIS-Kobane-synchronised-dance.html#v-4025879113001

இப்போதைக்கு இவ்வளவு போதும்.

Screenshot from 2015-04-21 11:36:40

நன்றி.

தொடர்புள்ள பதிவுகள்:

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s