இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்)

May 5, 2015

பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!)  ‘NRI’  தட்டச்சு குமாஸ்தா இந்திய  ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும்  கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!

இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற  கடைகளில் மெகாடன்னளவு வாங்கும்  சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ்  இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!)  தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல  இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.

… இப்படிப் படுமோசமாக விமர்சனம் வைத்தாலும், விடாப்பிடியாக சில NRIகள் இன்னமும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள், இந்த ஒத்திசைவு  எழவை ஆரம்பித்தபின் இன்னமும்  சிலர் சேர்ந்திருக்கிறார்கள்  – எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், கடவுள் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விஷயம் இது.  ஆக,  அவர்களுக்கும், என்னைப் போலவே மன நிலை பிறழ்ந்திருக்குமோ என எனக்குச் சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

-0-0-0-0-0-0-0-

சரி.

என் அமெரிக்கா வாழ் ‘NRI’  நண்பன் ஒருவன் (தட்டச்சுத் தகவல்தொழில் நுட்ப குமாஸ்தா அல்லாத இவன், ஒரு அமெரிக்கக் குடிமகன் ஆகி மூன்று மாமாங்கங்கள் – அங்கும் ஓட்டுப்போடுவதைத் தவிர வாராவார வாரயிறுதி இந்திய முனகல் பார்ட்டிகளில் – கன்ஸர்வேட்டிவ், ரிபப்ளிகன், டெமாக்ரெட், லிபர்டேரியன் என, பியர் குடித்துக்கொண்டே  பேசுவதைத் தவிர – இந்தியாவின் வளர்ச்சியின்மை, குப்பைகூளம், அரசியல்ஃப்ராடுகள், ஊழல் என அங்கு  உட்கார்ந்துகொண்டு குசு விட்டுக்கொண்டிருப்பதைத் தவிர – சில சமயங்களில், பணம் கேட்டால் கொஞ்சம் தாராளமாகவே உதவி செய்வான். எனக்கல்ல, நான் சுட்டும் விஷயங்களுக்கு; என்னை அவனுடைய கான்ஷியன்ஸ் கீப்பர் என நினைத்துக்கொண்டிருக்கிறான், ஏமாளி!) – என் தொந்திரவின் காரணமாக இரண்டு வாரங்கள்முன் கர்டிஸ்தான் சென்றிருந்தான்; அவனிடம் பிகெகெ அணியினருக்கும் பெஷ்மெர்கெ அணியினருக்கும் என் சார்பாக கொஞ்சம் பணத்தை நேரடியாகச் சேர்ப்பிக்கச் சொல்லியிருந்தேன் – ஐஎஸ் கும்பலுக்கு எதிராகப் போராட யுத்த தளவாடங்களுக்காக மட்டுமேயென்று, வளர்ச்சிப்பணிகளுக்காக அல்லவென்று. செய்தான். அடுத்த இரண்டு வருடங்களில், ஏதாவது வேலை செய்து இதைத் திருப்பவேண்டும்.

நிற்க – கர்டிஸ்தானின் எர்பில் நகரத்துக்கும் ஸுலைமானியா நகரத்துக்கும் அவன் சென்று வந்தான்; கபானிக்கும் ஸிஞ்சர் நகரத்துக்கும் போக முடியவில்லை. உலகத்தைப் பலமுறை சுற்றி 80த்திச் சொச்ச நாடுகளில் பலவாரக் கணக்குகளில் மறுபடியும் மறுபடியும் சுற்றியுள்ள அவனுக்கு ஒரே ஆச்சரியம் – இப்படியும் ஒரு தேசம் (இன்னமும் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்ல​) இருக்கிறதா என்று – அதுவும் பெண்களென்றால் மிகமிகவும் இளக்காரமாக நடத்தும் (இஸ்ரேலைத் தவிர்த்த) அரேபிய நாடுகளிலா என்று! கொடுமையான ஒழுக்கவாதிகளின் அகங்காரத்தில் உழலும் பொதுமக்கள் அங்கு இல்லையே என்று. அவர்களின் குடிமைப் பண்பையும், சுற்றுச் சூழல் சுகாதாரத்தைப் பேணும் தன்மையையும், நடைமுறை ஜனநாயகத்தையும், மனிதாபிமானத்தையும், பன்முகச் சமூகத்தை வளர்த்தெடுத்தலையும் பார்த்து மகிழ்ந்து… (இவன் குறிப்புகளை, முடிந்தபோது தமிழ்படுத்திக் கொடுக்கவேண்டும்)

கர்டிஸ்தான், ஒரு ராமராஜ்யம் அல்ல – அங்கும் பிரச்சினைகள் இருக்கின்றன; ஆனால் அவர்கள் அங்கு அவற்றை எதிர்கொள்கிறார்கள்; பக்குவமாக சிக்கல்களை அவிழ்க்கும் பாங்கும், பிறர்மேல் நாய்போலப் பாயாத  தேசபக்தியும் இருக்கிறது; அவர்களுக்கு – மதத்துக்கு முன்னால் மக்கள்திரள்களுக்கே மரியாதை கொடுக்கும் பாங்கு இருக்கிறது.

பெண்களை வெறுக்காத, அவர்களை மட்டுமே குண்டுச்சட்டியில் வைத்து குடும்பக்கழுதை பாரத்தைச் சுமக்க வைக்காத சமூகம் எதுவுமே எனக்கு உவப்பானதுதான்.  அதுவும், பொதுவாக பெண்களை கீழ்மையாகப் பார்க்கும் நடைமுறை இஸ்லாம் சூழலில், இப்படியும் ஒரு முஸ்லீம்கள்திரளும் இருப்பது, மிகவும் நம்பிக்கை தரும் விஷயம்.

-0-0-0-0-0-0-0-0-

சுய நிர்ணயவுரிமையையும் மனிதாபிமானத்தையும் பன்முகமானுடத்தையும் நோக்கிய நெடும்பயணத்தில் கர்டிஸ்தான் மக்கள்திரள் இருக்கிறது, என்பது பலப்பல வருடங்களாக, என் அனுமானம்.  ஆகவேதான்,  அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல்களுக்கு எதிராகவும் – ஸிரிய, இரானிய, இராக்கிய, ஸவுதிஅரேபிய, துருக்கிய உதிரிகளை எதிர்கொள்ளவும் அதற்கு நேரிட்டிருக்கிறது.  ஆகவே — கில்யஸ் எனப்படும் தனிமனுஷியைக் கொன்றதற்காக மட்டுமில்லாமல் –   கர்ட்களை எதிர்க்கும், அவர்களை அடியோடு ஒழிக்க நினைக்கும் இஸ்லாம்மதவெறியர்கள் வேரறுக்கப்படவேண்டும், ஒழிக்கப் படவேண்டும் என்பது என் அவா. கர்ட்கள் பன்முனைகளில் போராடும் யுத்தம் – ஒரு தர்மயுத்தம் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

இச்சமயம் – சகலவுலக மக்களின் சார்பாக (ஆனால் பெரும்பாலும் கர்ட்களால் மட்டுமே நடத்தப்படும்)  கர்டிஸ்தானின் வீரம் செறிந்த போராட்டத்தின் பகுதியாக – கர்ட் பெண்களால் முன்னெடுக்கப்படும் விழைவுகளைப் பற்றிய இரண்டு வீடியோ தொகுப்புகளை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும் என விழைகிறேன். பயப்படவேண்டாம், இவைகளில் ரத்தக் களறியில்லை.

(1) போரை வெல்வது… (ஏப்ரல் 27, 2015 – 15 நிமிடங்கள்தான்!) Winning the War

Screenshot from 2015-05-05 09:35:12(2) இது, ஒரு பிபிஎஸ் ஆவணப் படம் – சுமார் ஒரு மாதம் முன்பு எடுக்கப்பட்டது – 7.5 நிமிட நீளம்தான். இதில், பெண் வீரர்களுக்கு அப்பாற்பட்டு,  கர்டிஸ்தான் பற்றிய பலப்பல விஷயங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

இஸ்லாமிக் ஸ்டேட் காரர்களில் பயத்தை எதிர்கொள்ளும் கர்ட் வீராங்கனைகள்: How women soldiers are confronting the fears of ISIS

Screenshot from 2015-05-05 09:40:23

-0-0-0-0-0-0-0-

நாம்  கர்டிஸ்தானுக்கு எப்படி உதவி செய்யலாம்?

(1) சண்டைகள், போர்கள் போன்றவை உங்களுக்குத் தத்துவார்த்த ரீதியாக ஒவ்வாமல் போனால், நீங்கள் செல்லக் கூடுவது:  http://kurdistan.org/donate/

“The American Kurdish Information Network (AKIN) is a public charity, 501 (c) (3), dedicated to helping the Kurds primarily in America.We seek better understanding between Americans and Kurds.We provide assistance to Kurdish refugees and help asylum seekers to connect with the right, sometimes pro bono, legal professionals.We are a low-budget operation, but hope to grow with your help through donations and bequests.A Gandhiesque ashram remains our goal where those associated with AKIN could advance the cause of the Kurds and Kurdistan.Contributions to AKIN are tax-deductible to the extent permitted by law.”(மேற்கண்டதில், அழுத்தம், அடிக்கோடு கொடுக்கப்பட்டது என் கைங்கர்யம்)

(2) நீங்கள் பெஷ்மெர்கெ அமைப்புடன் இணைந்து பணியாற்றவேண்டுமென்றால் அல்லது நன்கொடை கொடுக்கவேண்டும் என்றால்: http://www.peshmergaframe.com/

Screenshot from 2015-05-05 09:49:49

(3) பிகெகெ அமைப்பிற்கு உதவி செய்யவேண்டுமென்றால் (அது துருக்கியின் அழுத்தத்தால் இன்னமும் ஒரு வெறும் தீவிரவாத இயக்கமாகவே கணிக்கப்பட்டிருப்பதால்) அது தற்போதைக்குக் கொஞ்சம் சிரமம். இது முதலிலொரு ஸ்டாலினிய இயக்கமாக ஆரம்பித்துச் சில சுற்றுகள் சுற்றி – தற்போது உண்மையாகவே மானுடவிடுதலைக்காக (அதன் ஒரு அங்கமாக கர்ட் விடுதலைக்கும், பெண்களுரிமைக்காகவும்)  போராடும் இயக்கமாகவும் மாறியிருக்கிறது என நினைக்கிறேன்.

 இந்த பிகெகெ பற்றிய ஓரளவு நடு நிலைமையான, மிகமுக்கியமான ஆக்கம் என்று - அம்மணி அலிஸா மார்க்கஸ் எழுதிய 'http://nyupress.org/books/9780814757116/ 'ரத்தமும் நம்பிக்கையும்' ' புத்தகத்தைக் கருதுகிறேன்; அப்துல்லாஹ் அஸலன் பற்றிய எதிர்மறைத் சித்திரமே இதில் இருந்தாலும், அவருடைய கடந்த 15 ஆண்டுகால அரசியல் முதிர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமலும் - தற்போதைய பிகெகெ விகசிப்புகள், 2007ல் வந்த இப்புத்தகத்தில் இல்லாமலும் இருந்தாலும் - இது முக்கியமான புத்தகம்தான். எனது நம்பிக்கை என்னவென்றால், பிகெகெவும், இராக்கிய கர்டிஸ்தானும் - இஸ்லாமிக்ஸ்டேட் ஒழிக்கப்பட்ட பிறகும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்பதுதான்.

இந்த பிகெகெ பற்றிய ஓரளவு நடு நிலைமையான, மிகமுக்கியமான ஆக்கம் என்று – அம்மணி அலிஸா மார்க்கஸ் எழுதிய  ‘ரத்தமும் நம்பிக்கையும்‘ புத்தகத்தைக் கருதுகிறேன்; அப்துல்லாஹ் அஸலன் பற்றிய எதிர்மறைத் சித்திரமே இதில் இருந்தாலும், அவருடைய கடந்த 15 ஆண்டுகால அரசியல் முதிர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமலும் – தற்போதைய பிகெகெ விகசிப்புகள், 2007ல் வந்த இப்புத்தகத்தில் இல்லாமலும் இருந்தாலும் – இது முக்கியமான புத்தகம்தான். எனது நம்பிக்கை என்னவென்றால், பிகெகெவும், இராக்கிய கர்டிஸ்தானும் – இஸ்லாமிக்ஸ்டேட் ஒழிக்கப்பட்ட பிறகும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்பதுதான்.

கம்யூனிஸ்ம் ஒரு காலாவதியான தத்துவம் என்பதில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் – பல கம்யூனிஸ்ட் இயக்கங்கள், நேர்மையான தலைவர்களை, ஊழியர்களை இன்னமும் பெற்றிருக்கின்றன என்பதிலும் எனக்கு ஐயமில்லை. (அதேசமயம் இன்னொன்றையும் சுட்டவேண்டும்: இந்திய உதிரிப்பொறுக்கி இயக்கங்களாகவே நக்ஸல்பாரிகளையும் மாவோயிஸ்ட்களையும் பார்க்கிறேன் – ஆகவே இவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்லர்)

-0-0-0-0-0-0-

ஒரு விண்ணப்பம்: உங்களால் முடிந்ததை, இந்த கர்ட் இயக்கங்களுக்குக் கொடுக்க முடியுமா? (என் சார்பாக ஒரு சிறிய நன்கொடை 2+3க்குச் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டது)

பணமாக, நன்கொடையாகக் கொடுக்கமுடியாவிட்டால் – இம்மாதிரி மானுடத்துக்கு நம்பிக்கை தரும் விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு, சுற்றுப்புரக் குழந்தைகளுக்குக் கதை போலச் சொல்லலாமே?

நான், என் பள்ளியில் – ஒருவாரத்திற்கு, தினம் 15 நிமிடம் எடுத்துக்கொண்டு இந்த கர்டிஸ்தான் கதை, அர்மேனியர்கள், யுய்குர்கள், பலூச்சிகள் கதையெல்லாம் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை, எம் குழந்தைகளுக்கு – கொலைவெறிப் பிரபாகரன்களை விட, தறுதலைப் புலிகளைத் தவிர – மற்ற விஷயங்கள் தெரியவந்தால் எனக்குச் சந்தோஷம்.

உங்களுக்கு?

–0-0-0-0-0-0–

தொடர்புள்ள பதிவுகள்:

5 Responses to “இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்)”

 1. giridharlal Says:

  Aiyo…kadaisila namma adi madiyilayey kai vechutteenagaley saami…..ippa enna pannradhu?


  • அய்யா கிரிதர்லால்,

   தாங்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப தட்டச்சு குமாஸ்தாவாக இருக்காது, உண்மையாகவே உழைத்துச் சம்பாதிப்பவராக இருக்கும்போது, என்னால் எப்படி உங்கள் அடிமடியில் கைவைக்க முடியும், சொல்லுங்கள்?

   நீங்கள் ஒரு NRIயாக இருக்கலாம். அதற்காக உங்களை மன்னிக்கிறேன். ஆனால், நான் உங்களைப் போன்றவர்களை மனதில்வைத்து இப்பதிவை எழுதவில்லை, சரியா?

   கவலை வேண்டேல்.

 2. giridharlal Says:

  Ramasaamiyaarey, thangal badhilukku mikka nandri. Unmaiyaagavey ungal padhuvugal miga nandraaga irukkindrana. Naan ungal ovvoru padhivaiyum gavanamaaga pin thodarugiraen. ungalin pala vaelaigalukkul, idhaiyum neengal seivadhu enakku migundha aachariyamaaga irukkiradhu. Needoozhi vaazhga. Aanaal, vaazhththa vayadhillai, vanangugiraen…By any remote chance, if you do not post this comment (in the name of “moderating” it), as this response is a little platitudinuous, you will be doing great injustice to someone who genuinely looks up to you…

 3. Saravanan Says:

  பெஷ்மெர்கெ பற்றிய இணைப்பில் என்னைக் கவர்ந்தது அவர்களுடன் இணைந்து போராட விரும்புபவர்களுக்கு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள். இப்படிப் போகிறது-
  1) அவர்கள் சம்பளம் எதுவும் தர மாட்டார்கள். உணவு, தங்குமிடம், ஆயுதங்கள் மட்டுமே தரப்படும்.
  2) 3 மாதத்துக்குக் குறைவாக அங்கு இருக்கும் உத்தேசம் என்றால் வரவேண்டாமாம். அவர்களுக்குப் போராளிகள்தான் வேண்டும், ஊர் சுற்றிகள் அல்ல.
  3) 22 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் வரவேண்டாம். நீங்கள் உலகத்தைப் பார்க்க வேண்டும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
  கடைசியில் YOU WILL SEE COMBAT. YOU WILL SEE COMBAT. YOU WILL SEE COMBAT.என்று ஒன்றுக்கு மூன்று முறை எழுதி எச்சரிக்கிறார்கள். Be a combat multiplier and not a liability. என்று அறிவுரையும். இது புயலெனப் புறப்படும் அடலேறு சமாச்சாரம் அல்ல என்று புரிகிறது.

  எது எப்படியோ அவர்கள் ஆட்களைச் சேர்த்துக்கொள்வது பற்றிய நிபந்தனைகள் கண்ணியமாகவும் நேர்மையாகவும் உள்ளன.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s