ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா

April 10, 2015

அன்புள்ள வெறியர்களே,

அஸ் ஸலாம் அலைக்கும்.  வணக்கம்.

உங்கள் மின்னஞ்சல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி. அவைகள் கடாசப் பட்டு விட்டன.  எப்படியும் எனக்கு இம்மாதிரி விஷயங்கள் பழக்கம்தான். சென்றவாரம் கூட இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது. :-)

அய்யன்மீர்! நீங்கள் பொங்கி வழிந்துள்ளதால் – நான் எழுதியவைகளை, நீங்கள் படிக்கவேயில்லை என்பது தெரிகிறது.

ஆனாலும்…

நான் இஸ்லாமின் உச்சங்களை – அதன் தத்துவவியல், அறிவியல் பாரம்பரியங்களை ஓரளவுக்கு அறிந்தவன். இது குறித்து, பல இஸ்லாமியச் சான்றோர்களோடும் அளவளாவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பேறு பெற்றவன். பல நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள் – அவர்களுக்கெல்லாம் மிகுந்த படிப்பறிவும் சமனமும் இருக்கிறது. நான் கொடுத்துவைத்தவன் தான்.

…ஆனால், இக்காலங்களில் – உங்களைப் போன்ற இஸ்லாமின் எச்சங்களையும் எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது, என் துர்பாக்கியம்தான்.  உங்களைச் சொல்லியும் குற்றமில்லை – நீங்கள் என்ன கொர்ரானைக் கண்டீர்களா, கொள்கையைக் கண்டீர்களா? உங்களுக்கு கொர்ரானும் கொத்து புரோட்டாவும் ஒன்றுதான். உங்களுடைய அரைகுறை மத-அரசியல் தலைவர்கள் உங்களுக்குப் பயத்தையும் தனிமைப்படுத்தலையும் பழங்காலத்தையும் வெறுப்பையும்தானே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?  ஆகவே வாய் வழியே பேச்சு வராமல், நுரைதானே தள்ளும்?  நீங்களும் என்னதான் செய்வீர்கள், பாவம்

எனக்குத் தெரியும், உங்களைப் போன்ற அரைகுறைகள் எந்த மதத்திலும் இருப்பார்கள் என்று. மேலும், இந்த அரைகுறைகளை வைத்துக்கொண்டு ஒரு மக்கள் திரளையே பழிக்கக்கூடாதென்று. ஆனால் இந்தியாவிலுள்ள – உங்களுடைய அறிவுஜீவிகள், படித்த-பண்புள்ளவர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதோ பேசுவதோ இல்லை. அப்படியே தப்பித் தவறி அவர்கள் சொன்னாலும், உங்களுக்கும் ஒன்றும் உறைக்கப்போவதுமில்லை என்பதும் உண்மைதான். உங்கள் உங்களுடைய மதம்பிடித்த  அரைகுறை மதப்படிப்பு(!) என்பது அப்படி. ஆகவே உங்களுக்கு மிகவும் துளிர் விட்டிருக்கிறது, அல்லவா? ஒரே துள்ளல்தான், துடிப்புதான்! வாழ்க!!

ஆகவே, மேற்கண்ட காரணத்தாலும், நான் – சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

  1. உங்கள் கருத்துகளையே விடுங்கள் – உங்கள் எழுத்துகளையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் சொந்தப் பிரச்சினைதான் இது. இருந்தாலும்…
  2. முதலில், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உருப்படியாக நான்கு வார்த்தைகளைக் கோர்வையாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். மறுபடியும் மறுபடியும் அவற்றை எழுதிப் பார்க்கலாம்; ஆனால் ‘அய்யோ! நான்கு வார்த்தைகளா? அவற்றுக்கு நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீங்கள் கதறுவது புரிகிறது. ஆகவே, உதாரணத்திற்கு “நான் ஒரு முட்டாள் அரைகுறை!” எனும் வாக்கியத்தைக் கொடுக்கிறேன் – இதனை ஒரு நாளுக்கு 500 முறை எழுதிப் பாராயணம் செய்தால் கடைந்தேறலாம்; இதன் பொருள் என்னவெனப் புரியாதென்றாலும் பரவாயில்லை, அது முக்கியமில்லை – பாராயணம்தான் முக்கியம். ஒரு மாதம் இப்படிச் செய்தவுடன் சொல்லுங்கள், அடுத்த பாடத்தை அனுப்புகிறேன் – என்ன இருந்தாலும் நான் ஒரு ஆ-சிறியன் அல்லவா?
  3. இன்னொன்று: ஜிஹாத் என்பது ஜிகாத் அல்ல. ஆனால், அதனை மேலும் தமிழ்ப் படுத்தி சிகாத் எனச் சொன்னால் நலம். அதுவும் சிக்காது என்று வெகுதூய டமிளில் எழுதினால், ஓரளவு ஏதாவது மூளைத் துணுக்கு, சிக்கலில்லாமல் சிக்கலாம். (ஜிஹாத் என்றால் என்ன, அதன் கொர்ரான் குறிப்பு என்ன, கொர்ரான் எந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டது, ஏன் அப்படி, என்ன முரண்பாடுகள், அவற்றின் பிற்காலப் பொருளாக்கங்கள் என்ன, இக்காலத் திரித்தல்கள் என்ன – என்பதெல்லாம் அறிந்துகொள்ள, பாவம், உங்களால் முடியாதுதான், ஒப்புக் கொள்கிறேன்!)
  4. நான் ஒரு நாய் அல்லன். ஆனால் – நாயமாகப் பேசுபவர்கள் நாயர்கள் அல்லது நாய்கள் என்றால், நான் நாயாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால் விழுந்து பிடுங்க மாட்டேன், கவலை வேண்டாம்.
  5. நான் ஒரு ‘இந்து வெறியன்’ அல்லன், மன்னிக்கவும். வெறும் வெறியன்தான்.
  6. என் தாயார் என்னுடைய ஒரு சகஆசிரியர்தான் – சிறுபிள்ளைகளோடு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு நிம்மதியாக, பொதிகை டீவி பார்த்துக்கொண்டு இருக்கிறார். வயதும் 76 ஆகிறது. நீங்கள் சொல்லும் தொழிலில் அவர் இல்லை. தேவரீர் மன்னிக்கவும். எப்படியும், நான் எழுதுவதற்கெல்லாம் அவர் என்ன செய்வார், சொல்லுங்கள்?  (உங்கள் தாயார் நன்றாக இருக்கிறாரா? பாவம், அவர்!)
  7. என் மனைவியும் ஆசிரியராகத்தான் இருக்கிறார். வேறு தொழிலுக்கு அவசியமில்லை. உங்களுடைய அறிவுரைக்கு நன்றி. (உங்கள் மனைவி(கள்), சகோதரி(கள்), பெண்பிள்ளை(கள்) நன்றாக இருக்கிறார்களா? அவர்களையும் உங்கள் செல்லத் தொழிலில் தள்ளிவிடாதீர்கள், தயவுசெய்து!)
  8. ‘கடலூரில் தான் இருக்கிறேன், வந்து கழுத்தை அறுப்பேன்!’ என்றெல்லாம் முட்டாள் தனமாக எழுதினால் சிரிப்பாக வருகிறது. உங்களுக்குப் பிள்ளைகுட்டிகள் இருக்கிறார்களா? உங்கள் மின்னஞ்சலை, காவல்துறையினருக்குக் கொடுத்தால் என்னவாகும் என்பதை தயவுசெய்து யோசிக்கவும். பின்னர் குய்யோமுறையோ என்று அழுது, பிலாக்கணம் வைத்து, முஸ்லீம் இளைஞர்களை மட்டுமே காவல்துறையினர் குறி வைக்கிறார்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா? உங்களுடைய அதிமேதாவிச் செயல்பாடுகளுக்கு அர்ஜுன் சம்பத் அவர்களையா பிடிப்பார்கள், சொல்லுங்கள்? (இணையத்தில் எந்தவொரு விஷயமுமே ரகசியம் இல்லை. மூளை இருந்தால் எதனையும் கண்டுபிடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், பிற்பாடு, கருணாநிதி அவர்கள் போல “நான் ஒரு மரத்துலதான் ‘கழுத்து’ன்னு எழுதி, அதனை அறுக்கறதா இருந்தேன்!” என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லமுடியாது  என்பதை நினைவில் நிறுத்தவும்!)
  9. ஆகவே, என் கழுத்தை அறுப்பதைச் சாவகாசமாகப் பார்க்கலாம். முதலில் அதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ளவும். வீட்டில், உங்கள் பெண்மணிகளுக்கு உதவியாக, கண்ணீர் சிந்தி வெங்காயம் அரிவதிலிருந்து ஆரம்பித்தால், சுமார் 1000 ஆண்டுகளில் ஜமாய்க்க ஆரம்பிக்கலாம், சரியா? (அப்போது நானும் இருக்கமாட்டேன், என் தலையும் இருக்காது. ஆனால் உங்களைப் போன்ற சிரம்சீவித் தறுதலைகளுக்கு ஒரு தலைகூடவா கிடைக்காமல் போகும்?)
  10. இஸ்லாமிக்ஸ்டேட்காரர்கள், இஸ்லாமையே ஒழிக்க வந்தவர்கள், ஸுன்னி முஸ்லீம்களுக்கு மாளா அவப்பெயர் கொடுப்பவர்கள், அவர்களைக் கேவலப் படுத்துபவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும். எப்படியும், மேல்மாடிகாலித்தனமாக, இப்படி  ‘ஐஎஸ் வாழ்க’ கோஷம் போட்டால், அதுவும் முட்டாள் பின்னூட்டம் அனுப்பினால், உங்கள் வீட்டைக் காவல்துறையினர் சோதனையிடுவதற்கு எவ்வளவு நேரமாகும், சொல்லுங்கள்?
  11. ‘அழித்தொழிப்பு’ ப்ரேன்ட் ஜிஹாத் பற்றி பன்முக இந்தியாவில் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால், ஒரு எழவும் புரியாமல்,  நான் தூக்கிப் பிடிக்கிறேன் என்கிற காரணத்துக்காக மட்டுமே,  கர்ட்களைக் கரித்துக்கொள்வதற்கு முன்னால்… … முதலில் உங்கள்  ‘ஜிகாத்’ என்பதற்கும் ஜிலேபிக்கும் – ஏன் மதுரை ஜிகர்தண்டாவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை உணரவும் – சரியா? இதனை உணர்ந்த பின்னர், கர்ட் (Kurd) என்று நான் சொல்வது ஆங்கிலத் தயிர் (Curd) அல்ல என்ற அடிப்படையை உணர்ந்து கொள்ளலாம்.
  12. கவலையே வேண்டாம் – இப்படியே தொடர்ந்தால், அடுத்த நூறு வருடங்களில் நீங்கள் தமிழகப் பள்ளி ஏதாவதொன்றில் முதல்வகுப்பில் நிபந்தனையற்றுச் சரணடைய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

குதாஹ் ஹஃபிஸ்.

உங்கள் சொந்தமாக நீங்கள் கருதிக் கொள்ளும் அல்லாஹ் ஹஃபிஸ் எனச் சொல்ல முனையாமல் – பொதுவாக குதாஹ் ஹஃபிஸ் எனச் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் குதாஹ்—>அல்லாஹ் என்பதிலிருந்து தான் பன்முகஇஸ்லாம் அழிய ஆரம்பிக்கும் என்பது என் துணிபு.

நீங்கள் நம்பும் கடவுள்தான் – உங்களையல்ல – மற்றவர்களை, உங்கள் குடும்பத்தினரைக் கடைந்தேறச் செய்யவேண்டும்.

உங்களுக்காகவென்று ஸ்பெஷலாக – இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்களின் தொடர்தோல்விகள் குறித்த ஒரு கர்ட் கேலிச் சித்திரம் கீழே! பார்த்து இன்புறவும்.

Screenshot from 2015-04-08 20:22:07

வாழ்க வளமுடன். நன்றி. குதாஹ் ஹஃபிஸ்.

வெ. ராமசாமி

பின் குறிப்பு: தமிழில் எழுதுவது எப்படி என்ற பாலபாடம் முடிந்தவுடன், ஆங்கிலத்தில் எழுதுவது எப்படி என்பதை ஆரம்பிக்கலாம். கவலை வேண்டாம். எல்லாமே இலவசம்தான்.

-0-0-0-0-0-0-0-

முக்கியமான குறிப்பு: எனக்குக் காவல்துறையிடம் செல்வது, லேசான விஷயம். இன்னொரு முறை இந்தப் பைத்தியக்காரத்தனத்தைச் செய்யாதீர்கள், சரியா? அடுத்த முறை, என் கருணை மீது உங்களால் நம்பிக்கை வைக்கமுடியாது. புரிந்ததா? :-(

3 Responses to “ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா”

  1. அஸ்ரப் Says:

    அவர் கழுத்தை அறுப்பேன் என்று சொன்னது “போர் அடிப்பேன்” என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். போர் என்றால் ஜிகாத்து அல்ல. ரம்பம், அதாவது பிலேடு. இதற்கெல்லாம் போலீஷில் புகார் செய்தால் யார் தாலியை அறுப்பார்கள்?

    கிடக்கட்டும் விடுங்கள். தைரியமாக, நடுநிலையுடன் எழுதினீர்களே, என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    – அஸ்ரப் அலி

  2. Rajagopalan Says:

    அன்புள்ள ராமசாமி,

    3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து வந்தாலும் எந்த எதிர்வினையும் செய்யாமல் இருப்பது எனக்கே கொஞ்சம் கேவலமாகத்தான் இருக்கிறது. இந்த இரவில் நான் கில்யஸ் அம்மணி குறித்து வாசித்திருக்கவே கூடாது. என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் இறந்த அளவு துக்கமாக இருக்கிறது. உலக நாடுகள் முழுதும் பரதேசியாய் அலைந்து திரியும் எண்ணம் சாதாரண மூளையில் தோன்றும் சராசரி எண்ணமே அல்ல. அப்படி ஒரு எண்ணமும், செயலும் மலை உச்சி என்றால் சராசரி அதன் கீழே கடல் ஆழம் . ஒரு அதி உன்னதமான , செயல் துடிப்பு மிக்க, ஆகச் சிறந்த மூளைகளே இப்படிப்பட்ட சோதனைகளுக்கு தன்னை ஈடு வைக்கும். அதிலும் ஒரு குழந்தையை தூளி கட்டிக்கொண்டு என்று சொல்லும்போது….. மூளைக்கும், முலைக்கும் வேறுபாடு அறியாத மூன்றாந்தர மனவெறி கொண்ட ஒருவனின் துப்பாக்கிக்கா இந்த அதி உன்னத மூளை பலியாக வேண்டும்? அந்தக் குழந்தை கர்ட் இனத்தின் பிற தாய்மார்களால் நல்லவிதமாகவே வளர்க்கப்படும் என நம்புகிறேன். சாந்தியையும் , சமாதானத்தையும் சுடுகாட்டில் தவழ விடும்வரை ஓய மாட்டார்கள் போல.

    நான் மெய்யாகவே இப்போது அல்லாவை பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கும் அல்லா ஓரவஞ்சனை செய்யாமல் மூளை என்ற ஒன்றைப் படைத்தானே .. அதை வேலை செய்யவும் வைக்க அவனையே இறைஞ்சுகிறேன்.

    மிக வேதனையுடன்,
    ராஜகோபாலன்.ஜா, சென்னை


  3. […] காதல் கடிதம் மிரட்டல் (ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015) வந்ததோ, அன்றிலிருந்து நான் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s