ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா
April 10, 2015
அன்புள்ள வெறியர்களே,
அஸ் ஸலாம் அலைக்கும். வணக்கம்.
உங்கள் மின்னஞ்சல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி. அவைகள் கடாசப் பட்டு விட்டன. எப்படியும் எனக்கு இம்மாதிரி விஷயங்கள் பழக்கம்தான். சென்றவாரம் கூட இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது. :-)
அய்யன்மீர்! நீங்கள் பொங்கி வழிந்துள்ளதால் – நான் எழுதியவைகளை, நீங்கள் படிக்கவேயில்லை என்பது தெரிகிறது.
கயமைப் படுகொலைகள் செய்யப்படுவதையும், கைகள் வெட்டப் படுவதையும் கண்டுகொள்ளாமல் மதச்சார்பின்மைத்தனத்துடன் கமுக்கமாக இருப்பது எப்படி?
March 26, 2015
இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…
இதுதாண்டா சராசரி தகவல்(!)தொழில்(!!)நுட்பக்(!!!) குளுவான்!!!!
January 7, 2015
(அல்லது ) ஐடி குளுவான்களின், பரவலாக வெளியே தெரியவராத பிரச்சினைகள்!!!!!
அய்யய்யோ! குளுவான்களென்றாலே எனக்கு ஆச்சரியம்தான்!! அதனால்தான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இந்த எழவெடுத்த ஆச்சரியக்குறிகளை உபயோகித்து விட்டேன்!!! மன்னிக்கவும்!!!!
சரி!!!!! இவ்வரிசைப் பதிவுகளின் முதல்பாகம்!!!!!! இது இரண்டாம் பாகம்!!!!!!!
-0-0-0-0-0-0-0-
ஆம்.
ஐடி குளுவான் மந்தையினர் அபாக்கியவான்கள். பரலோக நரகம் மட்டுமல்ல, இகலோக நரகமும் அவர்களுடையதே! யேசுவுக்கு நன்றி. [மேத்யு( 5: 3)]
விடலைப் பருவத்திலிருந்து – மேலெழும்பவே மாட்டோம், வளரவே மாட்டோம் என அடம் பிடித்து, ‘எனக்கு அந்த வேல பொம்மெ வேணும்’ என மூக்குச் சளி ஒழுக உருண்டுபுரண்டு ஒப்பாரி சகிதம் பிலாக்கணம் வைக்கும் குளுவான் கும்பலுக்கு, ‘ஐயகோ, எங்கள் நிராதரவான கையறு நிலையைப் பாரீர்‘ என விசும்பிவிசும்பி அழும் அரைகுறைகளுக்கு – ஒரேயொரு அருமருந்துதான் இருக்கிறது என்று – என் பேராசானும் சித்தபைத்திய குருநாதருமான சிவபோதைவார்த்தையார் அவர்கள் தன்னுடைய தேரையதவளையர் நிகண்டுவில் இப்படிச் சொல்கிறார்:
Read the rest of this entry »
திராவிடத் திரித்தல்கள்
December 30, 2014
கடந்த பதினைந்து நாட்களில் கண்டமேனிக்கும் வேலை தொடர்பான/தொடர்பில்லாத அலைச்சல்; சென்னைக்கு 6 முறை சூறாவளிச் சுற்றுப்பயணம் (எல்லாம் அரசுப் பேருந்துகளில்தான்!) செய்தேன். வழக்கம்போல, சென்னையின் மஹாநதி வண்டிப் பிரவாகங்களில் வழிதெரியாமல் தலைசுற்றிய படலங்களும் நடந்தேறின. :-(
ஆனால் சுவாரசியத்துக்கும் குறைவில்லை. ஏனெனில், பயணங்களின்போது – பேருந்து கிளம்பியவுடன், படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு – பக்கத்திலிருப்பவர்களுடன் (அவர்கள் தோதுப்பட்டு வந்தால்) கதைக்க ஆரம்பித்து விடுவேன்.
Dravidian Zeitgeist! Here I come… :-)
திராவிட மாயை அக்கப்போர்களில் கிடைக்கும் இன்பம்ஸ் கொஞ்சம் அலாதிதான்! சுவையோ சுவைதான்!! ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால், சிலசமயங்களில் சிரித்துச் சிரித்து மாரடைப்பு வரும் நிலைக்குப் போய்விடுகிறது – என்ன செய்வது சொல்லுங்கள்… ;-)
சரி. இப்போது மூன்று சுவாரஸ்யங்கள்… Read the rest of this entry »
அய்யய்யோ! மோதி பிரதமராக உள்ள அரசின் பிரமாதமான முதல் சாதனையாக — — ஒரு பக்கம், ஓமர் அப்துல்லா + கிரீஷ் கர்னாட் + யுஆர் அனந்தமூர்த்தி + லாலு பிரசாத் யாதவ் + மல்லிகா சாராபாய் + தேவ கௌடா போன்றவர்களெல்லாம், அவர்கள் சத்தியம் செய்ததுபோல், இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு — நாளைக்கே அமெரிக்காவிலேயோ அல்லது வேறேதாவது எழவிலேயோ போய் நிரந்தரமாகத் தங்கிவிட முயற்சி செய்யப் போகிறார்களே என்று நான் வருத்தத்துடன் ஆனந்தத்தில், கதனகுதூகலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்…
… இன்னொரு பக்கம், பாவம், மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதற்குப் பின் – பலரும் தொழில்முறை அறிவுரைக்காரர்களாக மாறி விட்டார்கள். இத்தனை நாள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் – இப்போது பிரதம மந்திரி ஆகப் போகிறாய் அல்லவா? உடனே விலைவாசியை அடக்கு, தீவிரவாதத்தை அடக்கு, என அடக்குஅடக்கு என்று துடிக்கிறார்கள்… ஆக்கபூர்வமான அறிவுரைகளை அளித்தே தீருவேன் என்கிறார்கள். Read the rest of this entry »
இணையத்திலிருப்பதனாலேயே ஒரு விஷயம் சரியாகிவிடாது!
May 15, 2014
(அல்லது) கோத்ரா, தீர்ப்பு, என்னுடைய முயற்சிகள்: சில குறிப்புகள்
மேலே படிப்பதற்குப் பின்புலமாக நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை (அதன் பாவப்பட்ட பின்னூட்டங்களுடன்) படித்தால் நலம். படிக்காவிட்டாலும் ஒரளவு புரியலாம். (
குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு? 08/05/2014; தொடர்புள்ள இன்னொரு பதிவு: கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்… 13/05/2014)
வெங்கடேசன் அவர்கள், தன்னுடைய பின்னூட்டங்களில் கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்: ஒன்று, இரண்டு. இவற்றில் இரண்டாவதற்கு இந்த பதில்.
அன்புள்ள வெங்கடேசன்:
உங்கள் கரிசனத்துக்கும் – உண்மை என்னவாக இருந்திருக்கலாம் எனும் சிந்தனைகளுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல மனிதர்கள் இப்படி இல்லை.
- நான், அம்மணி தீஸ்தா ஸெதல்வாத் தளத்திலிருந்த பொதுத் தீர்ப்பைப் படிக்கவில்லை. அவர் மேல் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை; ஏனெனில் தரவுகள் சார்ந்து அவரை ஒரு பண/கருத்து மோசடிப் பேர்வழியாகக் கருதுகிறேன். அதே சமயம் பல வடிவங்களை ஒருங்கிணைத்து எது சரி எதில் என்ன பாடபேதம் என்று ஆராயவேண்டிய அளவு, போயும்போயும் தீஸ்தாக்கள் மேல் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ஏன், உங்களுக்குமே இல்லை — என்பதுதான் என் எண்ணம். மேலும் வெறும் கூக்ல் மூலமாக, மௌஸை உருட்டி இணையத்தில் கிடைக்கும் சத்தற்ற செய்திகளை நான் உடனே நம்பி விடுவதில்லை. என் பயிற்சியும் அனுபவங்களும் (healthy skepticism) அப்படி என்னை ஆக்கிவிட்டிருக்கின்றன. ஆம். இன்டெர்நெட்டித்யேவ நஸாது ஸர்வம். :-( காளிதாஸன் எப்போதுமே காப்பாற்றிவிடுவான்! :-)
ப்ரியங்கா ஸிங் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரின் கீச்சல்தான் மேற்கண்டது. :-)
இந்தக் கிண்டல்களில், நையாண்டிகளில் அமிழ்வதற்காகவே ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், டிவிட்டரில் நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடப் போகிறேன்… ;-) Read the rest of this entry »
எஸ். ராமகிருஷ்ணன்: ஓற்றியெழுத்து™
April 15, 2014
(அல்லது) பாமோலின் கவரால்…
பாமாயில் (PalmOil) என்ற பெயரை வக்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்.
அடச் சட்… :-(
நான் எழுத வந்தது: ‘கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள்‘ என்றவொரு மகாமகோ படுபயங்கர பயபீதியளிக்கும், திடுக்கிடவைத்துத் தூக்கிவாரிப்போடும் தகவலுடன் ஆரம்பிக்கும் ‘கோகோலின் பெயரால்’ எனும் தலைப்புடைய மிக முக்கியமான கட்டுரையைப் பற்றித்தான். :-((
சரி. பெயரைப் பெயரிடுவார்கள் – ஆகவே, மயிரை மயிரிடுவார்கள் எனும் அடிப்படைப் புரிதலுடன் ஆரம்பிக்கத்தான் நினைக்கிறேன். :-((( இருந்தாலும் அழுகைஅழுகையாக வருகிறது. Read the rest of this entry »
சிஷ்டி அவர்கள் ஒரு சூரத் நகர இளைஞர் – மத நல்லிணக்கத்துக்கும், இந்தியகுஜராத்தி முஸ்லீம்களின் மேன்மைக்கும் பாடுபடும் மதத் தலைவர். ஆனால் இவர், ஒரு சாதாரண, படிப்பறிவற்ற, மற்ற நம்பிக்கைகளின் மீது வெறுப்பைக் கக்கும் தொழில்முறை மதத்தலைவர் அல்லர். வெறுப்பை மூலதனமாக வைத்துப் பணத்தையும் புகழையும் அடைய நினைப்பவர் அல்லர்.
உலகளாவிய அளவில், இஸ்லாமை நம்புபவர்களை, அவர் கண்டுகொண்ட ஸூஃபி முறை ஞானமார்க்கத்தில் வழி நடத்துபவர். ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு படைத்தவர். சூரத்தின் அதோதராவில் உள்ள தர்காஹ் ஷாரிஃப்-ன் கடினஷின் (=தலைமை உபாசகர்); உம்மா அகிலம் எனும் தொலைக்காட்சி அலை வரிசையை நடத்துபவர். (இந்த அலை வரிசையைப் பற்றிச் சில செய்திகள் அந்தக் கேடுகெட்ட விக்கிபிடியாவில் இருக்கின்றன; வேறு வழியேயில்லாமல், சோம்பேறித்தனமாக இந்தச் சுட்டியைக் கொடுக்கிறேன்; தொலைக்காட்சிக்கும் எனக்கும் வெகுதூரம்)
எச்சரிக்கை: இவர் மோதியின் நண்பர். அவருடைய அரசியல் ஆதரவாளரும்கூட.
இவரும் மாய்ந்து மாய்ந்து மோதிக்கு எதிராக, இந்தியாவின் பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப் படும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், பாவம். Read the rest of this entry »
பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…
April 2, 2014
(அல்லது) சர்வ நிச்சயமாக, நாய் விற்ற காசு குரைக்கும். ஆமென்.
(அல்லது) தீஸ்தா வகையறா மஹாத்மியம்!
எனக்கு, பிச்சை போடுவது பிடிக்காது. ஆனாலும், பொதுவாக, பிச்சைபோடுபவர்களின் ‘பள்ளம் ரொம்ப’[1] மேலும் அவர்களின் தேவையற்ற குற்றமனப்பான்மையைத் துடைத்தெறிய, இந்தப் பண விட்டெறியல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். இதற்கு ஆயிரம் ‘தலையில் அடித்துக்கொண்டு’ ஒப்புக் கொள்ளக் கூடிய வியாக்கியானங்கள் இருக்கலாம். (இதனைப் பற்றி, வெகு விஸ்தாரமாக சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையை, இந்தத் தளத்தில் மறுபிரசூரம் செய்திருக்கிறேன்: ‘தொழில்முறை’ தன்னார்வ நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணம் (19/12/2012))
ஆனால், இந்த குற்றமனப்பான்மையை மூலதனமாக வைத்துக் கொண்டு பிச்சைக்காரர்கள், மிகக் குறிப்பாக, நடிப்புச் சுதேசிகள் — அதாவது, அற்ப என்ஜிஓ-காரர்கள் – பிச்சைபோடும் தனவான்களின் முன் நாட்டியமாடி, ‘எப்படியாவது என்மூலம் என் மக்களுக்கு உதவக்கூடாதா’ – ‘என் என்ஜிஓ-க்கு உதவுவதன் மூலம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர்களாக’ – ‘எப்படியாவது நீங்கள் உதவினால் எங்களுடைய கலாச்சாரக் கருவூலங்களைக் காப்பாற்றலாம்’ எனப் பரிதாபமாக யாசிப்பதை வெறுக்கிறேன். எதற்கெல்லாம் பிச்சை கிடைக்கும் என அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல பிச்சையை ‘மாற்றி யோசித்துக்’ கேட்பதை அருவருக்கிறேன். Read the rest of this entry »
online social activism for dummies
March 4, 2014
Silly…
It is very easy-peasy to become an activist (of social or anti-social issues) these days. Hallelujah, hallelujah!! All of us wannabe social activists have never had it oh so good!
In fact, this post is about ‘social activism’ that I actually learnt from an illustrious parent of one of my children… believe me! I am telling you the unvarnished truth – and unfortunately, for various reasons this parent (or parents) shall remain unnamed, sorry.
Oh, well.
To help you lazy fellows (I mean you – the unfortunate reader of this oh so very pathetic weblog), I have presented five levels of social activism, after a whole lot of painstaking research and lucubration. And, I sincerely hope that you would profusely thank me and flood my mailbox & the comments area with a zillion thankyou, thankyou kind of mushy notes, oh the hope!
Okay – onto the details of the FIVE levels: Read the rest of this entry »
லிராய் ஜோன்ஸ் = இமாமு அமிரி பராகா: சில குறிப்புகள்
January 22, 2014
லிராய் ஜோன்ஸ் (LeRoi Jones) என்னைப் பொறுத்தவரை ஒரு மிக நல்ல கவிஞரும், மிக மிக அழகான அழகியல் சார் இசை விமர்சரும். உலகத்துக்கு அமெரிக்கா கொடுத்த கொடைகளில் ஒருவர் அவர். ‘கறுப்பர் கலைகள்’ (Black(!) Arts(!!)) என்றழைக்கப்படும் 1960களில் இயங்கிய இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர்.
எனக்கு இவருடைய எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது, 1978 வாக்கில் என நினைவு – முதலில் படித்தது இவருடைய டட்ச்மேன் எனும், இன்னமும் என் நினைவில் இருக்கும், படு அற்புதமான, நெஞ்சைப் பிழியும் நாடகத்தை; ஆனால், இதன் நாடகமாக்கத்தைப் பார்க்க இன்றுவரை கொடுப்பினை இல்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நாடகத்தின் தமிழாக்கத்தை, தமிழ்ப் பண்பாட்டுடன் பொருத்திப் பார்த்தலைச் செய்தால், லிராய் ஜோன்ஸ்-ன் அரசியல் நகர்வுகளை நோக்கினால் — நமக்கு தலித் இலக்கியம், தலித் கவிதை, தலித் அழகியல் என்றெல்லாம் தேவையற்றுப் பிரித்துப் பேசி, அயோக்கியத்தனமாக நாம் அனைவரும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது தெரியவந்து, நம் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டுஅரசியலை வெறுக்கவைக்கும்… Read the rest of this entry »
நோ, எஸ் ராமகிருஷ்ணன்! மன்னிக்கவும், கலிலியோ மண்டியிட்டார்தான்!
January 10, 2014
அதாவது, உங்களிடம்.
‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று நாத்தழுதழுக்க, கண்ணில் நீர் பெருக, குரல் கம்ம, நெஞ்சு படபடக்க, கைகள் நடுங்க – அவர் உங்களிடம் மண்டியிட்டுக் கைகூப்பிக் காலில் விழுந்து இறைஞ்சியதை நானே என் கண்ணால் பார்த்தேன்… என்ன சோகம்! :-(
(அல்லது) எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (2/3)
… … ‘அறிவியலாளர்’களைப் பற்றிய, மகாமகோ எஸ் ராமகிருஷ்ண அமரகாவியமான ‘கலிலியோ மண்டியிடவில்லை‘ புத்தகம் உயிர்மை (மகாமகோ உலகத்தரம் வாய்ந்த கவிஞ்சரின் திராவிடத்தரமான நிறுவனம்தான்!) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
சேசுவே! பாவிகளை மன்னியும்.
இந்தப் புத்தகத்தின் அறிமுகமாக, எஸ்ரா அவர்களின் சொந்தமோசொந்தக் குறிப்பு:
“அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.”
— எஸ்.ராமகிருஷ்ணன் (http://www.uyirmmai.com/publications/BookDetails.aspx?bid=375)
கோனார் உரை: கற்பனையான ஜீவராசி = கழுதை என்பதறிக.
ஆனால், ஆசிரிய பல்துறைசார்வாள், இந்த ஜீவராசியின் வாய்வழியே அறிவியலையும் இலக்கியத்தையும் அறிந்து கொள்ள முயன்றாரா, அல்லது பின்னாலிருக்கும் ஓட்டையினூடேவா என்பதைத் தெளிவாக விளக்கவில்லை. Read the rest of this entry »
இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
போங்கடா, நீங்களும் வொங்களோட மென்பொருள் கட்டுமான எழவும்…
August 25, 2013
(அல்லது) உனக்கு மென்பொருள் கட்டுமானம் பற்றி ஒரு எழவும் தெரியாது!
(அல்லது) you don’t know jackass about solution architecture!
எச்சரிக்கை: இதனைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு, உங்களுக்கு, ஸாஃப்ட்வேர் அன்டர்வேர் பற்றியெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இது, நாம் வாழும் காலங்களில் நம்முடைய சமகால அடிப்படைப் பிரச்சினையை, அதாவது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் கடவுள் போல் உறைந்திருக்கும் நம்முடைய அப்பழுக்கிலா அரைகுறைத் தன்மையை — மீடியோக்ரிட்டியைப் பற்றித்தான் பேசுகிறது
கடும் எச்சரிக்கை: இது கொஞ்சம் அதிகமாகவே நீளம்! சும்மா புலம்பிக் குறை சொல்லாமல் – முடிந்தால் படியுங்கள், முடியாவிட்டால் சோம்பேறிப் பசங்களா, உடனே ஓடுங்கடா…
-0-0-0-0-0-0-
இது சுமார் 17 வருடங்களுக்கு முன் நான் பணி புரிந்து கொண்டிருந்த நிறுவனத்தின் ‘உள் சுற்றுக்காக’ — சீண்டல் நடையில் எழுதிய ஆங்கில மூலக் கட்டுரை – கடும், காராசார விவாதங்களுக்கு அடிகோலியது.
பின்னர் இது, மற்ற நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருந்த என்னுடைய பல ‘மென்பொருள்’ சார் நண்பர்களுக்குக் கிடைக்கப் பெற்று – திட்டுக்களையும், ’காட்டிக் கொடுத்து விட்டாயே எட்டப்பா!’ போன்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் பெற்றது., பின்னர், பல மற்ற தொழிற்களில் ’கட்டமைப்பாளர்களாக’ இருப்பவர்களும் பரவலாக என்னைத் திட்ட ஏதுவாகியது.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இக்கட்டுரையை – மென்பொருள் தொழில் சார்ந்து இயங்கும் அல்லது மென்பொருட்காரர்களுடன் பொதுவாகப் பரிச்சயம் உள்ள, என் கருத்தில் மரியாதைக்குரிய பாண்டித்யமுள்ள/சிந்திக்கும் திறமையுள்ள ஐந்து இக்கால இளைஞர்களுக்கு அனுப்பினேன் – அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றேன் – ஊக்க போனஸாக, சில ஆங்கிலத் திருத்தங்களையும்.
இவர்கள் பெரும்பாலும், என்னுடைய பழைய கருத்துக்கள் இப்போதும், இவ்வளவு ஆண்டுகளுக்குக்குப் பிறகும் – நிகழ்கால நடைமுறைக் கந்தறகோளத்தை எதிரொலிப்பதாகத்தான் கருதுகின்றனர். இந்தப் பொறுமைசாலிகளுக்கு என் நன்றிகளுடன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை, என் கட்டுரையில் சேர்க்கவும் முயற்சித்திருக்கிறேன். ஆனால், இக்கட்டுரை (காட்டுரை??) யில் உள்ள பிழைகள், கருத்துக் குதிப்புகள், ஆற்றாமைகள் எல்லாம் என்னுடையவையே – ஆக, என்னுடைய தவறுகளுக்கு, பாவம் இவ்விளைஞர்களை நீங்கள் தயவுசெய்து குற்றம் சொல்லக் கூடாது, சரியா? (இவர்களுடைய குறிப்புகள் குறித்த ஆவணங்கள் இப்பதிவின் முடிவில், பிற்சேர்க்கைகளாக, தனியாகத் தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக…)
அவ்விளைஞர்கள் முத்துக்குமார் பொன்னம்பலம், ஸ்ரீதர் திருச்செந்துறை, அருண் ராஜூ, வெங்கட் சக்கரவர்த்தி, ஷங்கர் அருணாசலம்.
உங்களை வாழ்த்த எனக்கு வயதிருக்கிறது. உங்களை வணங்கி மகிழவும் தெம்பிருக்கிறது. நன்றி! ;-)
எது எப்படியோ… Read the rest of this entry »
pink floyd: atom heart mother (suite) – sweet!
July 30, 2013
When such soul uplifting music exists, life is much more bearable,even when viewed from the dank dungeons of stark social realities that one finds oneself enmeshed in.
Yes.
In spite of what Douglas Hofstadter has to say about music (on as to why we love it), groups like Pink Floyd seem to have been able to make some good music that is likely to live far beyond that of the bands or their members.
Read the rest of this entry »
மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்
July 15, 2013
கடந்த சுமார் 32 வருடங்களாக தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும், மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் மனிதர்களின் ஒருவர் இந்த அம்மணி மது கிஷ்வர் அவர்கள். ஆழ்ந்த சிந்தனையும், விரிவான படிப்பறிவும், செயலூக்கமும், பாரதத்தைப் பற்றிய கரிசனமும் கொண்ட இவர் — அமைதியாக, அலட்டலில்லாமல் செயல் படுபவர், கொஞ்சமாகப் பேசுபவர். தன்னுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பாபுஜியை ஊற்றுக் கண்ணாகக் கொண்டிருப்பவர் – ஆனால் அவரைப் பற்றிய சில கறாரான விமர்சனங்களும் வைத்திருப்பவர்.
ஒரு தனித்துவமான – இந்தியச் சிந்தனை மரபுகளில், பண்பாட்டுப் பாரம்பரியங்களில் ஊறிய மனமும், உலகத் தத்துவங்களில் ஆழ்ந்த மூளையும் படைத்த இவர், எந்த விஷயத்தையும் ஐயந்திரிபற அறிந்து கொள்ளும் மனப்பான்மையுடையவர். இவரிடம் முட்டியடி எதிர்வினைகளே இல்லை.

மது பூர்ணிமா கிஷ்வர்
அவர் வெளிப்படுத்தும் எண்ணங்கள் – அசை போடப்பட்டு, அனுபவத்தால் கட்டமைக்கப்பட்டு, ஆழ்ந்த அறிவால் புடம் போடப்பட்டவை – அவர் எதையும் எனக்குத் தெரிந்து சும்மனாச்சிக்குமோ அல்லது மேம்போக்காகவோ சொன்னதில்லை. Read the rest of this entry »
operation ‘verbizaaring’ nouns
July 1, 2013
“Mere verbiage,–it is not worth a carrot!
Why Socrates or Plato–where’s the odds?–
Once taught a jay to supplicate the Gods,
And made a Polly-theist of a Parrot!”
— Thomas Hood (1799 – 1845)
All the renouned nouns of yesterdays (leave alone yesteryears) are being assaulted by hordes of verb evangelists, and are flattened to deliver verbs – this you know, is the current ing thing.
This sudden flash of remarkable insight occurred to me a few days back; and, therefore, of course I was suitably incited to write this rant. Sorry.
You know, lately I am getting more confused than ever. Having been part of a muddle management layer (um, I mean, the top layer) of a company that was a normal software disservices outfit, till recently – which was suddenly MNCpated and became part of glowball brand, I get to talk to all kinds of HR honchos who strut about like virile peacocks (IMO, in any merger and/or acquisition scenarios, it is the HR group which tends to get benefited a lot, any idea why?). Read the rest of this entry »
ஒரு தொழில்நுட்ப நேர்காணல் (1995)
March 8, 2013
Transcript of an interview, conducted way back in 1995 – in which is described, the travails of an interviewer…
Version information:
Had posted this stuff to the USENET (soc.* groups) – may be some 18 years back (1995) – has anything changed at all in the past 18 years with these dingbat programmers??
umm.. I received some brickbats too for having mentioned some real names. So, the disclaimer is
‘all real names have been changed to fictional ones, except when they are real.’
… Onward to the text of that offending post…
(அல்லது) கூடவே, என்னுடைய வெறுப்பாளர்களின் எண்ணிக்கையை, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, முனைந்து முழுமூச்சுடன் வளர்த்தெடுப்பது எப்படி?
எச்சரிக்கை: இந்தப் பதிவு ‘முஸ்லீம்களுக்கு எப்படி மேலதிகமாக வேலை வாய்ப்பு அளிப்பது’ இன்னபிற என, பின் வரப்போகும் பதிவுகளுக்கு ஒரு முஸ்தீபும் கூட.
-0-0-0-0-0-
1996 – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு மென்பொருள் வஸ்து (ஸாஃப்ட்வேர் ப்ரோடக்ட்) தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை. தொழில்நுட்பம் + வர்த்தகரீதியானச் செயல்பாடுகள்.

எனக்கு ஸஸ்பென்டர் போட்டுக் கொள்வது பிடித்ததேயில்லை. ஆனால் பெரும்பாலும் மார்பு வரை புரண்டு கிச்சுக் கிச்சு மூட்டும் தாடி வைத்திருந்திருக்கிறேன்…
இந்த நிறுவனம், கண்டமேனிக்கும் வர்த்தகம் என்று வருவதையெல்லாம் அரக்கப் பரக்க எடுத்துக் கொண்டு – சகட்டுமேனிக்கு Y2K, மென்பொருள் சேவை (ஸாஃப்ட்வேர் ஸர்வீஸஸ்) – அதாவது: ஆரக்ள், ஜாவா, விஷுவல் C++, எஸ்ஏபி (மன்னிக்கவும். குமுதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இது SAPதான் – இதனை ஸாப் என்று சொன்னால் அடிக்க வந்து விடுவார்கள் எஸ்ஏபிமுதல்வாதிகள் வேறு) ஃப்ரன்டென்ட், பேக்கென்ட் மிட்டில்என்ட், மிட்டில்வேர், அன்டர்வேர் என்று மானாவாரிச் சாகுபடியாக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நிறுவனமல்ல.
… கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் – அந்தக் காலத்தில் C# போன்ற இழவுகள் இல்லை, லூனக்ஸ் (Loonux) கூடப் பெரிய அளவில் இல்லை. ஆனால் மகத்தான யூனிக்ஸ் (UNIX!) இருந்தது, அதிலும் பர்க்லி மென்பொருள் பகிர்தல் (BSD 4.4) இருந்தது! ஜொலித்துக் கொண்டிருந்தது!!
… ஸிலிகன் ஸெல்களினுள் உறைந்திருக்கும் பைனரி த்வைதக் கடவுளுக்கு நன்றி, மறுபடியும், மறுபடியும்…

பௌல்-ஹென்னிங் கம்ப் அவர்களால் உருவாக்கப்பட்ட பிம்பம். ஃப்ரீபிஎஸ்டி-யால் ஓட்டப்படும் கணினி யந்திரங்களில் /usr/share/examples/BSD_daemon/ விரிவில் இருக்கும்.
-0-0-0-0-0-
மொத்தம் சுமார் 50 பணியாளர்கள்தான் இருந்தனர் அப்போது அந்த நிறுவனத்தில்.
என் குழுவில் சுமார் 30 பேர். அதில் 6 பேர் போல நிஜமாகவே மென்பொருள் எஞ்சினீயர்களாக ஆகக்கூடிய சாத்தியக் கூறுகள். மற்றவர்கள், சாவி கொடுத்தால் மட்டுமே நடமாடும், சொன்னதை மட்டும் முக்கிமுக்கித் திக்கித்திணறி அரைகுறை கந்தரகோளமாக வேலை செய்பவர்கள், குறைகுடங்கள் – கற்றுக் கொள்வதில், உழைப்பதில் முனைப்பே இல்லை, மோசமான திறமையின்மை. டன்னிங்-க்ரூகர் விளைவின் மோசமான பிரதிநிதிகள். இவர்களுக்கெல்லாம் எப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள் என எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
அவர்களுக்கு மூன்று மாதம் (வேறு எந்த வேலையும் கொடுக்காமல்) ஒரு அடிப்படை பயிற்சி கொடுத்து – அதன் பின் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லையானால் வெளியில் அனுப்பிவிடுவேன் என்று சொன்னேன். என்னை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். மூன்று மாத முடிவில் ஒரே ஒரு பையன் தான் தேறினான்.
-0-0-0-0-0-
நான் அந்தக் கம்பெனியின் உரிமையாளரிடம் போய் (இவர் ஒரு மாண்டயம் அய்யங்கார், படிப்பும் பண்பும் மிக்கவர், என்னைப் போலல்லாமல் தர்மமயக்கங்களால் சதா அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்) – எனக்கு இந்தப் பையன்கள் வேண்டாம், இவர்கள் இல்லாமலேயே நம் மென்பொருள் வஸ்துவை நம்மால் தரமாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் உருவாக்க முடியும் என்றேன்.
அவர் தடுமாறினார். இவ்வளவு பேரையா என்றார். ஒரே சமயத்திலேயா என்றார். இந்த எண்ணிக்கை நம் நிறுவனத்தில் பாதி! நாம் எப்படி இவர்களை வேறு வேலைகளுக்கு உபயோகிக்க முடியும்?
அப்படியென்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
ஒரே சமயத்தில் இப்படிச் செய்தால் நம் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடுமே என்றார். உனக்கு முன்னால் இருந்த மேனேஜர் இவ்வளவு பேர் இருந்தால்தான் வேலை செய்ய முடியும் என்றாரே என இழுத்தார்.
நான் சொன்னேன் இந்த நான்கு கீழ்கண்ட விஷயங்களை:
- ஃப்ரெடெரிக் ப்ரூக்ஸின் Mythical Man Month படியுங்கள். எண்ணிக்கைகளால் மட்டுமே எதனையும் சாதிக்க முடியாது. தரம் தான் முக்கியம். என்னுடைய குழுவில், திறமைதான் பிரதானம்.
- எனக்கு என் திறமை மேல் நம்பிக்கை அதிகம். எனக்கு என் குழு விஷயங்களில் முழு சுதந்திரம் வேண்டும். என் முன் அனுபவங்களை நன்றாக விசாரித்துத்தானே என்னை நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்த்திக் கொண்டீர்கள். எதற்கு?
- நான் உத்தரவாதம் – இந்த மென்பொருளை தரமாக, துரிதமாக நம்மால் ஏற்றுமதி செய்யப் படுவதற்கு.
- இந்த அரைகுறைகளை வெளியே அனுப்பினால், சோம்பேறித்தனத்துக்குச் சம்பளம் கொடுப்பது குறையும், இவர்கள் செய்து கிழிக்கும் வேலைகளால் மேலதிக வேலைகள் ஏற்படுவதும் குறையும்.
இருந்தாலும் அவர் இழுத்தார். ஆனா நீ தமிழன் – இந்தப் பையன்கள்ள நிறையபேர் கன்னடர்கள். ஏதாவது பிரச்சினை வருமோ?
அய்யா, இந்தக் கும்பலில் தமிழர்களும் எட்டு பேர் இருக்கிறார்கள். முஸ்லீம் க்றிஸ்தவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமில்லையா? பிரச்சினை ஏதாவது வந்தால் என்னை வேலையை விட்டு துரத்திவிடுங்கள், பரவாயில்லை.
சரிதான் ஆனால் இந்தப் பையன்களை நான்கு மாதம் முன்னர் தாம் நம் நிறுவனத்தில் சேர்த்தோம் இல்லையா? ஏன் சேர்த்தோம்? எப்படி ஒரே சமயத்தில் இவர்களை வெளியே தள்ளுவது? எனக்கு இது அறமாகத் தெரியவில்லை.
அய்யா, யோசியுங்கள். எனக்கு முன்னே இங்கு வேலை செய்தவர் இவர்களைச் சேர்த்திருக்கிறார். அது நிச்சயம் ஒரு அறிவில்லாத மடச் செயல் தான். ஆனால் அதற்காக உடனே இந்தப் பசங்களை நான் வெளியே அனுப்பிவிடவில்லை. அவர்களுக்கு, என் வேலையைத் தவிர, உயிரைக் கொடுத்து மூன்று மாதங்கள் பயிற்சி – ப்ரொக்ராமிங் வேலை, எடுத்துக் கொண்ட வேலையைத் தூய்மையாக, அழகாகச் செய்வது எப்படி, என்றேல்லாம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் அவர்களிடம் அதிகம் கேட்கவில்லை – 8 மணி நேரச் சராசரித்தனமான உழைப்புதானே கேட்கிறேன்? அதி அற்புதச் சாகசச் செயல்களைச் செய்யும் ஸாமுராய்களாகவா மாறச் சொன்னேன்?
ஆனால், ஹ்ம்ம். பாவம், அவர்கள் சரியான கல்லூரிகளில் படிக்கவில்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்?
அய்யா, உங்களுக்கு மென்பொருள் வர்த்தகம் வேண்டுமா, அல்லது அரைவேக்காடுகளைக் கொஞ்சிக் கொண்டு நல்லிணக்கம் என, வேலையக் கத்துக்குங்கடா, வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யுங்கடா தயவுசெய்து, ப்ளீஸ், ப்ளீஸ் எனப் பேசிக் கொண்டே யிருக்க வேண்டுமா?
நீ உன் கல்லூரியை, உன் படிப்பை வைத்துக் கொண்டு, மேட்டிமைத்தனத்துடன் இப்படிப் பேசுகிறாயோ? எல்லோரும் ஒரேமாதிரி தரத்துடன் இருக்கமாட்டார்கள் அல்லவா – அவர்கள் கல்லூரிகளில் ஆசிரியர்கள் சரியில்லையோ என்னவோ?
இல்லை. என்னிடம் இப்போது இருப்பது ஓரளவு தரமான 7 பேர்கள் – இவர்களும் ஸுப்பர் தரமென்றில்லை. ஆனால், இவர்களுக்குக் கற்றுக் கொள்ளும் முனைப்பு இருக்கிறது. இது போதும் எனக்கு, அவர்களைத் தரமானவர்களாக மாற்றுவதற்கு. ஆனால் மற்ற 24 பேர்களுக்கு அப்படியில்லை மேலும் இந்த 7 பேரில் ஒருவர் கூட என் கல்லூரியில் படிக்கவில்லை.
இருந்தாலும், என்னவோ இது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.
அய்யா, இந்தப் பையன்களை இப்படி விரட்டினால் தான், அவர்கள் அடுத்த வேலைக்காவது கொஞ்சம் கற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த விரட்டல், நம்முடைய எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, அவர்களுடைய எதிர்காலத்துக்கும் மிகவும் முக்கியம். நாம் இதனைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு நாம் உதவவில்லை, துரோகம்தான் செய்கிறோம். வேலை அறம், தர்மம் (Work Ethic) எனறால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இது அவர்களுக்கே நல்லதில்லையா?
என்னவோ எனக்கு இது சரியாகப் படவில்லை. அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. நீ என் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பாய்?
நான் சொன்னேன் – இது ஒரு தியரட்டிகல் கேள்வி, நம் புல்லரிப்புச் சினிமாவுக்கானது – ஆனால், யோசித்துப் பாருங்கள் – பன்றிக் குட்டிகள் அழகாக, பாவமாகத்தான் இருக்கின்றன. அந்த ரோஜாக்கலர் குட்டிகள் தங்கள் தாயிடம் முட்டி முட்டிப் பால் குடிப்பது அழகான, மெலிதான பரிதாபம் படர்ந்த மென்மையான விஷயம்தான். ஆனால், இந்தப் பையன்கள் பன்றிக்குட்டிகளுமல்ல (இந்த ஒப்புமைக்கு அந்தப் பன்றிக்குட்டிகள் கோபப் படும் என்றாலும்), உங்கள் நிறுவனம் ஒரு தாய்ப் பன்றியும் அல்ல. இல்லையா?
சரி, நாளை இதைப் பற்றிப் பேசலாம் என்றார்.
சரியென்றேன். (வெண்ணெய் அய்யங்காரே, எப்படி அய்யா உங்களுடன் நான் பணிபுரிவது என்று, தலையில் அடித்துக் கொண்டே…)
-0-0-0-0-0-
நான் அடுத்த நாள் அலுவலகம் போகவில்லை. அப்போதெல்லாம் செல்ஃபோன் பெரிய புழக்கத்தில் இல்லை. என் வீட்டில் லேண்ட்லைனும் இல்லை. பெங்களூரின் டெய்ரி ஸர்க்கிள் பக்கத்து லக்கஸந்த்ராவில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தேன். ஜாலியாக ’ஜேஜே சில குறிப்புகள்’ படித்துக் கொண்டிருந்தேன்.
மாலை அவரே வீட்டிற்கு வந்தார். அழுதுவிடுவார் போல இருந்தார். சரி என்றார். நீயும் நிறுவனத்தில் பங்குதாரராக ஆகிராயா என்று கேட்டார், நான், அது முடியாது என்றேன். முதலீடெல்லாம் வேண்டாம், நீயும் ஒரு இயக்குனராகிவிடு என்றார். நன்றி, ஆனால் மன்னிக்கவும் என்றேன். ஆனால் அடுத்த நாள் முதல் நிச்சயம் வேலையைத் தொடர்வதாகச் சொன்னேன்.
-0-0-0-0-0-
அப்போது ஹாட்மெய்ல் பிரபலமாக இருந்தது அதில் மின்னஞ்சல் முகவரிகள் பலவிதமாகத் தயாரித்து – என்னை, என் மூதாதையர்களைத் திட்டிக் கண்டமேனிக்கும் மின்னஞ்சல்கள், அதிலாவது சரியாக நாலு வரி கோர்வையாக ஆங்கிலத்தில் எழுத முடிந்ததா இந்த ITயடிச்சான் குஞ்சுகளுக்கு? இந்தக் குப்பை மின்னஞ்சல் உழைப்பைக் கூட அவர்கள் தங்கள் வேலையில் காட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகம். (24 வெளியேற்றல்கள்; 100க்கும் மேலான வெறுப்பு மின்னஞ்சல்கள்)
-0-0-0-0-0-
கையால் ஒரு வரி கணினிக் கட்டளைக்கட்டுகளைக் (ப்ரொக்ராம்) கூட எழுதமாட்டேன் என்கிற மேலாண்மைத் தலைவர்கள் (Leaders & Managers) இல்லை. மேலோட்டமான கட்டமைப்பு (ஆர்க்கிடெக்சர்) மட்டும் தான் செய்வோம் என்பவர்கள் இல்லை. ஒப்புக் கொள்ளும் பரிசோதனைகளை நாங்கள் (Acceptance Test) செய்யமாட்டோம் என்றில்லை. தரநிர்ணயக் குழு (Quality Assurance) என்றெல்லாம் தனியாக வினோத ஜந்துக்கள் தேவைப்படவில்லை. (ப்ரொக்ராம்களை) எழுதுகிறவன் தான், தரத்திற்கு உத்தரவாதம். எல்லோரும் எல்லாமும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு – ஐந்து நிமிடக் குழுக் கூட்டங்கள் / உரையாடல்கள் மட்டுமே. காலம் தவறாமை மஹாமஹோ முக்கியம். சிறிய தரம் வாய்ந்த, ஒருவரோடொருவர் ஒத்துழைத்துப் பணி செய்யும், நேர்மையா, மேற்குவியும் (overlapping) குழுக்கள். காலை சரியாக 7 மணிக்கு வரச் சொல்வேன். மாலை 4 மணிக்கு வீட்டிற்குக் கண்டிப்பாகப் போய்விட வேண்டும். நான் மட்டும் மேலதிகமாக ஆறுமணி நேரம் வேலை. ஞாயிறு மட்டும் விடுமுறை. வெட்டிப் பேச்சு, வேலை என்கிற பெயரில் பஜனை என்றில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் மட்டுமே மும்முரம். ஒரு மாதம் இப்படி வேலை செய்தபின் இந்தக் குழுவில் அனைவருக்கும் 25% சம்பள உயர்வு.
இந்த வேலைக்காக எனக்கு கொடுக்கப் பட்டிருந்த நாட்கள் 90. ஆனால், அடுத்த 78 நாட்களில் அந்த எழுவர் + நான், அசுரத்தனமாக வேலை செய்து அந்த மென்பொருள் வஸ்துவை வெளிக் கொணர்ந்தோம். வேலை செய்து முடிப்பதற்கான உத்தேசச் செலவுப் பணத்தில் (எஞ்சினீயரிங் பட்ஜெட்) 40% தான் செலவழித்தோம். (ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா! நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது!)
-0-0-0-0-0-
அச்சமயம் இந்த வஸ்து, ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் ஒரு மென்பொருள் வஸ்துவுடன் நேர் மோதலில் இருந்தது, ஆனால் எங்களுடையது அதைவிட விலை மலிவாகவும், தரம் வாய்ந்ததாகவும் உரிம ஷரத்துகள் (license terms) சுளுவாகவும் இருந்தது; இருப்பினும், வருந்தத்தக்க விதத்தில், அய்யங்கார் அவர்களின் வர்த்தகப்பிரிவைச் சார்ந்த RNI (Resident non-Indian) நண்பர்கள் விற்பனையில் சொதப்பி விட்டனர், சோம்பேறி முட்டாள்கள்.
வர்த்தகத் திட்டத்தை (பிஸினெஸ் ப்லான்) அவர் என்னிடம் காட்டியிருக்கலாம் – ஆனால், நான் முன்னர் கேட்டபோது, நீ எஞ்சினீயரிங் மட்டும் பார்த்துக் கொள் என்று சொல்லியிருந்தார் அவர். (இப்போது தோன்றுகிறது – ஷிவ் நாடார் அல்லது ப்ரேம்ஜி அல்லது நாராயணமூர்த்தி நிறுவனங்களில் சேர்ந்திருக்க வேண்டுமோ?)
பின்னர், ஐந்து மாதங்களில் இந்த வஸ்து, லாஸ் எஞ்சலிஸ் அருகில் இருந்த ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டது ( நான் இரண்டு மூன்று முறை இந்த டீல் விஷயமாகப் பேச்சுவார்த்தை, சரிபார்த்தல்களுக்காகப் (due diligence) போய்வந்தேன் – இந்த விற்பனையில் எங்கள் நிறுவனத்துக்குச் சுமார் 117 லட்சம் நிகர லாபம், ஆனால் எங்களுடைய வர்த்தகத்திட்டம் சரியாக இருந்திருந்தால் சுளுவாகப் பல கோடிகளை அள்ளியிருக்கலாம்).
பின் எங்களிடம் வாங்கிய ஒரே மென்பொருளை வைத்திருந்த அந்த எல்ஏ நிறுவனம், ஐபிஎம் நிறுவனத்தாலேயே – இரண்டு மில்லியன் டாலர்கள் – ரொக்கத்துக்கு ஆட்கொள்ளப் பட்டது. அவர்கள் அந்த மென்பொருளை மேற்கொண்டு விற்காமல், சரியாகப் பராமரிக்காமல் – வாங்கிய ஆறே மாதங்களில் – இழுத்து மூடப் போகிறோம் (EoL – End of Life) என அறிவித்தனர்! (மென்பொருள், கணினி தொடர்பான வர்த்தகங்களில் இது சகஜம் தான்?
சுபம்.
-0-0-0-0-0-0-
ஒரு பொஷ்குக் குழந்தை சிரிப்பதைப் போலச் சந்தோஷமாக இருந்த அய்யங்கார், உனக்கு லாபத்தில் 25 சதம் பங்கு கொடுக்கிறேன் என்றார். நான் வேண்டாம் என்றேன். வர்த்தக அபிவிருத்திக்கு அதனை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். (அப்போது எனக்கு குழந்தைகள் இல்லை, இப்போது அப்படிச் செய்வேனா என்பது தெரியாது)
ஆனால் O’Reilly பதிப்பித்த அனைத்துப் புத்தகங்களும் LISP பற்றிய அனைத்துப் புத்தகங்களும் வாங்கி நம் தொழில் நுட்ப நூலகத்தில் வைக்கலாம் என்றேன். இரண்டு வாரங்களில் 8 பெரிய்ய்ய அட்டைப் பெட்டிகளில் பொக்கிஷங்கள் வந்தன.
பின்குறிப்பு: Work Ethic எனும் பதத்திற்கு சுருக்கமாக 2-3 வார்த்தைகளுள்ள தமிழ்ப் பதம் இருக்கிறதா? எனக்கு முழ நீளப் பதவுரை தான் எழுத வருகிறது. வேலை அறம், தர்மம் என்பவை தான் கிட்ட வருகின்றன எனத் தோன்றுகிறது. உதவ முடியுமா?
இவற்றையும் படிக்கலாம்:


