நோ, எஸ் ராமகிருஷ்ணன்! மன்னிக்கவும், கலிலியோ மண்டியிட்டார்தான்!
January 10, 2014
அதாவது, உங்களிடம்.
‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று நாத்தழுதழுக்க, கண்ணில் நீர் பெருக, குரல் கம்ம, நெஞ்சு படபடக்க, கைகள் நடுங்க – அவர் உங்களிடம் மண்டியிட்டுக் கைகூப்பிக் காலில் விழுந்து இறைஞ்சியதை நானே என் கண்ணால் பார்த்தேன்… என்ன சோகம்! :-(
(அல்லது) எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (2/3)
… … ‘அறிவியலாளர்’களைப் பற்றிய, மகாமகோ எஸ் ராமகிருஷ்ண அமரகாவியமான ‘கலிலியோ மண்டியிடவில்லை‘ புத்தகம் உயிர்மை (மகாமகோ உலகத்தரம் வாய்ந்த கவிஞ்சரின் திராவிடத்தரமான நிறுவனம்தான்!) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
சேசுவே! பாவிகளை மன்னியும்.
இந்தப் புத்தகத்தின் அறிமுகமாக, எஸ்ரா அவர்களின் சொந்தமோசொந்தக் குறிப்பு:
“அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.”
— எஸ்.ராமகிருஷ்ணன் (http://www.uyirmmai.com/publications/BookDetails.aspx?bid=375)
கோனார் உரை: கற்பனையான ஜீவராசி = கழுதை என்பதறிக.
ஆனால், ஆசிரிய பல்துறைசார்வாள், இந்த ஜீவராசியின் வாய்வழியே அறிவியலையும் இலக்கியத்தையும் அறிந்து கொள்ள முயன்றாரா, அல்லது பின்னாலிருக்கும் ஓட்டையினூடேவா என்பதைத் தெளிவாக விளக்கவில்லை.
நல்லவேளை, பின் நவீனத்துவம் என்றாலே பின்புற ஓட்டைகள் மூலம் மட்டுமே விஷயங்களை அணுகுவதுதான் என்ற பாமரப்புரிதலுள்ள இலக்கிய ரசிகச் சிகாமணிகளாகிய நமக்கு, எஸ்ரா அவர்களும் பின் நவீனத்துவச் சின்னாபின்னக்காரர் என்பதும் புரிந்துள்ள காரணத்தால் இவர் பின்னாலிருந்துதான் இவ்விரு துறைகளை அணுகியிருப்பார் என்பது தெரியாதா? ஹ.
இக்கட்டுரைகள் அதிகம் விவாதிக்கப் பட்டதாகச் சொல்கிறார், எஸ்ரா. ஆனால், மிகவும் வருந்தக்கூடிய விதத்தில் இந்த விவாதத்தில் நான் பங்கேற்கக் கொடுத்து வைக்காத காரணத்தால், இப்போது, ஒரு அற்ப டுபாக்குர் தமிழ் வாசகன் என்கிற முறையில் என் பங்கை, அந்தப் பரிசுத்த ஆவியே பின்னிறக்கை பிடரியில் படப் பறந்தோடிப்போக ஆற்றுஆற்று என்று ஆற்றுகிறேன். மன்னிக்கவும்.
“… … தமிழ் சூழலில் மட்டும்தான் ஒருவனைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வதன் மூலம் ஆனந்தம் அடைபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.ஒருவனது இயலாமையை, பலவீனங்களை, சரிவுகளை சொல்லிக் காட்டி அதனால் அவன் வேதனை அடையும்போது பார்த்து ரசிக்கும் குதூகல மனநிலை பலருக்கும் பிடித்திருக்கிறது.சொல்லப்போனால் அதைப் பகிர்ந்து கொள்ளவும்,பதிவு செய்வதிலும் காட்டும் அக்கறையிருக்கிறதே அது மிகவும் முனைப்பானது. இதற்காகச் சிலர் கைப்பணம் செலவு செய்து பயணம் செய்வதில் துவங்கி, மின்னஞ்சல், செல்போன், சிறுவெளியீடு, இணைய தளம் என்று ஓடியாடி வேலை செய்கிறார்கள்….
… அதன் பிறகு [அந்தச் சிலரின் ஒருவனான] அவனது வேலை, அந்த ஆளுக்கு எதிராகத் தனது இடைவிடாத அவதூறுகள்,வெறுப்பை பரவவிடுவதுதான். தனது இயலாமையை ஒத்துக் கொள்ளவும்,தனது அறியாமையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதிலும் தான் எவ்வளவு, நடிப்பு, வெளி வேஷங்கள்?”
அய்யா எஸ்ரா, உங்கள் சரிவைச் சொல்லிக் காட்டுவது என்பது எனக்கு உவப்பானது அல்ல. எனக்குப் பல, மற்ற, மிக முக்கியமான வேலைகள் நிச்சயம் இருக்கின்றனதாம்.
ஆனால் கடந்த பல வருடங்களாக உங்கள் நிலைமை பொறுக்கமுடியாமல் இருக்கிறது. தாளமுடியாத நான், 2013 ஜனவரி முதல் உங்கள் எழுத்துகளைப் பற்றிய என் கருத்துகளை நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்; ஆனால், நீங்கள் எதைப் பற்றியும் கவலையேபடாத கைவல்யநிலையில் இருப்பவர் என்பது தெரிகிறது. உங்கள் அரைகுறைச் சோப்ளாங்கி வாசகர்களின் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு அப்படி – ஆக, எப்படியும் இன்னும் ஓரிரண்டு பதிவுகளுக்குப் பின் நிச்சயமாக உங்களை விட்டுவிடுகிறேன்.
முந்தைய பதிவுகள்:
- எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3) 08/01/2014
- கட்டெறும்பு பெருத்து, கழுதையான கதை :-( 05/01/2014
- வயாக்ராபாதர் அருளிச் செய்த ‘வயாக்ரா முன்னால்’ 20/10/2013
- ஸ்ரீலஸ்ரீ சொம்பேஸ்வரானந்த தம்பிரான் மஹாமஹோ பெரிய சந்நிதானேந்திர பூர்வாஸ்ரம மௌல்வி அப்துல் ஹமீதாச்சாரிய நேதி மனுஷ்யபுத்திர மஹராஜ் நாகநந்தியார் 07/10/201 (இது உங்கள் நண்பரின் மீதான ஒரு காட்டுரை)
- எஸ். ராமகிருஷ்ணன், ஜென், மாருதி ஸ்விஃப்ட், வேகன்ஆர், எஸ்டீம், ஆம்னி, 800… க்யூகோ, திரூபா … பேருரை, உரை, நரை, சிரை… அய்யோ! சாருநிவேதிதா!! அய்யய்யோ!!! 14/08/2013
- பாம்பாட்டிச் சித்தரின் எலியும் ஷ்ராதிங்கெனார் பூனையும் 02/07/2013
- பேருரை (அய்யய்யோ!) 18/01/2013
உங்கள் புத்தகங்களில், பெரும்பாலானவற்றை வேலைவெட்டியற்று விலை கொடுத்து (ஆம், கொடுத்த விலை மிகவும் அதிகம்தான்!) வாங்கிப் படித்ததில் கடுமையான மனவுளைச்சல் அடைந்திருப்பதாலும், என் மூலமாக மட்டுமே உங்களுக்குச் பல ஆயிரம் ரூபாய்கள் ராயல்டியாக வந்திருக்கக் கூடிய காரணத்தாலும் – நம் உறவு என்பது (தரமற்ற)விற்பனையாளன் – (கோபமுற்ற)நுகர்வோன் என்கிற அளவில்தான் இருக்கிறது.
சரி. பிடிக்கவில்லை என்றால் ஏன் என் புத்தகங்களை வாங்கினாய் என்று நீங்கள் கேட்கலாம் – இதற்குப் பதில்: என்னைப் பொருத்தவரை, தமிழ்ப் புத்தகங்களை வாங்கவேண்டும், தமிழ் எழுத்தாளர்களைப் படிக்கவேண்டும். ஊக்குவிக்கவேண்டும். இது என் கடமை. அதே சமயம் குப்பைகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் சுட்டிக் காண்பிக்க வேண்டும். இது என் உரிமை. அவ்வளவுதான்.
ஆகவே என் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன். ஏற்கக் கூடியனவற்றை ஏற்கவும். மற்றவையைக் கடாசவும். ஒரு பிரச்சினையுமில்லை.
-0-0-0-0-0-0-0-0-0-
சரி, ‘கலிலியோ மண்டியிடவில்லை’ பக்கம் வருவோம்:
முதல் எதிர்வினை: பாவி மனிதர், ஏன் இந்த அறிவியல் சனியை மட்டுமாவது விட்டு வைத்திருக்கக் கூடாதா? இலக்கியம், சினிமா, அந்தப் பாவப்பட்ட காந்தி என்று கண்டமேனிக்கும் மானாவாரியாகக் குறுக்குசால் போட்டுழுது கற்பனைக் கழுதைகளை மேய்ப்பதற்கே உங்களுக்கு நேரம் போதாது என்றெல்லவா நினைத்தேன்! ஏனிந்தக் கோபம் அய்யா? ஏன் பலி கொண்டீரய்யா??
இரண்டாம் எதிர்வினை: பூனை தவளை ஒட்டகம் உடும்பு எறும்பு யானை பூனை புலி போன்ற நானாவித ஜந்துக்கள் (= ‘கற்பனையான ஜீவராசிகள்’) மூலமாக கந்தறகோள விவரணை என்கிற ரீதியில் பரீட்சார்த்த முறையில் எஸ்ரா அவர்களுடைய சொந்தக் கழுதைகளின் மீது ஆரோகணித்து ஆர்ப்பரித்து எழுவது என்பது என்னைத் திக்குமுக்காடச் செய்கிறது. ஏன்தான் இப்படியெல்லாம் நம்மை பரிசோதனை செய்கிறாரோ இந்த மனிதர். இவருடைய சாதாரணக் கதைகளே ரணகளமாக இருக்கும்போது இம்மாதிரி நரேட்டிவ் டிவைஸஸ் என்றெல்லாம் முயல்வது, ஸாரி, கொஞ்சம் ஓவர்தான். (அய்யய்யோ! என்னுடைய கற்பனை ஜீவராசியான முயல் எப்படியோ முந்தைய வரியில் நுழைந்து விட்டதே! ஐயகோ! எனக்கு அது திரும்பிக் கிடைக்க வேண்டுமே! ஹெல்ப்!!)
மூன்றாம் எதிர்வினை: ஒவ்வொரு துறையிலும் தாம் அறிந்தது என்பது, தம் கைம்மண்ணளவில் ஒரு மண்ணும் இல்லை என நிரூபிக்க, மறுபடியும் மறுபடியும் தம் முயற்சியில் மனம்தளராது முனையும் – எஸ் ரா அவர்களின் விக்கிரமச் செயலூக்கம் என்னை மிகவும் திகைக்க வைக்கிறது.
…
…
…
கடைசி எதிர்வினை: சேசுவே! எம்மை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்! :-(
ஹ்ம்ம்… சரி, இனி, என்னுடைய செல்லக் கட்டுரையான எஸ்ராவின் ‘பால் எர்தோ’ பக்கம் செல்லலாம். ஹ்ம்ம்ம்…
-0-0-0-0-0-0-0-0-
அறிவியலாளர்களைப் பற்றிய எஸ் ராமகிருஷ்ண அமரகாவியமான ‘கலிலியோ மண்டியிடவில்லை’ -வில் இருந்து ஒரு பகுதியை எஸ்ரா அவர்கள் தன் தளத்தில் பதித்திருக்கிறார்; அதுவானது: பால் எர்தோ
முதலில் எஸ்ரா அவர்களின் தலையில் மானசீகச் செல்லமாக இரண்டு குட்டுக் குட்டி, கன்னத்தில் அறைந்து, காதைத் திருகிச் சொல்லவேண்டியது என்னவென்றால் – இப்பெயரை (=paul erdős) ஒன்று, ஆங்கிலப் படுத்தி பால் எர்டோஸ் என்று எழுதுங்கள். அல்லது பால் எர்டுஷ் என்று ஹங்கேரிய உச்சரிப்பு முறையில் எழுதுங்கள். இது இரண்டுமில்லாமல் பொத்தாம்பொதுவாக ஒரு கந்தறகோளப் புது மொழியையும், அசட்டு உச்சரிப்பு வரிசைகளையும் உருவாக்குவது உங்கள் வேலையா என்ன?
அதுவும் எர்தோ, பஸ்வோ, காள்யோ, ஆடோ, கள்தேயோ எனப் பெயர்க் கொலை செய்யாதீர்கள். மிகவும் படுத்தாதீர்கள். இணையத்திலிருந்து அனைத்தையும் மூச்சுவாங்க மூச்சு முட்ட ‘உள்வாங்கி’க்கொண்டிருக்கும் உங்களுக்கு இதனைக் கூடச் செய்யமுடியாதா என்ன?
நீங்கள் எழுதுகிறீர்கள்:
“குறிப்பாக நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மெனைப் பற்றி அப்படியான வியப்பு எப்போதுமே எனக்குண்டு, அவரது உரைகள் தத்துவச் செறிவானவை.”
உங்கள் அளவுகோல்படி என்னதுதான் இந்தத் தத்துவ இழவு என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஒருவேளை வேறொன்றும் எழுதத் தோன்றவில்லை (ஏனெனில் நீங்கள் ஃபெய்ன்மன் படிக்கவில்லை) என்ற காரணத்தால் தத்துவம், சொறிவு, செறிவு என்றெல்லாம் வார்த்தைகளை அடுக்கி விட்டீர்களா?
… ஆனாலும் அய்யன்மீர், பெயின்மன் பற்றி எழுதி எமக்கும் பெயின் வரவைக்கவேண்டா. எனக்கு மனவலி அதிகமிருந்தாலும், உங்களால் எனக்கு ஏற்படும் வலி மிகவும் அதிகம்.
ஹ்ம்ம்… தத்துவம் என்றாலே உங்கள் பெயின்மன் கோபப் படுவார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஏனெனில் இந்தப் பாவப்பட்ட ஃபெய்ன்மன் புத்தகங்களிலும் ஒரு இழவையும் நீங்கள் படிக்க (மன்னிக்கவும், வாசிக்க)வில்லை. அப்படித் தப்பித் தவறிப் படித்திருந்தாலும், ஒரு சுக்கையும் புரிந்துகொள்ளவில்லை.
உங்களுக்காகவும், சில ஃபெய்ன்மன்னிய மேற்கோள்கள்:
“Philosophy of science is about as useful to scientists as ornithology is to birds.”
“Nobody ever figures out what life is all about, and it doesn’t matter. Explore the world. Nearly everything is really interesting if you go into it deeply enough.”
“My son is taking a course in philosophy, and last night we were looking at something by Spinoza and there was the most childish reasoning! There were all these attributes, and Substances, and all this meaningless chewing around, and we started to laugh. Now how could we do that? Here’s this great Dutch philosopher, and we’re laughing at him. It’s because there’s no excuse for it! In the same period there was Newton, there was Harvey studying the circulation of the blood, there were people with methods of analysis by which progress was being made! You can take every one of Spinoza’s propositions, and take the contrary propositions, and look at the world and you can’t tell which is right.” (Off: Richard P. Feynman, The Pleasure of Finding Things Out)
என்ன சொல்லவருகிறேன் என்றால், நீங்கள் ஷ்ராடிங்கெர், ஆப்பன்ஹெய்மர் பற்றி விலாவாரியாக விஞ்ஞானிகளே மெச்சும் அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது – தத்துவம் தத்துப்பித்துவம் என்று சொன்னால், கொஞ்சமாவது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் சாப்ளினைக் கடித்து, காந்தியைக் கடித்து, எங்கள் ஃபெய்ன்மனையே கடிக்க வருகிறீர்களே! ஐயோ! இதனைக் கேட்பாரில்லையா…
“பெயின்மேனைப் போலவே அலாதியான மனப்போக்கு கொண்ட கணித மேதையான பால் எர்தோவின் (Paul Erdos ) வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் The Man Who Loved Only Numbers புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது”
பொய் சொல்லக் கூடாது, எஸ்ரா – என்றும்
டவுன்லோட் செய்தல் ஆகாது சீப்பா
தெய்வம் மட்டும்தாம் நமக்குத் துணை வாப்பா
ஒரு போங்கு வர மாட்டாது, வாசகனே போப்பா!
(பாரதீ! என்னை மன்னியும்!)
நீங்கள் இப்புத்தகத்தைப் படித்திருந்தால், இப்படி எழுத மாட்டீர்கள். முதலில் இவர்கள் இருவரும் தன்னளவில் மிகவும் வித்தியாசமான ஆளுமைகள். ஆனால் நீங்கள் படிக்கவில்லை. இப்புத்தகத்தின் சிலபல விமர்சனங்களைப் பார்த்து மனங்கலங்கி, போதைகொண்டு ஏதோ நீங்களே இதனைப் படித்துவிட்டது போல நினைத்துக் கொண்டுவிட்டீர்கள்!
உங்கள் கையறு நிலையைப் பார்த்தால் எனக்கு மிகவும் பாவமாக இருக்கிறது.ஹ்ம்ம்… கொஞ்சம் கருணையோடு உங்கள் கட்டுரையைப் பார்த்தால் – நீங்கள், படித்ததாகச் சொல்லும் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் புரட்டியிருக்கலாம், ஆனால் தாண்டவில்லை என்பது நிச்சய நிரூபணமாகலாம்; ஆனால் எனக்குக் கருணையில்லை. உருளைக்காரன் நான் – ஒரு ரௌத்திரமிக்க ரோட்ரோல்லர். கிர்ர்ர்…
சரி. அடுத்த (அதாவது அடுக்காத) பத்திக்கு வருவோம்:
“ஒரு ஒரு தேநீரகத்தில் எர்த்தோவும் அவரது நண்பரான கிரஹமும் பலமணிநேரம் ஒருவார்த்தை கூட பேசாமல் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருக்கிறார்கள், ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை, நீண்ட நேரத்தின் முடிவில் கிரஹம் ஏதோ முடிவிற்கு வந்தவரைப்போல அது சைபர் இல்லை, ஒன்று தான் என்று சொல்கிறார், எர்தோ வியப்புடன் தலையாட்டுகிறார், இருவரும் சந்தோஷமாக எழுந்து போய்விடுகிறார்கள்,”
பால் ஹோஃப்மன் அவர்களின் The Man Who Loved Only Numbers புத்தகத்து ஐந்தாம் பக்கத்தில் உள்ள விஷயம் – ஹரல்ட் க்ரஹம் அவர்களின் மனைவி நினைவுகூர்வதாக வருவது: “There was a time at Trinity College, in the 1930s I believe, when Erdos and my husband, Harold, sat thinking in a public place for more than an hour without uttering a single word,” recalled Anne Davenport, the widow of one of Erdos’s English collaborators. “Then Harold broke the long silence, by saying, ‘It is not nought. It is one.’ Then all was relief and joy. Everyone around them thought they were mad. Of course, they were.”
எனக்கு மிகவும் பொறாமை தரும்விதமாக, எஸ்ரா அவர்களின் கற்பனைக் கழுதை சண்டித்தனம் செய்வதேயில்லை. மானாவாரியாக முழி பெயர்க்கிறது… இல்லாத விஷயங்களைச் சேர்க்கிறது. இத்தனைக்கும் அதற்கு ஆங்கிலம் தெரியும் என்பது ஒரு கேள்விக் குறிதான். ஹ. அதனால் என்ன, அதன் முதலாளிக்குத் தமிழ் தெரியாததால், ஓன்றுக்கொன்று பர்த்தியாகி விடுகிறதல்லவா?
“பார்க்க பைத்தியக்காரத்தனமாகத் தெரியும் இந்த மௌனமான விளையாட்டு தான் கணிதவியல் அறிஞர்களின் இயல்பு வாழ்க்கை, அவர்களின் மனது எங்கே போனாலும் எப்போதும் கணிதம் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது, உலகை முடிவற்ற கணிதவெளியாகவே கருதுகிறது,”
தேவைக்கதிகமாக கணிதவியல் அறிஞர்களையும் அவர்களுடைய ‘இயல்பு வாழ்க்கை’களையும் அறிந்து தெளிந்து கொண்டிருக்கிறார் எஸ்ரா அவர்கள். எனக்கு அந்தக் கொடுப்பினையில்லை. ஏழெட்டு கணிதவியல் ஆசாமிகளைத் தான் நான் அறிவேன். அவர்கள் மௌனமான விளையாட்டு எல்லாம் விளையாடுவதாகத் தெரியாது. பார்க்கவும் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கல்.
ஆனால், எஸ்ரா-வுக்குத் தெரிந்த கணிதவியல் அறிஞர்களின் மனதுகள் எங்கெல்லாம் போகின்றன என்று எப்படித்தான் எஸ்ரா கண்டுகொள்கிறார் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்தான் போலும். :-(
… எஸ்ராவிய கட்டுரையில் இதற்குப் பிறகு ஒரு கைவல்ய நிலை ஏரி-கொக்கு-துறவிகள்-மௌனம்-காலம் என்று ஸென் (=ஜென்) கதையை அவிழ்த்து விடுகிறார் எஸ்ரா. எர்டுஷ் பற்றிச் சொல்வதற்குப் பதிலாக – இந்தக் குட்டிக் கதைக் கழுதையானது கட்டுரையில் சுமார் மூன்றிலொரு பகுதியை நிரப்புகிறது. வாழ்க. பக்கத்தை எப்படியாவது நிரப்பவேண்டுமல்லவா?
ஆனால் எஸ்ரா அவர்களின் ஜென் என்பது கொஞ்சம் பயங்கரவாத ஜென். கொஞ்சம் நோண்டினால் வியக்கவைக்கும் வெற்றிடமாக இருக்கும். அல்லது, அது படுபீதியளிக்கும் விதத்தில் ஒரு ப்லேக் ஹோல் – ஆக இருக்கும். அய்யய்யோ! என்னை விட்டுவிடுங்கள்… ஏற்கனவே அங்கு போயிருக்கிறேன். மன்னிக்கவும்.
இப்போது ஒரு எதிர்பாராத விதமாக, திடுதிப்பென்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு விசித்ராத்வைத அட்டாக்
“பேசாமலிருப்பதும் மௌனமாக இருப்பதும் ஒன்றில்லை தானே.”
டேய், ஓட்ரா!
இதற்கு மேல் எஸ்ரா, அவரது வழக்கம்போல புத்தகங்களைப் படிக்காமல், ஆங்கிலவிமர்சனங்களை மட்டும் மேலோட்டமாகப் பிய்த்து, கலந்தடித்துக் கதம்பச் சோறு பறிமாறுவதை நொள்ளை சொல்ல, எனக்குத் திராணியில்லை. மன்னிக்கவும். மு டி ய வி ல் லை…
… ஆனால், கட்டுரையின் கடைசியில் எஸ்ரா போட்ட சிரிக்கவைக்கும் வாயு குண்டின் வீரியம் தாங்காமல், சிரித்துச் சிரித்துப் புரைக்கேறித் தள்ளாடிக் கொண்டிருப்பதனால், அடுத்த 50 வார்த்தைகளில் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
அதாவது, எஸ்ரா முடிவுரை:
“மெய்தேடலின் ஒருவடிவம் தானே கணிதமும், அந்த வகையில் பால் எர்தோவும் ஒரு ஜென் துறவியே.”
ஏன், இப்படியே எழுதிக் கொண்டு போகும் எஸ்ரா அவர்களும் ஒரு ஜென் துறவிதான். அந்தவகையில் எஸ்ரா- வும் ஒரு கணிதமேதைதான். ஆனால், முட்டாள் தமிழ் வாசகர்களாகிய நமக்குத் தான், இந்த மனிதருடைய மகாமகோ திறமைகளை அறிந்து போற்றும் அளவுக்கு, விஷயங்களைப் புரிந்துகொள்ள மூளையில்லை, என்ன செய்ய.
… அதனால் என்ன, எவ்வளவு திறமைகள் வாய்பிளந்து எஸ்ராவைப் பார்த்துக் கொண்டிருப்பதை சிலாகித்து ஜென் கவிஞர்கள் பாடுவதை கணிதமேதைகளின் தேடல்கள் அவதானித்துக் கொண்டிருக்கும்.
பின்குறிப்பு: என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லிவிடவும்.
எச்சரிக்கை: இந்த எஸ்ரா அவர்களின் YesRaw புராணத்திக்கு இன்னொரு பாகம் – எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3) வேறு இருக்கிறது. உங்கள் உறவினர்களுக்கும் சொல்லி விடவும்.
January 10, 2014 at 23:26
இந்த விதமான சிக்கல்கலுக்கு ஒரே தீர்வு, என்னைப்பொறுத்த மட்டில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஃபெய்ன்மன் போன்றோரின் சில நூல்களாவது ( “you must be surely joking mr feynman”, “the pleasure of finding things out” and “what do you care what other people think?”) இயல்பான தமிழில் (not the literary tamil mentioned above) கிடைப்பதே….
i know i will be called a dreamer. But if such books are available, people who refer to them will be more careful and this will result in less minds being corrupted…
Thanks
Ramanan
January 11, 2014 at 01:18
:) சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி Ashes தொடரில் 0-4 கணக்கிலிருந்து 0-5 கணக்கிற்கு “முன்னேறிக்கொண்டிருக்கும்” போது இங்கிலாந்து மீடியாவோ அல்லது cricinfo வோ “இதுவே பாக்சிங்காக இருந்தால் மேட்ச் எப்போதோ நிறுத்தப்பட்டிருக்கும்” என்று எழுதின. எனக்கு இப்போது இப்படித்தான் தோன்றுகிறது. போதும் ஸார், விட்டுவிடுங்கள், சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது :)
சிவா கிருஷ்ணமூர்த்தி
January 11, 2014 at 06:37
அப்படி என்னயா மோசமா செஞ்சிட்டாங்க யுவாவும் எஸ்ராவும்? தமிழ்னா பிறந்ததுதான் அவங்க செஞ்ச பாவம்.
அவங்க உழப்பை மதிக்கணும். சும்மா குத்தம் சொல்லாதஏ!
இதையே ஒரு பாப்பான் எழுதியிருந்தா இப்படியா காழ்ப்போட எழுதுவே? ஜெமோ ரொம்ப சுத்தமா?
எல்லாம் பாப்பார வெறி. உன்ன மாதிரி நாலுபேர் இருந்தா தமிழ் எப்படிடா வளரும். அவதூறு செஞ்சே பிழப்ப நடத்துவீங்கடா
January 11, 2014 at 08:48
அய்யா ‘டமிலன்,’
ஒப்புக்கொள்கிறேன், ஒரு சிறு திருத்தத்துடன் – ’அவர்கள் தமிழர்களாகப் பிறந்ததுதான் தமிழ் செஞ்ச பாவம்.’
ஜெயமோகன் ரொம்ப சுத்தம்தான். அவர் காலையில் குளித்து விட்டு (துண்டைக் கட்டிக்கொண்டு) குளியலறையிலிருந்து வெளியே வருவதை இரண்டுமுறை (ஊட்டியில்) பார்த்திருக்கிறேன். நான் எப்பொழுதுமே கறாரான தரவுகளை வைத்துக்கொண்டு மட்டுமே எழுதுபவன் என்பதை அறிவீர்களாக.
உங்களுடைய அபிமான எழுத்தாளர்கள் ஜென் கின் வொலக சினிமா வௌவ்வால் தமிழ் வரிவடிவச் சீர்திருத்தம் தெலுங்கு சினிமா மண்ணாங்கட்டி தெருப்புழுதி என்று எல்லாவற்றையும் அவதூறு செய்வதை விடவா நான் செய்து விட்டேன்?
தமிழ் வளராது. இது உண்மைதான். உங்கள் பின்னூட்டமே அதற்குச் சாட்சி. :-)
January 11, 2014 at 12:24
hahaha. :)
January 13, 2014 at 22:12
அப்படி என்னயா மோசமா செஞ்சிட்டாரு டமிலன் ? தமிழ்னா பிறந்ததுதான் அவரு செஞ்ச பாவம்.
அவங்க உழப்பை மதிக்கணும். சும்மா குத்தம் சொல்லாதஏ!
இதையே ஒரு பாப்பான் பின்னூட்டம் இட்டிருந்தா இப்படியா காழ்ப்போட எழுதுவே?
எல்லாம் பாப்பார வெறி. உன்ன மாதிரி நாலுபேர் இருந்தா தமிழ் எப்படிடா வளரும். அவதூறு செஞ்சே பிழப்ப நடத்துவீங்கடா.
டமிலன், நீங் நடத்துங் டமிலன் !
January 11, 2014 at 12:29
ஜெமோ பாப்பான்??? Yuva and S.Ra comparison itself is too much. The former farts loud, confidentally and only about tamil cinema as a pretentious intellectual. And the latter subtely from what I can see in this post
January 11, 2014 at 06:47
…After reading this article I want to say “How true!!!” about this line “உங்கள் அரைகுறைச் சோப்ளாங்கி வாசகர்களின் மீது…” But let me come to the conclusion after reading the third part as well. Sometimes I think lack of a strong review system in vernacular(may be wrong) publishing industry leads to half-baked writings.
January 11, 2014 at 11:58
@tamilan:’ஜெமோ ரொம்ப சுத்தமா?” ஜெமோ சுத்தமோ இல்லையோ உங்கள் மதீப்பீட்டின்படி ”பாப்பான்” இல்லை. சனியன் எந்தவிதத்திலாவது ஜாதியை புகுத்தாவிட்டால் உங்கள் தலை வெடித்து விடும் போலும்!
January 11, 2014 at 17:15
யப்பா டமிலா……
போற போக்குல யார் மேல வேனும்னாலும் சாதியை வச்சு புழுதி வாரி தூற்றும் உங்களைப்போன்றவர்களுக்கு ,ஆதாரங்களுடன் கிழித்து காயப்போடும் ராமசாமி அவர்களை பார்த்தால் அலர்ஜியாத்தான் இருக்கும்…. என்ன பன்றது….ஆண்டவன் அவருக்கு கொஞ்சம் மூளையை வச்சி படைச்சிட்டாரே?
January 12, 2014 at 03:59
இந்த விமர்சனத்தில் எனக்கு இரண்டு இழைகள் தென்படுகின்றன. ஒன்று, காற்று வாக்கில் கேள்விப்பட்ட விஷயத்தை, தானே நேரடியாக அறிந்ததாக காட்டிக்கொள்வது. தகவல்களை சரி பார்க்காமல் பகிர்ந்துகொள்வது. இது நிச்சயம் தவறுதான். விமர்சிக்கப் பட வேண்டியதுதான். எரிக் பிளோம் புத்தகம் தொடர்பான விமர்சனம் இவ்வகையிலானது. இதை ஏற்கிறேன்.
இரண்டாவது இழை கட்டுரை அமைப்பு தொடர்பான விமர்சனம். நெகிழ்வான, கவித்துவம் மிக்க கட்டுரை அமைப்பு. இதை, “முதுகு சொரிதல்”, “மானே தேனே போடுதல்” என சிலர் கூறக்கூடும். உதாரணமாக, எர்டோஸ் அவர்களும், கிரஹாமும் மெளனமாக சிந்தித்துக் கொண்டிருந்ததை, இரண்டு ஜென் துறவிகள் கதையோடு முடிச்சு போடுவது. கணிதவியல் அறிஞர்கள் மோன நிலையில் இருப்பவர்கள் என்றொரு பிம்பம் காட்டுவது. மேலும், தனக்கு மேலோட்டமாக தெரிந்த சிலவற்றை சுவாரஸ்யமாக தொகுப்பது. இந்த அமைப்பு பற்றிய விமர்சனம்.
இரண்டாவது இழையில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. இந்த அமைப்பை நிராகரித்தால் பத்தி எழுத்து என்பதை முழுதும் நிராகரிக்க வேண்டி வருமல்லவா? தீவிரத் தன்மையோடுதான் எல்லாம் எழுதப்பட வேண்டுமா? லைட்டான எழுத்துக்கு இடம் இல்லையா? ஒன்றை பற்றி தீவிர ஞானம் இருந்தால் மட்டுமே பேச வேண்டும் என்பது சரிதானா? முழுதான ஸ்வர சுத்தம் இருப்பவர் மட்டுமே பாடலாம் என்றால், ஒரு சிலர் தவிர, நாட்டில் யாரும் வாயைத் திறந்து பாடக் கூடாது என ஏமநாத பாகவதர் போட்ட தடை போன்று ஆகிவிடாதா?
இவன் என்ன ஓவரா பேசறான் என என்னை யாராவது அப்பாடக்கர் என அழைக்கும் முன் எஸ்கேப்! :-)
January 12, 2014 at 10:42
வெங்கடேசு, இப்ப இண்ணாண்றீங்க? வரவர வொங்க தொல்ல தாங்கல. அந்தாள் திருட்னத நீங்கதான முந்திரிக் கொட்டமாரி கண்டுபிட்ச்சீங்க. இப்ப என்ன டபாய்ச்சிக்கினு அவ்ருக்கு சப்போர்ட் பண்றீங்க? நான் வொங்ளுக்கே அந்த பளைய பேப்பர கொடுக்லன்னிட்டு காண்டா?
என்னங்கடா இது! நான் கூவ்ற கருமாந்தரத்த விமர்சனம்னிட்டு நீங்களே கொளப்பிக்கிட்டு, ஏன் வாய்ஸ் வுட்றீங்க?
இவ்ர நான் வுல்டாவே பண்ணாதேன்னிட்டா சொல்றேன்? தாராளமா பண்ணிக்கோ ஆனாக்க தொளில்சுத்தத்தோட செய்யின்னுதான் சொல்றேன். பிர்ஞ்சிதா?
ரோசிச்சு மூளய யூஸ் பண்ணிக்கினு வோனாவும் எள்த மிடில, கமுக்கமா அட்டக் காப்பியட்சும் எள்த முடீலன்னாக்க – இன்னாடா இது இஷ்டைலு?
அடுத்த பொத்தகச்சந்தேக்கு அவரோட அட்த்த தொவுதி ‘தலயெள்த்து’ வர்தாம் – அதுக்குள்ள மாரத்தான் வோட்டப் பயிற்சி எடுத்துக்கணும்பா… நீ கெல்ச்சிட்டே. என்ன வுட்ரூ!
January 13, 2014 at 16:19
சார், அவர் எழுதின மறைக்கப்பட்ட இந்தியா புத்தகத்தை வாங்கி வைத்துள்ளேன். ஒவ்வொரு பக்கத்தையும் படித்த பின், அதை சரி பார்க்க பத்து புத்தகம் படிக்க வேண்டுமா? கிருஷ்ணனுக்கு குந்தி அக்கா என்று எழுதியவர் புத்தகமாச்சே என்று சந்தேகத்துடன் வாங்கினேன். இப்போ பயம் வந்துள்ளது.
—–>>>> அய்யா ரெங்ககசுப்ரமணி, உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் எந்த ஒரு இடியாப்பப் பிரச்சினைக்கும் நான் ஒரு தீர்வு கையிருப்பில் வைத்திருக்கிறேன்.
நீங்கள் எஸ்ரா அவர்களை ஒரு நகைச்சுவை எழுத்தாளராகப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். ஊக்கபோனஸாக, திடுக்கிட வைக்கும் க்ரைம் நாவல் எழுத்தாளராகப் பார்க்கவேண்டும். எந்த பத்தியில் என்ன சுடப்பட்டதோ என்று திக்திக் என்று உணர ஆரம்பித்தாலே போதும். உங்களுக்குப் பைசாவசூல் நிச்சயம்.
‘கிருஷ்ணனுக்கு குந்தி அக்கா’ விவகாரம்: ராமகிருஷ்ணன் அவர்களுடைய சொந்த அக்கா பெயர் ராமகுந்தி. (அவர் குடும்பத்தைப் பற்றிய இவ்விவரம், பொதுவாக எவருக்கும் தெரியாது; ஆனால் இணைய வரலாற்றிலேயே முதல்முதலாக… இங்கு தான் இந்த செய்தி பதிவாகிறது!)
ஆகவே, கிருஷ்ணனுடைய அக்கா பெயர் குந்தி என்கிற தருக்கரீதியில் அவர் யோசித்திருக்கிறார். இதிலென்ன தவறு?
உங்களுக்கெல்லாம், இதெல்லாம் கூட புரியவைக்கவேண்டியிருக்கிறதே எனக் கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும், இவ்விஷயங்கள் அவசியம் ஆவணப் படுத்தப் படவேண்டுமல்லவா?
அன்புடன்,
நோ. ராவணகம்ஸன்
பின்பரிந்துரை: மறைக்கப்பட்ட இந்தியாவையே மறைத்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமல்லவா? கவலை வேண்டேல்!