student – teacher ratio! *argh!*
June 1, 2014
Ha Ha! Sorry. I actually wanted to title the post ‘Fathers-children ratio’ or ‘Mothers-children ratio’ – or to avoid any possible controversy, ‘parents-child ratio.’ But, sanity prevailed on me, obviously.
This is one of the really cutesy questions people (not all folks, but the urban types) rather habitually ask, when they are seeking admission for their wards into any school. And, of course, on the face of it, it sounds like a very normal, anxious question, but…
I will tell you why.
The assumption behind this duh question is, a ‘good’ ratio of say, 10:1 (or less) would automatically ensure that their ward would get individual attention, their child would be personally addressed with respect to its unique abilities and ‘weaknesses,’ the child will have all round growth and would ace in all competitive exams eventually and get into some nondescript IIT and then land a software pogromer’s job in some silly IT services company, neighbor’s (and relatives’) envy, owner’s pride and all that!
On the contrary, a ratio of say, 20:1 (or above) would automatically mean that the school is desperate for resources (funds, teachers and what not!) and/or the children do not get individual attention at all, the classes will be chaotic, the development of multifarious capabilities of your child would be stunted and so he will merely graduate from some nondescript IIT and then land a software programmer’s job eventually, in some silly IT services company, oh the horror, the horror! Read the rest of this entry »
பயிர் வட்டங்களும், மயிர் வட்டங்களும்…
May 30, 2014
பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை, படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!
ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் – அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம். மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால், கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும். Read the rest of this entry »
இந்த மங்கோலியச் சாகசப் பயணத்தின் முதல்பகுதியைப் படித்தால், இந்த இரண்டாம் பாகம் மேலதிகமாகப் புரியாமல் போகலாம்.
… சரி. நான் முன்னமே சொன்னது போல, என் துணைவியாருக்கு சந்தோஷத்தைத் தந்துகொண்டு என் மங்கோலியப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்…
விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளில் மறுபடியும் மறுபடியும் என் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவண்ணம் இருந்தனர் – ஏனெனில், அந்த பரிசோதக முட்டாள்கள், என்னுடைய புத்தகக் கட்டுகளை ஒரு நூதன வெடிகுண்டு என நினைத்துவிட்டனர் போலும். அல்லது, ஒருகால், என் புத்தகங்களின் பின் அட்டைகளில் என் மகாமகோ தொப்பையுடனான குண்டுப் படத்தைப் பார்த்து, அவை குண்டு தயாரிப்புக் கையேடுகள் என நினைத்துவிட்டனரோ? Read the rest of this entry »
ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்?
May 23, 2014
ஷிவ் விஸ்வநாதன் அவர்களை நான் பலபத்தாண்டுகளாக, ஏறக்குறைய அவர் எழுதுவதையெல்லாம் படித்து வந்திருக்கிறேன் என்கிற முறையில் – நான் தயங்காமல் சொல்வேன் – அவர் ஒரு பிரகாசிப்பு மிகுந்த சமூகஅறிவியல்சார் சிந்தனையாளர் மட்டுமல்லாமல், அழகான பல திடமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியிருப்பவர்.
மேலும் – அவருடைய சில மாணவர்களின் கருத்தை ஒட்டி எழுதினால் – அவர் ஒரு செய்நேர்த்திமிக்க மாயாஜால ஆசிரியர் – அதாவது கருத்து-பண்பாட்டுப் புலங்களில் குறுக்காகவும் நெடுக்காகவும் புகுந்து அழகான கதைகளையும், கருதுகோள்களையும் நெய்யும் திறன் படைத்தவர். அவர் மாணவர்களை, தன் அறிவாற்றலின் வசீகரத்தால், அவர் ஒரு பாம்பாட்டி போல ஆட்டுவித்தார் (ஆட்டுவிக்கிறார்?) என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும் விஷயம்! Read the rest of this entry »
மங்கோலியாவில் ராமசாமி!
May 18, 2014
நெடுநாட்களாக, குறிப்பாக 2011லேயே இணையத்தில் பிரபலமாக இருந்த நான், ஒத்திசைவு இணையதளம் மூலமாக எழுதவந்து மேலும் உலகப் புகழ் பெறுவதற்கு முன்பிலிருந்தே – ஒரு வாசகர் குழு ஆரம்பித்து என் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்று என்னுடைய தேர்ந்த வாசகர்கள் கருதி எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். எனக்கு இந்த விஷயம் எல்லாம் ஒத்துவராது என்று கருதினாலும், கடந்த மூன்று வருடங்களாக அவர்களே கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், க்ரேக்க மொழி உட்பட நான் எழுதியுள்ள கட்டுரைகளை அலசுகிறார்கள். நான் எழுதியுள்ள பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். என்னுடைய செல்லமான களைஞர் அவர்களைக் களைந்து வேகவைக்கிறார்கள். ஐன்ஷ்டீன் சொன்னவற்றை நான் சொன்னதுபோல, இசையில் விற்பன்னன், ஞானாசிரியன் போலவெல்லாம் எழுதுகிறார்கள் – எனக்கு இதில் பிரச்சினையில்லை – ஏதோ தமிழர்களுக்கு ஞானம் வளர்ந்து, சார்பு நிலைத் தத்துவம், இசை பற்றியெல்லாம் புரிதல்கள் ஏற்பட்டால் சரி! தமிழனுக்கு ஏதோ என்னாலான உபகாரம்.
இதுதொடர்பான அப்போதைய பிரச்சினையென்னவென்றால், என் வாசகர்கள் குழுவிற்கு ஒரு லோகோ, ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டுமாக இருந்தது. வாசகர் வட்டம் என்றால் தட்டையாகவும், சகல பக்கங்களிலும் மொண்ணையாகவும் இருக்கும்; பிடிபடாமல் வழுக்கிக் கொண்டேயிருக்கும். வாசகர் சதுரம் என்றாலும் தட்டை; பட்டம் தறிகெட்டுப் பறப்பது போன்ற தோற்றம். இவை இரண்டும் முப்பரிமாணமற்றவை. குழுமம் என்று சொன்னால் – ஏதோ கேப்பங்கூழினை ‘மம்மம்’ என்று சொல்லி குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஊட்டிவிடுவது போன்ற வழவழா கொழகொழா தோற்றம். ஒரே பிரச்சினை! எனக்கு, பெயருக்கு அப்பால் – நான் எழுதிஎழுதி, லோகத்துக்கு அருள் பாலிக்கும் திறனையும் அந்த பெயரும், லோகோவும் வெளிக்கொணர வேண்டும். பரந்துபட்ட எம் தமிழ் மக்களுக்கு, எளிதாகவும் பிடிபடவேண்டும். ஆக, யோசித்து, யோசித்து…
… இப்படி, என்னுடைய வாசகர்களே ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்துக் கொண்டு நடத்தும் குழுவை ‘ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் சூட்டினார்கள், சூட்டிகையான சூடிக் கெடுத்த சுடற்கேடிகள்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; லோகோ!
அய்யய்யோ! மோதி பிரதமராக உள்ள அரசின் பிரமாதமான முதல் சாதனையாக — — ஒரு பக்கம், ஓமர் அப்துல்லா + கிரீஷ் கர்னாட் + யுஆர் அனந்தமூர்த்தி + லாலு பிரசாத் யாதவ் + மல்லிகா சாராபாய் + தேவ கௌடா போன்றவர்களெல்லாம், அவர்கள் சத்தியம் செய்ததுபோல், இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு — நாளைக்கே அமெரிக்காவிலேயோ அல்லது வேறேதாவது எழவிலேயோ போய் நிரந்தரமாகத் தங்கிவிட முயற்சி செய்யப் போகிறார்களே என்று நான் வருத்தத்துடன் ஆனந்தத்தில், கதனகுதூகலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்…
… இன்னொரு பக்கம், பாவம், மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதற்குப் பின் – பலரும் தொழில்முறை அறிவுரைக்காரர்களாக மாறி விட்டார்கள். இத்தனை நாள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் – இப்போது பிரதம மந்திரி ஆகப் போகிறாய் அல்லவா? உடனே விலைவாசியை அடக்கு, தீவிரவாதத்தை அடக்கு, என அடக்குஅடக்கு என்று துடிக்கிறார்கள்… ஆக்கபூர்வமான அறிவுரைகளை அளித்தே தீருவேன் என்கிறார்கள். Read the rest of this entry »
இணையத்திலிருப்பதனாலேயே ஒரு விஷயம் சரியாகிவிடாது!
May 15, 2014
(அல்லது) கோத்ரா, தீர்ப்பு, என்னுடைய முயற்சிகள்: சில குறிப்புகள்
மேலே படிப்பதற்குப் பின்புலமாக நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை (அதன் பாவப்பட்ட பின்னூட்டங்களுடன்) படித்தால் நலம். படிக்காவிட்டாலும் ஒரளவு புரியலாம். (
குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு? 08/05/2014; தொடர்புள்ள இன்னொரு பதிவு: கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்… 13/05/2014)
வெங்கடேசன் அவர்கள், தன்னுடைய பின்னூட்டங்களில் கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்: ஒன்று, இரண்டு. இவற்றில் இரண்டாவதற்கு இந்த பதில்.
அன்புள்ள வெங்கடேசன்:
உங்கள் கரிசனத்துக்கும் – உண்மை என்னவாக இருந்திருக்கலாம் எனும் சிந்தனைகளுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல மனிதர்கள் இப்படி இல்லை.
- நான், அம்மணி தீஸ்தா ஸெதல்வாத் தளத்திலிருந்த பொதுத் தீர்ப்பைப் படிக்கவில்லை. அவர் மேல் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை; ஏனெனில் தரவுகள் சார்ந்து அவரை ஒரு பண/கருத்து மோசடிப் பேர்வழியாகக் கருதுகிறேன். அதே சமயம் பல வடிவங்களை ஒருங்கிணைத்து எது சரி எதில் என்ன பாடபேதம் என்று ஆராயவேண்டிய அளவு, போயும்போயும் தீஸ்தாக்கள் மேல் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ஏன், உங்களுக்குமே இல்லை — என்பதுதான் என் எண்ணம். மேலும் வெறும் கூக்ல் மூலமாக, மௌஸை உருட்டி இணையத்தில் கிடைக்கும் சத்தற்ற செய்திகளை நான் உடனே நம்பி விடுவதில்லை. என் பயிற்சியும் அனுபவங்களும் (healthy skepticism) அப்படி என்னை ஆக்கிவிட்டிருக்கின்றன. ஆம். இன்டெர்நெட்டித்யேவ நஸாது ஸர்வம். :-( காளிதாஸன் எப்போதுமே காப்பாற்றிவிடுவான்! :-)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
— (திருக்குறள்(அறத்துப்பால்(வாய்மை)))
அதாகப்பட்டது: மனதாறத் தெரிந்தே, அண்டப்புளுகுணி மாங்கொட்டையாக இருப்பவர்களை அவர்களுடைய மனச்சாட்சியே சுட்டுவிடும் என்று திருக்குறள் நீதிபோதனையாகச் சொன்னாலும் – என்னைப் பொறுத்தவரை, எனக்குத் தெரியவந்த மாங்கொட்டைகளை, எனக்கு நேரமும் பொறுமையும் (=பொறுமையின்மை) இருந்தால் நானே சுட்டுவிடுவது வழக்கம்; ஏனெனில் பலருக்கு மனச்சாட்சியே இல்லை. இது ஒரு பிரத்தியட்ச உண்மை.
முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களும் ஒருவருக்கொருவர் மீது பரஸ்பர அவநம்பிக்கையை மட்டுமே கொண்டுள்ளனர்; ஆர்எஸ்எஸ் என்பது ‘ஹிந்துத்துவ’ குண்டர்கள் கும்பல்; முஸ்லீம் என்றாலே அவன் சந்தேகப்படத் தக்கவன்- வெடிகுண்டன்; ஹிந்துத்துவம் என்றாலே மதவெறிதான்; முஸ்லீம் என்றாலே சிறுபான்மைத்தனப் படுத்தப்பட்டு ஒதுக்கப்படுபவன்தான்; ஜாதியென்ற பகுப்பு ஜாதிவெறிக்குள் அடங்கிவிடுவதுதான்; மதம் சார்ந்து இயங்குபவர்களெல்லாம் முட்டாள் மதவெறியர்கள், ஸெக்யூலரிஸ்ம்தான் புளகாங்கிதம் தரும்; தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் நேர்மையாளர்கள்; தொழில்முறை அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணர்கள், அவர்கள் நிபுணத்துவம் மிகுந்து நிரம்பிவழியும்படியால், கல்வியிலும் நேர்மையிலும் கரைகண்ட ஜாம்பவான்கள்; நக்ஸலைட்டுகள் அதிமனிதர்கள்; திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்திருக்கவில்லையென்றால் தமிழகத்துக்கு விமோசனமே இருந்திருக்காது … …
… போன்ற மூச்சுமுட்டவைக்கும் பரப்புரைகளையெல்லாம் (nauseating & nasty propaganda ploys) கயமையுடன் முன்னெடுத்துச் செல்வது பப்பரப்பா ஊடகங்களே என்பதில் (பல அறிவியல்_தொழில்நுட்ப விற்பன்னர்கள் + நேர்மையான களப்பணியாளர்கள் – அதுவும் முஸ்லீம் + ஹிந்து(அதுவும், ஆர்எஸ்எஸ் – அய்யய்யோ!) நண்பர்களைப் பெற்றுள்ள) எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. பொதுமக்களில் பெரும்பாலோர் இப்படிப்பட்ட பரப்புரைகளையெல்லாம் பொதுவாக நம்புவதில்லை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
இருந்தாலும்… Read the rest of this entry »
ப்ரியங்கா ஸிங் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரின் கீச்சல்தான் மேற்கண்டது. :-)
இந்தக் கிண்டல்களில், நையாண்டிகளில் அமிழ்வதற்காகவே ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், டிவிட்டரில் நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடப் போகிறேன்… ;-) Read the rest of this entry »
(அல்லது) ஹர்ஷ் மந்தர், அருந்ததி ராய், தீஸ்தா ஸெதல்வாத் (இப்போது மெஹ்தி ஹஸன்): நவீன நஸ்ருத்தீன்களும் கோதுமைமாவை துணிக்கொடியில் உலர்த்தல்களும்…
ஒரு பழைய முல்லா நஸ்ருத்தீன் கதையொன்று நினைவுக்கு வருகிறது:
முல்லாவின் அடுத்தவீட்டுக்காரர், முல்லாவிடம் கொஞ்சம் கோதுமை மாவு கடன்கேட்டு வருகிறார்.
முல்லா சொல்கிறார்: அய்யய்யோ, இப்பத்தான் என்னிடம் இருந்த கோதுமைமாவையெல்லாம் தோய்த்துத் துணியுலர்த்தும் கொடியில் உலரப் போட்டிருக்கிறேன்!
அவீகாரர் கேட்கிறார்: எப்படியய்யா கோதுமைமாவை அப்படி உலர்த்தமுடியும்? ரொம்ப கஷ்டமாச்சே!
முல்லா: அய்யா, புரிந்துகொள்ளுங்கள். கடன் கொடுக்க விருப்பமில்லாத என்னால், கோதுமைமாவை வைத்து வெகு சுலபமாக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்… (இக்கதையின் ஒரு அழகான ஆங்கில வடிவம்)
… ஆம். மோதி, குஜராத் என்றால் அவைகளுக்கு எதிராக, என்ன விதமான பொய்யையும் வாய் கூசாமல் மறுபடியும் மறுபடியும் சொல்லி மட்டுமே ஸ்தாபனம் செய்து கோதுமைமாவைத் துவைத்துக் கொடியில் உலர்த்திக் காயவைக்க முடியும்.
—000—
… பெங்காலி ‘நஸ்ருத்தீன்’ பாபுவுக்கு மிகவும் சந்தோஷம். “மோதி-யைப் பற்றி இங்கிலாந்தில் உறைந்திருக்கும் மேதகு மெஹ்தி ஹஸன் அவர்களே எழுதியிருக்கும் இங்கிலாந்தின் ந்யூஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் வந்திருக்கும் கட்டுரையப் படி மொதல்ல” என்று ஒரு குறுஞ்செய்தி. அவர்களே என்று எழுதியதற்குக் காரணம் – இதே ஹஸன் அவர்கள் முன்னம் எழுதிய ஒரு கட்டுரைக்கான சுட்டியை அவர் அனுப்பி, நான் சிலாகித்திருந்ததுதான். (இதே ஈபிடபிள்யு-தர கருத்துதிர்க்கும் பெங்காலியை முன்வைத்து முன்னமும் எழுதியிருக்கிறேன்)
என்னுடைய பழவினைப்பயன் தான் இம்மாதிரி ஆட்களுடன் எனக்குச் சகவாசம் ஏற்பட்டுள்ளது. போங்கடா என்றாலும் விட மாட்டேனென்கிறார்கள் – எனக்கும் இவர்களுடன் முழுமையாகக் கத்தரித்துக் கொள்வதில் விருப்பமில்லை; ஏனெனில், இவர்களுடைய பல பிறபக்கங்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகவே இருக்கின்றன; என்னுடைய பிரச்சினை என்னவென்றால், தங்கள் அரைகுறைத்தனத்தைத் திரும்பத் திரும்ப பகிரங்கமாகப் பறைசாற்றுவது அவர்களுக்கு அவ்வளவு வெல்லமாக மாறி விட்டிருக்கிறது, இக்காலங்களில்.
இத்தனைக்கும் தமிழென்பதைச் சுட்டுப் போட்டாலும் படிக்க முடியாது அவனுக்கு. நான் மோதி-யைப் பற்றித் தமிழில் எழுதுவது ஒன்றையும் படிக்காமலேயே அவனுக்குக் கூடுதல் வெறி – எப்படியடா என்னை வீழ்த்தலாம் என்று. எனக்கு வெறுப்பேற்றுகிறேன் என்று எதையாவது செய்துகொண்டேயிருக்கிறான். (அவனுக்கு இதில் வெற்றிதான்!) Read the rest of this entry »
ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்…
May 2, 2014
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.
இதன் ‘ஒருமாதிரியான’ பொழிப்புரை: ஒரு மலர் அழகாக இருந்தாலும் அதற்கு நறுமணம் இல்லையென்றால் அது அளிக்கும் ஏமாற்றத்தைப் போல, நீச்சல் தெரியாதவன் படுதைரியமாக ஆழ்நீரில் இறங்கும் சோகத்தைப் போல – ஒரு எழவும் புரிந்துகொள்ள முடியாதவர்களைக் கேள்வி கேட்பதாலும், அரைகுறைச் சிறியார்களின் மேல் கோபம் கொள்ளுதலினாலும் ஒரு மசுத்துக்கும் பிரயோஜனம் இல்லை! :-(
… ஆயிரம் முறை எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பேன் இந்த இன்னா37ஐ; இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எனக்குப் படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் – இருந்தாலும், இந்த அணுக்கருவுலை பற்றிய துறையறியாமல் பொய்மையில் அமிழ்ந்து போகும் அறியார்களையும் (=பொதுவாக நாம்) சிறியார்களையும் (= எஸ்ராமகிருஷ்ண-சுந்தர்ராஜனாதிகள், உதயகுமாரர்கள் இன்னபிறர்) கண்டால் பொறுக்கவே மாட்டேனென்கிறது, என்ன செய்ய… :-( Read the rest of this entry »
plants dying of frostbite in bangalore, that too in april ? (and of course, THE richard feynman!)
May 1, 2014
… life goes on in spite of the 2014 elections, results, all the hair_splitting discussions, chest_thumpings, blood_curdling war cries and much release of the intestinal gases by our armed chair ineffectuals… Of course, it is good that much of it happens over the Internet.
-0-0-0-0-0-0-0-
What was I saying? Oh yeah, the hailstorm… and all hail discordia!
… … It is amazing, but that’s what happened. And, I hope this teaches me humility, seriously.
A few weeks back – to be precise, on the evening of 14th April, we had a sudden thunderstorm and a heavy squall in our suburb of Bangalore. And for 20 minutes or so, there was this hailstone business (ice pebbles of the size of 1 – 2.5 cms in diameter, on an average, incredible!) pounding on everything that was exposed to the elements – and to assist it, there were these incredibly howling high velocity winds!
In and around the place where we live, tin and asbestos roofs developed gaping holes, many compound walls were smashed, many decade old & sprawling trees were uprooted, oh the danse macabre. Read the rest of this entry »
பொதுவாக, நமது பாரதத்தில் – நக்ஸல்பாரிகள் என மினுக்கிக்கொண்டு அலைபவர்களை, நக்ஸடார்க்குகள், நக்ஸலைட்டுகள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்:
நக்ஸடார்க்குகள் (naxadarks) – இவர்கள், ஜனநாயகம் என்கிற ஊரிலேயே பிறக்காத, கொடுமைக்காரக் கொலை வெறியர்கள். மாவோயிஸ்ட்கள் எனப் பொத்தாம்பொதுவாக அறியப் படுபவர்கள். பொருளாதார வளர்ச்சிக்கும், கல்விக்கும், முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும், அடிப்படை அறங்களுக்கும், நேர்மைக்கும், அமைதிக்கும் எதிரானவர்கள். ஆகவே விஷக் கிருமிகள் போல அறவே ஒழிக்கப் படவேண்டியவர்கள். இவர்கள் இக்காலங்களில் தமிழ் நாட்டில் இல்லை; முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டார்கள், வால்டர் ஐஸக் தேவாரம் போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியுடன்.
இந்த பயங்கரவாத இயக்கத்தினால் முதலில், மிகத் துப்புறவாக அழித்தொழிக்கப் படுபவர்கள் என்றால் – அவர்கள் கோலோச்சும் பகுதிகளில் வசிக்கும் துர்பாக்கியவான்களான பாவப்பட்ட பொதுமக்கள். இவர்கள் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் பகுதிகள் ஜார்கண்ட், சத்தீஸ்கட், ஆந்திரா, ஒடிஷ்ஷா, பிஹார் பிராந்தியங்களில் இருக்கின்றன. Read the rest of this entry »
QED.
(அல்லது) ஹ்ம்ம்… சில சமயங்களில், என் பதிவுகளின் தலைப்புகளை முழுவதும் படித்துப் புரிந்துகொள்வதற்குள்ளாகவே நெஞ்சுவலி வந்துவிடும்தான், உங்களை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது… ஆனால், கணிதம் மூலமாக, எந்த விஷயத்தைத்தான் புரிந்து கொள்ளமுடியாது, சொல்லுங்கள்!
சரி. விஷயத்திற்கு வருகிறேன்.
திராவிடத் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மேற்கண்ட பொதுவிதிச் சமன்பாடு மூலம் மட்டுமே தேர்தலைப் புரிந்துகொள்ள முடியும். முன்னேற்றமாவது, வளர்ச்சியாவது, வளமாவது, நீதியாவது கொள்கையாவது மசுராவது… போங்கடா.
இந்தக் கேடுகெட்ட விதிக்கு விதிவிலக்குகளென்றால் – எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்கள், பாஜக-வினர் போன்றவர்கள் மட்டுமே! இவர்களுக்குத்தான் கொள்கை என்று ஒன்று (மற்றவர்களுக்கு இது பிடிக்குமோ பிடிக்காதோ, அது வேறு விஷயம்) இருக்கிறது. சுய-அர்ப்பணிப்புள்ள அடித்தளம் என்று ஒன்று இருக்கிறது. இவைகளில், உண்மையான தலைவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் பலர் இருக்கின்றார்கள். ஓரளவு, இந்த விடுதலைச் சிறுத்தைகளையும் இந்தக் கணக்கில் – அதாவது பைசா கொடுக்காத கட்சிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் — சீமார் வகையறா, வினவு வகையறா, தவ்ஹீத்ஜமாத், ஆம்ஆத்மி வகையறா போன்றவை மானாவாரி, மேகம்பார்த்தபூமிச் சாகுபடி பப்பரப்பா உச்சாடன இயக்கங்கள் மட்டுமே, அவை அரசியல் கட்சிகளல்ல. Read the rest of this entry »
தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்
April 23, 2014
பத்ரி சேஷாத்ரி அவர்களின் உபயத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம்ஆத்மிகட்சி வேட்பாளரும் அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணருமான மேதகு ஞாநி சங்கரனார் அவர்கள் நடத்திச் சிறப்பித்த சவப்பெட்டி உற்சவத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.
அவருடைய ஒருகாலத்திய செல்லங்களான நக்ஸல்பாரிக் குஞ்சாமணிகளின் போராட்டகோஷம்:
தேர்தல் பாதை, திருடர் பாதை!
ஆக, ஒரு பெரிய சுற்று சுற்றிவந்த நாடகத் தன்மை மிக்க ஞாநி சங்கரனார் அவர்களின் தற்போதைய புதிய கோஷம்:
தேர்தல் பாடை, திருடர் பாடை!
… ஹ்ம்ம்ம்… … என்னவோ போங்க. :-(
மேலதிகமாக Modern Keechaka Vadham – எனும் நாடகத்தை வேறு நடத்தினாராம் – இது நம் நவநாகரீக அறிவுஜீவிகளின் ‘மாடர்ன் கீச்சகவாதம்’ – அதாவது கீச்சு கீச்சென்று ட்விட்டரில் கீச்சி மட்டுமே தேர்தலில் வெல்லலாம் என்கிற கோட்பாடான கீச்சகவாதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ??
எது எப்படியோ — வாழ்க, நமது அறிவுஜீவிகளின் நகைச்சுவையுணர்ச்சி, வளர்க அவர்தம் தொண்டான குண்டு. (அதாவது குடமுருட்டி வகையறா) வெல்க அவருடைய கட்சி, டெபாஸிட்டையாவது!
-0-0-0-0-0-0-0-
2014 தேர்தலில் – பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் ரங்கசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும் (=ராதாகிருஷ்ணன்), நாராயணசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும்தான் (= நாராயணசாமி) சரியான போட்டி. மற்றபடி அஇஅதிமுக (ஓமலிங்கம்), திமுக (நாஜிம்), பாமக (அனந்தராமன்), கம்யூனிஸ்ட் (விசுவநாதன்), ஆம் ஆத்மி (ரெங்கராஜன்) கட்சிகள் எல்லாம் சும்மனாச்சிக்கும் கூடவோடிகள் போலத்தான் இருக்கின்றன… Read the rest of this entry »
ஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா!
April 22, 2014
என்னுடைய மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும் ஓத்திசைவின் தொழில்முறை பின்னூட்டக்காரருமான சரவணன் அவர்கள் அண்மையில் நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:
ஒன்றைக் கவனித்தீர்களா? பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைவிட திராவிட இயக்கத்திடம் நிச்சயம் சிந்தனை, அறிவியக்க செயல்பாடுகள் அதிகம். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜெயமோகன் சொல்வதைப் பார்ப்போமா?
**** இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.
அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது *********
இந்தக் கேவலத்துக்கு திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள் ஆயிரம் பங்கு மேல்!! பிராமண மேட்டிமைவாதத்தை முன்வைப்பதை விட பிறப்பால் அனைவரும் சமம் என்பதைக் கருத்தளவிலாவது ஒப்புக்கொண்டு, அதை நோக்கி சிறிய முயற்சிகளையாவது செய்தவர்கள் மேலானவர்கள் அல்லவா?
… ஹ்ம்ம்… முக்கால்வாசி, நீங்கள் எந்தக் குறிக்கோளுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுத முற்பட்டீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லைதான் என நினைக்கிறேன்; ஆனால், நான் புரிந்துகொண்டவகையில் இதற்கு பதில் அளிக்கிறேன். Read the rest of this entry »
இதுதாண்டா மோதி-யின் நீதி பரிபாலனம்!
April 21, 2014
(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.
ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.
ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக, வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக, முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!
அய்யய்யோ! நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.
-0-0-0-0-0-0-0-
சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: Read the rest of this entry »
மோதி, அயோத்தி ராம் மந்திர், தேர்தல் அறிக்கை, ஸெய்ன்ட் தாமஸ், குளுவான்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள்: சில குறிப்புகள்
April 20, 2014
‘ராஜ்’ என்பவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுதியிருப்பதன் தமிழ்வடிவ சாராம்சம்:
மோதி ஒரு நல்ல நிர்வாகி என்பதையோ, குஜராத்தின் வளர்ச்சி பற்றியோ நான் சந்தேகப் படவில்லை. எனக்கு, பாஜக ஆட்சிக்கு வருவதில் ஒப்புதலிருந்தாலும் ஒரு பிரச்சினை.
நமக்கு ராம் மந்திர் தேவையா? இதன் காரணத்தால் எவ்வளவோ இறப்புகள் நிகழ்ந்துவிட்டனவே! பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ராம் மந்திர் பற்றி சொல்வது கொஞ்சம் கவலைதருவதுதானே? மோதி இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பாரா?
அன்புள்ள ‘ராஜ்,’
நான் பாஜக அங்கத்தினன் அல்லன். மேலும், மோதி-யின் மனம் எப்படி வேலைசெய்யலாம் என்பதை என்னால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆனாலும் பலபத்தாண்டுகளாக இக்கட்சியை(யும்) ஊன்றிக் கவனித்து வருபவன், சில நேர்மை+செயலூக்கம் கொண்ட பாஜக-வினரை நேரடியாக அறிந்துள்ளவன் என்கிற முறையில் என் கருத்துகள்:
- பாஜக கட்சி என்பது ஒரு ஒருமைவாத, ஒற்றைக்குறிக்கோளினால் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியாக இல்லை. அதில் பல போக்குகள், பார்வைகள், பிரிவுகள் இருக்கின்றன. அக்கட்சியில் ஒரு பிரிவுக்கு, ராம் மந்திர் தேவை. ஆனால், பல பிரிவுகளுக்கு அது ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமாக இருந்தாலும், இப்போது அது ஒரு தேவையற்ற விஷயம்.
(அல்லது) இதுதாண்டா ஸ்த்ரீஷக்தி! :-)
… அத்தனை செய்திகளை நகைச்சுவையுணர்ச்சியுடன், எளிமையான ஹிந்தியில், வசைகள் இல்லாமல் தொடர்ந்து சொல்கிறார்! தெளிவான, ஸ்பஷ்டமான உச்சரிப்புகள். செதுக்கியெடுக்கப் பட்ட கிண்டல்கள். நைச்சியமான நையாண்டிகள். தேவையானபோது சரியான ஆங்கிலப் பதங்கள். கூட்டத் திரள்கள் மயங்கிக் கேட்கின்றன, ஆரவாரம் செய்கின்றன! காங்க்ரெஸ் கட்சிக்கும், தீஸ்தா செதல்வாத் தர அழுகுணி ஆட்டம் ஆடும் புளுகுணி மாங்கொட்டைகளுக்கும், தொழில்முறை கஞ்சிக் கலய மனிதவுரிமைவாதிகளுக்கும் திருப்பித் திருப்பிச் சவுக்கடி.
குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிய அங்குள்ள மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய – எளிதில் சரிபார்த்துவிடக் கூடிய விவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது எளிமையாக்கி அவற்றைச் சாமானியர்களின் வாழ்க்கைகளோடு பொருத்திச் சரியாகப் புரிந்துகொள்ள வைக்கிறார். நரேந்த்ரமோதிக்காக வாக்குச் சேகரிக்கிறார். குஜராத்திய கிராம/ நகர ஜனங்களிடம் ‘அர்ரே பாயீ ’ என்று இழுத்துப் பேசி (என் மனதையும்) கொள்ளை கொள்கிறார். Read the rest of this entry »



