குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு?)
May 8, 2014
(அல்லது) ஹர்ஷ் மந்தர், அருந்ததி ராய், தீஸ்தா ஸெதல்வாத் (இப்போது மெஹ்தி ஹஸன்): நவீன நஸ்ருத்தீன்களும் கோதுமைமாவை துணிக்கொடியில் உலர்த்தல்களும்…
ஒரு பழைய முல்லா நஸ்ருத்தீன் கதையொன்று நினைவுக்கு வருகிறது:
முல்லாவின் அடுத்தவீட்டுக்காரர், முல்லாவிடம் கொஞ்சம் கோதுமை மாவு கடன்கேட்டு வருகிறார்.
முல்லா சொல்கிறார்: அய்யய்யோ, இப்பத்தான் என்னிடம் இருந்த கோதுமைமாவையெல்லாம் தோய்த்துத் துணியுலர்த்தும் கொடியில் உலரப் போட்டிருக்கிறேன்!
அவீகாரர் கேட்கிறார்: எப்படியய்யா கோதுமைமாவை அப்படி உலர்த்தமுடியும்? ரொம்ப கஷ்டமாச்சே!
முல்லா: அய்யா, புரிந்துகொள்ளுங்கள். கடன் கொடுக்க விருப்பமில்லாத என்னால், கோதுமைமாவை வைத்து வெகு சுலபமாக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்… (இக்கதையின் ஒரு அழகான ஆங்கில வடிவம்)
… ஆம். மோதி, குஜராத் என்றால் அவைகளுக்கு எதிராக, என்ன விதமான பொய்யையும் வாய் கூசாமல் மறுபடியும் மறுபடியும் சொல்லி மட்டுமே ஸ்தாபனம் செய்து கோதுமைமாவைத் துவைத்துக் கொடியில் உலர்த்திக் காயவைக்க முடியும்.
—000—
… பெங்காலி ‘நஸ்ருத்தீன்’ பாபுவுக்கு மிகவும் சந்தோஷம். “மோதி-யைப் பற்றி இங்கிலாந்தில் உறைந்திருக்கும் மேதகு மெஹ்தி ஹஸன் அவர்களே எழுதியிருக்கும் இங்கிலாந்தின் ந்யூஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் வந்திருக்கும் கட்டுரையப் படி மொதல்ல” என்று ஒரு குறுஞ்செய்தி. அவர்களே என்று எழுதியதற்குக் காரணம் – இதே ஹஸன் அவர்கள் முன்னம் எழுதிய ஒரு கட்டுரைக்கான சுட்டியை அவர் அனுப்பி, நான் சிலாகித்திருந்ததுதான். (இதே ஈபிடபிள்யு-தர கருத்துதிர்க்கும் பெங்காலியை முன்வைத்து முன்னமும் எழுதியிருக்கிறேன்)
என்னுடைய பழவினைப்பயன் தான் இம்மாதிரி ஆட்களுடன் எனக்குச் சகவாசம் ஏற்பட்டுள்ளது. போங்கடா என்றாலும் விட மாட்டேனென்கிறார்கள் – எனக்கும் இவர்களுடன் முழுமையாகக் கத்தரித்துக் கொள்வதில் விருப்பமில்லை; ஏனெனில், இவர்களுடைய பல பிறபக்கங்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகவே இருக்கின்றன; என்னுடைய பிரச்சினை என்னவென்றால், தங்கள் அரைகுறைத்தனத்தைத் திரும்பத் திரும்ப பகிரங்கமாகப் பறைசாற்றுவது அவர்களுக்கு அவ்வளவு வெல்லமாக மாறி விட்டிருக்கிறது, இக்காலங்களில்.
இத்தனைக்கும் தமிழென்பதைச் சுட்டுப் போட்டாலும் படிக்க முடியாது அவனுக்கு. நான் மோதி-யைப் பற்றித் தமிழில் எழுதுவது ஒன்றையும் படிக்காமலேயே அவனுக்குக் கூடுதல் வெறி – எப்படியடா என்னை வீழ்த்தலாம் என்று. எனக்கு வெறுப்பேற்றுகிறேன் என்று எதையாவது செய்துகொண்டேயிருக்கிறான். (அவனுக்கு இதில் வெற்றிதான்!)
எனக்கு இன்று அனுப்பப்பட்ட இந்தச் சுட்டியும் இந்த ரகத்தில் ஒன்றுதான். மேலும் இம்மாதிரி குறைந்த பட்சம் மூன்று பேர் இதில் குறிப்பிட்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ‘ நீ இந்த மோதி ஆளைப்போய் ஆதரிக்கிறாயே’ என்று கேட்டிருப்பதால் — குஜராத்தைப் பற்றிய இம்மாதிரி அற்பர்களின் தொடரும் பொய்மைகளில் ஒன்றைப் பற்றி மட்டும்…
—000—
… இளம் மெஹ்தி ஹஸன் – இந்த பொய்மைக் குழுவில் அண்மையில் சேர்ந்திருப்பவர் – ந்யூஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் மே 2, 2014 அன்று எழுதுகிறார்:
“… how a pregnant Muslim teenager had had her womb “cut open with a sharp weapon . . . the unborn baby was taken out and both mother and the child were burnt dead”. Several witnesses were told by police: “We have no orders to save you.””
சோம்பேறித்தனத்துடன் — தீஸ்தாக்கள் ஹர்ஷ்மந்தர்கள் பரப்பிய பொய்மைகளையும், அவருடைய நண்ப அரைகுறையான பேராசிரியர் சேதன் பட் போன்றவர்களின் பரப்புரைகளையும் மட்டும் கேட்டுக்கொண்டு உட்கார்ந்த வாக்கில், விரித்து, ஒரு மனிதவுரிமைக் கட்டுரையை எழுதியிருக்கிறார் அவர். மேலதிகமாக ஆஸ்ட்ரியாவின் யோர்க் ஹைதர், ஸ்லொபொடன் மிலோஸிவிக், ஹ்யூகொ சாவெஸ் பற்றியெல்லாம் வேறு போகிற போக்கில் எழுதி, மோதியுடன் அவர்களை இணைக்கிறார். இவருக்கு ஒரு எழவும் தெரியவில்லை – இன்னொரு இளைஞக்கறுப்பனார் தான் இவரென்பதால் மன்னித்து விடுகிறேன். அவர் இளைஞர். தவறுகளைத் திருத்திக்கொள்வார் என இந்த உற்சாக அரைகுறைத்தனங்களை விட்டுவிடலாம்.
சரி. இந்த வதந்தியை முதலில் அச்சிட்டு வெளியிட்டது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை. இதில் மேதகு ஹர்ஷ் மந்தர் அவர்கள், கோத்ரா சம்பவங்கள் நடந்த இரு வாரங்களுக்குள் – 13 மார்ச், 2002 அன்று – ‘அழு, என்னருமை தேசமே, அழு’ என்கிற தலைப்பில் ஒரு ஒப்பாரி மனிதவுரிமைப் பிலாக்கணப் பொய்யை எழுதுகிறார்.
… What can you say about a woman eight months pregnant who begged to be spared. Her assailants instead slit open her stomach, pulled out her foetus and slaughtered it before her eyes…
இந்த ஹர்ஷ் மந்தர் – தன்னை, ஒரு காந்தியென்று நினைத்துக்கொண்டிருக்கும் பல அற்பர்களில், ஒரு சந்தர்ப்பவாத அற்பர். இருபது வருடம் ஐ ஏஎஸ் பணி செய்துவிட்டு, நிச்சயம் ஓய்வூதியம் கிடைக்கும் என ஊர்ஜிதம் செய்துகொண்டு, பின்னர் கொள்கை ரீதியாக, அறவழி சார்ந்து வேலையை உதறிவிட்டதாக பாவ்லா காட்டியவர். இதைவிட அசிங்கமாக – அவர் ஐஏஎஸ் வேலையில் இருந்த கடைசி வருடங்களின் ஒரு இங்கிலாந்து தன்னார்வ நிறுவனம் ஒன்றில் (அக்ஷன் எய்ட்) – குஜராத் அரசினால் பணியமர்த்தப் பட்டிருந்தார். ‘அறம் சார்ந்து’ ஐஏஎஸ் வேலையை உதறியவுடன் அதே நிறுவனத்தில் சில மடங்கு அதிக சம்பளத்திற்குப் போய்ச் சேர்ந்தார்! பின்னர் அவருடைய தொடர்ந்த மோதிக்கெதிரான பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு, மெச்சப்பட்டு சோனியா அம்மையாரின் NAC-யில் அடைக்கலமும் ஆனார். இந்தப் போலிக் காந்தியரை தூக்கிப் பிடித்த, பிடித்துக் கொண்டிருக்கும் பப்பரப்பா ஊடகங்களில் நம்மூர் ‘த அன்டி ஹிந்து’வும் அடக்கம்.
சரி – இந்த மாதிரிப் பல செய்திகளை கொடுத்த மேதகு ஹர்ஷ் அவர்கள் – எவ்வளவு தடவை கேட்டாலும் இதற்கான சாட்சியங்களோ, ஆவணங்களோ, சாட்சிகளையோ கொடுக்கவில்லை. போகிற போக்கில் டர்புர்ரென்றுஅடித்து விட்டிருக்கிறார்… வாழ்க.
இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், மோதியின் பல ஊடக எதிரிகளுள் ஒருவரான மேதகு ராஜ்தீப் ஸர்தேசாய், குதித்துக்கொண்டு ஓடிப்போய் குஜ்ராத் சென்று மூன்றுவாரங்கள் தளராமல் முயற்சித்த பின்னரும் – இந்தச் செய்திக்கான பின்புலங்களைச் சேகரிக்க முயன்று தோல்விகண்டார். அவர் என்ன செய்வார் பாவம், இப்படி ஏதாவது நடந்திருந்தால் தானே… எப்படியாவது மோதிக்கு எதிராக வலுவான சாட்சியங்களை / நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முயன்றிருக்கிறார்; அவரால் முடியவில்லை. காங்க்ரெஸ் காரர்களை, வெறியாட்டம் ஆடிய முஸ்லீம்களை/ஹிந்துக்களை, காவல் துறையினரை, மாஃபியா தலைவர்களை, கோத்ரா-வின் முஸ்லீம் தலைவர்களை… அனைவரையும் கேட்டிருக்கிறார். மேலும் ஹர்ஷ் மந்தர் அவர்களையுமே கேட்டிருக்கிறார். ஹர்ஷ் அவர்களும், இருந்தால் மேலதிகத் தகவல்களைக் கொடுத்திருப்பார் தாமே! ஆனால், அவருக்குத் தெரியும், தான் விட்டது ஒரு கயமைப் பீலா என்று… எப்படி, எந்தத் தகவலைக் கொடுப்பார் ஹர்ஷ் மந்தர், சொல்லுங்கள்?
ஆக, இன்று வரை – மேதகு ஹர்ஷ்மந்தர், பொய்களைச் சொல்லிக் கொண்டு பவனி வருகிறார். காந்தி படத்துக்கு முன் உட்கார்ந்து கொண்டு புகைப்படக் காரர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்தச் செய்தியைப் பற்றி மறுபடியும், மறுபடியும் எழுதி தீஸ்தாக்களும் அருந்ததிக்களும் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கின்றனர்… நம் இணைய_ஊடகக் கூமுட்டைகள் இதனைத் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டேயிருக்கின்றனர்…
ப்ரெஸ் கௌன்ஸில் ஆஃப் இந்தியா 30 ஜூன் 2003 அன்று – இந்தச் சிசுக்கொலை நிகழ்ச்சியையும் மற்ற பல ஹர்ஷ் மந்தரியப் பொய்மைகளையும், வெறும் வதந்திகளே என மிக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தும், இச்செய்தி பரப்பல்களைக் கண்டித்திருந்தும் கூட, இந்தக் கதைகட்டல் தொடர்கிறது…
உண்மையாகவே, இது இந்திய ஊடக வரலாற்றில் ஒரு அசிங்கமான நிகழ்ச்சி…
-0-0-0-0-0-0-0-0-
இந்த நடக்காத நிகழ்ச்சியைப் பற்றி நம்மூர் பப்பரப்பா ஊடகங்களும், கற்பனாவாத வினவுகளும் இணையக் குளுவான்களும் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் – சிரிப்பு வரும், பின்னர் மகாமகோ அலுப்பும் வெறுப்பும்…
இந்த வதந்தி ஆங்கில, ஹிந்தி ஊடகங்களில் (அதாவது பத்திரிகைகளில் வந்தவைகளை மட்டும் வைத்துத்தான் சொல்கிறேன், எனக்கு தொலைக்காட்சித் திரித்தல்களைப் பற்றித் தெரியாது) ஊதப்பட்டு ஊதப்பட்டு பெரிதாக்கப் பட்டது. இது எவ்வளவு மோசமானதாக இருந்தது என்றால், பொதுவாக, சமன நிலையில் இருக்கும் என்னுடைய மச்சானே 2002 ஜூலை மாத வாக்கில் இந்தியா வந்திருந்தபோது – இந்த நிகழ்ச்சிக்காகத் தான் வெட்கப் படுவதாகக் கூறவைக்கப் பட்டது! :-(
தெஹெல்கா (=பப்பரப்பா) தளம், மிகப் பெருமையாக தான் செய்த ‘இன்வெஸ்டிகேட்டிவ்’ வகையறா செய்திச் சேகரிப்பைப் பற்றி , அதாவது அண்டப் புளுகுகளைப் பற்றி, இப்படியெல்லாம் எழுதியது: (இந்த தெஹல்கா, அக்ஷன்எய்ட் நிறுவனத்திலிருந்து நிதி பெற்றுக்கொண்டிருக்கும் பிச்சைபாத்திர பத்திரிகைகளில் ஒன்று)
அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.
ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்
வெறும் வாய்ச்சவடால் காரர்களின் ‘வாக்குமூலங்களைப்’ பதிவு செய்ததாகச் சொல்லப்படுபவைகளான் இவைகளில் – ஒன்றுகூட ஒப்புக் கொள்ளப் படவில்லை, நீதிமன்றங்களில். ஒரு விதமான சான்றுகளும் இல்லை. பல வெறும் வதந்திகள்தான். ஆதாரமற்றவைதான்!
நம்முடைய செல்ல அரைகுறைகளான வினவுதளத்தினர் டிஸெம்பர் 13, 2013 அன்று எழுதியது இது!
… இந்து மத வெறிக் கும்பல்கள் குஜராத்தில் 2002-ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொலை செய்தன
மோதிக்கு பலவித கிண்டல் பரிசுகளை அள்ளி வழங்கிய ‘தூது’ தளம் ஜனவரி 1. 2014 அன்று எழுதியது இது:
… முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே எடுத்துக் கொலை. சிறந்த சிசுக் கொலைக்கான சகலகலா வல்லவன் விருது.
தமிழகத்தின் செல்லத் திராவிட ‘விடுதலை’ அரைகுறைகள் இப்படி இன்னமும் கொஞ்சம் மசாலா சேர்த்து, திராவிடப் பாரம்பரியக் கூத்தைச் சேர்த்து – மார்ச் 29, 2014 அன்று உளறியது:
… கர்ப்பிணிப் பெண்ணின் குடலைக் கிழித்து, சிசுவை எடுத்து நெருப்பில் போட்டுக் கூத்தாடினர்.
இந்த மூளைக்கு விடுதலை கொடுத்த பகுத்தறிவு அற்பர்களுக்கு அறிவியல் மானுடக் கூறுவியல் பற்றியெல்லாம் ஒரு எழவும் தெரியாது என்பதை குடலுக்கும் கர்ப்பப் பைக்கும் வித்தியாசம் தெரியாமையை வைத்தே உணரலாம்.
அக்மல்கான் என்பவர், அளப்பறிய ஆவலுடன் சூலாயுதத்தைச் சேர்த்து ஜூன் 2006 வாக்கில் கொண்டாடினார், ஒரு பெண்ணைப் பலராக்கிச் செப்பிடுவித்தையும் செய்து – பல கர்ப்பிணிகளிலிருந்து ஒரு சிசுவை எடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது; மேலும் சூழாயுதம் என்ற ஒரு புதிய ஆயுதத்தையும் இந்த மேதகு அஜ்மல்கான் வீட்டிலிருந்தவாறே கண்டுபிடித்திருக்கிறார் என்பதும் தெரிகிறது.
… ஆண் மிருகங்கள் சில, கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். …
தப்பும் தவறுமாக ஒரு பெயரைக் குறிப்பிட்டு – பின்னர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாக – இந்த அரைகுறைத் தீவிரவாந்தி இயக்கமொன்று தெரிவிக்கிறது – ஸெப்டெம்பர் 2012ல்!
… குறிப்பாக “கவ்சர் பானு” என்ற “நிறைமாத கர்பினியின் வயிற்றைக்கிழித்து” குழந்தையை திரிசூலத்தால் குத்தி, பிறகு அந்த சிசுவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் இந்த இடத்தில் தான் நடந்தது.
பாவம், இந்த ‘ நமது’ இணையத்தளம் வயிற்றிலிருந்து (கர்ப்பப் பையிலிருந்தல்ல) சிசுவை எடுத்தபின்னும் உயிருடன் (மயக்கம் போடாமல்) இருந்த அந்த பெண்மணி பார்த்துக் கொண்டிருந்தபடியெல்லாம்…. ஆஹா!
… தன்னைக் கொல்லாமல் விட்டு விடும்படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்?
இந்த ‘ நமது’ எழவில் ஒரு மகாமகோ நகைச்சுவை என்னவென்றால் – இதே தளம் “யாராவது ஏதாவது ஒன்றை கூறி நம்புங்கள் என்றால் நம்பிவிட தயாராகிறோம் , ஏனெனில் நம்புவது மிகவும் சுலபமான காரியமாகும். நாமோ சிந்திப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும்” என்றெல்லாம் உளறுகிறது… இதனை முரண் நகையாகக் கூடக் கருதமுடியாது – இது கடைந்தெடுத்த முட்டாள்தனம் மட்டுமே!
கீற்று இணையதளத்தில் இதே முட்டாள் செய்தி வந்திருக்கிறது… ஒரு கழுதையும் கூட யோசிப்பதில்லை – இப்படி ‘வயிற்றைக் கிழித்தவுடன்’ உடனே உயிர்போகாமல் இருந்தாலும் கூட எவ்வளவு பிரக்ஞையுடன் ஒரு மனிதன் இருக்க முடியுமென்று. இதில் ஒரே ஒரு ஆண் தான் குற்றவாளியாம்! ஆஹா!
…நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயிட்டபின்பு அந்தப் பெண்ணையும் கொன்றுபோட்ட கொடும்பாதகன்
இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பீலா எது என்றால் – இந்த மிஸ்டர்_பாமரன் எனும் நகைச்சுவை இணைய தளத்தில், அக்டோபர் 4, 2013ல் பதிப்பிக்கப்பட்ட — யூஸிஃப் ஜமாலி எனும் கேளிக்கைக் கற்பனை எழுத்தாளர் எழுதியுள்ளதுதான்… படித்துச் சிரிப்போதிச்சிரிப்புச் சிரித்து – உடனே மாரடைத்துச் சாகாமலிருந்தால் – அந்த தளத்திற்குச் சென்று (இங்கில்லை!) பின்னூட்டமிடவும். நன்றி. :-)
… அந்த கர்ப்பிணி தாய் ‘போலன் பஜார்’ என்னும் தெருவில் தன் வயிற்றை பிடித்தவாறு ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். அவளை துரத்திக் கொண்டிருக்கிறது மனித வெறி பிடித்த ராட்சஸ கும்பல்.
அந்த கும்பல்தான் அவள் தந்தையையும், கணவனையும் சற்று நேரத்துக் முன் கொன்றிருந்தது. அந்த கொலை வெறியிலிருந்து தப்பிப் பிழைக்க தன் உயிரையும் அதைவிட முக்கியமாக தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த குழதையின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அபலை அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.
இதோ..! வந்தாகிவிட்டது. நிச்சயம் தான் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் பேதை அவள் காவல் நிலையம் நோக்கி ஓடினாள்.
“காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்..!” – என்று காவல் நிலையத்தை நோக்கி மரண ஓலமிட்டவாறே நெருங்கினாள். மனித இதயங்களைத் துளைத்தெடுக்கும் அந்த ஓலம் காவல்நிலையத்திலிருந்த காவலர்களை பாதித்ததாக தெரியவில்லை. ஏதோ எந்திர மனிதர்களாய் வெளியே எட்டிப் பார்த்த அவர்கள் காவல்நிலைய கதவுகளை தாழிட்டுக் கொண்டார்கள்.
கல்லையும் கரையச் செய்யும் அந்தத் தாயின் கதறல்களுக்கு செவி சாய்ப்போர் அங்கு யாருமில்லை. ஆள்வோரின் கட்டளைக்கு காவல்துறையினரும். அரசு எந்திரமும் செவிச்சாய்த்திருந்தன் விளைவு அது. மனித தன்மையை முற்றிலும் இழந்திருந்து போயிருந்த சூழல் அது.
தன்னை சூறையாடும் அந்த மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ள தாய் கெஞ்சினாள். கதறினாள். துச்சாதன்களாக மாறிய அவர்கள் அபலை அவளை அந்த கயவர்கள் குதறி கிழித்தார்கள்.
அத்தோடு விட்டார்களா. பாவிகள்! உயிருடன் அவள் வயிற்றைக் கிழித்து, பச்சிளம் சிசுவை எடுத்து, பெட்ரோல் ஊற்றி தீயிட்டி எறித்தனர் அரக்கன்கள். உயிர் பிரிந்து கொண்டிருந்த அந்த கடைசி நேரத்தில் தன் அன்புக்குரிய உயிர் தன் கண்ணெதிரிலேயே பெட்ரோல் அபிஷேகத்துக்கு ஆளாகி தீய்ந்து கருகிப் போவதைக் கண்டு அவள் ஜீவன் பிரிந்தாள்.
அவளுடைய கடைசி நேரத்து இறைநம்பிக்கையின் வெளிப்பாடாக.. “அல்லாஹ்.. அல்லாஹ்..” என்ற ஓலம் ஓராயிரம் பொருளோடு.. இயலாமையோடு.. சாபங்களை உதிர்ந்து மூச்சடங்கிப் போனது.
:-)))
ஆக…
அயோக்கிய வதந்திகளை அற்பத்தனமாகப் பரப்புவதற்கான முதல் பரிசு: ஹர்ஷ் மந்தர், அருந்ததி ராய், தீஸ்தா ஸெதல்வாத் (மூவருக்கும்)
அற்ப வதந்திகளை அசமஞ்ச அசட்டுத்தனமாகப் பரப்புவதற்கான முதல் பரிசு: மிஸ்டர்_பாமரன்!
பாமரத்தனமாக உளறிக் கொட்டுவதற்கான முதல் பரிசு: மெஹ்தி ஹஸன்
இப்பதிவைப் படித்த பாவப்பட்ட அனைவருக்கும் ‘துவைத்து உலர்த்தப்பட்ட கோதுமைமாவு இலவசம்’ – யாம் பெற்ற மாவு பெருக இவ்வையகம். ஆமென்.
May 8, 2014 at 22:20
“யாராவது ஏதாவது ஒன்றை கூறி நம்புங்கள் என்றால் நம்பிவிட தயாராகிறோம் , ஏனெனில் நம்புவது மிகவும் சுலபமான காரியமாகும். நாமோ சிந்திப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும்”
May 9, 2014 at 05:42
//இன்னொரு இளைஞக்கறுப்பனார் தான் இவரென்பதால்
who is this?
May 9, 2014 at 14:24
Dear Anon, why the hell can’t you use your brain for a change?
I do not believe in spoonfeeding. Get it?
May 9, 2014 at 20:40
sorry. is இளைஞக்கறுப்பனார் yuvakrishana? is this guess rt??
May 9, 2014 at 07:28
/// முல்லாவின் அடுத்தவீட்டுக்காரர், முல்லாவிடம் கொஞ்சம் கோதுமை மாவு கடன்கேட்டு வருகிறார். ///
அடுத்தவீட்டுக்காரர் கடன் கேட்பது துணி உலர்த்தும் கொடிக்கயிறு; கோதுமை மாவு அல்ல!
ஆமாம், இந்த ‘உளறிக்கொட்டுவது’ என்பது இதுதானா?!
May 9, 2014 at 13:55
அய்யா சரவணன் – தயவுசெய்து நான் எழுதியதைச் சரியாகப் படியுங்கள். நான் சுட்டி கொடுத்திருப்பது இதே கர்ணபரம்பரைக் கதையின் இன்னொரு வடிவத்தினுடையதை. ஆனால் கருவோ, உள்ளடக்கமோ ஒன்றேதான்.
எனக்குத் தெரிந்து இந்த கொடி-மாவு உலர்த்துதல் பற்றி ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. ஐந்து நஸ்ருத்தீன் வகையறா. இரண்டு அன்வர் ஹொட்ஹா (அல்லது ஹொட்ஜா) வகை. எட்டாவது ஒரு நம்முடைய பீர்பல் வடிவம். இதே கதைக்கான தெனாலிராம வடிவமும் இருக்கிறது. கடைசி வடிவம் ஒரு மஞ்சரி இதழில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்ததாக நினைவு. தவறாகவும் இருக்கலாம்.
அன்புள்ள சரவணன் – தாங்கள் சமன நிலையில் இல்லைபோலத் தோன்றுகிறது. ஆக, நான் உளறிக் கொட்டுவதாகவே வைத்துக் கொள்ளலாம். எப்படியும் ஒரு பிரச்சினையும் இல்லை. சரியா?
சமிக்ஞை/ஓசை எனும் பதம் (SNR – signal to noise ratio) அறிவியலில் உண்டு. என்னைப் பொறுத்தவரை, எந்த சந்தர்ப்பத்திலும் இந்த விகிதத்தை உயர்த்தவே விரும்புவேன். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். மேலும் சமசக்தி படைத்தவர்களுடன் விவாதிப்பதில்தான் ஆசை. மற்றபடி உங்கள் இஷ்டம்.
–ரா.
May 10, 2014 at 11:27
முல்லா முதல் தெனாலி ராமன் வரை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்…எதையும் கொஞ்சம் லைட்டாக எடுத்துக்கொள்ளத்தான் மாட்டீர்கள் போலிருக்கிறது.
Easy! Easy!!
May 9, 2014 at 11:00
http://timesofindia.indiatimes.com/city/vadodara/Bilkis-Bano-names-daughter-after-one-killed-in-2002-riots/articleshow/31122195.cms
She says that she missed Saleha a lot and hence gave her youngest daughter that name. Her husband Yakoob Rasool said Saleha is much like her sister killed during the riots.
“The culprits did not even spare another two-day-old infant who was born in the jungle when we were on the run,” Yakub said about the daughter of his uncle, also killed in the massacre. Bilkis was herself pregnant at the time and the daughter born after the riots in 2002 is an 11-year-old now.
Bilkis and Yakub Rasool have been avoiding any interaction with the media after they addressed a press following the judgment by a Mumbai court that had awarded life imprisonment to 11 accused in the case and sentenced a policeman to three years imprisonment in 2008.
May 9, 2014 at 11:18
மோடிக்கு ஆதரவாக அவர் பினாமிகளால் நடத்தப்படும் தலத்தில் இருந்து
http://www.gujaratriots.com/index.php/2010/05/myth-16-a-pregnant-womans-womb-was-ripped-open/
Last week, one of the most horrible examples of cruelty resurfaced once again as the trial of the Naroda Patiya case, where 94 persons were killed, began in the SC-monitored special court in Ahmedabad. Soon after the riots, the human rights activists and the Muslim witnesses had alleged that a pregnant woman Kausarbanu’s womb was ripped open by rioters and the foetus was flung out at the point of a sword. The gruesome incident was seen as the worst-possible example of medieval vandalism in the modern age.
Last week, eight years after the alleged incident, Dr J.S. Kanoria, who conducted the post-mortem on Kausarbanu’s body on March 2, 2002, denied that any such incident had ever happened. Instead, he told the court: “After the post-mortem, I found that her foetus was intact and that she had died of burns suffered during the riot.” Later Kanoria, 40, told INDIA TODAY, “I have told the court what I had already written in my post-mortem report eight years ago.
குசர் பானு என்ற கர்ப்பிணி பெண் குஜரத கலவரத்தில் கொள்ளப்பட்டது உண்மை.காவல்துறையினரிடம் தரப்பட்ட புகாரிலும் அவர் வயிற்றை கிழித்து கொடூரமாக தாய்,செய் இருவரையும் கொடூரமாக கொலை செய்தார்கள் என்று தான் புகார் தரப்பட்டுள்ளது.
வசதியாக ஒரு மருத்துவரின் அறிக்கையை வைத்து கொண்டு எதுவுமே நடக்கவில்லை என்பதை முழு உண்மை என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு என்ன சொன்னாலும் விளங்காது
May 10, 2014 at 18:35
மன்னிக்கவும் பூவண்ணன். தங்கள் பின்னூட்டங்களை (க்ருஷ்ணகுமார் அவர்களின் விசாரிப்புக்குப் பிறகு ஸ்பேம் அலமாரியிலிருந்து மீட்டேன்!) பிரசுரிப்பதற்கு தாமதமாகி விட்டது.
ஆனால், அய்யா பூவண்ணன் – வரவர, உங்கள் பின்னூட்டங்களின் நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. ஏனெனில் உங்கள் தரவுகளுக்கும், உங்கள் உள்மனக் கிடக்கைகளுக்கும் தொடர்பேயில்லை. இந்த முட்டியடி எதிர்வினைசார் சுட்டிமுதல்வாதத்தைக் கைவிடவும். டைம்ஸ் ஆப் இந்தியாவும் தெஹெல்காவும் ஆரம்பித்த கயமை வதந்திகளை அவைகளை வைத்துக்கொண்டே எப்படி தாஜா செய்கிறீர்கள்! பொய்களைப் பொய்கள் என்று ஒப்புக்கொள்வதில் என்ன பிரச்சினை? இந்த அழகில் பினாமிகினாமி என்றெல்லாம் வேறு பேசுகிறீர்கள்!
நீங்கள் சொல்வது போல் டைம்ஸ் பத்திரிகை உண்மையைத்தான் வெளியீட்டிருக்கிறது என்றால் – நேரடியாக மேதகு பர்கா தத் (barkhadutt@ndtv.com), ராஜ்தீப் ஸர்தேசாய் (rajdeep.sardesai@network18online.com) போன்றவர்களிடம் செய்தி தெரிவித்தால் அவர்கள் குதித்தோடி ஆவன செய்யலாமே! (ஆனால் உண்மை என்னவென்றால் – இவர்கள் மிகத் தீவிரமாக முயன்றும், தீஸ்தா பொய்ச் சாட்சிகளை உண்டுபண்ணியும் கூட ஒரு பருப்பும் வேகவில்லை- நீதி மன்றங்கள் இன்னமும் பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கின்றன!)
ஆனால் அய்யா, அடிப்படையில் புத்திசாலித்தனமும் – நம் தேசத்தின், சகமக்களின் மீது கரிசனமும் கொண்ட தங்களுக்கு ஏன் இந்த வெட்டிவேலை? முதலில் நான் உங்களிடம் எழுப்பிய கேள்விகளுக்கு (https://othisaivu.wordpress.com/2013/03/29/post-186/) பதில் சொல்லிவிட்டு பின்னர் சாவகாசமாக உரையாடலாமே? பதின்மூன்று மாதங்களாகிவிட்டன அல்லவா? ஓரிருமுறை நினைவூட்டியிருக்கிறேன்கூட.
ஒரு புத்திசாலியின் மூளை இப்படி வியர்த்தமாவதைக் காணச் சகிக்கவில்லை.
–ரா.
May 13, 2014 at 13:51
ivan kudumbathar ethavatho thirutto kolayo karpazhipo seithu vittal intha thyagi thookirkku poi viduvar pola vazhga poovanan ungalai pondravargalai thaan intha thesam varaverkirathu.ithai sikh kalavarathilum katti irukalam atharangal kidaikavilla pol irukirathu pavam.
May 9, 2014 at 14:45
இதே போல் ஊடகங்களில் இன்று வரை மீண்டும் மீண்டும் உலவி வரும் மற்றுமொரு பச்சைப்பொய் நாதுராம் கோட்சேயை பற்றியது.அவன் வேண்டும் என்றே மக்களை திசை திருப்பி இந்து முஸ்லிம் கலவரங்களை பெரிய அளவில் உண்டு பண்ணுவதற்காக,அவனது கையில் ‘இஸ்மாயில்’என்று பச்சை குத்திக்கொண்டு காந்திஜியை சுட்டுக் கொன்றான் என்பதும் தான்.
May 11, 2014 at 13:59
ஆம். என்ன செய்வது சொல்லுங்கள். :-(
இதேபோல மேதகு அபலை கனிமொழி அவர்களும் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார் – தனக்கும், கலைஞர் டீவிக்கும் ஒரு எழவு தொடர்புமில்லையென்று. பாவிகள், விடுகிறார்களா? கனிமொழி அவர்கள் மேல் காழ்ப்பு கொண்டு பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுபவர்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்… :-(
இதைவிடக் கொடுமை, கனிமொழி அவர்களுக்கும் கவிதையுலகிற்கும் தொடர்பு உள்ளதாக – அயோக்கிய வதந்திகளைப் பரப்பும் செயல் – ஊடகங்களுக்கு இது தகுமா? இவற்றைக் கேட்பாரே இல்லையா?அவரை நிம்மதியாகவே இருக்க விடமாட்டேனென்கிறார்களே! :-((
May 10, 2014 at 11:34
2002 குஜராத் கலஹத்தில் ஈடுபட்ட ஹிந்து மற்றும் முஸல்மாணிய வெறிக்கூட்டத்தினர் பெரும்பாலானவர் ந்யாயாலயத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பலரும் பலப்பல ந்யாயாலயங்களால் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர்.
கலஹம் நிகழ்ந்தது உண்மை. கலஹத்தில் ஹிந்துக்களும் முஸல்மான் களும் கொல்லப்பட்டது உண்மை.
ஆனால் இதை வைத்து பரங்கிப்பிச்சைப்பணத்தில் டர்புர் திகில் கதை எழுதுபவர்கள் —
நேர்மையாளர்களாக — காந்திய வாதிகளாக —
உலா வருவது — பாவம் காந்தியடிகளுக்கே அடுக்காது.
இன்றைக்கு மட்டிலும் இவர்களைக் கண்டால் தன் கையில் உள்ள தடியால் நாலு விளாசு விளாசுவார் காந்தியடிகள்.
முல்லா நஸீருத்தீன் கதைக்கு சற்றிலும் குறைவானது இல்லை குஜராத் கலஹம் சம்பந்தப்பட்ட கர்ப்பப்பையை கிழித்து சிசுவை கொன்ற கதை என்பதை தெளிவாக்கியுள்ளீர்கள்.
சரவணன் சார் நல்லாத் தானே ஆர்கூ செய்வார். ஏன் திருவிளையாடல் தருமியாக ஆகி வருகிறார்?
ம்……………. பூவண்ணன் சார் பதில் எழுதாத தெகிரியத்தில் வ்யாசங்களாகப் போட்டுத் தாக்குகிறீர்கள். உரலாயுத சஹிதம் அவர் தன்னுடைய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்வாரே பாக்கணும்.
இது வரை நீங்கள் வித விதமான இணைய தள திகில் கதைகளைப் பகிர்ந்ததில் மோதியை நேரடியாக சம்பந்தப்படுத்திய கதை எத்தையும் பகிரவில்லை. அது போன்ற உண்மையான புளுகுமூட்டைக் கதைகளை பலப்பல சர்ச் எஞ்சின் களால் துளாவி திடுக்கிடச் செய்யப்போகிறார் பூவண்ணன் சார்.
காதலிக்க நேரமில்லை பாலையா போல நடுங்கிக் கொண்டிருக்கிறேன்.
செல்லப்பா எப்போ கதை சொல்லப்போகிறாரோ????????????
May 10, 2014 at 18:38
அய்யா க்ருஷ்ணகுமார் – நினைவூட்டியதற்கு நன்றி.
சுட்டி நண்பர் பூவண்ணனின் சுட்டிகளை அவர் வியாக்கியானத்துடன், ஸ்பேம்-இலிருந்து மீட்டு விட்டேன். கூட ஒரு கொசுறு எதிர்வினையையும்.
உங்கள் ஜென்மம் சாபல்யமான விஷயத்துக்கு மறுபடியும் பின்னூட்டமிடவும்… ;-)
May 10, 2014 at 20:27
உண்மையா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும் சார்.
http://www.outlookindia.com/printarticle.aspx?215433
During our fact-finding mission, we were to hear this story many times. We read about it in other fact-finding reports. We were told about it by many survivors at the Shah-e-Alam camp. Sometimes the details would vary — the foetus was dashed to the ground, the foetus was slaughtered with a sword, the foetus was swung on the point of the sword and then thrown into a fire. Each teller of the story owned it. It was as if it was their own story. Were these simply the fevered imaginings of traumatized minds? We think not. Kausar’s story has come to embody the numerous experiences of evil that were felt by the Muslims of Naroda Patia on February 28, 2002. In all instances where extreme violence is experienced collectively, meta-narratives are constructed. Each victim is part of the narrative; their experience subsumed by the collective experience. Kausar is that collective experience — a meta-narrative of bestiality; a meta-narrative of helpless victimhood. There are a thousand Kausars.
Members of the fact-finding team have seen photographic evidence of the burnt bodies of a mother and a foetus lying on the mother’s belly, as if torn from the uterus and left on the gash. We do not know if that was Kausar Bano.
Click to access Media%20Reports%20on%20the%20issue.pdf
Then, there was the horrific case of Kausarbano. Mobs slit open her stomach and
threw her body and that of the foetus into the fire. But political leaders dismissed
accounts of her story, saying that no one by the name existed!
Now, three affidavits filed by Kausarbano’s friends and relatives nail this lie. Her
husband’s affidavit states, ‘‘I ran part of the way carrying her in my arms. After some
distance, I put her down and both of us began running. They caught her, slit her
stomach with a sword pulled out our child from her stomach and paraded the baby
on the tip of a sword. I think I heard my child cry. Then, they poured petrol on both
of them and lit them.’’
The fear-stricken man, hiding behind a wall, witnessed the entire incident. His friend
held him back and forced him to run away. Otherwise he, too, would have died
குசர் பானு என்ற கர்ப்பிணி பெண் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட வில்லை எனபது தான் உங்கள் வாதமா அல்லது அவர் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து கொள்ளாமல் மனிதமாபிமானத்துடன் கலவரக்காரர்கள் எரித்து மட்டும் தான் கொன்றார்கள் எனபது உங்கள் வாதமா
May 11, 2014 at 06:10
Dear Poonvannan – it is not for the time to decide. There have been so many inquiries and commissions. So many people were on fact-finding missions. So many of these ‘investigative’ journalists were highly connected. They were sworn enemies of Gujarat, Modi et al. All their combined forces and wits could not produce anything beyond rumours.
Now you are trying, good luck. And you are still quoting execrable Teestas. Great.
In my humble opinion, this rumour will never die. Therefore the Truth can never rest on its laurels.
Like MarieAntoinette condescendingly said ‘let them eat bread’
Like Nero fiddled knowing fully well that Rome was burning…
Like bald men can regrow their hair by applying certain potions…
Like Dravidian movement has done good for TN…
Like [insert your fav myth]
Listen, am not saying that it is NOT sad that so many people died rather grisly deaths. But twisting facts to suit random agendas is my issue. I have a beehive in the bonnet about this!
So, ‘time’ will NOT ‘tell.’ The common man, while he is good, will continue to be a dumb ass. While most of the humanrightswallahs, unclear activists crow away to glory! That is our lot.
May 11, 2014 at 08:47
It has been 30 years since anti sikh riots and no court has convicted jagdish tytler or sajjan kumar and they too have won elections with record margins.Do they become innocent by the yardstick you apply for modi.
They have been denied seats to contest and ridiculed while modi has not lost a single day of CM ship to which he holds tightly as a glue using all resources at his command to hide and destroy evidences.several commissions have exonerated sajjans and tytlers but there exist people who fight till date to get them punished.
Its a collection of articles by teesta on the kausar banu episode and not her words alone and its amusing that you being the teesta of dravidian politics see her as perpetrator of lies.
There exist nothing which comes near what minorities and majority suffered in gujarat in TN but you never tire in ridiculing the dravidian leaders but want the people to move ahead of gujarat riots/female foeticide in lakhs/absolute political exclusion of minorities/communalisation of refugees and immigrants as trivial issues
May 11, 2014 at 09:20
… No, young Poovannan dear, I am tired.
The cases of Tytler and Sajjankumar are very VERY different from that of Modi – please try to understand the differences sire, there is no point in getting emotional – and then jumping to improbable confusions.
I am not the Teesta (bleh!) of TN politics – for many reasons – but the single most important reason is that I am not a begging, thieving funds_collector. I am not a professional activist. I support myself.
That said, as always, I admire your tenacity of purpose and yes, thanks for not using any URLs to bolster your claims. Especially from those of the likes of execrable Tehelka and Porn filled ToI.
हम हिंदी मे बी लड़ाई शुरु करना चाहिये । :-))
May 11, 2014 at 16:01
பூவண்ணன் அவர்களுக்கு இதே வேலையாப்போச்சு…..
யார் யார் ஆதாரமில்லாம அடிச்சு விடறாங்கன்னு ராமசாமி பட்டியலிடுகிறார்…..
இதோ இருக்கிறது ஆதாரம்னு பூவண்ணன் லிங்க் கொடுக்கிறார்…. உள்ளே போய்ப்பார்த்தால் , ராமசாமி அவர்கள் யாரை குறிப்பிட்டாரோ அவர்களின் உளறல்தான் அங்கே இருக்கிறது….
முடியல சார்…
May 11, 2014 at 22:03
பூவண்ணன் சாருக்கு தீர்க்க ஆயுசு.
தும்மினவுடனே உரலாயுதத்துடன் ஆஜராகி விட்டார்.
அதே அரச்ச மாவு.
பூவண்ணன் சாஹேப் கே மன்சாஹத் தீஸ்தா மேம்சாஹப் கீ அனாப் சனாப் பாதேன் சுனாவ் மே ஹல்லா கர்னே கே லியே யா டிவி மே ஷோர் மசானே கே லியே டீக் ஹை.
உன் கீ ஜூட் கீ போரியான் கசஹ்ரி கீ சீடி நஹீன் சட் சக்தீ. Teesta speaks and writes on the basis of weight of money she gets from vilayati donors who are hell bent on portraying hyped, negative and exaggerated picture about Gujarat.
1984ல் காங்க்ரஸ் குண்டர்கள் சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட கலஹத்தை பூவண்ணன் சார் உரலாயுதங்களால் அது ஹிந்து சீக்கியர் கலஹம் என்று சாதித்ததை நீங்கள் இன்னமும் எதிர்நோக்கவில்லை. ம்ஹும் இதையெல்லாம் வாசித்தால் தான் ஜன்மம் சாபல்யம் ஆகும்.
தமிழகத்தை சாராயத்தாலும் தமிழை பொறுக்கி நடைத் தமிழாலும் சீரழித்த த்ராவிட விஷ இயக்கத்தை தமிழகத்துக்கு நல்லது செய்தது என்று சாதிப்பதை என்னவென்று சொல்வது?
—->>> நன்றி க்ருஷ்ணகுமார் – பூவண்ணன் திருந்திவிடுவார்; அது மட்டுமல்ல, நெடுங்காலம் சௌக்கியமாக பின்னூட்டமிட்டுக்கொண்டுமிருப்பார்.
மற்றபடி அவருடைய ஹிந்து-ஸீக்கிய, ஹிந்து-எக்ஸ்ப்ரெஸ்ஸிய, ஹிந்து-டெக்கன்க்ரானிக்கிலிய பிரிவினைவாதங்களைக் கேட்க, எனக்குத் திராணியில்லை என்பதை
வருத்தத்துடன்மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!__ரா.
May 11, 2014 at 22:05
மோடியின் ஆதரவாளர்கள் நடத்தும் தளத்தில் இருந்தும் நிறைமாத கர்ப்பிணி கௌஸர் பானு கொலை பற்றிய செய்திகள் இருக்கிறதே ஐய்யா
அவர்கள் கலவரக்காரர்கள் மனிதாபிமானத்தோடு கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் சிசுவோடு யேர்த்த்து தான் கொலை செய்தார்கள்.சிசுவை வயிற்றை கிழித்து எடுக்கவில்லை என்று தானே வாதிடுகிறார்கள்.
பிரேத பரிசோதனை செய்த டாக்டரின் வாக்குமூலத்தில் எரித்து கொல்லப்பட்ட பெண்ணின் வயிற்றில் தான் குழந்தை இருந்தது என்பதை தானே பெரிய ஆதாரமாக வைக்கிறார்கள்.
கலவரத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் குறைவு கிடையாது.பாலியல் வன்முறைக்கு பின் எரிக்கப்பட்ட பெண்களுக்கும் குறைவு கிடையாது.கலவரக்காரர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எரிப்பதற்க்கான முக்கிய காரணம் கொடூரங்களை மறைக்க தான்.
என்ன தான் அவர்களுக்க்கு தூபம் போட்டு வழிகாட்டும் அரசாக,காவல்துறையினராக இருந்தாலும் ஒன்றிரன்று நியாயமான அதிகாரிகள் உண்மை அறிக்கைகளை எழுதும் வாய்ப்பு இருப்பதையும் தடுக்க தானே
கௌஸர் பானு என்ற கர்ப்பிணி பெண் கொல்லப்படவில்லை.அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்பது தான் உங்கள் வாதமா
—–>>> அன்புள்ள பூவண்ணன் – நான் எழுதியதை(!) சரியாக வாசித்திருந்தால் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். இந்த கலவரங்களில் பல முஸ்லீம் பெண்களும், ஹிந்து பெண்களும் கொல்லப் பட்டிருக்கின்றனர். என்னுடைய (முஸ்லீம்) நண்பர் பார்வையின் படியே — குறைந்தபட்சம் இரண்டு ஹிந்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளும் கொல்லப் பட்டுள்ளனர். எல்லாம் படுபாதகம். ஆனால் – நான் சொல்லவந்ததெல்லாம் காமாலைக்கண்ணப் பார்வையைப் பற்றி, ஒரு பக்கச் செய்தித் திரித்தல்களைப் பற்றி – செய்திகளைப் பற்றியல்ல. எப்படித்தான் மறுபடியும் மறுபடியும் சளைக்காமல் எழுதுகிறீர்களோ!
எனக்கு இம்மாதிரி ஹிந்து – முஸ்லீம் உயிர்கள் தனித்தனி என்று எழுதுவதற்கே படுகேவலமாக இருக்கிறது. ஆனால் – நடந்திருப்பது இதுதான். நீங்கள் ஒருபக்க அநியாயத்தைப் பற்றிய கேவலமான திரித்தல்களை மட்டும் பார்க்கிறீர்கள். நான் இருபக்கஅநியாயங்களைப் பார்க்கிறேன். நாம் இருவரும் பார்க்கவேண்டியவைகளே வேறு.
இன்னொன்று – செய்தித் தாள்களில், டீவி அலைவரிசைகளில், இணையத்தில் வருவதையெல்லாம் உண்மையென்று நம்பி குதிக்கும் காலம், உங்களுக்கும் மலையேறும்.
__ரா.
May 13, 2014 at 09:26
பூவண்ணன் போன்றவர்கள்,குஜராத் 2002 கலவரத்திற்கு மிகவும் தூண்டுதலாக இருந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மட்டும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.அதில் உயிரோடு கொளுத்தப்பட்ட 50 க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் (குழந்தைகள்,பெண்கள் உள்பட) குடும்பங்களின் இன்றைய பரிதாப நிலைமை பற்றி ஊடகங்களிலோ செய்திதாள்களிலோ,இவரைப் போன்றவர்களிடமோ இருந்து ஒரு ‘சுக்கு’ செய்தியையும் இன்றுவரை நான் படித்தது கிடையாது.அந்த கொடுமையான சம்பவத்தின் பின்ன்ணணியில் நடந்த கலவரத்தின் போது,முன்பு சீக்கிய கலவரத்தின் போது எந்த வித நடவடிக்கையையும் எடுக்காமல் அதை மேலும் தூண்டி விடுகிற மாதிரி ‘ஒரு ஆலமரம் சாய்ந்தால் அதன் பாதிப்பு பக்கத்தில் உள்ளவைக்கெல்லாம் இருக்கத்தான் செய்யும் என்று தடாலடி அடித்த ராஜீவ் காந்தியைப்போல் அல்லாமல்,(இப்போது இவரின் வாரிசு ராகுல் -அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கிறது என்பது போன்று,பி ஜே.பி ஆட்சிக்கு வந்தால் 22000 பேர் (அது என்ன கணக்கோ!)உடன் கொல்லப்படுவார்கள் என்று தேர்தல் பிரட்சாரத்தில் பிதற்றி இருக்கிறார்) மோதி அவர்கள் உடன் ராணுவத்தை கொண்டு நடவடிக்கை எடுத்து கலவரத்தை மேலும் பரவாமல் தடுத்தார்.இதை எல்லாம் கண்டுகொள்ளாமல்,மோதி அவர்கள் மீது வாய்க்கு வந்ததை எந்தவித ஆதாரம் இல்லாமல் பிதற்றுவதே இவர்களுக்கு பொழைப்பாய் போய்விட்டது.
May 13, 2014 at 22:00
அன்பின் ராம்,
\\ எனக்கு இம்மாதிரி ஹிந்து – முஸ்லீம் உயிர்கள் தனித்தனி என்று எழுதுவதற்கே படுகேவலமாக இருக்கிறது. \\
ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். இணக்கத்தை முன்னால் வைத்து வெறுப்பு முதல்வாதத்தை கடுமையாக நான் சாடியபோது என்னுடன் உடன்பட்டார். Its another thing that latter he distorted the discourse latter by completely derailing the concept of religious harmony — by branding issues that are harmful to religiious harmony as yardsticks for testing religious harmony.
————
இந்த திரியில் – http://www.tamilpaper.net/?p=8022 .
# 83 ல் இருந்து பாருங்கள் : க்ருஷ்ணகுமார் :-
\\ மதக்கலஹத்தில் சிந்தப்படும் ரத்தம் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அது மானுடத்திற்கு இழுக்கு. மதத்தை வெறுக்காத மானுடத்தை நேசிப்பவர் யாராயினும் கொள்ள வேண்டிய நிலைப்பாடு இது.
குஜராத்தில் நிகழ்ந்த கலஹத்தில் வெறியாட்டம் நிகழ்த்தியவர் ஹிந்து மற்றும் முஸல்மான் இரண்டு சமூஹங்களையும் சேர்ந்தவர்கள். ஹிந்துப்பெரும்பான்மைப் பகுதிகளில் ஹிந்துக்கள் எல்லை மீறினர். முஸல்மான் பெரும்பான்மைப்பகுதிகளில் முஸல்மான் கள் எல்லை மீறினர். நிஷ்பக்ஷமாகப் பேச விழைபவர் இரண்டு விஷயங்களையும் முன்வைப்பர். மட்டு மீறிய ஹிந்து வெறுப்பினை ஆதாரமாக வைத்துப் பேசினால் மட்டிலும் ஹிந்துக்களை மட்டிலும் குற்றவளிக்கூண்டிலேற்ற முடியும். \\
———–
# 85 ல் பூவண்ணன் :-
இந்த தேசம் வீழாமல் இருப்பது இணக்கத்தை நாடுவோரால்.
இணக்கமே என்றும் வெல்லும். வெறுப்பு தோல்வியையே அறுதியில் காணும்.
கிருஷ்ணகுமார்
நூற்றில் ஒரு வார்த்தை
——————–
பூவண்ணன் சாருடைய பெட் தியரியான ஹிந்து வெறுப்பு வாதம் என்பது அவருடைய கண்களை மறைப்பதால் — பயங்கரங்கள் நிகழ்த்துபவர்கள் — ஹிந்துக்களாக இருப்பதால் மட்டும் அவர் கண்களுக்கு தென்படுகிறது. He is in a total denial mode with regard to atrocities committed by moslems on Hindus.
Whereas for a person who believe in well being of human race—- atrocities committed by any person on any person irrespective of religious affiliation — shall be outrightly condemned — and ruthlessly be tackled. A proper analysis of the events of 2002 religious riots in Gujarath shows that —
1. prompt action was taken by the state govt under Modi who just took over the power before the riots.
2. Surrounding state governments in Rajasthan, Madhyapradesh and Maharasthra sabotaged by not responding to the SOS calls of Gujarath Govt for sending in reinforcements of police power
3. Of all the religious riots happened in Hindusthan, it was only in Gujarath that culprits who perpetrated the riots were punished on a massive scale. And it was proved in courts of law that culprits belonged to both Hindu and islam religions.
Major Poovannan, sure you worked in difficult areas in Army. I worked in many difficult areas as a civilian. But hope both of us can very well understand the pain of commmon people in disturbed areas irrespective of religion.
I would just hope that you come out of religious bias and condemn atrocities irrespective of religion.
May 13, 2014 at 13:52
http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Kausarbanu-tale-only-a-half-truth-Court/articleshow/16243417.cms
May 13, 2014 at 15:25
சேஷகிரி சார்
பாவம் பெரியவர் பூவண்ணனைக் குறை சொல்ல வேண்டாம். அவர் அழகாக ( ? ) கோத்ரா பற்றி எழுதி இருக்கிறார்.
லிங்க் இங்கே:
http://www.tamilpaper.net/?m=201404&paged=2
படித்து விட்டு நீங்கள் ஒரு சோக நிகழ்ச்சி பற்றி கொஞ்சமும் மனதில் ஈரம் இல்லாமல் இப்படி கூட எழுத முடியுமா என்றெல்லாம் கேட்க கூடாது. அவர் பாணியில் கடைசீயில் ஒரு புள்ளி விவரமும் கொடுத்து இருக்கிறார். அதைப் படித்து நாம் தெளிவு பெறுவோமாக.
பின்னூட்டத்தில் ஒரு தம்பி
//மிக சரியான பதிவு , இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்கலாம்.// என்று எழுதி இருப்பார். உங்களுக்கு மெய் சிலிர்க்கும்.
May 13, 2014 at 15:28
இந்த லிங்க் நேரிடையாக அந்த கட்டுரைக்கு எடுத்து செல்லும்
http://www.tamilpaper.net/?p=8760
May 14, 2014 at 08:38
திரு ரங்கன் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ளதைப் படித்தேன்.ஒரு படத்தில் காமெடி காட்சியில் வடிவேலு அவர்கள் ஒருவரை பார்த்து ”ஒ அவனா நீ” என்பார் அந்த கதை ஆகிவிட்டது,பூவண்ணனின் கதை.பாவம் ராமசாமி சார்,இவரின் பின்னூட்டத்தை படித்து விட்டு, மாய்ந்து, மாய்ந்துபதில் எழுதுகிறார்.
லல்லு பிரசாத் அமைத்த பானர்ஜி கமிசன் அறிக்கையையும் மிஞ்சிவிட்டார்.
May 14, 2014 at 00:38
குசர் பானுவின் வயிற்றை கிழித்து கருவை வெளியே இழுத்து தாயையும், கருவையும் கொளுத்தினார்களா என்ற கேள்வி பற்றி நரோடா பாட்டியா தீர்ப்பு என்ன சொல்கிறது என எனக்கு முழுதுமாக புரியவில்லை.
கீழே சில பகுதிகள் கொடுத்துள்ளேன். இரண்டாயிர பக்க தீர்ப்பு! முழுதும் புரிந்தோர் விளக்கவும். நன்றி.
நரோடா பாட்டியா தீர்ப்பு பக்கம் 238 இல் நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “Points for determination” ொல்லப்படுகின்றன. இதில் Point 10 குற்றம் சாட்டப்பட்ட யாரேனும் பிறக்க உள்ள அல்லது பிறந்த குழந்தையை கொன்றார்களா என்ற கேள்வியைக் குறிப்பிடுகிறது. இந்த குற்றம் IPC Section 315 கீழ் வரும். இ தற்கான நீதிமன்ற தீர்ப்பு பக்கம் 258 இல் உள்ளது. அதில் அனைத்து குற்றம் சாட்டப்பட்டோர் அனைவருக்கும் “benefit of doubt” தரப்படுகிறது. அதே சமயம் IPC Section 302 இன் படி குசர் பானு கொலைக்காக Accused 18 (பாபு பஜ்ரங்கி) உட்பட பலரையும் குற்றவாளி என தீர்ப்பாகிறது.
இது ஒரு புறம் இருக்க தீர்ப்பின் வேறு இரண்டு பகுதிகளை பார்ப்போம்.
பக்கம் 475:
(h-5) In light of the foregoing discussion, this Court is convinced that the extra-judicial confession of A-18 cannot be merely tales of heroism, but in fact occurrence of slitting the stomach of one Muslim pregnant woman is reality. The detailed discussion on this aspect is done under the Chapter of Sting Operation where the extra-judicial confession of A-18 has been discussed.
பக்கம் 1382
(b-18) No doubt is left out in the mind of the Court about A-18 to have slit stomach of Kausharbanu as was witnessed by the PW, but at the same time, the description seems exaggerated. While seeing the witness to have been given exaggerated version, it must be understood that after all, this is an observation of child of about 14 years old then and that his perception to such ghastly occurrence would be little different then the adult man with all understanding. The sum and substance is Kausharbanu was pregnant whose stomach was slit open, the other thing of swirling etc. even if is not believed then also the fact of homicidal death of Kausharbanu by slitting her stomach and burning her, obviously with the fetus, stands proved. It is probable that a child of 14 years may understand piece of flesh as infant child also, but that is not important, the important aspect is, is it in any manner doubtful that Kausharbanu was not killed by slitting her stomach and then by burning her with the fetus in her body by A-18 and
others in the mob or not.
In the opinion of this Court, in the facts and circumstances of the case, this sounds perfectly probable. The witness has also stated his mental state of that day at para-80 and at para-81, it is clear that he was child then. Para-82confirms the presence of Guddu, A-18, A-28, A-22 at the site on the day. The combined reading of para-83 and 86 shows that the witness was knowing all these persons and that the witness is admittedly living in the area right from his birth where A-22, Guddu and A-28 are living and A-18 was a leading personality of Vishwa Hindu Parishad then.
indiankanoon.org/
தீர்ப்பு இத்தளத்தில் கிடைக்கிறது:
http://www.cjponline.org/
—–>>> என்னுடைய பிரச்சினை என்னவென்றால் வெங்கடேசன் – இந்த http://www.cjponline.org தளம் தீஸ்தா ஸெதல்வாத் அம்மணியால் பணம் வாங்கிக்கொண்டு நடத்தப் படுவது. இதில் இருக்கும் ஆவணங்களிலும் நிறைய ஜோடிப்புகள் உள்ளன. இன்னொருவருடைய ஆவணங்களில் இந்த அம்மணி திருத்தங்களெல்லாம் செய்து வெளியிட்டிருக்கிறார். அதனால் தீஸ்தா தொடர்பான, அவர் தளத்திலுள்ள தகவல்களை நான் மதிக்கத்தக்கதாகக் கருதுவதில்லை.
ஆனால், நான் இந்த தீர்ப்பை முழுவதும் வாசித்திருக்கிறேன். தொடர்பான இணைப்பு ஆவணங்களையும் பார்த்திருக்கிறேன் – பின்னவற்றை முழுவதும் படிக்கவில்லை. இருந்தாலும், தீஸ்தா ஆவணம் முழுமையான ஆவணம் அல்ல. மேலதிகமாக — நிச்சயம், திட்டவட்டமாக – கருப்பையைக் கிழித்துச் சிசுவை வாளாலோ/திரிசூலத்தாலோ தூக்கி பின்னர் அதன் மேலும் பெட்ரோல் விட்டெரித்தாகத் தீர்ப்பில் இல்லை. போஸ்ட்மார்ட்டெம் ரிபோர்ட்டும் அப்படியில்லை. ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப் பட்டு அமல்படுத்தப் பட்டிருக்கின்றன.
அதே சமயம் – கோத்ரா ரயில்பெட்டியில் எரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணைப் பற்றி, காணாமல் போன இளம்பெண்கள் பற்றி யாரும் தனியாகப் பேசியதாகவே காணோம்.
பொறுக்கியெடுத்து, சில செய்திகளை மட்டும் விரித்துத் திரிக்கப் படுதலே பெரும்பாலும் நடக்கிறது. நம் அறிவு ஜீவிகளின் மட்டம் அவ்வளவுதான்.
May 15, 2014 at 21:15
\\ இன்னொருவருடைய ஆவணங்களில் இந்த அம்மணி திருத்தங்களெல்லாம் செய்து வெளியிட்டிருக்கிறார். அதனால் தீஸ்தா தொடர்பான, அவர் தளத்திலுள்ள தகவல்களை நான் மதிக்கத்தக்கதாகக் கருதுவதில்லை. \\
ம்……… இப்படியெல்லாமும் செய்கிறார் என்பதற்கு சாம்பிளாக ஒன்றிரண்டு பகிர்ந்தீர்கள் என்றால் புளுகுமூட்டைக் குளுவான் கள் வாந்திகள் எடுப்பதற்கு முன் கொஞ்சம் யோஜிக்கவாவது செய்யலாம்
May 15, 2014 at 21:33
அய்யா – தீஸ்தா ஸீதளவாதியின் இந்தப் போலி அஃபிடவிட் பற்றி முன்னமே எழுதியிருந்தேன் என நினைக்கிறேன். (ரெய்ஸ் கான் பதான் பற்றிய பதிவில் என்று நினைவு); அவசரத்துக்கு http://www.ibtl.in/news/exclusive/1663/teesta-s-own-aid-submits-proof-of-fake-affidavits-to-nanavati-commission/; இன்னொரு எடுத்துக்காட்டு: तीस्ता सीतलवाड़ के खिलाफ जालसाजी का मुकदमा दर्ज! (http://www.jagran.com/news/national-forgery-cases-registered-against-teesta-setalvad-10987815.html)
இன்னமும் சில சான்றுகளை வைத்திருக்கிறேன் – தீஸ்தா பற்றி இன்னொரு விலாவாரியான சுற்று வருவதற்காக. ஆனால் இம்மாதிரி எதிர்மறை விஷயங்களை மட்டும் எழுதுவதற்கு அயர்வாகவே இருக்கிறது.
ஆகவே இப்போதைக்கு இது போதும்.
May 16, 2014 at 20:57
அன்பின் ராம்,
\\ அய்யா – தீஸ்தா ஸீதளவாதியின் இந்தப் போலி அஃபிடவிட் பற்றி முன்னமே எழுதியிருந்தேன் என நினைக்கிறேன். \\
இந்த தளத்துப் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
See, still I missed it.
Thanks to the genuine query by Shri. Venkatesan, a detailed account about teesta’s tampering with other’s documents is very much needed.
you have done a wonderful service by exposing the demon in Harsh Mander.
That teesta is a demon and a habitual liar and profiteer is well established. But the level she could stoop by modifying documents of others just to score points, need to be exposed.
I can understand your exasperation of writing something you feel as sort of negative. In that time you can do wonders with the kids who are god sent (in my visualisation, ok!!!).
But do not thing exposing the level of cheating of the likes of teesta is with negativity. Rather by doing so, the truth becomes brighter. thats it.
May 14, 2014 at 23:20
அந்த தளத்தில் உள்ள மற்ற ஆவணங்களை விட்டு விடுவோம். தீர்ப்பு நகல் அங்கு கிடைக்கிறது. மூல தீர்ப்பில் திருத்தம் செய்திருப்பதாக நீங்கள் கருதினால் சுட்டிக் காட்டுங்கள். அதுவரை இது உண்மைப் பிரதி என நான் ஏற்கிறேன்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது Section 302 (murder) படி, குசர் பானு கொலைக்காக. பிறக்க உள்ள, அல்லது பிறந்த குழந்தையை கொல்லுதல் என்ற Section 315 கீழ் அனைவருக்கும் (பாபு பஜ்ரங்கி உட்பட) benefit of doubt அளிக்கப் படுகிறது. அதே சமயம் பாபு பஜ்ரங்கி தெஹெல்கா பதிவில் சொன்னவை உண்மையாக இருக்க வாய்ப்புண்டு என்றே நீதிபதி கருதுகிறார். மேலும், குசர் பானு வயிற்றை கத்தியால் கிழித்து, பின் எரித்துக் கொல்லப்பட்டார் என்பதை நீதிபதி ஏற்கிறார். இந்த அடிப்படையில் தான் Section 302 இன் படி தண்டனை வழங்கப்படுகிறது. கருவை (Foetus) வெளியே எடுத்து தனியாக கொன்றார்களா என்பதற்கு ஒரு சிறுவனின் சாட்சியம், மற்றும் தெஹெல்கா ஒப்புதல் மட்டுமே ஆதாரம். இவற்றின் அடிப்படையில் கருவை வெளியே இழுத்து கொன்றிருக்க வாய்ப்புண்டு என்று கருதினாலும், benefit of doubt தருகிறார். எனது புரிதல் இது.
கருவை வெளியே இழுத்து கொன்றது நடைபெறவில்லை என்றே கொள்வோம். நடந்த மற்றவை எல்லாம் நாகரீகமான செயல்கள் என கருதுகிறீர்களா?
நீதிமன்ற நிரூபணம் என்பதில் இவ்வளவு கறார்தனம் காட்டுகிறீர்கள். சரி. சோனியா, ராபர்ட் வாத்ரா, கனிமொழி, ஆ ராஜா போன்றோர் மீது எந்த நீதிமன்றத்திலும் இதுவரை எந்த குற்றமும் நிரூபிக்கப் படவில்லை. இவர்கள் நிரபராதிகள் என்பதை ஏற்கிறீர்களா? தனது ஐம்பது வருட அரசியல் வாழ்வில் கலைஞர் மீது கூட எந்த ஊழல் வழக்கும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அவர் தன்னலம் கருதா காமராஜர் என ஏற்கிறீர்களா? தினகரன் ஊழியர் எரித்துக் கொலை, தா கிருட்டிணன் கொலை போன்ற வழக்குகளில் மு க அழகிரி விடுதலை ஆனார். அவரை இந்த விவகாரங்களில் சம்பத்தப் படுத்தி இன்னமும் பலர் (நீங்களும்?) எழுதவது தவறு என்பீர்களா?
இந்த குசர் பானு விவகாரம் பற்றி முழுத் தெளிவு எனக்கு இல்லை. எனினும் ஒரு விஷயத்தில் தெளிவு கிடைத்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் தடை செய்யப்பட வேண்டிய கொலைகார இயக்கம்.
May 15, 2014 at 21:26
\\ இந்த குசர் பானு விவகாரம் பற்றி முழுத் தெளிவு எனக்கு இல்லை. எனினும் ஒரு விஷயத்தில் தெளிவு கிடைத்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் தடை செய்யப்பட வேண்டிய கொலைகார இயக்கம். \\
அன்பின் வெங்கடேசன்,
ஒரு கர்ப்பிணியைக் கொலை செய்வது என்பதும் கர்ப்பத்தில் இருந்து எடுத்த சிசுவை கொலை செய்வதும் சந்தேகமன்னியில் மாபாதகம். ஒரு ம்ருகம் கூட இப்படியான கார்யத்தை செய்யுமா தெரியவில்லை
அதைச் செய்தவன் எந்தக்கயவனாக இருந்தாலும் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்றிருந்தாலும் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்பட வேண்டியவன் என்பதில் சந்தேஹம் இல்லை. அவன் எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் சரி.
ஆனால் ஒரு பாபு பஜ்ரங்கியை வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் தடை செய்யப்பட வேண்டிய கொலைகார இயக்கம் என்று சொன்னால் ………….பண்டித நேரு என்ற ஸ்த்ரீ லோலனை (பின்னால் தொடரும் பலப்பல ஸ்த்ரீ லோலர்களும் – லேடஸ்ட் – காங்க்ரஸ் டைடானிக் கப்பல் கவிழும் போது லவ்வடிக்கும் டிக்கிராஜா வரை) மனதில் வைத்து காங்க்ரெஸ் இயக்கம் என்பது ஸ்த்ரீ லோலர்களின் பலான இயக்கம் என்று சொல்வதைப் போல.
தகப்பன் காந்தியடிகளே இருந்தாலும் மகன் ஹரிலால் போல வாய்க்கலாமே. பேரப்பயபுள்ளகள் எப்படியெப்படியெல்லாமும் வாய்த்துத் தொலைக்கலாமே.
ம்……முடியல…………….
May 15, 2014 at 21:36
அன்புள்ள க்ருஷ்ணகுமார் – https://othisaivu.wordpress.com/2014/05/15/post-375/ பதிவில் கொஞ்சம் நீளமாகவே, வெங்கடேசன் அவர்களுக்கு பதில் கொடுக்க முயன்றிருக்கிறேன். நன்றி.