கர்னல் நிஸாமுத்தீன், ஆர்எஸ்எஸ், நரேந்த்ர மோதி, வாராணசி: சில குறிப்புகள்
May 11, 2014
முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களும் ஒருவருக்கொருவர் மீது பரஸ்பர அவநம்பிக்கையை மட்டுமே கொண்டுள்ளனர்; ஆர்எஸ்எஸ் என்பது ‘ஹிந்துத்துவ’ குண்டர்கள் கும்பல்; முஸ்லீம் என்றாலே அவன் சந்தேகப்படத் தக்கவன்- வெடிகுண்டன்; ஹிந்துத்துவம் என்றாலே மதவெறிதான்; முஸ்லீம் என்றாலே சிறுபான்மைத்தனப் படுத்தப்பட்டு ஒதுக்கப்படுபவன்தான்; ஜாதியென்ற பகுப்பு ஜாதிவெறிக்குள் அடங்கிவிடுவதுதான்; மதம் சார்ந்து இயங்குபவர்களெல்லாம் முட்டாள் மதவெறியர்கள், ஸெக்யூலரிஸ்ம்தான் புளகாங்கிதம் தரும்; தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் நேர்மையாளர்கள்; தொழில்முறை அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணர்கள், அவர்கள் நிபுணத்துவம் மிகுந்து நிரம்பிவழியும்படியால், கல்வியிலும் நேர்மையிலும் கரைகண்ட ஜாம்பவான்கள்; நக்ஸலைட்டுகள் அதிமனிதர்கள்; திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்திருக்கவில்லையென்றால் தமிழகத்துக்கு விமோசனமே இருந்திருக்காது … …
… போன்ற மூச்சுமுட்டவைக்கும் பரப்புரைகளையெல்லாம் (nauseating & nasty propaganda ploys) கயமையுடன் முன்னெடுத்துச் செல்வது பப்பரப்பா ஊடகங்களே என்பதில் (பல அறிவியல்_தொழில்நுட்ப விற்பன்னர்கள் + நேர்மையான களப்பணியாளர்கள் – அதுவும் முஸ்லீம் + ஹிந்து(அதுவும், ஆர்எஸ்எஸ் – அய்யய்யோ!) நண்பர்களைப் பெற்றுள்ள) எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. பொதுமக்களில் பெரும்பாலோர் இப்படிப்பட்ட பரப்புரைகளையெல்லாம் பொதுவாக நம்புவதில்லை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
இருந்தாலும்…
மோதியின் அண்மைய வாராணசிக் கூட்டங்களில் ஒன்றில் ‘கர்னல்’ நிஸாமுத்தீன் அவர்கள் பங்கேற்று, இவர் பாதத்தைத்தொட்டு மோதி ஆசி பெற்ற நிகழ்ச்சியை இன்று தெரிந்து கொண்டபடியாலும், இந்த நிஸாமுத்தீன் பற்றிய ஒரு தகவலை ஆறேழு மாதங்கள் முன் (ஒரு சுற்றறிக்கை மின்னஞ்சல் குழுமம் மூலமாக) அறிந்தவன் என்கிற முறையிலும் இந்தப் பதிவு; இதிலுள்ள விவரங்கள், நம்பகத்தன்மை மிக்க நண்பர் ஒருவரின் மின்னஞ்சல் சுற்றறிக்கையிலிருந்து (அவர் அனுமதி பெற்று) எடுக்கப்பட்டுள்ளன.

நிஸாமுத்தீன் அவர்களிடம் மோதி ஆசி பெற்றுக் கொள்ளும் காட்சி – புகைப்படப் பகிர்வு: ப்ரியங்கா ஸிங் அவர்களின் கீச்சல் தளம்
நிஸாமுத்தீன் – சில குறிப்புகள்: ஸைஃபுத்தீன் அவர்கள் 1910 வாக்கில், உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கட் மாவட்டத்திலுள்ள முபாரக்பூர் எனும் ஊரில் பிறந்தார்.
அவருடைய அப்பா இமாம் அலி அவர்கள், திரைகடலோடியும் திரவியம் தேட சிங்கப்பூருக்குச் சென்று அங்கு ஒரு உணவகத்தை நடத்திக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு ஒரு முறை பணம் அனுப்பிக் கொண்டிருந்து இந்தியாவிலுள்ள தன் குடும்பத்தை இமாம் அலி நிர்வகித்து வந்தாலும் – அலைபாய்ந்து கொண்டிருந்த இளைஞரான ஸைஃபுத்தீன், 24-25 வயது வாக்கில் வீட்டை விட்டு ‘ஓடிப் போய்’ தன் தந்தைக்கு உதவியாக சிங்கப்பூரில் வாழ ஆரம்பித்தார்.
அச்சமயம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அவர் ஆரம்பித்திருந்த சுதந்திர இந்தியப் படையில் (=ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) சேர்ந்து பணி புரிந்தார். தன்னுடைய சொந்தப் பெயரான ஸைஃபுத்தீன் என்பதை மாற்றி, நிஸாமுத்தீன் என வைத்துக் கொண்டார் – பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.
சில வருடக் களப் பணிகளுக்குப் பிறகு, நேதாஜி அவர்களினால் கண்டுகொள்ளப் பட்டு (அவர் அதிகனத் துப்பாக்கிளை அனாயாசமாக உபயோகிக்கும் திறமைவாய்ந்தவராக இருந்ததினாலும், அவருடைய சாதுரியம் மிக்க மோட்டார்வண்டி ஓட்டும் திறமையினாலும்), அவருடைய மெய்க்காப்பாளர் படையில் சுமார் பத்து வருடங்கள் பணிபுரிந்தார். அச்சமயம் அவர் ஒரு கர்னல்.
சிலசமயம், அவருக்கான பிரத்தியேக ஓட்டுனராகவும் பணி புரிந்திருக்கிறார். நேதாஜி அவர்களுடன் பல தேசங்களுக்கும், சென்றிருக்கிறார். பல நீர்மூழ்கிக்கப்பற் பயணங்களும் இவற்றில் அடங்கும்.
இரண்டாம் ‘உலகப்’ போரின் போது சுதந்திர இந்தியப் படையில் சேர்ந்து ஜப்பானியர்களுடன் கூட்டணி அமைத்து ப்ரிட்டிஷ்இந்தியப் படைகளுடன் போரிட நேர்ந்தபோது ஏகப்பட்ட குழப்பங்கள். சிதறடிக்கப் பட்ட சுதந்திர இந்தியப் படைவீரர்களில் ஒருவரான நிஸாமுத்தீன் ரங்கூன் நகரில் தங்கி, அங்கு ஒரு பர்மியப் பெண்ணை மணமும் செய்து கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார்.
1950 வாக்கில் மறுபடியும் எப்படியாவது நேதாஜியைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று கொல்கத்தா சென்றாலும் அவரைப் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காததால், திரும்பி பர்மா சென்றார். பின்னர் ஒருவழியாக 1969ல் பர்மாவை விட்டுவிட்டு மனைவியுடன் இந்தியாவில் தன்னூர் சென்று வாழ ஆரம்பித்தார்.
அவருக்கு ஒரு விதமான தியாகி பட்டமோ, ஓய்வூதியமோ, அங்கீகரிப்போ இல்லாமல் கஷ்டஜீவனத்தில் வாழ் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்திருக்கிறார். (இச்சமயம், எனக்கு நம்முடைய மகத்தான சி. சு. செல்லப்பா அவர்கள் நினைவுக்கு வருகிறார்! எப்படிப்பட்ட மனிதர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்! நாம் மெய்யாலுமே பாக்கியசாலிகள்தாம்!)
தற்போது தன்னுடைய 100 வயதைக் கடந்த மனைவியுடனும், இளம் மகன் அக்ரம் உடனும், ஆஸம்கட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமமான தக்வாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏழ்மையும், கிடந்து உழலும் வாழ்க்கையுமாகத்தான் கழிந்து கொண்டிருந்தது அவர் காலம். அதாவது சென்ற 2013 வருடம் வரை.
-0-0-0-0-0-0-
நிஸாமுத்தீன் அவர்கள், தன்னுடைய இறந்த மகன் ஒருவரின் பெண்ணுக்குத் ( நிஸாமுத்தின் அவர்களின் பேத்தி – ஸோமெய்யா) திருமணம் செய்ய நிச்சயித்தாலும், சடங்குகளை நடத்த பணமோ, ஆள் பலமோ இல்லாமல் – வேறு வழியே இல்லாமல் 2013-ல், வாராணசி சார்ந்த முஸ்லீம் பெண்களுக்கு உதவி செய்துவந்த ஒரு தொண்டு நிறுவனத்திடம் (முஸ்லீம் மஹிலா ஃபௌன்டேஷன்) உதவி கேட்டிருக்கிறார். நஸ்னீன் அன்ஸாரி (அந்த நிறுவனத்தின் தலைவி) அவர் பங்குக்கு எங்கெல்லாமோ முட்டி மோதிச் சலித்துப் போயிருக்கிறார். தேவையான நிதி கிடைக்கவில்லை; பேத்தியின் திருமண நாளோ நெருங்கிக் கொண்டிருந்தது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக் ஸங் அமைப்புகளுக்கு – குறிப்பாக முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்ச் (தேசிய முஸ்லீம் கூட்டமைப்பு) சார்ந்த இந்த்ரேஷ் ஸிங் (இவர் ஒரு பிரச்சாரகர்) அவர்களுக்கு இந்தக் கேவலமான பரிதாபம் தெரியவந்து – அவர் தன்னுடைய அமைப்பில் இது பற்றிப் பேசி அக்டோபர் மாதவாக்கில் – இந்தத் திருமணத்துக்கு உதவி செய்வதாக முடிவு செய்கிறார்கள். முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பாளர்களில் ஒருவரான மஹிரஜ்த்வஜ் ஸிங் அவர்களும், ஆர்எஸ்எஸ் சார்ந்த க்ருஷ்ணமோஹன் அவர்களும் – நிஸாமுத்தீன் அவர்களின் வீட்டிற்குச் செய்து உதவுவதாகத் தெரிவித்து, அவர் அனுமதி பெற்று திருமணத்துக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் செய்திருக்கிறார்கள்.
இன்னொன்றையும் இதற்கு முன்னமே செய்தார்கள் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர். நிஸாமுத்தீன் அவர்களிடம் இருந்த ஆவணங்கள் சரியாக இல்லாமல் இருந்ததால் அவருக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குக் கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் கிட்டவில்லை. இந்த விஷயத்திலும் அவர்கள் அஸாம்கட் மாவட்ட இளம் கலெக்டரிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டுசென்று அவருக்கு ஓய்வூதியமும் கிடைக்கச் செய்திருக்கின்றனர். ஜனவரி 2013 வாக்கில் – இந்த திருமணப் பிரச்சினைக்கு முன்னரே இதனைச் செய்திருக்கின்றனர்.
அவர்கள் உதவி செய்ததற்கு – நிஸாமுத்தீன் அவர்களின் மதம் காரணமல்ல – அவருடைய தேசபக்தியும் சேவையும் தான். இவரால் அடுத்த தேர்தலில் உதவி செய்யப்படலாம், சிறுபான்மை ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்கிற எண்ணத்தினால் அல்ல.
-0-0-0-0-0-0-
இந்தப் பின்புலத்தில் – நிஸாமுத்தீன் அவர்களை, சென்றவாரம் ஒரு வாராணசி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பாஜக அழைத்தது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. இந்தப் பெரியவரை ‘நன்றி நவில’ வைத்துவிடப் போகிறார்களோ, நெளிய வைத்துவிடப் போகிறார்களோ என்று…
ஆனால், மிகவும் சந்தோஷப் படவைக்கும் வகையில் அவரை அழைத்து, மேடையில் மரியாதை மட்டுமே செய்தார்கள் – அந்த பாஜகவினர்! (இதே திமுக கூட்டமாக இருந்திருந்தால் – இந்தப் பெரியவரை ரெண்டு சாத்து சாத்தி – கருணாநிதி கால்களில் விழ வைத்திருப்பார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்)
ஆயிரம் பொய்ச் பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும், அடிப்படைகளில்லா அவதூறுகள் வாரியிறைக்கப்பட்டாலும், இடதுசாரி அறிவுஜீவிகள் + தொழில்முறை அவ நம்பிக்கைவாதிகள் கூட்டணி அமைத்து அயோக்கியத்தனங்கள் செய்துகொண்டிருந்தாலும் — — இந்த தேசத்திற்கு, நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறதுதான்… அடிப்படை மானுட விழுமியங்கள் தழைத்துக் கொண்டிருக்கின்றனதான்…

நிஸாமுத்தீன் அவர்களும் அவருடைய பர்மா தேசத்திய மனைவியும் – பாஜகவின் ஒரு வாராணசி தேர்தல் கூட்டத்தில் பங்கு பெற்ற காட்சி.
குறிப்பு: நிஸாமுத்தீன் அவர்களுக்குச் செய்யப்பட்ட ‘காதும் காதும் வைத்தாற்போல’ கொடுக்கப்பட்ட இந்த உதவியானது, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்பட்டது; இச்செய்தியை விரித்து ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது பாரதீய ஜனதா கட்சியோ ஒரு எழவு பரப்புரையும் செய்யவில்லை, அரசியல் ஆதாயம், பரபரப்பு, புகழ் எதையும் அடையவில்லை என்பதையும் இங்கு அவசியம் குறிப்பிடவேண்டும்; எனக்குத் தெரிந்து – இந்த வேலையை நான் தான் செய்திருக்கிறேன்.
இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும்: எனக்குத் தெரிந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்துள்ள பல சேவைகள் – ஸுனாமி பேரிடர் சமயம் செய்த மகாமகோ சுயஅர்ப்பணிப்பு மிக்க பணிகள் உட்பட – எதுவும் பரவலாக வெளியே தெரிவதேயில்லை; ஆனால், அதன் நடவடிக்கைகளில் ஏதானும் ஒரு பிறழ்வு இருந்தால், இந்த அற்ப ஊடகங்களுக்கு அது வெல்லக் கட்டிதான்! அதை மட்டுமே எடுத்துத் திரித்துக் கும்மாளம் அடிப்பார்கள்! வாழ்க!
May 11, 2014 at 22:24
அல்ஹம்துலில்லாஹ்! ஹிந்துஸ்தானத்தின் மிகப்பழைய பெருமை வாய்ந்த ஃபவுஜி நிஸாமுத்தீன் சாஹேப் அவர்களுக்கு வணக்கங்கள்.
ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி முஸல்மாணிய டோபி அணியாததை கூரை மீது ஏறிக் கூவும் குளுவான்கள் கர்னல் நிஸாமுத்தீன் சாஹேப் அவர்களுக்கு ப்ரணாமம் செய்ததைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.
हम बोलेंगे तो बोलेगा ये बोल्ता है .
फिर भी हम बोलेंके .
அஸாம்கட் —
நீங்கள் சொல்ல வருவது आज़मगढ़ தானே ராம்
ம்………….கவ்ஸர் பீ என்ற பெயரை நூறு தடவை குசர் பீ என்று வாசித்தால் கலங்கித் தான் போகும்.
சுனாமியின் போது என்ன…… மதறாஸ் ரயில்வே ஸ்டேஷனில் பம் ப்ளாஸ்ட் ஆனபோது அங்கு முதலில் சேவைக்குத் தென்பட்டவர்கள் காக்கி டவுசர் என்று பகடி செய்யப்படும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களே. மீடியா குண்டர்கள் இவர்கள் செய்யும் சேவையில் நொட்டை வேண்டுமானால் சொல்வர்.
—->>> அன்புள்ள க்ருஷ்ணகுமார் – என் தவற்றினைத் திருத்தியதற்கு நன்றி. பூவண்ணன் அவர்களின் குதறல்களை இதற்கு என்னால் சாக்கு சொல்லமுடியாது. :-(
எனக்கு என்ஹெச்எம் எழுதுவான் வைத்து (வின்டோஸ் எக்ஸ்பி மேல்) எழுதித்தான் பழக்கம். சில நாட்களாக இந்த என்ஹெச்எம்- உடன் பெரிய பிரச்சினை – வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஆக லீனக்ஸ் மேல் ஈமேக்ஸ் எழுதுவானோடு அல்லாடிக் கொண்டிருக்கிறேன். இதில் ஒரே எழுத்துருப் (ஃபான்ட், கேரக்டர் ஸெட்) பிரச்சினைகள். இந்த தொழில் நுட்பப் பிரச்சினைகளை ஒழிப்பதா அல்லது பதிவு இடுவதா – எது முக்கியம் என யோசித்து பின்னர் ஜிமெய்ல் வழியாகத் தட்டச்சு செய்தேன். பழக்கமற்ற காரணத்தால் பல குளறுபடிகள். ஆஸம்கட் மாவட்டத்தை அஸாம்கட் எனப் பிளந்ததும், அதனை ஆஜம்கட் என எழுதாதிருப்பதும் என் தவறுகளே. எனக்கு ஆஸம்கட் என எழுதுவது சரியெனத் தோன்றுகிறது. திருத்தி விடுகிறேன்.
நன்றி.
__ரா.
May 12, 2014 at 20:40
அன்பின் ராம்
இரு விதமான எழுது முறையும் எனக்கு ஏற்புடையதே.
சரியான தமிழிலக்கணப்படி அதிகப்படி க்ரந்த எழுத்துக்களை விடுத்து எழுதுவது.
இது கசடறத் தமிழ் கற்றவர்களால் தமிழன்பின் பாற்பட்டு எழுதும் முறை.
கூடுமானவரை சரியான உச்சரிப்பை க்ரந்த எழுத்துக்களையும் சேர்த்து எழுதும் முறை.
தாங்கள் கையாளுவது இம்முறை என்பது என் புரிதல்.
ஆஜம்கட் என்பதை விட ஆஸம்கட் சரியே என்றே என் புரிதல்.
நான் தமிழில் தொடர்ந்து வாசித்து வருவதில் முறையான உச்சரிப்பை மிகுந்த கவனத்தோடு பகிர்பவை தங்கள் வ்யாசங்கள். Hats off for that ram.
பல ஹிந்தி உர்தூ சொற்களை எண்ணிறந்த முறை தொடர்ந்து கேழ்ப்பதால் மாறுபாடான உச்சரிப்பு ச்ருதி பேதமாகத் தெரிகிறது. நீங்கள் சொல்லும் தொழில் நுட்ப சமாசாரங்கள் – Font – விடுத்து எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவை. முதலில் நான் பராஹா உபயோகித்திருக்கிறேன். இப்போது உபயோகிப்பது அழகி.
I just plan to write many things. You on an average write one article every alternate day. The articles are penned with verified – well verified – inputs. agains hats off for that.
பூவண்ணன் சார் அவசர அடியில் தமிழ் எழுதுவதால் தவறு நேருகிறது என்பது என் புரிதல். எப்படியும் பத்து பதினைந்து வருஷம் உத்தரபாரதத்தில் சர்வீஸ் செய்திருப்பார் என நம்புகிறேன். அபூர்வமாக அவர் கருத்துக்களுடன் என் கருத்துக்கள் ஒத்துப்போவதும் உண்டு. Of all the people whose opinions differs from that of mine, I read with care, the opinion of Sh.Poovannan. Leaving besides his belief in bla bla urls and pronounced bias for dravidian and against right — I admire his — out of the heart writings. என்ன அவருக்கு ஹாஸ்யம் கொறச்சல். எனக்கு கொஞ்சம் கூட என நினைக்கிறேன். thats it.
எக்ஸிட் போல்கள் சற்றேறக்குறைய ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களின் என் டி ஏ கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. Sometimes, these could be media hype too. lemme wait for may 16 and hope for the best. முருகனருளால் ஜெயலலிதா அம்மணி போன்றோரின் உபகாரமில்லாமல் நரேந்த்ரபாய் சர்க்கார் அமைக்க வேண்டும்.
May 11, 2014 at 22:34
ஆர்.எஸ்.எஸ். அடிப்படையில் சுயசிந்தனையற்ற ஜந்துகளால் ஆனது. (ஆதாரம் ஒருகாலத்தில் இந்த இயக்கத்தில் இருந்தவரான ஜெயமோகன் என்பது நினைவிருக்கும்) பொதுவாக அந்த ஜந்துகள் அரை நிஜார் அணிந்து வாயில் நுரை தள்ள ‘பாரத் மாதா கி ஜெய்!’ என்று கத்த வைக்கப்படுகின்றன. எந்திரன் படத்தில் வரிசை கட்டி நின்று ரஜினி உத்தரவிட்டதும் தலையைக் கிறுகிறுவென்று சுற்றும் ரோபாட்கள் போல. சுனாமி போல அபூர்வமாக எப்போதாவது இந்த ரோபாட்கள் பேரிடர் நிவாரணத்துக்கும் அனுப்பப்படுகின்றன.
ரோபாட்கள் பேரிடர் மேலான்மைப் பணியில் ஈடுபடுத்துப்படுவது உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதானே!
—>>> அய்யா சரவணன், என்னை உசுப்பேற்ற முயல்கிறீர்கள். நன்றி. ஏனெனில் நீங்கள் எழுதுவதன் பின்புலத்தில் ஏதாவது சிந்தனை, ஆக்கபூர்வமான உரையாடல், இயக்கங்களை மேலெடுத்துச் செல்லும் விழைவுகள் இருந்தேயாகவேண்டும் என நான் இனிமேலிருந்து எதிர்பார்க்கவே போவதில்லை. சும்மனாச்சிக்கும் போகிறபோக்கில் கல் எறிகிறீர்கள், பின்னர் சாவதானம், சாவதானம் என அறிவுரை கொடுக்கிறீர்கள்.
ஆக, எனக்கும் அலுப்பும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்கிறேன். வயதாகிக் கொண்டிருக்கிறது அல்லவா? வேனிற்காலம் வேறு. மீண்டும் நன்றி.
__ராமசாமி.
May 12, 2014 at 21:16
// ஆர்.எஸ்.எஸ். அடிப்படையில் சுயசிந்தனையற்ற ஜந்துகளால் ஆனது. (ஆதாரம் ஒருகாலத்தில் இந்த இயக்கத்தில் இருந்தவரான ஜெயமோகன் என்பது நினைவிருக்கும்) //
ஜெயமோகன் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்ததால் அது ”சுயசிந்தனையற்ற ஜந்துக்களால் ஆனது” என்ற பெருவெடிப்புக்கொள்கை/சார்புக்கொள்கை-க்கு இணையான மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ள நமது நூற்றாண்டின் – ஏன் – ஆயிரமாண்டின் மாபெரும் சிந்தனையாளர் (சுய – என்பது உட்கிடக்கை) – தமிழகத்தின் / இந்தியாவின் தவப்புதல்வன் சரவணன் அவர்களுக்கு ஒரு நோபல் பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏல் !!!
May 12, 2014 at 07:50
கோட்சே என்னும் கொடியவனால் காந்தி சுடப்பட்டார் என்றுதான் எங்களுக்கு அறுபதுகளில் பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். திரு சரவணன் அவர்களும் அந்தப் பள்ளி மாணவர்தானே.
பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்பவர்கள் எந்திரங்கள் என்றால் கடவுள் பேரைக் கத்திக் கொண்டே தானும் இறந்து அப்பாவி உயிர்களையும் கொண்டு போகிறானே அவன் என்ன சுய சிந்தனை உள்ளவனா ?
May 12, 2014 at 09:41
RSS fully believes in the progress of every Indian. under only one condition they should be a Pure Indian in every aspect.Vandhe Mathram..Jai Hind.
May 12, 2014 at 11:40
ஒரு சுயம் சேவகனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன். பாரத தாயை வணங்குகிரேன்! தொடர்க உங்கள் எழுத்துப்பணி ஐயா! நன்றி. வந்தே மாதரம்!
May 12, 2014 at 11:57
நன்றி கணேஷ்மூர்த்தி அவர்களே – உங்களுடன் எனக்கு அறிமுகமில்லை என நினைக்கிறேன். ஆனால், நீங்கள், நான் மதிக்கும் ஒரு அமைப்பின் அங்கத்தினர் என்பதால் உங்கள் நட்பையும் விழைகிறேன்/போற்றுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான பணிகள் தொடரவும் வாழ்த்துகள்.
ஓம் வந்தேமாதரம்.