சிஷ்டி அவர்கள் ஒரு சூரத் நகர இளைஞர் – மத நல்லிணக்கத்துக்கும், இந்தியகுஜராத்தி முஸ்லீம்களின் மேன்மைக்கும் பாடுபடும் மதத் தலைவர். ஆனால் இவர், ஒரு சாதாரண, படிப்பறிவற்ற, மற்ற நம்பிக்கைகளின் மீது வெறுப்பைக் கக்கும் தொழில்முறை மதத்தலைவர் அல்லர். வெறுப்பை மூலதனமாக வைத்துப் பணத்தையும் புகழையும் அடைய நினைப்பவர் அல்லர்.
உலகளாவிய அளவில், இஸ்லாமை நம்புபவர்களை, அவர் கண்டுகொண்ட ஸூஃபி முறை ஞானமார்க்கத்தில் வழி நடத்துபவர். ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு படைத்தவர். சூரத்தின் அதோதராவில் உள்ள தர்காஹ் ஷாரிஃப்-ன் கடினஷின் (=தலைமை உபாசகர்); உம்மா அகிலம் எனும் தொலைக்காட்சி அலை வரிசையை நடத்துபவர். (இந்த அலை வரிசையைப் பற்றிச் சில செய்திகள் அந்தக் கேடுகெட்ட விக்கிபிடியாவில் இருக்கின்றன; வேறு வழியேயில்லாமல், சோம்பேறித்தனமாக இந்தச் சுட்டியைக் கொடுக்கிறேன்; தொலைக்காட்சிக்கும் எனக்கும் வெகுதூரம்)
எச்சரிக்கை: இவர் மோதியின் நண்பர். அவருடைய அரசியல் ஆதரவாளரும்கூட.
இவரும் மாய்ந்து மாய்ந்து மோதிக்கு எதிராக, இந்தியாவின் பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப் படும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், பாவம். Read the rest of this entry »
குணோத்ஸவ்: மோதி-யின் அழகான கல்வித் திட்டங்களில் ஒன்று – சில குறிப்புகள், தமிழகத்தைக் குறித்த வருத்தங்கள்
April 13, 2014
குணோத்ஸவ் = தரத்தைக் கொண்டாடுதல்!
முன்குறிப்பு:
நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு 1) குஜராத் போகவில்லை (போய்ச் சில வருடங்கள் அங்கு தங்குவதாக, சுற்றுவதாகச் சில திட்டங்கள் இருந்தாலும், அடுத்த ஏழு வருடங்களுக்கு நிச்சயமாக அவற்றைச் செயல் படுத்த முடியாது), 2) ‘கூக்ள் தேடி’ மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு இணையத்தையும் ஒற்றியெடுக்கவில்லை (ஏனெனில், எனக்கு திடீரெக்ஸ் காப்பியடித்து ஞானவானாகக் காண்பித்துக்கொள்ளும் முனைப்பும், முக்கியமாக வயதும் இல்லை)
ஆனால், நான் இக்காலங்களில் ஒரு சாதாரண கிராமப்புறப் பள்ளி ஆசிரியன். கல்வியைப் பற்றி, அதன் தமிழக நிலையைப் பற்றி மிகக் கவலைப் படுபவன். நம் இழி நிலையைச் சரிசெய்வதில் இருக்கும் மகாமகோ இடர்களை (ஒரு மண்புழுவினைய பார்வையில்) உணர்ந்து புழுக்கத்தில் இருப்பவன். சில சமயம் – யோசிக்கும் தருணங்களில், வரப்போகும் 10 -20 ஆண்டுகளில் எப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களை எதற்காக வார்த்தெடுக்கப் போகிறோம் என்று யோசித்து, நொந்துபோய்அடிவயிற்றில் கலவர உணர்ச்சியோடு இருப்பவன்… ஆக, இப்புழுக்கங்களுக்கு எதிராக, பல சமயங்களில் வெறியுடனும் சில சமயங்களில் மகாமகோ அயர்வுடனும் பணியாற்ற (mostly like a headless chicken) முயன்று கொண்டிருப்பவன். பலமுறை கேவலமாகத் தோற்றுக் கொண்டும், சிலதருணங்களில் மட்டும் (ஆசுவாசமளிக்கும் வகையில்) சில சிறு சிடுக்கவிழ்த்தல்களுக்காக, அற்பத்தனமாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டும். :-( Read the rest of this entry »
நரேந்த்ர மோதி-யின் மேல் புழுதியை வாரியிறைப்பது ரொம்ப லேசு!
April 12, 2014
தேர்தல் ஜனநாயகம் ஒட்டு உணர்ச்சிகரப் புல்லரிப்பு என்றால், பொதுவாகவே குடிமையுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் படிப்பறிவும் அதிகம் இல்லாத நம் நாட்டில் – பல நடைமுறை ரோதனைகள் இருப்பது சகஜமான விஷயமே! மேடைப்பேச்சுகள், வெறும் ஏச்சுகளாக மட்டுமே இருப்பதும், கருத்துவேற்றுமைகள் அடிஉதை சண்டைகளாக மாறுவதும் நடந்துகொண்டிருப்பவைதான்…
ஆனால் இந்த மோதி எதிர்ப்பு விவகாரத்தில்தான்- எனக்குத் தெரிந்து, உரையாடல்கள் மிக மிகக் கீழ்த்தரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன… கண்டமேனிக்கும் கோமாளித்தனமான குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த கருத்துலகக் கபோதிகள்.
மோடி என்றால் மோடிமஸ்தான், பில்லிசூனியம் வைப்பாரென்பார்கள்; மோதி என்றால் மோதி விடுவார், ஜாக்கிரதை என்று அலறுவார்கள். மோதி இந்தப் பக்கம் வந்தால், ஏன் அந்தப் பக்கம் போகவில்லையென்பார்கள். அந்தப் பக்கம் போனால் – இந்தப் பக்கத்துக்கு ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று பிலாக்கணம் வைப்பார்கள்! Read the rest of this entry »
Dravidian Disclessia… proudly marching on to Dicklessia!
April 11, 2014
The first part of this offending two-part series is at: Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)
In the previous post, it was kind of ‘proved’ that the dastardly & Dyslexic Dravidian Leadership has plunged our dear Tamilnadu into a veritable educational and educative stellar mess.
But moronicities have a momentum of their own – they don’t just stop; they don’t just say enough & exit. They follow a delectable downward spiral. Therefore… this is the second & final part of my illustrious thesis — ‘Subaltern Studies in Dravidian Regress!’™ ;-)
And so.
-0-0-0-0-0-0-0-
Then came Disclessia! Aha!
disklessia \disk*les”i*a\ (d[i^]sk*l[e^]ss”[-e]*[.a]) n.
Any of the various backbone disorders caused by a damaged or a congenitally faulty structure, in a person claiming descent from the Dravidian idea, that constitutes a set of impaired discs, and causing an impairment of the ability to be bold, forthright or to be brave or to be just; to have a propensity to kowtow to perceived authorities; to randomly ingratiate oneself with the powers that be.
Usually, we human beings take pride in the fact that we have a functional Spine or a Backbone, if you will; what we call a backbone consists of a stacking of vertebral bones between which, there are discs, to provide the functionality of a bearing. Sometimes, there would be some malfunction involving the discs, and this impairs the proper functioning of the backbone. However, in the case of the effete Dravidian leadership, these discs are entirely missing because of which – it lacks a functioning spine. Dravidian leadership is Spineless, period. Read the rest of this entry »
Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)
April 9, 2014
Foreword: ummm… if you HAD to listen to an old, depleted guy for TWO whole BLOODY hours, extolling the virtues of LEMURIA and the virtuousness of DRAVIDAM ad nauseam, repeating that, Tamilnadu is where it is – all developed, progressive and beautiful – only because of the Dravidian movement and on and on and on…. even an otherwise sane(!) person like me would become an extremely ill-puttogether polemicist, even by my very own bloody standards!
Well, that’s what has happened to me, atleast. And, the fact that this old man is actually well read otherwise and scholarly and is sane, is all the more galling!
Yes. I am of the firm & considered opinion and conviction that, Tamilnadu is where it is now – not BECAUSE of the Dravidian movement – but, IN SPITE of the Dravidian movement. Got it, old man? It is in, whatever that is left of its basic genius, that the Tamil people have gotten some sustenance from, and not from some thieving, idiocy propagating mobs, got it?
Warning: Dear reader of this post, If you seriously believe that the idea of Dravidianism has done any good to my dear Tamilnadu, you should not proceed any further; reading this post would be dangerous to your health. Go back to the hell-hole from which you surfaced for Oxygen. This is PG45 stuff, and is not meant for Twitter trolling adolescents. Period.
Okay. You have been warned enough; read on the rest of the post, if you must; but, don’t squeal rather pathetically, later — got it? Read the rest of this entry »
மோதி, சர்வாதிகாரம், ஹிட்லர்: சில குறிப்புகள்
April 7, 2014
தொழில்முறை மோதி வெறுப்பாளர்கள், பொதுவாக — கோத்ரா, 2002, பிணக்குவியல் வகையறா ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மானாவாரியாக வீசியடித்துக் கைவலிக்க ஆரம்பித்தவுடன் — கிளிப்பிள்ளை போல மறுபடியும், மறுபடியும் சொல்வதெல்லாம், அவர் ஒரு சர்வாதிகாரி; மோடி, ஹிட்லரின் ஒரு இந்திய நகல், கோயபல்ஸ்-ஸனைத்த பரப்புரைவாதி, மோதி உட்கட்சி ஜனநாயகத்தை நசுக்குபவர் எனப் பல நைந்துபோன க்லீஷேக்களைத்தான்.
இப்படிப் பேசுபவர்களில் பெரும்பாலோருக்கு கீழ்கண்டவை போன்ற சில அடிப்படை விஷயங்கள் தெரிவதேயில்லை; இத்தனைக்கும், ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் தான், நான் கொடுத்திருக்கிறேன்.
- அதிகாரம் என்றால் என்ன, அவற்றின் பண்புகள், பின்புலச் சூழல்கள் யாவை;
- சர்வாதிகாரம் என்றால் என்ன – அதன் பண்புகள், நடைமுறைகள், ஜனநாயகத்துடன் அதன் உறவுகள் யாவை; இது தொடர்பான வரலாற்றுச் சாட்சியங்கள் யாவை.
- ஹிட்லர் பிரதிநிதித்துவப் படுத்துவது எதனை, எந்த சமூகக் கூறுகள் ஹிட்லரை ஒரு மகாமகோ தலைவராக்கின, பொதுப்புத்திக்கும் ஹிட்லரின் திட்டவட்டமான நடவடிக்கைகளுக்கும் இருந்த உறவுகள் என்ன; கத்தோலிக்கத் திருச்சபைக்கும், ஸ்டாலின் (இவர் நம்முடைய செல்ல இசுடாலிர் அல்லர்) போன்ற கம்யூனிஸத் தலைவர்களுக்கும் ஹிட்லரை அதிகாரமயமாக்கியமையில் பங்கு என்ன.
- ஏன் கீபல்ஸ், கோயபல்ஸ் அல்லர் – கீபல்ஸ் ஒரு வரலாற்று விபத்தா, அல்லது கீபல்ஸ்கள் முன்னமே இருந்திருக்கின்றனரா? இப்போதும் இந்தியாவில் கீபல்ஸ்கள் இருக்கிறார்கள் என்றால் யார் அப்படி? எந்த ஊடகங்கள் இப்படிக் கேவலமாக பரப்புரை (propaganda) செய்கின்றன?
- ஏன் மோதி, ஒரு மோடி அல்லர், மோதி பிரதி நிதித்துவப் படுத்துவது எதனை; இந்திய கீபல்ஸ்கள் ஏன் மோதியைத் தாக்குகிறார்கள்… … …
அடிப்படையில் ஒரு சாதாரண உச்சரிப்பைக் கூடக் கற்றுக் கொள்ளமுடியாத சோம்பேறிக் குளுவான்கள், ஒரு எழவு மூளை உபயோகிப்போ, செறிவுபெற்ற வாழ்க்கை அனுபவங்களுமோ இல்லாதவர்கள், படிப்பறிவு என்றால் லிட்டர் எத்தனை தூரம் என்று கேட்பவர்களெல்லாம், சமூக முன்னேற்றத்துக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் பேசிப்பேசியே, எழுதிஎழுதியே உளறிக் கொட்டுபவர்களெல்லாம் — கனம் வாய்ந்த கந்தறகோளக் கேள்விகளைக் கேட்பதும், மோதி ஒரு வெறியன் என்று சொல்வதும், இந்திய நிதர்சனத்துடன் தொடர்பேயற்ற ஸெக்யுலர்வாதிகளாக மினுக்கிக்கொண்டு உலாவருவதும்… அய்யோ, கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், இப்போக்குகள், படுபயங்கர பீதியளிக்கும் கொடூர கடகடா குடுகுடு வீரப்பா சிரிப்பை மட்டுமே வரவழைக்கின்றன. வேறென்ன சொல்ல. Read the rest of this entry »
மோதி, நிர்வாகத் திறமை: சில குறிப்புகள்
April 5, 2014
சில நாட்கள் முன்பு, குஜராத் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருடன் (தனித்தனியாக), குஜராத்தின் குணோத்ஸவ் திட்ட விவரங்கள் விஷயமாக அளவளாவிக் கொண்டிருந்தேன். இவர்களைப் பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இவர்கள் நேரடியாக மோதி அவர்களின் கீழ் (முதல் அடுக்கு அல்ல – ஒரு தட்டு கீழே) பணிபுரிந்துகொண்டிருக்கும் மூத்த, நேர்மையாள அதிகாரிகள்; கூழைக் கும்பிடு போடுபவர்களோ, சமயம் வாய்த்தபோதெல்லாம் அடித்துப்பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று அசடும் கயமையும் வழிய ‘பூச்செண்டு’ கொடுப்பவர்களும் அல்லர். நல்ல பரவலான படிப்பும், செறிவான அனுபவங்களும், செயலூக்கமும் உடையவர்கள். நான் மதிப்பவர்கள்.
பேச்சு மெதுவாக நிர்வாகம் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது; நாங்கள், பொதுவாக, அதிகார வர்க்கம் எப்படி நிர்வாகத்தை அணுகும், அதன் பயிற்சி முறை அதனை எப்படிச் செயல்பட ஊக்குவிக்கும், அதற்கும் அரசியல்/அரசு தலைமைக்கும் இருக்கும் உறவுகள், நடைமுறை எதார்த்தங்கள் எப்படிப்பட்டவை, வளர்ச்சிப் பாதைகளின் ஊக்குவிப்பான்கள் & அடைப்பான்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதின் அங்கங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தோம் – இந்தப் பின்புலத்தில் மோதி அவர்களின் நிர்வாகம் குறித்த பார்வைகளையும் கொஞ்சம் விவாதித்தோம்.
இந்த அளவளாவல்களிலிருந்தும், என் அனுபவங்களிலிருந்தும் சில குறிப்புகள்: Read the rest of this entry »
தமிழ்நாடு vs குஜராத் வளர்ச்சி ‘மாடெல்’, மோதி… …: சில தன்னிலை விளக்கங்கள், குறிப்புகள்
March 31, 2014
… இதெல்லாம் தேவையா என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)
உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் – உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …
சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.
இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.
“மோதி-யின் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்ததில் நாங்கள் பார்த்ததெல்லாம் ரோட்டோர ஒண்ணுக்கடிப்பாளர்களைத்தான்!”
March 29, 2014
:-) உண்மைதான்! இப்படிப்பட்ட பார்வையுடனும் சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு அரைசியல் (கவனிக்கவும், அரசியல் அல்ல) சுற்றுலா போகிறவர்கள், கருத்துதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்!
-0-0-0-0-0-0-0-
நான் குஜராத்தில் (தொழில் ரீதியாக) பயணம் செய்திருக்கிறேன் என்றாலும், நரேந்த்ர மோதி ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு செல்லவில்லை. கட்ச் பகுதியில் பணி செய்துகொண்டிருக்கும் பிஹாரி நண்பர் கடந்த 11 வருடங்களாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார் – பல காரணங்களால் அங்கு செல்லவே முடிவதில்லை. இர்மா (IRMA) கல்விசாலையிருக்கும் ஆனந்துக்கும் போயிருக்கவேண்டும், போகவில்லை. ஐஐஎம் பேராசிரியரான அனில்குப்தா அவர்களைப் பார்த்துப் பேசவேண்டுமென பல பத்தாண்டுகளாகத் திட்டம். ஹ்ம்ம்ம்.
ஆனால், என் வயதையொத்த (=மிக்க அனுபவமுடைய), நான் மிகவும் மதிக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை (குஜராத் கேடர்) தனிப்பட்ட முறையில் அறிவேன் – இவர்களுடைய அடிப்படை உற்சாகத்தையும், நேர்மையையும், படிப்பறிவையும் செயலூக்கத்தையும் நிறைய – நேரிடையாகவே தெரிந்துள்ளேன். இவர்களில் இருவருடன் தொடர்பில் உள்ளேன்.
இதைத் தவிர சில குறிப்பிடத்தக்க நண்பர்கள் (தொழில்முறை, ஸூஃபி இசை போன்றவை மூலம் அறிமுகமானவர்கள்) மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். (இவற்றில் ஒரு நண்பர் ஒரு பழுத்த விசுவாசி முஸ்ஸல்மான் என்பதையும் குறிப்பிடுகிறேன்) Read the rest of this entry »
அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்
March 16, 2014
நண்பர் ஒருவர் (=ஆங்கிலோதமிழர் – இவர், தமிழ்வழிக்கல்வி படித்து ஒருகாலத்தில் தமிழனாக இருந்தாலும், எனக்கு ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதுவார்; இப்போதெல்லாம், தமிழில் படிக்க மட்டும்தான் முடியும் இவருக்கு – சுட்டுப்போட்டாலும், திட்டினாலும் தமிழில் ஒரு வரிகூட கோர்வையாக எழுதமுடியாத பரிதாப நிலையிலிருப்பவர்; பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல், அந்த அமெரிக்காவில் (= ‘ஸ்டேட்ஸ்!’) வேறு வசித்துக்கொண்டிருக்கும் கையறு நிலையில் இருப்பவர்; கடந்த சுமார் 25 வருடங்களாக, கொஞ்சம்கூடச் சளைக்கவே சளைக்காமல் ‘கண்டிப்பாக அடுத்த வருடம் இந்தியா திரும்பி வந்து காவிரிக்கரையோரம் வயல்வெளிக்கு நடுவே ஒரு அழகான குடிசையில்’ ஸெட்டில் ஆகிக் கொண்டிருப்பவர்; பாவம்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பலவிதமான தீராப் பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள், ஹ்ம்ம்ம்…) அழகான இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் (என் பதிவைப் படித்துவிட்டு), எழுதியிருக்கிறார்:
“பரீக்ஷா ஞாநி காமாலைக் கண்ணர் அல்லர். அவர் நேர்மையைச் சந்தேகித்தால் காமாலையில்தான் போவாய்! அவர் எழுத்தில் என்ன அப்படித் தவற்றைக் கண்டாய்? Read the rest of this entry »
போங்கடா, நீங்களும் ஒங்களோட அணுசக்தி எதிர்ப்புக் கும்மியும்…
March 14, 2014
(அல்லது) அய்யய்யோ அணுசக்தி! நெஞ்சு பொறுக்குதில்லையே…
நான் மரபுசாரா, மறுசுழற்சி செய்யக்கூடிய எரிபொருள்களினுடைய, தொழில் நுட்பங்களுடைய மகாமகோவிசிறிதான். பல பத்தாண்டுகளுக்கு முன்னால் வீட்டிலேயே தாமிரத் தகடுகளை வைத்து, மெலிதாக ஆக்ஸிடேஷன் செய்து அவற்றை உபயோகப் படுத்தி சூரியசக்தியை மின்சாரமாக (இது, ஏறக்குறைய – பிவி – ஃபோட்டோவால்டாய்க் தொழில்நுட்ப வழிமுறை போலவேதான் – ஆனால் ஸிலிகனை உபயோகிக்கவில்லை) மாற்றி உபயோகித்திருப்பவன். என்னுடைய ஜீப்பினை டீஸலுக்குப் பதிலாக புங்கமரக்கொட்டை எண்ணையை உபயோகித்து வேதியியல் மாற்றம் செய்து (அதற்காக எஞ்சினை மாற்றியமைத்து) கொஞ்ச நாள் ஓட்டி, பல படிப்பினைகள் (=பல குளறுபடிகள், எஞ்சின் கெட்டுப்போதல்கள் + சில ‘வெற்றிகள்’) பெற்றவன். காற்றாடி டர்பைன்களுடன் பரிச்சயம் உள்ளவன். சாணஎரிவாயு தயாரிப்பு செய்து அதில் மோட்டார் வண்டியை ஓட்ட முயன்று மகத்தான தோல்வி கண்டவன்; மனித மலத்தை (=என் மலம்) கம்போஸ்ட் செய்து மட்கவைத்து அதனையும் உபயோகித்து மேல்மாடியில் காய்கறித் தோட்டம் போடுதல், ருடால்ஃப் ஷ்டெய்னர் இலக்கண வழி வேளாண்மை போன்றவைகளை ஓரளவு நன்றாகவே, சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை செய்திருப்பவன். என்னளவில், முடிந்த நேரத்தில், கொஞ்சம் சக்திக்கலன்கள் தொடர்பாக சிறு ஆராய்ச்சிகள்(!) செய்து கொண்டும் வருபவன்; தாறுமாறான எரிபொருள் உபயோகத்தைப் பற்றியும், மின்சாரத்தின் எதிர்காலத்தைப் பற்றியும் ஓரளவுக்குப் பீதி அடைந்திருப்பவன்.
மரபுசார் / மரபுசாரா / மறுசுழற்சி செய்யப்படக்கூடிய / முடியாத மின்சார உற்பத்தியில் முனைப்பும் பயிற்சியும், ஆர்வமும் உள்ள பலரை அறிந்தவன். மேலும், அணுக்கருவுலைகளில் பணிசெய்யும் சில மகத்தான மனிதர்களை நான் நேரிடையாக அறிவேன். ஆனால் நான், இந்தத் துறைகளில் ஓரளவுக்கு படிப்பும், அனுபவமும் உள்ளவன் மட்டுமே – ஆனால் சுயபயிற்சிதான், இவற்றுக்காக முறையாகக் கல்லூரி சென்று மேற்படிப்புப் பயின்றவன் அல்லன்.
எதற்கு மேற்கண்டவற்றை கோடிட்டுக் காட்டி சுயதம்பட்டத்தனத்துடன் (=வழக்கம்போல) எழுதுகிறேன் என்றால்…
… இருந்தாலும், அதே சமயத்தில் நான் அணுசக்தியின் – மிகச் சரியாகச் சொல்லவேண்டுமானால், அணுக்கரு சக்தியின் மீதும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பவன். அதன் தேவையையும் அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மகத்தான ஆராய்ச்சிகளையும்,அந்த ஆராய்ச்சிகளினால் மானுடத்துக்குக் கிடைத்திருக்கும் மகத்தான, அருமையான பயன்களையும் (+பயங்களையும்தான்!) உணர்ந்தவன். Read the rest of this entry »
காங்க்ரெஸ் கட்சியின் ராஹுல் காந்தி அவர்கள், நம்பவே முடியாத பினாத்தல்முதல்வாதத் தீவிரவாதித்தனமாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறார் – காந்திஜியைக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பினரென்று…
இந்தப் போக்கு ஒன்றும் புதிதில்லைதான். பல பத்தாண்டுகளாக இடதுசாரிகளிலிருந்து, சாய்வு நாற்காலிவாதிகள் வரை — இன்னும் கீழ்த்தரத்துக்குப் போனால், அறிவுஜீவிகளிலிருந்து தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் வரை — இன்னமும் தராதரத்தில் அதல பாதாளத்துக்குப் போனால் — பொதுவாகவே காந்தியைக் காந்தியார் என வர்ணித்து அவரைக் காமாந்தகர், ஜாதிவெறியர் என வசை பாடும் அயோக்கிய திராவிடக் கொழுந்துகளும் கூட, திடீரென்று அல்லது அவ்வப்போது காந்தியின் மேல் காரியார்த்தமான அன்புவெறி வந்து – ‘ஆர்எஸ்எஸ் காக்கி டவுசர்கள்’ தான் காந்தியாரைக் கொலை செய்த மகாபாவிகள் எனப் பேசுவதென்பது சாதாரணமாக நடக்கும் விஷ(ய)ம் தான்!
ஆனாலும், தேர்தல் ஜுரவேகத்தில், பாஜக-வை எப்படியாவது வீழ்த்தவேண்டும், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என அலையாய் அலையும் அற்ப அல்லக்கைகளுக்கு, மறுபடியும் மறுபடியும் பழம்பொய்களை மறுசுற்றுக்கு விடுவதில் எவ்வளவு ஆனந்தம் – என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே! Read the rest of this entry »
(அல்லது) ஏன், இந்தியாவைப் பற்றியுமே கூட, பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?
மோதியைப் பற்றிய பொய்ச் செய்திகள், தொடர்ந்து மறுபடியும், மறுபடியும் பரப்பப் படுவதற்கு – இந்த தேங்காய்முதல்வாத ஊடகங்கள் / ஊடகக்காரர்கள்தாம் இதற்கு முழுமுதல் காரணம்.
இந்த உதிரிகளுக்குப் பின்புலத்தில் ‘கொள்கைக் கூட்டணி’ வைத்து அணி திரண்டிருக்கும் தொழில்முறை இடதுசாரி அறிவுஜீவிகளும், மனிதவுரிமைக் காரர்களும், ‘எப்படா அடுத்த போராட்டத்தை நடத்தி தொலைக்காட்சியில் தென்படலாம்’ என போங்காட்டம் ஆடும் போராளிகளும், அரைகுறை தட்டச்சு வீரர்களும், சாய்வு நாற்காலிப் பேரறிஞர்களும் – இன்னொரு காரணம்.
சரி, இந்த தேங்காய்முதல்வாத ஆட்கள் என்பவர்கள் யார்?
கருணாநிதியும் கத்தரிக்காயும்…
March 5, 2014
… இப்படியாகத்தானே, கருணாநிதி அவர்கள் உபயத்தில் கத்தரிக்காய் விளைந்தது… :-)
-0-0-0-0-0-0-
2009 மே மாதம். அச்சமயம் நான், என் குடும்பத்தினருடன் எங்களுடைய நெடுநாள் குடும்ப நண்பன் ஒருவனுடைய வீட்டில் தங்கியிருந்தேன் – இந்த வீடு சேலம் மாவட்டத்தின் மலைப் பிராந்தியங்கள் ஒன்றில் ஒரு குக்கோதிகுக் கிராமத்தில் இருக்கிறது. நண்பனின் அடுத்தவீட்டுக்காரர் சுமார் ஒரு கிமீ தள்ளி. ஆக – அழகும் அமைதியும் உள்ள பிரதேசம். இரவுகளில் மகாமகோ கும்மிருட்டு. நமக்கே கேட்கும் நம் இதயத்தின் துடிப்பு. கொசுவே இல்லை. இனிது இனிது ஏகாந்தமினிதுதான்… (1999 வாக்கில் இவன் அப்பகுதியில் குடியேறினாலும், 2007ல் தான் இவன் வீட்டிற்கு மின்சார இணைப்பே கிடைத்தது என நினைவு)
… விடிகாலையில் ஆரம்பிக்கும் பேச்சு. காலைக்குளிரில் (மேமாதத்திலும் கூட!) அண்மையில் உள்ள சிறு குன்றின்மீது உட்கார்ந்துகொண்டு சூர்யோதயத்துக்காக காத்திருந்து கொண்டு, கட்டங்காப்பி பருகுதல்; பேச்சு; கொஞ்சம் தோட்டவேலை; பேச்சு; பின்புலத்தில் தேர்ந்தேடுத்த ஜாஸ் இசை அல்லது கலாபினி கொம்கலி தரப் பாடகர்கள். விறகு அடுப்பில் எளிமையான ஆனால் மிகச் சுவையான கூட்டுச் சமையல்; துணிதுவைத்தல்; பேச்சு. பாத்திரம் கழுவுதல்; பேச்சு—; பேச்சு. —; பேச்சு… —; பேச்சு… —; பேச்சு… மதியம் சுமார் 3 மணி நேரம் பிடித்த புத்தக வாசிப்பு. மாலையில் நீண்ட நடைபயணம். பின் மறுபடியும் குன்றின் உச்சியிலிருந்து சூர்யாஸ்தமனம் பார்த்தல் (கையில் தேனீர்க் குடுவையுடன்); குளித்துவிட்டு இரவுணவு, சுத்தம் செய்தல். பின்னர் இருகுடும்பத்துக் குழந்தைகளும் போட்டுக்காட்டும் நாடகங்கள், படிக்கும் கவிதைகள், கதைகள் இன்னபிற போன்றவை. ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு நல்ல படம். ஆக ஒரு அந்த்ரெய் தார்கோவ்ஸ்கி / டெப்ரா க்ரானிக் / குரஸாவா அகிரா / ரிச்சர்ட் லின்க்லேடர் / ரித்விக் கடக் / பால் தாமஸ் ஆன்டர்ஸன் / ஆந்த்ரே வய்தா / இங்க்மர் பெர்ன்மன் படம்… பத்துமணிக்கு மேல் நட்சத்திரங்கள், ஆகாஷகங்கை (பால்வழிப் பாதை) தரிசனம். அன்றைய கேல் கதம். Read the rest of this entry »
online social activism for dummies
March 4, 2014
Silly…
It is very easy-peasy to become an activist (of social or anti-social issues) these days. Hallelujah, hallelujah!! All of us wannabe social activists have never had it oh so good!
In fact, this post is about ‘social activism’ that I actually learnt from an illustrious parent of one of my children… believe me! I am telling you the unvarnished truth – and unfortunately, for various reasons this parent (or parents) shall remain unnamed, sorry.
Oh, well.
To help you lazy fellows (I mean you – the unfortunate reader of this oh so very pathetic weblog), I have presented five levels of social activism, after a whole lot of painstaking research and lucubration. And, I sincerely hope that you would profusely thank me and flood my mailbox & the comments area with a zillion thankyou, thankyou kind of mushy notes, oh the hope!
Okay – onto the details of the FIVE levels: Read the rest of this entry »
இதுதாண்டா மாவோயிஸம்! :-(
March 2, 2014
… இன்றோடு நியமத் அன்ஸாரி எனும் சமூகப் ப்ரக்ஞை மிக்க இளைஞர், நக்ஸலைட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன; இந்த இளைஞரை எப்படி நாம் மறக்க முடியும்?
(அல்லது) நக்ஸல்பாரி கூலிப்படை அரைகுறைகள், ஏன் நியமத் அன்ஸாரியைக் கொலை செய்தனர்? (சுமார் 1600 வார்த்தைகளுள்ள நீளப்பதிவு இது. பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் வினவிக்கொள்ளவும்)
ஏனெனில், அவர்களுக்கு — வினவு-தினவு கூச்சல்களுக்கு மேற்பட்டு, முடிந்தால் எதிரிகளாகத் தென்படுவர்களை அழித்தொழிப்பது தான் நீண்டகால பொழுதுபோக்குத் திட்டம் – கட்சித் திட்டமும் கூட.
ஏனெனில் — மாவோயிஸ்டுகள், வாய்கூசாமல் புளுகுவதில் வல்லவர்கள். நாக்கில் நரம்பில்லாமல் அபாண்டங்களை அடுக்கி தங்களுக்கேற்றாற்போல உண்மையை வளைத்து உடைப்பதில் சுயகாரியப் புலிகள்.
ஏனெனில் – அவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாமலிருந்தாலும், அரைகுறைத்தனத்தால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் — அவர்களுக்கு, எதனையும் சும்மனாச்சிக்கும் கேள்வி கேட்டு அதற்குப் பின்புலத்தில் ஒரு ஏகாதிபத்திய, பெருந்தரகுமுதலாளிய, பெருந்தேசிய கற்பனைச் சதித்திட்டத்தைக் காணுவது ஒரு வீரவிளையாட்டு.
ஏனெனில் – பெரும்பாலான நக்ஸல்பாரிகள் ஊழல்களில் திளைப்பவர்கள் – அதை யாராவது தட்டிக் கேட்டால், அவர்கள் தங்கள் சார்பினராகவே இருந்தாலும் கூட அவர்களை துரோகிகளாகக் கருதுபவர்கள். கருதியபின் – அவர்களிடம் செல்ஃபோன் இருக்கிறது ஆகவே அவர்கள் ‘போலீஸிடம் போட்டுக் கொடுப்பவர்கள்’ என, வெகுச் சுலபமாக நிறுவி விடுபவர்கள்.
malcolm gladwell = the capital punishment :-(
February 28, 2014
The Sweeping Generalissimo strikes again! Oh mommeeeee!!! (or) Oh Gladwell, what a sad sickness! (or) there is absolutely NO reprieve, sorry.
The problem with some kinds of popular science writing is that, well, they are written to be popular with the people who want to be popular – which they do by being seen with the book. It is of course, a wince-wince situation. The best-selling author and the ‘best-seller buying readers‘ both enjoy the reflected glories of the symbiotic relationship.
I understand that these kinds of work always aim at the Minimum Common Denominator – the likes of the uncritical, all accepting fans of Oprah Winfrey (the Grand ol’ Ma’am of moralization & mediocrity) and Rahul Gandhi (the Grand Duke of terrible, terrible snafus) & Arvind Kejriwal (the Chief Propagandist of preachy middle-class morality and middle-classy vicarious rabble rousing). But, still…
Yes. This Malcolm veX, reminds me of another of those sweeping theorists who grandly generalize based on exactly one single rather lonely data point or even less, if they could help it.
Yes, you are verrrry corrrrect… immediately, the image of The Jared Diamond floats up, claiming his inherent right to be the Grand Duke of the Great hall of Grandiose theorists – but then, it would be kinda jarring to bring up this rather pricey carbon allotrope, so I choose to desist from dealing with this man… I merely gnash my teeth, for the time being. Oh my GAWD! Read the rest of this entry »
இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
February 23, 2014
… … தமிழகத்தில் ஒன்றுமே சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.
எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (24/n)
நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.
ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.
பதில் கிடைத்ததா? சரி.
கிடைக்கவில்லையா, அதுவும் சரியே.
இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .
ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே சொல்கிறேன்:
சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »
பத்ரியின் விட்டுப்போன கேள்வி: [தமிழ்நாட்டு மாணவர்கள்] கோபமடையவே கூடாதா? (“… Should they not get angry at all?”)
(அல்லது) … தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (23/n)
அய்யா பத்ரி, இளைஞர்கள் / மாணவர்கள் கோபப்படலாம். படவேண்டும்தான். இந்த வயதில் ஒரு தார்மீகக் கோபம் இல்லாதவர்களுக்கு, எப்போதுமே அது வராதுதான். அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான். ஒப்புக் கொள்கிறேன்.
ஆக, அப்படிக் கோபப்படுபவர்களை, உடனடியாக ஏதாவது உருப்படியாக, உபயோககரமாக, ’ஸ்டூடென் ட் ப்ரொடெஸ்ட்’ அல்லாத, பணி செய்ய வேண்டும் என விரும்புபவர்களை – கீழ்க்கண்ட உடலுழைப்பு சார்ந்த பணிகள் செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஒரு பணியைச் செய்யவேண்டும் – நடுவில் விட்டு விட்டு ஓடி வரக்கூடாது. இது ஒரு கேளிக்கை உண்ணாவிரதமல்ல – சும்மனாச்சிக்கும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது போல – என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (இதற்கு தமிழ் நாடு, இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசிடம் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெறவேண்டும்; மேலும் இந்நடவடிக்கைகளால், சிங்களப் பொதுஜனங்களுக்கும் உதவி விளைவது போலத்தான் இருக்கவேண்டும்.)
சரி, தமிழ் நாட்டு மாணவர்கள் என்னதான் செய்யவேண்டும்?
February 20, 2014
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (22/n)
பத்ரி:விஷயங்கள்எல்லை மீறிப் போவதைப் பார்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் என்னதாம்செய்யவேண்டும்? அவர்கள் கோபமடையவே கூடாதா? அவர்கள் நன்றாகப் படித்து, நல்லமதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அவ்வளவுதானா? வேறொன்றுமில்லையா?? (“What should the Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”)
தமிழ் நாட்டு மாணவர்கள் ஈழப் பிரச்னையில் என்ன செய்யவேண்டும் என்றா கேட்கிறீர்கள், பத்ரி? உங்களுக்கு ஆனாலும் நகைச்சுவை உணர்ச்சி அதிகம்தான், போங்கள்!.
என்னைப் பொருத்தவரை – ‘கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா’ எனும் அதி அற்புத அனுபூதிப் பார்வையில் நிறைய எழுதியிருக்கிறேன். (கீழே சில பதிவுகளின் சுட்டிகள்)
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு 19/03/2013
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா 06/04/2013
- ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள் 08/07/2013
- ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு! 06/01/2014
இருந்தாலும்… இப்போது இவர்களில் மிகப்பெரும்பாலோர் உடனடியாக ஒன்றும் (எதற்குமே, ஏன், தங்களுக்கேகூட!) உதவிகரமாகச் செய்யக்கூடிய நிலைமையில் இல்லை என்றாலும், இவர்கள் செய்யக்கூடியவை இவைபோல் இருக்கலாம் எனக் கருதுகிறேன். கிண்டலையும் நகைச்சுவையையும் முற்றிலும் தவிர்க்கிறேன். :-(
நான் கீழே கொடுத்திருக்கும் விஷயங்கள் (உண்மையில் தமிழ் இளைஞனுக்கு, அவன் வாழ்வு வளமையும் செறிவும் பெற என் கோரிக்கைகள் / பரிந்துரைகள்) – சுமார் இருபது வருடமுன்பு, ஒரு இந்திய இளைஞன், எப்படி இந்தியாவையும் தன்னையும் அறிந்துகொள்வது என சுமார் 40 பக்க விஸ்தீரணத்தில் நான் எழுதியிருந்த டெலெக்ஸ்நடை ஆங்கிலமூல ஆவணத்திலிருந்து கடன் பெறப்பட்டது. (ஆங்கில மூலம் தொலைந்துபோய்விட்டது; என் நினைவிலிருந்துதான் அதில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை எழுதுகிறேன்.) Read the rest of this entry »

