காந்திஜியின் கொள்ளுப்பேரன்: “காந்தியைக் கொலை செய்தது ஆர்எஸ்எஸ் என்பது பொய்யல்லவா?”
March 11, 2014
காங்க்ரெஸ் கட்சியின் ராஹுல் காந்தி அவர்கள், நம்பவே முடியாத பினாத்தல்முதல்வாதத் தீவிரவாதித்தனமாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறார் – காந்திஜியைக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பினரென்று…
இந்தப் போக்கு ஒன்றும் புதிதில்லைதான். பல பத்தாண்டுகளாக இடதுசாரிகளிலிருந்து, சாய்வு நாற்காலிவாதிகள் வரை — இன்னும் கீழ்த்தரத்துக்குப் போனால், அறிவுஜீவிகளிலிருந்து தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் வரை — இன்னமும் தராதரத்தில் அதல பாதாளத்துக்குப் போனால் — பொதுவாகவே காந்தியைக் காந்தியார் என வர்ணித்து அவரைக் காமாந்தகர், ஜாதிவெறியர் என வசை பாடும் அயோக்கிய திராவிடக் கொழுந்துகளும் கூட, திடீரென்று அல்லது அவ்வப்போது காந்தியின் மேல் காரியார்த்தமான அன்புவெறி வந்து – ‘ஆர்எஸ்எஸ் காக்கி டவுசர்கள்’ தான் காந்தியாரைக் கொலை செய்த மகாபாவிகள் எனப் பேசுவதென்பது சாதாரணமாக நடக்கும் விஷ(ய)ம் தான்!
ஆனாலும், தேர்தல் ஜுரவேகத்தில், பாஜக-வை எப்படியாவது வீழ்த்தவேண்டும், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என அலையாய் அலையும் அற்ப அல்லக்கைகளுக்கு, மறுபடியும் மறுபடியும் பழம்பொய்களை மறுசுற்றுக்கு விடுவதில் எவ்வளவு ஆனந்தம் – என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே!
… ஆனால், இந்த உளறல்களுக்கெல்லாம், கயமைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் படி, ஸ்ரீக்ருஷ்ண குல்கர்னி அவர்கள் (இவர், காந்திஜியின் மகன்வழிக் கொள்ளுப் பேரர்) அண்மையில், ஒரு ‘திறந்த’ கடிதத்தை [1] எழுதியிருக்கிறார். அதன் ஒருமாதிரியான தமிழாக்கம் (வார்த்தைக்கு வார்த்தை வகையறா அல்ல – அப்படியானால் அது எஸ்.ராவுடைய ராவல் போலவாகிவிடும், மன்னிக்கவும்) கீழே:
மார்ச் 8, 2014
அன்புள்ள ராஹுல் காந்தி,
காந்திஜி என்னுடைய கொள்ளுத்தாத்தா.
அவர் நாதுராம் கோட்ஸே அவர்களால் கொலை செய்யப் பட்டார். பல விசாரணைக் கமிஷன்கள் இவ்விஷயத்தை அலசி ஆராய்ச்சி செய்திருந்தாலும், அவற்றில் ஒன்று கூட ஆர்எஸ்எஸ் அமைப்பைக் குற்றவாளீயாகச் சுட்டவில்லை. என்னுடைய தாத்தா ராமதாஸ் காந்தி அவர்கள், அப்போதைய உள்விவகார அமைச்சராக இருந்த சர்தார் படேல் அவர்களிடம், கோட்ஸேக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டாம் என்று எழுத்துபூர்வமாக விண்ணப்பித்திருந்தார். எங்கள் குடும்பம், அப்போதே, இந்த விவகாரத்தைக் கடந்து விட்டிருந்தது. உங்களுக்காக ஒரு செய்தி: என் தாத்தா ராமதாஸ் காந்தி அவர்கள் மரணப் படுக்கையில் (1969, மும்பய்) இருந்த போது, கோபால் கோட்ஸே அவர்கள் (இவர் நாதுராம் கோட்ஸே அவர்களின் தம்பி) பார்க்க வந்திருந்தார். ஆக, இப்போது இந்த [கொலை]விஷயம் அந்தக் காலத்தில் நடந்த ஒன்று மட்டுமே – எங்கள் குடும்பம் இதனை விட்டுவிட்டு மேலெழும்பி வெகு நாட்களாகி விட்டன.
என்னுடைய தாழ்மையான விண்ணப்பம்: காங்க்ரெஸ்ஸை உரிமைகொண்டாடுபவர்களும், தாங்களும் – உங்கள் சுயநலன்களுக்காக, காந்தியின் பெயரை உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, வேறு வேலைகளைப் பார்க்கப் போகலாம் / மற்ற பணிகளுக்குச் செல்லலாம்.. உங்களுக்கு, பல விசாரணைக் கமிஷன்கள் அளித்துள்ள தீர்ப்புகளை ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மை வேண்டும்.
நீங்கள், திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை போல ‘ஆர் எஸ் எஸ் தான் காந்தியைக் கொன்றது’ என்று உச்சாடனம் செய்வது எப்படி இருக்கிறது என்றால் – ‘தமிழர்கள் தாம் உங்கள் தகப்பனாரைக் கொன்றார்கள்’ எனச் சொல்வது போலத்தான்! பின்னது போல யாராவது சொன்னால், அது எப்படிப்பட்ட பொய்மையாக இருக்கும்? ஓரிருவர் சமூகமாகிவிடமுடியுமா? [=ஓரிருவர் செய்யும் காரியத்தை வைத்துக்கொண்டு, ஒட்டு மொத்தமாக, ஒரு சமூகத்தையே குறை சொல்ல முடியுமா? இரண்டொருவர் செய்வது – அனைவருடைய செய்கைகளையும் பிரதிநிதித்துவப் படுத்த முடியுமா?]
ஆக, தயவுசெய்து இந்தப் பித்தலாட்டத்தை நிறுத்தவும். சந்தர்ப்பவாதத் தனமாக, காந்தியின் பெயரை உபயோகிப்பதை நிறுத்தவும். நீங்கள் பல காலமாக பல இந்தியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் – நீங்கள் காந்தி வம்சாவழியினர் அல்லர். இந்தப் போக்கை உடனே நிறுத்துங்கள்.
நான் இந்தக் கடிதத்தை பொதுப்பார்வைக்குக் கொண்டுவருகிறேன் – ஏனென்றால், காந்தி வம்சாவழியினரில் ஒருவராவது உங்களுடைய தகிடுதத்தங்களைக் சுட்டிக் காட்டவேண்டுமல்லவா?
உண்மையுள்ள,
ஸ்ரீக்ருஷ்ண குல்கர்னி.
… அடிப்படை நேர்மை என்று ஒன்று இருப்பவர் எவரும், இனிமேலாவது இந்த ‘ஆர் எஸ் எஸ் சதிகாரர்கள்தான் காந்தியைக் கொன்றார்கள்’ என்ற உச்சாடனத்தை உபயோகிக்காமல்தான் இருப்பார்கள். ஆனால்…
பின்குறிப்பு1: ஸ்ரீக்ருஷ்ண குல்கர்னி அவர்கள், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பினர். :-)
பின்குறிப்பு2: ஸிஎன் என்/ஐபிஎன் செய்தி ஸ்தாபனத்துடன் இது தொடர்பாகப் பேசிய[2] குல்கர்னி அவர்கள் மேலதிகமாகத் தெரிவித்ததன் வீடியோ [3] பதிவிலிருந்து:
“காந்தியில் கொலை பற்றிப் பேசப் படவேண்டிய அவசியமே இல்லை. காந்தி கொலை செய்யப்பட்டது 1948ல். பல விசாரணைக் கமிஷன்கள் இதனை விசாரித்திருக்கின்றன. எதுவும், எந்த குறிப்பிட்ட அமைப்பையும் குற்றம் சாட்டவில்லை. இரண்டொருவர் இந்தக் கொலையில் ஈடுபட்டனர்.
ஆனால், ஒரு நிதர்சனமான விஷயமென்னவென்றால், அவர் இறந்துவிட்டார், அவர் திரும்பவரப் போவதில்லை – ஆக, அவர் பெயரை உபயோகிக்கத் தேவையில்லை. நாம் இந்த நெருப்பை விசிறிவிட்டுக் கொண்டிருக்கக் கூடாது; இந்த வெறுப்பு அரசியலுக்கு, நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்!”
சுட்டிகள் / குறிப்புகள்:
[1] http://www.scribd.com/doc/211586572/Letter-From-Great-Grandson-of-Mahatma-Gandhi
March 11, 2014 at 13:31
நல்ல பகிர்வு.
March 11, 2014 at 14:39
Your previous post and this post constantly reminded me one person in TN ‘Gnani’. He has been stooping down to abysmal levels in his hatred towards Modi. I wonder how foul-mouthed a person like him can become and by calling himself a political commentator(!#$%^).
March 11, 2014 at 19:21
இன்று கூட ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் தான் காந்தியைக்கொன்றது என்று பேசி இருக்கிறார். கபில்சிபல் மொரார்ஜி தேசாயைக் மேற்கோள் காட்டி அதே போலப் பேசி இருக்கிறார். இவர்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்கள். அது சரி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஹிந்துவிலும் குஜராத் முன்னேற்றம் பற்றி மிகவும் மோசமாக எழுதி இருக்கிறார்களே. குஜராத்தைப்பற்றி சரியான தகவல்களைத் தாங்கள் தொகுத்து எழுதத் தங்களுக்கு நேரம் இருக்குமா? இருக்குமானால் தயவு செய்து எழுதவும்.
March 11, 2014 at 21:29
காந்தி கொலையில் ஆயுள் தண்டனை வழங்கபட்ட குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் முடிந்த உடனே விடுதலைக்கான வழக்குகளை /போராட்டங்களை ஆரம்பித்தன ஹிந்து இயக்கங்கள்.
ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கோட்சேவின் சகோதரர் உட்பட்ட குற்றவாளிகள் 16 ஆண்டுகளில் விடுதலை ஆனார்கள்.விடுதலையின் போது பிரமாண்ட வரவேற்ப்பு,பொதுகூட்டம் நடத்திய ஹிந்து இயக்கங்கள் கூட்டத்தில் எப்படி துப்பாக்கி வாங்கினார்கள்,யார் யார் எல்லாம் அவர்களுக்கு உதவினார்கள் என்ற பெருமை பேச்சுக்களும் தூள் பறந்தன
http://en.wikipedia.org/wiki/Kapur_Commission
On November 12, 1964, a religious programme was organised in Pune, to celebrate the release of the Gopal Godse, Madanlal Pahwa, Vishnu Karkare from jail after the expiry of their sentences. Dr. G. V. Ketkar, grandson of Bal Gangadhar Tilak,[1] former editor of Kesari and then editor of Tarun Bharat, who presided over the function, revealed six months before the actual event, that Nathuram Godse disclosed his ideas to kill Gandhi and was opposed by Ketkar. Ketkar said that he passed the information to Balukaka Kanitkar who conveyed it to the then Chief Minister of Bombay State, B. G. Kher. The Indian Express in its issue of November 14, 1964, commented adversely on Ketkar’s conduct that Ketkar’s fore-knowledge of the assassination of Gandhi added to the mystery of the circumstances preceding to the assassination
March 11, 2014 at 21:40
இவர் கூட காந்தியோட கொள்ளு பேரன் தான்
Tushar A. Gandhi @TusharG Mar 9
@naqui_s RSS was a British collaborator, no question of banning it.
Tushar A. Gandhi @TusharG Mar 9
@Sivakumar_king RSS/Hindumahasabha indoctrinated Godse & used him to carry out their agenda. Read Kapur Commission Report.
Tushar A. Gandhi @TusharG Mar 9
Pamphlet was distributed in Alwar proclaiming Bapu’s Murder at Noon on 31st Jan, Bapu was murdered at 5:17 pm in Delhi #RSSMurderedGandhi
Expand
Tushar A. Gandhi @TusharG Mar 9
@Raheodisha The Gun a Beretta 9mm Semiautomatic known as the Fascist Special was procured on 28th Jan from Gwalior with help of Parchure.
Tushar A. Gandhi @TusharG Mar 9
@avinashk1975 Agree, but not about committing suicide. Still does not absolve RSS & their tool Godse.
Tushar A. Gandhi @TusharG Mar 9
@vijaygkg Read the Kapur Commission’s report I don’t need to prove anything.
March 11, 2014 at 22:07
காந்தி பேரன் சொல்வதை விட காந்திஜியே சுடப்பட்ட பிறகு என்னை சுட்டவர் ஆர் எஸ் எஸ் கிடையாது ஆர் எஸ் எஸ் கிடையாது ஆர் எஸ் எஸ் கிடையாது என்று சொன்னார் என்று கதை கட்டி விடலாமே
பொய்களை உண்மை போல சொல்ல ஆர் எஸ் எஸ் ஷாகாக்களில் ஆரம்பித்த காலத்தில் இருந்து அற்புதமாக சொல்லி தரப்படுகிறதே
http://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece
What is meant by self-destruction? Two decades after the assassination, the RSS mouthpiece (Organiser), then edited by K.R. Malkani, could remember Gandhi, on January 11, 1970, only in these terms in its editorial: “It was in support of Nehru’s pro-Pakistan stand that Gandhiji went on fast and, in the process, turned the people’s wrath on himself.” So, Nathuram Godse represented “the people” and he perpetrated the murder as an expression of “the people’s wrath”.
In 1961, Deen Dayal Upadhyaya said: “With all respect for Gandhiji, let us cease to call him ‘Father of the Nation’. If we understand the old basis of nationalism, then it will be clear that it is nothing but Hinduism.”
On Nathuram Godse, Advani asserts that Godse had “severed links with RSS in 1933… had begun to bitterly criticise the RSS”. This was flatly contradicted by none other than Godse’s brother Gopal, who was also an accused at the trial for conspiracy to murder. He published his book Why I Assassinated Mahatma Gandhi in December 1993. Speaking in New Delhi on the occasion of the release of his book, Gopal Godse revealed what many had suspected—they had both been active members of the RSS (The Statesman; December 24, 1993).
Soon thereafter, in an interview to Frontline (January 28, 1994), he provided the details and angrily scotched Advani’s attempts to disown them: “All the brothers were in the RSS. Nathuram, Dattatreya, myself and Govind. You can say we grew up in the RSS rather than in our home. It was like a family to us. Nathuram had become a baudhik karyavah [intellectual worker] in the RSS. He has said in his statement that he left the RSS. He said it because Golwalkar and the RSS were in a lot of trouble after the murder of Gandhi. But he did not leave the RSS.”
March 12, 2014 at 10:16
சிவராசனின் டைரி மட்டும் கிடைத்திருக்காவிட்டால் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் எல்.டி.டி.ஈ.-க்கும் உள்ள தொடர்புகூடத்தான் வெளிவந்திருக்காது; ஏன், அந்த வழக்கே துப்புத்துலக்கப் பட்டிருக்காது. அதற்காக ராஜீவ் காந்தி கொலைக்கும் எல்.டி.டி.ஈ-க்கும் சம்பந்தம் இல்லை என்று ஆகிவிடுமா? காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.-க்குத் தொடர்கு இல்லை என்பதும் அப்படியே.
காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.-இன் வெறுப்பு ஐடியாலஜியே என்பதில் சந்தேகமே இல்லை. நாதுராம் தான் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகிவிட்டதாக கோர்ட்டில் சொன்னதும் அவர்கள் திட்டத்தின் பகுதியே.
கோபால் கோட்ஸே நாதுராமின் அஸ்தியை இன்னும் வைத்திருக்கிறார். எதற்கு- அகண்ட பாரதம் உருவான பிறகுதான் ஆற்றில் கரைப்பாராம்! அகண்ட பாரதம் யாருடைய கனவு? அவரது அஸ்தி கலசத்திற்மீது ‘ஹிந்துவைஸ் இந்தியா, மிலிடரைஸ் ஹிந்துயிஸம்’ என்று எழுதி வைத்திருக்கிறார். இது எந்த அமைப்பின் நோக்கம்?
March 12, 2014 at 15:21
சரவணன்…..
இது என்ன புதுக்கதை? சிவராசன் டைரியாமே? உங்களிடம் உள்ளதா?
பெங்களூரில் , ரங்கனாதன் வீட்டில் சிவராசனும் , சுபாவும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால் தங்களிடம் இருந்த எல்லா ஆதாரங்களையும் எரித்துவிட்டுத்தான் செத்தார்கள்….சிபிஐக்கு கிடைத்தது பிணங்களும் ,ஆயுதங்களும் மட்டும்தான்……அப்போது ராஜீவ் கொலை பற்றிய முழு விபரங்களும் சிபிஐயிடம் இருந்தன…..
பொய்யை பரப்புவதில் இதுதான் சார் பிரச்சினை….. யாராவது இப்படி மடக்கிடுவாங்க….
அடுத்த் முறை இன்னும் பெட்டரா ட்ரை பன்னுங்க…..
March 13, 2014 at 08:12
சான்றோன், உங்கள் ஊரில் ‘இந்தியா டுடே’ என்னும் இதழே கிடைப்பதில்லையா? சிவராசன் டைரிகள் ஃபோட்டோக்களுடன் வெளியிடப்பட்டுப் பல வாரம் கடந்துவிட்டதே? பார்க்க: http://indiatoday.intoday.in/story/rajiv-gandhi-assassin-diary-sivarasan-exclusive-revelations-about-sivarasan-plot-to-kill-rajiv-gandhi/1/346167.html
***** தங்களிடம் இருந்த எல்லா ஆதாரங்களையும் எரித்துவிட்டுத்தான் செத்தார்கள்….சிபிஐக்கு கிடைத்தது பிணங்களும் ,ஆயுதங்களும் மட்டும்தான் ****
இந்த டைரி சென்னையில் ரவிச்சந்திரன் கொடுத்த தகவல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
***** பொய்யை பரப்புவதில் இதுதான் சார் பிரச்சினை….. யாராவது இப்படி மடக்கிடுவாங்க….****
அதாவது நான் இப்ப உங்களை மடக்கின மாதிரி. சரிதான்.
நீங்க *** அடுத்த் முறை இன்னும் பெட்டரா ட்ரை பன்னுங்க…..**** சரியா?
March 13, 2014 at 15:51
வினோத்……
இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளாத தமிழனாக இருந்தது என் தவறுதான்…
உங்கள் கருத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்..
// சிவராசனின் டைரி மட்டும் கிடைத்திருக்காவிட்டால் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் எல்.டி.டி.ஈ.-க்கும் உள்ள தொடர்புகூடத்தான் வெளிவந்திருக்காது; ஏன், அந்த வழக்கே துப்புத்துலக்கப் பட்டிருக்காது //
என் பதிலையும் படித்து விடுங்கள்…..
// அப்போது ராஜீவ் கொலை பற்றிய முழு விபரங்களும் சிபிஐயிடம் இருந்தன…..//
உங்கள் வயது என்னவென்று தெரியவில்லை….. நீங்கள் நாற்பது வயதை நெருங்கியவராகவோ அல்லது கடந்தவராகவோ இருந்தால் , அப்போது நடந்த விஷயங்களை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டுவாருங்கள்…..
சிவராசன் , சுபா இருவரின் அடையாளங்களையும் வெளியிட்டு , அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக சி.பி.ஐ. அறிவிக்கும் முன்பாகவே , ராஜீவ் கொலையின் முழு சதியும் வெளிப்பட்டுவிட்டது….
ராஜீவ் கொலை வழக்கின் தலைமைப்புலனாய்வு அதிகாரியான கார்த்திகேயன் , விசாரனை அதிகாரியான ரகோத்தமன் போன்றோர் எழுதியிருக்கும் புத்தகங்களைப்படியுங்கள்…..
கோவையில் தற்கொலை செய்துகொண்ட விக்கி என்ற விக்னேஸ்வரன் உள்ளிட்ட , புலிகளோடு தொடர்புடையவர்களை வைத்தும் கோடியக்கரை மிராசுதார் சண்முகம் போன்றோரின் வாக்குமூலம் மூலமாகவும் முழு சதியும் துப்பு துலக்கப்பட்டது….
ஒரே ஒரு டைரியை மட்டுமே வைத்து ,ராஜீவ் கொலை வழக்கு போன்ற high profile வழக்குககளை நடத்தினால் , குற்றவாளிகளை விடுவிக்க ராம் ஜெத்மலானி தேவையில்லை….. மரத்தடி வக்கீல் போதும்…..
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்போமா?
March 12, 2014 at 15:35
பூவண்ணன் மற்றும் சரவணன்…..
பொது இட ஒதுக்கீடு ஐம்பது சதவீதத்துக்கும் மேலாக இருக்ககூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு……தமிழக அரசு அதை மீறி 69 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தபோது தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அதை வரவேற்றன…. அரசின் அந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் வழக்கு தொடர்ந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானார்… உடனே தமிழக அரசியல் கட்சியினர் அனைவரையும் கைது செய்ய முடியுமா?
ஒரே நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள் செயல்படுவது சகஜம்… நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவரவர் வழிமுறை வேறு….ஒருவர் செய்யும் செயலுக்கு இன்னொருவரை பொறுப்பாக்க முடியாது….
இப்போது இப்படி விதண்டாவாதம் செய்யும் உங்களைப்போன்றவர்கள் தான் பயங்கரவாத செயல்களுக்காக இஸ்லாமியர்களை விசாரணை செய்தால் அதை குற்றம் சொல்ல முதலில்வந்து நிற்பவர்கள்….
March 12, 2014 at 20:03
வழக்கறிஞர் விஜயன் நல்ல நண்பர்.அவரை வைத்து வழக்குகள் தொடுத்திருக்கிறேன்.அவரோடு இட ஒதுக்கீட்டின் தேவைகளை வலியுறுத்தி பல பக்கங்களுக்கு கடிதங்கள் ,வாதங்கள் செய்திருக்கிறேன்.
அவரை குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்த சிலர் திட்டம் போட்டு அடித்தார்கள் என்றால் பழி அந்த இயக்கத்தின் மீது விழும்.அவரை அடித்தவர்களின் விடுதலையை கொண்டாடுபவர்களின் மீதும் விழும்.இன்று கூட கோட்சேவை பெருமையாக எண்ணுபவர்களுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் குறைவு கிடையாது.காந்தியை திட்டாத ஆர் எஸ் எஸ் காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
பாப்ரி மசூதி இடிப்பிற்கும் பா ஜ க விற்கும் தொடர்பு இல்லை என்றும் தீர்ப்புகள் வரலாம்.சில ஆண்டுகள் கழித்து அவர்களும் நீதிமன்ற தீர்ப்புகளை காட்டி எங்களை மசூதி இடிப்போடு தொடர்பு படுத்தி பேச கூடாது என்றும் வாதிடலாம்.அதே தான் மகாத்மா காந்தி கொலையிலும் நடக்கிறது
உங்கள் வாதத்தை போல கோங்கிறேச்ச்காரர்களும் பல கோடி பேர் இருக்கும் காங்கிரெஸ் கட்சியில் யாரோ சிலர் செய்த சீக்கிய படுகொலைகளுக்கு காங்கிரெஸ் கட்சியை குற்றம் சாட்டினால் வழக்கு தொடுக்கப்படும் என்றும் வாதிடலாம்.
March 13, 2014 at 09:10
நீங்களும் குழம்பி,படிக்கிறவர்களையும் மிகவும் குழப்பி இருக்குறீர்கள்.முடிவாக என்ன தான் சொல்ல வருகிறீர்கள் மோதி,பி.ஜே.பி,மற்றும் ஆர்.எஸ்.எஸ். எது செய்தாலும் தவறு,உங்களுக்கு வேண்டியவர்கள் எது செய்தாலும் மிகச்சரி.அது தானே உங்கள் எண்ணம்.வாழ்ந்தேபோம் நீர்!
March 14, 2014 at 12:51
பூவண்ணன் சார்……
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை துவக்கியது திமுக…..திமுகவே தலைமை தாங்கி , கிளர்ச்சியை தூண்டியது… அநியாயமாக மாணவர்களையும் தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபடச்செய்தது…. தமிழகம் முழுவதும் பொதுச்சொத்துகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது…… உச்ச கட்டமாக திருப்பூரில் போலீஸ் இண்ஸ்பெகடர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்…. கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்….. திமுக ஆட்சியை பிடித்தவுடன் அந்த கிரிமினல்கள் விடுதலை செய்யப்பட்டனர்….அவர்கள் மட்டுமல்ல….தமிழகம் முழுக்க வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றவாளிகள் அனைவரும் ” மொழிப்போர் தியாகிகள் ” என்று அறிவிக்கப்பட்டு , அரசால் கவுரவிக்கப்பட்டனர்…. இன்றுவரைஅவர்களுக்கு அரசுப்பணத்தில் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது…… வன்முறையில் ஈடுபட்டவர்களை நோக்கி போலீஸ் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய நாளை மொழிப்போர் தியாகிகள்[!] தினம் என்று அறிவித்து வருடம் தோறும் அணுசரிக்கின்றனர்…..
இவ்வளவும் செய்துவிட்டு , இண்ஸ்பெக்டர் கொலைக்கும் , திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உங்களால் வாதிட முடிகிறது…. ஹிந்துத்வ சிந்தனை கொண்டவனால் கொல்லப்பட்டதால் , மற்றொரு ஹிந்துத்வ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புபடுத்தி கட்டுக்கதைகளை நீங்கள் கட்டிவிடுவீர்கள் ….அதை எல்லோரும் ஏற்க வேண்டும்…..
நியாயம் என்பது ஒன்றுதான்….அது எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கும்…. கபட நியாயம் என்பது ஆளுக்கு ஆள் , ஏன் நேரத்திற்கு நேரம் மாறுபடும்…. உங்கள் வாதம் எப்படிப்பட்டது என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்…..
March 14, 2014 at 17:27
FYI > Gopal Godse: ‘Nathuram did not leave the RSS’ (Frontline, January 28, 1994) http://www.sabrang.com/cc/archive/2004/aug04/cover6.html