அரவிந்தன் கண்ணையன் அவர்கள் எழுதிய, முகாந்திரமேயில்லாத, அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காத ஆங்கில மேட்டிமைதொனி முன்முடிவுக் கட்டுரைக்கு பதிலாக – லாவணித் தமிழ்க் கட்டுரையொன்றை எழுதலாமா வேண்டாமா, எழுதினாலும் (எனக்கேகூட!) ஏதாவது உபயோகம் இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்தேயிருந்தாலும், குறிப்புகளையும்  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவரிடமும் இதன் அவசியமின்மை/அவசியம் பற்றி அறிவுரை கேட்டிருந்தேன். அவர் பதில் எப்போதும்போலவே சமனத்துடன் இருந்தது = ‘எழுதவேண்டுமென்றால் இப்படி எழுதலாம், ஆனால் அப்படி வேண்டாம்!’ அய்யா, நன்றி! :-) Read the rest of this entry »

அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும்  என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன?  :-)

இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »

பயப்படாதீர்கள்.

இது அஞ்சலியல்ல. ஏற்கனவே – என் தாயார் கடந்த இரண்டு நாட்களாக, வரைமுறையே இல்லாமல் அப்துல்கலாம் புகழ் பாடிப்பாடியே, அவருக்குப் பதில் என்னுடைய உயிர் போயிருக்கக்கூடாதா, எனக்கும் 78 வயதாகிவிட்டதே, மஹான் போய்விட்டாரே – எனத் தொடர்ந்து கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இந்தத் தொல்லையைத் தாங்க முடியவில்லை.  ஆகவே.

ஆனால் – என்னுடைய இருவேறு நண்பர்கள் எனக்கு அனுப்பியுள்ள செய்திகளிலிருந்து (அனுப்பியவர்களின் நம்பகத் தன்மையைக் கருதி) கீழ்கண்டவைகளைக் கொடுக்கிறேன்…

Read the rest of this entry »

திராவிடர்களது அடிப்படையே பீலா விடுவதும், தாங்கள் விடும் பீலாக்களைத் தாங்களே நம்பிவிடும் தன்மையும்தான்.

திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…

திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.

ஆகவே, வீரமணி அவர்கள் தொடர்ந்து, ஏகோபித்து உளறிக்கொட்டுவதில் ஆச்சரியமேயில்லை!

Read the rest of this entry »

மானமில்லாமல் – படுகேவலமாகத் திருவோடு ஏந்தி உலகெல்லாம் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் பாரத கலாச்சாரத்தை உய்விக்க, அட்டைக்கத்தி (= கத்தி + கத்திக்கத்தி) போராட்டங்களை டீவி கேமராக்கள் முன் ஏகோபித்து மினுக்கிக்கொண்டு நடத்த, சமூக நீதிக்காகவென என்றெல்லாம் இந்தியாவில் பலப்பல என்ஜிஓக்கள் – எழவெடுத்த தன்னார்வ போங்காட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.

இவை பெரும்புகழும் பேரும் பெற்று – தொந்தி தள்ளக் கொழுத்து, நடக்கமுடியாமல் ஆனால் வீராவேசம், சமதர்மம், மனித உரிமை,  பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக/இயற்கைச் சூழல் பாதுகாப்பு என அலைந்து கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களால் – மன்னிக்கவும், தொழில்முறைக் கொள்ளையர்களால் நடத்தப் படுகின்றன.
Read the rest of this entry »

oops! sorry. erase erase. backspace backspace. ^H^H. delete delete. yo, i didn’t’ mean it. peace, peace.  look ma, no tricks.

... this kinda ARchiVist has only some random data taken from randomer archives - and then based on them - goes on to theorize  a whole series of generalizations and halfbaked, jaundiced hypotheses... and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)

… this kinda ARchiVist has only some random data taken from randomer archives – and then based on them – goes on to theorize a whole series of generalizations and half-baked, jaundiced hypotheses… and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)

tee hee. ha ha. hee haw. was reading a really wild oscar. and his importance of being earnest, in right earnest. so got carried away. apologies. but, this post is also a ‘trivial comedy for serious people,’ mind you…

Read the rest of this entry »

எச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்(!) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்!)

சரி. :-( Read the rest of this entry »

எச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.

…எனக்குப் பொறுக்கவே முடியவில்லை.

போராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா? அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே!

Read the rest of this entry »

உலகத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எக்கேடு ஏற்பட்டாலும் அமெரிக்காவை மட்டுமே அதற்குக் காரணமாக்கி – ஏகத்துக்கும் வாயில் நுரைதள்ள அதனை ஏசுவது என்பது உலகளாவிய அரைகுறைகளின், படிப்பறிவற்ற சோம்பேறிகளின், அனுபவமுதிரா அறிவிலிகளின் முட்டியடிப் பொழுதுபோக்கு எதிர்வினைகளில் ஒன்று. சில சமயம், இவ்வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு உண்ணும்போது,  தொட்டுக்கொள்ள – ‘மேற்கத்திய நாடுகளின் சதி’வலை எனப் பேசுவதும், ‘கார்ப்பரேட்டுகளை’ ஒழித்துக்கட்டவேண்டும் எனப் புலம்புவதும் இதே வகையறாதான்…

Read the rest of this entry »

இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…

இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட்  கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள்.  இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.

இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.

வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும்  கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.

இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்! Read the rest of this entry »

எச்சரிக்கை: இப்பதிவில் – இணையத்திலிருந்து எடுத்த கேலிச்சித்திரங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பொறுமையாகப் படிக்கவும்/பார்க்கவும்.

… நமதிந்தியாவில் – இந்தத் தறிகெட்டலையும் தன்னார்வத் தொண்டு(!) நிறுவனங்களை நெறிப் படுத்தும் வகையில், கொஞ்சமேனும் செயல்பாடுகள் ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது.  :-))) Read the rest of this entry »

திராவிட இயக்கம் என்றாலே, ஏகத்துக்கும் பணத்தைச் சுருட்டிச் ‘சுடுவது’ + வாய்ப்பேச்சுவீர பெருத்த ‘டுமீல்’ சப்தம் + புகைநாற்றம், தமிழகம் மாசுபடுதல் … … போன்றவைதான் பொதுமக்களுக்கு நினைவுக்கு வரும்!
அயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள்! நாம் உருப்படுவோமா? (படம் <a href="http://globalasiablog.com/2014/06/04/indonesias-corruption-problem-feathering-ones-own-nest/" target="_blank"><strong>இங்கிருந்து</strong></a>)   --  (கவனிக்கவும் - மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் - பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா?)

அயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள்! நாம் உருப்படுவோமா? (படம் இங்கிருந்து) — (கவனிக்கவும் – மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் – பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா?)

ஆனால் – கடந்த பல தேர்தல்களினூடே தமிழகப் பொதுமக்களில் மிகப்பெரும்பாலோரும், வேறு வழியேயில்லாமல், மிக அற்பத்தனமாகஓட்டுக்கு-லஞ்சம்வாங்கிகளாகி விட்டதால் – ஆகவே அடிப்படையில் அயோக்கியர்களாகிவிட்டதனால் – அவர்களுக்கு இதைப் பற்றிப் பேசுவதற்கு, கொஞ்சம் கூச்சமாக இருக்கலாம். (பார்க்க: தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்  (23/04/2014))

…ஆகவே, அவர்களுக்கு காரியார்த்தமாக இவை போன்றவற்றை நினைவுகூர முடியாவிட்டால், பாவம், உதவிக்குத் தான் என்னைப்போன்ற வேலையற்றவர்கள் இருக்கிறார்களே!
Read the rest of this entry »

எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை  ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.

இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)

பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்

Read the rest of this entry »

எனக்குத் தெரிந்து, என் செல்ல பெங்காலிபாபு உட்பட, இதற்கெல்லாம் பொங்கவேயில்லை. வீரமிலா, நேர்மையிலா ஞமலிகள், வேறென்ன சொல்ல.

இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…

Read the rest of this entry »

கடந்த சுமார் 2 மாதங்களாக, விட்டுவிட்டு – திராவிட இயக்க விசிறியான (இன்றுவரை) நண்பர் ஒருவருடன் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருக்கும் மின்னஞ்சல் உரையாடலின் ஒரு சாராம்சப் பகுதி கீழே:

-0-0-0-0-0-0-

… நான் பலதடவை உங்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் – திராவிடலை இயக்கங்களின் பல குணாம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றின் தமிழ் சமூகத்தின் மீதான எதிர்மறை தாக்கத்துகளைப் பற்றியும், அதன் பலப்பல ‘கொடை’ களைப் பற்றியும்கூட. நிறைய யோசித்தும் கூட, என்னால்  இந்த முயக்கங்களுக்குச் சாதகமான ஒரேயொரு விஷயத்தைக் கூடத் தெரிந்துகொள்ளமுடியாமல் போனது என் போதாமைதானோ? Read the rest of this entry »

‘பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்’ எனும் வேலைவெட்டியற்ற உரையாடல் எழவின் சாராம்சம், சோகக்கதை தொடர்கிறது. இதன் முதல் பகுதி இங்கே – பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்; இதைப் படித்தால் – கீழேகாண்பது கொஞ்சம் புரியலாம். ஆகவே.

(திராவிடஇயக்க மேதகு நாயுடுகாரு நண்பர் அவர்கள் – நான் படிக்காவிட்டால் பரவாயில்லை, சரியாகத்தான் வரும், போட்டுக்கொள், எக்கேடோ கெட்டுப்போ, ஆளைவிடு – என்று கோபமாகச் சொன்னதால், இந்த இரண்டாம் பகுதியையும் பிரசுரிக்கிறேன்; இந்தப் பதிவில் – நண்பர் சொன்னதில் இரண்டு ‘திராவிடப் பொய்மை’ விஷயங்களை மட்டும் கையாண்டிருக்கிறேன்)

-0-0-0-0-0-0-

“முதலாவது – கணேஷ்ஸ்ரீ பராட்டா உங்களுக்குப் பிடிக்குமா?”

“என்ன ஸார் இப்படி கேக்கறீங்க? ரொம்ப பிடிக்கும். இத்தனை சல்லீசா எவன் ஸார் கோபி பராட்டா பன்னீர் பராட்டான்னிட்டு சுவையா பண்ணி கொடுப்பான், சொல்லுங்கள்?”

“இது, உங்கள் பார்வையில், ஆரிய வந்தேறிகள் கடை. ஓடிஷாவிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்துசேர்ந்த பிராம்மணர்களின் கடை. அவர்கள் கொழுத்த மாதிரி தெரியவில்லை. அநியாயமாக லாபம் அடிப்பதாகவோ அல்லது தரக்குறைவான வஸ்துக்களை விற்பதாகவோ தெரியவில்லை. கடை என்னவோ ஒரு சிறிய பொந்துபோலத்தான் இருக்கிறது. கொஞ்சம் அழகுணர்ச்சியோடு எளிமையான அலங்கரிப்புகள் இருந்திருக்கலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”

Read the rest of this entry »

[1]  ‘பாலா’ அவர்களின் சில கருத்துகள் தொடர்பாக, ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதிய மின்னஞ்சல்: மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்;  [2] ‘பாலா’ அவர்களின் எதிர்வினை: ஒத்திசைவுக்கு மறுமொழி

சரி. ஜெயமோகன் அவர்களின் கழுத்தை மறுபடியும் மறுபடியும் வேலைவெட்டியற்று அறுக்கவேண்டாம் என…

…இரண்டு கடிதங்களையும் அவற்றுக்கான என் பதில்(!)களையும் (கொஞ்சம் எடிட்/திருத்தம் செய்து – பெயர்களைக் கத்தரித்து) கொடுத்திருக்கிறேன். அக்கப்போர்தான். எனக்கு (+உங்களுக்கு) இது தேவையா?

Read the rest of this entry »

கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத்  தவறு செய்து விட்டேனோ??

“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”

— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))

ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை  திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)

Read the rest of this entry »

2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி! நினைவிருக்கிறதா?

… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம்! இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது!

இது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்!!

தமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்!!!

பேருந்துகளின் மீது கல்விட்டெறிந்து, கோஷ்டம் பல போட்டுக்கொண்டு, டீவிகேமராக்களுக்கு முன் ஆர்பாட்டம் செய்து தளுக்காக மினுக்கிக்கொண்டு,  ‘தமிழ்’ஈழத்தை வடதுருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் தேடிக்கொண்டு, வெறி தலைக்கேற குத்தாட்டம் ஆடி, புட்டத்தைச் சொறிந்துகொண்டு பவனிவந்த காலங்கள்…

Read the rest of this entry »

பாவப்பட்ட ஜீவனான,  கருத்துரிமைப் பிரகடனங்களிடும் சக வீரத்தமிழ்ப் போராளிகளால் முட்டுக்கொடுத்து நிற்கவைக்கப்படவேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட மாஜி நக்ஸலைட் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு, ஏதோ என்னாலான ஆதரவு. ஹ்ம்ம்ம்…

Read the rest of this entry »