ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்)
May 11, 2015
எச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்(!) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்!)
சரி. :-(
-0-0-0-0-0-0-0-0-0-0-
ஒரு அடிப்படைத் துகளாகப் பிறந்துவிட்டால், அதுவும் இந்தியாவில் பிறந்துவிட்டால் – கண்டகண்ட அற்பக் கழுதைகளிடமிருந்தெல்லாம் மானாவாரியாக உதைபட நேரிடும், பாவம்.
இந்தியாவில் அடிப்படை ஆராய்ச்சி அறிவியல் தொழில் நுட்பம் போன்றவைகளே சுத்தமாக இல்லை என, பல அரைகுறைகள் தொடர்ந்து கூவுவதைக் காண்கிறோம். இந்த அயோக்கியர்களையெல்லாம் மீறித்தான், பாரதம் ராக்கெட்டுகளை ஏவுகிறது; பலப்பல தொழில் நுட்பங்களை, அவற்றின் சாத்தியக் கூறுகளைத் தொடர்கிறது… நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகமென்றாலும் கூட…
இரட்டைவேடதாரிகளுக்கு, அயோக்கிய அற்பர்களுக்கு நாம் வேறெங்கும் போகவே வேண்டாம் – அதற்கு, நம் தன்னார்வ அறிவியலெதிர்ப்பு, மானுடவெதிர்ப்பு சுயநல அரைகுறைகளை ஒரு அரை நிமிடம் அவதானித்தாலே போதுமானது.
-0-0-0-0-0-0-0-
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு, நம் ஜொலிக்கும் இளைஞர்களைப் புடம்போட்டெடுப்பதற்கு, அவர்களை நம் நாட்டிலேயே போஷிப்பதற்கு அடிப்படை ஆராய்ச்சிகள் தேவை. இவையில்லையென்றேல் தன்னிறைவு, சுயசார்பில்லை. நம் மக்களுக்கு வளம் சார்ந்த எதிர்காலமில்லை. சமன நிலைசார்ந்த பொருளாதார வளர்ச்சியில்லை.
சும்மனாச்சிக்கும் உலகமயமாக்கல்- நவகாலனியம் – ஏகாதிபத்தியம் – பன்னாட்டு நிறுவனப் பிசாசு என உளறிக்கொட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
அடிப்படை அறிவியல்/கணித ஆராய்ச்சிகள் சாத்தியமானால் பின்னர் சில வருடங்களில், அவற்றின் மீதான பொறியியல் கருத்தாக்கங்கள்-வடிவமைப்புகள் சாத்தியமாகும்.
இந்த பொறியியல் ஆக்கங்களை ஆணிவேர்களாகக் கொண்டு, தொழில் நுட்பங்கள் உருவாகும்.
இந்தத் தொழில் நுட்பங்களை, பலப்பல பின்புலங்களில் பிரித்தும் இணைத்தும், மக்களுக்கு-சமூகங்களுக்குத் தேவையான-இன்றியமையாத இயந்திரங்களை, நுணுக்கங்களை உருவாக்கும் பங்கு தொழில்முனைவோருடையது.
பொதுமக்களாகிய நாம், இந்த நுணுக்கங்களை, சாத்தியக்கூறுகளைச் சுகமாக அனுபவிப்போம்.
-0-0-0-0-0-0-0-0-
அமெரிக்க ராணுவத்தின் கொடையான இணையத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவையே அசட்டுத்தனமாகக் கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கிறோம் நாம்! நம் அற்ப சந்தோஷத்துக்குக் கேட்பானேன்?
அடிப்படை ஆராய்ச்சிகளால் சாத்தியமானதை வைத்துக்கொண்டே, அடிப்படை ஆராய்ச்சிகளே வேண்டாமென உரக்க, ஒலிபெருக்கிகளையும் குசுபெருக்கிகளையும் வைத்துக் கொண்டு உளறுவதற்குக் கேட்பானேன்?? (எங்கேடா இருக்கு இந்த வான்கவிக்கோ மன்றம், மந்தீங்களா! முன்னாடியே தெர்ஞ்சிருந்தா, அங்கவந்து ஒங்க டவுஸரக் கள்ட்டிர்ப்பேனேடா!)
ஆக – நம் சுபிட்சத்துக்கு, தன்நிறைவுக்கு, சுயசார்புக்கு, முன்னேற்றத்துக்கு – ஏன், சுற்றுச் சூழலின் மேன்மைக்கே கூட இப்படிப்பட்ட அடிப்படை ஆராய்ச்சிகள் முக்கியம்.
ஆகவே, … … நம் இந்தியாவுக்கு, அதன் ஆராய்ச்சியாளர்களுக்கு, மாணவர்களுக்கு — அதன் ஒரு சிறிய அங்கமான ந்யூட்ரினோக்களை மேலதிகமாகப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.
நடிப்புச் சுதேசிங்களா… …ங்கொம்மாள, நீங்க உருப்படுவீங்களா? வொங்க கொலம் உருப்படுமா?
-0-0-0-0-0-0-0-0-
ந்யூட்ரினோவிடுதலைப் புலியும், இந்த பூவுலகக் கந்தறகோள நண்பர்களின் தலைவருமான பொறியாளர் சுந்தரராஜனார் – சென்ற வருடம், தமிழகத்தின் மகாமகோ எள்த்தாளரும் என் ஆதர்சசெல்லங்களில் ஒருவருமான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு ஜப்பானியச் சுற்றுலா (ஊரான் செலவில்) மிகுந்த தன்னார்வத்துடன் சென்றுவந்தார். பிற்பாடு, பல முக்கியமான கருத்துகளையும் உடலில் இருக்கும் இரு பிரதான துவாரங்களின் வழியாகவும் வெளிவிட்டார். ஆனால், அது கிடக்கட்டும் கழுதை.
இதே சுந்தரராஜனார் – சூழலியல், தட்பவெப்ப மாற்றம், உலகம் ஜூடாதல் எனப் பலப்பல விஷயங்களிலும் கலந்துகட்டி ஒரேயடியாகத் தன்னை பூவுலகின் நண்பந்தேன் எனக் காட்டிகொண்டு, மிகுந்த கரிசனப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்…
நான் சொல்லவருவதெல்லாம்:
1. ஏனய்யா, நீங்கள் ஜப்பானுக்குப் போனது சைக்கிள் ஓட்டிக்கொண்டா, அல்லது நடந்தா அல்லது நீஞ்சிக் கொண்டேவா? இப்படித்தானே சூழலைப் பாதுகாக்க முடியும்?
2. ஆனால், நீங்கள் ஒரு விமானத்தில் பறந்தீர்கள். விண்ணிலே கரியமிலவாயுவைச் செலுத்தி – ஓஸொன் அடுக்குக்கு எதிராக, உலகளாவியசூடுபடலுக்கு ஆதரவாக – இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறீர்கள்! எப்படிப்பட்ட சுற்றுச்சூழல் மாசுபடல்! என்ன அநியாயம்!!
3. இருந்தாலும், இளித்துக்கொண்டே கீழே இறங்கியதும் உங்களுக்கே உங்கள் காரியம் எல்லாம், சொல்வது ஒன்று செய்வதொன்றெல்லாம் மறந்துவிடுகிறது. வாழ்க்கையை இப்படி இரட்டை வேடதாரியாக நடத்தின் கொண்டு அனைவரையும் முட்டாக்கூவான்களாக்குவது எவ்வளவு சுலபம்! சபாஷ், சுந்தரராஜனாரே!
5. நீங்கள் கமுக்கமாகப் போன விமானத்தின் தொழில் நுட்பம் எப்படி சாத்தியமானது சொல்லுங்கள்? நீங்களும் உங்களுடைய சகதோழர்களும் வடிவமைத்தத்தா அது? கொஞ்சமாவது நேர்மையாக (அது தேவரீருக்கு மிகக் கஷ்டம் எனத் தெரிந்தாலும்) யோசித்தால் – அதற்கான அடிப்படை ஆராய்ச்சிகளைப் பற்றி உங்களுக்குக் கூட நன்றியுடன் நினைக்கத் தோன்றுமில்லையா? பின்னர், அதற்கான தொழில் நுட்பங்களில் பல – ராணுவத் தேவைகளால், விசும்பு ஆராய்ச்சித் தேவைகளால் உந்தப் பட்டன எனும் அடிப்படை விஷயமும் தெரியவருமில்லையா?
6. உலகமயமாக்கலும், விமானங்களை உருவாக்கும், இயக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் இல்லாவிட்டால், உங்களால் அவற்றில் பயணம் செய்து, அவைகளையே கரித்துக்கொட்ட முடிந்திருக்குமா. சொல்லுங்கள்?
7. மற்றபடி, நீங்கள் மிகமிக நேர்மையானவர் என்கிற காரணத்தால் – உங்கள் வீட்டில் மின்சாரம் உபயோகிப்பதில்லை (ஏனெனில் மின்சார உருவாக்கம் மோசமான கழிவுகளை உருவாக்குகிறது), ஸெல்ஃபோன் இல்லை (ஏனெனில் – அய்யா, அவற்றில் மைக்ரொவேவ் கதிரியக்கம் இருக்கிறது), நீங்களே உழுதுபயிரிட்டு உங்கள் தொந்திகளை வளர்த்துக் கொள்கிறீர்கள், பயணம் செய்ய வெறும் நடையோ அல்லது சைக்கிளோதான் … … என்றெல்லாம் எனக்குத் தெரியும். பின்னெப்படி நீங்கள் ஒரு பூவுலக நண்பராவீர்கள், சொல்லுங்கள்?
9. இன்டர்நெட்டின் பேரனான இணைய வலப் பின்னல் என்பது அமெரிக்க ராணுவத்தின் கொடை. பன்னாட்டு நிறுவனங்களின் வெகுமதி. ஆகவே இதனை நீங்கள் உபயோகிக்கவே கூடாதல்லவா?
10. மேலும் உங்கள் இணையதளத்தை நடத்திச் செல்வதற்கு, உங்கள் வீட்டினை இயக்குவதற்கு, பிட்பிட்டாக பிட்டுக்கு மண் சுமப்பதற்கு மின்சாரம் தேவை – ஆனால் ஐயகோ – இந்த எழவெடுத்த மின்சாரம் என்பது – அனல்மின் நிலையங்கள் (அம்மாடியோ! புகையும் கழிவும் சுரங்கச் சுரண்டலும்) மூலமாகவோ, நீர்மின் நிலையங்கள் (அய்யய்யோ! நீர்தேக்க பூகம்பம், இயற்கை வளம் சுரண்டப்படல், மலைவாசி மக்கள் பாதிப்பு) மூலமாகவோ, அணுக்கருசக்தி நிலையங்கள் (ஆ! அணுகுண்டு!!) மூலமாகவோ, காற்றாலைகள் (ஓ! பறவைகள் சாகும்! விஷ்விஷென்று சப்தம்வரும்!) மூலமாகவோ, ஸோலார் பிவி (ஆஆ! இத்தகடுகளை உற்பத்திசெய்ய எவ்வளவு சுற்றுச்சூழல் சீர்கேடுகள்! அதுவும் பேட்டரிகள் – அவற்றில் காரீயமும் அமிலமும் வேறு!!) மூலமாகவோ, கடலலை ஓதங்கள் (ஆ! கடல்வாழ் ஜந்துக்கள் அவதிப்படும், தவிர நில அரிப்புவேறு!) மூலமாகவோதானே வரவேண்டும்.
- ஊர்திப் பயணங்கள் (மிதிவண்டி தவிர) செல்லவே போவதில்லை.
- இணைய தளத்தை இழுத்து மூடப்போகிறீர்கள்.
- இணைய தொடர்பை முழுமையாகத் துண்டித்துக்கொள்ளப் போகிறீர்கள்.
- ஸெல்ஃபோனை பரணில் போட்டுவிடப் போகிறீர்கள்.
- உங்களுக்குத் தேவையான காய்கறிகளை, தானியங்களை நீங்களே பயிரிட்டுக்கொள்ளப் போகிறீர்கள்.
- உங்களுக்குத் தேவையான நீரை – மழை நீரின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.
- சமையலை கேஸ் அடுப்பு வைத்துச் செய்யாமல், உங்கள் வீட்டில் வளர்ந்த மரத்திலிருந்து சுள்ளி முறித்து அடுப்பெரிக்கப் போகிறீர்கள்! (வெளிவரும் புகையை நீங்களே முழுங்கப் போகிறீர்கள்!)
- உங்கள் உடைகளை நீங்களே ‘ஆர்கனிக்’ பருத்தி வளர்த்து, நூல் நூற்று, நெய்து, தைத்து உடுத்திக் கொள்ளப்போகிறீர்கள்!
ஆனால் – மேற்கண்ட எதற்கும் எந்த ஒரு கருவியையோ தொழில் நுட்பத்தையோ உபயோகிக்கப் போவதில்லை.
அதாவது – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசமாட்டீர்கள் நீங்கள். புடம்போட்ட நேர்மையானவர் நீங்கள்…
எப்பேர்ப்பட்ட ஆசாமி நீங்கள்? இன்றைய காந்திதான் போங்கள். ;-)
இதையெல்லாம் செய்தபிறகு – நீங்கள் தெகிர்யமாக ஊருக்கு உபதேசம் செய்யலாம், சரியா? ஆனால், இதெல்லாம் உங்களுக்கு முடியாதோ?
என் கருத்தில்:Yes. There should be NO free speech; it should be taxed HEAVILY. … … … ங்கோத்தா, வெறுப்பாக இருக்கிறது, இந்த நடிப்புச் சுதேசிகளின் மினுக்கலைப் பார்த்தால்… இவர்கள் அலகைத் திருப்பி, காதைத் திருகி, உள்ளீடற்ற மண்டையில் ரெண்டு குட்டு கொடுத்தால் என்ன?
அல்லது, நம் உறவினர்களுக்குச் சொல்லிவிடவேண்டியதுதானா? :-((
பின்குறிப்பு: பாவம், வெங்கடேஸ்வரன், இந்துமதி குழு. அதற்குமேல் பாவம், என் மதிப்புக்குரிய ஞாநி. இவர்களுக்குப் போய் பாவம், போயும்போயும் பூவுலகின் நண்பர்களை, நண்பர்களாக வரித்துக்கொள்ளவேண்டிய கட்டாயம். என்ன சோகம்.
தொடர்புள்ள பதிவுகள்:
- ‘கூடங்குள எதிர்ப்பு மேதை’ மேதகு உதயகுமார், மேலதிகமாக ஞானம் பெற்று, ‘ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்’ உளறல்குமாரான கதை 08/05/2015
- போங்கடா/போங்கடீ அரெகொறெங்களா, நீங்களும் ஒங்களோட ந்யூட்ரினோ எதிர்ப்பும்… 02/03/2015
- | அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! | 06/06/2014
- ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்…02/05/2014
- எப்படி, மிகதைரியமாகப் பொய்சொல்கிறார்கள், இந்த மகாமகோ ‘வரலாற்று ஆய்வாளர்’ எஸ். ராமகிருஷ்ணனும் ‘பொறியாளர்’ ஸ்ரீலஸ்ரீ சுந்தர்ராஜனும்… 22/03/2014
- அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்16/03/2014
May 11, 2015 at 09:44
அய்யா,
எசமானே, கூடங்குள எதிர்ப்பு சந்தை வியாபாரம் முடிஞ்சு ரொம்ப நாளாச்சு.புள்ளைக பசியில வாடி வதங் குறத பாக்கையில உசிரே வேகுதய்யா? தேனியிலே நியூட்ரினோன்னு ஒரு சரக்கு சல்லிசா கிடைக்குதுன்னு கூட நாலு பேர கூட்டிட்டு போய் பொளப்ப பார்க்கலா ன்னா யாரோ ராமசாமின்னு ஒரு ஆள் கண்டதையும் சொல்லி நம்ப பொளப்ப கெடுக்குறானேப்பா.
கொல்றாங்கப்பா…………..
May 11, 2015 at 19:31
மிதிவண்டி உருவாக்குவதற்கு கூட இரும்பு தேவைபடும் அதனால் உயர்திரு சுந்தரராஜனார் அவர்கள் இனிமேல் நடந்தே செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
May 12, 2015 at 13:11
சரிதான்!
ஆனால் அய்யா, அவர்கள் செருப்பும் போட்டுக்கொள்ள முடியாது. கோமணமும் கட்டிக்கொள்ள முடியாது – ஏனெனில் அவற்றில் மறுசுழற்சி செய்யமுடியாத ப்லாஸ்டிக் இருக்கும்.
சட்டைப்பித்தான்களேல்லாம் ப்லாஸ்டிக்! போட்டுக்கொள்ளும் ஜீன்ஸ் துணி நெய்ய எவ்வளவு நீர் செலவழிக்கிறார்கள் தெரியுமா?
சுந்தரராஜனாதிகள் இனிமேல் திகம்பர சாமியார்களாக டிங்டாங்கென்று மட்டுமே வளையவரப் போகிறார்களாமே! உண்மையா??
May 18, 2015 at 15:14
எல்லாம் புரிந்தது! “டிங்டாங்” என்ற வார்த்தை மட்டும் புரியவில்லை :-)
May 18, 2015 at 15:58
வெங்கடேசன்! என்ன ஆயிற்று உங்களுக்கு? திகம்பர சாமியாரென்று எழுதியிருக்கிறேன், பின்னர்தான் டிங்டாங்! அப்படியுமா இப்படி ஒரு கேள்வி!!
கொஞ்சம் குனிந்துகொண்டு (தொப்பை மறைக்கவில்லையானால்) பார்த்துக்கொள்ள முடியுமானால், ஓரளவு புரிபடலாம்.
நன்றி.
May 19, 2015 at 08:24
“உனக்குள்ளே பார்” என மெய்ஞானவாதிகள் கூறுகின்றனர். அதுபோல நீங்கள் “குனிந்து பார்” என கூறினீர்கள். குனிந்து பார்த்ததும் எல்லாம் புரிந்தது. இதுவே மகா மந்திரம், “குனிந்து பார்”. இனி, அடிக்கடி குனிந்து பார்க்கலாம் என திட்டமிட்டுள்ளேன்!
May 12, 2015 at 15:20
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்கள் மாட்டு கறி தின்கின்றனர்.மாட்டு கறி சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்பதால் அனைவரையும் மாட்டு கறி சாப்பிட வேண்டும் என்று கட்டாயபடுத்த முடியுமா.யாருக்கு நுட்ரினோ ஆராய்ச்சி நிலையம் வேண்டுமோ,எங்கு அனைவரும் ஆதரிக்கிறார்களோ அங்கு அமைத்து கொள்ளுங்களேன்
மாட்டு கொழுப்பில் இருந்து தயாராகும் மருந்துகள்,தொழில் இருந்து செருப்புகள் ,அதன் கன்றுகளுக்கு சுரக்கும் பாலை உறிஞ்சி கொண்டே ,பல லட்சம் ஜீவராசிகள் அழிய காரணமான அணு உலைகளை,மின்சார உற்பத்தி நிலையங்களை,ஆராய்ச்சி கூடங்களை ஆதரிப்பவர்கள் ஜீவகாருண்யம் பேசுவதை,பசுவின் புனிதம்,அதனை சாப்பிட கூடாது என்று சட்டம் இயற்றுவதை விடவா சுந்தரராஜன் பெரிய தவறு செய்து விட்டார்.
மருத்துவ ஆராய்ச்சிக்கு மட்டும் ஏன் இதனை எதிர்ப்பு. உயிரை காக்கும் மருந்து ஆராய்ச்சியாக இருந்தாலும் விருப்பம் இல்லாதவன் மேல் ஏற்றுவது உலகெங்கும் கடுங்குற்றம் தான் .இது மற்ற ஆராய்ச்சிகளுக்கு பொருந்தாதா
கர்நாடக அரசு காலியாக கிடக்கும் சுரங்கத்தில் கூட நுட்ரினோ ஆராய்ச்சி கூடம் அமைக்க தடை விதித்து இருக்கிறது. ஆராய்ச்சி கூடம் அமைக்க சிறந்த இடம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை ரிஷி கோத்திரத்தினர் (கிருஷ்ணகுமார் சார் கோத்திரம்,மாட்டு மூத்திரம் ரெண்டும் வந்து விட்டது)தலைமை தாங்கி துரத்தி விடும் போது யாரும் அவர்களை அந்நிய தேச கைகூலிகள்,எவ்வளவு பணம் வாங்கி கொண்டார்கள் என்று அவதூறு சொல்ல வாய் வராது.உலகை,இந்தியாவை,தமிழ்நாட்டை காக்க அவதாரம் எடுத்தவர்கள் ஆயிற்றே ரிஷிகோத்திரகாரர்கள்.
கர்நாடாக அரசுக்கு நுட்ரினோ ஆராய்ச்சி கூடம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை இருக்கும் போது,நீலகிரி மலைத்தொடரில் இருப்பவர்களுக்கு உறிமை இருக்கும் போது,அவர்களின் கோரிக்கையை ,போராட்டத்தை மதித்து அரசு அந்த இடம் சிறந்த இடமாக இருந்தாலும் திட்டத்தை கைவிடும் போது,பொடி பகுதியில் அமைய கூடாது என்று எதிர்ப்பவர்கள் மட்டும் எப்படி ஐயா அந்நிய கைகூலிகள்,அற்பர்கள்,கூண்டோடு கொல்லப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்
May 12, 2015 at 15:25
ஆ! என் சார்பாக என்னுடைய மரண நினைவுகளை (obituary) யாராவது எழுதமுடியுமா? நிலைமை படுமோசமாக ஆகிக்கொண்டிருக்கிறது! எவ்வளவு நாள் என்னால் தாக்குப்பிடிக்கமுடியும் என்று தெரியவில்லை!
காப்பாற்றவும்! பூவண்ண மாட்டுக்கறிமுதல்வாதத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு வேறு நாதியேயில்லை!
May 13, 2015 at 09:07
(கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்பதால் அனைவரையும் மாட்டு கறி சாப்பிட வேண்டும் என்று கட்டாயபடுத்த முடியுமா.யாருக்கு நுட்ரினோ ஆராய்ச்சி நிலையம் வேண்டுமோ,எங்கு அனைவரும் ஆதரிக்கிறார்களோ அங்கு அமைத்து கொள்ளுங்களேன் )
ஐயோ! என் செல்லமே!! உங்களுடைய அறிவு கொழுந்து விட்டு எரிகிறது!! தயவு செய்து இங்கு வந்து பின்னூட்டம் இட வேண்டாம் என்று மன்றாடி கேட்டு கொள்கிறேன்.பாவம் ராமசாமி சார் பிழைத்து போகட்டும்.உங்களுக்குத்தான்,வினவு,சுளுக்கு,
சவுக்கு,’மதி’மாறனார் போன்றவர்கள் இருக்கிறார்களே,அங்குபோய் இந்த முட்டைகளை இடவும்.
May 13, 2015 at 13:38
Someone is misusing Poovannan’s ID. This is not him, i don’t see any hyperlink, no copy pasted stuff.
http://en.wikipedia.org/wiki/Hacker_%28computer_security%29
http://en.wikipedia.org/wiki/Hyperlink
May 13, 2015 at 14:18
:-) – Sir, the thing is that Sri Poovannan is himself capable of misusing his own ID, EGO and SuperEgo, I afreud! ;-)
He is oh so capable.
Sorry, I think he is merely and lovingly gullible, but a nice feller otherwise! :-)
Really.
Besides, I have lots of love and affection for the Armed forces fellows. Dr. Poovannan is actually working for the unity and integrity of India, by working in the Army.
Jai Jawaan, Jackie Chan.
June 20, 2015 at 09:57
அப்போ , தமிழ் நாட்டிற்கு காவிரி நீர் தர மாட்டேன் என்று கர்நாடக சொல்லுவதும் சரிதான், யாரவது , காவிரி என்று வந்தீர்கள் , பிச்சுபுடுவேன்..
யப்பா , என்ன லாஜிக்.. ??? நானும் முற்போக்குதான்
May 19, 2015 at 16:52
வெங்கடேசனைத் தேடினால் தனியாக வராம பூவண்ணன் சாரோட வந்தாச்சா. வந்து வெங்கடேசன் மெய்ஞானமும் அடைந்தாயிற்று. ரொம்ப சந்தோஷவ்ம்.
பூவண்ணன் சார் மாட்டுக்கறி மாஹாத்ம்யத்தை சம்பந்தமே இல்லாமல் அட்ச்சு வுட்டு கோத்ரத்தையும் போற போக்குல தாளிச்சு ஒரு வழியா வ்யாசத்த மங்களாசாஸனம் செஞ்சாச்சு. நெனச்சேன். மொத மொதக்கா ராம் ரொம்ப ரொம்ப நீள வ்யாசம்…………. 1300 வார்த்த அது இதுன்ன போதே……………… த்ருஷ்டி பட்டுடுமேன்னு…………. ஒரு வழியா த்ருஷ்டி கழிஞ்சாச்சு…………..
என்ன இறுமாப்பு ராமுக்கு…………… 1300 வார்த்த………….மெய்ஞானம்………… ம்…………….த்ருப்தோஸ்மி.
பூவண்ணன் சார் நீங்க உரலைத் தான் காபி பேஸ்ட் செய்வதாக நினைத்திருந்தேன். ஒரு சில சமயம் உங்களது உத்தரங்கள் கூட காபி பேஸ்டோன்னு டவுட்டு. குஜராத் கலவரம்னாலும் சரி………….. கல்கோனாவின் பயன் கள் அப்படீன்னாலும் சரி………… டபால்னு மாட்டுக்கறி கோத்ரம்னு நீங்க பதியற உத்தரங்களப் பார்த்தா …………. டவுட்டு தான் வருது……….ம்………. பொலிக.பொலிக.
ஒதயகுமார், மேதாஃபட்கர் மெய்ஞானி சார் இப்புடி ஜோல்னாபை கும்பல் எல்லாரும் ஒண்ணு சேந்து கோரஸா கத்தின போது இந்த ந்யூட்ரினோ சமாசாரத்தில் ஏதோ பெரிய பயங்கரம் பீதின்னு நெனச்சேன். போறாத்துக்கு வயசான காலத்துல வைகோ வேற. ம்………கூச்சல் போட்றத்துக்கும் தெளிய வெக்கறத்துக்கும் எவ்வளவு வித்யாசம்………
May 20, 2015 at 17:08
ஆதரிச்சுப் பேசறாரா எதிர்த்துப் பேசறாரான்னே தெரியாத படிக்கு இங்கே https://othisaivu.wordpress.com/2015/05/08/post-498/ பூவண்ணன் சார் உத்தரத்த வாசிச்ச போது ………….. ஒருக்கால் டம்ளர் என்பதையும் மீறி அவரில் உறங்கும் டாக்டர் என்ற அறிவியல் சமாசாரம் விழித்துக்கொண்டு விட்டதோ என்று விதிர்விதிர்த்துப் போய்விட்டேன். இங்க ஆனால் பூவண்ணன் சார் பட்டையக் கிளப்பறார். டம்ளர் என்றும் டம்ளரே என்று நிரூபணமே செய்றீங்களே பூவண்ணன் சார்.
அது சரி. குசுர் பீ என்று மோஹ்தர்மா கௌசர் பீ அவர்களை மின்னாடி பாடாய்ப்படுத்தி எடுத்திருக்கிறீர்கள்.
இங்கயானா ****நுட்ரினோ****………. சார் ராமோட வ்யாசத்துலேந்து காபி பேஸ்ட் செய்யக்கூடாதா? ஏன் இந்த க்ரஹசாரம்.
சரி அதாவது ஒத்துக்கலாம்…………… ஒரு தபா……….. ***உரிமை இருக்கும் போது***…………….. இன்னொரு தபா ………….. **** உறிமை இருக்கும் போது***………….. இப்புடி அக்மார்க் டம்ளரா எழுதலாமா? Too bad