திராவிட முட்டைக்குழல் டுப்பாக்கி! அய்யய்யோ!!
April 16, 2015

அயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள்! நாம் உருப்படுவோமா? (படம் இங்கிருந்து) — (கவனிக்கவும் – மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் – பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா?)
ஆனால் – கடந்த பல தேர்தல்களினூடே தமிழகப் பொதுமக்களில் மிகப்பெரும்பாலோரும், வேறு வழியேயில்லாமல், மிக அற்பத்தனமாக, ஓட்டுக்கு-லஞ்சம்வாங்கிகளாகி விட்டதால் – ஆகவே அடிப்படையில் அயோக்கியர்களாகிவிட்டதனால் – அவர்களுக்கு இதைப் பற்றிப் பேசுவதற்கு, கொஞ்சம் கூச்சமாக இருக்கலாம். (பார்க்க: தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள் (23/04/2014))
…ஆகவே, அவர்களுக்கு காரியார்த்தமாக இவை போன்றவற்றை நினைவுகூர முடியாவிட்டால், பாவம், உதவிக்குத் தான் என்னைப்போன்ற வேலையற்றவர்கள் இருக்கிறார்களே!
சரி.
“…திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக்கப்படுவதுண்டு. … … தற்போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியானோம் என ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகுந்த பூரிப்போடு அறிவித்திருக்கிறார். …”
ம். எனக்கு இதனைப் படிக்கப் படிக்க கொஞ்சம் தேவைக்கதிகமாகவே பூரிப்பாகவும், கொஞ்சம் கிழங்காகவும் இருக்கிறது. பசிக்கிறதோ? :-(
மூன்று குழல் துப்பாக்கியேயானாலும் – ஒரே சமயத்திலா மூன்று குழல்களிலிருந்தும் குண்டுகள் சுடப்படும்? அடுத்தடுத்துதானே நடக்கும் அது? சுத்த அறிவிலித்தனமாக இருக்கிறதே இந்த உவமை. ஆக, முதலில், திமுக குழல் சுடும். மற்ற இரண்டு விசிகே திக குழல்களும் கைகட்டி வாய்பொத்தி, அடுத்த ஆணை வரும்வரை காத்திருக்குமோ? ஆக – இவர்கள் அனைவருமே (கருணாநிதி + வீரமணி + தொ.தி) முன்னேபின்னே எந்தவொரு முட்டைக்குழல் டுப்பாக்கியையும் நேரில் பார்த்ததில்லை என்பது தெளிவுதான். சும்மனாச்சிக்கும் புல்லரிப்பு, ஆகவே சொறிந்துகொள்கிறார்கள் என்பதும் புரிகிறதுதான். இருந்தாலும்…
தொ.தி அவர்கள் சொன்னதில் என்னுடைய தலையாய பிரச்சினை என்னவென்றால் – குழாயும், குழலும் ஒன்றா?
யாதவ குல கிருட்டிணன், குழாயை வாசித்தான் என்று எழுதினால், அதனைப் படிக்கக் கொஞ்சம் சங்கடமாக இருக்காதா?
குழலினிது யாழினிது என்பதற்குப் பதிலாக குழாயினிது யாழாயினிது?
கழிவுநீர்க் குழாய் என்பதற்குப் பதிலாக கழிவுநீர்க் குழல்? :-(
இன்னொரு பிரச்சினை – இரண்டு குழல் துப்பாக்கி இரட்டைக்குழல் துப்பாக்கியானால், மூன்று குழல் துப்பாக்கியானது, இலக்கண/வழமைசுத்தமாக முட்டைக்குழல் என்றுதானே இருக்கவேண்டும்?
மேற்கண்ட இரு முக்கியமான பிரச்சினைகளைத் தவிர, பலப்பல கேள்விகள் உதித்தவண்ணம் இருக்கின்றன…
இவர்கள் இணைந்து யாரை, எதனைச் சுடப் போகிறார்கள்? தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் கூட, வேண்டுமென்பதுக்கு அதிகமாகவே சுட்டாகி விட்டதே? 2ஜி, கலைஞர் டீவி, மேக்ஸிஸ், ‘சொந்த அரசு’ டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச், உரத் தொழில் கமிஷன், நெடுஞ்சாலை கான்ட்ரேக்ட், துறைமுகப் பணிகள் என பலப்பல வகைகளில் லாபம் அள்ளியாகிவிட்டதே!
ஒருவேளை – சுடப்படப்போவது பரிதாபத்துக்குரிய, இன்னமும் மிஞ்சியிருக்கும் லஞ்சம் வாங்காத சொற்ப தமிழகப் பொதுமக்களா?
யார் இந்த முட்டைக்குழல் டுப்பாக்கியை உபயோகப் படுத்துவார்கள்? ஏனெனில், தமிழகத்தின் முப்பெரும்(!) சக்திகளும் வெறும் குழாய்களாகிவிட்டனவே!
யார் இந்த முட்டைக்குழலைச் சுடுவார்கள்? முட்டைக்குழலுக்குப் பின்னார் யார் இருப்பார்கள்?
சூத்திரதாரி யார்? ஒருவேளை, ஜெயலலிதா அம்மணியோ? அய்யய்யோ, அவர் பார்ப்பனதாரி என நினைத்துக்கொண்டிருந்தோமே!
குழாய்களில் யார் குடமுருட்டி குண்டுகளை அடைப்பார்கள்?
-0-0-0-0-0-
“… விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையி லான நட்புறவை எவராலும் எக்காலத் திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்பு கிறது.”
… கட்சிக்குள் பலப்பல குடுமிப்பிடிச் சண்டைகள் இருந்தாலும், கொள்கைகள் துப்புரவாக நீர்க்கடிக்கப் பட்டாலும், ஊழல்கள் இருந்தாலும், சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டாம் வரிசைத் தலைவர்களே இல்லை எனும் நிலைமையானாலும், ஒரு உபஜாதிக் கட்சியானாலும், கட்சியின் பரந்துபட்ட வளர்ச்சிக்கான நீண்டகாலக் கொள்கை என ஒன்று இருக்கிறதா என்கிற கேள்விக்குறி பெரியதாக இருந்தாலும் – பொதுவாக இக்கட்சி மேலெழும்பி வரலாம் என நினைத்திருந்தேன்.
திராவிட இயக்கத்துக்கும் தலித் விடுதலைக்கும் – ஒரு சுக்குத் தொடர்புமில்லை என்பதை அறியாதவரா தொ.தி? ஏன், இந்த திராவிடப் பொசுக்கும்தீயில், தமிழ் இனமானப் பொய்மைகளில் கலக்க முயற்சிக்கிறார்?
… எது எப்படியோ, இவருடைய இம்முயற்சிகள் – அவர் கட்சியினுடைய நீண்டகாலத் திட்டத்தின் அங்கங்களாக இல்லாமல் இருந்தால் சரி. :-(
சரி, ரங்கராஜ் பாண்டே என்றால், தமிழில் பொருள் – திரிபுவாத சக்திகளா? அய்யோடி சொக்கீ!
April 16, 2015 at 08:35
Super’o Super!
April 16, 2015 at 18:49
//குழாய்களில் யார் குடமுருட்டி குண்டுகளை அடைப்பார்கள்?//
அதில் குண்டு என்றுமே இருந்ததில்லை ஐயா. வெறும் air gun , தப்பு தப்பு … வெற்றுக்குழல் தான். தேர்தல் நேரங்களில் இந்த துப்பாக்கி ” எட்டைக் குழலாக” வும் இருந்திருக்கிறது.
April 17, 2015 at 15:22
:):):)