‘கூடங்குள எதிர்ப்பு மேதை’ மேதகு உதயகுமார், மேலதிகமாக ஞானம் பெற்று, ‘ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்’ உளறல்குமாரான கதை
May 8, 2015
எச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.
போராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா? அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே!
இம்மாதிரி அயோக்கியர்கள், காமாலைக் கண்ணர்கள் – தாங்கள் பெற்றுக்கொள்ளும் ‘சாப்பாட்டிற்காகக்’ குரைப்பதை, பசி தீர்ந்ததும் ஒரளவுடன் விட்டுவிடுவார்கள் எனப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தால் – தொடர்ந்து போராளித்தன வாந்திகளை வெளியேற்றிக்கொண்டே இருக்கிறார்களே!
தமிழகம் இந்தியா என ஆரம்பித்து உலகத்தையே ஸ்தம்பிக்கவைத்து, ஒழித்தால்தான் இவர்களுடைய பேராசை தீருமோ? ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எனக்குப் பொறுக்கவேமாட்டேனென்கிறது.
…ஏனெனில், கடந்த சில நாட்களாக, நம் முட்டாள் தமிழகத்தின், நம்பவேமுடியாத ந்யூட்ரினோ ஆராய்ச்சியெதிர்ப்பை – நம் நெடும் அறிவியல்(!)/அரசியல் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். (ஓரளவு – இந்த ந்யூட்ரினோ பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறேன் என்பதை நினைவில் வைக்கவும்!)
சரி.
இந்த மிகுந்த சலிப்புதரும் மண்வெட்டி ஆராய்ச்சிமூலம் எனக்குத் தெரியவருவது என்னவென்றால் – சில அயோக்கியர்கள் தங்கள் சுய நலனுக்காக மட்டுமே, இப்படிக் கடைந்தெடுத்த கயமைப் பரப்புரைகளை மூர்க்கமாக முன்னேற்றிய வண்ணம் இருப்பதால்தான், நாம் இப்படி இருக்கிறோம்!
-0-0-0-0-0-0-0-0-
இந்த பரப்புரைவாதிகளில் இரு வகையறாக்கள் இருக்கிறார்கள்:
தொழில்முறை திராவிட அரசியல்வாதியான அவரையாவது, சிரித்துக்கொண்டே விட்டுவிடலாம். எதையடா எதிர்த்து, தம் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளலாம் என அலைந்துகொண்டிருக்கும் சீமானார்களையும் இப்படியே புறங்கையால் ஒதுக்கி விடலாம்…
2) ஆனால் – மேதாபட்கர், உதயகுமார் போன்றவர்கள்??? இம்மாதிரி வெறிபிடித்த தொழில்முறை கீபல்ஸ்களை எப்படிப் புரிந்துகொள்வது?
மக்களுக்கு, உலகத்துக்குத் தன்னலம் கருதாது கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல் (அதாவது பொய்களை மட்டும் இடுபொருட்களாக வைத்துக்கொண்டு) சேவை செய்துகொண்டே ஓடாகத் தேய்ந்துகொண்டிருப்பதாக பிம்பங்களை உருவாக்கும், வீங்கிய பலூன் ஆளுமைகளான இவர்களை எப்படி நாம் இனம் காணக்கூடும்? (ஒரு காலத்தில் நான் ஆராதித்துக் கொண்டிருந்த மேதா பட்கர் அவர்களை, நான் மிக நன்றாக அறிவேன். ஒரு பத்து-பதினைந்துவருடம் முன்புகூட அவர் இப்படி இருந்திருக்கவில்லை – மேதகு அரைகுறை அம்மணியான அருந்ததிராய் அவர்களுடன் மேதா பணியாற்ற முற்பட்டதிலிருந்துதான் மேதா அவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது என்பதென் எண்ணம்) :-(
… காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு, காந்திய உச்சாடனம் செய்துகொண்டு, மிக எளிமையாகக் கதர் சட்டை போட்டுக்கொண்டு, வாய்கூசாமல் பொய்சொல்ல, நம் செல்லத் தமிழகத்தில் பல பதர்கள் கிளம்பியிருக்கிறார்கள் என்பது ஒரு மகிழ்ச்சிதரும் செய்திதான்.
கை நீட்டி, பிச்சைக்காரத்தனமாக, நல்கைகளை வாங்கிக்கொண்டு, நிதி பெற்றுக்கொண்டு, ஒரு எழவும் புரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்து, மிகுந்த தைரியத்துடன், தர்மாவேசத்துடன்வேஷத்துடன், ஆதாயங்களுக்காக, ஊடகப் பப்பரப்பாக்களுக்காக – உளறிக்கொட்டி – ஒன்றுமறியா பாமர மக்களை உசுப்பேற்றி, நாட்டைப் பின்னேற்றம் அடைய வைக்கும் இந்த அடிப்படையில்_அற்பர்கள் – காந்திய அஹிம்ஸாவழியினர் என்று தங்களுக்குத் தாங்களாகவே மினுக்கிக்கொண்டு பவனி வருவதும் மேலதிகப் புல்லரிப்பு கொடுக்கும் விஷயம்தான்.
-0-0-0-0-0-0-0-
ஆனால், இவ்விஷயத்தைத் தான் – இந்த, தன் தலைகளின் பின்னால் தங்களாலேயே வரையப்பட்ட ஒளிவட்டத்தைச் சுமந்து அலையும் மாக்கள், தொடர்ந்து செய்கிறார்கள்.
“The INO site is going to become a nuclear waste dump yard…
அதாவது: “ந்யூட்ரினோ ஆய்வு மையம், அணுக்கருக் கழிவுகளைக் குவிக்கும் இடமாக மாறப் போகிறது.”
உங்கள் வீட்டில் பெருச்சாளி தோண்டும் தொண்டியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நுழைந்து நெளிந்துகொண்டு நசுங்கிப்பிசுங்கிக்கொண்டு சென்றால், திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவில் பொக்கிஷ அறைக்குச் சென்றுவிடலாமாமே, உண்மையா?
உங்களுக்குப் படுகேவலமாக இல்லையா, இப்படி உளறிக்கொட்டுவதற்கு?? ஆனால், பிரமிக்கத்தக்க விதத்தில் நீங்கள் ஒரு காந்தியர்!
“…and 32 villages in Theni district will get affected if blasts are carried out for setting up the observatory.
அதாவது: ” …தேனி மாவட்டத்தில் உள்ள 32 கிராமங்கள் இதன் கட்டமைப்பின்போது ஏற்படும் வெடித்தகர்ப்புகளால் பாதிக்கப்படப் போகின்றன.”
இப்போது 32 கிராமங்கள் பாதிக்கப்படப்போவதாக, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகப் பரப்பப்படும் பீலாவைப் பற்றி:
இந்தப் பாதிப்பு எப்படி ஏற்படும் என மேதகு விஞ்ஞானியார் உதயகுமாரார் விளக்கவில்லை; ஆகவே, தலையில் அடித்துக்கொண்டு, அவருடைய, வைகோவுடைய முந்தைய அறிக்கைகளில் இருந்து மூன்று தினுசான ‘பாதிப்புகளைப்’ பார்க்கலாம்.
வதந்தி #1: இந்த ந்யூட்ரினோக்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து, கதிரியக்கத்தினால் வயல்காடுகளுக்கும், சுற்றுவட்டார மனிதர்களுக்கும் அழிவை உண்டாக்கும்.
வதந்தி #2: ஆராய்ச்சியகத்துக்கான குகை குடையப்படுவதற்கு வெடிமருந்துகளை வைத்து தகர்ப்பார்கள். அதனால் சப்தமும், விரிசல்களும் பூகம்பங்களும் ஏற்படும். அழிவுதான். பேரழிவுதான்.
பதில்: பக்கத்திலுள்ள இடுக்கி அணைக்கட்டிற்காகத் தகர்க்கப்பட்ட பாறையளவை விட இதில் குறைவாகத்தான் தகர்க்கப்படும். அதற்கு உபயோகித்த வெடிமருந்தைவிடக் குறைவாகத் தான் உபயோகிப்பார்கள். அதுவும் 3-4 ஆண்டுகளில் தான் இவை நடக்கும். ஒரே நாளில் தகர்த்தெறியக் கூடிய விஷயமில்லை இது.
இடுக்கி அணைகட்டியதில் ஒரு எழவு பிரச்சினையும் யாருக்கும், எந்த கிராமத்துக்கும் ஏற்படவில்லை. சொல்லப்போனால், வளர்ச்சிதான் ஏற்பட்டது.
மேலும் தகர்க்கும் தொழில்நுட்பம், இக்காலங்களில் அதி நுணுக்கமாக மாறிவிட்டிருக்கிறது. இடுக்கி அணை போல, திறந்தவெளியில் நடக்கப்போவதில்லை இது. மேலும், இந்த ஆராய்ச்சியகம் அமைக்கப்போகும் மலைக் கற்கள் திடம் வாய்ந்தவை. பாறையைக் கொசு கடிப்பதுபோல இருக்கப்போகும் பணிகளால், எப்படித்தான் பூகம்பங்கள் எழ முடியும். (ஆனால் தங்களுடைய போராளிக் குசுக்களால் ஏற்படும் பேரழிவு, வழக்கம்போலவே உங்களுக்குத் திருப்தி தருவதாகவே இருக்கும்; கவலை வேண்டேல்!)
வதந்தி #3: பாறைத் தகர்ப்புகளினால் மேலெழும்பும் தூசி, கற்களினால் சுற்று வட்டார பயிர்கள் பாதிக்கப் படும். நுரையீரல் நோய்கள் மேலெழும்பும்.
பதில்: மிகப் பெரும்பாலான தகர்ப்புகள், குகையினுள்ளே நடக்கும். தூசி அளவுக்கதிகமாக மேலெழும்பாது, பரவாது; அது கட்டுக்குள் தான் இருக்கும். தகர்க்கப்பட்ட பாறைகள் தமிழக அரசினால் வெளியெடுத்துச் செல்லப்பட்டு அதன் பணிகளுக்காக உபயோகிக்கப்படும் அல்லது விற்கப்படும்.
இடுக்கி அணை கட்டும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டன? பூகம்பம்? தூசிப் புயல்?? கற்கள் வீசியெறியப்படல்??? யாருக்காவது நினைவிருக்கிறதா?
“Factual information about the project should be provided in Tamil and Malayalam so that people of Tamil Nadu and Kerala learn what neutrino is all about…
அய்யா உதயகுமார் ஃபெப்ருவரி 9, 2015 அன்று பகர்கிறார்: “ந்யூட்ரினோ பற்றி பொதுமக்களுக்கு போதிக்க – தமிழிலும் மலையாளத்திலும் அதனைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கவேண்டும்.”
எப்படியும் உதயகுமார்களுக்கு இதையெல்லாம் படிக்கும் துப்பில்லை என்பதால் ஒரு பிரச்சினையுமில்லை அல்லவா?
“Mr.Udayakumar, who inaugurated the People’s Science Forum in Madurai which is objecting to the neutrino project, accused that the INO project was nothing but a commercial venture taken up to benefit a US laboratory involved in nuclear studies.
ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்(!) குற்றம் சாட்டுகிறார்: “இந்த ந்யூட்ரினோ திட்டமானது, அமெரிக்காவிலுள்ள ஒரு அணுக்கருசக்தி பற்றி ஆராயும் ஆய்வகத்துக்காக வணிகரீதியாக உதவக்கூடியதான முயற்சி தவிர வேறொன்றும் இல்லை!”
மேதகு விஞ்ஞானி அவர்கள் ந்யூட்ரினோ பற்றி ஐயம்திரிபற அறிந்துகொண்டுவிட்டதால், அதன் வணிகரீதியான சாத்தியக்கூறுகளையும் அவதானிக்கும் ஒரு அதிதொழில்நுட்ப தொழில்முனைவோன் பார்வையிலும், அவ்ரோட கர்த்துகலை அட்ச்சு வுட்றார்! எனக்கு ஒர்ரே புல்லரிப்புதான், போங்கள்!
சரி -அதெப்படி முதல் பத்தியில், இந்த ஆய்வக இடத்தில் அணுசக்திக் கழிவுகளைப்போடப் போகிறார்கள் என்று சொல்லி அடுத்த பத்தியில் இப்படி ஒரு ‘வணிகரீதியான’ டகீல் செய்தி?
அய்யா உதயகுமாரரே – நீங்கள் எந்த வதந்தியைப் பரப்பப் போகிறீர்கள் என முதலில் முடிவு செய்துகொண்டு பின்னராவது உளறக் கூடாதா? அல்லது உங்களது மேலான நோக்கம் என்னவென்றால் – ஒரே சமயத்தில் பல வதந்திகளை உலவவிட்டால், அதில் ஏதாவது ஒன்றையாவது யாராவது நம்புவார்கள் எனப் பிரார்த்திப்பதா?
“There are lots of defects in the nuclear plant there and only when a tragedy takes place, the government will realise its mistake,” he added.
அணுக்கருவுலை கட்டுமான விற்பன்னரும், ஐன்ஷ்டீனுக்கே அணுசக்தியைப் பற்றி பாலபாடம் எடுத்தவருமான உதயகுமார் அவர்கள் சொல்லுகிறார்: “அணுக்கருவுலையில் பல பிறழ்வுகள் இருக்கின்றன; ஒரு சோகம் நடந்தால்தான் அரசு, தன் தவற்றினை உணரும்.”
கூடங்குளத்திலுள்ள அணுக்கருசக்தி உலைகளைப் பற்றிதான், தன்னுடைய வடிகட்டிய பொய்களை யாரும் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்களே எனும் ஒரு விரக்தியில்தான் – இப்படி ஒரு சாபத்தைக் கொடுக்கிறார் நம் போராளி; சில்லறைத்தனம் மிகுந்த உதிரிமனம்தான் இப்படிப் பேஏசும். எது எப்படியோ, அவருக்கு வரும் கோபத்தில், அவரே உலைகளின் மேல் குண்டுகளைப் போட்டு ஒருமாதிரி பேரிடரை ஏற்படுத்தி தன் விழைவை, உள்மனக் கிடக்கையை, உண்மையாக்கிவிடாமல் இருந்தால் சரி.
இவர்தான் காந்திய வழிமுறைப்படியொழுகும் கருணையுள்ளஅஹிம்ஸாவாதியாமே?
-0-0-0-0-0-0-0-
அறிவியலிலும், ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்ட பாபுஜி, இன்றிருந்தால் – இப்படிப் பட்ட ஆசாமிகளை, நடிப்புச் சுதேசிகளை எதிர்த்து ஒரு அஹிம்ஸாவழிப் போராட்டத்தையே ஆரம்பித்துவிடுவார்.
யாருக்காக, இந்த போங்காட்டத்தை ஆடுகிறார்கள் இந்த மேனாமினுக்கிகள்?
எனக்கு உள்ளபடியே வெட்கமாக இருக்கிறது – எனக்கும் கதர் சொக்காய் போடுவது பிடிக்கும் என்பது. :-(
தமிழகத்துக்கு விடியுமா? :-((
-0-0-0-0-0-0-0-
தொடர்புள்ள பதிவுகள்:
- போங்கடா/போங்கடீ அரெகொறெங்களா, நீங்களும் ஒங்களோட ந்யூட்ரினோ எதிர்ப்பும்… 02/03/2015
- | அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! | 06/06/2014
- ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்…02/05/2014
- எப்படி, மிகதைரியமாகப் பொய்சொல்கிறார்கள், இந்த மகாமகோ ‘வரலாற்று ஆய்வாளர்’ எஸ். ராமகிருஷ்ணனும் ‘பொறியாளர்’ ஸ்ரீலஸ்ரீ சுந்தர்ராஜனும்… 22/03/2014
- அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்16/03/2014
May 8, 2015 at 22:18
I read a book written by Udhayakumar ,(http://catalogue.nla.gov.au/Record/3582181) .He Has written about Goebbels and have tried to compare BJP . Never wasted so much time in my life for a piece of crap.
p.s:Sorry for not writing you back . I am mostly done with the books . Will write you back
May 8, 2015 at 23:41
தேர்தல் நேரத்தில் ஐயா, உ.கு அவர்கள் தனது மடை தொண்டர்களுடன் ஒரு கோவில்,ஒரு தேவாலயம், ஒரு மசுதி(வேளியே), ஆகியவற்றிற்க்கு சென்று அங்குலம் அங்குலமாக புகை படங்கள்ளை அள்ளி கடாசி இணையதில் உலாவ விட்டது எல்லாம் அவரது மதசார்பற்ற தொண்டினை பறை சாற்ற, அத்தகைய மஞ்ச மாக்கான் எங்கள் அண்ணன் உ.கு.
May 9, 2015 at 10:19
What is ur opinion on
கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல்- மீள்பதிவு
http://siragu.com/?p=1733
May 9, 2015 at 12:29
இதில் என் கருத்துக்கு என்ன அவசியம்? பீதி பேதி என்று வதந்திகளைப் பீச்சியடிப்பது நம் தமிழ வழமைதானே!
மேலும் அய்யா, உளறுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது – உங்களுடைய ‘சாகுல் அமீது’ உட்பட. அறிவியல் எழுதவருகிறோம் என வந்து சிறிது அறிவியலையும், மிகுந்த அளவு மஞ்சள் காமாலையையும் ஜனரஞ்சகமாகக் கலந்தால், அதனைப் படித்து இறும்பூதடைவதற்கு பல விசிலடிச்சான் குஞ்சுகள் திரளும். அவருடைய இப்பதிவிற்கும் அப்படித்தான்.
இதே ‘சாகுல் அமீது’ அவர்களின் கந்தறகோளக் கட்டுரை இன்னொன்றின் மீதான ஒரு சிறு விமர்சனம் ஒத்திசைவில் வந்திருக்கிறது. (இந்த உரையாடலை, சரவணன் அவர்கள்தான் ஆரம்பித்து வைத்தார்!)
https://othisaivu.wordpress.com/2014/05/02/post-370/#comment-2440
படித்து இன்புறவும். தொடர்ந்து இப்படியேதான் எழுதுவார்கள் இணையத்தின் சாபக்கேடுகளில் ஒன்றான இந்த சராசரிகள்…
என் பரிந்துரை என்னவென்றால், அரைகுறைகளிடம் நேரவிரயம் செய்யவேண்டாம். அவற்றையே நகைச்சுவைக்காகப் படிப்பதென்றால் வேறு விஷயம்!
நன்றி.
May 10, 2015 at 20:01
ஞாநி ஒழுங்கமைத்த நியூட்ரினோ திட்டம் பற்றிய விவாதம் சென்னையில் நடந்தது
காணொளியாக இங்கே
த.வி.வெங்கடேஸ்வரனின் நிதானமான, தெளிவான விளக்கங்களுக்காப் பார்க்கலாம். (கைதட்டல்கள் விழுவது என்னவோ (ஓரிருமுறை தவிர) சுந்தர்ராஜனுக்குத்தான். தவிர மாறன் ஏற்கெனவே த.வி.வெ. விளக்கிய பிறகும் அடிப்படை ஆய்வுகளால் மக்களுக்கு என்ன நன்மை என்றே கேட்டதும் தேக்கு மரத்திட்டம் என்ற பெயரில் சிலர் ஏமாற்றியதுடனெல்லாம் இதை ஒப்பிட்டதும் படு அபத்தம்.)
May 10, 2015 at 20:31
ஆ! சரவணன்!!
இப்படி என்னை நேரவிரயம் செய்ய வைக்கிறீர்களே!
தமிழகத்துக்கு அரசியல் ரீதியான கதிமோட்சம் திராவிட இயக்கங்கள் ஒழிந்தபிறகுதான் நடக்கும். சரி.
அதேபோல, தொழில் (+மூளை)வளர்ச்சி என்பது, இந்தப் பூவுலகின் அரைகுறை நண்பர்களும் மாறன்களும் (கேடிகள்+இந்தப் புதிய மாறனார்) கூண்டோடு கைலாசம்போனால்தானோ?
படுகேவலமாக இருக்கிறது, இவர்களின் உளறல்களும், அதற்கான விசிலடிச்சான் குஞ்சப்பர்கள்/குஞ்சப்பிகளின் கைத்தட்டலும்…
நாம் மீள்வோமா?
May 10, 2015 at 20:31
சரவணன் சுட்டிய காணொளி பார்த்தேன். பகுத்தறிவு சுடர் கண்களை மிகவும் கூசியதால் முழுவதும் பார்க்கமுடியவில்லை. தமிழையும் தமிழ் நாட்டையும் அறிவியல் கல்வியையும் கடவுள் தான் காக்கவேண்டும்.
May 11, 2015 at 15:36
http://www.thehindu.com/opinion/lead/a-controversy-we-can-do-without/article3975090.ece
The project has now been identified as one of the mega science projects in the XII Plan with an investment of Rs. 1,350 crore by the DAE and the Department of Science and Technology (DST). At present, 26 Indian institutions — which include Calicut University — and about 100 scientists are involved, with the Tata Institute of Fundamental Research, Mumbai, as the nodal institute.
It is therefore bizarre that Mr. Achuthanandan and Mr. Padmanabhan should allege that the INO is a project of Fermilab, USA, initiated along with the controversial Indo-U.S. nuclear deal.
நுட்ரினோ லேப் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட(மிகவும் பொருத்தமான ) இடத்தில அனுமதி மறுக்கப்பட்டு செகண்ட் சாய்ஸ் தான் போடி
A site within the complex of the hydroelectric project PUSHEP of the Tamil Nadu Electricity Board at Singara, near Mudumalai Sanctuary in the Nilgiri Hills, was identified in 2002 as the best option for the project from the geological, environmental and infrastructure points of view.The TNEB prepared the detailed project report in 2007. But, after prolonged delays, the Tamil Nadu Forest Department rejected the proposal in 2010, despite the project being located entirely on the TNEB land.
The location in Bodi West Hills was chosen as the next best site. The main INO laboratory will be located in a cavern 1.3 km below a mountain peak. There, an entirely indigenously built magnetised iron calorimeter detector, weighing about 50 kilotons, will be used to detect both natural and man-made neutrinos. The cavern will be linked to the outside world by a 1.9 km long main tunnel.
In Phase I, however, INO will study only neutrinos produced by cosmic rays in the Earth’s atmosphere. In Phase II, it could be used as a far detector for using beams from future accelerator-based ‘neutrino factories’ in Japan, Europe and the U.S.
இங்கும் எதிர்ப்பு என்பதால் எதிர்ப்பு இல்லாத புரிந்து கொண்ட மக்களை கொண்ட இடத்தை தேர்ந்தெடுக்க கூடாதா
May 11, 2015 at 16:03
அய்யா, நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் பாதகமில்லை.
ஆனால், அதே கட்டுரையின் சாராம்சமாகச் சொல்லப்படுவதுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன்.
“Politicians are doing a great disservice to scientific advance in India by whipping up unfounded fears about the neutrino projec”
நன்றி.
May 11, 2015 at 16:14
http://www.theweekendleader.com/Headlines/4064/neutrino-project:-kicking-up-dust-and-trouble–.html
India was a world leader in the 1960s when it began experimenting with neutrinos decaying in an abandoned Kolar Gold Fields mine in Karnataka.
The experiments were given up with the closure of the KGF in the 1990s and the Karnataka government denying permission for a ghostly venture about which not much was known to the people.
The Department of Atomic Energy, meanwhile, launched a graduate training programme at Homi Bhabha National Institute, a deemed university under DAE. The UPA government in 2009 decided to set up a India-based neutrino observatory at Singara in the Nilgiris.
An agitation against the project was launched by Gita Srinavasan, wife of former Atomic Energy Commission chairman MR Srinivasan who lives in the Nilgiris, forcing Jairam Ramesh, Union Minister for Environment, to shoot down the proposal.
ஏற்கனவே சுரங்கம் இருந்த நுட்ரினோ ஆராய்ச்சிகள் நடந்து வந்த கோலார் தங்க சுரங்கம் பகுதி உதவாதா
சுரங்கம் மூடப்பட்டதால் மிகுந்த பாதிப்புக்குள்ளான கோலார் வாழ்மக்கள் (மிக்பா பெரும்பான்மையானோர் தமிழர்கள் தான் )எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்புகளும் குறைவு
May 11, 2015 at 16:39
அய்யா, அச்சுரங்கம் இவ்விஷயத்துக்கு ஒத்துவராது. பல நுணுக்கமான விஷயங்கள், பிரச்சினைகள்.
வேறுவழியெயில்லாமல் ஆஃப்கனிஸ்தான் பக்க டொராபொரா மலைக்குகைகளில் அல்-கய்தா கும்பலின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த ஐஎன்ஓ நடந்தேறலாம். இது தொடர்பாக, மோதி சார்பாக சுப்ரமணியன்சாமி – தலெபன்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதற்கு முன்னால் உதயகுமாரும், சுந்தரராஜனும் புர்கா/பர்தா போட்டுக்கொண்டு – இதனைத் தடுக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்வி. கூடியவிரைவில் எஸ்.ரா இதனைப் பற்றி ஒரு சிறுகதை எழுதவும் உள்ளார்.
எல்லாம் நன்மைக்கே!
இனி தொடர்பில்லாமல் இணையத்தில் தேடி, உங்கள் பாணியிலொரு சுட்டியையும் கொடுக்கிறேன்.
Between al-Qaeda and history’s dead-letter archive, a few “good men” and a plan: Al-Qaeda seeks to stage operations against India and the wider region.
http://indianexpress.com/article/explained/explained-its-deputy-leader-in-india-is-dead-but-al-qaedas-plans-for-region-are-alive/
நன்றி.
February 22, 2022 at 16:34
Hi, I was reading up on nuclear reactors and protests apropos them and ended up at this particular reply to Mr. Poovannan. Laughed out loud on the line about the short story on the subject by Es. Ra. Also to note, this exchange is one of the few, both of you have not disagreed about something. So.
February 22, 2022 at 17:11
Ah, Mahesh – thanks for the comment; had all but forgotten about the post.
Poovannan is a Fauji and to that extent, I have respect for him in general. BUt, he generally refuses to go beyond ‘what about 200d?’ Oh what to do.
BTW, why don’t write an essay on the Unclear protests against Nuclear power?