… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும். அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு ஒன்றுதானே!
எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!
… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே! ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.
(அல்லது) “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”
ஆ! க ம் ப ன். % ^ # @ ! *& சும்பன்.
கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?
சரி. ஒப்புக் கொள்கிறேன். அவன் ஒன்றும் பெரியதாகச் செய்து கிழித்து விடவில்லைதான். நானும் கம்பராமாயணம் முழுக்கவெல்லாம் படித்துக கரைத்துக் குடித்தவனில்லை – ஆகவே என் அரைகுறைப் படிப்பு தந்த அதிகாரத்தில், அற்பகுஷியில், நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.
என்ன பெரியதாகப் புடுங்கி விட்டான் இந்தக் கொம்பன்? நேரடித் தன்மையும், புதிய பைந்தமிழ்ச் சொல்லாடல்களும் ( = ’ஜிங்குச்சான்’) கொண்டு வீரிட்டெழும் நம் திரைப்படப் பாடல் எழுத்தாளர்களின் வீரியத்துக்கும், ஆழத்துக்கும் வீச்சுக்கும் எதிரில் – இந்தக் கம்பன் எம்மாத்திரம்!
நம்மவர்கள் அடலேறுகள் போல் ஆர்பரித்து முன்னேறிச் சென்றால் – அவன் வீட்டிலிருந்து கட்டுத்தெறிக்க, விதிர்விதிர்த்து, தட்டுத்தடுமாறி ஓட விட மாட்டானா?
கட்டுத் தறியாவது, கவி பாடுவதாவது, காட்டுக்கோழிக் கறியாவது! ஆழி சூழ் உலகாம் – அண்டப் புளுகாம்…
இதெல்லாம் இன்னாடா? ரொம்ப ஊத்திக்கினு மானாவாரியா கத வுட்ரயே கம்பா!
வொங்க வூரு டாஸ்மாக்கு சரக்கு எப்டீ? மப்பு சுர்ருன்னு ஏறுமோ?? Read the rest of this entry »
coyote’s perspective
March 27, 2013
“What’s your view of things, Coyote?”
“Well, it mostly depends on how I’m looking at them, I guess. The angle of perception is important too, of course. And whether or not of open or closed eyes and mind.
“All in all, I’d say I tend to view things thru my crystal, Much more clarity there, and it tends to filter-out misconceptions, too.”
“You know what, Coyote? You talk too damned much!”
“Yes, I agree. And you, Asshole, ask too many questions.”
(From – Elderberry Flute Song Contemporary Coyote Tales. Peter Blue Cloud is one of the finest native american story tellers and poets)
JournalEntry: 13th June, 2006.
இதுதாண்டா போராளி!
February 16, 2013
தமிழர்களின் பிரச்சினைகளில் எது தலையாய பிரச்சினை – என்பதை நான் பல வருடங்களாக ஆய்ந்து ஆய்ந்து, மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருக்கிறேன் – இந்தச் சீரிய ஆராய்ச்சியின் முடிவில் எனக்குத் தெள்ளெனத் தெரியவந்தது என்னவென்றால்… … …
பொறுத்திரு, தவித்திரு, நமைத்திரு – அவசரமே வேண்டாம். பொறுமையாக மேலேகீழே படிக்கவும்.
-0-0-0-0-0-
நம் தமிழகத்தின், தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகள் யாவை என்றால் அவை பல இருக்கின்றன.
1. ????
2. தொலைக்காட்சி மெகாசீரியல்கள்
3. இலக்கியவாதிகள்
4. பட்டி மன்றங்கள்
5. பேருரைகள்
6. சட்டை போடாமல், ஏன், ப்ராவும் கூடப் போடாமல் தங்கள் மார்பகங்களை முறுக்கிக் கொண்டு, மயக்கம் வரும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு வளைய வரும் சூர்யா, விக்ரம், விஜய் போன்ற இத்யாதி பிலிம் ஆணழகர்கள் (மூச்ச விட்டுத் தொலைங்கடா பாவிங்களா, செத்துக் கித்துப் போய்டப் போறீங்க! புள்ளகுட்டிகாரங்கதானடா நீங்க?)
சென்னை புத்தகச் சந்தை நினைவுகள்…
January 20, 2013
சரியாக நினைவில்லை எந்த வருடம் என்று. 1992 / 3 /4 ஆக இருக்கலாமோ?
ஆனால் அன்று காலை 5:30 மணி போல அகாலமாக அழைப்புமணி அடித்தது எனக்கு மிக நன்றாக நினைவில் இருக்கிறது.
யார்டா இது இவ்வளவு காலையில் என்று முணுமுணுத்துக் கொண்டே திறந்தால், மகாதேவன். (முன்பு ஒரு பதிவில் இவனைப் பற்றி எழுதியிருக்கிறேன்).
முந்தின நாள் இரவு மிகத் தாமதமாகத்தான் புத்தகச் சந்தையை விட்டுக் கிளம்ப முடிந்திருந்தது, எங்களால்… மிகவும் அலுப்பினால் அவதிப்பட்ட காலங்கள் அவை – அவனுக்கும் எனக்கும் புத்தகங்களைத் தவிர, அங்கும் இங்கும் ஓடிஓடி அற்புதமான படங்களைப் பார்ப்பதைத் தவிர, பல ஈடுபாடுகளும் தொழில்களும் இருந்தன அக்காலங்களில்.
Read the rest of this entry »

