ashokamitran, kalyan raman, two new translations
March 11, 2016
I have always been fascinated by the way my beloved Ashokamitran – delicately weaves & writes remarkable stuff — without resorting to any literary ‘device’ embellishments or verbal hijinks or melodrama or self-flagellation or laboured constructs or faffing roundabouts or philosophical blather or put-on erudition. Read the rest of this entry »
இரண்டு நல்ல விஷயங்கள் இன்று, பாகிஸ்தான் தொடர்பாக நடந்திருக்கின்றன. ஒன்று: ஒரு விருது கொடுக்கப்பட்டது; இரண்டாவது: ஒரு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.
[ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்!
February 17, 2016

தன்னுடைய சுயசரிதையை, பளிச்சிடும் நேர்மையுடன் எழுதியிருக்கிறார் – அது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.
[ஸுலைமான் தாவுத்] இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்: சில குறிப்புகள்
February 6, 2016
நடைமுறை இஸ்லாமின் மீது அறிவார்ந்த, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கும் முஸ்லீம் சான்றோர்கள் சிலரின் (முடிந்தவரை இளைஞர்களின்) கருத்துகளை, மொழி மாற்றம் செய்து, முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து பதிப்பிப்பதாக ஒரு எண்ணம்; தற்கால முட்டியடி எதிர்வினைவாத இணைய இஸ்லாமியச் சூழலில் இம்மாதிரி மாணிக்கங்கள், சமனத்தன்மை மிக்கவர்கள் – பொதுவெளியில் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசுவது, இயங்குவது என்பவை நடக்கத்தான் செய்கின்றன என்றாலும், அவை அபூர்வமே! ஆகவேதான் எனக்குத் தோன்றுகிறது – இவற்றை, இம்மாதிரிக் குரல்களை முடிந்தவரை முறையாக ஆவணப் படுத்தவேண்டும். (இந்த வரிசையில் முதலாவது; இரண்டாவது இது; ஓடிவந்து உதவ நான்கைந்து அன்பர்கள் முன்வந்துள்ளதால் இது சாத்தியமாகி இருக்கிறது, அவர்களுக்கு என் நன்றி!)
கவலைப் படாதீர்கள்! நான் இசுடாலிர் கட்சியில் ஐக்கியமாகவில்லை. B-)
… முடிந்தால் வாரத்துக்கு ஒரு முறை, நான் இருவரது ட்வீட்களைப் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். அவர்கள்: பத்ரி சேஷாத்ரி, கல்யாணராமன். விழைவு என்னவென்றால், நான் பொதுவாக மதிப்பவர்கள், சொல்வதை – ஆரவாரமில்லாமல், படாடோபம் இல்லாமல் அமைதியாகச் சமனத்துடன் செய்பவர்கள், ஏதாவது சொன்னால், அவற்றை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற விஷயஞான எழவு விவகாரம்தான். தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் வேறு எப்படித்தான் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதாம்? குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள்!) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு! :-( Read the rest of this entry »
பெரியவர், பேராசிரியர் ஜிடி ‘ஸ்வாமி க்யான் ஸ்வரூப் ஸானந்த்’ அக்ரவால், க்ருதக்ஞ – சில குறிப்புகள்
January 16, 2016
பலப்பல வருடங்களாக இவரைப் பற்றிச் சிலபல அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டு / அறிந்துகொண்டிருக்கும் எனக்கு, அடுத்த இரு வருடங்களிலாவது இவர் தங்கியிருக்கும் சித்ரகூட் பிரதேசத்திற்கு செல்லவேண்டும், அவரிடம் உரையாடவேண்டும் என்ற அரிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக, இவ்வரிய சந்தர்ப்பம் இன்று வாய்த்தது.
இம்மாதிரி அபூர்வமான மனிதர்களுடன் பழக, பேச – அழகான, செறிவான அனுபவங்களைப் பெறக் கொடுப்பினை வேண்டும் – ஆனால் எந்த எழவைச் செய்து புண்ணியம் தேடிக்கொண்டதால், எனக்கு இம்மாதிரி விஷயங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது எனக்கு, சத்தியமாக இந்த வினாடி வரை தெரியவில்லை.
‘circular ruins’ vs ‘taare zameen par’ & ‘tinkle’
December 1, 2015
Circa 1972/73, as a little boy, I read a Tamil translation of this mind blowingly beautiful short story of Jorge Luis Borges (JLB) – one of the finest littérateurs that inhabited the earth, an Argentinian – a remarkable essayist and a fine poet too.
This translated ‘circular ruins’ was Vattach-chidhaivugal (=வட்டச் சிதைவுகள் – made available on the web by that fellow-curmudgeon Vimalaadiththa Maamallan, hat tip to him) – artfully and faithfully done-up by a remarkable Srilankan Tamil – Dharumu Aroop Sivaramu (AKA Pramil Banuchenran, Bramil … …) – who, in my opinion, is/was one of the finest littérateurs too. I remember to have been completely bowled over by the translated story and recollect that I tried to hunt for more of JLB’s outputs – not with much success though, as my world then was limited to whatever that was available in the local government lending libraries. Read the rest of this entry »
ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்)
October 20, 2015
பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப் போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை! இவை கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:
அது கர்ட் மக்கள் திரள்கள், தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »
See, I do not normally write about anything that I do not pretend to know about. But, the truth is that, I have been a reluctant witness occasionally, to what passes for learned TV discussions, in the hysterically farcical Indian TV channels, mostly courtesy: youtube.
paul lockhart: a mathematician’s lament
October 8, 2015
I would gladly admit upfront, to my learned biases (or jaundiced reflections based on my personal experiences, if you will).
I am of the opinion that almost all Christian missionary schools (or for that matter, schools belonging to any other denomination or abomination that is centrally organized) are really a bad idea, at best.
Read the rest of this entry »
9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)
September 22, 2015
சுமார் இரண்டரை வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
strongly recommended: a book by the mother + a music album of joy chowdhury et al
September 17, 2015
First things first, dear fellers and fellerinas…
Let me upfront say that, I am big sucker for very beautifully produced and content rich books – and of course – soulful, deep, lilting music.
doubteronomy and numbers
September 13, 2015
This is a reflective piece written (some 5/6 years back or so, for me) on ‘doubt’ by my dear friend, a fine educational philosopher and Ms Guide – K. Rama – a respected colleague of mine and a fantastic Montessori teacher. Of course, this is not a hyperbole.
Let me say that, fantastic teachers are generally very hard to find and then – when you add the mighty Montessori twist to it, oh well…
Elementary age children – really, really love her, for the magic that she manages to weave in the impressionable minds of the children – in the process, enthralling the gawking adults like yours truly too…Of course, my kids benefited immensely from all this magic.
I really miss her & the Montessori Magic these days. *sniff*
இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!
ஆனால் – அதற்காக, என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-) Read the rest of this entry »
மறுபடியும் ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத், ஸ்ரீரங்கப்பட்டணத்தின் ஜமா மஸூதி – சில குறிப்புகள், எண்ணங்கள்
August 25, 2015
“ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.
அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும் என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன? :-)
இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »
மகாமகோ லக்ஷ்மண் கதிர்காமர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 12, 2015
ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள், ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.
இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!
சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »
இதுதாண்டா ப்ர்ஹ்ம்மம்!
August 9, 2015
என் மதிப்புக்குரிய தளங்களில் ஒன்றான ‘அரூபக் கருத்து நிலை வாத்து’ – AbstractGoose! ;-/ – முன்னெப்போதோ பதிப்பித்த சித்திரங்களில் ஒன்றை உங்கள் தலையில் கட்டுவதில் நான் பெருமைப் படுகிறேன்!
ave adolescens, morituri te salutamus!
August 8, 2015
The adolescents require so, oh SOOO much external structure in their lives.
At another level, they also resist that, rightly so. So, these seemingly contradictory pulls make dealing with them, that much more challenging and endlessly tiring.
As a wag said, an adolescent is a teenager who acts like a baby when you don’t treat him (or her) like an adult. Truly and verily. Read the rest of this entry »

