மறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகமே!

June 8, 2018

எனக்கு, இந்த உண்மையை ஒப்புக்கொள்ள, என் மனச்சாய்வுகளும், எனது கேடுகெட்ட ஹிந்துத்துவா மனப்பான்மையும் அறவே இடம் கொடுக்கவில்லையானாலும்… :-(

…தரவுகளின் பாற்பட்டு என் கருத்துகளைத் திருத்திச் சமைத்துக் கொள்வதில் – மாளா, தொடர்ந்த செப்பனிடுதலில், படிப்பறிவைப் பட்டைதீட்டிக்கொள்வதில் எனக்கு இணை நானே என, மிகப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படியெல்லாம், வேறுவழியேயில்லாமல் என்னை நானே புகழ்ந்துகொள்வதற்குக் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும், என்னுடைய பெருந்தன்மையும் மானுடப்பண்பும்  அடக்கமும் யாருக்கு வரும், சொல்லுங்கள்?
-0-0-0-0-0-

முதலில் சிலபல விஷயங்களை – முதலிலிருந்து கடைசி வரை – புரிந்துகொள்ளவேண்டும்.

1. தமிழகத்தின் அனைத்து இடியாப்பச் பிரச்சினைகளுக்கும் (கமல்ஹாஸ்யம், வீரமணி இன்னபிற கொசுக்கள் உட்பட) – அவையில்லாத சாதா பூரிகெளங்கு கொத்துபரோட்டா போன்ற சிறு பிரச்சினைகளுக்கும் — முழுமுதற் காரணம் தமிழகமோ தமிழர்களோ அல்லது திராவிடமோ திராவிடர்களோ அல்ல. அல்லவேயல்ல. இதனை நான் அடித்துச் சொல்கிறேன். அனுபவித்துப் பகர்கிறேன். அண்ணா மீது ஆணை!

இது ஒரு முழுமுதல் உண்மை. இதுதான் தமிழுகலகின், தமிழனின் பரந்துபட்ட(!) பார்வையின், அவன் வாழ்க்கைக்குறிக்கோட்களின், மனோதத்துவப் பின்புலத்தின் அடிப்படை! (தயவுசெய்து இந்த அடிப்படையைக் கிண்டலாக –  தொடையிடுக்கில், குஞ்சாமணிக்கருகில் சதா சொறிய வைக்கும் சரும நோயுடன் (tinea cruris) குழப்பிக்கொள்ளவேண்டா; கண்ணீர் மல்கக் கேட்டுக்கொள்கிறேன், நான் இப்படியும் குறிப்பிட்டிருக்கலாம் என்று கிளம்பக்கூடும் வதந்திகளை நம்பாதீர்கள்!)

கொஞ்சம் பூதக்கண்ணாடி வைத்துத் தேடினால் கிடைக்கக்கூடிய  ஒன்றிரண்டு நல்ல விஷயங்களுக்கு, அதாவது மேன்மைகளுக்கு  (எ-கா: அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் + பின்னர் வரக்கூடிய சமாதிகள்) அவன் காரணம் என்பது உண்மை; ஆனால் – எல்லா பிரச்சினைகளுக்கும் பிறர்தாம், பிறர்மட்டுமேதாம் காரணம். நன்றி.

2. அப்படிப்பட்ட எந்தவொரு பிரச்சினையையும், எம் சகதிராவிடர்கள் போல, ஆழ்ந்து கூர்ந்து நோக்கினால் – அவற்றின் பின்னால் அவற்றின் சூத்துரதாரர்களாக 1) ஆரியம் 2) பார்ப்பனீயம் 3) மனுநீதி 4) வடவர் 5) மத்திய அரசு 6) ஹிந்தி 7) பன்னாட்டு நிறுவனங்கள் 8) மார்வாடிகள் 9) காவி 10) இல்லுமினேட்டி  மட்டுமே (அவன் பார்வையில் – சிங்கிளாக சிங்கமாகவோ, பலவிதமான பன்றிகளாகவோ) இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும். ஏனெனில் தன்னளவில் ஒரு சிறுகுறை கூட இல்லாமல் (ராஜன்குறை அவர்களைத் தவிர) அதி அற்புத அவதாரம் எடுத்தவர்கள், தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பவர்கள்தாம் திராவிடர்கள். அவர்களிடம் மேன்மை மட்டும்தான்.

3. ஆகவே, பொறாமை பிடித்த, திரியாவரம் மிக்க பிறரால், எம் திராவிடன் தொடர்ந்து துன்புறுத்தப் பட்டிருக்கிறான்;  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து – மேற்கண்ட அன்னியசக்திகளால் தொடர்ந்து வஞ்சிக்கப் படுகிறான்; கொடுமைகளில், வன்புணர்ச்சிகளில், தொளைக்காட்சிகளின் தமிள்க் கொளைகலிள், தமிழ்த் திரைப்படங்களில் – அதாவது நானாவித வன்முறைகளில் – அவன் விருப்பத்துக்கு மாறாக அமிழ்த்தப்படுகிறான். ஒரு பாவமும் அறியாத அப்பாவியான அவன், சதித்திட்டங்களில் அப்பாவித்தனமாக விழுகிறான். கொள்ளையடிக்கப் படுகிறான். சுரண்டப் படுகிறான். பிறாண்டப் படுகிறான். சூரையாடப் படுகிறான். வஞ்சிக்கப் படுகிறான். அறையப் படுகிறான். முட்டப் படுகிறான். உதைக்கப் படுகிறான். கிள்ளப் படுகிறான. நசுக்கப்படுகிறான். கொட்டப் படுகிறான். வெட்டப்படுகிறான். கொளுத்தப் படுகிறான்.  சுடப்படுகிறான். அவனுடைய சுற்றுச்சூழலோடு, அவனும் சேர்ந்து ஒழிக்கப்படுகிறான். மாசுபடுத்தப்படுகிறான். அருவருக்கப் படுகிறான். கருவறுக்கப் படுகிறான். பாவம், அவன்…

அவன் மீதான, பிறருடைய கருத்தியல்+கரயியல் வன்முறைகளுக்கு ஒரு அளவேயில்லை. அவனுக்கு எங்கும் ஒரு நண்பனும் இல்லை. வடவர்களையே விடுங்கள் – அவனைச் சுற்றியிருக்கும் தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ – அவனை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை. எல்லோரும் அவனைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள். சீண்டுகிறார்கள். சில்மிஷம் செய்கிறார்கள்.  பக்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்காவோ, அவனைப் பார்த்து நகைத்துக்கொண்டே இருக்கிறது.

இவர்களையே விடுங்கள்.  அந்தத் தாளிப்புக்கடுகான புதுச்சேரி கூட, தமிழகத் திராவிடத் தமிழனை மதிக்கமாட்டேனென்கிறது; எடுத்துக்காட்டாக – தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனப் புத்தகங்களுக்குப் பதிலாக, தங்களுக்கென்று தனியாக, தரமான தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பித்துக்கொள்ளப் போகிறது; தமிழனின் தரத்தைப் பார்த்து ஏகோபித்து இன்புற்று அவன் தாளடி பணியாமல், இறுமாப்புடன் அலைகிறது அது!

பிற நாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழ்ந்துகொண்டு சுபிட்சத்துடன் இருக்கும் தமிழர்களுமே கூட – தமிழகத்துத் திராவிடத் தமிழனை, ஒரு மிருகக்காட்சிச் சாலை நீர்யானை போலவோ அல்லது வேலியோர ஓணான் போலவோதான் பார்க்கிறார்கள். நன்றி கெட்டவர்கள்! ஆரியமாயையில் மூழ்கியவர்கள்!

3. மேற்கண்ட அடக்குமுறைகளுக்கு, அழிச்சாட்டிய ஆரியங்களுக்கு எதிராகத் திமிர்ந்தெழுந்து –  ஏன், நம் செல்ல திராவிடன் அத்துமீறவில்லை, அடங்க மறுக்கவில்லை திருப்பி அடிக்கவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்:

1) திராவிடனுக்கு வாய் இருக்கிறது.
2) ஆகவே, அவன் வாய் ஓயாமல் புரட்சிகீதம் பாடியபடியே சுயமரியாதை குறித்து எழுச்சிமிகப் பேசாத நேரங்களில் – அவன் தன் கட்டைவிரலைச் சூப்பியபடி தூங்கிக் கொண்டிருப்பதில் படு தீவிரமான குவியத்துடன் காலத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிக்கிறான்.
அவன் அப்பாவி. ​மீதமிருக்கும் சொற்ப நேரத்தில் திரைப்படங்களைப் பார்த்து தன் அபிமான நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்து புண்ணியம் தேடிக்​கொள்கிறான்; அல்லது விகடனுக்கு, அவனுடைய பிரிய ஆசான்களுக்கு வாசகர் கடிதம் எழுதுகிறான் – மிச்ச நேரத்தில் இருக்கவே இருக்கின்றன, அவன் அவசியம் செய்யவேண்டிய விதம்விதமான திராவிடக் கரமைதுனங்கள் – போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், பேரணிகள், பிரியாணிகள், டாஸ்மாக்குகள், சமூகவளைத்தலங்கள், இன்னபிற போராளித்தனங்கள்…

4. இருந்தாலும், அவனால் பெரும்பாலும் இந்த வடவ அடக்குமுறைகளை, சித்திரவதைகளைத் தாங்கமுடிவதில்லை – இந்தக் கொடும் நடைமுறைகளைப் பார்த்து, விசும்புகிறான். ஒப்பாரி வைக்கிறான்.  தேம்பித் தேம்பி அழுகிறான். ‘நான் திராவிடன் என்பதால்தானே’ என ஓலமிடுகிறான். கொடுந்துயரத்தால் பீடிக்கப்பட்ட அவன் தன் கண்களால் கண்ணீர் சிந்துகிறான்.

பிலாக்கணத்தின் இலக்கணமாக மாறுகிறான். கண்ணீர் வெள்ளம் பெருகுகிறது. (ஈவெரா ‘பெரியார்’ அவர்களால் கிண்டலாகக் குறிப்பிடப்பட்ட ‘கண்ணீர்த் துளிகள்’ மேலோருடன் (=அண்ணா + அய்ம்பெறும் தலைவர்கள் + அக்காலத்தியத் திராவிடக் கொசுறு கருணாநிதிகள் போன்றவர்கள்) இதனைக் குழப்பிக் கொள்ளக்கூடாது).

5.+ திராவிடனுக்கு மூக்கு இருக்கிறது. மூக்கு இருப்பதாலும் அவனுடைய மாளாசோகத்தாலும் ஜலதோஷம் (=ஜெல்ப்பு) பிடித்து அவனுக்கு அமோகமாகச் சளி வருகிறது. (இது ஒரு ஆரிய சளியோ?) ஆகவே மூக்கால் சளியைச் சிந்துகிறான்.  ​முக்காலத்திலும் முக்கிமுனகிக்கொண்டே மூக்காலும் அழுகிறான்.​

7. கடந்த பல்லாயிரம் வருடங்களாக இவன் இப்படியே மூக்காலும் கண்ணாலும் சிந்துசிந்து என சிந்திய சிந்துனைகள் – உலர்ந்து, நெகிழ்ந்து, உப்பி, சிதறி – பின் ஒருங்கிணைக்கப்பட்டு –  மழையில் குழைந்து, வெள்ளத்தில் ஓடி,  வெயிலில் காய்ந்து , படர்ந்து படிந்து – ஒருவழியாக, தமிழகத்தின் ஆழமான படிமானங்களாக புரிந்துணர்வுகளாக புரிதல்களாக, ஏன், ஆழ்படிமங்களாகவே மாறி – அதன் பூகோளப் பரப்பில் உள்ள பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் சமப்படுத்தி –  ஒரு சமவெளியாக மாற்றி விட்டன. அதாவது தமிழகம் ஒரு சிந்து சமவெளியாகவே ஆகிவிட்டது.

8. ஆகவே தமிழ திராவிட நாகரிகம் = சிந்து சமவெளி நாகரிகம்.

QED.

9. இவை மட்டுமல்ல; இம்மாதிரி சிந்துசமவெளி ஆராய்ச்சிகளைப் பற்றியும், அதன் சிந்தனைகள் குறித்த முன்னோக்கிய பாய்ச்சல்கள் குறித்தும் ஒரு காத்திரமான ஆவணப் படமே தமிழில் வந்திருக்கிறது.​
ஒரு பச்சைத் திராவிடனுக்கு – இதைவிடப் பெரிய ஆவணச் சான்று வேறெங்காவது கிடைக்குமா என்பது சந்தேகமே!

ஆக, reQED.

சரி. இத்துடன் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியமா, திராவிடமா அல்லது அவைகளுக்கு முன்னதா பின்னதா சமகாலத்ததா அல்லது தனியாக இருந்து தனியாகவே இறந்ததா போன்ற வேலைவெட்டியற்ற ஆராய்ச்சிகள் முடிவுக்கு வந்துவிட்டன என நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பின்குறிப்பு: மேற்கண்ட சமகாலத் திராவிடமானுடவியல்  அகழ்வாராய்ச்சியைச் செய்தது நானல்ல – அதனைச் செய்த பெருமைக்குரியவர்: பேராசிரியர் மயிராவதம் பகாசுரன் அவர்கள். அசுரவேகத்தில் அசுரப்பிரயத்தனம் செய்து அனைவரையும் அசுரவைக்கும் அகமகிழ் ஆழமான முடிபுகளை அறிந்த ஆய்வாளர்,  தமிழகத்தின் தலைசிறந்த மடையர்களியல் ஆராய்ச்சியாளரான பெருமானார் தொ. பரமசிவம் அவர்களின் சீடர். அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில்  பேராசிரியர் ஷெல்டன் போல்லக்கனாரின் கீழ் பிஹெச்டி மேற்படிப்பு படித்தவர்.  நமக்கு முன்னமே நன்கு அறிமுகமாயுள்ள பேரோதிபேராசிரியப் பெருந்தகையாளரான ஆஇரா வேங்கடாசலபதியாருக்குச் சமமான பராக்கிரமத்துடன் வளையவரப் போகிறவர். அவர் வாழ்க! வளர்க!!

அவரை வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கிறேன்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

தற்குறிப்பு: தொ. பரமசிவம் (மடையரியல்), ஆஇராவேங்கடாசலபதிய அரைகுறைத்தனம் பற்றியெல்லாம் பிஹெச்டி பண்ணும் அளவுக்கு எழுதியாகிவிட்டது. உங்களுக்கு வேலைவெட்டியில்லையானால், அக்கப்போரில் ஆர்வமுண்டானால் – ஒத்திசைவில் தேடிப்படிக்கவும். சுட்டிகளைக் கொடுப்பதற்கு அலுப்பாக இருக்கிறது….

One Response to “மறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகமே!”


  1. […] மறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம… […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s