(ஜெய் பாதாளபைரவன் எஸ். ராமகிருஷ்ணன் சார்பாக) பெற்றோர்களுக்கு (இன்னொரு) இலவச அறிவுரை
June 6, 2018
ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…
பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
அன்புள்ள வாசகப் பெற்றோர்களுக்கு (அல்லது பெற்றோரிய வாசகர்களுக்கு),
நானும் தேசாந்திரியும் நலம். உங்கள் நலமறிய வெறும் வாய்க்கு அவல்.
எப்படியும் முதலில் இந்த எஸ்ராத்தனமான அரைகுரைக்கப்பட்ட பரிந்துரையைப் (=Horse Lord) படிக்கவும்: பெற்றோர்களுக்கு
- வழக்கமான எஸ்ராத்தன அறிமுகம் – பழக்கமான அரைகுறைத்தனம். சனியன், இதனை விடுங்கள் – எனக்கும் சலித்துவிட்டது.
- இந்த ப்ரின்ஸிபால் கடிதம் – பலவருடங்களாக இண்டெர்நெட்டில் சுற்றி வருகிறது. நானே இதனைத் திட்டிச் சுமார் 12 வருடங்களுக்கு முன்னால் அண்டர்நெட் ஐஆர்ஸி சேனல் எழவுகளில் எழுதியதாக (=கிழித்ததாக) நினைவு.
- அண்மையில் – சுமார் இரண்டுவருடங்கள் முன்புதான் இது, அந்த ஆட்டுப்புழுக்கையான ‘சிங்கப்பூர்’ எழவில் தோன்றியதாக புனருத்தாரணம் செய்யப்பட்டது.
- இந்தக் கடிதமே வடிகட்டிய பொய். ஜோடிக்கப்பட்டது. இப்படி எந்த ப்ரின்ஸிபாலும் எந்தப் பெற்றோருக்கும் எழுதவில்லை. முதலில் சுமார் 13-14 ஆண்டுகளுக்குமுன் வந்தபோது இதில் ஏகப்பட்ட ஆங்கிலப் பிரச்சினைகள். 100% குப்பையாக இருந்தது. பின்னர் அவ்வப்போது செப்பனிடப்பட்டு கொஞ்சம்கொஞ்சமாக பிழைகள் களையப்பட்டு வளைய வந்தாலும், இப்போதும் மகாமகோ பிழைகள்.
- இப்படி ஒரு அதிசுயமுன்னேற்ற வகை நெகிழ்வாலஜிக் குப்பையை எழுத, எந்தவொரு ஆசிரியருமே தயங்குவார், அசிங்கவுணர்ச்சியில் வாடுவார் – நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவார். ஆனால், தமிழ் அலக்கிய எழுத்தாளர்களுக்கு, நல்லவேளையாக, பாவப்பட்ட ஆசிரியர்களுடைய சூழ்நிலைகள் இல்லை. என்ன செய்தாலும், குப்பைச் சக்கையை எழுதினாலும், அவர்கள் உள்ளீடற்ற அறிவுரை வாந்தியே எடுத்தாலும் – ‘உள்வாங்கி’க்கொண்டு கிறக்கத்தில் ஆழ, ஒரு பெரிய வாசகரடிப்பொடி கூமுட்டை கும்பலே இருக்கிறது.
- இப்படி ஒரு கடிதத்தை சுண்டைக்காய் சிங்கப்பூரில் ஒரு ப்ரின்ஸிபால் அனுப்பினால் (பொதுவாகவே மனிதவுரிமை கிலோ என்ன விலை எனக் கேட்கும் அவ்வூரில்) அரசுசார்பில் அவருக்கு சர்வமரியாதை கொடுத்து, பிரம்பாலேயே அவர் குண்டியில் அடிப்பார்கள் – அவ்வளவு மோசமான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் இது.
- மேலும் அந்த சுண்டைக்காய் – நல்ல மதிப்பெண், மெரிட், தகுதிகள் உருவாக்கம், மதிப்பிடல் முறைமைகள், மேற்படிப்பு போன்றவற்றையும் – குறிப்பாக பரீட்சை முறைமைகளையும் மிக மதிக்கும் ஒரு தேசம். இம்மாதிரி குப்பைத்தனமாக பொதுமைப் படுத்தல்களையும் அரைகுறைத்தனத்தையும் அனுமதிக்க மாட்டாது.
இந்த எஸ்ராவிய அற்பத்தனத்தை இரு வகையாகப் பார்த்து, பிரித்து, மேய்ந்து புரிந்து கொள்ளலாம்:
1. சிலபல காரணங்களால் – பாவம், எஸ்ரா அவர்களுக்குப் படிப்பறிவு, மேற்படிப்பு போன்றவை வாய்க்காமல் இருந்திருக்கலாம். அதற்கு அனுதாபம் (=Passion of Anu) தெரிவிக்கும் அதே நேரத்தில் – அவர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளரானதற்குக் காரணம் தமிழகத்தில் படிப்பறிவும், சராசரி வாசகரின் தரமும் படுமோசம் என்பது. ஆகவே எஸ்ரா – அரைகுறைத்தனத்தைப் போற்றாமல் என்ன செய்வார்? இது இருப்பின் மாளா அவஸ்தைதானே? இருப்பையே பார்த்துக்கொண்டு அந்தப் பாவப்பட்ட அவஸ்தையானது, மலங்கமலங்க விழித்துக்கொண்டிருப்பது போலல்லவா?
2. ஜெயமோகனை ஜெபித்துக்கொண்டு இன்னொரு பார்வையில் இதனைப் பார்த்தால் – தான் ஒரு மகத்தான அரைகுறை என்பதைக் கூட அறிய முடியாத, தன்னிகரற்ற டன்னிங்-க்ரூகர் எடுத்துக்காட்டான பாவப்பட்ட எஸ்ரா அவர்கள், பிற அரைகுறைத்தனங்களை பரிந்துரைப்பது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
இப்போது பெற்றோர்களுக்குப் பரிந்துரை:
+தமிழிலக்கியக் கழுதைகளுடன் – போராளிக் கழுதைகளையும் இனம்புரிந்து கொண்டு அவைகளை ஒதுக்கவேண்டும்.
1. வாய் விட்டுக் சிரிக்கவேண்டுமென்றால் – எஸ்ரா தளம் பக்கம் போகவும்.
2. தொடர்ந்து படித்து மாரடைப்பு வந்து, பக்கத்து மருத்துவமனையில் அட்மிட் ஆகவேண்டுமென்றால் – ஆனந்தவிகடன், தமிழ் இந்து போன்ற கழிசடைகளில் அவர் உளறுவதைப் படிக்கவும்.
3. ‘படிப்பு ஒரு பெரிய விஷயம் இல்லை’ ‘மதிப்பெண்கள் வாழ்க்கைக்கு முக்கியமில்லை,’ ‘money is not everything’ என்று கண்டமேனிக்கும் மேலான கருத்துகளை உதிர்க்கும் பேமானிகளை நம்பாதீர். இம்மாதிரிப் பொறுப்பற்ற பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்ட பல இளைஞர்களை நான் நேரடியாக அறிவேன். கண்கெட்ட பின் சூரியவுதயக் காரர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபம் வருவதில்லை. வெறும் ரௌத்திரம்தான். நன்றி. படிப்பும் வேண்டும். அறிதலும் தெரிந்துதெளிதலும் வேண்டும். நல்ல மதிப்பெண்களும் வேண்டும்.
4. எதற்கும் தன்னளவில் மதிப்புண்டு. எதிலும் உச்சங்களை அடைய வேண்டும். படிப்பு வரவில்லையென்றால், தொழில் ஏதாவது கற்றுக்கொள்ளலாம், விளையாட்டில் விற்பன்னராகலாம், பெரிய அளவில் தோட்டம் போடலாம் – அவற்றிலும் ஜொலிக்கலாம்; இவற்றில் முக்கியமான விஷயங்கள் – உழைப்பின் மேன்மை + முயற்சி திருவினை ஆக்கும். அவ்வளவுதான். சும்மா படிப்பின்மீது தேர்வுகளின்மீது கல்விட்டெறிந்து கரமைதுனம் செய்துகொள்வது சுகமானதுதான் – ஆனால் கவைக்குதவாது.
5. எஸ்ரா அவர்களே – தேர்வுகளுக்குப் பதிலாக என்ன முறைமைகளை வைத்துப் பிள்ளைகளுக்குப் படிப்பறிவைக் கொண்டு சேர்க்கப்போகிறீர்கள்? கவைக்குதவாத உங்களுடைய பரிசுத்த நெகிழ்வாலஜிக்கு அப்பாற்பட்டு ஏதாவது காத்திரமான, குறிப்பிடத்தக்க பரிந்துரை இருக்கிறதா? அல்லது ‘என் எழுத்துகளைப் படியுங்கள்! அதைவிடப் பெரிய பல்கலைப்படிப்பு இருக்கிறதா, ஹ!’ எனச் சொல்லிவிடுவீர்களா?
6. ஆனால் தமிழ் எழுத்தாளராக – நம் திராவிடச் சூழலில் – அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால் போதுமானது. முட்டாள் வாசகன், தன் வேட்டி அவிழ்ந்து குஞ்சாமணியைப் பெருச்சாளி (இரண்டாம் பத்தியைப் பார்க்க) கடித்துக்குதறுவதைக் கூட உணராமல் நெகிழ்ந்து போய் கிறங்கிவிடுவான்.
7. ஆக, சும்மா சராசரியாக இருக்கவேண்டுமென்றால் தமிழ் இலக்கியவாதியாக இருந்தால்போதும். அதாவது – எஸ்ராத்தனமான தமிழ் எழுத்தாளனாவதும் மனுஷ்யபுத்திரத்தனக் கவிதைகளைச் சரமாரியாகத் தொழில்முறையில் உருவாக்குவதும் – படு ஈஸியான வேலைவாய்ப்புகள்.
நன்றி.
இப்படிக்கு:
போக்கற்றவன்
June 6, 2018 at 20:41
Overambitious parents are there..over emphasis on marks..these coaching factories.. Sad state of affairs..