… … தமிழகத்தில் ஒன்றுமே  சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி  சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.

எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (24/n)

நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல  விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.

பதில் கிடைத்ததா? சரி.

கிடைக்கவில்லையா, அதுவும்  சரியே.

இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .

ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே  சொல்கிறேன்:

சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத  தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத  நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »

பத்ரியின் விட்டுப்போன கேள்வி: [தமிழ்நாட்டு மாணவர்கள்] கோபமடையவே கூடாதா?   (“… Should they not get angry at all?”)

(அல்லது) … தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (23/n)

அய்யா பத்ரி, இளைஞர்கள் / மாணவர்கள் கோபப்படலாம். படவேண்டும்தான். இந்த வயதில் ஒரு தார்மீகக் கோபம் இல்லாதவர்களுக்கு, எப்போதுமே அது வராதுதான். அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான். ஒப்புக் கொள்கிறேன்.

ஆக, அப்படிக் கோபப்படுபவர்களை, உடனடியாக ஏதாவது உருப்படியாக, உபயோககரமாக, ’ஸ்டூடென் ட் ப்ரொடெஸ்ட்’ அல்லாத,  பணி செய்ய வேண்டும் என விரும்புபவர்களை – கீழ்க்கண்ட உடலுழைப்பு சார்ந்த பணிகள் செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஒரு பணியைச் செய்யவேண்டும் – நடுவில் விட்டு விட்டு ஓடி வரக்கூடாது. இது ஒரு கேளிக்கை உண்ணாவிரதமல்ல – சும்மனாச்சிக்கும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது போல – என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (இதற்கு தமிழ் நாடு, இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசிடம் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெறவேண்டும்; மேலும் இந்நடவடிக்கைகளால், சிங்களப் பொதுஜனங்களுக்கும் உதவி விளைவது போலத்தான் இருக்கவேண்டும்.)

Read the rest of this entry »

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (22/n)

பத்ரி:விஷயங்கள்எல்லை மீறிப் போவதைப் பார்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் என்னதாம்செய்யவேண்டும்? அவர்கள் கோபமடையவே கூடாதா? அவர்கள் நன்றாகப் படித்து, நல்லமதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அவ்வளவுதானா? வேறொன்றுமில்லையா?? (“What should the Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”)

தமிழ் நாட்டு மாணவர்கள் ஈழப்  பிரச்னையில் என்ன செய்யவேண்டும் என்றா கேட்கிறீர்கள், பத்ரி? உங்களுக்கு ஆனாலும்  நகைச்சுவை உணர்ச்சி அதிகம்தான், போங்கள்!.

என்னைப் பொருத்தவரை – ‘கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா’ எனும் அதி அற்புத அனுபூதிப் பார்வையில் நிறைய எழுதியிருக்கிறேன். (கீழே சில பதிவுகளின் சுட்டிகள்)

இருந்தாலும்… இப்போது இவர்களில் மிகப்பெரும்பாலோர் உடனடியாக ஒன்றும் (எதற்குமே, ஏன்,  தங்களுக்கேகூட!) உதவிகரமாகச் செய்யக்கூடிய நிலைமையில் இல்லை என்றாலும், இவர்கள் செய்யக்கூடியவை இவைபோல் இருக்கலாம் எனக் கருதுகிறேன். கிண்டலையும் நகைச்சுவையையும் முற்றிலும்  தவிர்க்கிறேன். :-(

நான் கீழே கொடுத்திருக்கும் விஷயங்கள் (உண்மையில் தமிழ் இளைஞனுக்கு, அவன் வாழ்வு வளமையும் செறிவும் பெற என் கோரிக்கைகள் / பரிந்துரைகள்) – சுமார் இருபது வருடமுன்பு, ஒரு இந்திய இளைஞன், எப்படி இந்தியாவையும் தன்னையும் அறிந்துகொள்வது என சுமார் 40 பக்க விஸ்தீரணத்தில் நான் எழுதியிருந்த டெலெக்ஸ்நடை ஆங்கிலமூல ஆவணத்திலிருந்து கடன் பெறப்பட்டது. (ஆங்கில மூலம் தொலைந்துபோய்விட்டது; என் நினைவிலிருந்துதான் அதில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை எழுதுகிறேன்.) Read the rest of this entry »

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (21/n)

முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)

நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.

ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.

அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென  ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)

ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான்  தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே  இல்லை என்றுதான் தோன்றுகிறது.) Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)

சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…

‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.

நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி,  நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும்  குறிப்பிடத்தக்க அளவில் தரம்  வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.

albert-einstein-good-quotes-sayings-indifference-people

எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட  இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.

இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:

‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’ Read the rest of this entry »

சாளரம் #11:  Tamil culture is not sound, it is merely loud. That’s all.  ஆம். தற்காலத் தமிழக் கலாச்சாரத்தின் ஆதாரசுருதி sound-ஆன ஒன்றல்ல, மீளாத் தலைவலி கொடுக்கும் loud-ஆன ஒன்று தான்!

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (19/n)

தமிழையும் ஆங்கிலத்தையும் அடுத்தடுத்து அடுக்காமல்  தொடர்ந்து முழிபெயர்த்து, உங்களுக்கு மேதகு  நடிகர் ‘மேஜர்’ சுந்தர்ராஜன் அவர்களை   நினைவுறுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை, ஐ குட் நாட் அவாய்ட் இட்.  என்னை மன்னிக்கவும், ஐ ஆம் ஸாரி. ;-)

ஆ! இப்போது, பாரம்பரியமிக்க  நம் டமில்ட்டாய் அவர்களிடம் போவோம்!! அதாவது La Decibelle  Tamil Dame Sans merci அம்மணியிடம்…  (மன்னிக்கவும்)

டமில்ட் டாய் + ஓசைபெருக்கி

டமில்ட் டாய் படம் + அவளுடைய புத்தம்புதிய, டமிள் வரளாற்றிலேயே மொதள்மொறையாக அவள் கையிள் எடுத்துக்கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் ஆயுதமான ஓசைபெருக்கி

மேலேயிருப்பது, 1941 வாக்கில் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாயின் படம். அவள் ஆர்வத்துடனும் ஏக்கத்துடமும்  வாயைக் குவித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ‘கொம்பு’ ஓசை பெருக்கி, என் உபயம்.  அவளுக்கு ஒருகால், ஒரு கை மேலதிகமாக இருந்திருந்தால், அந்த ஓசைபெருக்கியையும் தூக்கிக் கொண்டிருக்கலாமே என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாள் அவள், பாவம்  — அவளுக்கு நிச்சயம் தெரியும் எண்ணித் துணிக கருமாந்திரம்  என்று…

ஆக, இயல்-இசை-நாடகம் என ஆர்வத்துடனும் ஆர்பாட்டத்துடனும் ஆரம்பித்த திராவிடத்தமிழ்ப் பண்பாடு தற்போது ஓயின்-ஓசை-ஊடகம் என்று அற்புதமாக விரிந்திருப்பதை (=சுருங்கியிருப்பதை) பார்த்தால் இறும்பூதடைவார் நம் தமிழணங்கார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? Read the rest of this entry »

(அல்லது) खेल खतम!

இந்தத் தொகுப்பில் முந்தைய பதிவுகள்:  சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள்  (07/02/2014), முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? (10/02/2014)

பெரியவர்புராணம் தொடர்கிறது…

… அந்தப் பெரியவருக்கு என்னைப் பற்றி – 1) முரடன், 2) பொறுப்பற்றவன், 3) புத்தகங்களுக்கும் வாழ்க்கைக்குமுள்ள வித்யாசங்களைத் துளிக்கூட உணராதவன் ( ‘சிறு வயதில் படிக்கக்கூடாத புத்தகங்களை, தேவைமெனக்கெட்டுப் படித்து வேதாந்தியானவன்’), 4) ரொம்பத் தலைக்கனம் பிடித்தவன் (’பெரியவங்க கிட்ட மட்டு மரியாதையில்லாதவன்’), 5) படித்த(!) படிப்புக்கான(!!) வேலை, சம்பாத்தியம் என்றில்லாமல் கிறுக்குத்தனமாக நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் 6) பணத்துக்கு உரிய மரியாதையைக் கொடுக்காதவன் (‘வரும் லக்ஷ்மியை உதாசீனம் செய்பவன்’) 7) வேலையற்றவேலைகளில் ஈடுபடுபவன் — — என்றெல்லாம் எண்ணமுண்டு என்று எனக்குத் தெரியும். அவரே பலமுறை நேரடியாக என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எனக்கும், மேற்கண்ட ஜாபிதாவில் என்னைப் பற்றி மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவதைத் தவிர  இதே சுய மதிப்பீடுதான். ஆகவே, அவர் இந்த ஜாபிதாவை ஆரம்பிக்கும்போதெல்லாம் தந்திரோபாயமாக — நீங்கள் சொல்வது சரிதான், இப்போது என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று பதிலளித்து விடுவேன். அவரும்  வாயடைத்துப்போய் அப்போதைக்கு என்னை விட்டுவிடுவார்.

பிரச்சினை என்னவென்றால், அவர் நோக்கில் – நான்,  மேற்படிப்பும் படிக்காமல், ‘ஸெட்டில்’ம்  ஆகாமல், அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டு ஊர் சுற்றிக் கொண்டு சினிமா இலக்கியம் என அலைந்து கொண்டிருந்தது அவருக்கு உவப்பானதாக இல்லை. இத்தனைக்கும், நான் என்னுடைய பதினேழுச் சொச்ச வயதிலிருந்து அவரிடம் பணரீதியாகவோ, மனரீதியாகவோ கடமைப் பட்டிருக்கவில்லை.  Read the rest of this entry »

சுமார் ஒரு வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)

அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:

இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)

  1. முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
  2. முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
  3. எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?

பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக,  ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)

-0-0-0-0-0-0-

இதற்கு முந்தைய பதிவான சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014)  படித்தீர்களா? ஏனெனில் இந்தப் பெரியவர் தொடர்புடைய கதைதான் இது. ஆம், என் மங்கலான நினைவுகளிலிருந்துதான்  இதனை எழுதுகிறேன்.

சரி. !980களின்  நடுவில் இந்தப் பெரியவர் தன் மகள் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார் – அது மடிப்பாக்கம் பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்தது.

ஆக, நங்கநல்லூர் – சிதம்பரம் ஸ்டோர்ஸ் (இப்போது இது இருக்கிறதா எனத் தெரியவில்லை) சமீபம் இருந்த அவருடைய சொந்தவீடு காலியாக  – அது, இரண்டாம் சுற்றில் வாடகைக்கு விட இருந்தது. குருவி போலப் பணம் சேர்த்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கடன்வாங்கி, அவரால் கட்டப்பட்ட வீடு அது. அந்த வீட்டைச் சுற்றி இருந்த தெருக்களில் பெரும்பாலும் முதலியார்களும் (சுமார் 70%), சில அய்யங்கார்களும்; ஒரிரு நாயுடுவும் நாடாரும், ஐயரும் கூட இருந்தார்கள்.

அப்போது யார் மூலமாகவோ ஒரு பள்ளி ஆசிரியர், பாவம், தன் குடும்பத்திற்காக வீடு தேடிக் கொண்டிருக்கிறார் என நான் கேள்விப்பட்டு (ஒரு திமுகழகத் தோழன் பரிந்துரைத்தது) அந்தப் பெரியவரிடம் சொன்னேன் என நினைக்கிறேன். அவரும் ’சரி, அவங்கள வந்து பார்க்க சொல்லு, பிடிச்சிருந்தா வரட்டும், நீயே பொறுப்பெடுத்துக்கோ’ என்றார். எனக்கு அப்போது சுமார் 21/22 வயது என நினைக்கிறேன். Read the rest of this entry »

எனக்குக் கிடைத்திருக்கும் பலதரப்பட்ட ஜொலிக்கும்  அனுபவங்கள், பல அற்புதமான மனிதர்களுடன் நெருங்கிப் பழகக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் — என்னைத் தொடர்ந்து மேலெடுத்துச் செல்வதற்கு எனக்கு மிக உதவிகரமாக இருந்திருக்க, இருக்கவேண்டும் என்பது சரியே. இவற்றைப் பற்றி எழுதவே எனக்குக் காலம் போதாது என்பதும் உண்மைதான். ஆனால் — சிலபல காரணங்களினால் – கண்ட, தேவையற்ற, எதிர்மறையான விஷயங்களைப் பற்றி எழுதுவதிலேயே, நிறைய நேரம் செலவழிக்கிறேன் என்பதுதான் சரி. எனக்குச் சமன நிலையில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் ஆன பயனென்கொல்…

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

…சரி.  இந்தப் பெரியவரை, கடந்த சுமார்  நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு மிக மிக   நன்றாகத் தெரியும். இவர் மனைவியையும் ஏறக்குறைய அதேயளவு ஆண்டுகளாக நல்ல அறிமுகம்.

இக்கணவன் – மனைவி தம்பதியினரின்  இருபுறப் பெற்றோர்களும் அவர்களின் மூதாதையர்களும் ஆசிரியர் தொழிலினைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்திருந்த காரணத்தால், அக்காலத்தில், ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி’யில் சுற்றிச் சுற்றி பணி புரிந்திருக்கிறார்கள்.

… சிறுவயதிலேயே தாயை இழந்து, தன் சித்தியிடம்  குழந்தைப்பருவத்தில் வசித்து, பின்னர் ஆந்திராவின் அனந்தபூர் நகரத்தில் பெரும்பாலும் வளர்ந்தமையால் இப்பெரியவருக்கு தெலெகு மொழி தான் தாய்மொழி ஸ்தானத்தில் இருந்திருக்கிறது. இவர் மனைவியும் ஆந்திராவில் உள்ள கூடவல்லியில் இம்மாதிரியே வளர்ந்திருக்கிறார். ஆக, இவர்கள் இருவரும் தமிழ் வம்சாவழியினராக இருந்தாலும் இக்குடும்பத்தில் தெலெகு மொழிக்குத்தான் முக்கியமான இடம். இருந்தாலும் அவர்களுடைய 20 வயதுகளில், சென்னை வந்தவுடன் தமிழ் மொழியில் பாண்டித்தியத்தை தாங்களாகவே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவருடைய மனைவியின் — தமிழ்ப் பண்பாடு/இலக்கியம் பற்றிய புரிதல்கள் அபாரமானவை… இவர் ஒரு பாரதி உபாசகர் வேறு.

இவர்களுடைய இளம்பிராய வாழ்க்கையில், பல சுவாரசியமான நிகழ்ச்சிகள், இவர்களுடைய பெற்றோர்கள் பங்கேற்றவை – என பல இருக்கின்றன —  ’தாது’ வருஷப் பஞ்சம், பின்னர் அதனைப் பின் தொடர்ந்த பல பஞ்சங்கள் பற்றிய செவிவழி, படுகோரக் கதைகள் — பல கிறிஸ்தவ மிஷனரிகளின் அயோக்கியத்தனம், சில மிஷனரிகளின் நேர்மை, சுய அர்ப்பணிப்பு — ப்ரிட்டிஷாரின் புண்ணியத்தால் ஒடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நாமும் சேர்ந்து   ஒடுக்கிய நம் ஹரிஜன்களுக்குக் கல்வியறிவு கொடுத்தல் —  எப்படி, படிப்படியாக முஸ்லீம்களை அவர்கள் தலைவர்களும் சேர்ந்து கொண்டு பிரித்தமை, பிரிவினை விஷம் ஊட்டியமை, மத்தியதரவர்க்கம் இல்லாமல் போனமை — தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களில் பங்கு பெற்றமை —  காந்தி  ‘ஹரிஜன் நிதி’க்குக் கேட்டாரென்று அணிந்திருந்த சொற்ப நகைகளையும், அவர் ரயில் பயணமாக ஆந்திரா வந்தபோது அளித்த தாயார்கள் —  ராட்டையில் நூல் நூற்று, பின் நெசவு செய்து முரட்டுக் கதர் துணிமணிகளை அணிந்தமை  — பெண்கள் நீச்சல் வீராங்கனைகளாகத் திகழ்ந்தமை — பாத்தியதைப்பட்ட மஞ்சள் காணி நிலத்துக்குக்காகக் கூட வெகு தைரியமாக, ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட நேர்ந்தமை —  தீபாவளிக்கான பட்டாசு மத்தாப்புக்களைத் தாங்களே வீட்டில் செய்துகொள்ளும் தொழில் நுட்ப சாதுரியமும், அறிவும், செயலூக்கமும் மிக்க தாயார்கள் — ‘புட்டபர்த்தி’ சாயிபாபாவின் இளமைக்கால நினைவுகள் —  அனந்தபூர் நகரத்தில் தரமான கல்விக்கு அடிகோலியது (பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பணிசெய்த நீலம் சஞ்சீவ ரெட்டியும், இந்தப் பெரியவருடைய தகப்பனாரின் மாணவர்),  பழம்பெரும் காங்க்ரெஸ் குடும்பங்களாக அமைந்தமை – இன்னபிற, இன்னபிற என ஒரு நீளமான ஜாபிதா… Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)

சாளரம் #10: நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக  அதிகம்.

அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ்  என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே  அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல்  உலகைப் பார்த்தல். Read the rest of this entry »

நொபெல் பரிசையும் புக்கர் பரிசையும் இணைத்து, அறிவியல்-இலக்கியங்களுக்காகவென நிறுவப்பட்ட மிகப் பிரபலமான நொக்கர் விருதை, பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியா நாடு அளித்து வருகிறது என்கிற அற்புதமான விஷயம், தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.

மேலதிகமாக, இவ்விருதைப் பெற்ற புத்தகத்துக்கு லைபீரியா, பெரிய லைப்ரரி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கும் என்கிற விஷயத்தையும் பல தமிழ்ப் பதிப்பாளர்கள் – ராயல்டி ஏய்க்கும் பதர்கள் – மறைத்து விடுவார்கள், என்பதும் பலருக்குத் தெரியாது.

லைபீரியா-வின் தலை நகர் மன்ரோவியா. இது ஒரு தமிழ்ப் பெயர். ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்)

லைபீரியா-வின் தலைநகர் மன்ரோவியா – இது ஒரு தமிழ்ப் பெயர்!!!

ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த மன்ரோவியா நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பரும், அகழ்வாராய்ச்சியாளரும், மேலதிகமாக ஐ.ஏ.எஸ்-ஸுமான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்).

ஆர்பா அவர்கள் அவருடைய கட்டுரையில் – தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஆர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி,  பாஷ்யம் ‘சாண்டில்யன்’ அய்யங்கார் போன்றோர்களின் ஆய்வுகளிலிருந்தும், ராஜசிம்ம பல்லவனும் அருண்மொழித் தேவனும் கொள்கைக் கூட்டணி அமைத்து அக்காலத்திலேயே ஆப்பிரிக்கா சென்று குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் பற்றிப் பேசும் ஜப்பானில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும் இந்த லைபீரிய உண்மையைக் கண்டெடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-0-0-0-0-0-0-0-0-

நிற்க,  நாம் நொக்கர் விருது பற்றித்தானே பேசிக் கொண்டிருந்தோம்? … … சரி. இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்: கலகத்தமிழ்ப்பிரதிக்காரரான மேதகு சாருநிவேதிதா அவர்களே கூறியிருக்கிறார்கள் – இந்த நொபெல் விருதானது நொபெல் + புக்கர் + கலைமாமணி + பத்மஸ்ரீ + பத்மப்பிரியா  + பத்மநாபன்(வியட்நாம் வீடு) இணைந்து ஒருசேர வழங்கப்படுவதற்கு நிகரானது, என்று.

Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (17/n)

இந்தத் தலைப்பை, தமிழ் – ஆண்கள் – பலானதின்  நீளம், அதைக்குறித்த அவர்கள் போதாமை என்று  நீங்கள் புரிந்துகொண்டால், அது சரியில்லை என்றாலும், உடனடியாக சாளரம் #3க்குச் செல்லலாம்: சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் (24/11/2013)

ஆக — கவனம், கவனம்.  இந்தச் சாளரம், வேறு ஒன்றைக் குறித்தது.

சாளரம் #9: பொதுவாக, நம் தமிழர்களுக்கு நீளம் எனும் அளவை சரியாக மேலாண்மை செய்ய முடியாது, தெரியவும் தெரியாது;

இந்தக் கோட்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கு, இந்த ’நீளம்’ எனும் படிமத்தை (வெறும் குறியீட்டை அல்ல), நாம் பல விதங்களில், பல கோணங்களில், பல துறைகளின் ஊடாகப் பார்க்கவேண்டும். இந்தப் பொதுத்தன்மையானது, பண்பாட்டு ரீதியாக நாம் ஒதுக்கிக்கொண்டிருக்கும் சிரத்தை மனப்பான்மையை, ஆகவே வளர்த்துக்கொண்டிருக்கும் அசட்டை/விட்டேற்றி மனப்பான்மையை ஒட்டி உருவாகிறது. Read the rest of this entry »

லிராய் ஜோன்ஸ் (LeRoi Jones) என்னைப் பொறுத்தவரை ஒரு மிக நல்ல கவிஞரும், மிக மிக அழகான அழகியல் சார் இசை விமர்சரும். உலகத்துக்கு அமெரிக்கா கொடுத்த கொடைகளில் ஒருவர் அவர். ‘கறுப்பர் கலைகள்’ (Black(!) Arts(!!)) என்றழைக்கப்படும் 1960களில் இயங்கிய இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர்.

எனக்கு இவருடைய எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது, 1978 வாக்கில் என நினைவு – முதலில் படித்தது இவருடைய டட்ச்மேன் எனும், இன்னமும் என் நினைவில் இருக்கும், படு அற்புதமான, நெஞ்சைப் பிழியும் நாடகத்தை; ஆனால், இதன் நாடகமாக்கத்தைப் பார்க்க இன்றுவரை கொடுப்பினை இல்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நாடகத்தின் தமிழாக்கத்தை, தமிழ்ப் பண்பாட்டுடன் பொருத்திப் பார்த்தலைச் செய்தால், லிராய் ஜோன்ஸ்-ன் அரசியல் நகர்வுகளை நோக்கினால் — நமக்கு தலித் இலக்கியம், தலித் கவிதை, தலித் அழகியல் என்றெல்லாம் தேவையற்றுப் பிரித்துப் பேசி, அயோக்கியத்தனமாக நாம் அனைவரும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது தெரியவந்து, நம் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டுஅரசியலை வெறுக்கவைக்கும்… Read the rest of this entry »

நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய  வார்த்தைகளில்:

ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே…  நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…

-0-0-0-0-0-0-0-0-0-

அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்: Read the rest of this entry »

மறப்போமா இவர்களை?

தன் (கஷ்மீரி பண்டிட்) விவசாயக் குடும்பத்தை (லஷ்கரீ-தய்யபா) கொலைவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மார்ச் 23, 2003 அன்று பலி கொடுத்து (நதிமார்க் படுகொலைகள்), பின்பு ‘தான் மட்டும் இறக்கவில்லை’ என்கிற குற்ற உணர்ச்சியால் பைத்தியம் பிடித்தலைந்து ஒரு வருடத்திற்குப் பின் அதே நாள் பாகீரதியில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொண்ட எனது இளம் நண்பன் ராஜீவ் குமார்-ன் நினைவுக்கு, இப்பதிவு சமர்ப்பணம்.

-0-0-0-0-0-0-0-

2001-2002 வாக்கில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்காக, இளம் பொறியியலாளர்களை, மேலாண்மைக்காரர்களை, மனிதவளமேம்பாட்டுக் காரர்களை தேர்வு செய்வதற்காக, அதுவும் தரமான முஸ்லீம் இளைஞர்களை குறைந்த பட்சம் 80%-ஆவது சேர்த்துக் கொள்ளவேண்டுமென்று திட்டம் போட்டு,  ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாமியா மிலியா ஹம்தர்த், ஜேஎன்யு என்றெல்லாம் டெல்லியில் சில மாதங்கள் வெறிபோலச் சுற்றிக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள்,  ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர  ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக  முக்கியம்.

ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள்  புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள்.  ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »

Δε με αγαπάς

Συγχαρητήρια

πώς έρχονται αυτά τα τραγούδια δεν έχουν ακόμη αντέγραψε σε Ταμίλ?  ;-)

Άννα Βίσση – το ελληνικό είδωλο!

நானும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம் என இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். ஆனால்,  இளம் எழுத்தாளர்கள் இங்கே, ஊக்கு எங்கே என்கிற கேள்வி என்னைத் துன்புறுத்துகிறது. என்ன செய்வது, சொல்லுங்கள்.

ஆனால், இப்போதெல்லாம் இந்த ஊக்கு சனியன்களையெல்லாம் சீனாக்காரன்கள் மட்டுமே செய்வதால்,  அதனை விற்பதை மட்டும் செய்யலாம் என்பதென் எண்ணம்.

மேலும், எல்லா ளம்மிழ் ழுத்தாளர்களும் சென்னை புத்தகச் சந்தை (2014) சென்று தம் கந்தறகோள புத்தகங்களை விற்பதிலும், எஸ்ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் கையெழுத்திட்ட புத்தகங்களை வாங்க நீளவரிசைகளில் பின்புறவாயுக்களை வெளியிட்டுக்கொண்டு (=அடுத்தடுத்து புத்தகங்கள் வரவேண்டுமல்லவா?)  நின்று கொண்டிருப்பதிலும் படுபிஸியாக இருப்பதால் — நானே ஒரு இதஎவாக உருமாற்றம் கொண்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவை நல்கவும். இதனை ஒரு பிடிஃப் கோப்பாக மாற்றி உங்கள் தளங்களில் தரவேற்றிக் கொள்ளலாம். பாதகமில்லை.

பின் அடித்து, துண்டுப் பிரசூரமாக வெளியிடவும் ப்ரோக்ரியேட்டிவ் மன்மதன்ஸ் (இது க்ரியேட்டிவ் காமன்ஸ் ஷரத்துகள் போன்றதேதான்) படி காப்புரிமை பிரச்சினைகளே கிடையாது. கவலை வேண்டேல்… Read the rest of this entry »

‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய  காப்பி!) பதிவுக்கு வந்த ஒரு சோம்பேறிப் பின்னூட்டமும், என் எதிர்க் கதறலும்… (இரண்டாம் வரைவு)

Anonymous Says:
15/01/2014 at 08:03 e

‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் WHAT IS THIS. KINDLY INFORM

—>>>

அய்யா அனானிமௌஸ்  கேபிடலிஸ்ட் எலியாரே!

உங்கள் கீபோர்டில் இடது ஓரத்தில் கேப்ஸ்லாக் (capslock / capslk) என்று ஒன்று, பொதுவாக, கீழிலிருந்து (உங்களுடைய கீழ் அல்ல,  அது உங்களுடைய கோமணத்தினுள் பத்திரமாக இருக்கட்டும்; இது கீபோர்டின்  கீழ்) மூன்றாம் வரிசையில் இருக்கும். அது உங்கள் தொப்பியை அதன் இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பதற்காக இல்லை என்பதை அறிந்து, அதனை அமுக்கிக்கொண்டேயிருக்காமல் கொஞ்சம் சும்மா விடவும்.

இதற்குமுன் ஒரு விண்ணப்பம்: தேவரீர் நீங்கள், மிக முக்கியமாக,  கீபோர்ட் என்றால் உங்கள் சாவிகளை பத்திரமாக மாட்டும் பலகை என்று புரிந்து கொள்ளவேண்டாம்…

டேய்… ஏண்டா  என் கள்த்த அற்க்கிறீங்க! நான் எள்தறத(!) ஒரு அம்பது பேர் பட்ச்சா போறுண்டா! ஏண்டா எளவெடுத்தவனுங்க, சோம்பேறிக் கூவானுங்கெல்லாம், மூளேன்றதே இல்லாதவனுங்கல்லாம், சும்மானாச்சிக்கும் சொறிஞ்சிக்கினு லைக் போட்றவனுங்கெல்லாம் இங்க வந்து இப்டீ தொந்த்றவ் செய்றீங்க? அரெகொறேங்களா – நீங்க ஸார்னிவேதிதா, எஸ்ராவோட தளங்கள வுட்டுட்டு ஏண்டா இங்க வந்து என்க்கு உஸ்பேத்தறீங்க, சோமாறீங்களா… Read the rest of this entry »

இதாணு:  எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?

லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!

… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ  ‘எஸ்ராவோடெ ராவுகள்’ —  ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள  குருத்தங்கெட்ட  தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.

… … … … பேடிக்கண்டா!   … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?

… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!!  aye aegree. zuizide is zimbly no zolution.  uou onderztand?

…Besides, ezra is a thick armoured battletank, he can pound  away merrily, while you lousy lusers  keep complaining. Resistance is futile, yes. :-(

சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.

எச்சரிக்கை: இது ஒரு  ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(

Read the rest of this entry »