இந்த  (இந்தியா – சமூகம் – இஸ்லாம் – முஸ்லீம் – நான்: சில குறிப்புகள்) வரிசையின் முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி. இது நான்காம் பகுதி. இந்த வரிசையில் இன்னமும் இரண்டு பதிவுகள் வரலாம்.

சரி. எனக்கு இதுவரை கிடைத்துள்ள செறிவான அனுபவங்களில் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் எழுதலாமென எண்ணம்.

Read the rest of this entry »

சிலநாட்கள் முன்பு இந்த மெஹ்ஃபில்லுக்குச் சென்றிருந்தேன்; பள்ளியில், மரங்கள் சூழ்ந்த கும்மிருட்டுச் சூழலில், ஒரு பெரிய ஒலைக்குடிலில், சில இசை ஆர்வலர்களுக்கென நடத்தப்பட்ட நிகழ்ச்சி. நிறைய பள்ளிக் குழந்தைகளும் இருந்தார்கள்.

த்ருபத் வகை இசையை ரசிப்பதற்கு ஒரு உல்லாசம், சாவகாசம் வேண்டும். கடிகாரத்தைப் பார்க்காமல் இருக்கவேண்டும். மெல்ல மெல்ல மேலெழும்பும் இசை இது. அவசரகதியில் அள்ளித்தெளிக்கும் படாடோப இசை வல்லமை இதில் இல்லை. ஆனால் நுணுக்கங்கள்? ஆஹா தான்!
Read the rest of this entry »

கடந்த சிலவருடங்களாகவே ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் அமைப்பு – உலகளாவிய  பார்வையுடன் சமூகச் சிடுக்கல்கள், கொடும்தீவிரவாதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதன் பாவப்பட்ட மனிதத் திரள்களுக்காக களப்பணி ஆற்றி வருகிறது. ஆனால், இதனைப் பற்றி அது தம்பட்டமோ, போஸ்டரோ அடிப்பதில்லை. பெரும் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமேகொண்டு அவ்வமைப்பினரும் அவர்கள் தலைவரும், படாடோபமில்லாமல், வீண்விளம்பரமில்லாமல் பணி செய்து வருகின்றனர்.

Read the rest of this entry »

முதலில், இலவசை இணைப்பு:

தமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக்  கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…

ஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

ஏனெனில்…

Read the rest of this entry »

(முந்தைய பதிவுகள்: முதலாவது. இரண்டாவது. மூன்றாவது: ஜிஹாத் பற்றியது. நான்காவது: கபானியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கர்ட்களின் வீரம் ஜொலிக்கும் போராட்டத்தைப் பற்றியது. இவற்றைப் படித்தால் கொஞ்சமேனும் பின்புலம் கிடைக்கலாம்)

கடும் எச்சரிக்கை:  வழக்கத்தையும் (~1000 வார்த்தைகள்) விட இது நீளம் அதிகம். சுமார் 1500 வார்த்தைகள். கில்யஸ் பற்றி எழுதிஎழுதி எனக்கு மாளவில்லை. :-(

கில்யஸ் நினைவுகளில் பலவாரங்களாக உழன்று கொண்டிருக்கிறேன். இதனை எழுதச் சுமார் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பரின் நினைவுக்காக, இதனைக் கூடவா என்னால் செய்திருக்க முடியாது?

அதேபோல – இதனை முழுவதுமாகப் படிக்கப்போவது உங்களில் 30 பேரேயாயினும், உங்களால் இதைக் கூடவா செய்ய முடியாது? ஆகவே, பொறுமையாகப் படிக்கவும்.

… முடியாவிட்டால் இருக்கவேயிருக்கின்றன, நம்முடைய செல்ல ஞானத் தமிழர்களின் சுடச்சுடத் தமிழ்ச் சினிமா விமர்சனங்கள் – அவற்றுக்கு வேறெங்காவது செல்லவும்.  நன்றி.

கில்யஸ் அம்மணி புராணம் தொடர்கிறது… … :-(

Read the rest of this entry »

மனதே சரியில்லை.

சுமார் இரண்டு வருடங்கள் முன்(ஜூன் 2013 என நினைவு), எங்களிடமிருந்து (= ஒரு சிறிய அளவிலான இந்திய நண்பர் குழாமிடமிருந்து) விடைபெற்ற கர்ட் தேசம் (இப்போதைக்கு  இரான் – ஸிரியா – துருக்கி – ஆர்மேனியா – இராக்-கின் பாகம்) சார்ந்தவரான இந்த கில்யஸ் அம்மணி, சில நாட்கள் முன்பு (28 மார்ச்) அற்ப, மதப்பொறுக்கிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளுடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்.

இணையத்தில் இது தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். அவர் அறிமுகம் செய்த சில  கர்ட்  பிராந்திய ட்விட்டர்காரர்களிடமும் (ஒரு அழகான – மனதைப் பிழியும், ஆனால் கம்பீரமான எடுத்துக்காட்டாக) தேடினேன்; கொஞ்ச நேரம் #பெஷ்மெர்கெ-விலும் தேடினேன்.

ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவில்லை. (இப்போது தோன்றுகிறது, ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவும் தேவையில்லை!)

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் - இந்தப் பக்கத்தில்  இருந்து எடுக்கப்பட்டது; அங்கு பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன. http://www.globalsecurity.org/military/world/war/kurdistan-maps.htm

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் – இந்தப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது; அங்கு, இது தொடர்பான பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன.

… எனக்கு நேற்று காலை தான் இந்தச் செய்தி கிடைத்தது.

எவ்வளவோ படுகோரச் சாவுகளை நேரடியாகப் பார்த்திருந்தாலும், பொதுவாகவே என் தாங்குதன்மை மிகவும் அதிகம் என்றாலும்கூட, என் கால்கள் தொய்ந்துபோய் விட்டன. ஒரே சோர்வு. சாப்பிடவே பிடிக்கவில்லை.  மலையளவு, பள்ளிசார்  வருடமுடிவு மாளா  வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிற வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன – பெய்ன்ட் வேலை, ஹார்ட்டிஸ்க்கள் ரிப்பேர், வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீட்டுவேலைகள் பலப்பல – இவற்றைத் தவிர அரையும் குறையுமாக இருக்கும் பல ஒத்திசைவு பதிவுகள், மேஜைகளிலும் நாற்காலிகளிலும் அலமாரிகளிலும் பிதுங்கி வழியும், அவசியம் படிக்கவேண்டிய புத்தக அடுக்குகள் என – ஆனால், என் அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழியின் நினைவாக,  இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?

நேரே வீட்டுக்கு வந்து இதனை எழுத ஆரம்பித்தேன்… Read the rest of this entry »

kinder, über alles

March 16, 2015

… Joseph Haydn’s jingoistic composition extolling the virtues of deutcheland and his emperor notwithstanding, I like (and love) my dear Haydn’s oratorios immenselythe seasons and the creation.

Yes. Children above all. Yeah!

Read the rest of this entry »

இதன் முதல் பாகம். சித்பவன்காரர் புராணம் தொடர்கிறது…

… சிறு வயதிலிருந்து கடுமையான உடல் உழைப்பு (தங்கள் 140 அடி ஆழக் கிணற்றை இவரும், இவர் தந்தையாரும் மட்டுமே தோண்டியிருக்கின்றனர்) – வயல்களில் போராட்டம். தங்களுக்குத் தேவையான உணவு, சோப்பு, துணி என அத்தனை பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொண்டிருந்தனர், வீட்டில்/பண்ணையில் உதவிக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரு விஷயங்களுக்குத்தான் வெளியே சென்று கடையில் நிற்க வேண்டியிருந்தது – 1) வெள்ளைச் சர்க்கரை – இதையும் ஏதாவது விசேஷங்களில்தான் உபயோகித்திருக்கிறார்கள்; 2) தேயிலை –  இதன் தேவையும் சொற்பமே! மற்றெல்லாவற்றையும் அவர்களுடைய சிறு பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டனர்.

Read the rest of this entry »

அண்மையில், ஒரு பின்னூட்டத்தில் இப்படி எழுதியிருந்தேன்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித்  போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.

மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.

அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.

நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.

ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.

ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?கூட

குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)

-0-0-0-0-0-

சரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.
Read the rest of this entry »

29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.

‘கே’ அவர்களை நான் ஓரளவு படித்திருக்கிறேன். அவருடைய கருத்துகளைப் பற்றிப் பலருடன் விவாதமும் செய்திருக்கிறேன் – மகாமகோ தருமு ‘ப்ரமிள் பானுசென்ரென்’ சிவராமு அவர்கள் உட்பட!

இதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட,  நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன்.  விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)
Read the rest of this entry »

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது குடியரசு தினம், அமைதியாக வீட்டில் கழிந்துகொண்டிருக்கிறது. ஏதேதோ சிந்தனைகள் – ஆக, அவை தொடர்பாக அலைக்கழிக்கும் நினைவுகளும் எண்ணக்கோவைகளும்.

சமர்ப்பணம்: இந்தியாவின் ஒருபகுதியான தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பேறு பெற்றதால்  – நம்முடைய மொழிகளில் ஒன்றான  ஹிந்தி மொழியை மிகச் சுளுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்றாலும், அந்த மொழியிலும் மகத்தான பொக்கிஷங்கள் எழுதப் பட்டுள்ளன என்றாலும், அம்மொழியைத் தெரிந்து கொண்டால் தொடர்புகள்-வாய்ப்புகள் பெருகும் சாத்தியக்கூறுகள் உண்டென்றாலும், அம்மொழி அறிவினால், இசையினால், அவற்றைச் சார்ந்த பிற பண்பாட்டுக் கூறுகளினால் நாம் செறிவுபடுவோம் என்றாலும்…

… வரட்டுவாதக் கயமை அரசியல் பிரச்சாரங்களுக்கு முட்டாள்தனமாக மயங்கி, எதிர்மறை பரப்புரைகளால் ஆட்கொள்ளப்பட்டு ஹிந்தி மொழியை இனம் புரியாமல் வெறுத்து, நம் சொந்தத்  தமிழிலும் சொதப்பும், அதிலும் ஒரு சுக்கு எழவையும் சரியாகவே கற்றுக் கொள்ளாத – சுட்டுப்போட்டால்கூட ஒரு வாக்கியத்தைக் கூடக் கோர்வையாக எழுதவராத பாவப்பட்ட ஜீவன்களாக இருந்தாலும்,  அப்படியே ஒருவேளை எழுத முடிந்தாலும் – காப்பியடித்தும், உளறிக்கொட்டியும் கண்டமேனிக்கும் கபடி விளையாடி – இலவச இணைப்பாக அந்தப் பரிதாபத்துக்குரிய ஆங்கிலத்தையும் போட்டுக் கொல்லும் திராவிடப்பக்கவாதக் குளுவான்களுக்கும், தனித்தமிழ்வாத  விசிலடிச்சான் குஞ்சப்பர்களுக்கும், தமிழ்த்தேசிய மொத்த (சில்லறை விற்பனையல்ல, துட்டு வாங்குவது உண்டு) வியாபாரிகளுக்கும், வாயோர நுரைதள்ளும்  ‘அன்னிய’ கலாச்சார எதிர்ப்பாள அற்பர்களுக்கும் – பொதுவாக அனாதைமுதல்வாதப் போராளிக் கோமான்களுக்கும்…

-0-00-000-0000-000-00-0-

… இப்பாட்டினை பலவருடங்களாக வானொலியில் கேட்டிருக்கிறேன் என்றாலும், Read the rest of this entry »

“… There is a goddess of Memory, Mnemosyne; but none of Forgetting. Yet there should be, as they are twin sisters, twin powers, and walk on either side of us, disputing for sovereignty over us and who we are, all the way until death.”

–- Richard Holmes  in “A Meander through Memory and Forgetting” (an essay off: Memory: An Anthology/ Wood Harriet Harvey, Byatt AS / Chatto & Windus, 2008/

and… Read the rest of this entry »

I have checked with a few folks and they also have experienced and continue to experience these…

… Sometimes it is a piece of music that keeps repeating itself in the head – such as a 7th Symphony of Beethoven or a Toccata (in C minor) of Bach or a Bhimsen Joshi rendition of Ahir Bhairav or a MS Subbulakshmi’s ‘kurai onrum illai, Govinda’ – I have no wants, Govinda.

Sometimes there are these haunting images – such as the mind boggling scenes from a Andrei Tarkovsky or a Kurosawa Akira film, that deliciously  torment you… Read the rest of this entry »

இது திரைப்பட விமர்சனம் அல்ல. பயப்படாதீர்கள்.

விமர்சனங்களுக்கும், கட்டுடைப்புகளுக்கும், பின் நவீனத்துவக் குண்டூசிக் குத்தல்களுக்கும், பின்னில்லா அரதப் பழசுமொண்ணைகளுக்கும், மண்வெட்டிதாச அகழ்வாராய்ச்சிகளுக்கும், வெட்டியொட்டும் மாண்புக்கும், போருரைகளுக்கும் நிறைய பேர்கள், இந்தத் தமிழைக் கூறு போடும் நல்லுலகில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இது திரைப்பட அறிமுகமும் கிடையாது. ஏனெனில் இந்தப் படம் பொதுவாகவே ஓரளவு பிரபலமான படம்தான்.

பயமே வேண்டாம் – நான் எழுதப் போவது என் எண்ணங்களை மட்டுமே. அதுவும் அதிகமாக எழுதி உங்களுக்கு மூளைக் குடைச்சல் கொடுக்கும் முனைப்பு இல்லை. Read the rest of this entry »

புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?) எனும் முந்தைய பதிவிற்குப் பின் கீழே (அல்லது மேலே) படித்தால் நலம்.

-0-0-0-0-0-0-0-0-

குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் சந்தன புத்தர்

மந்தஹாசப் புன்னகையுடன் குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் பர்மாக்கார சந்தன புத்தர் – அவருடைய இடது காது மடலின் கீழ்ப்பகுதி கீழ் நோக்கி இருக்கவேண்டுமோ? (இங்கிருந்து)

… இந்த மாதிரி,  புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, தேடித்தேடி வாங்கி பெரும்பாலும் ரசிக்கப் பட்டவையாக இருந்தாலும், அவற்றைப் போர்த்திப் போர்த்தி  என்னிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது, அது சரியான தர்மமல்ல – புத்தகங்கள் தங்களைப் படிப்பவர்களுக்காகவே காத்திருக்கின்றன – ஆகவே, முடிந்தவைகளையெல்லாம் தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்: Read the rest of this entry »

புத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1

… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர்  என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர்  தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.

… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷரகுக்ஷிதான். :-(

இத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது;  இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம்  – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா? வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா??) Read the rest of this entry »

(அல்லது) டக்ளஸ் ஹோஃப்ஸ்டேட்டர்: கெடல், எஷர், பாஹ்: ஒரு முடிவற்ற தங்கப் பின்னல்

1977லேயே வெளிவந்திருந்தாலும், இதனை நான் முதலில் படித்தது 1982ல்தான் என நினைவு. என்னுடைய கல்லூரி நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கிடைத்த பொக்கிஷம்; உலகமே அற்புதமாகிவிட்டது எனக்கு! 5 நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து, நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டு படித்து முடித்தேன். படிக்கப் படிக்க பிரமிப்பு. இப்படியெல்லாம் கூட புத்தகங்களை எழுதமுடியுமா என்று. படித்து விட்டு சுமார் மூன்று நாட்கள் தொடர்ந்து சொக்கிப்போய் இதனைப் பற்றியேதான் பேச்சு, மூச்சு எல்லாம். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் – இரண்டு பாவப்பட்ட  பேராசிரியர்கள் உட்பட – ஒரேயடியாக அதன் புகழ்தான்! அந்தக் காலத்தில், கல்லூரி விடுதியில் என் மாடியில் இருந்த என் சகமாணவர்கள் என்னைப் பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பித்து விடுவார்கள் – பாவம். :-)

இந்த கிறங்கல் கலைந்து சமன நிலைக்கு வர, எனக்குக் கொஞ்ச நாட்களாகியது. ஐந்து முறைக்கும் மேலாக இந்த நூலகக்கடன் புத்தகத்தை துணைநூலகருடன் சண்டைபோட்டு நீட்டிப்பு செய்து (ஒவ்வொரு முறையும் 14 நாட்கள்) – கடைசியில் வேறு வழியேயில்லாமல், திருப்தியேயில்லாமல், வேண்டாவெறுப்பாகத் திருப்பிக் கொடுத்தேன். Read the rest of this entry »

Move over, you ‘world famous astrologers’ such as Besan Daroowallah, go start making besan laddoos, or even start brewing liquor… But, stop making those terrible, horrible, no-good, very bad  horrorscopes please!

Try to earn a honest  day’s wages, surely it is not that very difficult…

=-=-=-=-=-=-=-=

I pretend to ‘do’ mainly science with our ‘earth children’ – but I also drift off in various directions, to do history, geography, angrezi (hic), math and stuff. Heck, I even pretend to be a choir conductor. Don’t get me wrong, there are quite a few other adults (who actually are more able & capable than yours truly) in the picture too, so there is no need to ring the alarm bells… The truth is that, they are all busy working, whereas I am busy posting blog entries! Read the rest of this entry »

வெறுப்பும் சலிப்பும் தொடர்வதைகளாகத் தொடரும் காலங்களில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன, எனக்கும் என்னுள் பொதிந்திருக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்புகள் யாவை, இப்போது நான் என்னதான் செய்யவேண்டும் என, வேலைவெட்டியற்றுக் கேள்விகள் பொசுக்கும் நேரங்களில், ஆன்மாவை உருக்கும் மகாமகோ இசைகூட உதவிக்கு வரமுடியாத தருணங்களில், தோட்டவேலை சார்ந்த வியர்வை சொட்டும் உன்மத்த உடலுழைப்பினாலோ,  நெடுநீள ஓட்டத்தினூடேயோ, கடினமான கணித/அறிவியல் கேள்விகளுக்கு உட்கார்ந்த வாக்கில் ஒரு நோட்டுப்புத்தகம் + பென்ஸிலின் உதவியோடு மட்டுமே கூட பதில் பெற விழையவோ முடியாத அச்சந்தர்ப்பங்களில் — மறுபடியும், மறுபடியும்  நான் நிபந்தனையற்றுச் சரணடைவது என்பது, ஒரு முப்பத்திச் சொச்ச புத்தகங்களிடம் மட்டுமேதான். கடந்த 35 வருடங்களாக இப்படித்தான்.

“தாங்கள் எவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறோம் என்பதைப் பற்றி மற்றவர்கள் கர்வப் பட்டுக்கொள்ளட்டும்; ஆனால் நான், படித்த புத்தகங்களைப் பற்றிப் பிலுக்கிக் கொள்ளவே விரும்புவேன்.”

— ஹோற்ஹெ லூயிஸ் போற்ஹெஸ்

Read the rest of this entry »