உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.

முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!

Read the rest of this entry »

…இந்தியாவை விட்டு வெளியே போய்விடலாம் என்று நினைக்கிறேன். அந்த மும்முரத்தில் இருந்ததனால்தான் கடந்த பலவாரங்களாக ஒரு எழவு பதிவும் எழுதவேயில்லை! :-(

எப்படியாவது இந்த எழவெடுத்த, சகிப்புத் தன்மையேயற்ற இந்தியாவை விட்டுவிட்டு ஓடிப்போய் அமெரிக்காவே கோயிந்தா (அல்லது யேஸ்ஸூ அல்லது அல்லா; எனது சர்வமதச் சார்பின்மையைக் காட்டிக்கொண்டு கூத்தாடவேண்டுமல்லவா?) என நிபந்தனையற்றுச் சரணாகதி அடைந்துவிட்டுதான் அடுத்த வேலை. மன்னிக்கவும்.

… ஆனால், அதற்கு முன்னால் இரண்டு ஸீன்களில் ஒரே கந்தறகோளக் கதை!  நானே எழுதி நடித்து டைரடக்கரும் செய்த என் சொந்தக் கதை…  வெறுமனே நான் ஸீன் போடுவதாக மட்டும் நினைத்துக் கொண்டு விடாதீர்கள், சரியா? Read the rest of this entry »

பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப்  போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை!  இவை  கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
Screenshot from 2015-04-08 21:52:07தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:

அது கர்ட் மக்கள் திரள்கள்,  தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி​-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

Read the rest of this entry »

கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!

அதாவது, என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு கோட்பாட்டுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும். அப்போது அக்கோட்பாடுகளின் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு,  உள்ளூர் நிலவரங்களுக்கேற்ப ஆனந்தமாக, நாம் நமக்கேற்றவாறு பொருளை விரித்துக்கொள்வோம்.  உருகுவோம். உனர்ச்சிவசப் படுவோம்.  புல்லரித்துக்கொள்வோம். மாய்வோம். அலைபாய்வோம். இணையத்திலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம். அடுத்த Y கோட்பாட்டு எழவுக்கு லாட்டரி அடிக்கும்வரை இதனை இந்த X கோட்பாட்டுக்குச் செய்வோம். அவ்வளவுதான்!

Read the rest of this entry »

முதலில்… ஒரு ரகசியச் செய்தியை பகிரங்கமாக்குகிறேன்: இந்த விருதுத் திருப்பலியக்கப் பன்றிக் காய்ச்சலை ஆரம்பித்து வைத்தது – இதுவரை பலப்பல கலைமாமணி விருதுகள் பெற்றிருக்கும் பலப்பலர் தங்கள் பரிசில்களை – தமிழக முதலையமைச்சரின் அலுவலகத்தை நோக்கிக் கடாசியமையே! (இதற்குக் காரணம் – ஐநா சபை அவர்களுக்கெல்லாம் நொபெல் பரிசு கொடுக்கச் சிபாரிசு செய்யவில்லை என்கிற திடுக்கிடவைக்கும் துரோகம்தான்!)

Read the rest of this entry »

See,  I do not normally write about anything that I do not pretend to know about. But, the truth is that, I have been a reluctant witness occasionally, to what passes for learned TV discussions, in the hysterically farcical Indian TV channels, mostly courtesy: youtube.

So.
Read the rest of this entry »

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »

I would gladly admit upfront, to my learned biases (or jaundiced reflections based on my personal experiences, if you will).

I am of the opinion that almost all Christian missionary schools (or for that matter, schools belonging to any other denomination or abomination that is centrally organized) are really a bad idea, at best.
Read the rest of this entry »

நீல்ஸ் ஹென்ரிக் டேவிட்  போர் (Niels Henrik David Bohr – 7 அக்டோபர் 1885 – 18 நவெம்பர் 1962) என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர்.

இன்று அவருடைய பிறந்தநாள். :-)

Read the rest of this entry »

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை நீங்கள் பார்க்காதது நினைவிருக்கலாம். ஏனெனில் நான் அங்கு போகவில்லை.

உங்கள் வாசகர் உங்களுக்கு எழுதிய  ‘மேசன்களின் உலகம்’ கட்டுரைக் கடிதம் படித்தேன். புல்லரித்து அப்படியே உங்களைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இது ஏதாவது ஓரினச் சேர்க்கை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுமோ என உடனடியாகப் பயந்து, நாமிருவரும் தமிழினம்தானே, ஆகவேதான் இப்படி இனச்சேர்க்கை என்று சப்பைக்கட்டு கட்டி –  உங்கள் வாசகருடைய கடிதப்பதிவை என் எதிரிகளுக்கும் பகிர்ந்திருக்கிறேன்.

மேலும், அந்தக் கடிதத்தின் முழு பாதிப்பில்தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் வரிக்கு வரி சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி. உள்ளூர் வரிகள் மேலதிகம், கவனிக்கவும்.

Read the rest of this entry »

சுத்தமாக வேலை வெட்டியற்று இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும், என்னால் எழுதப்பட்ட ஏழு புத்தகங்களின் வெளியீட்டை அடிவயிற்றுக்கலக்கத்துடன், படபடக்கும் நெஞ்சுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்* உங்களைப் போன்ற சோம்பேறி வாசக மாக்களுக்கு

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் வயதுக்கேற்ப திராவிடத்தனமாக வாழ்த்த எனக்கு  வயதிருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். ஆகவே முறையே ஆசிர்வாதம் கொடுக்கிறேன் அல்லது வணங்கி மகிழ்கிறேன்.

ஆனால் மன்னிக்கவும். Read the rest of this entry »

Even after more than some 180 bloody  years, the Macaulay’s legacy happily and sordidly lives on in India – what with the mushrooming ‘English Medium’ schools all over our Indusland and ‘Cambridge / Oxford / Berkeley / MIT / etc affilicted Royal Concorde[1] Internotional Public Residential type ‘school’ entities, promising the clueless parents of ultimate deliverance of their hapless and rather sad & stymied children…

Yeah!  HotAir -welcomes – you – on – board – flight – 911 – to – touts’ universities -where else -but-in-USA – please – fasten – your – seatbelts, we-are-ready- to-take-off – what? -don’t – you – know – we – have – two – swimming – pools – and – provide – horse – riding – training – also – conduct – meditation yoga – classes – suit coat blazer ties caps shoes must – we ‘accent-neutralize’ your children’s – speech – so – they – sound – like -yankees – when – they – visit – the – localmalls – in – hordes – and – wear -polo – caps – with – their – bills – turned – sidewards – yeah – they – FightJEE too! So we all can then, happily die ever after! Yippee!!
Read the rest of this entry »

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

of whine and woeman…

September 28, 2015

Long ago, lost in the twirling mists of the memories past,  I wrote a series of rants on ‘talkers and doers‘ – more with a sense of disgust towards myself than with others… The links to the updated versions of the series are at the bottom of this offending post, for your edification.

…and pardon my soliloquy. (you can look at the other meanings/connotations too!)

JournalEntry# October 30, 2008 + updated on 28th September, 2015

I have long since come to the conclusions (not that they are a great revelation or whatever) that:
Read the rest of this entry »

புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது.  ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(

இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களின் கழுத்தறுப்புகளை விட மோசமான  மொழியறுப்புகளைச் செய்து தனித்துவம் மிளிரக் காட்சிதரும் பெருந்தகைகள், பலப்பலர், தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் இருக்கின்றனர்.  அவர்களை அவ்வப்போது படித்து, நான் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.

…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… !

Read the rest of this entry »

பாவிகளே! நீங்கள் நாசமாப் போக!!

என்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டீர்களா… :-((

Read the rest of this entry »

(அல்லது) ங்கொம்மாள, போட்றா ஸார்க்கு ஒரு புர்ராட்டா!
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
(அல்லது) நவீன புர்ராணம்

நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.

Read the rest of this entry »

(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)

ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில்.  உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.
Read the rest of this entry »

சுமார் இரண்டரை  வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)

அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:

இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)

  1. முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
  2. முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
  3. எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?

பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக,  ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)

-0-0-0-0-0-0-

இதில் முதலாவதை, சுமார் 1.5 வருடங்கள் முன் எழுதினேன்  ( = முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014 )

இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

Read the rest of this entry »