இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பில் மோதி போன்றவொருவர் இயங்கவேண்டியது, ஏன் மிக மிக முக்கியம்?
March 24, 2014
… ஏனெனில், இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், இயங்க வேண்டும். அதுவும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டின் மேன்மைக்கான தொலைநோக்குத் திட்டங்களை வடித்தெடுத்து, சமரசங்களின் மூலமாக, தேவையற்ற தயவுதாட்சணியம் இல்லாமல் – நம்மை முன்னோக்கி, தற்சார்புக்கும் தன்னிறைவுக்கும் இட்டுச் செல்லவேண்டும். இவற்றை விட முக்கியமாக நம்முடைய சுய நம்பிக்கையை, தைரியத்தை, குடிமைப்பண்பை வளர்க்க வேண்டும். அவநம்பிக்கை வாதிகளை, ‘என்னத்த செஞ்சி, என்னத்த பண்ணி…‘வாதிகளை வாயடைக்கச் செய்யவேண்டும்.
மேலதிகமாக – இவை கசக்கும் உண்மைகளாக இருந்தாலும் – ஏற்கனவே பல பத்துவருடங்களை, நாம் பிச்சைமுதல்வாத கப்பரையாண்டி அரசியல் போக்குகளால், தொழில்முனைவுகளுக்கு-தொழில்வளர்ச்சிக்கு எதிரான மகாமகோ ஊழல் நடைமுறைகளால், கொடுக்கவேண்டிய மரியாதையை தரத்துக்கும் கொடுக்காமையால், நம்பகத்தன்மை மறுபடியும் மறுபடியும் சுழன்றுச் சுழன்றுக் கீழ் நோக்கிச் சென்றபடியே இருத்தலால், முட்டியடி மட்டுமேயான அரசதிகார எதிர்வினைகளால், பெருகுடும்பக் கோமாளிக் கோமான்களால் – தொலைத்து விட்டோம். ஆக, இவற்றுக்கும் எதிராகப் போராடி – நம் பாரம்பரிய குணாதிசியங்களை மீட்க வேண்டும்…
என் பார்வையில் தற்கால அரசியல் சூழலில் – இக்குறைகளையெல்லாம் சரிசெய்யக் கூடியவராக, குறைந்த பட்சம் அதற்கு முனையக் கூடியவராக – அவர் கட்சியிலேயே அவருக்கிருந்த (=இருக்கும்) போட்டிகளையும், சவால்களையும் நேரடியாக ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டவராக, மோதி மட்டும் தான் இருக்கிறார். Read the rest of this entry »
online social activism for dummies
March 4, 2014
Silly…
It is very easy-peasy to become an activist (of social or anti-social issues) these days. Hallelujah, hallelujah!! All of us wannabe social activists have never had it oh so good!
In fact, this post is about ‘social activism’ that I actually learnt from an illustrious parent of one of my children… believe me! I am telling you the unvarnished truth – and unfortunately, for various reasons this parent (or parents) shall remain unnamed, sorry.
Oh, well.
To help you lazy fellows (I mean you – the unfortunate reader of this oh so very pathetic weblog), I have presented five levels of social activism, after a whole lot of painstaking research and lucubration. And, I sincerely hope that you would profusely thank me and flood my mailbox & the comments area with a zillion thankyou, thankyou kind of mushy notes, oh the hope!
Okay – onto the details of the FIVE levels: Read the rest of this entry »
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)
சாளரம் #10: நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக அதிகம்.
அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ் என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல் உலகைப் பார்த்தல். Read the rest of this entry »
தமிழ இயல்பு: ஸ்னெல் ஒளித்தடம் + ஸிப்ஃப் மானுட இயல்புக் கோட்பாடுகள்
December 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)
சாளரம் #8: ஸ்னெல் ஒளித் தடக் கோட்பாடு: ஓளியானது, எதிர்ப்பு குறைவாகவுள்ள பாதையில், ஆக அது வேகமாக செல்லக்கூடிய, நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடிய பாதையில் மட்டுமே செல்லும்.
உப ஸிப்ஃப் கோட்பாடு: மனிதனின் தாங்குசக்தியும் மனவலிமையும் பொதுவாக மிகக் குறைவு – அப்படியே அவை இயங்கினாலும் அவை, எதிர்ப்பு குறைவாகவுள்ள, சுளுவான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடுபவை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், மொழியியல் உட்படப் பல துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸிப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை. (என்னிடம் இருப்பது, இந்தப் பழைய பதிப்பு தான்)
இதன் புதுக் கருக்குக் குலையாத ஒரு அச்சுஅசலான ஃபேக்ஸிமிலி பதிப்பு 2012ல் வந்திருக்கிறது. அதன் அட்டைப் படம் (அமேஸானிலிருந்து), கீழே: Read the rest of this entry »
what is education?
December 18, 2013
Every once in a while, I do conduct some random workshops (or training sessions if you will), pontificating on what fancies me at that moment.
And so, it was the turn of a few hapless fellow teaching-colleagues who were unfortunate enough to be part of the conscripted audience of a 2.5 hour talk (spread over two days – conducted a few weeks back) delivered by yours truly (of the I-Me-Myself fame).
I wanted to do the talk in Tamil – but that was not to be, because 1) Most of the audience was made up of fellow Tamils – so they wanted it in English 2) There were a few non-Tamils who of course wanted it in English.
Normally my talks (*gasp*) are just plain ol’ stand-up comedy types – but this time, it was done with a few handouts and all that paraphernalia. I even made a powerpoint presentation, O tempora, O mores! :-(
வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும்
December 5, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)
… சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும் — யின் தொடர்ச்சி…

புல்லரிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு யார் இப்படி கோனார் உரை கொடுக்கிறார்கள்? இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால் – வேறு வழியேயில்லாமல், இவர்களுடைய கவிதைகளே(!) பரவாயில்லை என்கிற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. போலிப் பெண்ணியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு — இம்மாதிரி வசீகரக் கோமாளிகளுக்கெல்லாம், விசாரணை, புலனாய்வு, வழக்குப்பதிப்பு, வழக்காடல், தீர்ப்பு, மேல்முறையீடு சுற்றல்கள், முடிவான தீர்ப்பு என்றெல்லாம் விரியும் நீதிமன்ற நடப்புகளைப் பற்றி ஒரு எழவும் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டி, கருத்துதிர்த்துப் பேசித் திரிகிறார்கள்; இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் அசட்டுக் கண்ணாடிகளைக் கழற்றினாலே இவர்களுக்கு பச்சை நிறம், சிவப்பு நிறம் என்றெல்லாம் நிறங்கள் தெரியமாட்டா. தங்களுக்குக் கொஞ்சமாவது அடிப்படை நேர்மை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளாமலேயே, வெட்கம் கெட்டவர்கள்– ஊருக்கு உபதேசமும், சகட்டுமேனிக்கு அறிவுரைகளும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள், அதாவது என்னைப் போல… (படத்துக்கு நன்றி: ‘சவுக்கு;’ இந்த நகைச்சுவைக் கோனார் உரை, ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.)
சரி, வசீகரக் கோமாளிகள் நமக்காகக் கோனார் உரையாற்றும் பணி புரிகிறது. ஆனால், அவர்களும் சுயசிந்தனை அற்றவர்கள்தாமே! ஆக, அவர்களுக்கு யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்? எப்படி ஆணித்தரமாகப் பல விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் – கருத்துச்சிதைவுகளை விரிக்கிறார்கள்? அவ்வளவு மூளையிருக்கிறதா என்ன அவர்களுக்கு?
நம் தமிழர்களின் அதிசயிக்கவைக்கும் அறியாமையும், அது குறித்து நாம் கொண்டிருக்கும் பெருமையும்
December 1, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)
சாளரம் #5: தமிழகத்தில் பொதுவாக – மானுடப் பரிணாமம், இனம், மொழி, இயக்கம், வர்க்கம், ஜாதி, போராட்டம், கட்சி, அரசியல், அரசு போன்ற அடிப்படைகளின் மீது சரியான புரிதல்கள் இல்லை; போராட்டங்களும், இயக்கங்களும் – அரசியல் கட்சிகள் போலல்லாமல் இன்னொரு வித ஜந்துக்கள் என்றுகூட நாம் புரிந்துகொள்ள மாட்டோம் – ஆக, கந்தறகோளங்களை நம் புரிதல்களாக அவதானித்து, மகாமகோ கர்வத்துடன், பொறுக்கமுடியாத இறுமாப்புடன் பவனி வருபவர் நாம்.
இதற்கு – தமிழ், திராவிடம், இனம் என ஆரம்பித்த தமிழ்த்தேசிய அரசியல் – பிரித்தானியக் காலனிய வேலை வாய்ப்புகளில் ஒரு சாராரே உட்புகுகிறார்கள் எனக் கருதி, இன்னொரு சாராருக்கும் பங்கு வேண்டும் என ஆரம்பித்து – பின்னர் வேறு எதற்கோ ஆரம்பித்தோம் எனக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அதற்குப் பின்னர் திராவிட இயக்கமாய் உருமாறி – அதற்குப் பின் தேய்ந்துபோய் கட்டெறும்பு ஆகிவிட்டதும் ஒரு காரணம். (Tamil nationalistic (actually notionalistic) politics – from where it started off – hankering after colonial jobs – is now mainly indulging in the continual institutionalization of sheer lumpen stupidity.)
ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)
November 30, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4
சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.
ஆனால், நம்மை யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.
தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி
November 25, 2013
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:
… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் — நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …
நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »
சாளரம் #2: வரலாறு = குத்துமதிப்பாக இது, ஒருவேளை வரலைந்துக்கும் வரலேழுக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜந்துவோ என்னவோ?
November 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)
அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால், தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)
சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.
இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
-0-0-0-0-0-0-0-0-0-0-
ஏன் நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில், நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் – என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n)
November 14, 2013
முந்தைய இரு பதிவுகள்:
- பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? 02/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n) 12/11/2013
ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்…
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு
- இதுதாண்டா தமிழ் இளைஞன்!
- ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!),
- இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!
- இதுதாண்டா போராளி!
-0-0-0-0-0-0-0-
சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.
ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி இல்லையே, ஏன் நாம் இப்படி இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n)
November 12, 2013
இப்பதிவுகளுக்கான ஒரு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்: பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? (02/11/2013) இது 0/n – அதாவது முதல் பதிவு.
எச்சரிக்கை: 1) இந்தப் பதிவு வரிசை – பல மாதங்கள் முன் பத்ரிக்கு ஒரு கடிதம் போல எழுதப் பட்டது; ஆகவே, நான் கொஞ்சம் எடிட் செய்தாலும், வெட்டி-ஒட்டுவேலை செய்தாலும் – சில காலாவதியான விஷயங்களும் இருக்கின்றன. 2) இப்பதிவுகள் சுமார் 15 போல வரலாம். ஆக, உங்கள் உயிருக்காக ஓடவேண்டுமானால் தாராளமாக ஓடலாம். 3) ஆனால், மேலே படிக்கப் போகிறீர்களானால், அவசியம், இந்த வலைப்பூவின் முகப்பில் வலது பக்கத்தில் இருக்கும் பக்கங்களில் இதனைப் படிக்கவும்: ராமசாமி – யாரில்லை?
பத்ரியின் கேள்விகள்:
* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”
சரி. பத்ரி கேட்டிருப்பதன் சாராம்சம் – 1) ஸ்ரீலங்கா பிரச்னைகளும் 2) ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளும் – பற்றியவை.
ஆனால், சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, தமிழகக் கொதிப்பெல்லாம் வழக்கம்போல அடையாள உணர்ச்சிப்பிழம்புகள், ஃப்லெக்ஸ் தட்டி அடையாள உண்ணாவிரதங்கள், அடையாளக் கல்லெறிதல்கள் நடந்தபின்னர் பின்புறத்தில் (=குண்டிப்பட்டையில்) ஒட்டிக்கொண்ட மண் தட்டிவிட்டுக்கொள்ளப்பட்டு, அடங்கிப்போயிருந்தாலும், டெஸோக்கள் தஸ்புஸ்ஸோக்களாக உருமாறியிருந்தாலும், அவருடைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவேண்டியவையே. Read the rest of this entry »
ஃமுக ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ஃபெய்ன்மன்னார்சாமியார் வால்க!
November 4, 2013
பத்ரி சேஷாத்ரி (என நினைக்கிறேன்) அவர்களுடன் ஒரு முறை (பொதுவாக, நம் கல்லூரிகளில் அறிவியல் போதிக்கப்படும் நிலை பற்றி பல கோணங்களினூடே) பேசிக் கொண்டிருந்த போது – அவர் சொன்னார்: நம் தமிழ் சினிமாவில் யாராவது ஹீரோ அல்லது ஹீரோயின் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்றவர்களைப் பற்றிப் பேசுபவராகவோ அல்லது படிப்பவராகவோ காண்பிக்கப் பட்டால் ஒருவேளை நாம் ஆவலுடன் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்போமோ? மேலெழும்பி வருவோமோ?
சில சமயம், இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். சில நாட்கள் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்து, படு பயங்கரக் கனவுகள் சிலவும் கண்டிருக்கிறேன்.
மேலும் — சினிமாவிமர்சனம், சினிமாவிமர்சனமாக எழுதித்தள்ளும் மனிதர்களைக் கொஞ்சம் பொறாமையுணர்ச்சியுடனேயே பார்க்கும் நான், சில சமயம், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பார்க்காது சினிமாசினிமாவாகப் பார்த்து — விமர்சனமெல்லாம் உடனுக்குடன் அமர்க்களமாகச் செய்வதாகவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் ஒன்று…
‘எங்கும் தமிள், ஏங்கும் டமில்’
— புதிய படத்தின் ’சுடச்சுட’ விமர்சனம் Read the rest of this entry »
உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (இரண்டாம் நிகழ்வு)
October 27, 2013
முந்தைய பதிவு: உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே) 03/10/2013
நமது திருமணங்களில், சமூக விருந்துகளில், நமது உணவகங்களில் – இவற்றையெல்லாமே விடுங்கள் — நம் வீடுகளிலேயே, நாம் அநியாயத்துக்கு வீணடிக்கும் உணவைப் பற்றி யோசித்தால் மாளா துக்கமும் கோபமும் தான் வரும். இந்த – சோற்றை வேலை மெனக்கெட்டு வீணடித்தல் எனும் பொதுவிதிக்கு எந்த மதமோ, ஜாதியோ, நாடோ – எனக்குத் தெரிந்தவரை எதிலும் ஒரு விதிவிலக்கு கூட இல்லை. ஒரு பக்கம் மாளாப் பஞ்சம், பற்றாக்குறைகள், பானை வயிறுடன் சூம்பிப் போயிருக்கும் குழந்தைகள். இன்னொரு பக்கம் — ஒரு போதும் சிந்தித்துப் பார்க்கப்படாத, வீணடிப்புகளும் கயமையும் + உணவின் மீதான சுரணையற்ற அவமரியாதையும்.
… தவிர்க்கமுடியாத சில சமயங்களில், நான் சென்றிருக்கும் சொற்ப எண்ணிக்கைத் திருமணங்களில் கூட, நம் மக்கள் செய்யும் இந்த அயோக்கிய வீணடித்தல்களால் என்னை அழைத்தவர்களுக்கு, என்னால், தர்மசங்கடமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன – நிலைமை சில சமயம் ரசாபாசமாகி, மிகுந்த தொந்திரவு கொடுத்திருக்கிறேன்.
இதற்குப் பயந்து கொண்டும், திருமணச் செலவினங்களை பெண் மட்டும் அல்லது பெண்வீட்டார் மட்டுமே தரும் அயோக்கிய வழிமுறைகள் எனக்கு ஒப்பில்லாத காரணத்தாலும் – சுமார் 20 வருடங்கள் எந்தத் திருமணத்துக்குமே போகாமல் இருந்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மூன்று நான்கு திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
அப்படி, வேறுவழியே இல்லாமல் செல்லும்போது, உடலின் அனைத்து ஓட்டைகளையும் மூடிக் கொண்டு ஒரு மூலையில் புத்தகங்களுடன் உட்கார்வதையும் பழக்கமாக வைத்திருக்கிறேன். Read the rest of this entry »
ஆர் மகாதேவன் – சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 7 புதிய நீதிபதிகளில் ஒருவன்!
October 25, 2013
மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
காலையில் என் அப்பா தொலைபேசியில் கூப்பிட்டார்: “டேய், உன் நண்பன் ஹைகோர்ட் ஜட்ஜாயிட்டான்; பேப்பர் படிச்சியா?”
எனக்குத்தான் நாளிதழ் கிட்டே போகும் பழக்கமே இல்லையே – ஆக, பறந்தோடி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரிடம், முந்தா நாள் செய்தித்தாளை யாசித்துப் படித்தேன். Read the rest of this entry »
முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)
இரண்டாம் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (2/3)
19. சோட்டாபீம் போன்ற அற்ப கேலிச்சித்திர அசிங்க அதிகுண்டக் கோமணர்கள் இல்லாமல், வாழ்க்கையில் வீரத்தையும், விடாமுயற்சியையும் – எப்படித்தான் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது? கேளிக்கை முறை ஊடக நிகழ்ச்சிகளினால் மட்டும்தானே குழந்தைகளுக்கு இவ்விழுமியங்களைக் காண்பிக்க முடியும்? சேர்ப்பிக்க முடியும்?
ஆம். இது மிக வருந்தத்தக்க, ஆனால் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.
வேறு வழியில்லை. பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும், இதிஹாசங்களும், புராணங்களும், ஐங்காப்பியங்களும் சொல்லாத, சுட்டாத விஷயங்களை, மிகுந்த நயத்துடன், மிகத் தெளிவாக சோட்டாபீம் அவர்கள் காண்பிக்கிறார்கள். எனக்குப் புல்லரிக்கிறது.
அடிப்படை அறங்களின் ஒரு அங்கமான நேர்மை, தைரியம் போன்ற அடிப்படை விழுமியங்களை, பெற்றோர்களாகிய நம்மால் பல்வேறு அழுத்தங்களால் நம்முடைய குழந்தைகளுக்குப் புகட்டமுடியாமல் போகும்போது, யாராவது தொலைக்காட்சியில் இவற்றைக் காண்பித்தால் என்னைப் போன்ற உலுத்தர்கள், புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தச் சனியன்களுக்கு வேறு வேலையில்லை. மேலும் உங்களுடைய குழந்தைகள், சோட்டாபீம் படம் வரைந்த மேல்சட்டைகளை அணிந்து கொண்டு உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, உங்கள் இதயம் உருகிவிடாதா? Read the rest of this entry »
முதல் பாகம்: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில்லாமல் வாழ்வாங்கு வாழ்வதெப்படி (1/3)
10. ஆனால், தொலைக்காட்சியில் நாம் இப்போது பார்க்கும் விஷயங்கள், கண்+செவி கொண்டு நம்மை அடையும் செய்திகள், பிற்காலத்தில் நமக்கு உபயோக கரமாக இருக்கலாமில்லையா? எதிர்காலத்தின் நாம் உபயோகிக்கக்கூடும் நினைவுகள், தற்காலத்திய இந்த்ரியத் துய்த்தல்கள் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன அல்லவா?
நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம் நினைவில் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நேரிடையாகவோ மறைமுகமாகவோ எவ்வளவு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டவைகளிலிருந்து நாம் எவ்வளவு சதவிகிதத்தை உபயோகித்து நம்மை உய்வித்துக் கொண்டிருக்கிறோம், மகிழ்வித்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்தால் நலம்.
பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு – ஒரு நீண்டகால தாக்கத்து என்பது இல்லை. அவை சாதாரணமான துய்த்தல்கள் தான். அதிக பட்சம் One night stand போன்றவைதான். Read the rest of this entry »
(அல்லது) டீடலஸ், இகரஸ் – நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)
இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))
<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>
சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.
அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-( ம்ம்ம் B-)!
ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…
என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான தீர்வு இருந்தது.
கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது. இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.
இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம் என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »
(அல்லது) விதண்டாவாதம் செய்வது எப்படி?
(அல்லது) எதையும் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று ஆகாத்தியம் செய்வது, பிலாக்கணம் வைப்பது ரொம்ப லேசு!
முதலில் இந்த அயர்ச்சியளிக்கும் பின்னூட்டத்தைப் படிக்கிறீர்களா? (இதே தொனியில் இரண்டு மின்னஞ்சல்களும் வந்திருக்கின்றன)
அய்யாமார் அவர்களே,
வெறுமனே செய்தித்தாள்களையும் (=குப்பைகள்) படித்து, அரைகுறை தொலைக்காட்சிகள் பார்த்து, கற்பனாசக்தியால் பல விஷயங்களை ஆய்ந்தறிந்து பல கருத்துகளையும், காழ்ப்புகளையும் வளர்த்தெடுக்கலாம். ஆனால்…
1. வருந்தத் தக்க வகையில், உங்கள் பின்னூட்டத்தில் – சில உண்மைகளும் (அதாவது மோதி குஜராத்தின் முதலமைச்சர் போன்றவை), உண்மைகள் அல்லாதவையும் (= மிச்சம் இருப்பவை) இருக்கின்றன. நான் பின்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். Read the rest of this entry »
உணவை வீணடிப்பது பற்றிய சிந்தனைகள்… (நான்கு நிகழ்வுகளினூடே)
October 3, 2013
பல மாதங்களுக்கு முன்னால், குவிந்திருந்த பல வேலைகள் காரணமாக, சென்னையில் இரண்டு நாள் ‘சூறாவளிச் சுற்றுப் பயணம்’ செய்தேன் – அதன் மேம்பாலங்களும், ஒரு வழிச் சாலைகளும், புதிய மகாமகோகடைகளும், அலை மோதிக் கொண்டிருந்த மக்களும், ஹாரன்களும், சாலை நெரிசல்களும், புகையும், ப்ளாஸ்டிக் குப்பைமேடுகளும், அதிகப்பளீர் விளக்குகளும், சதாசர்வ காலமும் செல்போனில் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருக்கும் மக்களும் – எனக்குப் பல இடங்களில் எங்கிருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதெல்லாம்கூட ஒன்றுமே புரியவில்லை!
இந்த நகரத்தில் தானா நான் பலபத்தாண்டுகள் குட்டையில் ஊறிய மட்டையாகக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்? பதினேழாண்டுகளில் இவ்வளவு மாற்றங்களா?
… ஒரு வழியாக வேலைகள் முடிந்ததும், ‘புதிய’ நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்கு பனகல் பார்க் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை! அங்கு ஒரு மேம்பாலம் வேறு – குழம்பிப்போய் இரண்டு சுற்றுச் சுற்றினேன். ஆரெம்கேவி என்ற ஒரு பளபளப்பு ஜவுளிக்கடை முன்னால் ஐந்து நிமிடத்தில் இரண்டாம் முறை என்னைப் பார்த்த ஒரு பூக்காரம்மா கன்ஃபூஸ் ஆய்டுச்சுங்களா என்றார். ஆமாம்மா வய்சாட்ச்சில்ல என்றேன். Read the rest of this entry »


