“ஸார்! நம்ப எம்பிங்க பார்லிமெண்ட்ல தமிழ் ஓத்தெடுத்ருக்காங்க!”

July 7, 2019

ஐயய்யோ!

கடந்த லோக்சபா தேர்தல்களில் முதல்முறை வாக்களித்த சிறுவன், சில நாட்கள்முன்பு எனக்கு மிகவும் பேரானந்தத்துடன் ஃபோன் செய்திருந்தான்! (நான் ஏதோ வேலைகளால் பள்ளி பக்கம் சென்றே ஒன்றரை மாதங்களாகிவிட்டனவேறு!)

முதலில் எனக்குச் சரியாகப் புரியவில்லை, ஆக, கொஞ்சம் விதிர்விதிர்த்துவிட்டது.. அந்தச் சிறுவன் (என்னைப் போலல்லாமல்) கெட்டவார்த்தைகளை இப்படிச் சரளமாக, அதுவும் வாத்தி ஸ்தானத்தில் இருக்கும் என்னிடம் உபயோகித்ததில்லையே என யோசித்துக்கொண்டிருந்தேன்.

அவனுக்குத் தொடர்ந்து ஒர்ரே புளகாங்கிதம். ஒர்ரே தமிழ் வாழ்க, தமிழினம் வாழ்க, தமிழன் இந்தியாவை ஆளப்போகிறான் எனப் புல்லரிப்பு. நம்கூட பத்தாம்வகுப்பு வரை இருந்த பையன், அவன் +2 படித்துமுடித்த ரெண்டு வருடத்துக்குள், எப்படி திடீரென்று இனமானம் என்றெல்லாம் அட்ச்சிவுடுகிறான் என்று எனக்கோ படுஆச்சரியம்! (இந்தப் பையன்கள் சிறுமிகள் போலப் பல முன்னாள் மாணவர்கள், வளர்ந்தபின்னும் கூட, போக்கற்றுப் போய், என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள், பாவம். இவர்களில், பெங்களூரில் மேற்படிப்பு படிக்கவந்திருக்கும் சிலபல சிறுமிகளுக்கு நானும் என் மனைவியும் ‘லோகல் கார்டியன்ஸ்’ – அவ்வப்போது அழைத்துச் சாப்பாடும் அரட்டையும் அடிப்போம். அவர்களைச் சனி விடாதுபோல!)

-0-0-0-0-0-

…மேலும் – எனக்கு அவன் என்ன சொல்லவருகிறான் என்பது இன்னமும் சரியாகப் புரியாமல் பேரதிர்ச்சியில் இருந்ததால், கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, “பையா, நம்ப தெராவிட அர்சியல்வாதீங்களப் பத்தி நாம் எவ்ளோ பேசிர்க்கோம்! தொடப்பக்கட்டைக்குத் தாவணிபோட்டா அத்தையும் எடுத்து ஓத்து விடுவார்கள் அப்டீன்னிட்டு? அதனாலதான் அவனுங்க பார்லிமெண்ட்ல எத்தை ஓத்தாலும் நமக்கு ஆச்சரியமே வரக்கூடாது இல்லியா. பாத்ததயல்லாம் ஓத்து திர்டிதிர்டித்தான நம்ப தமிழ் நாட்டயே குட்டிச்சுவர் அட்ச்சிட்டானுவ!  வொங்கப்பா குட்ச்சிகுட்ச்சே செத்துப்போனதுக்கு அவ்னுங்கதானடா காரணம்!”

“ஸார் எலீக்ஷன் வந்திச்சில்ல… ரிஸல்ட் வந்திச்சி இல்லை… கெலிச்சவனுங்க டெல்லி போய் பார்லிமென்ட்ல வர்க் செய்ணும் இல்ல… …”

“…எனக்குப் பிர்யலியே! ஆனாக்க, ஏன் அவ்னுங்க, தில்லி போய் தமிழை ஓத்தானுங்க? அது இன்னா பாவம் செஞ்சிச்சி? ஹ்ம்ம்?? அவ்னுங்க அத இங்கியே, அவ்னுங்க வழக்கம் மாரீ செஞ்சா என்ன? ஏற்கனவே நம்ப மானம் கப்பலேறிப் போய்க்கிட்டிருக்கு!”

“ஸார், அது வந்து, தமிழ்ல ஓத்து இல்ல ஸார். அது இங்க்லீஷ் ஓத்து!”

“அடப்பாவிங்க்ளா, அவ்னுங்க இங்க்லீஷையும் ஓத்துட்டானுங்களா! இன்னா பகீர் விஷயண்டா இது!”

“இன்னா ஸார், உங்க்ளுக்கு சத்தியமா பிர்யலியா?”

“பையா, பிர்யல – ஆனாக்க இவ்னுங்க்ளுக்கு தமிழே சரியா பேசவராதே, அவ்னுங்க ழ வ கண்டானுங்க்ளா, சங்க எலக்கியத்தக் கண்டானுங்க்ளா! தமில் வால்க டர்புர் செம்பொழி அப்டீன்னிட்டு ஒர்ரேயடியா தமிழ வெச்சிசெஞ்சி ஓக்கறதத் தான அவ்னுங்கோ ஒவ்வொரு தபாவும் செஞ்சிக்கிறானுவோ இல்லியா??”

“ஸார், கிண்டல் பண்ணாதீங்க! இது ஸீரியஸ் வெஷயம்! நாமல்லாம் சுதந்திரதின, பள்ளி நிறுவிய தின கொண்டாட்ற சமயத்துல் ஓத்தெடுப்போமே! அந்த ஓத்து சார்!!”

“அடேய்! சரியா சொல்லுடா! நாமெல்லாம் அந்த எழவுக்கு ஏண்டா போவப்போறோம்? நம்பளோட பாத ஓத்தயடிப்பாதயில்லடா! ஏண்டா என் கழுத்த அறுக்ற! அது ஓத்து இல்லடா! அது மெட்றாஸ் தமிழ்ல கெட்டவார்த்தடா! இதவேற நான் வொனக்கு சொல்லிக்கொட்க்கணுமா? வெறுமனே உறுதிமொழி இல்லாக்காட்டீ ப்ரமாணம் அப்டீ இப்டீன்னிட்டு ஆயிரம் வார்த்த இருக்கேடா! கொற்ஞ்ச பட்சம் ஓத் அப்டீன்னாச்சியும் சொல்லேண்டா!”

“ஆனா ஸார், ஓத்துன்னாக்க ஓத்துதானே?”

“ஆமா! ஆனா நீ தங்க்லீஷ் எழவ்ல பேசற, அதுவும் என்னமாரீ கெழபோல்ட்கிட்ட, ஒண்ணுமே புர்யமாட்டேங்குதுல்ல!”

“ஸார்! ஓத்துன்னாக்க இங்க்லீஷ் ஓத்து! அதத்தான் அங்க எட்த்தாங்க!”

“பாவி டேய்! இப்பதான நீ அவ்னுங்க தமிழ்ல ஓத்தெட்த்தாங்கன்னு சொன்னே! இப்ப மாத்தி ரோசிச்சி இங்க்லீஷ்ல ஓத்தானுங்க டர்புர்ண்ற!”

“ஐயோ ஸார்! ஒங்க்ளுக்குப் புர்யவே மாட்டேங்குது! நேர்ல வாங்க, டீடெய்லா பேசுவோம்!”

“டேய் பையா, எனக்க பிர்யாம இல்ல! ஆனாக்க இது அவ்ளோ பெரிய்ய விஷயமா? இதப்போய் பெரிய்ய விஷயமா நெனக்கற வொனக்கு வெக்கமா இல்ல?”

“ஸார்! என்ன இருந்தாலும் நம்ப ஆளுங்க ஸார்!”

“அப்ப தமிழ் கொஞ்சம் பேசத்தெரிஞ்சா இன்னா பொற்க்கித்தனம் பண்ணாலும் ஒத்துப்பேண்ற? அத்தான?? இத்தாடா எனமானம்? அத்ல அத்தினிபேரும் கேப்மாறீ பஸ்ங்க. நம்மூரு எம்பி ஒர்த்தன் ஒரு கவர்மெண்டு டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சயே திருடி வூட்டுக்குள்ளார வெச்சிக்கினாண்றதயெல்லாம், கனிமொழி ராடியா வழியா அசிங்கமா பேரம் பேஸ்ன ஆடியோ போட்டுக்காட்டி அவ்ங்க்ளோட ஹார்பர் 2ஜி ஊழல் பத்தியெல்லாம், எவ்ளோ பட்ச்சிபட்ச்சி வொங்க்ளுக்குச் சொல்லிக்கிறேன்! எங்கிட்டயே எனமானம் டர்புர்ண்றியே! அட்த்த தபா வரும்போது வொன் வூட்டுக்கு வர்ரேன்!”

“ஸார்! சந்தோஷப்படுவீங்க! தமிழ்னாக்க வொங்க்ளுக்கு இன்ட்ரெஸ்ட் தாஸ்தீன்னு சொன்னேன், இப்டீ கோச்சிக்கிறீங்க்ளே!”

“கோவம்லாம் இல்லப்பா! வெறும் வருத்தம்தான்! பெருமைப் படவேண்டிய வெஷயத்துக்கு பெருமைப்பட்டா அது சரி! ஆனாக்க களவாணிப்பஸ்ங்க  ட்ராமா பஜன போட்டதுக்கு இப்டீ விஜய்குஜய் விசிறி மாரீ குதிக்றியேன்னிட்டுதான் கவலையா இருக்குது!”

“…”

“ஏண்டா! அவ்னுங்க ஊரோடு ஓத்துவாழ் அப்டீன்னிட்டு திருட்ற தீவட்டிக் கொள்ளைக்காரனுங்கடா! இவ்னுங்களப் போய் புகழறயே, அதுவும் அவ்ங்க தமிழ்ல வொளறிக்கொட்டினாங்கவேற… வொனக்கு இன்னாடா ஆச்சு?”

“தமிழன் என்றொரு எனமுண்டு, தனியே அவ்னுக்கு குணமுண்டு’ண்றது பொய்யா?”

“தெராபத் தெராவிடத்துக்கும் தமிழுக்கும் இன்னாடா சம்மந்தம்? எவனோ முட்டாக்கூ வொளறினாக்க தெராவிடம் எனம் மானன்ண்ற! வொனக்கு டீச்சரா ஒருகாலத்துல இர்ந்தத நெனச்சி வர்த்தப்படவெச்ருவ போல!”

“ஸார், அப்ப ஜனகணமனல தெராவிட உஜ்ஜல வங்கா இருக்கறது பொய்யா ஸார்? ஏன் ஸார் இப்டீ இனஎதிரி  மாறீ பேஸ்றீங்க?”

“இன்னாடா! நீயா இப்டீ பேஸ்ற? நான் இனஎதிரியா? நான் எப்போம்போலத்தாண்டா பேசிக்கினு இர்க்கேன்! போக்கத்த ரௌடிப்பஸ்ங்களோட ஊர் சுத்திக்கினுக்கிரியா படிக்கறியா?  ஜனகணமன கூட ஞாபவம் இல்லை, பெரிஸ்ஸா எம்பிங்க எப்பப் பாத்தாலும் ஓத்துக்கிட்றானுங்கன்னிட்டு மகிழ்ச்சி! அது உஜ்ஜலா சொட்டு நீலம்னிட்டு இல்லடா! எனக்கு எங்க அட்ச்சிக்கெற்துன்னிட்டு தெர்லியே!”

“ஸார், அப்டீன்னா கோவப்படாம சொல்லிக்கொடுங்க, கத்துக்றேன்!”

“பையா, அந்த தேசியகீத வரீங்க, ‘பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா, திராவிட உத்கல பங்கா’ அப்டீன்னிட்டு போவும். அல்லாம் வெறும் மொழிபேருல்ல, இனம் மண்ணாங்கட்டி தெர்ப்புழுதி பேரில்ல. அல்லாம் வெறும் புவியியல் பிரதேசம்டா”

“அப்போ தெராவிடம்ண்றது? எங்க ஸ்கூல்ல சொல்லிக்கொட்த்தாங்க்ளே?”

“அது வெறும் புளுகு. ஏதோ அழுகுணியாட்ட வெள்ளக்கார அரெகொறேப் பாதிரி பீலாவுட்டது! நம்ப எஸ்ராமகிருஷ்ணன் வுட்ற பீலா மாறீ! அந்தாள எவ்ளோ பட்ச்சிபட்ச்சி சிர்ச்சிர்க்கோம்! அத்த கூட மற்ந்திட்டியா, ஜனகணமனவோட!”

“அந்தாளு இன்னும் எள்தறாரா ஸார்! அவர் கட்டுரயப் பட்ச்சிக்கினே நடிப்பீங்க பார்ங்க, றொம்ப மிஸ் பண்றோம் ஸார்!”

“…ஏதோ பேச்சுவாக்குல அந்தாளப் பத்தி சொன்னேன் – இனிமேக்காட்டியாவது இந்த இனம் மானம்னிட்டு பேசாத. சரியா?”

“நாம்ப தமிழ் தெராவிட இனம் இல்லையா? தமிழன் எனவொரு எனமுண்டுண்றது பொய்யா!”

“எவ்ளோவாட்டி இத்தையெல்லாம் பேசியிருக்கோம்! இருந்தாலும் கடோசிவாட்டி இதச் சொல்றேன். பஞ்சாப இனம் ஸிந்து இனம், குஜராத இனம், மராட்டா இனம், உத்கல இனம், பங்கா இனம்னிட்டு இருந்தாக்க, அப்டீ நீ ப்ரூவ் செஞ்சேனாக்க,  திராவிட இனம்னிட்டு ஒரு பெர்ச்சாளி இனம் இருக்குன்னிட்டு நான் ஒத்துக்கறேன், இல்லாட்டி இல்ல!”

“…அப்போ…”

“இனம் கினம்ண்றது எல்லாமே டுபாக்குர் விஷயண்டா! இதெல்லாம் ஸைன்ஸும் இல்ல, மசுரும் இல்ல… எவ்ளோ பட்ச்சிர்க்கோம் பேஸிக்கிறோம்! அத்தினி விஷயத்தையும் மறந்திட்டு இப்டீ தெராவிட வொளறல் வொளற்றியே! எனக்கு அசிங்கமா இர்க்குதுடா! பத்தாம் க்ளாஸ் முட்ச்சிட்டு வொங்களை வட இந்திய டூருக்கு இஸ்துக்கினு போனோம் – அங்கே எங்காச்சும்  பங்க இனம், உத்கல இலம் வெங்கல ஏனம்னிட்டு எந்த முட்டாக்கூவானாச்சும் வொளறினானா? அதப் பாத்தோமா? நம்ப தமிழ்நாட்டப் புட்ச்ச கெரகம்டா இந்த தெராவிடம்… நல்லா தெர்ஞ்சிக்கோ! இவ்னுங்க கூண்டோடு ஒழிஞ்சாதாண்டா நாம்ப உர்ப்பட்வோம்!”

“ஆனா ஸார், அவ்ளோ பேர் அறிஞ்ஜர்கள் தெராவிடம் பத்தி எழுதிக்கிறாங்களே ன்னிட்டு என் ஸ்கூல் ஸார் சொன்னாரே!”

“பையா! கிண்டி ரேஸ் கேள்விப்பட்ருக்கியா? கத சொல்லியிருக்கேனே! கொதெரெ வால்ல மணிபர்ஸைக் கட்டிவுட்றதுன்னிட்டு! அப்போ கிண்டி ரேஸ் அப்டீன்னாக்க கிண்டி இனமா? அது கிண்டியினம் அப்டீன்னாக்க தெராவிடம் கழுதையினம், அவ்ளோதான்!”

“..அறிஞ்ஜர்கள் சொன்னது??”

“அறிஞர்கள்னு சொல்லு. தெராவிடனுங்கள்க்கு மட்டுந்தான் தமிலைக் கொளை செய்ய உரிமை கீது, ஸர்யா? ஸிர்க்க்றான் பாரு. இந்த அறிஞ டுபாக்குருங்க பத்தி இன்னொரு நாளக்கி பேசலாம்!”

“…ஸார், நான் நம்ப எம்பிங்க தமிழ்ல ஓத்தெடுத்ததைப் பத்தி சந்தோஷமா, வொங்க்ளுக்குப் புட்ச்ச செய்தி சொல்லவந்தேன். இப்டி மெர்ஸலாக்கிட்டீங்க்ளே!”

“டேய் பையா!  த பார்றா! திர்ம்பி ஆரம்ப்சிட்டியா? தமிழ்னாக்க எனிக்கும் சந்தோஷம்தான்! ஓக்கறதும்  அதப் பத்தீ ரொம்பறொம்ப பேஸ்ரதும் நம்பளமாறீ பாலூட்டிங்களுக்கு றொம்ப சகஜம்தாண்டா! ஓக்கறதே இல்லாம, நாமள்ளாம் பொற்ந்திர்ப்போமா, சொல்லு? ஆனாக்க செம்வோக்கல் தமிழ்ஓக்கல்னிட்டு நீ பேஸ்னது என்க்கு ப்ராப்ளமாய்டிச்சி!”

“ஸார், இன்னா ஸார் பச்சபச்சயா பேஸ்றீங்க! எனக்கு வெக்கமாக் கீது!”

“பையா, நீதான மொதல்ல ஆரம்பிச்ச, தமிழக எம்பிங்க ஓக்கறாங்கன்னிட்டு… இப்ப நீயே வொங்க கர்ணாநிதி திர்மாகுருமா மாறீ மாத்தி ரோசிச்சி என்னை குத்தம் சொல்றியே!”

<சிரிப்பு>

“ஓட்டு போட்றத்துக்கு துட்டு வாங்கினியா?”

“வூட்டுக்கு கொண்டாந்து கொட்த்தாங்க. திமுக விசிக ஆளுங்க ஓட்டுக்கு 300 அமுக்கிக்கினு 200 கொட்த்தாங்க. ஆனாக்க நாங்க பாமக.”

“அடப்பாவீ! நான் எவ்ளோதபா முட்டிக்கினே சொல்லிட்ருந்தேன்! துட்டு வாங்காதடா துட்டு வாங்காதடா அப்டீன்னிட்டு!”

“மன்னிச்சிர்ங்க ஸார்! ஆனா நாங்க அத யூஸ் பண்ல. வர்ணமுத்துமாரியம்மா கோயில் உண்டீல அதப் போட்டுட்டோம்! எப்டீயும் நம்ப கிட்டேர்ந்து திர்ட்ன திர்ட்டுப் பணம்தான ஸார் அது!”

“அடேய்! சாமியயும் வொங்ககூட சேத்து களவாணியாக்கிட்டீங்க்ளே! ஆனாக்க மொத்தத்துக்கு பரவால்ல! அட்த்த தபா இப்டீ செய்யாதபா!”

“…”

“நீ பாமக-ல தான இர்க்க? ஏண்டா பின்ன தெராவிட எனமானம் அப்டீன்னிட்டு பேஸ்ற? ஏதோ தெராவிட கழ்தேங்கோ அங்கே போய் தமிழ்ல சாணி போட்டிச்சின்னாக்க எப்டீடா தமிழ் முன்னேறும்? அதுல ஒரு மூஞ்சாவது வெளங்க்றமாரி இர்க்குதா? அவ்னுங்க ட்ராமாவால ஒனக்கோ நம்ப நாட்டுக்கோ ஏதாச்சும் ஒரு பிரயோஜனமாச்சியும் உண்டா? ஏண்டா இப்டீ ஆய்டிச்சி ஒனக்கு? இத்ல இன்னாடா புல்லரிப்புக்குக்கீது?”

“…மன்னிச்சிடுங்க ஸார்!”

“போய் ஒழ்ங்கா பட்ச்சி உருப்பட்ற வழியப் பாரு! ஸர்யா? வாழ்க பாரதம்! உண்மையாகவே வளர்க தமிழ்!! ஆகஸ்ட்ல பாக்கலாம், ஸர்யா?”

“தேங்க்ஸ்! ஸாரி ஸார், பை.”

-0-0-0-0-

புத்திசாலிப் பையன். பொதுவாகவே அறியாப் பிள்ளைதான். ஆனாலும், அவன் என்னை ‘இன எதிரி’ என்பது போலச் சுலபமாக அழைத்தது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், இனம் என்பதும் டுபாக்குர் கருத்தாக்கம் + இதுவும் கடந்துவிடும்தான்!

ஆனால் – பிள்ளைகளுக்கு தீராவிடத் திராவிட அயோக்கியத் தனத்துக்கெதிராக முதற் தடுப்பூசி மட்டும் போட்டால் போதாது. அவ்வப்போது அதற்கு மேலதிக, பூஸ்டர் டோஸ் கொடுப்பதும் அவசியம்தானோ?

…ஆனால், நமக்கிருக்கும் மீதமுள்ள வாழ்நாள் குறைந்துகொண்டே வருகிறது… அதே சமயம், எவ்வளவோ செய்துமுடித்துவிடக்கூடிய காரியங்களும் இருக்கின்றன. ஜேஜே:சிலகுறிப்புகளில் வருவதைப் போல, அவற்றைச் செய்யமுடியாமல் செய்துவிடும் இந்த அசட்டைதான் என்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஹ்ம்ம்

12 Responses to ““ஸார்! நம்ப எம்பிங்க பார்லிமெண்ட்ல தமிழ் ஓத்தெடுத்ருக்காங்க!””

 1. K Muthuramakrishnan Says:

  Your intension is good. But presentation I can not digest. Thr article is also very lengthy. It does nor deserve so much words and sentences.


  • I agree, siree. Please reduce your tension.

   …But you should also understand and be enormously grateful to me that I had edited out so much of conversation.

   But then, I am not on Oath, but only on Oats.

   This cereal is a killer. Thanks!

   __r.

 2. chichi Says:

  virasam


  • ஐயா சீச்சீ (அல்லது சேச்சீ?),

   றொம்ப ஒழுக்கவாதி போல. அப்படியென்றால் நீங்கள் போகவேண்டியது வேறெங்கோ!

   மேலும் உங்களுக்கு இது வெறும் ஆறு ரசமாகப் பட்டிருக்கிறது. மிளகுரசம் பூண்டுரசம் தக்காளிரசம் கோக்கம்ரசம் இஞ்சிரசம் எலுமிச்சைரசம்??

   ஆகவே புகார் அளிக்கிறீர்கள் – அடுத்த தபா இதனை நவரசமாகச் செய்துவிட்டால் போகிறது, சரியா?

   நன்றி!

 3. Sivaa Says:

  தமிழ்நாட்டில் போராளியாக என்ன செய்ய வேண்டும்? பெரியாரைப் படியுங்கள் அவர்தம் தடியை நினையுங்கள்.


  • ஒத்திசைவின் நான் மட்டும்தான் விரசமாக எழுதவுரிமை. நீங்கள் இப்படி எழுதுவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

   நீங்கள் திருந்தவில்லையானால், மறுபடியும் எஸ்ரா பற்றி எழுத ஆரம்பித்து விடுவேன். ஜாக்கிரதை!

 4. contactmouli Says:

  உங்க ப்லாக் othisaivu அப்படீன்னு ஆங்கிலத்துல இருக்குறத அந்தப் பையன் தமிழ்ல என்ன பாடுபடுத்தியிருப்பானோன்னு நெனச்சுப் பார்த்தேன்! :D

 5. k Says:

  Truly A Class :(

 6. nparamasivam1951 Says:

  என்ன சார், உங்க மாணவர்களெல்லாம் இப்படி தமிழ் பேசி……..நம்ம திமுக எம்.பி.களே தேவலையா அல்லது உங்கள் மாணவ சிகாமணிகளா? ஒரே குழப்பமாக…..


  • ஐயா! பையன்களையும் என்னையும் மன்னிக்கவும். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பொதுவாக பேச்சுப் புழக்கத்திலிருக்கும் பாஷதான் இந்த மெட்றாஸ் பாஷ. கொஞ்சம் கொச்சையாக இருப்பதுபோலப் படலாம். ஆனால் அவர்கள் எழுதும்போது தமிழ் பட்டிபார்க்கப்பட்டுவிடும்.

   முதலில் எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது – ஆனால் பழகப்பழக, மொழி தகவல்பரிமாற்றத்துக்கான ஒரு கருவி என்று நினைக்கப் பழகி ஒருமாதிரி நிலைக்கு வந்துவிட்டேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s