பீலா மன்னன் எஸ்ராமகிருஷ்ணனும், நேரு-திலீப்குமார் கதையும்
July 6, 2019
கீழே இருப்பது, அக்கால ‘நிரந்தர மலச்சிக்கல் முக’ ஹிந்தி நடிகர் திலீப்குமார் எழுதிய புத்தகத்தின் ஆங்கில ஒரிஜினல்.
பீலா மன்னர் படித்ததாகச் சொல்லும், இந்த திலீப்குமார் சுயசரிதைப் புத்தகத்திலிருந்து எடுத்தேன்; இது மூலம். படித்துவிட்டீர்களா?
இப்போது, மேற்கண்ட நிகழ்ச்சியைப் பற்றி எஸ்ராமகிருஷ்ண மானேதேனே! + தலைகீழ் தலைவிதி விகிதசம ரசவாதம்!
நிர்மூலம். சொல்லப்போனால், வெட்கங்கெட்ட எஸ்ராமகிருஷ்ண காட்டுரை முழுவதும் இதேவகைப் பீலா டகீல்கள்தாம்! திலீப்குமார் எழுதியதற்கும், எஸ்ராவுடைய கோனார் நோட்ஸ் எழவுக்கும் துளிக்கூடத் தொடர்பேயில்லை!
சந்தடிசாக்கில் வைஜயந்திமாலாவின் பாட்டியான ‘யதுகிரி தேவி’யை, டமாலென்று பாரதியார் தொடர்புடைய ‘யதுகிரி அம்மாள்’ ஆக்கிவிட்டார்வேறு! வைஜயந்திமாலா ஒரு சுதந்திரப் போராட்டவீராங்கனை, பாரதியின் கண்ணம்மா ஆக்சுவலா வைஜயந்திமாலா எனவெல்லாம் ஊக்கபோனஸ்ஸாக அட்ச்சிவுடவில்லை என்பதற்கு அவருக்கு நன்றி சொல்வதைத் தவிர, வேறு எதுவும் செய்வதற்கு எனக்குத் திராணியே இல்லை!
…சமயங்களில், எஸ்ரா தர கழிசடை முழிபெயர்ப்பு எழவுகளைத் தொடர்ந்து அயர்வேயில்லாமல் நான் வேலைவெட்டியற்றுக் கிண்டல் செய்யும்போது, சிலருக்கு முணுக்கென்று கோபம் வந்துவிடுகிறது. அவர்கள் குறிப்பாக, இந்த மேற்படி மூலத்தையும் (முழு புத்தகத்தையும்) நிர்மூலத்தையும் படித்து அறிந்து, அவர்கள்தம் மண்டையிலும் அதற்கு ஒத்தியைபாக அடியில் இருக்கக்கூடிய சொத்திலும் அடித்துக்கொண்டு பிலாக்கணம் வைக்கவும். நன்றி.
இந்த ஸாஹித்ய அகாடம்மி தொடர்ந்து, செயலூக்கத்துடன் செய்யும் இம்மாதிரிக் கேவலங்களை – இதற்குமுன் வேறு எந்த விருதாவாளரும் செய்ததாக எனக்கு நினைவேயில்லை! படுகேவலம்!!
அவ்ளோதான்!
July 6, 2019 at 16:07
ஒரு பிளாக் நடத்துபவர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் எழுதிக்கொண்டே இருக்கணும் அல்லவா?பாவம் ஏதோ படித்ததை நினைவு படுத்தி எழுதியிருக்கிறார்.அவரை கலாய்க்கணுமா? வாசன் சொன்னார் என்று எழுதிவிட்டார்.அதை யூசுஃபேதான் சொல்லியிருக்கிறார். அவ்வள்வுதானே மேட்டரு?
படுத்திக்கிட்டு போத்தினா என்ன போத்திக்கிட்டு படுத்தா என்ன? ரொம்ப நூல் பிடிச்சு பாக்காதீங்க சார்.
July 6, 2019 at 16:23
யோவ் முத்தூ! வொங்கூட படா பேஜாராக் கீதே!
வைஜயந்திமாலா மாரீ புன்னகே பூக்கச் சொல்றியா? ரெண்ட் பேர்க்கும் ராசீ பண்ணுவுட்றியா? இன்னா தெனாவட்டூ!!
அவ்ரு நெனைவுலேந்து எள்தல! ஃப்ரெஷ்ஷா பட்ச்சிக்கினே போட்ட சாணிதான்! இதெல்லாம் ப்ளாக் நடத்துற ப்ளாக் ஷீப்! பிர்ஞ்சிதா?
ராம்போகிஷ்டன் டால்டாடின் கார்க்கீ பத்தீ அட்ச்சிவுட்டத மேஞ்சிக்கினுகீரேன். அட்த்தது வந்துக்கினேகீது!
வற்ட்டா ராசா?