படுகேவலப் பிறவிகளான கருணாநிதிகளும் இசுடாலிர்களும் – கடிதப் போக்குவரத்து

July 10, 2019

பலமாதங்களுக்கு முன், இளம் நண்பர் ஒருவருடன் நடந்த மின்னஞ்சல் உரையாடலின் கொஞ்சம் எடிட் செய்யப்பட்ட வடிவம். நம் தமிழ் இளைஞர்களிடம் இந்தத் தீராவிடர்களின் சிலபல பெருமைகளைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், கிழங்கட்டைகளின் நினைவைத் தூசிதட்டுவதற்காகவும் தான் இது. படித்துத் துன்புறவும்.

-0-0-0-0-0-

அன்புள்ள ராம்,

மீண்டும் சில தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளவேண்டி இந்த மின்னஞ்சல்.

மறைந்த திருமதி இந்திராகாந்தி மீது மதுரைத்தாக்குதலுக்குப்பின் அவரது உடையில் பட்ட ரத்தத்தை, கீழ்த்தரமாக ‘மாதவிடாய் ரத்தம்’, என்றும் ‘விதவைகள் மறுவாழ்வுத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்’, ‘கிராப் வெட்டிய காஷ்மீரத்துப் பாப்பாத்தி’ என்றெல்லாம் மு.க விமர்சித்திருப்பதாக இணையத்தில் பலபேர் பகிர்ந்திருப்பது உண்மையேதானா ? ஆதாரம் உள்ளதா ? (இருக்கும் என்று நம்பவே ஆசை) உங்களுக்கு இது குறித்து ஆதாரபூர்வமாக தெரியுமா ?

-0-0-0-0-

சர்வ நிச்சயமாக இது உண்மைதான். நேரடியாகச் சொல்லவில்லை. கமுக்கமாகச் சொன்னார். நானே ஒரிருமுறை இதுகுறித்து எழுதியிருக்கிறேன்.

https://othisaivu.wordpress.com/2016/05/11/post-639/  + https://othisaivu.wordpress.com/2018/08/09/post-874/ + https://othisaivu.wordpress.com/2011/10/07/post-172/

“பெண் என்றால், பல காரணங்களுக்காக ரத்தம் வரும்” எனச் சொல்லி நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

பின்புலம்: அக்டோபர் 29, 1979 அன்று மதுரையில் நடந்த விஷயம். திமுகவினர் கறுப்புக்கொடி காட்டியதற்கு அப்பாற்பட்டு, இந்திராவின் மீது கல்லெறிந்தனர். அவருக்குக் காயம். இரத்தம் சிந்தினார்; புடவையில் இரத்தக் கறை. அவரை அன்று காப்பாற்றியது பழ நெடுமாறன் அவர்கள். (பழ நெடுமாறன் எழுதிய புத்தகம் ஒன்றில் இது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன)

விதவைகள் மறுவாழ்வு வகைப் பேச்சு பேசியது இசுடாலிர், கருணாநிதியல்ல. கோவை பொதுக்கூட்டத்தில் 1979 வாக்கில் பேசியது. ‘வேண்டுமானால் என் அப்பாவிடம் இந்திராவை விதவை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கச் சொல்லுங்கள்’ என்றார். பொறுக்கித் தனம். ஆனால் அப்போது அவர் ஒரு இளைஞர், முதிர்விடலைப் பருவம் ஆரம்பித்திருந்தது எனச் சொல்லமுடியுமானாலும் அவர் இன்னமும் அதே விடலையாகத் தொடர்கிறார். மகிழ்ச்சி.

‘கிராப் வெட்டிய காஷ்மீரத்துப் பாப்பாத்தி’ – எனக் கருணாநிதி பலமுறை சொல்லியிருக்கிறார். (ஆனால் என் கைவசம் அதற்கான குறிப்புகள் இல்லை – நமது எம்ஜிஆர் + மக்கள்குரல் (இது டிஆர்ஆர் நடத்தியது) தினசரிகளில் இந்தச் செய்தியைப் படித்திருக்கிறேன்)

அண்ணா ஆரம்பித்த பொறுக்கி நடைத் தமிழை ஒரு உச்சத்துக்குக் கொண்டுபோனது கருணாநிதிதான்.

ஊக்கபோனஸ்: 1989 வாக்கில்,  ஜெயலலிதாவை – ‘பச்சைத் தெவிடியா’ என ஒரு சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசி/ஏசியுள்ளதை நானே நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.  (கருப்பையா மூப்பனார் தன் பங்குக்கு உதாசீனக் கேவலத்துடன் ‘நாச் கேர்ல்‘ – அதாவது பரத்தை என வர்ணித்ததையும் கேட்டிருக்கிறேன்; இந்த ‘நாச் கேர்ல்’ பதத்தை மூப்பனார் பலமுறை 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பிரயோகித்தார் – அறிவாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இப்படி! கருணாநிதியும் துரைமுருகனும் இசுடாலிரும் அன்பழகனும் ஆர்காடுவீராச்சாமியும் இதைவிடவும் படுமோசமாகப் பேசினார்கள்! கேவலர்கள்! நானும் அந்தக் கேவலர்களின் கூட்டத்தில் இருந்தேன், இதைச் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருந்தாலும், உண்மைதானே அது!)

அதே கூட்டத்தில்  ‘நட்டநடு ராத்திரி, போயஸ் தோட்டத்து மொட்டைமாடி பைங்கிளி பொட்டுக்கண்ணன் சச்சலக்கா சலபுலக்கா’ என்றெல்லாம் ஜெய்ஷங்கரையும் ஜெயலலிதாவையும் இணைத்தும், இவர்களுடைய உறவால் எம்ஜிஆர் கோபப்பட்டு தன்னிடம் வந்து அறிவுரை கேட்டதாகவெல்லாம் பேசினார்.  கருணாநிதியின் கற்பனை வளம் பற்றி நான்சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை! (ஏன் இந்த எழவுக்கெல்லாம் போனேன் என்று கேட்காதீர்கள்!)

அன்புள்ள ———-, இந்தக் கடிதப் போக்குவரத்தை, உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு சிறுபதிவாக வெளியிடட்டுமா? அதற்கு உங்கள் அனுமதியைத் தரமுடியுமா?

ஏனெனில் – வரும் தேர்தல் தொடர்பாகச் சிலபல விஷயங்களை எழுதலாமா என நினைக்கிறேன்.

நன்றி.

-0-0-0-0-0-

அன்புள்ள ———–,

அவசரத்திலும் கோபத்திலும் (என் குறிப்புகளைப் பார்க்காமல்) எழுதியதால்  – இந்தக் கூடுதல் விவரணைகள். மன்னிக்கவும். இப்போது என் குறிப்புகளின் படி, சரி பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

1. இசுடாலிர் மட்டுமல்ல; கருணாநிதியும் விதவை என்றெல்லாம் பேசியிருக்கிறார். ஆகஸ்ட் 20, 1979: “விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து,கொண்டு என்னிடம் இட்லிக் கொப்பரையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளலாம்”

2. கருணாநிதி, இந்திராவைத் தாக்கியதற்கு அப்பாற்பட்டு,  மாதவிடாய் என்கிற பதத்தையும் உபயோகப் படுத்தியிருக்கிறார்; ஆனால் அது பழ நெடுமாறனின் வேட்டியில் ஆன ரத்தக்கறைகளைக் குறித்து அற்பத்தனமாகப் பேசும்போது:  அக்டோபர் 30, 1979 – “பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்!” என்பது போல. ஏனெனில், உயிரைத் திரணமாக மதித்து பழ நெடுமாறன் இந்திராவைப் பாதுகாத்தபோது, அவருக்கும் கன அடி, ரத்த காயங்கள்; அவர் வேட்டியிலும் ரத்தக் கறை.

பொறுக்கிகள், வேறென்ன சொல்ல.

-0-0-0-0-0-0-

தாராளமாக எழுதுங்கள் ஐயா. உண்மைகள் வெளிவரட்டும். வரவர தமிழகத்தை நினைத்தால் பெருமூச்சு மட்டுமல்ல, துயரமும் மேலிடுகிறது. கொஞ்சங்கூட கூச்சமே இல்லாமல் ஜாதி வெறியர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் நாயக இமேஜ் கொடுத்து அவர்களுக்கு கால் நக்கிகளாக இருக்க எப்படி மனசு வருகிறதோ ஓவென்று அலறவேண்டும்போல இருக்கிறது.

கல்லூரி காலத்தில் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குப்பின் மக்கள் பெரும்பாலும் இந்த ஜாதி வெறித்தனத்திலிருந்து மெல்ல மெல்ல விலகி விடுவார்கள் என்று நம்பிக்கையோடு நண்பர்களிடத்தில் சொல்லியிருப்பதை நினைத்துப்பார்க்கிறேன்.

-0-0-0-0-

அன்புள்ள ராம்,

உடனடியான பதிலுக்கு நன்றி. இணையத்தில் தேடியபோது எனக்குக்கிடைத்த தகவல்களும் அதையே சுட்டுகின்றன. ஆனால் அவை அனைத்துமே யார் யாரோ எழுதியவை. அவற்றின் உண்மைத்தன்மையை சோதித்துக்கொள்ள வழியில்லை. எனவேதான் உங்களைக்கேட்டேன். தற்போதைய அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி பற்றி அறிந்திருப்பீர்கள். அதை குறித்து உடனே கழக உடன்பிறப்புக்கள் முகநூல் போராளிகள் அவதாரமெடுத்து, என்னவோ இவர்கள் நேர்மையின் சிகரமெனவும் வாக்கு தவறவே மாட்டார்கள் எனவும் ராமதாஸ் மட்டும்தான் அ.தி.மு.க-வை குறை கூறிவிட்டு பின் அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டார் என்பது போலும் அவரை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். எனவே பதிலுக்கு நானும் ஒரு முகநூல் போராளியாய் திரு.மு.க இந்திராகாந்தியை எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்துவிட்டு உடனேயே நேருவின் மகளே வருக என்று நடைபாவாடை விரித்தார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன்.

அதற்காகவே மேற்படி தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளவே எனது மின்னஞ்சல்.

இன்னொரு வேண்டுகோள். காஷ்மீர் வரலாறு பற்றி படிக்கவேண்டும். நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் நான் ஆசைப்படுவது, எப்படி ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்குள் ரத்தம் சிந்தவைக்கிறதோ அதுபோல இந்தியா பாகிஸ்தானுக்குள் ஏதும் மறைமுகமாக proxy war எதிலும் ஈடுபட்டு வருகிறதா என்பது குறித்து படிக்க விருப்பம். இங்கே என்னோடு ஒரு பாகிஸ்தானி வேலைபார்க்கிறான். அவனை ஒரு வட இந்திய அன்பர், ‘ஏன் நீங்கள் இந்தியாவுக்குள் இப்படி வன்முறையை தூண்டிவிடுகிறீர்கள்’ என்று நேரடியாகவே கேட்டிருக்கிறான் (இப்படியெல்லா கேட்க எனக்கு மிகவும் தயக்கமாக இருக்கும். இப்போதுகூட கேட்பேனா என்பது ஐயமே, ) அதற்கு அவனோ ’உங்கள் இந்தியாவும்கூடத்தான் எங்கள் பலொசிஸ்தானத்தில் வன்முறையைத் தூண்டிவிடுகிறது’ என்றிருக்கிறானாம்.

Tehreek-e-Taliban பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல மேலும் தெரிந்துகொள்ள ஏதும் நூல்கள் இருப்பின் தெரிவிக்கவும். உதவியாக இருக்கும்.

-0-0-0-0-0-0-

அன்புள்ள ——–,

ஓரிரு நாட்களில் பதில் போடுகிறேன்.

நன்றி!

-0-0-0-0-0-

மேற்கண்டவை கடிதப் பரிமாற்றங்கள். சிலவரிகளை இன்று நான் எடிட் செய்து, சில விவரங்களைச் சேர்த்துமிருக்கிறேன். நண்பரின் பொறுமைக்கு நன்றி.

நண்பரே, பலமாதங்களாக இதனை ஊறப் போட்டதற்கு, என் மெத்தனத்திற்கு, என்னை மன்னியுங்கள். கூடியவிரைவில், எனக்கு அறிமுகமான அளவில் பலோசிஸ்தான், காஷ்மீர் வரலாறு இன்னபிற பற்றி பதில் கொடுக்கிறேன்.

திராவிடத்தின் கொடைகள் எனச் சில மிக முக்கியமானவை இருக்கின்றன. அவற்றில் சில:

  • தமிழ் பின்னேற்றம்
  • அப்பட்டமான ஜாதிவெறி
  • பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கயமைத்தனம்
  • வெட்டிப் போராளிக்குண்டித்தனம்
  • கொலை, கொள்ளை, தீமை முன்னேற்றம்
  • திரைப்படப் பேடிகளின் கீழ் அடிமைத்தனம்
  • கருணாநிதி குடும்பம் + மாவட்டக் குறுநில மன்னர்களின் ஜாகிர்தாரி அட்டூழியங்கள்
  • உள்ளீடற்ற ஜிகினா ஆபாசங்களின் உணர்ச்சிக்குவியல் அடிவருடிகளாக, நம் இளைஞர்கள் தொடர்ந்து காயடிக்கப்படுதல்

…தொடரத்தொடர வேதனை மிகும்.

பார்க்கலாம்.

 

15 Responses to “படுகேவலப் பிறவிகளான கருணாநிதிகளும் இசுடாலிர்களும் – கடிதப் போக்குவரத்து”

  1. Sreedhar Says:

    Please let us know, what books you had suggested regarding Kashmir issue.

  2. Sivaa Says:

    B மூப்பனார் இவ்வாறு பேசி இருக்கிறார் என்பது உள்ளபடியே அதிர்ச்சியளித்தது. நான் அவரை பண்பாளர் என்று நினைத்திருந்தேன்.


    • நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். (ஆனால், அவர் கொஞ்சம் மேல்தட்டு மிராஸ்தார் பார்வை கொண்டவர் + திராவிடர்களின் சகவாசம் வேறு)

      என்ன செய்வது, சொல்லுங்கள்! :-(

      • nparamasivam1951 Says:

        இதனை படித்த பின், மூப்பனாரின் மேல் இருந்த மதிப்பு சுத்தமாக வெளியேறி விட்டது. என்ன மனிதர்கள் இவர்கள்?


      • ஐயா, பிம்பத்தைச் சிதைத்ததற்கு என்னை மன்னியுங்கள். ஆனால் நடந்த விஷயங்கள் உண்மை. மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது அதில் இருந்த ஐஎன்டியுஸி தொழிற்சங்க (உடைந்த) குழுவில் நான் இருந்தேன். அதன் சார்பாகத்தான் நானும் அறிவாலயம் சென்றேன்.

        ஆனால், மூப்பனார் வெறும் வெறுப்பிய வெறியில் பேசினார். நான் அறிந்தவரையில் பெண்களைக் கீழ்த்தரமாக, நேரடியாக உபயோகிக்கவில்லை. ஆனால் பேசியது அசிங்கம்.

        ஆனால் நம் திராவிடக்குஞ்சுகள் நடைமுறையிலேயே செய்துகாட்டியவர்கள். இது முக்கியமான வித்தியாசம் இல்லையா?

      • nparamasivam1951 Says:

        Thanks Sir for rekindling my memories of my meeting with Shri Anna (Sh GR). I met him at INTUC office in Radhakrishnan Salai. I had a huge image of him within myself but in reality I found him so simple and talked so down to earth. Tamil Nadu had such great personalities, once.


      • Sir, you are most welcome.

        Easily GRji was THE BEST trade union leader that I have met in person., though I was in the camp of PL Subbaiah later.

        No other TU leader, including the so called communists, living or dead – can come anywhere close to him in stature or knowledge or balance.

        A real, true mass leader, I MUST say.

        Thanks to you too, for making me get lost in the memories of the times past…

  3. Sivaa Says:

    https://youtu.be/_PWwpdKVRA8 ஸோ கால்டு சமூகநீதிக்கு கருணாநிதி செய்த துரோகம்.

  4. ??????????? Says:

    ஆசானைப்போல சீடன். தானே கடிதம், தானே பதில். எல்லாம் நாடகம்.


    • ஐயா, தாங்கள் சொல்வது பாதி உண்மை. நான் பெரும்பேராசான் என அவரை அளவுகடந்த மரியாதையுடன் குறிப்பிட்டாலும், அவருக்கு நான் குறுஞ்சிறுசீடன்கூட அல்லன் என்பதைப் புரிந்துகொள்ளவும்.

      ஆனால் – சிலசமயங்களில் ஜெயமோகனைக் கிண்டல் செய்வதற்காக நானே எனக்கு கடிதம் எழுதி பதில் கொடுத்திருக்கிறேன் என்பது சரிதான். ஆனால் அப்படிச் செய்யும்போது அது தெளிவாகத் தெரியும்.

      மேற்கண்ட பதிவு அப்படியல்ல. ஒழுங்காகப் படித்தாலே தெரியவரும். மறுபடியும் படிக்கவும்.

      ஒரு விளக்கத்திற்காக: பொதுவாக, நான் வரும் கடிதங்களையோ போக்குவரத்துகளையோ பிரசுரிப்பதில்லை. அவற்றின் சாராம்சத்தை மட்டும் குறிப்பிட்டு, எப்பனாச்சும் அவை குறித்து எதிர்வினை இருந்தால் எழுதுவேன். ஏனெனில் தனிப்பட்டமுறை விஷயங்களை எடிட் செய்து மாளாது.

      இது இப்படி இருக்கையிலே, மேற்கண்ட பின்னூட்டத்தை ஊட்டுஊட்டு என்று ஊட்டியது நீங்களா நானா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே! ;-)

  5. nparamasivam1951 Says:

    ஒன்றும் புரியவில்லையே 🤔. திரு ??????? ஒரு வரி தான் எழுதியுள்ளார் ஆனால் நீங்கள் “பின்னூட்டத்தை ஊட்டு ஊட்டு என்று ஊட்டியது” அவர் என்கிறீர்கள்.


  6. ஹ்ம்ம், பின்னூட்டம் ஊட்டு என்றெல்லாம் அதனை விரித்தேன். லூஸ்ல வுடவும். நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s