மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ  போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.

இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு  ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம்  என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?

சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை  என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும். Read the rest of this entry »

தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:

… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »

சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு,  தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]

இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.

ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில்  ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.

ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!

… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற  மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை —  எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு  உந்துகிறது. Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)

அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால்,  தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)

சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.

இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஏன்  நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில்,  நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் –  என்ன இருந்தாலும் நானும்  ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (4/n)

(அல்லது) சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)

முந்தைய பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)

… நாம் இந்தச் சாளரத்துக்கான மேலதிகமான எடுத்துக் காட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வெகு அண்மையில் நடந்த விஷயம்: சித்திரைப் பௌர்ணமி – பாமக மாமல்லபுரம் விழா – பாமக_வன்னியர்களுக்கும், விசிகே_தலித்களுக்கும் இடையே மரக்காணம் சுற்றுப்புறத்தில் வன்முறை  உரையாடல்கள் – பொதுச் சொத்து நாசம் – பொய் / ஜாதிவெறி அறிக்கைகள்.

குறுகிய காலத் தாக்கத்து – இவை மட்டும் பெரிதாகப் பேசப்படும்: டாக்டர் ராமதாஸ் பொய் சொல்கிறார், பொதுச்சொத்து நாசத்தை பாமக இழப்பீடு செய்யவேண்டும், பாமகவின் ஜாதிவெறிப் பேச்சுக்கள், வன்முறைகளைத் தடுக்கவேண்டும். உடனடி தண்டனை கொடுக்கப்படவேண்டும், இன்னபிற இன்னபிற. Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (3/n)

முந்தைய பதிவுகள்:

சாளரம் #1: மாற்றங்களை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, அவற்றைப் பற்றி அவதானிக்கும்போது, நமக்குப் பொதுவாக நிதானமே இருப்பதில்லை. அவற்றின் காரணமாக – உடனடியாக, மிகக் குறைந்த கால அளவில், பல பெரிய சாதக விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிக் குதூகலம் அடைவோம், அல்லது பாதகங்கள் ஏற்படும் எனப் படு பயங்கர பீதியுறுவோம், அதீத உணர்ச்சிகளுக்கும் புல்லரிப்புகளுக்கும் இரையாவோம்.

அதேசமயம் – நாம், அம்மாற்றங்களினால், நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே மாட்டோம். அப்படியே எண்ணிப் பார்த்தாலும், அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிகக்  குறைவாகவே மதிப்பிடுவோம்.

project_estimation_dilbert Read the rest of this entry »

முந்தைய இரு பதிவுகள்:

ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை  கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத  ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)

-0-0-0-0-0-0-0-

சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.

ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி  நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி  இல்லையே, ஏன் நாம் இப்படி  இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »

uranium paranoiaum

November 13, 2013

India’s generation of children crippled by uranium wastescreams the ‘World news’ section of the British tabloid The Observer.

The byline reads: ‘Observer investigation uncovers link between dramatic rise in birth defects in Punjab and pollution from coal-fired power stations’

Ahem! Let us go through this article first and then treat it with the contempt & disdain that it deserves.

http://www.guardian.co.uk/world/2009/aug/30/india-punjab-children-uranium-pollution

Let me say, I admire this excellent effort at factifuging. However, never mind the facts, if you do a google search, you get copious amounts of random rumours and fearmongering… No real analysis, no understanding at all – all are characterized by a mere store-and-forward procedure!

…he was systematical, and, like all systematic reasoners, he would move both heaven and earth, and twist and torture everything in nature to support his hypothesis.”

Laurence Sterne, in Tristram Shandy. Read the rest of this entry »

ஒரு வழியாக, இந்த தமிழ் எழுத்துரு, வரிவடிவம். வரியுருக்குறி வகையறா சச்சரவை முடிந்தவரை முழுதும் படித்துத் தெரிந்து கொள்ள முயன்றேன்.(நம் தமிழ் விஷயத்தில் என்னை மிகவும் இம்சிக்கும் பிரச்சினைகள் பலவற்றில், இந்த வரிவடிவமும் ஒன்று)

ஜெயமோகன் அவர்களின் கருத்து என்பது ஒரு யோசனையாக ஆரம்பித்து,  நடிப்புத் தமிழர்களால், கோமாளித்தனமாக எதிர்கொள்ளப் பட்டு, நம் தமிழர் பண்பாட்டின் இன்னொரு கூறை, எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறது. முதலில் நான், இந்த சச்சரவைப் புரிந்து கொள்ள முயன்றதால், என்னுடைய 2 மணி நேரம் வீணாகியிருக்கிறது என நினைத்தேன்; ஆனால், இந்த வேலையைச் செய்ததனால், எனக்கு ஒரு முக்கியமான படிப்பினை ஒன்று கிடைத்ததால் இது பரவாயில்லைதான்.

அந்த படிப்பினையாவது: நிச்சயமாக, மெல்லட் டமிள் இணிச் சாவாது. ஆனாக்க, றொம்ப பைத்தியம் மேறி கைகொட்டிக்கினு சிறிக்கும்…

ஏண்ணாக்க, டமிள்ல மசுர்க்கூச்செறிய இணமாணத்தோட வாய்ஸ் வுட, எளுத, ஒரு மசுத்துக்கும், ஒர் எளவுக்கும் ஒரு வுஷயத்தப் பத்தியும் படிச்சிர்க்கவோ, தெர்ஞ்சிர்க்கவோ வோணவே வோணாம்! இன்னா நான் சொல்றது… பிர்ஞ்சிதா நயினா??

… நம் தமிழர்களின் அற்புதமான நகைச்சுவையுணர்ச்சியை மெச்சுவதைத் தவிர, எனக்கு வேறுவழியே இல்லை. Read the rest of this entry »

உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.

உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.

நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –

  • அய்யய்யோ_அணுசக்தி,
  • அடேங்கப்பா_மரபணு,
  • வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
  • கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
  • உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
  • உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
  • பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
  • ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
  • ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
  • வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
  • கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
  • கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
  • நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!

…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல்  தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து  பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.

Read the rest of this entry »

பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.

… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து —  ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!

அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!

 கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

Read the rest of this entry »

அம்மணி மாலினி அவர்கள், அண்ணன் என் ராம் (’த அன்டிஹிந்து’ பத்திரிக்கைக் குழுமம் சார்ந்தவர்) அவர்களுக்கு உறவுமுறை.

இவர் – மனிதவுரிமை, ஸெக்யூலரிஸ்ம் என்றெல்லாம் கலந்தடித்து  நேர்மைக்கீற்று என ஒன்று கூட தெரியாதபடி அவ்வப்போது‘ ஆங்கிலத்தில்’ பரிமாறுபவர். ஆனால் எல்லா மாலினிகளும் இப்படியில்லை. எனக்கு மிகவும் பிடித்த படுபுத்திசாலி பெண்களில் ஒருவர் – மாலினி என்ற பெயருடையவர் – பெங்களூரில் இருக்கிறார். இவரை நான் செல்லமாக மால் எனத்தான் கூப்பிடுவேன்.

அதேபோல, இந்த மாலினி பார்த்தசாரதி அம்மணியை செல்லமாக, இனிமேலிருந்து மால்வேர் எனத்தான் கூப்பிடப் போகிறேன். அவ்வளவு குசும்பும் குயுக்தியும் நிரம்பியவராக இருக்கிறார், இந்த மால்வேர்!  Read the rest of this entry »

I against my brother
I and my brother against our cousin
I, my brother and our cousin against the neighbors
All of us against the foreigner.

— A Bedouin proverb, quoted by Bruce Chatwin, in The Songlines

ஒரு சுய பரிசோதனை…

(அல்லது) [+5] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்? [103 -108; + பின்னுரை]

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

1- 21 காரணங்கள்  |  22-50 காரணங்கள்  |  51-70 காரணங்கள்  |  71-90 காரணங்கள்  91-102 காரணங்கள் |  103-108 காரணங்கள்  |

… … ஏனெனில்:

103. சரி, மோதி ராஜ்ஜியத்தில் 2002-க்குப் பிறகு ஒரு மதக் கலவரமும் இல்லை. இருந்தாலும், அந்த கோத்ராக் கலவரம் நிகழ்ந்தது நிகழ்ந்தது  தானே! அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போதுமே! ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு மட்டுமே பதமல்லவா??

யோசியுங்கள் – அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் நடந்திருக்கும். அவர் அனுமதியில்லாமலா இந்தக் கலவரம் உடனே அடக்கப் பட்டிருக்கும்? அவரே பங்கு பெறாமலா இந்தக் கலவரம் ஏற்பட்டிருக்கும்?? Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

71-90 காரணங்கள்

… … ஏனெனில்:

91. குஜராத்தில் பசியே இல்லையா என்ன? பிச்சைக்காரர்களே இல்லையா என்ன? அங்கிருந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள்? மாயமாகி மறைந்து விட்டார்களா என்ன? அவர்களுடைய பசியும் புறங்கையை நக்குதலும் இல்லவேயில்லையா என்ன? முதலில், இந்த மோதி, தன் மாநிலப் பசிப் பிரச்சினைகளை முதலில்  தீர்க்கட்டும். பின்னர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றலாம். Read the rest of this entry »

சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள்  – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய  சாராம்சமும், என் பதில்களும் கீழே:

:   நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.

பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார். Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

… … ஏனெனில்:

71, மோதி ஒரு ஆரிய வெறியர். ஏனெனில் அவர் தமிழர் அல்லர். ஊக்க போனஸாக, அவர் திராவிடர்  அல்லர் வேறு.

ஆகவே, அவர் பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர். ஏனெனில்:

  • செத்த திராவிடத் தலைவர்களின் கல்லறைகளுக்கு பகுத்தறிவு சார் மூடத் தனத்துடன் மாலை போடுவதையோ,
  • கஷ்டப் பட்டு படிக்கட்டுகள் பல ஏறி, திருப்பதீ வேங்கடேசா கோயிந்தா கோஓஓஓயிந்தா எனச் சொல்லாமல் சொல்லி, புறாக்களும் காக்கைகளும் சந்தோஷமாகப் பகுத்தறிவில்லாமல் எச்சமிடும் கருஞ் சிலைகளைக் கண்டடைந்து, மூச்சிரைக்க,  பகுத்தறிவுப் பயபக்தியுடன், அந்தக் கற்களின் மேல் வெகு பவ்வியமாக மலர் தூவுவதையோ,
  • அல்லது சட்டமிடப் பட்ட வெறும் காகிதப் படங்கள் முன் சுயமரியாதை – பகுத்தறிவுப் பகலவம் இன்னபிற நிமித்தம்,  கைகூப்பி, கண்ணீர் மல்கி நிற்பதையோ, பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் குண்டியைப் படம் பக்கம் திருப்பி, டீவீகாரர்களுக்கு சரியான கோணத்தில் தன் பகுத்தறிவுப் பேராசான்களின் பரிசுத்த ஆவியினால் தாம் ஆசிர்வதிக்கப்படுவதைக் காண்பிப்பதையோ…

— செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவெல்லாம் — பயிற்சி கியிற்சி என்று ஒரு இழவும்  இல்லாதவர் இந்த ஆரியக் கொழுப்பு மோதி. Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

… … ஏனெனில்:

1. எனக்குத் தெரியும் – மோதியை எதிர்ப்பது என்பது ஒரு ஸெக்ஸியான விஷயம்; எதிர்ப்பதால் மட்டுமே நான் ஒரு சமதர்ம சமுதாயத்தை நோக்கிச் செல்ல விழையும் அறிவுஜீவியாகி விடமுடியும் – அப்படியில்லா விட்டாலும்கூட, மிகமிக முக்கியமாக, குறைந்த பட்சம், அப்படிப்பட்ட ஒரு அறிவுஜீவியாகக் கருதப் படவாவது, வெகு வெகு சுலபமாக முடியும்.

2. மோதியை ஆதரித்தால் – எனக்கு உடனடித் தீட்டு – நான் வெறியனாகக் கருதப் படுவேன். அய்யய்யோ!

நரேந்த்ர தாமோதர்தாஸ் மோதி (’ஸமாஜிக் சம்ரஸ்தா’ எனும் ஹிந்தி  புத்தகத்திலிருந்து / ப்ரபாத் புக்ஸ் / டெல்லி/2012)

நரேந்த்ர தாமோதர்தாஸ் மோதி (’ஸமாஜிக் சம்ரஸ்தா’ எனும் ஹிந்தி புத்தகத்திலிருந்து / ப்ரபாத் புக்ஸ்  /  டெல்லி  /  2012)

3. மோதியை ஆதரிக்க வேண்டுமானால் எனக்குத் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்பதிரும்பத் திரும்ப   — என் நிலைப்பாட்டின் காரணங்களை, உண்மைகளை, ஒரு கீறல் விழுந்த ரெகார்ட் போல, விளக்கிக் கொண்டேயிருக்கவேண்டும்; ஒரு பெரிய்ய்ய்ய  சுற்றுச் சுற்றி வந்தவுடன், திரும்பவும் முதல் கேள்வியைக் கேட்பார்கள். எனக்கு இது அலுப்பு தரும் விஷயம்.

4. மோதியை எதிர்க்கும் நிலையை எடுப்பது மிகவும் சுலபம். காற்று வாக்கில் நான் கேட்ட, ’ஹம் பாஞ்ச் – ஹமாரே பச்சீஸ்’ இருக்கவே இருக்கிறது. அல்லது ’முஸ்லீம்கள் –  காரோட்டம் – நாய்க்குட்டி’ விவகாரம் இருக்கவே இருக்கிறது. அல்லது கோத்ரா கீத்ரா என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த உச்சாடனங்கள் வெகு சுளுவானவை.

5. எனக்கு, என்னுடைய நேரடி அனுபவங்களைவிட – மற்றவர்களிடம் கடன் வாங்கிய அனுபவங்களை, கோட்பாடுகளை, கருத்துக்களை வைத்துத்  தான் காலம் தள்ள முடியும். யோசிக்கும் திறமையெல்லாம் இல்லை என்பதை எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு, என்னை மேலெழுப்பிக் கொண்டுசெல்ல என்றெல்லாம், என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது.

6. பொதுவாக, எனக்குக் கடன் வாங்குவதை விட, கமுக்கமாகக் காப்பியடிப்பது, அச்சுஅசலாக நகலெடுப்பது – அவை கோட்பாடுகளாகவிருந்தாலும் சரி,  கருத்துகளானாலும் சரி – மிக மிகப்  பிடிக்கும். ஆக, திக்விஜய்ஸிங் என்ன சொன்னாலும், அதைப் பொதுவாகப் பின்மொழிந்தால் போதுமானது, இவர் போன்றவர்கள் அவ்வளவாக யோசித்து, மூளையை உபயோகித்துத்தான் பேசுகிறார்கள் என்றில்லை. ஆக, இப்படி வெளிவரும் கருத்துக்களை, என் மூளையையும் தேவையில்லாமல் உபயோகிக்க விரும்பாத நான், செரிப்பது சுலபம் தானே?

7. எனக்கு மதச்சார்பின்மை முக்கியம். ஆனால் இது என்ன எழவென்றெல்லாம் ஆய்ந்து புரிந்து கொள்ளவெல்லாம் எனக்கு நேரமோ அறிவோ   கிடையாது. என்னுடைய மதச்சார்பின்மை ஹீரோ: கலைஞர் கருணாநிதி; ஹீரோயின்: சொக்கத்தங்கம் சோனியா; இவர்கள் எது சொல்கிறார்களோ அதுவே சரி. அது மட்டும்தான் சரி. அவர்கள் நடைமுறையில் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் அது முக்கியமேயில்லை. இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காணும் பரிதாபகரமான நிலையில் நான் இல்லை. ஆக, இவர்கள் சொல்வதுபோல மோதி ஒரு மதச்சார்புக்காரர்தான். ஆகவே.

8. மோதியே சொல்லியிருக்கிறார் அவர் ஒரு ஹிந்து  என்று. அப்படியென்றால் அவர் முஸ்லீம் க்றிஸ்தவர்களுக்கு எதிரானவர் என்றுதானே பொருள்?

9. அவர், தான் ஒரு இந்தியன்  என்றுகூட தேவையில்லாமல் சொல்லியிருக்கிறார். இப்படி வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளும் ஒருவரால் எப்படி சீனர்களிடமும், பாகிஸ்தானியர்களிடமும், பங்க்ளாதேஷிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவர்கள் இவரைச் சந்தேகமாகப் பார்க்க மாட்டார்களா? தேசவெறி மிக்க இவரால் எப்படி நம் எல்லைகளில் அமைதியைப் பராமரிக்க முடியும்? ஆகவே.

10. நான் பெண்ணியவாதி, மனிதவுரிமைவாதிகளான, தொலைக்காட்சிப் பப்பரப்பாக்காரர்களான  – தீஸ்தா அம்மணி சொன்னால், பர்கா அம்மணி சொன்னால், ஸோனியா ராணி உச்சாடனம் செய்தால் – மேலதிகமாக தொழில்முறை மனிதவுரிமை வாதிகள் (பியூஸிஎல் போன்றவர்கள்) சதா — மோதிக்கு அக்னியால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தால் – கூட நானும் ரெண்டு கல் வுடுவது, நாக்கைத் துருத்திக் கொண்டு போடாங்  சொல்வது போன்றவை – எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.

11. எனக்கு, கறுப்பு அல்லது வெள்ளை என்று மட்டுமே, அதிபாமரத்தனமாக உலகத்தைப் பார்க்க முடியும். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எனக்குச் சிக்கலில்லாத எளிமைப் படுத்தல்கள் தேவை. ராமன் நல்லவன். ராவணன் கெட்டவன். ராமன் ஆரியன், ஆகவே கெட்டவன். ராவணன் திராவிடன், ஆகவே நல்லவன். என்ன? அய்யய்யோ,  ராவணன் பார்ப்பானா? அப்போது அவனும் வெறியன் தான்…  இவைகளுக்கு, இந்த அளவுக்கு மேலே யோசித்தால் என் மூளை உருகி விடும்.  ஆகவே.

12. நான் மோதி, பிரதமராகக்கூடிய சாத்தியக் கூறுகளை நமது நாட்டின் நல்லூழ் என நினைத்தாலும் கூட, மோதியை ஆதரித்தால் – அவர் செய்யும்  / சொல்லும் அனைத்தையும் ஆதரிக்கவேண்டிவரும். அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை, பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டி வரும். மேலும் காங்க்ரெஸ் கட்சியை எதிர்க்கவேண்டி வரும். என்னால் ஆதரிப்பென்றால் ஒரேயடியாக  ஆதரிப்பு எதிர்த்தால் ஒரேயடியாக  எதிர்ப்பு என்று மட்டுமே தான் செய்யமுடியும். எனக்கு எளிமை, சிக்கலில்லாத தன்மை போன்றவை மட்டுமே முக்கியம். ஆதரிக்கவேண்டியவைகளை ஆதரித்து, எதிர்க்கவேண்டியவைகளை எதிர்த்து என்றெல்லாம் என்னாலா  யோசிக்க முடியும்??

13. எனக்குச் சமன நிலைமை பிடிபடுவதில்லை. முட்டியடி எதிர்வினைகளின் மூலமாக மட்டுமே என்னைச் சுற்றியிருக்கும் நிகழ்வுகளை அணுக முடியும்.

14.  எனக்கு படிப்பறிவும் இல்லை, அதைப் பெறும் முனைப்பும் இல்லை, உளறிக் கொட்டல்களில், அதற்கு கைத்தட்டல் வாங்குவதில் இருக்கும் சுகமே அலாதிதான். நான் என்னதான் பிதற்றினாலும், உளறிக் கொட்டினாலும், அநியாயத்துக்கு அட்டைக் காப்பியடித்தாலும், அதற்கும் வேண்டிய அளவு ‘லைக்’கர்களும், ‘ரீட்வீட்டர்’களும், ‘ஃபால்லோயர்’களும், பின்னூட்டக்கார விசிலடிச்சான் குஞ்சப்பனார்களும் இருக்கிறார்களே!  அடேய்!  இதோ பிடிச்சிக்கோ ஒர் ஸாம்பிள்: மோதி ஒரு டம்மிபீஸ். ஆகவே.


15. என்னுடைய மூளையானது, தொலைக்காட்சிச் சேனல்களால் வடிவமைக்கப் பட்டது. மஞ்சள் பத்திரிக்கைகளால் நிறம் கொடுக்கப் பட்டது. அரைகுறை மதச்சார்பின்மை திலகங்களால் செப்பனிடப்பட்டது. கீபோர்ட் வீரர்களால் குடையப் பட்டது. தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகளால் கூர் செய்யப் பட்டது.  நாற்காலி அறிவுஜீவிகளால் புடம் போடப்பட்டது. இந்த விசித்திர ஜந்துக்கள், எந்தப் பருவத்தில், எந்த ஸீஸனில் எவற்றுக்கெல்லாம் எதிரியோ நானும் அவற்றுக்கெல்லாம் எதிரி. இவைகள், கடந்த பல  ஸீஸன்களாக, மோதியை எதிர்த்துத்தான் செய்திகள் வெளியிடுகின்றன. இவைகள் சொல்வதெல்லாம் தவறாகவா இருக்கும்? இவைகள் மோதியை ஆதரித்தால், நானும் ஆதரித்துவிட்டுப் போகிறேன்! ஆனால் இப்போதைக்கு எதிர்ப்புத்தான்.

16. இந்தியாவில் இருக்கும் மெக்காலேமுறை அரைகுறைப் படிப்பு, கல்வி முறை — என்னைக் குமாஸ்தாவாக்கி விட்டிருக்கிறது. எனக்கு ஆங்கில அறிவுமில்லை – ஆகவே தாழ்வுணர்ச்சி இருக்கிறது. தாய்மொழி அறிவும் இல்லை – ஆனால்  இதனாலான பெருமிதம் இருக்கிறது! ஆக, உள் நாட்டுப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் மோதியை நான் எப்படி…

17. எனக்கு மார்க்ஸ் வழியாகத்தான், நோம் சோம்ஸ்கி வழியாகத்தான், ’ஸப்ஆல்டெர்ன் ஸ்டடீஸ்’ என்று பேசும் ’மார்க்ஸீய மெய்ஞான’ சமூகவியலாளர்கள் அளிக்கும் பார்வையை வைத்துக் கொண்டு மட்டும்  தான் எதனையும்  பார்க்க முடியும். இல்லாவிட்டால் சாயம்போன அறிவுஜீவிகள் எனக்கு முழு மார்க்ஸ்  கொடுக்கமாட்டார்கள். எனக்கு இது தேவையா? ஆகவே.

18. நம் கலாச்சாரத்தைப் பற்றிய, பாரம்பரியத்தைப் பற்றிய அவமான  உணர்ச்சி எனக்கு அதிகம். ஆனால், வரலாற்றிலிருந்து, சூழல்களிலிருந்து நுண்மான் நுழைபுலம் என்றெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு முடியாது.  எதை எடுத்துக் கொள்ளவேண்டுமோ எடுத்து, தள்ளவேண்டியதைத் தள்ளி என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ள நேரமேயில்லை எனக்கு. நீங்களே பாருங்கள், நீயா- நானா  போன்ற மகாமகோ முக்கியமான பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிச் சேனல்களில் வருகின்றன அல்லவா?? அவற்றையும் பார்க்கவேண்டும். சினிமா கிசுகிசுவும் பேசவேண்டும்.  … ஆக, எனக்கு இருக்கும் சொற்ப நேரத்தில்,  ஒரு அவமான, தாழ்வுணர்ச்சி தரும் விஷயத்தைப் பற்றிப் பெத்த பேச்சு  பேசும் மோதியை நான் எப்படி ஆதரிப்பது…  ஆனால், அவரும் நீயா- நானா  நானாவித நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், ஒருவேளை அவரை ஆதரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்…

19. நம்மைப் பற்றிய, நம் கலாச்சாரப் பண்பாட்டுப் பின்புலங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது எதுவுமில்லை – அவை அனைத்தும் வடிகட்டிய குப்பை என்பதை எவ்வளவோ மெத்தப்படித்த வெள்ளக்காரர்களே  சொல்லியிருக்கிறார்கள். அவர்களை வழிமொழிந்து நம் உள்ளூர் அறிவிஜீவிகள் பிபின் சந்திரா, ரொமிளா தாபர், ஸோயா ஹஸன், ராஜீவ் பார்கவா, சந்திரசேகர கம்பாரா, அனந்தமூர்த்தி, ஜயதி கோஷ், கிரீஷ் கர்னாட், ஸாகரிகா கோஷ், அசின் வனைக், என் ராம், அருந்ததி ராய் போன்றவர்களும் (+ எஸ் வி ராஜதுரை போன்ற லோக்கல்  அறிவுஜீவிகளும், ‘விடு-தலை’ போன்ற தலையை  அதனிலிருக்கும் மூளையை அம்போவென்று விட்டுவிட்ட இயக்கத்தினர்களும் ) சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில், மோதி போன்றவர்கள், கவைக்குதவாத இந்தியக் கலாச்சாரம், கிந்திய குலாச்சாரமென்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், எப்படித்தான் நான்…

20. இந்து – இந்தி – இந்தியா போன்ற, நகைக்கத் தக்க முட்டாள் தருக்கங்களும், இதனை நீட்டி – வடவன், ஆக்கிரமிப்பு போன்ற மொண்ணையான கருத்தாக்கங்களும்தான் இங்கே சாஸ்வதம். எனக்கு இதற்குமேலே சிந்திக்க வேண்டுமென்றால், இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையும் உருகியேவிடும். மோதி ஒரு ‘இந்து – இந்தி – இந்தியா’காரர். குறிப்பாக, மோதி ஒரு ‘இந்துத்துவா – இந்தித்துவா – இந்தியாத்துவா’ ஏஜென்ட்.  இவர் இந்தியர்களின் உலகப் பார்வையைச் சுருக்கி விடுவார். ஆகவே.

21. மோதி ஒரு உலகமயமாக்கலின் ஏஜென்ட். இவர் மேலை நாட்டு வர்த்தகர்களையும் தொழில்முறைகளையும் இங்கு கொண்டுவந்து, அவர்களுடைய மூலதனங்களைக் கொண்டு வருகிறேன் பேர்வழியென்று – நம் நாட்டை சூறையாடுபவர்களின், பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகளின்  பக்கமிருக்கிறார். நம் பாரதியத்தை அழிக்கிறார். நம் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை ஒழிக்கிறார். ஆகவே.

அடுத்த பதிவில்… 22லிருந்து 50 காரணங்கள்

தொடர்புள்ள பதிவுகள்:

This is the last of the series of posts. Relax. You don’t have  to read this, got it?

The previous ones are here:

-0-0-0-0-0-0-

Scenario #10

Norman L Programmer is moving around in a major frenzy these days… His latest discovery is  Neuro Linguistic Programming (unfortunately, he had gone through one of the NLP evangelical  Read the rest of this entry »

முதல் விதி: சிரியா திரும்.

முதற்கண் — சுஜாதாத்தனமாக, மெலிதாக முறுவலிட்டுக் கொண்டு, சிறியதாகச் சிரித்துக் கொண்டிருப்பவள் சிரியி, அப்படிச் செய்யாதவள் சிரியா — என்பதறிக.

பயப்படாதீர்கள். இவள் செந்தமிழ்ச் செல்வி, செம்மொழிச் செவ்வி நடிகை சிரேயா அவர்களின அத்தை பெண் தான்.

இந்தச் சிரேயா அவர்களே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ்மொழி செம்மொழி மாநாடு கண்ட கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆசி பெற்றவர்தான்.

இந்தப் பெண் சிரியா, பாவம் — நம்மூர் பாண்டி நன்னாட்டில், அதாவது பாண்டிச்சேரியில் – ஏதோ, கண்ணைக் கட்டிக் கொண்டு, சகதோழிகளுடன் ஏரோப்ளேன் பாண்டியாட்டம் ஆடிக்கொண்டே போனபோது –  விளையாட்டு சுவாரசியத்தில் துருக்கிக்கும், இராக்கிற்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடையே உள்ள சிறிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டுவிட்டது நமக்கெல்லாம் தெரிந்ததே…

இந்தப் பெண்ணை மீட்கத்தான் நாமெல்லாம் வலைப்பூக்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவெல்லாம் போராளித்தனமாகப் போராடி  வருகிறோம், தெரிந்ததா?

ஹ்ம்ம்ம்… எப்படியாவது இந்தப் பெண்ணை மீட்டு, ஏதாவது ஒரு  தமிழ்ப் படத்திலாவது நடிக்கவைத்து விடவேண்டும்…

<T_’Vijaya’_Rajendher> சின்னக்கிளி சிரியா, இப்ப நீ பிரியா? அப்போ இங்க வர்ரியா? நாஞ் சொல்றது சரியா?? </T_’Vijaya’_Rajendher> Read the rest of this entry »

So, you promise  that you have read the previous two installments? But, just in case you haven’t read ’em- here they are:

Paperback Intellectual --  Graphic courtesy: Peter Brookes / The Spectator / London / 1989

Paperback Intellectual (my title: ed) — Graphic courtesy: Peter Brookes / The Spectator / London / 1989

… It is obvious to me that, you haven’t had enough  of this rather arrogant and self-righteous drivel. Anyway… Read the rest of this entry »