[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்?

April 5, 2019

…அதாவது, திமுக-காங்கிரஸ் இன்னபிறர் கூட்டணியை ஏன் ஒருமனதாக, ஏகோபித்து ஆதரிக்கிறேன்?

என்னுடைய மகாமகோ செல்லம் அவர். நான் அவரை ஆதரிக்காமல் வேறுயாரை ஆதரிப்பேன், சொல்லுங்கள்?

#1. அவர் ஒரு பக்காத் திராவிடர். ஆகவே, நம் அமோகமான நம்பிக்கைக்குரியவர், தகுதிவாய்ந்தவர். தானே அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார், அவருடைய சிஷ்யகேடிகளையும் அப்படியே சொல்லவைக்கிறார். ஆகவே அவருக்கு நகைச்சுவை உணர்ச்சியும் அதிகம். (எனக்கு இது றொம்ப முக்கியம்பா!)

#2 . வளர்ச்சி கிளர்ச்சி கொள்ளை சொள்ளை என இயங்க, நாட்டில் நம் எல்லோருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கும். ஏனெனில் அவருக்கு நிர்வாகத் திறமை என்பது அறவே இல்லை. அவரவருக்கு அவரவர் வழி, தனக்குத் தன்வழி என்று, தன் கொள்ளையுண்டு கலெக் ஷனுண்டு என இருப்பார். அவர் அப்பேர்க்கொத்த கலெக் ஷன் ஏஜண்ட். அதாவது நான் எப்பேர்ப்பட்ட கொள்ளை அடித்தாலும், என்னிடமிருந்து தன் பங்கு மாதாமாதம் வரும் வரையில் கமுக்கமாக இருப்பார். அப்படித்தான் நான் மாவட்டச் செயலாளராகவும் செயல்வீரனாகவும் உடன்பிறப்பாகவும் களப்பணி செய்கிறேன்.

#3. ஒருசுக்குக்கும் உழைக்காமலேயே, சம்பளத்துக்கு வேலை செய்யாமலேயே, காத்திரமான தொழில்முனைவுகளில் ஈடுபடாமலேயே – ஒருவகையான மேஜிக் மந்திரமாய வழியில் – இவர் ஆகப் பெரிய பெரீய்ய்ய்ய்ய சம்பாத்தியங்களை ஈட்டியிருக்கிறார். இவர் அரசமைத்தால், நம் போக்கற்ற இளைஞர்களுக்கு இதற்கான வழிமுறைகளையும் நெளிவுசுளிவுகளையும் நேரடியாகப் பயிற்சியளிக்கும் ஞானகுருவாகவே திகழ்வார். அப்புறம் என்ன, நாடே சுபிட்சம்தான்! இவருடைய தொழில்முனைவுக்கு ஒரு எடுத்துக் காட்டாக – இவர் ரெட்ஸேண்டர்-சந்தன மர கொடவுன் ஒன்றையே தடுத்தாட்கொண்ட செயற்கரிய செயல்வீரர் என்பதை நம்மில் எவ்வளவுபேர் அறிவோம்?

#4. அவர் பாரம்பரியங்களை உயர்த்திப் பிடிப்பவர். நம் பாரதத்தின் அடிப்படைச் சமூக அமைப்பான குடும்பத்தைப் பேண்பேண் என்று செயலூக்கத்துடனும் ஆழ்ந்த குவியத்துடனும் பேணுபவர். அதாவது அவருடைய சொந்தக் குடும்பத்தை – தாயார்களை, கூடப் பிறந்தவர்களை, மாமாக்களை (தொழில்முறையில் சொல்லவில்லை), மருமகன்களை, பிள்ளைகளை… என நீஈஈஈளமாகத் தொடரும் அந்த ஜாபிதா.

#5. அவருடைய பொறுப்புணர்ச்சி மிக அதிகம். இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம் – அ) தன் குடும்பம், சொத்து எனப் பார்த்துப் பார்த்து பல தலைமுறைகளுக்கும் ‘நிதி’ சேர்த்துவைக்கும் மும்முரம் ஆ) பொறுத்துப் பொறுமையாகப் பெண்டிரைத் தேர்ந்தெடுத்துப் புணர்ச்சியில் ஈடுபடுவது – இந்த இரண்டாவதை இரண்டுவிதமாகப் புரிந்துகொள்ளலாம், இரண்டும் வன்புணர்ச்சிகள்தாம் க) நேரடியாக, தனக்கு ஆர்வமுள்ளவர்களிடம் செய்வது (இளமையில் உச்சத்தில் இருந்தது, இப்போது ஆடி ஓய்ந்திருக்கலாம் ங) தமிழ்த்தாயை, பாரதமாதாவை அவர்களின் வளங்களையும் கலாச்சாரங்களையும் செய்வது.

#6. அவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். போக்கற்ற தமிழகத் திராவிடச் சூழலில் இது ஒரு முக்கியமான, இன்றியமையாத தகுதி. +அவர் பிள்ளையும் நடித்திருக்கிறார். அவர் குடும்பம் சினிமா தயாரிக்கிறது. டீவி சேனல் நடத்துகிறது. தந்தையும் அமோகமாகத் திரையுலகில் முயங்கியவர். மேலும், ஸ்டாலின், நேரத்துக்குத் தகுந்தபடி நடிப்பதிலும் பெரும் வல்லமை மிக்கவர். ஆகவே இவரைவிடத் தகுதியுள்ள ஒருவர் நம் நாட்டில் உளரோ?

#7. அவர் பேச்சுத் திறமை மிக்கவர், பன்மொழிப் புலவர் – அதாவது மசாலா பன், கோகனட் பன், ஜாம் பன் என ஜாம்ஜாமென்று ஜமாய்ப்பவர். தானுண்டு தன் உளறலுண்டு என இருப்பவர். இந்த உளறல்களில் மூன்று வகை – அ) தமிழ் ஆ) ஆங்கிலம் இ) மூன்றாம் அல்லது ஆறுதல் பரிசு – அண்மையில் ஒடிவந்து சேர்ந்திருக்கும் வங்காளமொழிக்கு, பாவம்.

#8. உண்மை நேர்மை சொன்னசொல் தவறாமை உழைப்பு நாட்டுமக்களிடம் கரிசனம் போன்ற பஞ்சமாபாதகங்களில் துளிக்கூட இவர் ஈடுபடுவதில்லை என்பது இவருடைய ப்ளஸ் பாயிண்டுகளில் ஒன்று. இதனால் இவருக்கு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதும், வெட்கமேயில்லாமல் ஏகத்தும் பொய்சொல்வதும் தடித்தனமும் வாய்த்திருக்கின்றன. ஆகவே நாட்டை/தமிழகத்தை நிர்வகிக்க இவரால்தான் முடியும்.

#9. ஸ்டாலின் – தேர்ந்த அறிவியலாளர். பொறியியலாளர். தொழில்நுட்பாளர். இவருடைய விசேஷத் திறமை: வெற்றிடம். இவர் ஒரு வெற்றிட எக்ஸ்பர்ட். (வேக்யூம்/வெற்றிடம் பற்றி ஒரு பேருரையை இங்கிலாந்து ராயல் ஸொஸைய்டியில் வழங்கினார் என்பது, நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? அவர் பேச்சைக்கேட்டு அவர் மூக்கிலேயே விரலை வைத்தனர் அனைத்து விஞ்ஞானிகளும் என்பதாவது??) இவர் தலைமையில் தமிழகத்தில் நாஸா அமைக்கப்படும். ராக்கெட் விடப்படும். சாடிலைட் என்ன, சாடிடார்க்கும் விடுவோம்.

#10. ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு வாரங்களில் தமிழகம் புறநானுற்றுக்கால எழுச்சியை லெமூரிய கால வளமான சுபிட்சத்தை, திராவிடப் பொன்னாட்சியை எட்டியடையும். ஏனெனில் அப்போதும் தமிழகத்தில் கரண்ட் இல்லை.

#11. அவர் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக 1கோடி இளைஞர்களுக்கு அரசுவேலை – சாலைப்பணிகள் கொடுக்கப்படும்.

ரோட் ரோலர்களுக்குப் பதிலாக, இளைஞர்களே உருண்டுவுருண்டு மேடுபள்ளங்களைச் சரிசெய்வார்கள். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியுமாயிற்று. அகிலபாரதத்துக்கும் இவர்கள் Roll Modelகள் ஆகிவிடுவார்கள்கூட. மேலும் இவர்களுக்கு நகங்களை நீளமாக வளர்க்க நிதியுதவி அளித்து, அந்த நகங்களை வைத்தே சாலை போட நிலத்தை நோண்டச் சொல்லலாம். பன்னாட்டு நிறுவன ஜேஸிபீக்களே! எங்கள் நாட்டை விட்டு ஓடுங்கள்!

மிச்சமிருக்கும் இளைஞர்கள் மேற்கண்ட ஒரு கோடி இளைஞர்கள் போட்ட சாலைகளை நோண்டியவண்ணம் இருப்பர். இதனால் மேலதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? ஏற்கனவே போட்டசாலையையே திரும்பப்போட்டு, நோண்டி, நிரப்பி, மறுபடியும் நோண்டி, இல்லாத சாலைகளைப் போட்டதுபோல் என்றெல்லாம் பல வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறாரே நமது அண்ணல், அவர் சென்னை மாநகராட்சி மேயராக மேய்ந்துகொண்டிருந்தபோது!

#12. அவர் ஆட்சியமைத்தால் – ஹிந்துமக்களைக் கிண்டல் செய்வதை ஒரு பண்டமிழ் வீரவிளையாட்டாக அறிவிப்பார். கோவில்களை பீரங்கி வைத்துப் பிளப்பது, மூர்த்திகளை உடைப்பது, வெறிஞமலி வீரமணியை ஏவி நக்கல் பேச்சு பேசவைப்பது என்பதற்கெல்லாம் உதவித்தொகை அறிவிப்பார். அதேசமயம் ‘ரம்ஜான் கஞ்சிக்கலயம் திட்டம்’ என இஸ்லாமியர்களுக்கும், ‘கிறித்துமசு கேக்கு திட்டம்’ எனவும் அறிவித்து சிறுபான்மையினரின் காப்பாளனாக அவர்கள் நலம் காக்க அரசு நடவடிக்கைகள் எடுப்பார். இலவச நிதிக்குவைகளை வழங்குவார். அந்த விருந்துகளுக்குச் சென்று ‘எனக்குப் பொங்கல் என்றாலே வெறுப்பு,’ ‘தீபாவளி என்றாலே கடுப்பு’ என்றவகையில் பேசி சிறுபான்மையினரைச் சிரிக்க வைப்பார். அவர் ஒரு பெரீய்ய்ய மதச்சார்பின்மைச் சான்றோர்!

#13. அவர் அரசு அமைந்தால், ராஜபக்ஷ சிறிசேனாக்களுடன் பேசி, ஈழப் பிரச்சினையையே உடனடியாக முழுவதும் தீர்த்துவிடுவார். (அதாவது, ஒரு ஈழத்தமிழன் கூட மிஞ்ச மாட்டான், பிரச்சினையே குளோஸ்; இதற்கு நான் கியாரண்டி!)

#14. அதேபோல கச்சத்தீவுப் பிரச்சினை, காவிரி பிரச்சினை, முள்ளுப்பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்; அது எப்படியென்றால் – அவற்றுக்கெல்லாம் போர்க்காலரீதியில் பெயர்மாற்றம் செய்யப்படும். அவை, முறையே: ஸ்ரீலங்கா பிரச்சினை, கர்நாடகா பிரச்சினை, கேரளா பிரச்சினை என அழைக்கப்பட்டு உடனடியாக இது பெரிய, முப்பெரும் பிரச்சினைதீர்த்தல் விழாவாகக் கொண்டாடப்பட்டு, ஸ்டாலினுக்கு பொற்கிழி, தங்கக் கோமணம், அட்டைவாள், டோப்பா போன்றவை ‘நன்றியுணர்ச்சியும் இனமானமும்’ மிக்க திராவிடர்களால் பரிசளிக்கப் படும். அனைத்து ரேஷன்கார்ட்காரர்களுக்கும், ஸ்டாலின் ஆசிர்வாதத்துடன் தலா ஒரு ஹேர்டை டப்பா, டோப்பா, காதில் சுற்றிக்கொள்ளப் பத்துமுழம்பூ இலவசமாகக் கொடுக்கப்படும்.

#15. ஸ்டாலின் கெரில்லாப் போரிலும், ஆள்மாறாட்டங்களிலும், மறைந்து நின்று, பிடிக்கப்படாமல் மர்மமாகத் தாக்குவதிலும், எய்தவனாக இருந்து அம்பை நொந்துகொள்ள வைப்பதிலும் நிபுணர். வைகோ பரிதி இளம்வழுதி முகஅழகிரி போன்றவர்கள் இதற்கு அத்தாட்சி. இதற்காக இவரிடம் பலர் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (இவருடைய வெற்றிகரமான கெரில்லாப் போர்களில் அழித்தொழிக்கப்பட்ட கேனைய எதிரிகளுக்கு எடுத்துக்காட்டுகளில் தா. கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா போன்றவர் அடங்குவர்)

இன்னமும் இப்படி ஆயிரக்கணக்கில், எம் தலைவன் இசுடாலிரைக் கொண்டாட விஷயங்கள் இருக்கின்றன என்றாலும் – இப்படிப்பட்ட கல்யாண குணங்கள் கொண்ட இசுடாலிருக்கு ஓட்டுப் போடாமல், வேறு யாருக்குப் போடுவேன், சொல்லுங்கள்?

நன்றி.

ஆகவே பாஜக-மோதி!

ஜெய்ஹிந்த்

-0-0-0-0-

கீழ்கண்ட பதிவுகளில் இசுடாலிர் தொடர்பான சிலபல ஊழல்களையும் பகற்கொள்ளைகளையும் விவரித்திருக்கிறேன். பொறுமையாகப் படிக்கவும்.

4 Responses to “[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்?”

  1. Rajaram Says:

    Hi,
    I have heard that DMK people attacked Jayalalitha in the assembly (before she became CM). Can you please publish a detail/article on this.


    • Sir, I cannot write a long article – but Durai Murugan (and Veerappandi Arumumugam) pulled her sari literally trying to disrobe her in the ASSEMBLY on 25th March 1989. Karunanidhi cupped his mike with his hand (so that the comment cannot be recorded etc and be audible to a larger audience) and CLEARLY shouted ‘thevidiyaa mundachchi’ at Jayalalitha.

      (of course, the disrobing attempt on Jayalalitha was not like that useless scum MK Stalin tearing his own shirt and indulging in theatrics)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s