வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))

April 4, 2019

பலருக்கு, ஏன், பாஜக ஆதரவாளர்களுக்கேகூட, பாஜக-மோதி அரசு என்னதான் பிறவிஷயங்களில் ஜொலித்தாலும் – இந்தியாவின் பண்டையப் பெருமைகளையும், சாதனைகளையும் போற்ற, வெளிக்கொணர வேண்டியவைகள் குறித்து ஏதும் பெரிதாகச் செய்யவில்லை எனவொரு எண்ணம்.

சொல்லப் போனால் – நானும் இரண்டு வருடங்கள் முன்பு வரை அப்படித்தான் நினைத்தேன். ஆனால், மோதியின் அரசு – ஆள்வது (கவர்னன்ஸ்) என்பதற்கான குறிப்பிடத்தக்க அளவைகளைத் (பெஞ்ச்மார்க்குகள்) தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

கீழே ஒரு எடுத்துக்காட்டு – ரொம்பப் புள்ளிவிவரம் இல்லாமல்…

-0-0-0-0-

2014 வரை துல்லியமாக அகழ்வாராய்ச்சி செய்வதில் நம் போற்றத்தக்க ஆய்வாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள், முக்கியமாக ‘அரசியல்-சரி’ அயோக்கியர்களிடமிருந்து. ஆகவே தரவுகளின் பாற்பட்டு கறார் அனுமானங்களைப் பெறுவதையே விடுங்கள், தரவுகளைக் கண்டடைவதற்கே ததிங்கிணத்தோம் போடவேண்டியிருருந்தது. இந்த நிலைக்கு நம் பேடி ‘இடதுசாரி’ வரலாற்றாளர்களான ரொமிலாதாபர், இர்ஃபான்ஹபீப், ஸூரஜ்பான், ஆர்எஸ்ஷர்மா போன்றவர்களின் கயமை அழுத்தங்களும் திரித்தல்களும்தான் காரணம்.

மேலும்/ஆகவே நம் வரலாற்றுச் சான்றுகளைக் கண்டடைவதற்கான செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அவ்வளவு கயமையும் கஞ்சத்தனமும் இருந்தது

ஆனால் பாஜக-மோதி அரசினால் இந்தப் பாவப்பட்ட நிலை மாறிக்கொண்டிருக்கிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பாருங்கள்!

பாஜக-மோதி ஆட்சியில் அகழ்வுகளுக்கென உத்தேச நிதி ஒதுக்கீடு அதிகமாக்கப் பட்டிருக்கிறதா?

…பிரச்சினைகள் தொடராமல் இல்லை; அகழ்வுகளுக்கெதிராக ‘சுற்றுச்சூழல்காரர்களின்’ வழக்குகள், நில ஆர்ஜிதம் செய்யமுடியாத நிலைமைகள், களப்பணியாளர்களுக்கு மிரட்டல்கள், தரவுகளைப் பதிப்பிக்கமுடியாமை (உதாரணமாக – அயோத்யாவில் பப்ரி கும்மட்டத்தின் கீழேயிருக்கும் வைணவ/ராமர் கோவில் கட்டுமானங்களைப் பற்றிய + கும்மட்டத்திற்கு முன்னால் அதே இடத்திலிருந்த கோவில் இடிமானங்களின் கட்டமைப்புகள் மசூதிக்காக ‘உபயோக’ப்படுத்தப்பட்டமை – குறித்த கறாரான, தரவுகளின்பாற்பட்ட ஆராய்ச்சி அறிக்கை அமுக்கப்படுவது), ஊடகப்பேடிகளின் பொய்மை பரப்பல் (உதாரணமாக – கீழடியில் ஏதோ, மத்திய அரசு மோசடி செய்வதாக அபாண்டமாகக் குற்றம் சாட்டுவது), வெளி நாடுகளில் பேடித்தனமாகப் பொய்மைகளைக் கசியவிடுவது (உதாரணமாக அமெரிக்கப் பத்திரிகைகள் சில, யோகி ஆதித்யனாத் பதவிக்கு வந்தால், இஸ்லாமியச் சின்னங்களுக்கு (தாஜ்மெஹல்!) ஆபத்து எனவெல்லாம் எழுதின) இன்னபிற இன்னபிற.

ஆனால் – இம்மாதிரி அயோக்கியத்தனங்களுக்கு அப்பாற்பட்டு, மேற்படி நிதியுதவி + அரசின் ஆதரவுடன், நம் பொக்கிஷங்கள் போஷகம் செய்யப்படும், வெளிக்கொணரப்படும் என்பதை ஆத்மார்த்தமாக உணர்கிறேன். நமக்குத் தேவை, கால அவகாசம், பொறுமை.

ஆகவே, இன்னும் பலமுறை பாஜக-மோதி அரசாங்கம் மத்தியில் வரவேண்டும்.

ஆமென்.

One Response to “வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))”


  1. Dear Sir,

    There is one more article appreciating Govt. scheme on giving electricity to villages. ( Even in yahoo).https://in.yahoo.com/finance/news/modi-government-saubhagya-scheme-lives-013806080.html

    along with the challenges faced in the scheme which to be addressed

    Thank you
    Ramakrishnan S.N


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s