[15 காரணங்கள்] நான் ஏன் ராஹுல்காந்தியை ஆதரிக்கிறேன்?

April 6, 2019

ஏனெனில்…

#1. ராஹுல் – இளமைதுள்ளும் ஒரு இளந்தலைவர் மட்டும் அல்லர் – அதற்கும் மேலதிக இளமையாக, அவர் ஒரு விடலைத் தலைவர். இந்த விஷயத்தின் என்னுடைய இன்னொரு செல்லமான இசுடாலிருக்குப் போட்டியாளராக இருப்பவர்.

#2. ராஹுல் – ஒரு உண்மையான இண்டர்நேஷனலிஸ்ட். அவர் தம்மை, வெறும் இந்தியாவின் குடிமகனாகக் குறுக்கிக் கொள்வதில்லை. மோதியைப் போல அல்லாமல், ராஹுலுக்குத் தாய்நாடு என்பது பாரதமல்ல; அது தாய்லாந்து. ஆனந்தமாக அங்கு கூத்தடித்துக் கும்மாளமடித்து, பாரதத்தை முன்னேற்றிக் கொண்டிருப்பார். ஏனெனில் – அவருடைய கொள்ளுத்தாத்தா நேருவைப் போலவே அவரும் ஒரு அகிலவுலக மேதை, உலகமக்களின் ஒன்றிணைப்புக்கும் பரஸ்பர நல்லெண்ணங்களுக்கும் குழந்தைப் பருவத்திலிருந்தே போராடுபவர்.

#3. அவருடைய படுபீதியளிக்கும் மனோதைரியம் நமக்குக் கொடுக்கும் பிரமிப்பு. படிப்பென்று ஒரு சுக்குமில்லை. வெளியுலகத்திற்குத் தெரியும்படிக்கும் ஒரு வேலையும் ஒரு கடுகுக்கும் செய்யவில்லை; ஸாம் பிட்ரோடா தயவில், அமெரிக்க பாஸ்டனில் பலகாலம் ஏதோவொரு (வசதியாக இப்போது, திவாலாகிவிட்ட) நிறுவனத்தில்  ‘அறிவுரையாளராக’ வேலை பண்ணியதாகக் கற்பனை நாவல்கள் கட்டுக்கதைகள் எல்லாம் எழுதினார். இப்படியெல்லாம் இருந்தாலும், தகுதியோ அனுபவமோ ஏன் நல்லெண்ணமோகூட துளிக்கூட இல்லாவிட்டாலும் – பாரதத்தையே முன்னேற்றிக் காட்டுவேன், நான் பிரதமமந்தியானால்தான் ஆயிற்று என ஒற்றைக்காலில் நிற்கிறார், படுகோரத் தவத்தில் இருக்கிறார். அவரையும் நம்புபவர்கள் இருக்கிறார்கள். ஆகவே நானும் நம்புகிறேன். ஏனெனில் எனக்கு அதிசய நிகழ்வுகளில் நம்பிக்கை இருக்கிறது. ராஹுல், நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.

#4. ராஹுலின் குடும்பம், பாரம்பரியப் பெருமை மிக்கது. தாயார் ஸோனியா அம்மையார், தன் படிப்பு குறித்த விஷயங்களைப் பற்றிக் கூசாமல் புளுகியவர். பிரதமர் பதவிக்கு ஏங்கி, அது கிடைக்காது என்றவுடன் அதனை உடனடியாகத் தியாகம் செய்த திருவுள்ளம். ராஹுலின் தாய்வழிப் பாட்டனார் இத்தாலியில் ஃபாஸ்ஷிஸ்ட் கும்பல்களுடன் புழங்கிய பெருமை பெற்றவர்.

தந்தை வழியில் – எள்ளுத்தாத்தா மோதிலால், கொள்ளுத்தாத்தா ஜவஹர்லால் நேருவுக்குப் பதவி கிடைப்பதற்காகப் போராடினார். கொள்ளுத்தாத்தா நேரு, பாட்டி இந்திராகாந்திக்குப் பதவி கிடைக்கவைத்தார். பாட்டியானவர் அப்பன் ராஜீவ் காந்தியைப் பதவிக்காக வளர்த்தெடுத்தார். அம்மா ஸோனியா மெய்னோ அம்மையார், ராஹுலுக்குக் கட்டியம் கூறிக்கொண்டே இருக்கிறார் – எனக்கு மசுர்க்கூச்செறிகிறது. எப்படியாப்பட்ட பாரம்பரியப் பெருமை மிக்க குடும்பம்! குடும்பம் எனும் முக்கியமான சமூக அமைப்பில் எவ்வளவு  பிடிப்பு! இதுதான் இளையபாரதம். (அதே சமயம் இந்த நரேந்த்ரமோதியைப் பாருங்கள்! ஒரு பின்புலமுமில்லாமல் ஏழையாக வளர்ந்து பின் திடுதிப்பென்று பிரதமராகவே ஆகிவிட்டாரே! இதைக் கேட்பாரே இல்லையா! ஐயகோ!!)

#5. ராஹுல் ஒரு திராவிடர். ஏனெனில், அவருக்குத் தெரியாமலேயே அவர் பல நிறுவனங்களை நடத்தியிருக்கிறார். அவருடைய அறிவியல்பூர்வமான கீர்த்தி அப்படி! நேஷனல் ஹெரால்ட், யங் இந்தியன், 000 போலப் பலப்பல பினாமி+நேரடி நிறுவனங்கள். வளம் கொழிக்கும் தொழில்கள். நிலமோசடிகள். நிதிமோசடிகள். சிறுபெரும் கொள்ளைகள். இதன் காரணமாகவே அவர் ஒரு பக்காத் திராவிடராகிவிட்டார்.

#6. ராஹுல்காந்தியின் நீதி​+நிதி பரிபாலனத்தில் அவருக்கு இணை அவர்தாம் – அவற்றில் அவருக்கு அவ்ளோ அனுபவம் இருக்கிறது! பாடியாலா கோர்ட், அமலாக்கக் கோர்ட், வருமான வரி வழக்கு வியாஜ்யம் என அவருக்கு – கோர்ட், முன் ஜாமீன், நிபந்தனை ஜாமீன் என நிறைய, நிறைந்த அனுபவங்கள். மேலும் நீதிமன்றங்களில் அவருக்கு இருக்கும் பாபுலாரிட்டி வேறு எவருக்கும் இல்லை. அவர் குடும்பத்தினருக்கும் இந்த விஷயத்தின் திறமை தாஸ்தீ.

வாஜ்பேயி அரசு சமயத்தில் – போதைமருந்து, கணக்கில்லாத பணம் அது இதுவென அமெரிக்க பாஸ்டன் விமான நிலையத்தில் வசமாக மாட்டிக்கொண்டு வெளிவந்த, உலகளாவிய நீதிபரிபாலன அனுபவம்வேறு!

#7. கற்பனை வளமும் மிக்கவர், நம் ராஹுல்; அதாவது, திருந்தவே திருந்தாத, அழிச்சாட்டிய புளுகுணிமாங்கொட்டையார் அவர். காகித விமானத்துக்கும் நிஜ விமானத்துக்கும் ஆறு வித்யாசங்களையே விடுங்கள், ஒரு வித்தியாசத்தைக் கூட அறியா, அரியதோர் அறிவிலி. இருந்தாலும் தமக்குக் கிடைக்கவேண்டிய ‘வடெ போச்சே’ எனவொரு நியாயமான லிபரல் ஆதங்கத்துடன், ஆனால் ஆதாரங்களேயில்லாமல் கூசாமல் ‘ரஃபால் ஊழல்’ எனத் தொடர்ந்து பேத்துபவர். இவர் ஆட்சிக்கு வந்தால் ஜெயமோகனுக்கு இணையாக வெண்முரசென்ன – வெண்ரஃபால் எனக்கூட ஒரு புளுகுவரிசையை அவிழ்த்துவிடுவார்.

#8. அதிகார போதை என்கிற விஷயம் கிட்டவே அவர் போகமாட்டார்; ஏனெனில், சாதா கஞ்சா மரீஹ்வானா ஹெராயின் வகை போதையிலிருந்தே அவர் மீண்டு வருவது என்பதே கேள்விக்குறி. ஆகவே அவர் நல்ல தலைவராகப் பரிணமிப்பார் என்பதில் நமக்கெல்லாம் ஐயம் வருமா என்ன?

#9. ராஹுல் வருடத்தில் பலவாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறார் – அப்போது என்ன செய்கிறாரென்றே ஒருவருக்கும் தெரியாது. அவர் ஊடகங்களையே விரும்பாதவர். ராஹுல் தோலின் நிறம் வெள்ளை. கன்னம் குழிகிறது. ஜீன்ஸ் டீஷர்ட் போடுகிறார். ஆங்கிலம் ஓரளவுக்குச் சரியாகவே வருகிறது. என்னை ‘ராஹுல்’ என்றே அழையுங்கள், ‘ஸார்’ போடாதீர்கள் என்கிறார். என்னே பெருந்தன்மை!  இவையெல்லாம் தகுதிகள் இல்லையென்றால், பின் என்ன, நாளுக்கு பதினெட்டு மணி நேரம் முட்டாக்கூத்தனமாக முட்டிமோதி பணி செய்வதெல்லாம் பெரிய்ய தகுதியா என்ன?

#10. ராஹுல் ஒரு நல்ல நடிகர். இந்தத் தகுதி ஒன்றே போதுமல்லவா, பாரதத்தை வழி நடத்திச் செல்வதற்கு.

சமயத்திற்கேற்றவாறு நான் பிராமணன், நான் கஷ்மீரி பண்டிட், நான் மதச்சார்பின்மை வாதி, நான் இளைஞன், நான் காங்கிரஸ் பரம்பரை, நானே குல்லாபோட்ட முஸ்லீம்தான், நானே கத்தோலிக்கன்தான் – எனப் பெருச்சாளிகளுக்குத் தெற்றுப்பல்லும் சுண்டெலிகளுக்கு வாலும் கோமாளிகளுக்குக் குல்லாவும் காண்பித்துக்கொண்டு சமயோசிதமாக அலைபவர்.

#11. ராஹுல் பதவிக்கு வந்தால் – எல்லாவிதமான உதவித் தொகைகளும் அனைவருக்கும் கிடைக்கும். யாரும் ஒரு வேலையும் செய்யவேண்டாம்! ஹைய்யா!! பணம் வேண்டுமானால், அவருடைய நேஷனல்ஹெரால்ட் அச்சகத்திலேயே வேண்டுமளவு அச்சிட்டுக்கொள்ளலாம். இண்டர்னெட் மூலமாக ப்ரிண்ட்-ஆன்-டிமாண்ட்  பணமும் கிடைக்கும். இந்த ஜொலிக்கும் திட்டத்துக்கு அமர்த்யாஷென், ரகுராம்ராஜன், பசிதம்பரம், மன்மோகன்ஸிங், ‘பங்க்’ குமார், கதிர்ஆனந்த் ( s/o துரைமுருகன்) போன்ற பொருளாதார நிபுணர்களிடமிருந்து ஏகப்பட்ட ஆமோதிப்பும் கிடைக்கும்.

#12. ராஹுல்காந்திக்கு விதம்விதமாக அறிவுரை தர என ஒரு பெரிய சான்றோர் கூட்டம் உள்ளது. அவர் விஷயங்களை ஊதிப்பெருக்கி உலாவ விட ஒரு பெரும் கும்பலே இருக்கிறது – பணமும் பதவியும் இலவசங்களும் வாங்கிக்கொண்டு ‘உழைக்கிறது.’ ஸாம் பிட்ரோடா போன்ற ‘ஒருகாலத்தில் தேசத்தின்மீது கரிசனம் இருந்த’ ஆசாமிகளும் இதில் விசித்திரமாக இருக்கிறார்கள். ராஹுலுக்கு – உடைகள், செருப்பு, ஹேர்ஸ்டைல், லிப்ஸ்டிக், தாடி சிரைப்பு, பேச்சு, எப்போது என்ன பொய் சொல்லவேண்டும், நடத்தல், சாப்பிடுதல், ஏப்பம் விடுதல், சாப்பிட்டது செரித்தபின் செய்யவேண்டிய காங்கிரஸ் செயல்திட்டம் என அனைத்துக்கும் குழுகுழுவாக அப்படித் தாங்குகிறார்கள். இருந்தாலும் அவ்ளோ சொதப்பல், போங்க. ராஹுலுக்கு இது வாய்வந்த கலை.

#13. நம் ஊடகப்பேடிகளின், அயோக்கிய அறிவுஜீவிகளின் ஆதர்ச டார்லிங் அவர். எப்படியும், மேற்படி நாய்களின் திசையில் எலும்புகள் ஏற்கனவே விட்டெறியப்பட்டுவிட்டதால் – அவைகள், ராஹுல் என்ன ஊழல் செய்தாலும் பதிலுக்குச் சம்பந்தமேயில்லாமலும் பொய்பொய்யாகவும் ‘மோதி, 2002, குஜராத் கலவரங்கள்’ என்றே பரப்புரை செய்யும்.

இம்மாதிரி கொடுக்கும் பில்ட்-அப்களுக்கு, பணம்வாங்காத ஆனால் பாரதத்தைக் குறித்த வெள்ளைக்கார/இளக்கார அல்லது தாழ்வுமனப்பான்மை கொண்ட அறிவார்ந்த அறிவிலிகளின் பக்கத்திலிருந்தும், ஏகத்துக்கும் ஆமோதிப்பு. புளகாங்கிதம். இவர்கள் பின்னாலும் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் திரண்டு ஒரே ஆரவாரம். பேடிக்கும்பல்கள்.

#14. ராஹுலின், விஷயங்களை ஃப்ரெஷ்ஷாக அணுகமுடியும் தன்மை. இதாகப்பட்டது எப்படியென்றால் – இந்த ஆசாமிக்கு, எந்த எழவைக் குறித்தும் ஒரு எழவும் தெரியாத, தெரிந்துகொள்ளவும் வக்கில்லாத ஒருவிதமான உயர் ஆன்மிக மனநிலை இருக்கிறபடியால் – எந்த ஒரு விஷயத்தையும் இவரால் ஃப்ரெஷ்ஷாக மட்டுமே அணுகமுடியும். புதியபுதிய பார்வைகளைத் தரமுடியும்.

(சிறு ஹிந்தி வீடியொ: twitter.com/rahulroushan/status/1114147830984142848)

…எடுத்துக்காட்டாக – ‘விவசாயிகள் பெரியபெரிய விமான நிலையங்களுக்கு நேரடியாக அவர்கள் விளைபொருட்களை எடுத்துச்சென்று அங்கு விற்கமுடியும்’ என அண்மையில் சொன்னது! எவ்வளவு அற்புதமான விஷயம் இது! ஏதாவது ஒரு சிறிய அடிப்படை இருக்கும் ஒருவருக்கு இப்படியெல்லாம் ஃப்ரெஷ்ஷாக விஷயங்களை அணுகிப் பினாத்த முடியுமா, சொல்லுங்கள்?

#15. இவை அனைத்துக்கும் மேலாக, மிக முக்கியமாக – ராஹுலின் நகைச்சுவை உணர்ச்சி ஒன்றே போதும். எங்கு சென்றாலும் அமோகமாகவும் அபத்தமாகவும் உளறிக்கொட்டி – தன்னுடைய,  ஸ்டாலின் சினேகிதத்தைப் பறைசாற்றுகிறார்.

தப்பித் தவறி, நம் கெட்டகாலத்தினால் – அவர் ஆட்சிக்கு வந்தால் – நமக்கெல்லாம் சுபிட்சம் கிடைக்கிறதோ இல்லையோ – காமெடிக்குத் துளிக்கூடப் பஞ்சமே இருக்காது என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

ஆகவே பாஜக-மோதி!

ஜெய்ஹிந்த்

-0-0-0-0-

 

 

12 Responses to “[15 காரணங்கள்] நான் ஏன் ராஹுல்காந்தியை ஆதரிக்கிறேன்?”

 1. Ramakrishnan A Says:

  திரு ராமசாமி அவர்களுக்கு,நீங்கள் பலரைப்பற்றி அடிச்சு விடுபவர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் அப்படியல்ல என்று நம்புகிறேன். ராகுல்காந்தி தாய்லாந்தில் கஞ்சா அல்லது வேறு போதைப்பொருள் உபயோகப்படுத்தியதுக்கும் மோதிலால் ப்நேரு ஜவஹர்லால் நேரு வின் பதவிக்காக போராடியதற்கும் ஆதாரங்கள் தர முடியுமா? பிஜேபி ஆதரவு எழுத்தாளர் களின் கட்டுரை வேண்டாம். ஏதேனும் நடுநிலை யான பத்திரிகை களின் செய்தி இருந்தால் நலம். அன்புடன் ராமகிருஷ்ணன்.


  • I write ONLY when I have solid details. Except when I am sarcastic and write funnies. I do make mistakes (not often), but would like to correct myself.

   1. As for Motilal, he made at least three attempts – In fact, I have written about it. Can’t you even do a local search in othisaivu??

   “Nehru was not a dynast” – Yet another canard from Prof Ramachandra Guha
   06/07/2018
   https://othisaivu.wordpress.com/2018/07/06/post-856/

   Please do your own homework. Tell me in detail that Motilal did not do that. Also Jawahar did not do what he did under Motilal and what he did for his own daughter, propping her up.

   2. For the second, I have the confidential (not anecdotal) evidence. But cannot share them with you. There are other gory details about that I do NOT want to elaborate upon. It is sad that we have such a juvenile propped-up leader. Anyway, you do your own analysis. You should learn to look for relevant ideas and info – learn to use meaningful searchstrings. You cannot rely on borrowed wisdom all the time. Spend some of your own lifetime and energy if you are really and seriously interested in ‘knowing’ about things. I am not here to findout and write about things just because you ask. Sorry. You can’t expect to get spoonfed all the time. And I write for my own, selfish, personal benefit & clarification – and incidentally a few more read it, that’s all.

   Figure out the timespans during which RahulG went AWOL from the scene. Figure out what he was doing and where.

   You can also look at one of my tweets and reflect – https://twitter.com/othisaivu/status/1115144202629681154

   3. I urge you to look elsewhere and do your own finding-out-of-things please, from now onwards – because, I hate நடுநிலை lousies. And I do not have the time for elaborate tutorials. I am fine if only 4/5 thinking folks read this blog.

   Take care and do well in whatever you choose to do. I am tired.

   Bye.

   • Ramakrishnan Says:

    Thank you and I understand. I will not disturb you hereafter. I will continue to read your posts as I know you have done some remarkable things to the Soceity sacrificing your own careers. Normally I never forms any openion just by reading some posts and articles. I know world is not fully black and white. I will continue to search for evidences and form my openion as a responsible citizen. Thank you very much for your time


   • Sir, thanks for your understanding of the situation. For the past 5-6 days, my campaigning bouts have taught me additional lessons.

    And again, I have done NOTHING remarkable. Not saying this with put-on humility. I know I could have done a LOT, but did NOT. So many people who have done REMARKABLE things, INCREDIBLE service are silently working on fantastic thingies.

    So do not believe in the rumours spread by me. I did NO sacrifice. I am a hedonist. Please note it.

    As for your reading of this blog – it is open and free. So feel free not to use it also.

    Let me (us?) hope that Bharat gets his well-deserved leads either way.

    Jai Hind.

 2. girievs Says:

  Mr.Ramakrishnan,
  Corruption (of the UPA government) or the absence of it (NDA rule), is no issue at all for you?

  • Ramakrishnan Says:

   Dear sir, yes it is an issue. But we can’t say corruption is not there in NDA People like Ediyurappa disturbs me. We can say it is less. Modi seems to be honest
   According to me both corruption and religious fanaticism are dangerous to our country. It is a good thing Modi won the last election on his record on development and not based on Hindu nationalism. It is a question of selecting devil to deep sea May be Modi at the helms with a strong opposition, strong press and strong judiciary is the answer. I feel government should not decide what I should eat
   If BJP understand they can win more hearts is concentrate on development rather than Hindu nationalism it is good for the country.


   • Sir, are you for REAL? :-(

    //I feel government should not decide what I should eat

    Did it?

    Each of your statements is a hyperbole based on hyperventilation.

    Anyway, each unto his own! As I have been saying – in fact, pleading and appealing – PLEASE do your HOMEWORK.

    Do NOT fall for random PROPAGANDA!

   • girievs Says:

    You seem to have a fixation on Yediyurappa. He has been cleared by HC. His politics is anyway confined to Karnataka. Neither he can influence Modi nor is Modi responsible for Yediyurappa’s actions.
    The government under Modi has not discriminated against non Hindus.
    I don’t want to explain any further. As Ram has said you can search for the truth,use your own judgement and come to a conclusion. All the best.
    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 3. Ramakrishnan Says:

  Dear sirs, If clearing by HC is a proof, Jeyalalitha and kanimozhi are innocent.Who has brought back ediyurappa? Are not Muslims and daliths who eat beef are targeted by cow activists. ? Which give the courage to them? I am not against NDA govt.I feel it is the one deserve to rule compared to the rainbow alliance of corrupted parties. But I feel some checks and balances to be there. Any how these discussions will not lead us to anywhere. My mind is open and I am searching for answers
  I will seek further as Mr.Ramasamy advised and always ready to correct my opinions. No hard feelings
  Thanks for your time bye


  • Young Ramakrishnan – on the one hand, you say that “My mind is open and I am searching for answers” and OTOH say that “Are not Muslims and daliths who eat beef are targeted by cow activists. ? Which give the courage to them?”

   How many data-points that you have, to support that narrative? Are we even aware of the nature of the problem, the actual decisions taken by the governments, history and the ‘incidents’ – please do not keep repeating random propaganda.

   “Some checks and balances to be there. ” oh yeah? what do you mean here? Are they not there now? If there were no freepress in India, how come folks lie blatantly and in an uninformed manner? In any case, please do not talk in general, vague and anecdotal terms.

   Please note that as Harlan Ellison says, “You are not entitled to your opinion. You are entitled to your informed opinion. No one is entitled to be ignorant.”

   • A.RAMAKRISHNAN Says:

    Sir, you may be correct. I am just a newspaper reading common man. You also must have read the news of one elderly man got beaten up n Assam few days back. I have come across many such news in last few years. I don’t remember reading such news ten years before. May be governments are taking action and filing cases. But I don’t know how many are really convicted. What I am trying to say is now the mob feels that they have their government in there and they can escape. According to me the efforts taken by governments to drive away that feeling is not enough. Yes sir. I don’t have data. I am not an activist or a writer writing articles in blogs to propagate my opinions. I am just a common man getting some doubts and fears by reading paper news. I am asking my doubts to people I respect and more informed than me. As you have told me to look for evidence elsewhere, I was just leaving the comment section. But as the gentleman asked me a question, I voiced my doubts. I am a Hindu. But I have no hatred against people eating beef. I am averse to corruption. But I am afraid of religious fanaticism. My fears may be unfounded and I may be wrong. I am ready to accept that reality. But the fear is real. I assure you there are lot of people like me . My only solace is that I am finding many people like you who I respect and know will not hate others are have belief in Modi. So there are chances that my fears are unfounded. I will be more happy if I am wrong.

    One more thing sir. You are saying Modi is having anma balam. When non cooperation movement was at its peak,Gandhi stopped it because a mob torched a police station. He was not afraid to become unpopular. He was listening only to his inner conscience. I call it Anmabalam sir. I think I have made my doubts and opinions clear. I am once again saying I have no data and I may be fully wrong. As I am not getting any evidences here , I will search for it else where. I am convinced and clear that Modi government has done good things in education and development front through your articles. Regarding others , I will change my opinion once I got evidence. Thanks for your time

    Regards A.Ramakrishnan


   • Sir, again you are talking about MK Gandhi, without background and without other contexts in which he acted to the contrary.

    Anyway, I wish you all the best, depending on the relevant effort put-in by you.

    Let us leave it at that.

    END.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s